பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, January 19, 2005

பாட்டுப்பதிவு

நா.கண்ணன் பேச்சு பதிவு என்று ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். இது எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை. பெண்கள் இதை ஆரம்பிக்காமல் இருக்க இறைவனை பிராத்திக்கின்றேன்.

என் பங்கிற்கு ஒரு பாட்டுப்பதிவு

Read More...

Tuesday, January 11, 2005

வாழ்த்துக்கள் !


"மண்ணின் மைந்தன்' "கண்ணம்மா' ஆகிய படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியதன் மூலம் கிடைத்த 21 லட்சம் ரூபாய் ஊதியத்தை முதலமைச்சர் சுனாமி நிவாரண நிதிக்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி வழங்கினார். இந்த தொகையை கோட்டையில் நேற்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஸ்டாலின் வழங்கினார்.

நிதியுதவி அளித்த கருணாநிதிக்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்ததுடன், அவரது உடல்நலம் குறித்து விசாரித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More...

Thursday, January 06, 2005

2005 ராசிபலன் - டாப் டென்+2

இந்த வருடமும் வழக்கம் போல் எல்லா பத்திரிக்கைகளும் 2005 ஆம் வருடத்திற்க்கான ராசி பலன் மினி புத்தகத்தை வழங்கினார்கள். என்னுடைய ராசிக்கு நான் ஒரு ராசிபலன் எழுதுவேன் என்று எழுதியிருந்தது.
இட்லிவடை ராசி பலன் இங்கே.. இலவசமாக !

1. மேஷம்: சந்திரன் ஏழாம் வீட்டில் விளையாடுவதால் குழந்தைகளுக்கு நிறைய சாகலேட் கிடைக்கும். பெப்ஸோடண்ட் விளம்பரம் பார்த்துக்கொண்டு சாப்பிடுவார்கள்.


2. ரிஷபம்: டிசம்பர் மாதம் குருவின் பலவீனத்தால் வெளிநாட்டிலிருந்து இந்தியா வருபவர்கள், சோப், சாக்லேட் கொண்டு வருவார்கள்.


3. மிதுனம்: ராகுவும் கேதுவும் வீடு மாறும் போது, 'மரத்தடி'யில் பிள்ளையாருக்கு பதில் முருகன் வந்தாலும் ஆச்சரிய பட கூடாது!.


4. கடகம்: சனியின் ஆதிக்கம் அதிகமானதால் ஜனவரியில் சென்னை புத்தக கண்காட்சியில் அட்டை மட்டும் நன்றாக உள்ள தமிழ் புத்தகங்கள் நிறைய கிடைக்கும். உஷாராக இருக்கவும்.


5. சிம்மம்: புதன் வேறு பக்கம் திரும்பி கொண்டதால் போன வருடத்தைவிட இந்த வருஷம் செலவுகள் கூடும். அடுத்த வருடம் மேலும் கூடும்.


6. கன்னி: முன்றாவது இடத்தில் உலவும் செவ்வாயினால் விசேஷமான திருப்பம் எதுவும் இல்லையென்றாலும், டிவி சீரியல்களில் சிலர் சிரிப்பார்கள்.


7. விருச்சிகம்: சுக்கிரன் தாண்டவமாடுவதால் இளம் தாத்தாக்கள் வெளிநாட்டில் உள்ள தங்கள் பேரன்,பேத்தியை 'வெப் கேம்'மில் பார்பார்கள்.


8. துலாம்: சூரியன் தன் சொந்த வீட்டிற்கு வருவதால் மே மாதம் சென்னையில் கடும் வெப்பம் இருக்கும். செப்டம்பருக்கு பிறகு வேறு வீட்டுக்கு செல்லவதால் வெப்பம் குறைய வாய்ப்பிருக்கிறது.


9. தனுசு: குரு (ஒத்தக் கண்ணால்)பார்பதால் அடிக்கடி ஒத்த தலைவலி வரும். டாக்டரிடம் போனால் தலைவலி அதிகம் ஆகும். ஜாக்கிரதையாக இருக்கவும்.


10. மகரம்: செவ்வாயும் புதனும் அடுத்தடுத்து வருவதால் பெட்ரோல், டிசல் விலை உயரும். வாகனம் ஓட்டுபவர்கள் வண்டியை தள்ளிகொண்டு செல்லவும்.


11. கும்பம்: கேது வீட்டுக்கு லேட்டாக வருவதால் மனைவியால் கணவனுக்கு ஆபத்து ஏற்படும். ஐயோடெக்ஸ் வைத்துக் கொள்ளவும்.


12. மீனம்: சுக்கிரன் சுறுசுறுப்பாக இருப்பதால் கம்ப்பூட்டர் தொழில் புரிபவர்கள், தூக்கத்தில் Java, J2EE, XML என்று பிலம்புவார்கள். கிரீன் கார்டு கிடைத்தவுடன் அடங்கிவிடுவார்கள்.

Read More...

Tuesday, January 04, 2005

2004 சிறந்த தமிழ் வலைப்பதிவுகள்(டாப் டென்+10)

2004 வலைப்பதிவுகளின் ஆண்டு என்று சொன்னால் அது மிகையாகது. சுனாமிக்கு அடுத்து நம்மை படுத்தியது தமிழ் வலைப்பதிவுகள் தான். கற்றதும் பெற்றதும்'ல் சுஜாதா 'பதினைந்து நிமிட புகழ்க்காக காத்திருக்கிறார்கள்' என்றவுடன் எல்லோரும் வேட்டி/பாவாடையை மடித்துக்கட்டி கொண்டு கண்டனம் தெரிவித்தனர்.

சென்ற ஆண்டின் என் டாப் டென் + டென் லிஸ்ட் இதோ..

சிறந்த....
1. முயற்சி - காசியின் தமிழ்மணம்.
2. நியூஸ் (Re)ரிப்போர்ட்டிங் - பத்ரி
3. வெட்டிவேலை பதிவு - தேசிகன் (சுஜாதாவின் படைப்புக்கள்)
4. புரட்சி பதிவு - பா.ராகவன் ( ரம்பா கவிதை, ஒன்பது கட்டளைகள் மற்றும் பல )
5. பின்னூட்டப்பதிவு - நேசமுடன் வெங்கடேஷ் (கமல், நன்றி சுனாமி )
6. புதுமுகம் - பல முகங்கள்.
7. (கடி) நகைச்சுவை பதிவு - Los Angeles Ram
8. காணாமல் போன முகமூடி - ஆப்பு
9. குட்டிக்கதை பதிவு - ஜென்கதை ( ஜெக்கு உதவியாக இருக்கும்)
10. பின்னூட்டம் - பி.கே.சிவக்குமார்.
11. (போலி) இலக்கிய பதிவு - பல (எழுத்தாளர்களின்) பதிவுகள்.
12. குப்பை பதிவு - பல கவிதை பதிவுகள்
13. அறிவியல் பதிவு - குருவிகள்
14. சமுக சேவை - ரஜினி ராம்கி
15. (தமிழனுக்கு) உபயோகமில்லாத பதிவு - யோசிங்க.
16. சிறந்த விளையாட்டு பதிவு - கண்ணன்.
17. ஜோக்கர் - ஜாபர் அலி
18. ஆன்மீகத்தளம் - இன்னும் வரவில்லை
19. சினிமா தளம் - இன்னும் வரவில்லை
20. முகமூடி - ஹிஹி

Read More...