பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, December 30, 2005

2005 டாப் டென் (- 2) வலைப்பதிவுகள்

1. தவமாய் தவமிருந்து


சற்றே நம்பிக்கைக் குறைவுடன்தான் இந்தப் படத்தைப் பார்க்கப் போனேன் என்றுஆரம்பிக்க மாட்டேன் கவலைபடாதீர்கள். அமெரிக்க கிராமத்திலிருந்து ஹீரோ கோவைக்கு வந்து செட்டில் ஆகிறார். அமெரிக்காவில் தமிழ் வலைப்பூக்களுக்காக இவர் செய்த சாதனைகளை ஃப்ளாஷ்பேக்கில் இடைவேளை வரை ஓட்டுகிறார்கள். அத்தனை வலைப்பூக்களையும் ஒன்றிணைத்து திரட்டி ஒன்றை உருவாக்குகிறார். எல்லா வலைப்பூக்களையும் பாசத்துடன் ஒன்று திரட்டி வளர்த்து பெரிய ஆளாக்கும் பாசமிகு தந்தை ரோலில் (வலை) பின்னியிருக்கிறார்.

இடைவேளை வரை வில்லன் ரோல் என்று யாருக்கும் இல்லை. பிறகு திடீரென்று மெகாசீரியல் மாதிரி திரும்பிய இடமெல்லாம் வில்லன்கள் முளைக்கிறார்கள். தந்தை சற்று கண்டிப்பு காண்பிக்கும்பொழுது பாசபந்தங்கள் எப்படி வேஷம் போட்டார்கள் என்று முடிக்கிறார் இயக்குனர். அப்போது பின்னனி இசையில் 'ஷேம் ஷேம் பப்பி ஷேம்' பாடல் நம் கண்ணில் கண்ணீர் வர வைக்கிறது.



2. வசூல் ராஜா எம்.பி.பி.ஸ்

வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்!!! - டீ, காப்பி செலவுக்கு நிதி திரட்டும் இந்த காலத்தில் ஒரு ஏழை மாணவியின் படிப்பு செலவுக்கு உதவி செய்ய நீதி திரட்டுகிறார் படத்தின் கதாநாயகன் பாலா!!!!!!. அப்படி திரட்டிய நிதியை அந்த பெண்ணுக்கு தருகிறார்!!!. தமிழ் வலைப்பதிவில் இப்படியா என்று மழை பெய்கிறது!!. இதில் இயக்குனரின் டச் தெரிகிறது. ஹீரோ நடுவில் பல பாடல்களுக்கு பல்லவியை மட்டும் பாடி மற்றவர்களை சரணம் பாட வைப்பது நல்ல தமாஷ்!!!. மனிதநேயத்தை நன்றாக வலியுறுத்தியுள்ளதால் இயக்குனரை பாராட்டலாம்!!!
முக்கிய குறிப்பு: தமிழ் வலைப்பதிவில் இதெல்லாம் கூட நடக்கிறது என்பதைக் குறிக்க ஆச்சரியக் குறி !. வேறு எந்த உள்ளர்த்தமும் இல்லை!!! நம்புங்க !!!!





3. சண்டைகோழி

முழுக்க முழுக்க வெட்டு, குத்து என்று வன்முறைகள் நிறைந்த படம். ஹீரோ ஜப்பானிலிருந்து படித்துவிட்டு இந்தியா திரும்பும் வழியில் ஏர்போர்ட் பிரௌசிங்க் செண்டரில் ஒரு சண்டையில் ஈடுபட நேர்கிறது. தொடர்ந்து விமானத்தில் லாப்டாப் வைத்துக்கொண்டு சண்டையிட்டுக்கொண்டே தமிழ்நாடு வந்து சேர்கிறார். (ஏர்போர்ட்டில் டிக்கெட் கேட்கும் அதிகாரிகளை (கழுத்தை) அறுத்துவிடுவேன் என்று மிரட்டுவது நல்ல காமெடி)

சண்டையின் நடுநடுவே திருட்டு வி.சி.டியில் 'சந்திரமுகி' பார்த்து ரசிக்கிறார்.
ஒரு எலி க்வாண்டம் கணினி பற்றி சொன்ன பாய்ண்டுகளுக்கு மறுப்பு தெரிவிக்கிறார். எலி எப்போதும் புலியாக முடியாது என்பதை வலியுறுத்தும் படம். இந்தப் படத்தில் இயக்குனருக்குச் சமமாக சண்டைக்காட்சிகள் அமைத்த ஸ்டண்ட் மாஸ்டரின் பங்கும் சிறப்பாக அமைந்திருக்கிறது. பலர் தாக்க வரும்போது 'இப்பொழுது நேரமில்லை, எனக்கு அவசரமாக போகனும் என்று சொல்லி கிளம்புகிறார். எங்கே போகிறார் என்பது எடிட்டரின் கைவண்ணத்தால் தெரியாமல் போகிறது. எதையாவது அறுத்துதொலைக்க போகிறார் என்று சென்சாரில் 'யூ' சர்டிஃபிகேட் கொடுத்துவிட்டதாக கேள்வி. வெங்கட் இந்த படத்துக்கு பிரமாதமாக இசையமைத்திருக்கிறார். ஜால்ரா ஒலி DTSசில் கேட்க வித்யாசமாக இருக்கிறது. பாடல்களில் ஆபாசம் இல்லை, ஆனால் திரைக்கதையில் வன்முறை, வசனத்தில் விரசம்.
முக்கிய குறிப்பு : கொஞ்சம் இருங்க டீ குடித்துவிட்டு சமயம் இருந்தால் இந்த பட ஸ்டிலுக்கு ஒட்டு வேலை செய்கிறேன்.




4. அந்நியன்

அந்நியன் - ஸ்பிலிட் பெர்சனாலிட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம். படத்தின் ஹீரோ யாராவது 'சாதி' என்று சொன்னால், கோபம் வந்து கெட்ட வார்த்தையில் கண்டபடி திட்டுகிறார். படத்திற்கு 'A' சர்டிபிகேட் கொடுத்துள்ளார்கள். சாதி பற்றி வசனம் பேசும் இவர் படத்தில் 'ஐயங்காரு வீட்டு அழகே' என்று பாடுவது நல்ல தமாஷ். ஒரே மனிதனுக்கு பல பர்சனாலிட்டி கதை என்று நினைத்தால், பல பர்சன்களும் ஒரே பர்சனாலிட்டியுடன் வெவ்வேறு ஆட்களாகக் கூட வருகிறார்கள். க்ராஃபிக்சுக்குப் பதில் ஹாக்கிங்க் நிறைய நிறைந்துள்ளது.

பொது மக்களிடயே இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.குடும்பத்துடன் பார்க்க கூடாத படம். அந்நியனாக ஒரு சீனில் சிவபெருமான் போல் வேஷம் போட்டுக்கொண்டு கூலிங் கிளஸோடு வருவது நன்றாக இருக்கிறது. தியேட்டரில் டிக்கெட்டுடன் காதில் வைத்துக்கொள்ள பஞ்சையும் தருகிறார்கள்.

முக்கிய குறிப்பு: திருட்டு விசிடியில் பார்ப்பவர்கள் டிவியை மியூட் செய்து பார்க்கவும். இல்லை காதுலேர்ந்து ரத்தம் வரும்.




5. கஜினி

கஜினி - நல்ல தமிழ்ப் படம் என்று போனால் என்ன படம் என்றே தெரியவில்லை. சப் டைட்டில் German மற்றும் French மொழிகளில் மாறி மாறி வருகிறது. இவர் எதை எழுதினாலும் தன் உடம்பிலும் அதை எழுதுவது போல் உள்ள கதாப்பாத்திரம். தவறாமல் 4800161 என்ற எண்னையும் கூட சேர்த்து எழுதுகிறார். இவருக்கு மறதி வியாதி அதனால் எங்கு சென்றாலும் தன் நம்பர் & போட்டோ எடுத்துக்கொண்டு செல்கிறார். வில்லன்கள் இவரை போல் ஒரு போலி கதாபாத்திரத்தை கிளோனிங் மூலம் உருவாக்குகிறார்கள். அதனால் கதாநாயகன் எப்போது போலி போலி என்று பினாத்துகிறார். கடைசி கோர்ட் சீனில் இவருக்கு தேங்காய் போளி, பருப்பு போளி கொடுக்கிறார்கள். சுபமாக முடிகிறது. சோ, அருண் கவுரவ வேடம் ஏற்று படத்தை மேலும் சொதப்பி விடுகிறார்கள்.

முக்கிய குறிப்பு: இந்த சுட்டியில் உங்கள் விட்டிலிருந்து ஒரு எலியை பிடித்து அதன் வாலை அதன் மேல் வைக்கவும். 4800161 என்ற நம்பர் தெரிகிறதா என்று பாருங்கள். சூரிய/சந்திர கிரகணத்தின் போது தெரியாது.





6. நியூ ( பெண்) அந்தாங்க புதுமை பெண்

இது ஒரு ஹீரோயின் சப்ஜக்ட். நேரில் பார்க்கும்போது சின்னவராகவும் எழுதும்போது வயதானவராகவும் மாறும் ஒரு வித்யாசமான பாத்திரம் பற்றிய கதை. படம் ஹாலிவுட் ரேஞ்சிற்கு இருக்கிறது-குறிப்பாக பாலியல் சம்பந்தப்பட்ட காட்சிகள். இட்லிவடைக்கு மீசை முளைக்காததால் இந்தப் படத்தை மட்டும் தியேட்டர் போய்ப் பார்க்க முடியவில்லை. வி.சி.டி.யிலேயே பார்த்துவிட்டேன். திரைக்கதையில் நிறைய சொதப்பல்கள். 'வுமன்கைண்ட்' என்று ஒரு மாபெரும் இயக்கம் ஆரம்பித்து பெண்கள் எருமைகளுக்கு வாழ்க்கைப் படுவது பற்றி ஒரு கவிதை எழுதிகிறார். கவிதை எழுதிமுடித்த பிறகு ஹீரோயினே நுனிப்புல் மேயப்போவதைப் பார்த்தால் யார் எருமை என்று குழப்பம்தான் மிஞ்சுகிறது. வசனத்திலும் பாத்திரப்படைப்பிலும் கவனம் செலுத்திய அளவுக்கு அடிப்படைத் திரைக்கதையிலும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

ஹீரோ என்று யாரையுமே சொல்லிவிடக்கூடாது என்று கவனமாக எல்லா ஆண்களையும் வில்லன் ஆக்கி இருக்கிறார்கள். அதாவது பெண்கள் என்ன திட்டினாலும் எல்லா ஆண்களுமே அமைதியாக இருந்து ஆணாதிக்கத்தை நிரூபிக்கிறார்கள்.

ஆண்களை எதிர்த்துக்கொண்டே ஆணுடன் வாழ்வதுதான் புதுமைப்பெண்ணுக்கு அடையாளம் என்று க்ளைமாக்சில் ஹீரோயின் சொல்லும் காட்சி நெஞ்சை உருக்குகிறது. (டைவர்ஸ் வாங்கும் எண்ணமிருந்தால்) குடும்பத்துடன் பார்க்கவேண்டிய படம்.
முக்கிய குறிப்பு: சிம்ரன் படத்தை கெடுக்க வேண்டாம் என்று நியூ பட ஸ்ட்லுக்கு ஒட்டு வேலை எதுவும் செய்யவில்லை. மன்னிக்கவும்.




7. மகா நடிகன்




படத்தை எழுதி, இயக்கி, ஹீரோவாகவும் பிரகாஷே நடித்து இருக்கிறார். படத்தின் ஹீரோ பொதுமக்களுடன் நன்றாகப் பழகிக்கொண்டே எல்க்ய வ்யாதியாகவும் அதே சமயம் Batman, spiderman, shakthiman போன்று வலைப்பதிவாளர்கள் சந்திப்பு ஒருங்கினைப்பாளராக பணிபுரியும் இளைஞராகவும் செம கலக்கு கலக்கியிருக்கார்.

அனைவரும் பாராட்டும்போது அடக்கமாக வேறு வேலை கிடைக்காததால்தான் இப்படியொரு வேலையைத் தேர்ந்தெடுத்தேன் என்று க்ளைமேக்சில் சொல்லும்போது நம் மனதைத் தொடுகிறார்.

பெண்களைத் தாயாக மதிப்பதாக மேடையில் பாடும் அந்த ஒரே ஒரே ஒரு பாட்டு மட்டும் நன்றாக உள்ளது. பாடலைப் பாடிமுடித்துவிட்டு மேல்கைண்ட் அங்கத்தினர்களைப் பார்த்து கண்ணடிப்பது அதைவிட நன்றாக உள்ளது.

படத்தில் பாடல்களை விட நேர்க்காணல்கள் அதிகமாக உள்ளன. இலக்கியவாதிகளுடன் ஆட்டோவில் செல்லும் போது பேசியதை பேட்டி என்று நன்றாக ஜல்லியடிக்கிறார். எழுதுவதைக் குறைத்துக்கொண்டு நிறையப் படிக்கப்போவதாக உருக்கமுடன் ப்ரகாஷ் சொல்வதுடன் தமாஷாக படம் முடிகிறது.
முக்கிய குறிப்பு: இந்த படத்திற்கு பிறகு நமிதாவுடன் நெருக்கமாக இருப்பதாக Blogwood'ல் கிசு கிசு. அப்படியா பிரகாஷ் சார் ?




8. குண்டக்க மண்டக்க

இட்லிவடை என்று பெயர் வைத்தால் தமிழர்கள் நிச்சயம் படம் பார்க்க வருவார்கள் என்ற இயக்குனரின் துணிச்சலை முதலில் பாராட்டவேண்டும். இட்லிவடை ஒருவரா அல்லது இரண்டு பேரா என்று கடைசி வரை சொல்லாமல் இருப்பது படத்துக்கு பிளஸ் பாய்ண்ட். இப்படி இட்லியையும் வடையையும் வைத்துக்கொண்டு எவ்வளவு நாள் குப்பை கொட்ட போகிறார் என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

படம் முழுக்க பர்தா போட்டுக்கொண்டு வருவதால் யார் நடிக்கிறார்கள் என்பது கடைசிவரை தெரியவில்லை.

ஹீரோயின் கால்ஷீட் கிடைக்காததால் ஒரே ஒரு கவர்ச்சிப்படம் மட்டுமே காண்பித்து சமாளித்திருப்பது பாராட்டுக்குரிய விஷயம். படத்தில் கதை என்று பெரிதாக ஒன்றும் இல்லை. படம் முழுக்க கிராபிக்ஸ் வைத்து ஏதோ ஒப்பேத்துகிறார் அவ்வளவுதான்.

குண்டக்க மண்டக்க படம் பார்த்தவுடன் கருத்து சொல்ல பின்னூட்டப் பெட்டி ஒன்று வைத்திருக்கிறார். அந்தப் பெட்டியை நீங்களும் பார்க்கவேண்டுமா? கீழே உள்ள comment சுட்டியை க்ளிக் பண்ணினால் போதும்.

முக்கிய குறிப்பு: எல்லோருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Read More...

Thursday, December 29, 2005

பெங்களூரில் தீவிரவாதம்

பெங்களூரில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் (ஐ.ஐ.எஸ்சி.,) கழகத்தில் மாலை நடந்த தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் டெல்லி இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி., )யின் பேராசிரியர் எல்.என்.பூரி பலியானார். மேலும் ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். சுட்டவர்கள் ஏ.கே.47 ரக துப்பாக்கிகளை பயன்படுத்தியுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
சென்னை ஐ.ஐ.டியிலும் போலிஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.

தீவிரவாதம் எங்கு எப்படி நடந்தாலும் அதை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. வீட்டில் கொசு, கரப்பான், மூட்டை பூச்சி போன்றவற்றை அழிக்க 'ஹிட்' போன்ற ஒரு சாதனத்தை தீவிரவாதிகளுக்கும் கண்டுபிடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

படம் உதவி : தினமலர்

Read More...

Tuesday, December 20, 2005

பில்கேட்ஸ் வருகை மர்மம் என்ன..? - ஞாநி

டெல்லியில் பில்கேட்ஸ் கலந்துகொண்ட கூட்டத்தில் இந்திய தொழில் அதிபர் ராகுல் பஜாஜ் பேசியதை மீடியாக்கள் பெரிய அளவில் சித்திரிக்கவில்லை. இந்தியாவுக்கு பில்கேட்ஸை விட முக்கியமானவர் பஜாஜ். டூவீலர், த்ரீ&வீலர் (ஆட்டோ) துறையில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்திய பஜாஜ், பன்னாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்குப் போட்டியாக, ஓர் இந்திய நிறுவனம் வெற்றிகரமாக இயங்க முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர்.

பஜாஜ் இந்தக் கூட்டத்தில் பில்கேட்ஸை கலாய்த்தார். ‘‘இன்னும் ஐயாயிரம் பேருக்கு வேலை, இத்தனை கோடி ரூபாய் முதலீடு என்பதெல்லாம் சரி, ஆனால் இந்தியாவின் ஜி.டி.பி&யில் (கிராஸ் டொமெஸ்டிக் ப்ராடக்ட் & மொத்த உள்நாட்டு உற்பத்தி) அது என்ன பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது? ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம். போன்ற உயர்கல்வியில் பொறியியல் நிர்வாகம் ஆகியவற்றை கற்பிப்பதில் நாம் பெரும் சாதனைகள் செய்திருக்கலாம். ஆனால் ஆரம்பக் கல்வியும் பள்ளிக்கல்வியும் படுமோசமான நிலையில் இருக்கும்போது, ஒரு சில உயர்மட்ட நிறுவனங்களின் சாதனையால் பெருவாரியான மக்களுக்கு என்ன லாபம்?’’ என்று நறுக்குத் தெரித்தாற்போல் கேட்டார் பஜாஜ். அவர் மட்டுமல்ல பல பொருளாதார அறிஞர்கள் & நோபல் வென்ற அமர்த்தியா சென் உட்பட & சுட்டிக் காட்டுவது, தேசத்தில் பொருட்களின் உற்பத்தி பெருகினால் தான் நிஜமான செல்வப் பெருக்கம் (வெல்த்) ஏற்பட முடியும் என்பதாகும்.

கம்ப்யூட்டர் துறையை பொறுத்தமட்டில் இன்னமும் அதன் பயன்பாடு சுமார் 20% அளவில்தான் தயாரிப்புத் துறைக்கு இருக்கிறது. 80 சதவிகித பயன்பாடு சேவைத்துறையில்தான். எடுத்துக்காட்டு, ரயில் டிக்கெட் பதிவு, டெலிபோன் பில் போன்றவை. கம்ப்யூட்டரின் பயனைத் தயாரிப்புத் துறைக்கு பயன்படுத்துவதில் கவனம் செலுத்தும் விதத்தில் முதலீடுகள் செய்யப்படுவதில்லை. சேவைத் துறையில் கூட ஒயிட் காலர் சேவைகளில் மட்டுமே கருவிகளும், கம்ப்யூட்டர்களும் ஈடுபடுத்தப்படுகின்றன. நகர சாக்கடைகளின் கழிவுகளை அகற்றுவது, சுத்தப்படுத்துவது போன்ற அழுக்கான சேவைப் பணிகளில் இயந்திரங்கள், கம்ப்யூட்டர்கள் பங்களிப்பு இல்லை.

இப்படிப்பட்ட சூழலில் பில்கேட்ஸ் இந்தியாவில் செய்யப்போகும் முதலீட்டின் நடைமுறை விளைவுகள் என்ன?

அவரே சொன்னது போல் புத்திசாலியான நிறைய கம்ப்யூட்டர் இன்ஜினீயர்களைத் தங்களுக்குப் பயன்படும் விதத்தில் உருவாக்குவது. அவர் சொல்லாதது மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் தயாரிக்கும் ஆபரேட்டிங் சிஸ்டம் மென்பொருளை இன்னும் அதிகமாக விற்பது. இதற்கான ஒரு வியாபார உத்தியாகத்தான் தமிழ்நாட்டுப் பள்ளிகளிலும் கிராமப்புறங்களிலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி தர மைக்ரோ சாஃப்ட் முன் வந்திருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் எம்.எஸ் மென்பொருளை ரூபாய் 1200/& விலையில் விற்கவும் முன் வந்திருக்கிறது.

இந்தத் திட்டத்தை அரசாங்கத்துறை மூலம் செய்ய முற்படுவதன் உள்நோக்கம் என்ன? இதே கம்ப்யூட்டர் ஆபரேட்டிங் சிஸ்ட மென்பொருளான லினக்ஸ் (Linux), இலவச மென்பொருளாகும். இதனை பல அரசாங்கங்கள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. அரசின் பொதுத் துறையிலும், கல்வித்துறையிலும் லினக்ஸ் வேரூன்றி விட்டால் அங்கே மைக்ரோ சாஃப்ட் மார்க்கெட்டை இழந்துவிடும். எனவே, லினக்ஸ் பரவும் முன்பாக மைக்ரோ சாஃப்ட் நுழைய விரும்புகிறது.

உலக அளவில் இதுவரை மைக்ரோ சாஃப்ட், தன் வர்த்தக போட்டியாளர்களை பல வகைகளில் வீழ்த்தி இருக்கிறது. ஆனாலும் அதன் பிரதான விற்பனைப்பொருள் அதன் ஆபரேட்டிங் சிஸ்டமான விண்டோஸ் தான். விண்டோஸின் உதவி இல்லாமலே பல கணிணி செயல்பாடுகளைச் செய்து விட முடியுமெனில் விண்டோஸ் அடி வாங்கத் தொடங்கும்.

இந்த ஆபத்தும் இப்போது வந்துவிட்டது. இணையத்தில் பிரதான தேடல் வாகனமான (சேர்ச் இன்ஜின்) கூகிள், தன் பிகாசா மென்பொருள் மூலம் விண்டோஸ் இல்லாமலே பல செயல்களை இணையத்தில் செய்யும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. கணிணியே தேவைப்படாமல் செல்போன், டெலிபோன், கீ&போர்ட் மட்டும் கொண்டு பல இணைய வேலைகளைச் செய்துவிடும் அளவிற்கு கூகிள் வளர்ந்துவிட்டது.

கூகிளின் மென்பொருள் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. இன்று இணையத்தின் தேடல் கருவிகளில் முதலிடத்தில் இருக்கும் கூகிள், இப்படி மென்பொருள் துறையிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கால் பதித்ததில், மைக்ரோ சாஃப்டின் வியாபரத்திற்கு சிக்கல் வந்துவிட்டது.

கூகிளை முறியடிக்க தானும் ஒரு தேடல் வாகனத்தை களத்தில் இறக்கலாம் என்று கோடிக்கணக்கான ரூபாய் செலவில் ‘அன்டர் டாக்’ என்ற பெயரில் மைக்ரோ சாஃப்ட் அறிமுகப்படுத்தியது. ஆனால் இது வெற்றிபெறவில்லை.

இப்போது புரிகிறதா பில்கேட்ஸ் சென்னை வருகையின் மர்மம்?

நன்றி: நாணயம் விகடன்

Read More...

Thursday, December 08, 2005

நட்வர் சிங் டிராமா

நட்வர் சிங் விவகாரம் குரோஷியா நாட்டுக்கான இந்தியத் தூதர் மாத்ரானி அளித்த பேட்டிக்கு பின் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது.

இதில் நட்வர் சிங், அவரது மகன் பலிகடாவாக ஆக்கப்பட்டுள்ளார்கள்(அல்லது தியாகம்). காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியத்தை பார்க்கும் போது, இந்த எண்ணை விவகாரத்தில் கணிசமான பங்கு காங்கிரஸுக்கு நிச்சயமாக கிடைத்திருக்கும் என்பது என் கருத்து

சோனியா, மன்மோகன் சிங் பயப்படுவது பி.ஜே.பிக்கோ அல்லது பார்லிமெண்ட் ஸ்தம்பித்துவிட்டதற்கோ கிடையாது. எங்கே நட்வர் சிங்கை பதவி நீக்கம் செய்தால் அவர் உண்மையை சொல்லிவிடுவாரோ என்ற பயம் தான். இந்த டிராமாவின் திரைக்கதையை மேலும் ஒழுங்காக எழுதிவிட்டு பின்னர் நடிக்க தொடங்குவார்கள். (அதாவது நட்வர் சிங்கிடம் கொஞ்சம் பேரம் பேசிவிட்டு) அதுவரை பத்திரிக்கைகள் தங்களுக்கு தெரிந்தவற்றை எழுதிக்கொண்டிருப்பார்கள். மக்கள் அடுத்த ஊழல் வெளிச்சத்திற்கு வந்தவுடன் இந்த எண்ணை விவகாரம் பிசுபிசுத்துப்போய்விடும்.

Read More...

Monday, December 05, 2005

வெள்ளத்தில் நீந்திய அமைச்சர்






நேற்று அமைச்சர் ஜெயகுமார் , இணை கமிஷனர் சைலேந்திரபாபு வெள்ள நீரில் நீந்தி ஒவ்வொரு பகுதியாகப் பார்வையிட்டனர். பாராட்டுக்கள்.
( படம் உதவி : தினத்தந்தி )

Read More...

Monday, November 28, 2005

கைவிரல் கையேடு



கைவிரல் கையேடு ;-) ( படத்தின் மேல் கிளிக் செய்தால் பெரிதாக தெரியும் )
( நன்றி http://www.telegraphindia.com/ )

Read More...

என்ன இது, சின்னப்புள்ளத்தனமா இருக்கு ...

1. நடிகை சுஹாசினி கருத்து பிராமணர் - பிராமணர் அல்லாதோர் என்ற இயக்கத்தை வளர்க்கப் பயன்படும் - தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி

2. இந்த படத்தை பார்க்கவும்

Read More...

Wednesday, November 16, 2005

இந்தியா தென் ஆப்பரிக்கா கிரிக்கெட்

இன்று ஹைதிராபாதில் நடக்கும் ஒரு நாள் போட்டியில் இந்தியா அதிரடியாக (டான்ஸ்) ஆடிக்கொண்டிருக்கிறது.

தற்போதைய நிலவரம்: http://imsports.rediff.com/score/in_match1155.html

ஒரு சின்ன வாக்கெடுப்பு - மேலே பார்க்கவும் !

பிகு: இந்தியா சரியாக எவ்வளவு ரன் எடுக்கும் என்று சொல்லாம்.

என் கணிப்பு : 143 ஆல் அவுட்

Read More...

Monday, November 14, 2005

குழந்தைகள் தின வாழ்த்துக்கள் !

தங்கர்பச்சன் கருத்துக்கு குஷ்பு ஆவேசம்.

தமிழ் கலாசாரத்திற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்ததாக நடிகை குஷ்புக்கு தமிழக முழுவதும் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்புத்தெரிவித்தன. பல்வேறு கோர்ட்டுகளில் வழக்கும் தொடரபட்டன.

குஷ்புவுக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது: பா.ம.க. இன்று மனு

தமிழ்ப் பெண்களின் கற்பு பற்றி நடிகை குஷ்பு பேசிய கருத்துகள் சரியே என அவருக்கு ஆதரவாகப் பேசியுள்ள நடிகை சுஹாசினிக்கு பல தரப்பிலிருந்தும் கடுமையான கண்டனம் எழுந்துள்ளது.

"குஷ்பு-சுஹாசினி ஆகிய 2 பேர் வீட்டின் முன்பும் துடைப்பம் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்துவோம்" என்று தமிழர் பாதுகாப்பு கழக தலைவர் கே.ராஜன் கூறியிருக்கிறார்.

மனோரமா: முதல்வரும் ஒரு நடிகையாக இருந்தவர்தான். அவரே குஷ்பு கூறியது தவறு என்று கூறியிருக்கிறார். முடிந்த விஷயத்தை மீண்டும் பெரிதுபடுத்துகிறார்கள். அவர்கள் படித்தவர்கள். அதனால் இப்படித்தான் பேசுவார்கள். நான் படித்தவள் இல்லை. அவர்கள் மன்னிப்பு கேட்பதுதான் சரி.

தயாரிப்பாளர் கேயார்: குஷ்பு, சுஹாசினி ஆகியோரின் பேச்சு அவர்களுக்கு வேண்டுமானால் துணிச்சலான பேச்சாக தெரியலாம். அவர்கள் கருத்தை ஏற்கமுடியாது. இது கண்ணகி வாழ்ந்த நாடு. விளம்பரம் இல்லாமல் இருப்பதை விட இப்படித் தவறான விஷயங்களைப் பேசி மலிவான விளம்பரம் தேடிக்கொள்ள விரும்புகிறார்கள்.

இயக்குநர் சீமான்: தமிழர்களுக்கு கொம்பா முளைத்திருக்கிறது, தமிழர்கள் சார்பில் நான் மன்னிப்பு கேட்கிறேன் என்பதெல்லாம் சகிக்க முடியாத விஷயங்கள். இதற்காக சுஹாசினி மன்னிப்பு கேட்கவேண்டும்.

கவிஞர் மேத்தா: குஷ்பு விளக்கு பற்ற வைக்க உரசிய தீக்குச்சி கூரையின் மேல் விழுந்து கொழுந்துவிட்டு எரிகிறது. இந்த சமயத்தில் அதை அணைக்கப் பார்ப்பதுதான் அறிவுடமை. நிதானம் இழந்து நெய் ஊற்றக்கூடாது.

தமிழருவி மணியன்: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று சர்வதேச சிந்தனையை விதைத்த தமிழர்களுக்கு கொம்பு முளைத்திருப்பது உண்மைதான்.

இல.கணேசன்: தமிழர்களைப் பற்றி தமிழ்நாட்டுக்கு வெளியே இருந்து வந்தவர்கள் இழிவாகப் பேசுவதா என்று ஆவேசப்படும் தமிழக மக்களுக்கு சவால்விடும் வகையில் குஷ்புவுக்கு ஆதரவாக நான் இருக்கிறேன் என்று சுஹாசினி பேசியுள்ளதாகவே கருதுகிறேன்.

வெற்றிகொண்டான்: கலையை மலிவான விலைக்கு விற்க குஷ்பு, சுஹாசினி போன்றவர்கள் தயாராகிவிட்டனர். இவர்களைத் திருத்த முடியாது. தமிழர்களுக்கு கொம்பு இருப்பதைக் காட்டினால் அதை இவர்களால் தாங்கமுடியாது.

திருமாவளவன்: என்னைக் கருத்து கேட்டிருந்தால் கிழித்திருப்பேன் என்று குஷ்புவைக் கண்டித்தவர்களைத்தான் சுஹாசினி கூறியுள்ளார். ஒட்டுமொத்த தமிழர்களின் பிரதிநிதியாக மன்னிப்பு கேட்க இவர் யார்? தமிழர்கள் வெட்கித் தலைகுனியவேண்டுமாம்.

"என் மீது நீங்கள் குற்றம் சாட்டினால் உங்களையும், உங்கள் தலைவரையும் கோர்ட்டில் சந்திப்பேன்'' - சுஹாசினி எஸ்.எம்.எஸ்.

எஸ்.எம்.எஸ். மூலம் மிரட்டல் - நடிகை சுஹாசினிக்கு சரத்குமார் கண்டனம்

செயற்குழுவை கூட்டி குஷ்பு மீது நடவடிக்கை: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

கடைசி செய்தி: ( சத்யராஜ், வடிவேலு )

சத்யராஜ்: நடிகர், நடிகைகள் பேச்சை நாடே உற்று கவனித்துக்கொண்டு இருக்கிறது. அவர்கள் நல்லதைப் பேசினாலும் கெட்டதைப் பேசினாலும் அதற்கேற்றாற்போல் பல மடங்கு விளைவு ஏற்படும். பிரபலமடைந்ததற்கான விலை அது. எனவே நடிகர், நடிகைகள் பொது மேடைகளில் பேசும்போது கவனமாக இருக்கவேண்டியது அவசியம். முடிந்துபோன ஒரு பிரச்சினையை மீண்டும் கிளறி சர்ச்சையை எழுப்புவது கொம்பு சீவி விடுவது போல. சுஹாசினி அவ்வாறு பேசியதைத் தவிர்த்திருக்கலாம்.

வடிவேலு: குஷ்புவால் ஏற்பட்ட பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்துவைக்க எல்லோரும் பாடுபட்டோம். அது ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. ஆனால் சுஹாசினி இப்போது தேவையில்லாமல் அந்த விஷயத்தைக் கையில் எடுத்துக்கொண்டு எல்லோரையும் வம்புக்கு இழுப்பது போல் பேசியுள்ளார்.

இவர்கள் எல்லோருக்கும் இட்லிவடை சார்பில் குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள் !

Read More...

Tuesday, November 08, 2005

அப்துல் கலாமிற்கு ஒரு கடிதம்.

இந்தியாவின் முதல் குடிமகன் திரு. அவுல் பகீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் அவர்களுக்கு,

கும்புடுகிறேன் சாமி!

இப்பெல்லாம் யாருக்காவது கடுதாசி எழுதறதுன்னாலே கையல்லாம் வெடவெடுக்கிறது. தமிழ் வலைப்பதிவின் லேட்டஸ்ட் ஃபேஷன் உங்களுக்கு கடிதம் எழுதுவதுதான். அந்த விஷயத்திற்கு அப்பால வருவோம். அப்புறம் நீங்க இன்னும் கவிதையெலாம் எழுதிக்கிட்டு இருக்கீங்களா ? அப்படியே ஒரு வலைப்பதிவு ஆரம்பிச்சிங்கனா ஷோக்கா இருக்கும். இங்கேயும் நிறைய அரசியல் இருக்கு.

சின்ன வயசில உங்க போட்டோவை ரூம்ல எல்லாம் மாட்டி வெச்சிருப்பேன். எப்போ உங்கள் போட்டோவை பார்த்தாலும் அதில உங்கள் உழைப்பு, நேர்மை, செயல் திறமை எல்லாம் தெரியும். உங்க அக்னிச் சிறகுகள் புத்தகத்தை நிறைய முறை படிச்சிருக்கேன்.

உங்களை ஜனாதிபதிக்கு பரிந்துரைத்த போது, முதல மகிழ்ச்சி அடைந்தவன் நானாகத்தான் இருப்பேன். இந்தியாவிற்கு விடிவுகாலம் வந்தது என்று நினைத்துக்கொண்டேன். விஞ்ஞானி ஜனாதிபதியாகப் போகிறார் என்று ஒரே சந்தோஷம். எல்லோருக்கும் இனிப்பு எல்லாம் கொடுத்தேன்.

ஆனால் நீங்கள் கூட மற்றவர்கள் என்ன செய்யதார்களோ அதைத்தான் இன்று வரை செஞ்சிருக்கீங்க. நடு ராத்திரி வீடு தேடி வந்து கடுதாசியை நீட்டினால் உடனே கையெழுத்து போட்டுடரீங்க. அடுத்த நாள் காலை பேப்பர் பாத்தவுடன் தான் உங்களுக்கே அது அமைச்சர் மாற்றம் அல்லது ஆட்சி கலைப்பு பற்றியது என்று என்று தெரியவரும். அப்துல் கலாம் என்ற உங்கள் பெயரை அப்துல் சலாம் என்று எல்லோரும் கிண்டல் பண்ணுகிறார்கள். இது தேவையா ?

பீகார் சட்டசபை கலைத்ததற்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்தது. அதை படித்தீர்களா ? இது அசிங்கம் இல்லையா ? கையெழுத்து போடுவதற்கு முன் ஒரு சின்ன கேள்வி கூட கேட்க மாட்டிங்களா ? கொஞ்ச நாள் முன்னாடி "கவர்னர்கள் சுதந்திரமாக செயல்படலாம், எந்த முடிவையும் எடுக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு; யாருக்கும் பயப்படத் தேவையில்லை" என்று சொன்னீர்கள். உங்கள் நகைச்சுவை உணர்வை என்னேன்னு சொல்லுவது ?

பொக்ரான் அணுகுண்டு நல்லா போட்டீங்க ஆனா அதை விட ஒரு பெரிய குண்டை சில வாரங்களுக்கு முன் போட்டீங்க - அது ராஜிவ் கொலையாளிகள், வீரப்பன் கூட்டாளிகள் உட்பட தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனை பெற்றவர்கள் சுமார் 40 கைதிகளுக்கு கருணை காட்டுமாறு மத்திய அரசுக்கு நீங்கள் சிபாரிசு செய்திருக்கிறீர்கள் என்று படித்தேன். ஏன் அவர்கள் மீதி குற்றம் சுமத்தியவுடனே கருணை காமிக்கலாமே ? கோர்ட், கேஸ், அப்பீல், தீர்ப்பு என எதற்கு வீண் செலவு, நேர விரயம் ? அப்புறம் டெல்லியிலே குண்டு வெச்சவங்களையும் இந்த லிஸ்டில சேத்துக்குவீங்களா ?

எதிர் கட்சி அவ்வப்போது உங்களிடம் வந்து டீ, காப்பி சாப்பிட்டு விட்டு ஒரு மனுவை கொடுக்கிறார்கள். அதை நீங்கள் படிக்கிறீர்களா ? அல்லது ஃபைல் செய்து வைத்துக்கொள்வீர்களா ? அல்லது பழைய பேப்பர் காரனுக்கு போடுவீர்களா ? எதிர் கட்சியும் தவறாது மனுவை கொடுத்துவிட்டு வெளியே வந்து போட்டோ எடுத்துக்கொண்டு NDTVக்கு பேட்டி கொடுக்கிறார்கள். இதெல்லாம் சுத்த ஏமாத்து வேலை என்று எல்லோருக்கும் தெரியும். ஏன் இந்த பாசாங்கு ?

உங்க ராஷ்ட்ரபதி மாளிகையில் மூலிகை தோட்டம் எல்லாம் நீங்க வளர்க்கிறதா கேள்விபட்டேன். அதில நம்ம அரசியல்வாதிகள் திருந்துவதற்கு எதாவது ஸ்பெஷல் மூலிகை இருக்கான்னு பாருங்க. நீங்கள் விஷன் 2010 என்று ஏதேதோ சொன்னிர்களே?

வருடா வருடம் நடிகர்களுக்கு தேசிய விருது கொடுக்கிறீங்க. நல்ல விஷயம் தான். ஆனா நீங்கள் விருது கொடுத்த சில நடிகர்களின் வீடுகளில் எல்லாம் இன்கம் டாக்ஸ் ரைடு எல்லாம் நடந்திருக்கிறது. அவர்கள் அரசாங்கத்தை ஏமாத்தியிருந்தால் இந்த விருதுக்கு அவர்கள் தகுதியானவர்களா ?. எவ்வளவோ பேர் இன்கம் டாக்ஸ் எல்லாம் தவறாது கட்டிக்கொண்டு நல்ல குடிமகன்களாக இருக்கிறார்கள். இவர்களை காட்டிலும் நடிகர்கள் உசந்தவர்களா ? அடுத்த முறை விருது கொடுக்கும் முன் கொஞ்சம் யோசிப்பீர்களா ?

வருஷா வருஷம் அந்தந்த தினங்களுக்கு வாழ்த்து சொல்லுவதும், டிவியில் குடியரசு/சுதந்திர தினத்திற்கு ரேடியோ/டிவியில் பேசுவதும் ஒரு சடங்காக ஆகிவிட்டது. இந்த தடவை பவர் பாயிண்ட் ஸ்லைட் எல்லாம் ஷோக்கா காமிச்சிங்க. இதனால் என்ன பிரயோஜனம் ?

வருகிற 14 ஆம் தேதி, குழந்தைகள் தினம். குழந்தைகளை உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். குழந்தைகள் தின வாழ்த்துக்கள். சரி என்ன செய்வதாக உத்தேசம் ? உங்கள் பதவி காலத்தில் எதாவது ஒன்றாவது கொஞ்சம் வித்தியாசமாக செய்வீர்கள் என்று இன்றும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. செய்வீர்களா ?

ஆவலுடன்,
இட்லிவடை
(ஒரு சராசரி இந்திய குடிமகன்)

Read More...

Wednesday, October 26, 2005

அரசியல் பள்ளிக்கூடம்

Image hosted by Photobucket.com

இட்லி வடை இரண்டு ஆண்டுகள் முடித்து மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது! ஆதரவு அளித்த அனைவருக்கும் என் நன்றிகள்!!

சட்டசபை ஒரு பள்ளிக்கூடமாக இருந்தால் எப்படியிருக்கும் என்று ஒரு கற்பனை. பள்ளி ஆசிரியர் காளிமுத்து. மாணவர்கள் ? நாம் தினமும் சந்திக்கும் அரசியல் தலைவர்கள்தான்!

சரி, பள்ளிக்கூடம் ஆரம்பித்துவிட்டது...

ஆசிரியர் காளிமுத்து வகுப்பறைக்குள் வருகிறார். எல்லோரும் எழுந்து வணக்கம் தெரிவிக்கிறார்கள். ஆசிரியர் வந்தவுடன், ஒரு திருக்குறளை போர்டில் எழுதிவிட்டு மாணவர்களைப் பார்க்கிறார்.

"இதை எழுதியது யார்?"

"நீங்கள் தான் சார்" என்கிறார் துரைமுருகன்.

"நான் கேட்டது திருக்குறளை எழுதியது யார்?" என்று.

"நீங்கள் தான்!"

"வந்தவுடனேயே பிரச்சனையை ஆரம்பிக்காதீர்கள். அப்புறம் வெளியே அனுப்பிவிடுவேன்!" என்று எச்சரிக்கிறார்.

அப்போது அன்பழகன் ஆசிரியரிடம் ஒரு கடிதத்தை கொடுக்கிறார்.

"என்னப்பா உங்க தலைவர் இன்றும் லீவ் லெட்டர் கொடுத்தனுப்பினாரா ? என்ன எழுதியிருக்கார் ? நீயே படி!".

அன்பழகன் படிக்க தொடங்குகிறார்.

"உடன்பிறப்பே, நேற்று அறிஞர் அண்ணாவும், பெரியாரும் என் கனவில் தோன்றினார்கள். "இடித்த புளியான தமிழன் சூடு சொரணை அற்றவன். இப்படி ஒரு கூறுகெட்ட ஜன்மத்தை எந்த நாட்டிலே பார்க்க முடியும் ? இளிச்சவாயானாக இருப்பது ஏன்? இதற்குக் காரணம் யார் ?" என்று என்னைக் கேட்டார்கள். என்னால் பதில் சொல்ல இயலவில்லை. இது சிந்திக்க வேண்டிய ஒன்று என்று கூறி சில நாள் அவகாசம் கேட்டுள்ளேன். எனக்குச் சிந்திப்பதற்கு சில நாள்கள் தேவைப்படுவதால் என்னால் பள்ளிக்கு வர முடியாது. அதனால், சில நாள்கள் எனக்கு விடுப்பு வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புள்ள,
மு.க."

"ஸ்கூல் ஆரம்பித்ததிலிருந்து இப்படியே கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார்; இவர் எழுதிய கடிதத்தை பைண்ட் பண்ணி ஒரு புத்தகமாகப் போடலாம். இப்படி ஸ்கூல் ஆரம்பித்ததிலிருந்து வராமல் இருந்தால் அவர் மேல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிவரும்!"

"எல்லோரும் வீட்டுப்பாடம் எழுதிவிட்டீர்களா ? எங்கே அன்பழகன் உன் புத்தகத்தைக் கொடு!" என்று வாங்கிப் படிக்கிறார்.

"'மதர் டங்க் ?' என்றால் 'ரொம்ம்ம்ப நீளம்.....!'னு போட்டிருக்கே, என்னப்பா இது?"

"ஆமாம் சார், மதர் என்றால் தமிழில் என்ன?"

"அம்மா"

"அம்மாவிற்கு எப்போதுமே வாய் நீளம் தானே சார்?"

"அப்படி எல்லாம் பேச கூடாது. நேற்று அம்மா அவர்கள் தான் பக்குவம் அடைந்துவிட்டதாகக் கூறியிருக்கார், நினைவில்லையா ?, சான்றோர் வாக்கை எப்போதும் மதிக்கணும்!"

எல்.கணேசன் எழுந்து, "சார், நான் சான்றோர் வாக்கைப் பார்த்திருக்கிறேன்!"

"என்ன, சான்றோர் வாக்கைப் பார்தையா ? அதெப்படி.. சான்றோர் வாக்கைக் கேக்கத்தானே முடியும், பாக்க முடியுமா ?"

"சார், எங்கள் தலைவர் வைகோ அவர்கள் வாக் செய்ததை (சன் டிவி தவிர) எல்லோரும் பார்த்தோம்; அதைத் தான் சொன்னேன்!"

"ஐயோ உங்க தொந்தரவு பெரிய தொந்தரவாக இருக்கிறது. உட்கார்"

"சரி, நேற்று பாண்டவர்கள் எத்தனை பேர் என்று கேட்டிருந்தேனே ? எங்கே நீ சொல்லு?" என்று எஸ்.ஆர்.பியை பார்த்துக் கேட்கிறார்.

"ஆறு பேர் சார்!"

"ஆறா? ஐந்து பேர்தானடா... ஆறாவதா யாரு?"

"தருமன், பீமன், அர்சுணன், நகுலன், சகாதேவன் என பாண்டவர்கள் அஞ்சுபேர். போப்'பாண்டவ'ரைச் சேர்த்து மொத்தம் ஆறுபேர்!"

"இதிகாசத்தை இப்படி எல்லாம் மாத்த முடியாது!"

"மதச்சார்பின்மையை மதிக்கிற ஆசிரியர் என்று உங்களை நினைத்தேன்?!"

"ஸிட்டவுன்!!"

அப்போது வகுப்பறைக்கு லேட்டாக இளங்கோவன் வருகிறார்.

"ஏண்டா லேட்?"

"சார், நான் விமானத்தில் ஏறி டெல்லி போறமாதிரி கனவு கண்டேன் அதனால் தான் லேட் ஆயிருச்சு.."

பின்னால் ஜி.கே.வாசன் வர..

"ஏண்டா நீயும் லேட்?"

"சார், இளங்கோவன் டெல்லி போனான் சார், அவனை வழியனுப்ப நான் போனேன் சார்.."

"இப்படி நீங்க கனவு காண்பதனால் தான் தமிழ்நாட்டிலே உருப்பட மாட்டேங்கிறேங்க!"

பின் வரிசையில் இருந்து தா.பாண்டியன் "சார் எனக்கு ஒரு சந்தேகம்.."

"என்ன சந்தேகம்?"

"தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் நீர்விழுச்சி தமிழக அரசுக்குச் சொந்தமா ? அல்லது கர்நாடக அரசுக்குச் சொந்தமா ?"

"நல்ல கேள்வி, அம்மையார் இதற்கு பதில் அளிப்பார்!"

அம்மையார் எழுந்து பச்சை ஃபைலைப் பார்த்து, "எல்லோருக்கும் தெரியும் இது ஒரு Falls நியூஸ் என்று.."

எல்லோரும் மேஜையை தட்டுகிறார்கள்.

"சார்!"

"யாரப்பா அது?"

"நான் தான் சார், கணேசன், எனக்கு பொன்முடி பக்கத்தில் உட்கார சீட் தர மாட்டேங்கிறாங்க!"

"ஏம்பா கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து கணேசனுக்கு இடம் கொடுங்கப்பா!"

"எனக்கே இடம் இல்லை, வேறு எங்காவது போய் உட்காரச் சொல்லுங்கள்."

"பார்த்து அட்ஜஸ்ட் பண்ணி இடம் கொடுங்க."

"ஏன் அம்மா பக்கத்தில் இடம் இருக்கே அங்கே போய் உட்காரச் சொல்லுங்கள்."

உடனே கணேசன் "சார், நான் இங்கேயே அட்ஜஸ்ட் பண்ணி உட்கார்ந்துக்கொள்கிறேன்."

பின்னாடியிலிருந்து ஒரு சத்தம் வருகிறது "ஐயா, ஒரு கோரிக்கை.."

"என்ன ராமதாஸ்?"

"ஐயா, தமிழன், தமிழ்நாட்டில், தமிழ் வகுப்பில்..."

"சீக்கிரம் சொல்லு என்ன வேண்டும்?"

"நீங்கள் வருகைப் பதிவை எடுக்கும் போது எல்லோரும் "எஸ்..சார், எஸ்..சார்" என்று கூறுகிறார்கள். அப்படிக் கூறாமல் 'உள்ளேன் ஐயா!' என்று கூற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்."

"நல்ல யோசனை!"

"தாங்க்கியு சார், 'மே ஐ ஸிட்டவுன்?"

எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் எழுந்து "சார், எங்கள் பிரதம மந்திரி, மன்மோகன் சிங் சீக்கியர்களுக்கு நடந்த கொடுமைகளுக்கு மன்னிப்புக் கேட்டுள்ளார், என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்."

பின்னாலிருந்து ஒரு குரல் வருகிறது...

"மன்னிப்பு, தமிழில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை.."

"யாரப்பா அது, இவரை யார் உள்ளே விட்டது"

"சரி, மறக்கும் முன், உங்கள் பரிட்சை பேப்பரைத் திருத்திக்கொண்டிருந்தேன். ராஜா என்று நினைக்கிறேன் 'ஆர்.எஸ்.எஸ். துணை' என்று போட்டு எழுதியிருக்கார், அப்படி எல்லாம் போடக்கூடாது. நல்லா படிக்கணும், நல்லா படித்தால் எல்லோருக்கும் வேலை கிடைக்கும், வேலை இல்லாவிட்டால் எல்லோரும் நாக்ஸலைட்கள் ஆகிவிடுவீர்கள்!"

"சார், நான் ஒரு புதுக்கவிதை எழுதியிருக்கேன், எல்லோருக்கும் படித்துக் காண்பிக்கவா?" என்று செல்வி ஜெயலலிதா எழுந்து படிக்க ஆரம்பிக்கிறார்.

(இப்போது பலர் டாய்லட் வருகிறது என்று எழுந்து போகிறார்கள்.)

"மதமாற்றத் தடை வாபஸ்,
பலி தடுப்பு வாபஸ்,
ஹெச் முத்திரை வாபஸ்,
விவசாயி மின்சாரக் கட்டணம் வாபஸ்,
அரசு ஊழியர்கள் நடவடிக்கை வாபஸ்,
பத்திரிகைகள் மீது வழக்கு வாபஸ்,
பல்கலைக்கழகப் பெயர்மாற்றம் வாபஸ்..!"

"ஆஹா! அருமையான கவிதை!! நீங்கள் 'வாபஸ் வாபஸ்' என்று கவிதை படித்தவுடன் வெளியே நம் ஸ்கூல் பஸ் வந்துவிட்டது. எல்லோரும் வீட்டுக்குப் போகலாம்; போகும்முன் எல்லோருக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துகள்!!"

Read More...

Friday, October 21, 2005

தமிழ்மணம் டாப் 10

காலையில் என் 'கன்னி' ராசிக்கு என்ன பலன் என்று படித்தபோது "ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். உங்கள் பதிவுக்குப் பக்கத்தில் தமிழ்மணத்தில் பச்சை விளக்கு எரியும். (பச்சையாக எழுதினால் சிகப்பு விளக்கு) இதனால் தமிழ்மணம் நிஜமாகவே மணக்க போகிறது. உங்களுக்குத் தொல்லை தந்த எதிரிகள் இன்றோடு ஒழிந்தார்கள்...." என்று படித்து திடுக்கிட்டு என் பக்கத்தில் உள்ள ரேடியோவை ஆன் செய்தால் "சற்று முன் ஆன் செய்த 'இட்லிவடை'க்கு பிடித்த பாடல் என்று அறிவித்து 'பச்சை நிறமே பச்சை நிறமே" என்ற பாடல் முழுவதும் நடுவில் விளம்பரங்கள் இல்லாமல் ஒலிபரப்பினார்கள். நிஜமாகவே ரேடியோ மிர்ச்சி - செம்ம ஹாட்டு மச்சி! சரி என்னதான் தமிழ்மணத்தில் நடக்கிறது என்று போய்ப் பார்த்தால் 'இட்லிவடை'க்கு பக்கத்தில் நிஜமாகவே 'பச்சை விளக்கு'. ஆகா! இன்று ஜென்ம சாபல்யம் அடைந்த நான், ராசிபலனையும் நம்ப ஆரம்பித்தேன்.

சரி இப்போது விஷயத்திற்கு வரலாம். வளவள என்று எழுதாமல் ஒரு டாப் டென்:

1. சில மாதம் முன்னால் பத்ரி அவர்கள் தமிழ்மணத்தின் எதிர்காலம் என்று ஒரு பதிவு எழுதியிருந்தார். அதில் தமிழ் மணம் 1000 பதிவுகளைத் தொட்டால் ஷாக்கடித்து பலர் துடிப்பார்கள் என்றார். இன்று 700 பதிவுகளுக்கே பலர் ஷாக்கடித்து அவதிப்படுகிறாகள்.

2. தமிழ்மணம் ஒரு திரட்டி, குப்பை போல் எல்லாம் இருக்க வேண்டும். அது தான் அதற்கு அழகு. கோழி எப்படி குப்பையிலிருந்து தனக்கு வேண்டிய குப்பையைப் பொறுக்கி எடுத்து சாப்பிடுமோ அதே போல் தமிழ் அறிஞர்கள் தங்களுக்கு வேண்டியவற்றை எடுத்துக்கொள்வார்கள். இதை மாடரேட் செய்வதற்கு பதில் சலூனுக்கு சென்று தலை மயிர் வெட்டிக்கொள்ளும் உபயோகமான வேலை இருந்தால் செய்யலாம்.

3. மூன்று மாதம் எழுதாத பதிவை பட்டியலிலிருந்து நிக்கிவிடுவதற்கு காசிக்கு முழு உரிமை உண்டு. ஆனால் அதை ஒரு வாக்கெடுப்பு நடத்தி பிறகு நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அட்லீஸ்டு ஜனனாயக முறை என்று ஜல்லி அடித்திருக்கலாம். தமிழ் கூறும் நல்லுலகம் 'ஆஹா' என்று பாராட்டியிருப்பார்கள்.

4. தமிழ்மணத்தின் சுட்டி தமிழ்மணம் திரட்டும் எல்லா வலைப்பதிவிலும் இருக்க வேண்டும் என்று காசி கூறியிருக்கிறார். விரைவில் கட்டாயமாகப்படும் என்றும் கூறியிருக்கிறார். தமிழ்மணம் காசியுடையது, அப்படிச் சொல்ல காசிக்கு முழு அதிகாரம் இருக்கிறது. அதே போல் வலைப்பதிவு வைத்திருப்பவருக்கும் அவர் தன் வலைப்பதிவில் சுட்டி கொடுக்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்ய அதிகாரம் இருக்கிறது. உதாரணத்திற்கு ( பி.கே.சிவகுமார் போல் ) வலைப்பதிவு வைத்திருப்பவர்கள் எல்லோரும் தமிழ் மணத்திலிருந்து வேளியே வந்துவிட்டார்கள் என்று வைத்துக்கொள்வோம், தமிழ்மணம் நாறிவிடும். அல்லது தமிழ்மணத்திற்கு தேவையே இருக்காது.

5. "தற்போது தமிழ்மணம் ஒரு monopoly போல் திகழ்கிறது; சர்வாதிகாரம்; பேச்சுரிமை கிடையாதா? என்ன ஒரு கொடுமை!" என்று எல்லோரும் எழுதிவிட்டார்கள். வேடிக்கை என்னவென்றால் தமிழ்மணம் இவர்கள் யாரையும் எழுதாதே என்று சொல்லவில்லை. 'தமிழ்மணத்தில் உங்களுக்கு இடம் கிடையாது, சாரி!' என்று சொல்லிவிட்டது; அவ்வளவு தான். இதற்கு காசிதான் வருத்தப்பட வேண்டுமே தவிர நீங்கள் கிடையாது. மாறாக நீங்கள் நன்றாக எழுதி, என் பதிவை தமிழ்மணம் திரட்ட வேண்டும் என்றால் என்னிடம் பர்மிஷன் வாங்க வேண்டும் என்று சொல்லிப் பாருங்கள்/ சொல்ல ஆரம்பியுங்கள்.

6. தமிழ்மணத்திற்குப் போட்டியாக இன்னொரு வலை திரட்டி வந்தால் நன்றாக இருக்கும் என்று ஸ்ரீரங்கத்து மாமி கருத்து தெரிவித்துவிட்டார். அப்படி எது வந்தாலும் பாலியல், குஷ்பு, செருப்பு, சாணி, மதம், ஜாதி( குறிப்பாக பார்பனியம், தலித்), விடுதலைப்புலி (ஆதரவு, எதிர்ப்பு) என்று தனி நபர் தாக்குதல் இல்லாம் தமிழ் வலைப்பதிவு இருக்காது என்று சூடம் ஏற்றி சத்தியம் செய்யலாம்.

7. தமிழ் மணம் தமிழ் வலைப்பதிவுகளுக்கு ஒரு Yellow pages போன்ற ஒன்று. அதற்கு மேல் அது செயல் பட்டால் அது இன்னொரு மரத்தடி/ராயர் போல் ஆகிவிடும். அதற்கான அறிகுறிகள் தான் இந்த மாதிரிப் பிரச்சனைகள்.

8. கிட்டத்தட்ட ஐம்பது ஓட்டு வந்திருக்கிறது. ஓட்டுப்போட்ட அனைவருக்கும் நன்றிகள். முடிந்தால் இந்திய ஜனாதிபதிக்கு இந்த முடிவை அனுப்புகிறேன்.

9. 'கோயிஞ்சாமிகள்' கூட்டம் இந்த மாதிரி நேரத்தில் கருத்து சொல்லாமல் இருப்பதன்மூலம் தங்கள் நடுநிலமையை தக்க வைத்துக்கொண்டுள்ளார்கள்.

10. நல்ல வலைப்பதிவுக்கு தமிழ்மணம் தேவையில்லை. அவை தமிழ்மணம் இல்லாமலும் கவனிக்கப்படும்.

[ முடிவுகள் ]

Image hosted by Photobucket.com

Read More...

Wednesday, October 19, 2005

தமிழ்மணம் அறிவிப்பு

தமிழ்மணம் காசி அவர்கள் சில அறிவிப்புகள் கொடுத்துள்ளார்:

அறிவிப்பு 1
அறிவிப்பு 2

இதை பற்றி நான் எழுதும் முன் ஒரு சின்ன வாக்கெடுப்பு !

[ஒட்டு பெட்டி இருக்குது பார் மேலே]

Read More...

Wednesday, October 12, 2005

ஒரு பிளாகரின் கதை

கவுரவ் சாப்னிஸ் (Gaurav Sabnis) தன் ஆங்கில வலைப்பதிவில் IIPM கொடுத்த ஒரு டுபாக்கூர் விளம்பரத்தை பற்றி தன் கருத்தை எழுதி, கூடவே அதை சுட்டிக்காட்டிய ஜாம் பத்திரிக்கை செய்தியையும் கொடுத்திருந்தார்


மூன்று மாதம் கழித்து IIPM கொஞ்சம் பேஜாராகி "மரியாதையாக நீ எழுதியவற்றை அழித்து விட்டு மன்னிப்பு கேள் அல்லது 125 கோடி ரூபாய் நஷ்டஈடு கொடு" என்று கேட்டு இவருக்கு ஒரு வக்கீல் நோட்டீஸை அனுப்பி கவுரவ்வை சிரிக்க வைத்தது.

இதற்கு கவுரவ் ஒத்துக்கொள்ளவில்லை.

கையாலாகாத IIPM கோழைத்தனமாக கவுரவ் வேலை பார்க்கும் ஐபிம்(IBM) மேலதிகாரிக்கு கவுரவ் தன் பதிவை எடுக்காவிட்டால் IIPM மாணவர்கள் IIPMல் இருக்கும் ஐபிம் Think Pad Lap topபை எல்லாம் எரிக்க போகிறார்கள் என்று நெருக்கடி கொடுத்தது.

இதனால் கவுரவ் தான் வேலை பார்க்கும் IBMக்கு இக்கட்டான நிலமையை கொடுக்கக்கூடாது என்று தன் வேலையை ராஜினாமா செய்தார்.

தன் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, கருத்து சுதந்திரம் தான் முக்கியம் என்று கருதிய கவுரவின் கவுரவத்தை இட்லி வடை பாராட்டுகிறது.

இது தொடர்பான கருத்துக்கள் மற்றும் கடைசி செய்திக்கு இங்கே பார்க்கவும்

Read More...

Thursday, October 06, 2005

உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள்


( படம் உதவி: Rediff.com )

Read More...

Thursday, September 22, 2005

பிளின்டாப் அதிர்ச்சி தகவல்

லண்டன்: ""டில்லி போட்டியில் ஆர்வமாக பீல்டிங் செய்து கொண்டிருந்தேன். அப்போது ஏதோ ஒன்று என் மீது பயங்கரமாக தாக்கியது. உடனே குனிந்து பார்த்தேன். மைதானத்தில் ஆங்காங்கே துப்பாக்கி குண்டுகள் சிதறிக் கிடந்தன. அப்படியே அதிர்ந்து போனேன், '' என பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார் இங்கிலாந்து அணியின் ஆஷஸ் நாயகன் ஆன்ட்ரூ பிளின்டாப்.

சவுரவ் பதிலடி:கடந்த 2002ல் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. 6 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இங்கிலாந்து 13 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தது. இந்தச்
சூழலில் அதிரடி வீரராக கலக்கிய பிளின்டாப் தொடர் சமநிலையில்(33) முடிய முக்கிய காரணமாக இருந்தார். சர்ச்சைக்குரிய டில்லி ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் 3 சிக்சர், 1 பவுண்டரியுடன் 39 பந்தில் 52 ரன் விளாசி வெற்றி தேடி தந்தார். அடுத்து மும்பையில் நடந்த 6வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. உடனே கால்பந்து வீரர் பாணியில் பிளின்டாப் சட்டையை கழற்றி சுழற்றினார். இதற்கு பதிலடியாகத் தான் லார்ட்ஸ் அரங்கில் நாட்வெஸ்ட் தொடரை நமது அணி வென்ற போது கேப்டன் கங்குலியும் சட்டையை கழற்றி சுழற்றினார்.


சரிதை:இப்படி பல்வேறு விதத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த இந்திய தொடர் குறித்து தனது "பீயிங் பிரட்டி' சுயசரிதையில் பிளின்டாப் குறிப்பிட்டுள்ளார். இதில் டில்லி ஒரு நாள் போட்டியில் யாரோ ஒருவர் தன்னை குறி வைத்து துப்பாக்கியால் சுட்டதாக தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தை வெளியில் தெரிவிக்க அணி நிர்வாகம் தடுத்து விட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இது பற்றி பிளின்டாப் எழுதியிருப்பதாவது:

ஐந்தாவது ஒரு நாள் போட்டி டில்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் 2002, ஜன.31ல் நடந்தது. நான் துடிப்பாக பீல்டிங் செய்து கொண்டிருந்தேன். அப்போது ஏதோ ஒன்று என் மீது பயங்கரமாக தாக்கியது. குனிந்து பார்த்த போது மைதானத்தில் துப்பாக்கி குண்டுகள் சிதறிக் கிடந்தன. பொதுவாக இந்திய துணைக் கண்டத்தில் நடக்கும் போட்டிகளின் போது ரசிகர்கள் தண்ணீர் பாட்டில்களை தான் வீசி எறிவர். ஆனால் துப்பாக்கியால் சுடுவார்கள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்த சம்பவத்தால் கடும் அதிர்ச்சி அடைந்தேன். அப்போதைய கேப்டன் நாசர் ஹூசைன் மிகுந்த ஆத்திரமடைந்தார். ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டின் மீடியா அதிகாரி ஆன்ட்ரூ வால்போல் சம்பவத்தை பெரிதாக்க வேண்டாம் என்று கூறி விட்டார். அடுத்த நாள் நிருபர்களை சந்திக்கும் போது எதையும் தெரிவிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார். இப்போது அந்த சம்பவத்தை நினைக்கும் போது எல்லாவற்றையும் அப்போதே தெரிவித்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஏöன்றால் நான் சுட்டு வீழ்த்துவதற்காக களத்தில் நிற்கவில்லை. அணி நிர்வாகத்தின் கட்டுப்பாடுகளால் எல்லாவற்றையும் மூடி மறைக்க வேண்டியதாயிற்று.

இவ்வாறு டில்லி அதிர்ச்சி சம்பவம் குறித்து பிளின்டாப் குறிப்பிட்டுள்ளார்.

ஏன் மறைத்தார்?

பிளின்டாப் புகாரை மறுத்துள் ளார் டில்லி கிரிக்கெட் சங்க துணைத் தலைவர் சி.கே.கண்ணா. "" இது மிகவும் வேடிக்கையான குற்றச்சாட்டு. அப்போது டில்லி போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். அப்படியிருக்கையில் துப்பாக்கியால் ஒருவர் சுடுவது எல்லாம் நடக்காத காரியம். பிளின்டாப் சொல்வது உண்மையானால் இத்தனை காலம் ஏன் மறைத்தார்? எனவே அவரது புகாரை சீரியசாக எடுத்துக் கொள்ள முடியாது,'' என்றார் கண்ணா.

Read More...

Tuesday, September 13, 2005

கேப்டன் பேட்டி

பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட "சூப்பர் ஸ்டார்", அரசியல் வானில் தோன்றாமலே ஒதுங்கியபடி இருக்க... "நான் நிச்சயமாக வருவேன்" என்று கடந்த சில ஆண்டுகளாகவே சூடு கிளப்பிக் கொண்டிருந்த "கேப்டன்", களத்தில் குதித்தே விட்டார். வரும் 14'ம் தேதியன்று மதுரையில் அவர் நடத்தப்போகும் மாநாடுதான் தமிழகத்தில் இன்றைக்கு "ஹாட் டாபிக்"! எந்தப் பக்கம் திரும்பினாலும் இதே பேச்சாகத்தான் இருக்கிறது.

மாநாட்டுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில், "நான் நினைப்பது என்ன... சாதிக்கப்போவது என்ன... அதையெல்லாம் எப்படி சாதிக்கப் போகிறேன்" என்பது குறித்தெல்லாம் "விஜய் டி.வி"'க்காக மனம் திறந்திருக்கிறார் "கேப்டன்" விஜயகாந்த்.


* நடிக்க வந்த புதுசுல, மூணு நாளைக்கு மட்டும் இவரை வெச்சு படமெடுத்துட்டு, திடீர்னு சொல்லாம இவரை அனுப்பிட்டாங்க. என்ன காரணம்னுகூட இவருக்குத் தெரியலை. அப்புறமா விசாரிச்சப்பத்தான், ‘இவருக்கு உச்சரிப்பே வராது. தமிழ் சரியா பேசத் தெரியலை’னு சொல்லியிருக்காங்க. அப்பதான் அவரு முடிவெடுத்திருக்காரு. தமிழ் நல்லா பேசறது மட்டுமல்ல... நான் அனல் கக்கற நீண்ட வசனமெல்லாம் பேசணும், அதை மக்கள் ஆரவாரம் பண்ணி ரசிக்கணும்னு முடிவெடுத்திருக்காரு. "ரமணா" படத்துல, ஏக அப்ளாஸ§க்கு நடுவில் அவர் பேசுகிற வசனமெல்லாம்கூட அந்த கனவின் வெளிப்பாடுதான்.

* ‘எம்.ஜி.ஆர்&னா நல்லவர் என்கிற அசைக்க முடியாத எண்ணத்தை அவர் எனக்குள் உருவாக்கி வச்சிட் டாரு. அவரு ரொம்ப எளிமையானவர். மக்களோட ரசனையை துல்லியமா எடை போடத் தெரிஞ்சதால், அவரோட படங்கள் எல்லாமே வெற்றிப்படங்களா இருந்துச்சு. எல்லாரும் ரொம்ப கஷ்டப் பட்டு பண்ற எந்தவொரு விஷயத்தையும் எம்.ஜி.ஆர். அப்படியே ஊதித் தள்ளிட்டுப் போயிடுவாரு. அந்த குணம் எனக்கு ரொம்ப பிடிச் சிருந்துது.

* நான் நடிக்க வந்த பிறகு சிவாஜியோட எனக்கு நெருக்கமா பழகற வாய்ப்பு கிடைச்சுது. அவரு எட்ட முடியாத உயரத்தை அடைந்துவிட்ட மிகப் பெரிய நடிகர்ங்கறதை தெரிஞ்சுகிட்டேன். அவரும் எளிமையானவருனு புரிஞ்சிகிட்டேன். இருந்தாலும், எல்லாத்துலயும் என்னைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆருக்குத்தான் முதலிடம்’ என்ற விஜயகாந்த்,


* ‘நான் ஆரம்ப காலத்துல நடிக்க வந்தப்ப என்னோட பல நடிகைகள் நடிக்க மாட்டேன்னு மறுத்திருக்காங்க, தெரியுமா?’னு எந்த காம்ப்ளக்ஸ§ம் இல்லாம வெளிப்படையா தனது கடந்த கால நிகழ்வுகளையும் பகிர்ந்துகிட்டார்.


* ‘எத்தனையோ கட்சிகள் தமிழகத்துல இருக்கு. நீங்க பொது வாழ்க்கைக்கு வர்றதுனு முடிவு செஞ்ச பின்னாடி, உங்களுக்கு உரிய அந்தஸ்து கொடுக்கக்கூடிய ஏதாவது ஒரு கட்சியில் போய்ச் சேராமல்... ஏன் நீங்களே ஒரு புதுக்கட்சி ஆரம்பிக்கிறீங்க? இருக்கிற கட்சிகள் மீது உங்களுக்கு நம்பிக்கையில்லையா?’னு கேட்டேன். பளிச்சுனு அவரிடம் ஒரு கோபத்தையும், ஆதங்கத்தையும் பார்த்தேன்.

‘எந்த கட்சிகளுமே மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேத்தலை. மக்கள் பணத்தை கொள்ளையடிக்கிறாங்க. மக்கள் வெறுப்பை ரொம்பவே சம்பாதிச்சிருக்காங்க. இந்த கசப்பான உண்மையை என்னால தாங்கிக்க முடியலை. நேர்மையா மக்களுக்கு உழைக்கணும். அதுக்காக ஒரு இயக்கம் ஆரம்பிக்கணும் என்கிற உந்துதல் காரணமாத்தான் நானே இறங் கிட்டேன்’னு சொன்னாரு.

‘நேர்மையா இயக்கம் நடத்தப் போறேன்னு சொல்றீங்க... நீங்க ஆரம்பிக்கப் போற கட்சிக்கு செயலாளர், பொருளாளர்னு பதவிகள் போட்டாகணும். மனிதர்களின் ஜாதகத்தையும், அவங்களோட கடந்த காலத்துப் பக்கங்களையும் புரட்டிப் பார்த்து, சரியா எடை போட்டுட முடியுமா? எந்த அடிப்படையில் பதவிகள் தருவீங்க? உங்க கட்சியிலயும் சத்தமில்லாமல் தாதாக்கள் ஊடுருவி விடலாமே?’

‘அப்படியெல்லாம் தப்பு நடக்காம இருக்கறதுக்கு நான் ஒரு திட்டம் வெச்சிருக்கேன். அந்தத் திட்டத்தை மதுரையில் மாநாட்டுல அறிவிப்பேன். நீங்க வேணும்னா பாருங்க... அந்தத் திட்டத்தை அறிவிச்சு செயல்படுத்த ஆரம்பிச்ச பிறகு என்னை நிச்சயம் பாராட்டுவீங்க. என் கட்சிக்குக் கூட்டத்தை சேர்க் கறது மட்டும் எனக்கு இலக்கு இல்லை. கூட்டத்தை எப்படி நல்ல மனோபாவத்தோடு கொண்டு போறேன் என்பதும் லட்சியம். அதனாலதான் சொல்றேன்... கண்டவங்களையும் என் கட்சில சேர்க்க மாட்டேன். அவங்களுக்கெல்லாம் பதவி களைத் தூக்கிக் கொடுக்கவும் மாட்டேன்’

* ‘மனைவி என்பதே இன்றைய அரசியலில் "எக்ஸ்ட்ரா கான்ஸ்டிடியூஷனல் அத்தாரிட்டி" என்கிற மாதிரி ஆகிப் போச்சே... பல இடங்களில் அரசியல்வாதிகளைவிட, அவர்களுடைய மனைவியை "தலைவி"னு சொல்லிக்கிட்டு போய்ப் பார்த்து காரியம் சாதிக்கிற நடைமுறை இருக்கே. உங்க விஷயத்தில் எப்படி? அம்மாவைப் பார்த்துட்டுதான் ஐயாவைப் பார்க்கணும் என்கிற நிலைமை வந்துடுமா?"

‘பெண்களுக்கு முப்பத்து மூணு சதவிகிதம் கொடுக்கணும்னு எல்லாரும் போராடுறாங்க. நான், வாழ்க்கையில என் மனைவிக்கு ஐம்பது சதவிகித உரிமை கொடுத்திருக்கேன். எனக்கு ஒரு வயசு இருக்கும்போதே, என்னோட அம்மா இறந்துட்டாங்க. தாய்மை உணர்வுக்காக ஏங்கியே வளர்ந்தேன். அதை எனக்கு முழுமையா கிடைக்கச் செய்தது என்னோட மனைவி தான். என்னோட மகிழ்ச்சி, துக்கம், அவமானம், சாதனை இப்படி எல்லாத்தையும் என் மனைவிகிட்டதான் நான் பகிர்ந்துக்க முடியும். இரவுல படுக்கையறையில அவங்ககிட்டதான் என் மன உணர்வுகளைச் சொல்லி வடிகால் தேட முடியும்.

அப்படியிருக்க, எல்லாத்துலயும் என்னோட பங்கெடுத்துக்குற என் மனைவிக்கு, என் பொதுத் தொண்டிலும் உரிய பங்கு கொடுத்தா, அதை எப்படி தப்புனு சொல்லமுடியும். வாழ்க்கையில எல்லா வகையிலும் துணையா நிக்கற மனைவிக்கு உரிமை கொடுக்காம வேற ஒருத்தரை எப்படி கூட்டிக்கிட்டுப் போக முடியும்? இதுக்காக ஒரு வைப்பாட்டியை ஏற்பாடு பண்ணி கூட்டிக்கிட்டுப் போகமுடியுமா... இல்ல வேற பொண்ணுங்களை அழைச்சுக்கிட்டுப் போக முடியுமா..."

* ‘அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள்ல ஜார்ஜ் புஷ் முதல் ஃபிரெஞ்சு அதிபர் வரையில் அவங்களோட மனைவிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்காங்க. அதுபோல நீங்களும் உங்க மனைவிக்கு கொடுக்கப் போறீங்களா?

கொஞ்சமும் யோசிக்காத விஜயகாந்த், ‘அது மாதிரிதான் நானும் இருக்கப் போறேன்’ என்றார்.

‘உங்க கட்சி போட்டியிடும் தொகுதிகள் அனைத்திலும் படுதோல்வியை தழுவி, டெபாஸிட் பறிபோயிடுதுனு வெச்சுப்போம். அப்ப என்ன பண்ணுவீங்க... இந்த கஷ்டகால அரசியலே வேணாம்னு ஒதுங்கிடுவீங்களா?’

‘எனக்கு பதவிங்கறது ரெண்டாம் பட்சம்தான். நீங்க நெனக்கிற மாதிரி ஒருபோதும் நடக்காது. இருந்தாலும், இதெல்லாத்தையும் மீறி நடந் துடுச்சுனு வெச்சுக்குவோம்... முன் வெச்ச காலை பின் வைக்க மாட் டேன். தொடர்ந்து மக்களோடு மக்களாக இருந்து அவங்களுக்கு சேவை செஞ்சிகிட்டுத்தான் இருப் பேன். அதை ஒரு வாக்குறுதியாவே தர்றேன். நான் ஏற்கெனவே சொன்னது தான், தோல்வினு வந்துட்டா எதுலயும் நான் வெற்றியடையாம விட மாட்டேன். இது சத்தியம். இன்னொண்ணு, ஏற்கெனவே அரசியல்ல ஜெயிச்சவங்கள்லாம் ஆரம்பத்துல& ஒண்ணு, ரெண்டு, ஐந்து தொகுதிகள்ல ஜெயிச்சு அரசியல் பண்ணின வங்கதான்’’



* மிகப் பிரமாண்டமான மாநாடு நடத்தறீங்க... ரொம்ப ஜாக்கிரதையா பண்ணணுமே’?

‘நான் சாதாரணமா நெனச்சு இந்த மாநாட்டை நடத்தலை. அதுக்காக எல்லா ஏற்பாடுகளை யும் பக்காவா பண்ணியிருக்கேன். ஆம்புலன்ஸ் வேன்கள், மெடிக்கல் டீம், தீயணைப்புத் துறை வண்டிகள் எல்லாம் தயாரா இருக்கும். கடைசி நேரத்துல ஆம்புலன்ஸ் வண்டிகளோ, தீயணைப்பு வண்டிகளோ வரலைனு வெச்சுக்கங்க. நான் கவலையே பட மாட்டேன். சினிமா ஷ¨ட்டிங்குல மழைக் காட்சிக்காக தண்ணீரைக் கொண்டுவந்து கொட்டும் பாருங்க லாரிங்க... அத வரவழைச்சுடுவேன். மத்தபடி மாநாட்டு பந்தலுக்குள்ள யாரு வேணும்னாலும் நுழைய முடியாது. அந்த அளவுக்கு மாநாட்டு நுழைவு வாயிலிலேயே பாதுகாப்புக் கெடுபிடிகள் இருக்கத்தான் செய்யும். ரவுடிகளும், தாதாக்களும் மாநாட்டுக்குள் நுழைந்து எதுவும் செய்ய முடியாது. அதுமட்டுமல்ல, என்னிடம் இருக்கும் கூட்டம் கட்டுக்கோப்பானது. எல்லாம் ரொம்ப நல்லவிதமாவே நடக்கும்... மாநாடு மட்டுமல்ல’னு உள்ளர்த்தத் தோடவே சொன்னார்""

நன்றி - ஜூவி, விஜய் டிவி.

Read More...

Friday, September 09, 2005

வாழ்க கேப்டன் !

Image hosted by Photobucket.comவருகிற ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் ஒரு பெரிய புரட்சி நடக்கவிருக்கிறது. காலை 10:30 - 11 மணிக்கு எங்கள் தங்கத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் விஜய் டிவியில் பேட்டி கொடுக்கிறார். பேட்டி காண்பவர் மதன்.

காணத்தவறாதீர்கள்

வாழ்க கேப்டன்

பிகு1: தனது 25 வருட கலை உலக வாழ்கையில் இது அவர் தரும் முதல் பேட்டி
பிகு2: தொப்புளில் பம்பரம் விடுவது பற்றி கேட்கப்படுமா என்று தெரியவில்லை.

Read More...

பெட்ரோல், டீசல் விலை உயர்வு !

பெட்ரோல் விலை, லிட்டருக்கு 3 ரூபாயும், டீசல் விலை 2 ரூபாயும் உயர்ந்தது.
இந்த விலை உயர்வை சமாளிக்க இப்படி செய்யலாம்.
Image hosted by Photobucket.com
இந்த வண்டிக்கு பேர் - Cowasaki.

Read More...

Tuesday, September 06, 2005

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் !

Read More...

Wednesday, August 24, 2005

கதிர்காமருக்கு நேர்ந்த கொடூரம்!

இலங்கையின் வன்முறை வரலாறு மற்றும் ஒரு சிறந்த தலைவரை பலி கொண்டிருக்கிறது. 'லக்ஷ்மண் கதிர்காமர் மரணத்துக்கு தாங்கள் பொறுப்பில்லை' என்று விடுதலைப் புலிகள் கூறுவதை இலங்கை அரசு நம்புவதற்குத் தயாராயில்லை.

கதிர்காமரின் மரணம் பேரிழப்பே என்றபோதிலும், இத்தகைய பயங்கரங்கள் புதிதல்ல என்று கூறும் அளவுக்கு, இலங்கையில் நிச்சியமற்ற சூழல் பல்லாண்டுகளாக நிலவி வருகிறது. புலிகள் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டு, தற்காலிக அமைதி ஒப்பந்தம் செய்து கொள்வதும், அதைப் பயன்படுத்திக் கொண்டு, ராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தங்களை பலப்படுத்திக் கொள்வதும், பிறகு எதிர்பாராத நேரத்தில் இவ்வாறு தாக்கி தலைவர்களைக் கொல்வதும் வழக்கமாகவே ஆகிவிட்டது.

கதிர்காமர் விஷயத்தில் புலிகள் மிகுந்த வெறுப்பு கொள்ள நிறையவே காரணம் உண்டு. தமிழராக இருந்த போதிலும் கதிர்காமர் தம்மை ஸ்ரீலங்கா பிரஜை என்றே கருதி, தேசிய உணர்வு மிக்கவராக விளங்கினார்.
சர்வதேச அளவில், விடுதலை இயக்கமாக அறியப்பட்டு அங்கீகரிக்கவும்பட்டு, பல தரப்புகளிலிருந்த்து பொருளுதவி பெற்று வந்த்து விடுதலைப்புலிகள் அமைப்பு.
அதனை ஒரு வன்முறை இயக்கமாக இனம் காட்டி, தடை செய்யப்படவேண்டிய பயங்கரவாதி அமைப்பாக அடையாளப்படுத்தி, பல உலக நாடுகளின் உதவியும் ஆதரவும் ரத்தாவதற்கு காரணமாக இருந்தவர் கதிர்காமர்தான். இலங்கை அயலுறவுத்துறை அமைச்சர் என்கிற பொறுப்பில், இந்த பணியை அவர் மிகுந்த தீவிரத்துடன் ஆற்றினார். பயங்கரவாத அமைப்பு என்ற முத்திரை விழுந்ததும் புலிகளுக்குப் பொருளுதவி செய்வதை பல நாடுகள், அரசுகள் நிறுத்தின. தங்கள் நாட்டு மக்கள், விடுதலைப் புலிகளுக்கு உதவுவதை தடைசெய்தன.

இதன் காரணமாகவே விடுதலைப் புலிகள், கதிர்காமரை பரமவிரோதியாகக் கருதுவதற்கு இடம் உண்டு.

தவிர, கதிர்காமர் போரில் சிங்கள வெறியர் அமைப்புகளுக்கும் வெறுப்பு இருந்திருக்கலாம். புலிகளைப் போலவே அமைதியை மதியாத இவ்வமைப்புகள், கதிர்காமரைப் போன்ற ஒருவரது மரணம், அமைதிப் பேச்சுவார்த்தைகளை முடக்கிப்போடும் என்ற கருத்தில் செயல்பட்டிருக்கக் கூடும். பலர் கைதானாலும், இன்றளவும் கதிர்காமரைக் கொன்றது யார் என்பது மர்மமாகவே உள்ளது.

எவ்வாறாயினும் கதிர்காமர் கொலை மிகப் துல்லியமாக திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அவருடைய அன்றாட பழக்க வழக்கங்களை உன்னிப்பாகக் கவனித்துத் தெரிந்து வைத்துக் கொண்டு அவர் பெரிதும் நம்பிக்கை வைத்திருத பக்கத்து வீட்டுக்காரரின் வீட்டுக்குள் நுழைந்து, பல பேர் கண்களில் மண் தூவி, தூரத்திலிருந்தே சுட்டு வீழ்த்தியிருக்கிறான் கொளையாளி!. உணர்ச்சி வேகத்தில் செய்த கொலை அல்ல இது; முன் கூட்டியே திட்டமிட்டுச் செய்த படுபாதகம்.

"ஒரு மாவீரரை இழந்துள்ளது இலங்கை" என்று கூறியுள்ள சந்திர்கா குமாரதுங்கா, இனி அமைதிப் பேச்சுவார்த்தையை எவ்வாறு நெறிப்படுத்தப் போகிறார் என்பதுதான் மிகப்பெரிய சவால்.

இலங்கையின் வடகிழக்கில் மட்டுமின்றி, உலகெங்கிலும் இலங்கைத் தமிழர்கள் உள்ள நாடுகளில் எல்லாம் புலிகள் தங்கள் வலைப் பின்னலைப் பரவச் செய்துள்ளார்கள். இலங்கையில் நேரடியாகவும், பிற நாடுகளில் தமிழர் அமைப்புகள், சங்கங்களுக்கு நன்கொடை என்கிற பெயரில் மறைமுகமாகவும் தங்கள் 'ஆட்சி'யை நடத்த வரி வசூல் செய்து வருகிறார்கள். இலங்கை அரசால் இது குறித்து ஒன்றுமே செய்ய முடியவில்லை.

அமைதிப் பேச்சுவார்த்தைகள் இக்கொலயால் சாட்டையடிபட்டு ஸ்தம்பித்துப் போய்விட சந்திரிகா குமாரதுங்கா அனுமதிக்க கூடாது.

பயங்கரவாதத்தை அரசு அமைப்புகள் ஜெயிப்பது துர்லாபம். ஒரேயடியாக அவற்றை அழித்துவிடுவது சாத்தியமில்லை. அமைதியைப் பெற, நாட்டின் கெளரவத்துக்கு இழுக்கின்றி எவ்வளவு தூரம் வளைந்து கொடுக்கலாம் என்பதையே சந்திரிகா இனி சிந்தித்தாக வேண்டும். இன்னும் பல உயிர்கள பலியாவதற்கு முன் இதைச் செய்தாக வேண்டும். கெளரவம் பார்ப்பதைக் காட்டிலும், மக்களின் கண்ணீர் துடைத்து அச்சம் போக்குவதுதான் முக்கியம்.

தமிழகத் தலைவர்களோ, புலிகளுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசுவதையும், அனுதாபம் காட்டி நடந்து கொள்வதையும் அறவே நிறுத்த வேண்டும்.

தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களுள், முதல்வர் ஜெயலலிதாவைத் தவிர வேறுயாரும் கதிர்காமரின் மரணம் குறித்து அதிர்ச்சி தெரிவிக்கவில்லை; கொலையைக் கண்டனம் செய்து அறிக்கை விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நிருபர்கள் கேள்வி கேட்ட பிறகே, கருணாநிதி தாம் அதிர்ச்சியுற்றதாகக் கூறியிருக்கார்.

இனியும் தமிழகத்தில் புலிகள் அனுதாப அரசியல் நடத்தினால், இலங்கையைக் காட்டிலும் அதிகமாக நாம் எதிர்காலத்தில் பாதிக்கப்படுவோம்; காயமுறுவோம்!.

( கல்கி, 28.8.05 தலையங்கம் )

Read More...

Wednesday, August 17, 2005

சில செய்திகள்..

சீனாவில் ஷான்சி மாநிலத்தை சேர்ந்த லீ என்ற பெண்மணி தான் வளர்க்கும் பறவையை எப்போது தன்னுடன் வைத்துள்ளார். இந்த பறவை அந்த பெண்மணியின் பல்லை சுத்தம் செய்கிறது. ( செய்தி உதவி: தினத்தந்தி )

[ பல்லை மட்டும் சுத்தம் செய்தால் பறவைக்கு நல்லது ]

சிங்கபூரில் நேற்று முத்திரத்தை கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்திருக்கிறார்கள்.
( செய்தி உதவி: News-Medical.Net )

[ ஆக இனி டிரான்ஸ்ஃபார்மர் மீது ஒன்னுக்கு அடிக்கலாம் என்று போர்ட் மாட்டலாம் ]

லண்டனில் 'பேஸிக் இன்ஸ்டின்க்ட்-2' படப்பிடிப்பில் இருந்த ஷெரன் ஸ்டோன்
குண்டு வெடிப்புக்கு பின் லண்டன் செல்ல மறுத்தார். ( செய்தி உதவி: Times of India )


[survival என்பது 'பேஸிக் இன்ஸ்டின்க்ட்-1' ?]

டைரக்டர் எஸ்.ஜே. சூர்யா இயக்கி, கதாநாயகனாக நடித்த நியூ படத்தில் ஆபாசம் அதிகமாக இருப்பதாக கூறி, சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் தடை விதித்தது. அந்தப் படத்திற்கு சென்சார் போர்டு அளித்த சான்றிதழும் ரத்து செய்யப்பட்டது.

[ அ, ஆ ]

Read More...

Thursday, August 04, 2005

தமிழ் புதிர் டாப் 10

தேசிகன் பக்கத்தில்( இணையத்தில் சுட்ட) புதிர் பதிவு ஒன்று கொடுத்துவிட்டு, இதே போல் தமிழில் இருக்கா என்று ஒரு புதிர் போட்டார்.

யோசித்ததில் தமிழில் டாப் 10 புதிர். ஓகே, ரெடியா ?



யார் அதிக மதிப்பெண்கள் எடுக்கிறார்கள் பார்க்கலாம்...

Read More...

Tuesday, August 02, 2005

வெற்றி பெற டாப் 10-5 வழிகள்

1. வாழ்க்கை என்பது கடினமானது. தோட்டத்தில் எப்படி களை இருக்குமே அதேபோல் வாழ்கையிலும் தடைகள் இருக்கும். களைகள் கண்டு விலகிச் செல்லாமல் களைந்து
விடுங்கள். நிச்சியம் வெற்றி உங்களுக்கே.

2. புத்திசாலி தனமாக இருங்கள். மற்றவர்கள் பிரச்சனைகளை எப்படி அனுகுகிறார்கள் என்று பாருங்கள். அதே போல் அல்லது அதைவிட நன்றாக செயல் படுங்கள். வெற்றி உங்களுக்கே.

3. என்ன செய்ய வேண்டும் என்பதை எழுதிவைத்துக்கொள்ளுங்கள். மறதி, வெற்றிக்கு பகை.

4. பிரச்சனை எதுவந்தாலும் பின் வாங்காதீர்கள். பலர் இன்று வெற்றி பெற்றதற்கு அவர்கள் பின் வாங்காதது தான் காரணம்.

5. இவையாவும் முடியாவிட்டால் சுலபமான வழி - இது


வாழ்த்துக்கள்.

Read More...

Wednesday, July 13, 2005

ஆபாசம் டாப் 10

இன்று இந்த தலைப்பில் எழுதவில்லை என்றால் நான் தமிழ் வலைப்பதிவு வைத்துக்கொண்டிருக்கிறேன் என்று என்னை யாரும் நம்பமாட்டார்கள். கருட புராணம் படி நீங்கள் இந்த பதிவை படித்துக்கொண்டும் நான் எழுதிக்கொண்டும் இருக்கிறேன்.

1. திராவிடக் கட்சியை குறை கூறிக்கொண்டிருந்த தமிழ் வலைப்பதிவுகள், தாங்கள் அதற்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிருபிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் அதில் அவர்கள் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். திமுக/ஆதிமுக மாநாட்டு பேச்சுகளுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம் என்று எனக்கு தெரியவில்லை.

2. கடந்த வாரம் ( தற்போது லேட்டஸ்ட் கூடும் இடமான)டிரைவின் உட்லாண்ட்ஸில் ஆபாச பின்னூட்டங்களை பற்றி பேசி எல்லோரும் கலக்கியிருக்கிறார்கள், சாம்பார் இட்லியை . அதன் பின் வீட்டுக்கு வந்து நிதானமாக தங்கள் சண்டையை ஆரம்பித்திருக்கிறார்கள்.

3. ஆராய்ந்தால் முதலில் "செருப்பில்" ஆரம்பித்த இந்த ஆபாசம், பின் சானி, "பீ அள்ளுங்கடா", "சிம்புவின் -- வெட்டுதல்", "'பாப்பார' லாஜிக்", "சு, பு, "%@*&" என்று வளர்ந்து இன்று சாம்பார் இட்லியுடன் பேசப்படும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது. இவர்களை திருத்த முடியுமா ? முடியாது. இவர்களுக்கு நல்ல ஒழுக்கத்தை அவர்கள் பெற்றோர்கள் கற்பித்திருக்க வேண்டும். தவறியதால் வந்த விணை. இணையத்தில் இதை எல்லாம் தடுக்க முடியுமா என்றால் முடியாது. 360, நல்ல நம்பர் அவ்வ்ளவுதான். தமிழ்மணம், பிளாகரின் வரையரை புரியாமல் பலர் இன்று பினாத்திக்கொண்டு, சாரி டிஸ்கஸ் செய்வது அதைவிட ஆபாசம்.

4. வேடிக்கை என்னவென்றால் நாம் குமுதம், பாய்ஸ்... ஆபாசம் என்று பேசிக்கொண்டிருக்கிறோம்.

5. வெளிநாட்டுல் இருந்துக்கொண்டு தலித்தியம், பார்பனிஸம் பேசிக்கொண்டிருப்பது ஆபாசத்தின் உச்சம்.

6. சகிப்புத்தன்மை என்பது கடுகளவு கூட நம்மில் பலருக்கு கிடையாது, வலைப்பதிவு, குழுமங்கள்ளிருந்து விலகுவதும் பின் வருவதும் நாம் தினமும் பார்க்கும் மற்றொரு ஆபாசம்.

7. கருத்துக்கும் வம்புக்கும் வித்யாசம் தெரியாமல் விவாதிப்பது ஆபாசமோ ஆபாசம்.

8. வலைப்பதிவில் கருத்து தெரிவித்தால் எல்லோரும் சிந்தித்து மாறுவார்கள் என்று நினைப்பது மற்றொரு ஆபாசம்.

9. சர்ச்சைக்குரிய பதிவுக்கும் முக்கியத்துவம் தேவையான பதிவுக்கும் வித்யாசம் தெரியாமல் +/- குத்துவது இன்னொரு ஆபாசம். பின்னூட்டங்களை தமிழ்மணம் முகப்பிலிருந்து எடுக்க சொல்வது மெகா ஆபாசம்.

10. கடைசியில் இதை தடுக்க சுலபமான மூன்று வழிகள்
- இதை பற்றி மேலும் விவாதிக்காமல் இருப்பது.
- தமிழ் வலைப்பதிவை மூடிவிட்டு ஆங்கில வலைப்பதிவை ஆரம்பிப்பது.
- இவையாவும் முடியாவிட்டால், நெட்வர்க் கேபிளை புடுங்கிப்போடுவது.

Read More...

Friday, July 01, 2005

அந்நியன் - ஒரே கேள்வி

நேற்று அந்நியன் படத்தை சத்தியம் தியேட்டரில் பார்த்தேன். நல்ல கூட்டம். படம் பார்த்த பிறகு ஷங்கரின் சமுதாய அக்கரையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. எனக்கு இந்த படத்தை பார்த்தவுடன் 'பாஸ்' பற்றி ஒரு கேள்வி கேட்க தோன்றுகிறது.

இந்தியன் தாத்தா, முதல்வன் அர்ஜுன், அம்பி விக்கிரம் என்று படங்களில் நேர்மை, லஞ்சம் ஒழிப்பு, போன்றவற்றை வலியுறுத்தும் நீங்கள் ஏன் பாஸ் படப்பெட்டியை தூக்கிக்கொண்டு சென்சார் சான்றிதழ் வாங்க ஆந்திரா போனீர்கள் ? தமிழ் நாட்டு சென்சார் அதிகாரிகளிடம் பாய்ஸ் பட டிரைலரில் ஏழு கட் வாங்கிய பயமா ? அல்லது உங்களுக்கும் ஸ்பிலிட் பெர்சனாலிட்டியா ?

Read More...

Tuesday, June 28, 2005

நோ கமண்ட்ஸ்



தில்லியில் திங்கள்கிழமை தொடங்கிய 51-வது ஆண்டு தேசிய வளர்ச்சிமன்றக் கூட்டத்தில் முலாயம் சிங்.

Read More...

Friday, June 24, 2005

அரசியல் லாபம்



மக்களவை உறுப்பினரின் -
மாத சம்பளம் : 12,000
மாத செலவு : 10,000
ஆபிஸ் செலவு: 14,000

போக்குவரத்து சலுகை கிமீக்கு 8ரூபாய் - டெல்லிக்கு போய் வர = 48,000 ( அதற்கு தான் அடிக்கடி டெல்லிக்கு(6000 கிமீ) போகிறார்கள்)
மக்களவையில் கூச்சல் போடுவதற்கு தினமும் பேட்டா : 500ரூபாய்
ரயில் முதல் வகுப்பில் பயணம் செய்து போராட்டங்களில் கலந்துக்கொள்ள(இந்தியா முழுவதும் ) = இலவசம்.
விமானத்தில்(மனைவியுடன்) பயணம் செய்ய ( பிஸினஸ் கிளாஸ்) வருடத்திற்கு முதல் நாற்பது முறை இலவசம். ( மனைவி இலவசம் கிடையாது)
ஹாஸ்டல் தங்கும் செலவு இலவசம்.
வீட்டு மின்சாரம் முதல் 50,000 யூனிட் வரை இலவசம்.
வீட்டு தொலைபேசி: முதல் 1,70,000 உள்ளூர் அழைப்பு வரை இலவசம்

ஒரு மக்களவை உறுப்பினருக்கு ஒரு வருடத்திற்கு ஆகும் செலவு: 32,00,000
ஐந்து வருடத்திற்கு : 1,60,00,000
534 மக்களவை உறுப்பினருக்கு ஐந்து வருடத்திற்கு ஆகும் செலவு: 8,54,40,00,000
( கிட்டத்தட்ட 855 கோடி ரூபாய்)

வாழ்க ஜனநாயகம் !

Read More...

Thursday, June 16, 2005

தற்கொலை படை

தற்கொலை பற்றி சிந்தித்தது கிடையாது.(தமிழ் வலைப்பதிவுகளை படிக்கும் வரை :-) )

'தற்கொலை படை' என்ற வார்த்தையை ராஜிவ் காந்தி கொலை நடந்தபோது மற்றவர்களை போல் நானும் கேள்விப்பட்டேன். சிலர் தியாகம்/வீரம் என்றார்கள். சிலர் வன்முறை என்றார்கள். அதன் பிறகு இந்த மாதிரி தற்கொலை தினமும் தங்கம் விலை போல் செய்தித்தாள்களில் இடம்பெற்றது.

தெரிந்த கேள்விகள்:
தற்கொலை படையில் இருப்பவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? அவர்கள் போதை மருந்துக்கு உட்பட்டவர்களா ? அவர்களை எப்படி தயார் செய்கிறார்கள் ? இதில் யார் யாருக்கு எவ்வளவு பணம் கை மாறுகிறது ? இதை யார் முதன்முதலில் கண்டுபிடித்தார்கள் ? இது தியாகமா ? தீவிரவாதமா ? வெடிக்க வைக்கும் முன் இவர்கள் என்ன நினைத்துக்கொண்டார்கள் ? இவர்களுக்கு மத நம்பிக்கை உடையவர்களா ?

தெரிந்த விடைகள்:
மக்க்ள் கூடும் இடத்தில் வெடிக்க வைக்கிறார்கள்( ஹோட்டல், மீட்டிங், பேருந்து, ரயில்,பள்ளிகள்.. ). எந்த ஒர் இயக்கத்தின் தலைவரும் இந்த வீர மரணத்தில் பங்கு பற்றது கிடையாது. தமிழ் இணையத்தில் இவர்களுக்கு ரசிகர் மன்றம் இருப்பது போல் ஒரு பிரமை. இவர்கள் பெரும்பாலும் பெல்ட் உபயோகிக்கிறார்கள்.

சில நூதன தற்கொலை யோசனைகள்:

ஃசாப்ட்வேர் என்ஜினியர்களுக்கு..


சிவகாசி ஆசாமிகளுக்கு..


கிரிக்கெட்டில் விருப்பம் உள்ளவர்களுக்கு..


நல்ல நேரம் பார்பவர்களுக்கு..


ராமதாஸ் ஆதரவாளர்களுக்கு..


குசும்பு அதிகம் உள்ளவர்களுக்கு..


Bunny Suicides (c) Andy Riley

Read More...

Tuesday, June 14, 2005

Bunty Aur Babli


இணையத்தில் சந்திரமுகியை பலர் பார்த்திரிப்பீர்கள். அதே போல் இப்போது லேட்டஸ்ட் ஹிந்தி படம் "Bunty Aur Babli". இதில் ராணி முக்கர்ஜி, அபிஷேக் பச்சன் நடித்துள்ளார்கள். மிகுந்த எதிர்ப்பார்ப்புகள் உள்ள நிலையில் இந்த படம் இணையத்தில் ஓசியில் கிடைப்பது துரதிஷ்டவசமானது.

மேலும் இந்த படத்தை பற்றி தெரிந்துக்கொள்ள : rediff


ஓசியில் படம் பார்க்க விரும்புவர்கள்: இங்கே கிளிக் செய்யவும்.
( If you have dial-up downloading may take some time )

Read More...

Wednesday, June 08, 2005

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா ? என்ற கேள்வி பல வருடங்களாக கேட்கப்பட்டு வருகிறது. முன்பு நாசா ஸ்பிரிட், சூப்பர் சானிட்டி என்ற 2 ரோபோ விண்கலங்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியது பலருக்கு நினைவிருக்கலாம். இந்த விண்கலம் முதலில் செவ்வாய் கிரகம் பற்றிய கறுப்பு- வெள்ளை புகைபடங்களை பூமிக்கு அனுப்பியது. செவ்வாய் கிரகத்தில் மனிதன் உயிர் வாழ முடியுமா?. அங்கு தண்ணீர் ஆதாரம் இருக்கிறதா என்பது குறித்து ஆராய்ச்சிகள் நடத்தப்பட இருக்கிறது.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் ராட்சத ஆறுகள் ஓடியிருக்க கூடும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அப்படிப்பட்ட ஒரு ஆற்றுப்படுகை பள்ளத்தில் தான் ஸ்பிரிட் விண்கலம் தரையிறக்கப்பட்டது. அதன் படத்தை இங்கு காணலாம்.

இதற்கு முன்னர் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட 3 விண்கலங்கள் நடத்திய ஆராய்ச்சியில் அந்த கிரகத்தில் தண்ணீர் உருவாக தேவையான ஹெமிடைட் என்ற தனிமம் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.

தற்போது விண்கலத்திலிருந்து வந்துள்ள படத்தை பார்த்தால் இந்த கூற்று மிக உண்மை என்பது புலப்படும். ஆக நாளுக்கு நாள் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் முன் னேற்றம் நிகழ்ந்து வருவது மனிதகுலத்தை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

லேட்டஸ்ட் படத்தை இங்கு பார்க்கலாம்.

Read More...

Friday, May 27, 2005

மச்சம்


[சிம்பு, நயந்தாரா - படம் வல்லவன்]
இந்த படத்தை பார்த்தவுடன் நமக்கு தோன்றும் வார்த்தை - மச்சம்.

உங்களுக்கு மச்சம் எங்குள்ளது என்று ஒரு முறை யோசித்து பிறகு கிழே உள்ளதை படிக்கவும்.

ஆண்களுக்கு அதிர்ஷ்டம் தராத மச்சங்கள்.

இடது பாதம். இடது தொடை. இடது இடுப்பு. இடது மார்பு. இடது தோள். இடது மூக்கின் அடிபாகம். இடது கன்னம். வலது கை நடுவிரல். வலது ஆட்காட்டி விரல் ஆகிய இடங்களில் மச்சம் இருப்பது அவ்வளவாக நல்லதல்ல. கடவுள் பத்தி ஒன்றே அவர்களை காப்பாற்றும்.

ஆண்களுக்கு அதிர்ஷ்ட மச்சங்கள்.

உள்ளங்கால், வலது முழங்கால், வலது தொடை. தொப்புளின் கீழ், வலது அக்குள், முதுகு, தோள், கழுத்தின் மேல்பாகம். நெஞ்சு, நாக்கு, மூக்கின் வலது புறம், கண், காது, வலது புருவம். நெற்றி, தலையின் வலது புறம். ஆட்காட்டி விரல், சுண்டு விரல் ஆகிய இடங்களில் மச்சம் இருந்தால் அவர்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். எல்லா வளமும் கிட்டும்.

( மச்சம் தகவல் உதவி: குமுதம், படம் உதவி: indiaglitz.com )

Read More...

Tuesday, May 17, 2005

அம்மாவிற்கு ஒரே கேள்வி



அம்மா,
இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.
உங்களிடம் ஒரே ஒரு கேள்வி தான் கேட்க விரும்புகிறேன்.
நீங்கள் மக்களிடம் கொடுக்கும் இனிப்பு ஜாங்கிரியா, ஜிலேபியா ?
அன்புடன்,
இட்லி

பிகு: அல்வா என்று யாரும் பின்னுட்டம் கொடுக்கவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Read More...

Monday, May 16, 2005

இரண்டு செய்திகள் - ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை

சன் டிவியில் இன்றைய தலைப்பு செய்தி:

சொத்து குவிப்பு வழக்கு: ஜெயலலிதா இன்றும் ஆஜராகவில்லை. வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றதில் நடந்து வருகிறது. இது வரை நடந்த விசாரணைக்கு முதல்வர் ஜெயலலிதா ஆஜராகவில்லை. இன்று நடந்த விசாரணைக்கும் அவர் வரவில்லை.

ஜெயா டிவியில் இன்றைய தலைப்பு செய்தி:

காஞ்சிபுரம், கும்மிடிபூண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி
கும்மிடிபூண்டி சட்டசபை இடைத்தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளர் விஜயகுமார் சுமார் 27 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
காஞ்சிபுரம் தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் மைதிலி திருநாவுக்கரசு சுமார் 14 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Read More...

Thursday, May 12, 2005

பழைய செல்போன் வைத்திருப்பவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு

பழைய செல்போன் வைத்திருப்பவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு !

உங்களிடம் பழைய செல்போன் இருக்கிறதா ? அதை கேமாராவுடன் கூடிய செல்போனாக மாற்ற வேண்டுமா ? கவலையை விடுங்கள். வழிமுறை மிக சுலபம். செலவும் ரொம்ப ஆகாது.
இந்த வினோதமான தொழில்நுட்பம் என்னை பெரிதும் வியப்பிலாழ்த்தியது. நான் என்னுடைய செல்போனை மாற்றிவிட்டேன் அப்ப நீங்க ?


வழிமுறைக்கு இந்த link'கை கிளிக் செய்யவும்.

பி.கு - 1: இது நோக்கியா செல்போன் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் தான்.
பி.கு - 1.5: ஏதாவது சந்தேகம் இருந்தால் பின்னுட்டத்தில் தெரிவிக்கவும்.

Read More...

கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும்

இன்று ஆண்களுக்கு ஒரு வாக்கெடுப்பு.

நீங்கள் விரும்பி சாப்பிடும் உணவு
மனைவி செய்ததா ?
அம்மா செய்ததா ?

[ஒட்டு பெட்டி இருக்குது பார் மேலே]

பிகு: ஓட்டு போடும் போது மனைவி பக்கத்தில் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.
[update]

Read More...

Monday, May 09, 2005

கல்யாணம் ஆன பெண்களுக்கு மட்டும்

மதர்ஸ் டேயை முன்னிட்டு ஒரு சின்ன வாக்கெடுப்பு
(கல்யாணம் ஆன பெண்களுக்கு மட்டும்)

நீங்கள் விரும்பி சாப்பிடும் உணவு
அம்மா செய்ததா ?
மாமியார் செய்ததா ?

[ஓட்டு பெட்டி இருக்குது பார் மேலே]

கவலைப்படாதீர்கள், நாளை கல்யாணம் ஆன ஆண்களுக்கு ஒரு வாக்கெடுப்பு

[update]

Read More...

Friday, May 06, 2005

அட மறுபடியும் கூகிள் !

Make everything as simple as possible, but not simpler
Albert Einstein
Google Web Accelerator(GWA) என்ற கூகிள் ஒரு புதிய சேவையை அறிமுக படுத்தியுள்ளது. ஏதோ இலவசமாக கிடைக்கிறது என்று உடனே இறக்கிவிடாதீர்கள் பொறுங்கள். இதனால் என்ன பயண் என்பதை முதலில் பார்க்கலாம்.

நீங்கள் தேடிய பக்கத்தின் URLலை கிளிக் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
உங்களுடைய விண்ணப்பம்(request) நீங்கள் தேர்ந்தெடுத்த ISPயை சென்றடைகிறது, பிறகு உங்கள் ISP நீங்கள் கேட்ட வலைத்தளத்தை உங்களுக்கு அனுப்புகிறது. இதனை கீழ் காணும் படத்தில் காணலாம்.


இப்போது GWAயை நீங்கள் நிறுவி(Install)பின் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம். நீங்கள் விரும்பிய பக்கத்தை கிளிக் செய்கிறீர்கள். உங்கள் விண்ணப்பம் உங்கள் ISPயை சென்றடைகிறது. பிறகு அங்கிருந்து Googleக்கு செல்கிறது. Goolge தன்னுடைய சேமிப்புகிடங்கிலிருந்து அதை உங்களுக்கு தருகிறது, நீங்கள் கேட்ட பக்கம் இல்லை என்றால் அந்த பக்கத்தை அந்த வலைத்தளத்திலிருந்து எடுத்து அனுப்புகிறது(Dotted lines). இதை கீழ் காணும் படம் விளக்குகிறது.



இப்போழுது நான் என்னுடைய Browserலிருந்து http://idlyvadai.blogspot.com என்று விண்ணப்பித்து, என்னுடைய Web counter logல் பார்த்தால் ISPயின் பெயர் log செய்யப்பட்டிருக்கும்.

GWA நிறுவிய பின் http://idlyvadai.blogspot.com விண்ணப்பித்தால், Web counter logல் Google Inc, United States என்று log செய்யப்படும்.

ஆக சிம்பிளாக சொல்ல வேண்டும் என்றால் GWA ஒரு இலவச anonymizer(proxy)(முகமூடி?) ஆக வேலை செய்கிறது. இது privacy intrusionனா என்றால் ஆமாம் என்று தான் சொல்ல தோன்றுகிறது.

இந்த வசதியால் நீங்கள் சில நிமிடங்கள் சேமிக்கலாம்.(உங்கள் cacheலிருந்து வருவதற்கும் இணையதளத்திலிருந்து வருவதற்கும் உள்ள வித்தியாசம் போல் தான் இதுவும்).

வெங்கட் இதை தன்னுடைய கணினியில் நிறுவி இரண்டு நிமிடம் சேமித்துவிட்டதாக சொல்லியிருக்கார். நீங்கள் இதை நிறுவும் முன் இரண்டு நிமிடம் யோசிக்கவும்.

Read More...

Wednesday, May 04, 2005

மேலும் கூகிள் !

உங்கள் அலுவலகத்தில் உங்களுக்கு இண்டர்நெட் வசதி இல்லையா ? ஈ-மெயில் வசதி மட்டும் தான் இருக்கிறதா ? கூகிள் இல்லாமல் ரொம்ப கஷ்டமாக இருக்கிறதா ? கவலை படாமல் மேற்கொண்டு படியுங்கள்.

ஈ-மெயிலில் தேடும் வசதி இருக்கிறது. google@capeclear.com என்ற முகவரிக்கு நீங்கள் தேட வேண்டிய சொல் அல்லது சொற்தொடரை Subjectல் உள்ளிட்டு ஈ-மெயில் அனுப்புங்கள். சில நிமிடங்களில் ஈ-மெயிலில் அந்த சொல்லுக்கான கூகிளின் பக்கங்கள் உங்களை வந்தடையும். பிறகு உங்களுக்கு வேண்டிய பக்கத்தின் URLலை(Subjectல்) கொடுத்து web@pagegetter.com என்ற முகவரிக்கு ஈ-மெயில் அனுப்புங்கள் அந்த பக்கமும் உங்களுக்கு ஈ-மெயிலில் வந்தடையும்.

Read More...

Thursday, April 28, 2005

வியக்க வைக்கும் கூகிள் - 3

கூகிளில் சில நேரங்களில் சில வார்த்தைகளை கொடுத்து நீங்கள் தேடியிருப்பீர்கள். ஆனால், அந்த வார்த்தை மீண்டும் உங்கள் ஞாபகத்துக்கு வராமல் போகலாம். இதற்காக கூகிள் ஒரு புதிய வசதியை அறிமிகம் செய்திருக்கிறது. அது Search History

உங்களிடம் ஜிமெயில் கணக்கு இருக்கிறது என்றால் கூகிள் முதல் பக்கத்தில் வலதுப்பக்கம் மேல் மூலையில் இருக்கும் 'Sign-in' என்ற லிங்க்கை கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.



நீங்கள் தேடுவதற்காக கொடுத்த வார்த்தைகள் அனைத்தும் இதில் தேதி வாரியாக பதிவு செய்து வைத்துக்கொள்ளும். உதாரணத்திற்கு இன்று "Who is Tamil Nadu's Super Star" என்று தேடுகிறீர்கள். ஒரு மாதம் கழித்து நீங்கள் என்ன தேடினீர்கள் என்று பாக்க இதில் வசதி இருக்கிறது. நீங்கள் தேடியவற்றில் தேடவும் வசதியிருக்கிறது.



பயன் படுத்திப்பாருங்கள் உங்களுக்கே புரியும்.

வியக்க வைக்கும் கூகிள் - 1
வியக்க வைக்கும் கூகிள் - 2

Read More...

Monday, April 25, 2005

எழுத்துரு பற்றிய கருத்துரு

காசி அவர்கள் "தமிழ்க்கணிமை முன்னேற்றத்துக்கு அரசின் ஆணை" என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதியுள்ளார். அதற்கு நிறைய பேர் பின்னூட்டம் கொடுத்திருக்கிறார்கள். நல்லது.

சமீபத்தில் தயாநிதி மாறன் அவர்கள் வெளியிட்ட (C-DAC)குறுந்தகட்டை சிறுவர்களும் பெண்களும் போட்டி போட்டுக் கொண்டு வாங்கினார்கள். அந்த கூட்டத்தில் எனக்கும் ஒரு குறுந்'தட்டு' கிடைத்தது. அதில் வந்துள்ள மென்பொருட்களை பற்றி பத்ரி அலசியுள்ளார். பயன் படக்கூடியது என்று எனக்கு தோன்றியது - பொன்விழி (optical character recognition) மட்டும் தான். அதில் உள்ள spell checker நீ ஓசியிலதான வாங்கின என்று சிரிக்கிறது.

மற்றபடி நிறைய TAM, TAB ஃபாண்ட்ஸ் கிடைக்கிறது. வீட்டில் உள்ள ஷோகேஸில் வைக்கலாம். குறுந்தகட்டில் உள்ள மென்பொருட்கள் எதுவுமே Unicode சார்ந்தது கிடையாது.

அரசியல்வாதிகள் இது பற்றியெல்லாம் என்றுதான் கவனிப்பார்களோ தெரியவில்லை. கருத்துரு பற்றிய கவலை எழுத்துருவுக்கும் இருந்தால் புண்ணியம். UNICODEக்கு அடுத்த தேர்தல் பிரச்சாரத்திலாவது குரல் கொடுக்க யாராவது ஒரு கட்சி தொடங்கினால் கட்சி மாநாட்டில் இட்லிவடை இலவசமாக வழங்கப்படும்.

இன்று 'லதா Font' பிரபலம் அடைந்ததற்கு காரணம் அது 'மைக்கிரோசாப்ட் விண்டோஸுடன்' வந்தது தான். கசப்பாக இருந்தாலும் அதுதான் உண்மை. இது வரை எவ்வளவோ தமிழ் மாநாடுகள் நடந்திருக்கின்றன. செவ்வாய் க்ரகத்தில் அடுத்த மாநாடு நடக்கும் சாத்தியம் அதிகம். இதுவரை அதில் எதுவும் சாதிக்கவில்லை, எதையும் அவர்களால் standardise செய்ய முடியவில்லை. வருடாவருடம் வரும் ஒரு சடங்காக ஆகிவிட்டது. அதற்கு பதில் வீட்டில் வடாகம் பிழியலாம்.

நாளை ஒரு நல்ல மென்பொருள் தமிழுக்கு வர வேண்டும் என்றால் அது மைக்கிரோஃசாப்ட் கொண்டுவந்தால் தான் முடியும். ஓபன் ஆபிஸ் எல்லாம் தமிழர்களுக்கு ஒத்து வராது என்று எனக்கு தோன்றுகிறது.

இன்னும் ஒர் 5 ஆண்டுகளில் மைக்கிரோசாப்ட் நிறுவனம் தமிழுக்கு ஏதாவது ஒரு சில நல்ல மென்பொருட்களை கொண்டுவந்தால் சந்தோஷப்படலாம். என்று suratha.comக்கு வேலை இல்லையோ அன்று தான் நமக்கு விடிவு காலம். மற்ற மென்பொருட்கள் .. அடுத்த போகிவரை காத்திருக்கவும்.

Read More...

Wednesday, April 20, 2005

தமிழ் எழுத்துக்களின் சுடுகாடு (அல்லது ) வலைப்பதிவு.

குதிரைக்கு சராசரி ஆயுட் காலம் 20-25 வருடம்; நாய்க்கு 8-10 வருடம்; பன்னிக்கு 5-12 வருடம்; குப்பைக்கு கார்பரேஷன் லாரி வரும் வரை; வலைப்பதிவுக்கு தமிழ்மணத்தில் வந்து போகும் நேரம் ! அதன் பிறகு அது எழுத்துக்களின் சுடுகாடாகிறது. இந்த வரிசையில் தற்போது எவ்வளவோ பதிவுகள் எழுதப்பட்டு அவரவர் வழக்கபடி எரித்தோ புதைத்தோ ஆகிவிட்டன. சில பதிவுகள் தீடீர் என்று உயிர் பெற்று கொஞ்சம் டான்ஸ் ஆடும் அவ்வளவுதான்.

தமிழ் மணத்தில் இருக்கும் வலைப்பதிவின் பட்டியலை பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. இன்று தமிழில் மொத்தம் 476 வலைப்பதிவுகள் இருக்கிறது. எழுத ஆட்கள் இருக்கிறார்கள், படிக்க ? கிடையாது. பின்னூட்டங்கள் ஒரு மினி Yahoo Groups ஆகிவிட்டன. சில சமயம் அதைவிட மோசமாகவும்.

ஒரு வலைப்பதிவின் ஆயுட் காலத்தைக் கூட்ட இட்லிவடையின் டாப் 10

1. யாரும் எழுதாத போது எழுதலாம். தமிழ்மணத்தில் உங்கள் பதிவு ரொம்ப நேரம் காண்பிக்கப்படும். காசி தமிழ்மணத்தில் ராணி முத்து காலண்டர் ஸ்டைலில் எமகண்டம், ராகுகாலம் போட்டால் நல்லது.

2. கவனத்தை ஈர்க்கும் தலைப்பாக கொடுங்கள். உதாரணம்: "அய்யா, அம்மா யாராவது வாங்களேன்". என்று பிச்சைகாரன் ஸ்டைலில் டிரை பண்ணிப்பாருங்கள்.

3. மேதாவிதனமக எதாவது எழுதுங்கள். உதாரணம் : "பாலியலில் சமுகவியல்", "மகாவிஷ்ணு தான் டார்வின்" , "பஞ்சு மிட்டாயில் பார்பனியம்" என்பது போல். இதை டிஸ்கஸ் பண்ண படித்த கூட்டம் இருக்கிறது.

4. எழுதிவிட்டு உங்கள் நண்பர்களை பார்க்க சொல்லுங்கள், பிறகு ஓட்டு போட சொல்லுங்கள்.(கவனிக்கவும் - பார்க்க சொல்லுங்கள், படிக்க சொல்லாதீர்கள், படித்தால் உங்களுக்கு "-" வாக்குகள் நிச்சயம்), தப்பித்தவறி உங்கள் பதிவு தமிழ்மணம் டாப் 25யில் இடம்பெற்றது என்றால் அந்த வலைப்பதிவுக்கு ஆயுட் காலம் 7 நாட்கள். பிறகு உங்கள் சொந்த செலவில் பால்.

5. ஏதாவது வில்லங்கமாக எழுதிவிட்டு காத்திருங்கள். செருப்பு, சானி, மலம் என்று நாகரிகமான பின்னூட்டம் கொடுக்க சிலர் இருக்கிறார்கள். அவர்கள் பெரிய மனது பண்ணி பின்னூட்டம் எதாவது கொடுத்தால் உங்கள் பதிவுக்கு அன்று பம்பர் பரிசுதான். சண்டை போட ஒரு கூட்டம், வேடிக்கை பார்க்க ஒரு பெரிய கூட்டம் என்று உங்கள் பதிவில் அன்று ஒரு திருவிழாதான்.

6. ஆராய்ச்சி கட்டுரை போல் ஏதாவது எழுதுங்கள். "ரஜினியின் அடுத்த படம்","ஃபயர்ஃபாக்ஸைத் தமிழ்ப்படுத்தியது யார்? என்பது போல். இதற்கு கொஞ்சம் தொழில்நுட்பம் தெரிந்திருக்க வேண்டும். இதற்கு சண்டை போட வேறு ஒரு கூட்டம் இருக்கிறது.

7. யாருக்காவது கோபம் வரும் படியாக கேள்வி கேளுங்கள். "சுந்திராராமசாமிக்கு ஏன் இவ்வளவு கோபம்", "தயிர் சாதத்திற்கு ஏன் ஊறுகாய்?" என்பது போல். யாருக்காவது கோபம் வரும். வந்தால் நல்லது, உங்கள் பதிவு கொஞ்சம் நேரம் உயிருடன் இருக்கும் வாய்ப்பு கிட்டும்.

8. மற்றவர்களுக்கு பயன் உள்ளதாக எழுதவும். "ஆவக்காய் ஊறுகாய் போடுவது எப்படி" என்பது போல. தெரியவில்லை என்றால் கவிதை எழுதாதீர்கள் அது நகம் கடிப்பது போல் கெட்ட பழக்கம்.

9. நீங்கள் இருக்கும் இடத்தில் வலைப்பதிவு கூட்டம் கூட்டுங்கள், மிளகாய் பஜ்ஜிக்கு தமிழை தொட்டுக்கொள்ளுங்கள். பஜ்ஜியுடன் போட்டோ எடுத்துக்கொள்ளுங்கள். உழைப்பாளர் சிலை பக்கத்தில் என்றால் விஷேசம். பதிவில் போடுங்கள்.

10. இவையாவும் கஷ்டமாக இருந்தால் நல்லவற்றை நல்ல தமிழில் எழுதுங்கள். அவற்றை படிக்க ஒரு சிறு கூட்டம் இருக்கிறது. அவர்கள் படிப்பார்கள். வாழ்த்துக்கள்.

Read More...

Wednesday, April 06, 2005

தந்தூரி சிக்கன் செய்யும் முறை

Image hosted by Photobucket.com

Read More...

Friday, April 01, 2005

மிஸ் இந்தியா 2005

மிஸ் இந்தியா படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

Read More...

Thursday, March 31, 2005

கங்குலியும் நூடில்ஸும்

மாகி நூடில்ஸ் பாக்கேட் பின்னாடி செய்முறையை இப்படி எழுதலாம்.

1. ஒரு கப் தண்ணீரை கொதிக்கவைக்கவும்.
2. கங்குலி பேட்டிங்கிற்கு சென்றவுடன் நூடில்ஸை கொதிக்கும் தண்ணீரில் போடவும்.
3. கங்குலி மைதானத்தில் இருக்கும் வரை நன்றாக கிளரவும்
4. கங்குலி அவுட் ஆனவுடன் சூடான நூடுல்ஸ் ரெடி!

வாக்கு பெட்டி இருக்குது பார் மேலே !

Read More...

Wednesday, March 23, 2005

நரேந்திர மோடி - விசா

நரேந்திர மோடிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது

"சார், உங்களுக்கு VISA மறுக்கப்பட்டதாமே ?
"ஆமாம், அதுக்கென்ன இப்போ ?, நீங்கள் யார் சார் ?
"சார் நாங்கள் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியிலிருந்து கூப்பிடுகிறோம், உங்களுக்கு MASTERCARD கொடுக்கலாம் என்று இருக்கிறோம்."

Read More...

Tuesday, March 22, 2005

உலக தண்ணீர் தினம்

Read More...

Wednesday, March 16, 2005

தாடைக்கு தடை


மேலே உள்ள படம் கனாகண்டேன் என்ற படத்தில். ஸ்ரீகாந்தின் தாடையை கோபிகா கடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கிறது. இந்த பேனர் அண்ணாசாலையில் சர்ச் பார்க் கான்வென்ட் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்தது. ரோட்டில் வருகிறவர்கள் போகிறவர்கள், பள்ளிக்கூட மாணவ-மாணவிகளும், இந்த பேனரை திரும்பி திரும்பி பார்த்தபடி சென்றார்கள். ( நானும் தான் )

சர்ச் பார்க் பள்ளி நிர்வாகம் போலீஸில் புகார் செய்த்தால் இந்த பேனர் நேற்று உடனே அகற்றப்பட்டது.(கலி முத்திப்போச்சு என்ன செய்வது) பள்ளி நிர்வாகம் புகார் செய்ததின் பேரிலும், சாலை விபத்துக்களை தவிர்க்கும் நோக்கத்துடனும் அந்த சினிமா பேனர் அகற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தார்கள்.

போனஸாக இட்லி வடை வாசகர்களுக்கு கீழே இரண்டு படங்கள்(CG Rating)



(CG - Child Guidance Required)

Read More...

Monday, March 14, 2005

அ-மு-ச-ச ரிசல்ட்ஸ் !

Image hosted by Photobucket.com
1. Image hosted by Photobucket.com

2. Image hosted by Photobucket.com

3. Image hosted by Photobucket.com

4. Image hosted by Photobucket.com

ஓட்டு போட்ட அனைவருக்கும் நன்றி!

Read More...