1. ஜெயேந்திரரை கைது செய்தது வரலாற்று சிறப்பு மிக்க ஒரு நிகழ்வாகும். எந்த பகுத்தறிவு முதல் அமைச்சரும் இதை செய்திருக்க முடியுமா? என்று விவாதிக்க தமிழ் குழுக்களுக்கு செல்லவும். இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரு நல்ல முன்னுதாரணம் கிடைத்திருக்கிறது.
2. தீபாவளி அன்று காலை டிவியில் அருள் ஆசி, வீட்டு புஜை அறைகளில் கடவுள் பக்கத்தில் சிரித்துக் கொண்டு போட்டோ, தீபாவளி மலர்களில் ஆர்ட் பேப்பரில் வண்ணப்படம், ஆபீஸ் மேசை கண்ணாடி அடியில்.... என்று இடத்தை பிடித்த ஒருவர் கொலை குற்றம் சாட்டப்பட்டு கைதாகிறார். இது ஒரு மெகா நம்பிக்கை துரோகம். இரவில் கைது செய்தது ஏன்? என்று நடுநிலையாளர்கள், அறிவு ஜிவிகள், என கூறிக் கொள்பவர்கள், எதிர்ப்பது காமெடியாக உள்ளது.
3. ஆஸ்பத்திரி, பள்ளி என்று சமுக சேவை செய்பவர்கள் எல்லோரும் நல்லவர்கள் என்று மக்கள் ஏமார கூடாது. சாய் பாபா, சந்திர சுவாமி போன்றவர்கள் இதில் அடங்கும். சாய் பாபா ஆசிரமத்தில் நான்கு பேர் கொலை செய்ததற்கு என்னும் விடை தெரியவில்லை. கல்கி பகவான் விளம்பரம் "குங்குமம்" பத்திரிக்கையில் வருவது - பெஸ்ட் கண்ணா பெஸ்ட். எங்கே பணம் இருக்கிறதோ கூடவே கிரைம் இருக்கும் என்பது எழுதப்படாத விதி.
4. RSS, VPH போன்றவர்கள் திமிழ் நாட்டை தவிர்த்து மற்ற மாநிலங்களில் உண்ணா விரதம், போராட்டம் என்று கலக்கிக்கொண்டு இருக்கிறார்கள். தமிழ் நாட்டு மக்கள் அமைதியை விரும்புபவர்கள் என்பது புலனாகும்.
5. விகடன், கல்கி ஆகிய பத்திரிக்கைகள் என்ன மாதிரி தலையங்கம் எழுதுகிறார்கள் என்று பார்க்க வேண்டும். எல்லோரும் கொஞ்சம் "play safe" mode'ல் இருக்கிறார்கள். கலைஞர் ஒரு படி மேலே சென்று சங்கர மடம் அழியக்கூடாது, அதை அரசே எடுத்து நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார். ஆடு நனைகிறதே.." என்ற பழமொழிதான் நினைவிற்கு வருகிறது.
6. பலரும் இது ஜெயின் அரசியல் உத்தி, ஜெக்கும்-ஜெக்கும் ஏதோ அடிப்படை பிரச்சினை என்று காரணம் சொல்லுகிறார்கள். எல்லோருக்கும் இது ஒரு அதிர்ச்சியே என்பது தான் உண்மை. கைதுக்கு சில நாட்கள் முன்பே கலைஞர் அவர்கள் "பல போலி சாமியார்கள்.." என்று அறிக்கை விட்டது அவருக்கு போலிஸில் சில நண்பர்கள் இருப்பதையே காட்டுகிறது. இதனால் ஜெ அவரை அவசரப்பட்டு கைது செய்தார் என்பது நம்பும் படியாக இல்லை.
7. காவியுடை அணிந்த ஒருவர் "..ஆண்டவனிடம் அவருக்கு தண்டனை அளிக்கும்படி முறையிட்டுக் கொண்டேன். அதன்படி அவரும் படுத்துவிட்டார்!" என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். காவியுடை அணிந்த ஒருவர் இப்படி நினைப்பது மகா கேவலம். இப்படி நினைக்கும் ஒருவர் கொலையும் செய்ய மாட்டார் என்பது என்ன நிச்சயம். கடவுளிடம் இப்படி வழிப்பட்டு அவர் வணங்கும் கடவுளையும் கேவல படுத்திவிட்டார். இதுதான் "அன்பே சிவமா?"
8. நாட்டில் உயர் பதவியில் இருப்பவர்கள், நீதிபதிகள், குடியரசு தலைவர்கள், பிரதமர்கள், முதல்வர்கள் போன்றவர்கள் இனி மடம், நோன்பு கஞ்சி என்று போகாமல் மக்கள் நலனை கவனிப்பது நல்லது.
9. ஜெயேந்திர் கைதுக்க்கு அடுத்த நாள், ஏ.வி.எம் சரவணன், டாக்டர் பத்ரி நாத், மற்றும் சிலர் ஆளுநரை சந்திக்கிறார்கள். இவர்களுக்கு போலிஸ் மேல் நம்பிக்கை இல்லையா ? இவர்களுக்கும் மடத்திற்கும் என்ன சம்பந்தம் ? ஏன் இவர்கள் ஜெயேந்திரருக்கு வக்காலத்து வாங்குகிறார்கள் ?
10. ஜெயிலில் ஜெயந்திரருக்கு என்ன கொடுக்கிறார்கள் என்று எனக்கு தெரியாது ஆனால் கடைசிகாலத்தில் ஆதிசங்கரர் அருளிய "பஜகோவிந்தம்", புத்தகம் கொடுக்க சிபாரிசு செய்வது நல்லது. இவர் இன்னும் நிறைய basics கற்றுக்கொள்ள வேண்டும்.
கடைசியாக ஆன்மீகம், ஒழுக்கம், கடவுள் நம்பிக்கை, தேஜஸ், மதம் இவற்றை சரியாக புரிந்துக்கொள்ளுங்கள். சாமியார்களுடன் குழப்பிக்கொள்ளாதீர்கள். மீறி குழப்பம் அடைந்தவர்களுக்கு இருக்கவே இருக்கு கீழ்பாக்கம்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Thursday, November 18, 2004
டாப் 10 - ஜெ ஜெ சில குறிப்புக்கள்
Posted by IdlyVadai at 11/18/2004 11:11:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
3 Comments:
இப்பத்தான் ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாலே நீங்க எழுதியிருக்கிற 'சாய்பாபா' சீக்கிரெட் ஸ்வாமி' எங்க ஊர் டி.வி.யிலே போட்டாங்க!
என்னத்தைச் சொல்றது போங்க!
மெத்தப்படிச்சவுங்கெல்லாம் இந்த மாதிரி சாமியாருங்களை
எப்படிதான் நம்புறாங்களோ?
//மீறி குழப்பம் அடைந்தவர்களுக்கு இருக்கவே இருக்கு கீழ்பாக்கம்.
நச்'சுன்னு சொல்றதும்பாங்களே.. இது தான் அது.. :-)
I totally agree with you except on points 2, 7 and 9
2. ... இது ஒரு மெகா நம்பிக்கை துரோகம். இரவில் கைது செய்தது ஏன்? என்று நடுநிலையாளர்கள், அறிவு ஜிவிகள், என கூறிக் கொள்பவர்கள், எதிர்ப்பது காமெடியாக உள்ளது.
--- நம்பிக்கைத் துரோகம் செய்திருந்தாலும் ஒரு வயதானவரை இரவில் அலைக்கழித்து, அதிகாலையில் ஒரு காவல் நிலையத்தில் 2 மணி நேரம் காக்க வைத்து பின்னர் நீதிபதியிடம் இட்டுச் சென்றது தவறு, தேவையற்றது என்பது என் ஆணித்தனமான கருத்து
7. காவியுடை அணிந்த ஒருவர் "..ஆண்டவனிடம் அவருக்கு தண்டனை அளிக்கும்படி முறையிட்டுக் கொண்டேன். அதன்படி அவரும் படுத்துவிட்டார்!" என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். காவியுடை அணிந்த ஒருவர் இப்படி நினைப்பது மகா கேவலம். இப்படி நினைக்கும் ஒருவர் கொலையும் செய்ய மாட்டார் என்பது என்ன நிச்சயம். கடவுளிடம் இப்படி வழிப்பட்டு அவர் வணங்கும் கடவுளையும் கேவல படுத்திவிட்டார். இதுதான் "அன்பே சிவமா?"
--- This may be an ABERRATION or an EXCEPTION. Please DO NOT generalize!!!
9. ஜெயேந்திர் கைதுக்க்கு அடுத்த நாள், ஏ.வி.எம் சரவணன், டாக்டர் பத்ரி நாத், மற்றும் சிலர் ஆளுநரை சந்திக்கிறார்கள். இவர்களுக்கு போலிஸ் மேல் நம்பிக்கை இல்லையா ? இவர்களுக்கும் மடத்திற்கும் என்ன சம்பந்தம் ? ஏன் இவர்கள் ஜெயேந்திரருக்கு வக்காலத்து வாங்குகிறார்கள் ?
---- போலீஸ் மேல் நம்பிக்கையெல்லாம் இருக்க வேண்டிய அளவு எல்லோருக்கும் உள்ளது. அவர்கள் ஜெயேந்திரர் மீது பக்தியும் அபிமானமும் உள்ளவர்கள். ஓரு வக்காலத்தும் வாங்கவில்லை! They requested the Governor to ensure that Jayendrar is not ill-treated in the jail. There is absolutely nothing wrong in doing this!!!!
Also, please note that I am not a great supporter of Jayendrar!!!
என்றென்றும் அன்புடன்
பாலா
Post a Comment