பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, May 31, 2004

World No-Tobacco Day - May 31st

Read More...

Friday, May 28, 2004

க்ரிப்ட்அரித்மெடிக் - Crypt Arithmetic

திரு இரா மகேசன் அனுப்பியுள்ள புதிர்:

க்ரிப்ட்அரித்மெடிக் - சொல்லும்போது முறுக்கு சாப்பிட்டாற்போல் உள்ளதா? இவை ஒரு வகை புதிர்கள். இதில் ஒரு சொற்றொடர் கணித வடிவில் (கூட்டலாகவோ, கழித்தலாகவோ , ..) இருக்கும். உதா: SEND + MORE = MONEY. இதில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு
எண்ணைக்(0-9) கொடுக்க வேண்டும். ஒரு எழுத்துக்கு கொடுத்த எண்ணை வேறு எழுத்துக்கு கொடுக்கக்கூடாது. ஒரு எழுத்துக்கு ஒரு எண்ணைக் கொடுத்தால், அந்த எழுத்துக்கு எல்லா இடங்களிலும் அதே எண்ணைத்தான் கொடுக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, மேலே உள்ள புதிரில் 'E'க்கு 8 என்ற எண்ணை 'SEND' இல் கொடுத்தால் 'MORE', 'MONEY' ஆகியவற்றிலும்
'E'க்கு 8ஐயே கொடுக்க வேண்டும். இப்படி கொடுக்கப்பட்ட எண்களால் உருவாகும்
எண்கள் (for example if S=8,E=9,N=0,D=6 then SEND=8906), கணக்கிலும் சரியாகப் பொருந்தவேண்டும், அதாவது SENDஐயும் MOREஐயும் கூட்டினால் MONEY வரவேண்டும்.
இது போன்ற புதிர்களுக்கு விடை காணுவது கடினமல்ல. கொஞ்சம் பொறுமை தேவை. இவற்றில் என்னைக் கவர்ந்த அம்சம், இவை வெறும் வார்த்தைகளாய் இல்லாமல், சரியான அர்த்தமும் தருவதுதான். SEND MORE MONEY என்பது வெளியூரில் தங்கி இருக்கும் பிள்ளைகள், வீட்டிலிருந்து பணம் அனுப்பச் சொல்லி அடிக்கும் தந்தி வாசகங்கள். இதே போன்று இன்னொரு புதிர் CROSS + ROADS = DANGER. இதிலும் அர்த்தம் சரியாக வருகிறது. இது போன்ற புதிர்களை யாராவது தமிழில் உருவாக்கினால் எனக்குத் தெரிவிக்கவும்.

- மகேசன் இரா.
விடை நாளை

Read More...

Tuesday, May 25, 2004

(நிரந்தர ?) முதல்வர் ஆக கலைஞருக்கு டாப் 10+3 அறிவுரைகள்

தமிழக முதல்வர் ஜெ'க்கு அறிவுரைகள் வழங்கியதை தொடர்ந்து, கலைஞருக்கும் வழங்குமாறு பலர் கேட்டுக் கொண்டதால் இந்த பதிவு. முதலில் கலைஞருக்கு எனது வாழ்த்துக்கள். நாற்பது இடங்களில் வேற்றி பெற்றதை தொடர்ந்து 'இனியவை நாற்பது'க்கு உறை எழுத ஆரம்பிக்கலாம். 2006 சட்டசபை தேர்தலை முன்னிட்டு சில அட்வைஸ்.

1. கடந்த தேர்தல்களில் திமுக 2 லட்சத்துக்கு மேல் ஓட்டு வித்தியாசம், ஆனால் இந்த தேர்தலில் ஒன்றே கால் முதல் ஒன்றறை லட்சம் ஓட்டுக்கள் தான் அதிகம் வாங்கியுள்ளது. கலைஞர் ஐயா இதை கொஞ்சம் கவனியுங்கள். மெகா கூட்டணி இல்லையென்றால் கொஞ்சம் ரிஸ்க்தான்

2. டாக்டர் ஐயாவையும், உங்கள் 'பிரசார பீரங்கியையும்' கவனித்துக் கொண்டே இருங்கள். சோனியா இவர்களிடமே கூட்டணி வைத்துள்ளார் என்றால், மீண்டும் ஜெ ஒரு டீ பார்ட்டி கொடுத்தால் அங்கே சேரமாட்டார் என்பது என்ன நிச்சயம். பெரியண்ணன் அழிக்க பார்த்தார்; அன்பு சகோதரி அரவணைத்துக் கொண்டார் என்று டாக்டர் ஐயாவும் பெல்டி அடிக்க கூடும். மீண்டும் பிரசார பீரங்கி, துரோகியாகவும், துருப்பிடித்த வாளாகவும் மாறலாம்.

3. மக்கள் உங்களை MLAவாக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். உங்களை மக்கள் தேர்ந்தெடுத்தது சட்டசபைக்கு செல்லத்தான், சும்மா Attendence கொடுப்பதற்கு அல்ல. சட்டசபைக்கு அடிக்கடி போய்வாருங்கள். அல்லது இதுவே ஒரு தப்பான முன்னுதாரணம் ஆகிவிடும்.

4. தேசிய செயல் திட்டத்தில் நான் கையெழுத்தே போடவில்லை; நிரூபிக்க முடியுமா ? என்று நல்லாத்தான் சாவால் வீட்டிங்க, ஆனா இல.கணேசன் கையும், களவுமாக உங்க கையெழுத்திட்ட லெட்டரை காண்பித்து உண்மையைப் போட்டு உடைத்தார். இனிமேல் இதுபோன்று எதிலும் கையெழுத்து போடாதீங்க. கையெழுத்து போட்டாலும் தமிழ்ல கையெழுத்து போடுங்க.

5. தயாநிதி மாறனுக்கு மந்திரி பதவி கேட்டார் கருணாநிதி என்று முதல்வர் ஜெ குற்றம் சாட்டினார். 'ஆமாம் கூறியது உண்மை என்று பா.ஜ.க தலைவர்கள் ஜால்ரா அடித்தார்கள். இன்று காங்கிரஸ் அரசில் தயாநிதி மாறனுக்கு கேபினட் மந்திரி பதவிகிடைத்துவிட்டது.(நீங்கள் பா.ஜ.க விடம் தயாநிதிக்கு மந்திரி பதவி கேட்டிருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்) இப்பவாது நீங்கள் போட்ட கேஸை வாப்பஸ் வாங்கிவிடுங்கள். அல்லது நீங்கள் ஆங்கிலத்தில் கையெழுத்திட்ட கடிதத்தை சமயம் பார்த்து பா.ஜ.க வெளியிட்டு உங்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும்.

6. எம்.ஜி.ஆர், ஜெ'வை நடிகர்கள் என்று கூறிகிறீர்கள். அரசியலில் எல்லேருமே நடிகர்கள்தான் என்பது நிதர்சனம். ராகுலின் கன்னிப் பேச்சை கேட்டவுடன் கண்ணீர் வந்துவிட்டது என்று கூறுவதும் நடிப்பே என்பது எங்களுக்கு தெரியும். கொஞ்சம் பாசாங்கில்லாமல் பேசினால் நாங்கள் சந்தோஷப்படுவோம்

7. உங்கள் தமிழ்ப் பற்றை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம். அதுவும் நீங்கள் அடிக்கடி "இருப்பது ஓர் உயிர்; அது போவது ஒருமுறை; நான் சாவுக்கு அஞ்ச மாட்டேன்" என்று வீர வசனத்தை கேட்டுக்கேட்டு எல்லோருக்கும் புல்லரிக்கும். ஆனால் அது 35 வருடங்களுக்கு முன்னால் ராஜ்பாட் நாடகத்துக்கு எழுதியது. வேறு எதாவது டிஜிட்டல் வசனத்துக்கு மாறுங்கள். தமிழ் என்று சொன்னவுடன் நினைவுக்கு வருகிறது தமிழை செம்மொழி ஆக்கவில்லை அதனால் தான் தே.ஜ கூட்டணியை விட்டு வெளியே வந்தோம் என்றீர்கள். தற்போது காங்கிரஸ் வடிவமைத்துள்ள "Common Minumum Program"ல் இந்த செம்மொழி நிபந்தனை இடம் பெற்று விட்டதா என்று பார்த்து விடுங்கள்.ஹிந்தியில் எழுதியிருந்தால் தயாநிதி மாறனை பார்க்க சொல்லுங்கள்.

8. அடிக்கடி யோசிக்காமல் பேசிவிடுகிறீர்கள். சமீபத்திய உதாரணங்கள்.
* இந்திய குடியுரிமை பெற்ற அன்னிய நாட்டவர் பிரதமர், முதல்வர் போன்ற பதவிகளுக்கு தடை செய்து அரசியல் சட்டத்தை திருத்தம் செய்ய வேண்டும் என்று தே.ஜ கூட்டணி திட்டத்தில் கையெழித்திட்டீர்கள்.சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் சோனியா 'இந்திய குடிமகள்' என்று கூறப்பட்டதை ஏற்றீர்கள். ஆனால் ஜெ மீதான ஊழல் தீர்ப்பு குறித்து கேட்ட போது 'நீதிபாதி'யாகி விட்டது என்று நீதிமன்றங்களை எள்ளி நகையாடினீர்கள்.

* 40 தொகுதிகளில் வெற்றி பெற்று தார்மிக பொறுப்பேற்று ஜெ ஆட்சியை விட்டு விலக வேண்டும் என்று கூட்டணி செயல் திட்டத்தில் தீர்மானம் போட்டீர்கள். கேரளாவில் காங்கிரஸுக்கும் அதே நிலமைதான். அதற்கு என்ன திர்மானம் ஏற்றப்பட்டது ? நீங்கள் என்றுமே நியாயத்துக்கு கட்டுப்பட்டவர் என்பது எங்களுக்கு தெரியும். இனிமேல் கொஞ்சம் யோசித்துவிட்டு பேசுங்கள். போதும்.

9. போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட வெங்கடேச பண்ணையாரின் மனைவிக்கு சீட் கொடுத்தீர்கள். பாராட்டுகிறேன். அதே போல் தா.கிருட்டிணன் படுகொலை செய்யப்பட்ட குடும்பத்தையும் கொஞ்சம் கண்டுக்கோங்க. அவர்களும் எமர்ஜன்சி சமயத்தில் நிறைய கஷ்டப்படவர்கள்தான்.

10. அப்பப்போ புள்ளிவிவரம் தரீங்க நல்லதுதான். கொஞ்சம் பார்த்து கொடுங்க. இந்தியாவின் வளர்ச்சி 8.4 சதவீதம் இல்லை 5.5 சதவீதம் தான் என்று பன்னாட்டு நிதி நிறுவனத்தின் புள்ளி விவரப் பட்டியலை குறிப்பிட்டும் நீங்கள் 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்பது போல் உள்ளது. ஐந்தாண்டு கால தே.ஜ ஆட்சியில் இந்தியாவில் வளர்ச்சி இல்லையென்றால் அதில் உங்கள் மனசாட்சிக்கும்(மாறனுக்கு) பங்கு உண்டு என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா? முன்பு உலக வர்த்தக மாநாட்டில் இந்தியாவின் மாண்பையும் பெருமையையும் தலைநிமிரச் செய்தவர் மாறன் என்று தம்பட்டம் அடித்தது சும்மாவா ?

11. இன்னும் கொஞ்சம் நாளைக்கு உங்கள் பகுத்தறிவு கொள்கைகளை விட்டுவிடுங்கள். அது உங்களுக்கு நல்லது. அல்லது உங்கள் பிரசாரத்தை உங்கள் குடும்பத்தினரிடமிருந்து ஆரம்பியுங்கள். முக அழகிரி தன் கையில் மந்திரித்த கறுப்புக் கயிறை பார்த்தீர்களா ? உங்கள் பையன் வீட்டில் கண் திருஷ்டி பொம்மை எதற்கு ? விடை தெரியவில்லை என்றால் உங்கள் கனவில் வரும் ஈ.வெ.ரா விடம் கேளுங்கள்.
குல்லா போட்டு கஞ்சி குடிக்கிறேங்க அதே போல் மாரியம்மன் கோயிலில் கூழ் ஊத்துவதையும் குடியுங்க. கூழுக்கும் கஞ்சிக்கும் ஏன் இந்த பாகுபாடு ? தேர்தல் சமயத்தில் ஓர் இடத்தில் சில அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதை அளித்ததை இரு கை கூப்பி மரியாதையுடன் ஏற்று கொண்டீர்கள். இது தேர்தல் பிற்பாடும் தொடர வேண்டும்.

12. அன்பழகன் என்பவர் உங்கள் காலை சுத்தி சுத்தி உங்களுக்கு விஸ்வாசமாக இருக்கிறார். அவரை கொஞ்சம் கண்டுக்கோங்க. பாவம்.

13. ரஜினி வாய்ஸ் வெறும் நாய்ஸ் என்று தேர்தலுக்கு பிறகு தெரிந்துவிட்டது. அவரைப்பற்றி கேள்விகளுக்கு இனிமேலாவது பயப்படாமல் ஏதாவது கூறுங்கள். "No Comments" என்று ஜகா வாங்காதீர்கள்.

இன்னும் 2 வருடம் இருக்கு தேர்தலுக்குள் இதெல்லாம் மக்கள் மறந்து போய்விடுவார்கள். இதில் முடிந்தவற்றை திருத்திக்கொள்ள முயற்சி செய்யுங்கள். வாழ்த்துக்கள்.

கார்ட்டூன் உதவி: Shekhar Gurera, நன்றி: http://www.shekhargurera.com/

Read More...

Monday, May 24, 2004

குரங்டூன்

Read More...

Thursday, May 20, 2004

நிரந்தர முதல்வர் ஆக ஜெ'க்கு டாப் 10+4 அறிவுரைகள்.

1. இந்தியாவை யார் ஆண்டால் உங்களுக்கு என்ன ?
'100 கோடி பேரில் ஒருவருக்கு கூட பிரதமர் பதவிக்கு தகுதி இல்லை' என்று தானே சோனியாவுக்கு வாக்களித்துள்ளனர். கூட்டணி தர்மத்தை நீங்கள் இன்னமும் நன்றாக கற்க வேண்டும்.

2. பத்திரிக்கை என்பது மிகப் பெரிய ஆயுதம். அவர்களை அவ்வப்போது கூப்பிட்டு பிஸ்கேட், காப்பி குடுங்கள், ஏதாவது பேசுங்கள். அவர்களும் வியாபாரம் தானே செய்கிறார்கள். அவர்களை ஏன் பகைத்துக்கொள்கிறிர்கள். எதையாவது எழுதிவிட்டு போகட்டுமே! வரம்பு மீறினால், "நான் அடித்தால் நீ தாங்க மாட்டே" என்று கூறுங்கள், சும்மா இருந்துவிடுவார்கள். அதை விட்டு விட்டு கோர்ட் கேஸ் என்று போகாதீர்கள்.

3. 'தீவிரவாத ஆதரவுப் பிரசாரம் தப்பில்லை' என்று பொடா மறு ஆய்வுக் குழு தெரிவித்திருக்கிறது. அதனால், தமிழ் நாட்டில் யார் வேண்டுமானாலும் விடுதலைப் புலி ஆதரவு பிரசாரம் செய்யட்டும். காங்கிரஸ் கட்சிக் காரர்களே சும்மா இருக்கும் போது உங்களுக்கு எதற்கு வீனா பொல்லாப்பு. பொடா கைது நடவடிக்கைகளை விட்டு விடுங்கள். பொடா கேஸை எல்லாம் வாப்பஸ் வாங்கி விடுங்கள்.

4. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வருடத்துக்கு ஒரு முறை வேலை நிறுத்தம் செய்வார்கள் அதை நீங்கள் தடுக்கலாமா ? அரசாங்க ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கவுன்சிலிங் மூலம் இடமாற்றம் என்ற செய்கையை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் லட்சக்கணக்கில் கையூட்டு கொடுத்து லஞ்சத்தை ஊக்குவித்து அவர்கள் விரும்பிய இடத்துக்கு மாற்றம் பெற தயாராக இருக்கும்போது, நீங்கள் இதைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும் ? அவர்கள் அடிக்கடி கேண்டீன் சென்று டீ,காபி குடித்தால்தான் சுறுசுறுப்பாக இருப்பார்கள். ஏதோ ஆபிசுக்கு வருகிறார்களே என்று சந்தோஷப்படிங்கள்.உங்களுக்கு ஏன் பொதுமக்கள் மீது அக்கறை ?

5. ரவுடிகள் விஷயத்தில் ஏன் நீங்கள் இவ்வளவு கடுமையைக் காட்டுகிறீர்கள். அவர்களும் தங்கள் தொழிலை செய்து விட்டுப் போகட்டுமே... எதிர்காலத்தில் நீங்கள் கூட இது மாதிரி வேட்பாளர்களை தேர்வு செய்யலாம். (வெங்கடேச பண்ணையாரின் மனைவி ராதிகா செல்வி வெற்றி பெற்றிருக்கிறார்)

6. மழை நீர் சேகரிப்புக்கு நீங்கள் இவ்வளவு முனைப்பு காட்டியிருக்க வேண்டியதில்லை. தண்ணீர் பிரச்னையை தயாநிதி மாறனிடமும், டி.ஆர்.பாலுவிடம் விட்டு விடுங்கள். அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். நீங்கள் தமிழை செம்மொழியாக்க வேண்டும் போன்ற மிகமுக்கிய பிரச்சனையை கையில் எடுங்கள்

7. இலவச மின்சாரத்தை ஏன் ரத்து செய்தீர்கள்? முடிந்த மட்டும் அவர்களுக்கு இலவசமாக மின்சாரத்தை விவசாயத்துக்கும், ஏன் வீட்டுக்கும் கூட கொடுங்கள். மேலும் அவர்களுக்கு தேவையான விதை, உரம், மோட்டார் பம்ப் மற்றும் கால்நடைகள், டிராக்டர் முதலியவைகளை இலவசமாக கொடுக்க வேண்டும்.

8. இந்துக்கள் அனைவரும் திருடர்கள் என்ற படத்தை கருணாநிதி கொடுக்க, இந்துக்களும் அதை சந்தோஷத்துடன் ஏற்றுக் கொண்டனர். கட்டாயமதமாற்றத் தடைச் சட்டம் பற்றி உங்களுக்கேன் வீண் கவலை.
அதை மக்கள் ஏற்கவில்லை, வாபஸ் பெற்றீர்கள். அதே போல் கோயில் பராமரிப்பு, அன்னதானம் முதலியவற்றையும் வாபஸ் பெற்று விடுங்கள்.

9. காவிரி நீர் சம்பந்தமான ஒப்பந்தம் புதுப்பிக்காமல், காங்கிரஸ் அரசுக்கு நன்மை செய்வதற்காக கர்நாடகம் எவ்வளவு அணைகளை வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளட்டும் என்று, பதிவு செய்யப்பட்ட வழக்கை வாபஸ் வாங்கி, தமிழ் நாட்டுக்கு கருணாநிதி நன்மை செய்யவில்லையா? அந்த ராஜதந்திரம் உங்களிடம் இல்லையே ஏன்? இனியாவது அவர்களிடம் கெஞ்சி தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் வாங்கிக் கொடுங்கள். தமிழனுக்கு தன்மான உணர்ச்சி எதற்கு?

10. லாட்டரி சீட்டு ஒழிப்பு மிகவும் மக்கள் விரோத செய்கை. லாட்டரி சீட்டால் எவ்வளவு பேர் கோடீஸ்வரர் ஆயினர் தெரியுமா? சாமானிய மக்கள் சம்பாதித்த பணத்தை அவர்களே இழக்க தயாராக இருக்கும்போது, அதை நீங்கள் ஏன் தடுத்தீர்கள். அதை மீண்டும் கொண்டு வாருங்கள். அடித்தட்டு மக்கள் நாசமாய் போனால் தங்களுக்கு என்ன?

11. "எச்' முத்திரையை ரத்து செய்தீர்கள். நல்லது. அரசு மானியத்தில் அனைவருக்கும் வீட்டுக்கு வேண்டிய மளிகை சாமான்கள் மற்றும் அனைத்து பொருட்களையும் கொடுங்கள். இடைத்தரகர்களும் மற்றவர்களும் பிழைப்பதை நீங்கள் ஏன் தடுக்க வேண்டும் அரசு ரெவின்யூ குறைந்தால் குறைந்துவிட்டுப் போகட்டுமே!

12. பச்சோந்திகள், மரம் வெட்டிகள் என்ற பெயர் எடுத்தாலும் அவர்களுக்கும் ஓட்டு வங்கி உண்டு. அதுபோல விடுதலைப் புலிகள் ஆதரவு ம.தி.மு.க., தனித்தனி வழியில் செல்லும் காங்கிரஸ், தொழிலாளர்களை குழப்பும் கம்யூனிஸ்ட்டுகள் ஆகியவர்களுக்கும் ஓட்டு வங்கி உண்டு. அவர்களையும் ஆதரிக்கும் மக்கள் உண்டு. எனவே, உங்களுக்கு கொள்கை தேவையில்லை. அடுத்த முறை இவர்களை சேர்த்தால் வெல்வது நீங்கள் தான். சிம்பிள் கூட்டணி அரித்மெடிக் தெரிந்துகொள்ளுங்கள்.

13. "டாஸ்மாக்' மூலம் மது விற்பனையை அரசு எடுத்தது மிகவும் தவறல்லவா! இதன் மூலம் கொள்ளையடித்த மதுக்கடை ஏலதாரர்களும், போலி மது விற்பனையாளர்களுக்கும் இடிப்பு ஏற்பட்டு விட்டதே. அதனால் தான் பொதுமக்கள் கவலைப்படுகின்றனர். இதுபோல தான் மணல் விற்பனையையும் கவலைப்படாமல் மீண்டும் தனியாருக்கு விட்டு விடுங்கள். சில கட்சி ஆட்கள் பிழைப்பு நடத்த வேண்டாமா ?

14. மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸுடன், இலவச சினிமா டிக்கேட்டும் குடுங்கள், உங்களுக்கு
கூடுதல் செல்வாக்கு கிடைக்கும்.

முடிந்த வரை சிலவற்றை செய்திருக்கிறீர்கள். ஏன் இதற்கு மேலும் ஒரு பெரிய 'U' Turn அடியுங்கள். நிச்சயம் நீங்கள் தான் தமிழகத்தின் நிரந்தர முதல்வர்.

கார்ட்டூன் உதவி: Shekhar Gurera, நன்றி: http://www.shekhargurera.com/

Read More...

Monday, May 17, 2004

நகைச்சுவை ஒர் எளிய அறிமுகம் - 7

அடுத்ததாக நாம் 'Human Metaphor' என்ற வகையை பார்க்கலாம். மிருகங்கள் மீது ஏதாவது ஒரு குணத்தை ஏற்றி அதன் மூலம் புன்னகை வரவழைப்பதில் 'டிஸ்னி' வல்லவர்.
மற்றொரு உதாரணம் 'Charles schulez' உடைய 'Snoopy' என்ற நாய்.ஒரு ஜோக்: ஒருத்தன் குதிரை மீது ஏகத்துக்கு சுமைகளை சேர்த்துக் கொண்டு போகிறான்.
நடுவழியில் குதிரை பொத்தென்று உட்கார்ந்து விடுகிறது. பக்கத்தில் ஒரு நாயும் இதை பார்க்கிறது.
குதிரை: இனிமேல் நான் ஒரு அடி எடுத்து வைக்க முடியாது.
மனிதன்: அட! குதிரை பேசி நான் கேட்டதே இல்லை
நாய்: நானும் தான்.

மனிதனுக்குள் இருக்கும் குழந்தை உணர்வு கூட நகைச்சுவைக்கு ஒர் ஆதாரமாக அமையும். உதாரணம்
இதை பாருங்கள்.

"பாப்பா ! பாப்பா உம் பேரு என்னம்மா ? "
"மை நேம் இஸ் பி.ஆர்.லக்ஷ்மி"
"அச்சுமியா அங்க ஒக்காச்சிண்டு என்ன சாப்பிடறே?"
"லஞ்ச் சாப்பிடறேன், மாமா!"
"மம்மம் சாப்பிடறயா ! என்ன் மம்மம் ?"
"பருப்பு சாதம்"
"பப்பு மம்மா? அப்பறம் என்ன சாப்பிடுவே ?"
"ரசம் சாதம்"
"அசம் மம்மா அப்புறம்"
"தயிர் சாதம்"
"தச்சி மம்மா ?"
"எஸ் அங்கிள். டாடியை பார்க்க வந்திங்களா "
"கன்னுக்குட்டி! கரெக்டா சொல்லிட்டியே. அப்பா 'ஓ' போயிருக்காளா ?"
"எட்டு மணிக்கு போனா ரேஷன்லே சக்கரை வாங்க"
"அக்கை வாங்கவா அக்கை பிடிக்குமா நோக்கு"
"ஹுஹும், பிடிக்காது கிராக்ஜாக் பிஸ்கெட்தான் பிடிக்கும்."
"பிக்கெட் பிடிக்குமா ?வேறென்ன பிடிக்கும் ?"
"காபி"
"பாப்பியா அப்போ நீ கிண்டிலே இங்கா குச்ச மாட்டியா "
"கிண்டியிலும் குடிக்க மாட்டேன், சைதாப் பேட்டையிலும் குடிக்க மாட்டேன்"
"எவ்வளவு சமத்துடி என் பட்டுக்குட்டி! இதான் உன் மியாவ் பொம்மையா? "
"பூனை பொம்மை இது. அங்கிள் பாய் பினையாக்கும் மீசை இருக்கு பாருங்கோ"
"ஜுஜு பொம்மை உங்கிட்டே இருக்கா"
"நாய்க்குட்டியே இருக்கு. 'பாம்'னு பேரு. கூப்பிடட்டுமா ? பாம்..."
"வாணாம், வாணாம். மாமாவை கச்சுடும் ஆமாம் பாப்பாவோட அம்மா எங்கே? "
"மதுரை போயிருக்கா"
"எதிலே கூகூலேயா?"
"இல்லை அங்கிள், வைகை எக்ஸ்பிரசில்"
"எதுக்கு போயிருக்கா உமாச்சி பார்க்கவா ?"
"மதுரை தாத்தாவுக்கு அபரேஷன். ஏதே ஹெர்னியாவாம்"
"ஒம்பு சரியில்லையா இரண்யாவா? ஆமா, அம்மா இல்லையே, உனக்கு யார் 'ஈ' தேச்சி விடுவா?
யார் 'போப்' தேச்சிவிடுவா? யார் 'ஜோ' குப்பாட்டி விடுவா!"
"நானே செஞ்சிப்பேன். எனக்கு ஃபோர் இயர்ஸ் இப்போ!"
"நேஜமாவா ? ராத்திரி யார் பக்கத்திலே தாச்சிப்பே?"
"நான் என் பெட்டிலே தனியா தூங்குவேன்?"
"பயம்மா இருக்காது ? பூச்சாண்டி சத்தம் கேட்டா என்ன பண்ணுவே?"
எனக்கு என்ன பயம் ? நான் என்ன பேபியா? அதோ அப்பா வந்துட்டா. டாடி டாடி இந்த மாமா பாரேன்
பாப்பா மாதிரியே பேசறா!"
(திருமதி திருப்பதி க்ரோர்பதி - ஜே.எஸ்.ராகவன்)
(1) (2) (3) (4) (5) (6)

Read More...

Friday, May 14, 2004

தேர்தல் 2004 படம் (பாடம் ?)

கதை
இந்தியா முழுவதும் உள்ள பல லொக்கேஷனில் கடந்த இரண்டு மாத காலம் எடுக்கப்பட்ட படம் கடைசியாக நேற்று இனிதே முடிவடைந்தது. ஹீரோவாக வாஜ்பாய்; ஹீரோயினாக (இத்தாலிய இறக்குமதி) சோனியாவும் நடித்துள்ளார்கள். கதை ரொம்ப சிம்பிள் - டில்லிக்கு யார் போக வேண்டும் என்று ஹீரோவும், ஹீரோயினும் போட்டி போடுகிறார்கள். கடைசியாக ஹீரோயினே வெற்றி பெறுகிறார்.

வசனம்
படத்தில் ஹீரோவுக்காக ஜெயலலிதாவும், நாயுடுவும்; ஹீரோயினுக்காக கலைஞரும், ராமதாஸும் வசனம் எழுதியுள்ளார்கள். ஹீரோவுக்காக எழுதிய வசனம் கீறல் விழுந்த ரிக்கார்ட் போல் திரும்பதிரும்ப ஒரே வாசகத்தை (வெளிநாட்டவர்) சொன்னதால் பல இடங்களில் மக்கள் முகம் சுளிப்பதை பார்க்க முடிகிறது.

சுவையான காட்சிகள்
1. படத்தில் ஒரு சீனில் ஹீரோ (பாக்கிஸ்தானுக்கு) நேசக்கரம் நீட்டுகிறார் (கிராபிக்ஸ் மூலம் அழகாக காமித்திருக்கிறார்கள்) நீட்டியவுடன் மறு முனையில் அவருக்கு அல்வா குடுக்கப்படுகிறது. அல்வாவை சாப்பிட்ட ஹீரோ மீண்டும் நேசக்கரம் நீட்டுகிறார்.

2. ஹீரோயின் வீட்டு குடும்பச் சண்டை படத்துக்கு பிளஸ் பாயிண்ட்.

Behind the Scenes
ஷுட்டிங் போது லைட் அடித்தால் "ஆகா ஒளிர்கிறது" என்று ஹீரோ அடிக்கடி சொல்கிறார். இது யாருக்கும் ஏன் இன்று புரியவில்லை.

காமெடி
படத்தில் காமெடி நடிகராக ஜக்குபாய் பாத்திரம் ஏற்று பிரபல தமிழ் சூப்பர் ஸ்டார் நடித்துள்ளார். இவர் தனது பெயரிலும் (ஜக்குபாய்) ஹீரோ பெயரிலும் (வாஜ்பாய்) 'பாய்' என்று முடிவதால், ஹீரோவுக்கு ஆதரவாக நடித்துள்ளார். இவருக்கு வசனம் எழுதியது யார் என்பது ஒரு புதிராகவே இருக்கிறது. இவர் படத்தில் வந்தாலே பலத்த சிரிப்பொலி எழுகிறது. இதனால் இவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று எண்ண தோன்றுகிறது.

கடைசி செய்தி
படம் பார்க்க வந்தவர்கள் தங்கள் பெயர் பட்டியலில் இடம் பெறாததால் பட டிக்கெட் கிடைக்காமல் ஏமாந்தார்கள். டிக்கெட் கிடைத்தவர்கள் படம் பார்த்தவுடன் ஏமாந்தார்கள். இது போன்ற படம் திரும்பவும் 5 வருடத்திற்கு பிறகு மிண்டும் எடுக்கப்படும்.

ஹீரோயினுக்கு இட்லிவடை சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Read More...

Thursday, May 13, 2004

மைலாப்பூர் கிருத்திகா - புதிர் - விடை

சரியான விடையளித்த முருகன் கண்ணனுக்கு(MK) என் வாழ்த்துக்கள். ஒத்து ஊதிய மற்றவர்களுக்கும் நன்றி.

சரியான விடை: கிருத்திக்கா ஒரு சின்ன பெண். அவளுக்கு 6ஆம் பட்டன் தான் எட்டும்.

Read More...

Wednesday, May 12, 2004

மைலாப்பூர் கிருத்திகா - புதிர்

மைலாப்பூர் இரண்டாவது குறுக்கு சந்தில் 12 மாடி பிளாட் கட்டியிருக்கிறார்கள்.
பஸ்டாண்டிலிருந்து பார்த்தால் தெரியுமே அத்தாங்க!. ஒவ்வோரு மாடியிலும் 5 வீடு.
மொத்தம் அறுபது வீடுகள். விஷயத்துக்கு வருவோம். கிருத்திகா 12ஆம் மாடியில் குடியிருக்கிறாள்.
கிருத்திகா எப்போதும் லிஃப்டில் 6ஆம் மாடி வரை சென்று, பின்பு 12ஆம் மாடி வரை நடந்து செல்கிறார்
ஏன் ?
விடை நாளை

Read More...

வயசு என்ன ? - விடை

வயசு என்ன ? என்ற புதிருக்கு விடை இதோ -
நன்றி மகேசன்.


*

வணக்கம் இட்லி,

இதற்கான விடை கொஞ்சம் complicate ஆனதால் வாசகர்களுக்கு இன்னும் கொஞ்சம் time கொடுக்கலாம்
என்று நான் எண்ணுகிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

விடையும் விளக்கமும் கீழே கொடுத்துள்ளேன்.

வயது புதிருக்கான

விடை :

மூன்று வயதையும் பெருக்கினால் 72 வரக்கூடிய combinations மொத்தம் 12. அவை கீழே.
அடைப்புக்குறிக்குள் இருப்பவை அவற்றின் கூட்டுத்தொகைகள்.

72,1,1 (74)
18,2,2 (22)
8,3,3 (14)
36,2,1 (39)
12,3,2 (17)
6,4,3 (13)
24,3,1 (28)
6,6,2 (14)
18,4,1(23)
9,4,2 (15)
12,6,1 (19)
9,8,1 (18)


ப்ரோபசர் எதிர் கடை நம்பரை பார்த்த பிறகும் தகவல் போதாது என்று கூறுவதால் , மேலுள்ள
combinationsஇல் இரண்டு combinationகளில் கூட்டுத்தொகையாக வரும் 14 தான்
எதிர்க்கடை நம்பர். இதிலிருந்து, 6,6,2(14) அல்லது 8,3,3(14) இரண்டில் ஒன்றுதான்
விடை என்று தெரிகிறது.

மூன்றாவது க்ளுவில் கடைக்குட்டி என்று ஒருமையில் குறிப்பிடப்பட்டுள்ளதால், கடைக்குட்டி
இரட்டைகுழந்தை இல்லை என்று முடிவாகிறது. So பிள்ளைகளின் வயது முறையே 6,6,2.
-
-- மகேசன் இரா

*
காசி மட்டும் தான் விடை அனுப்பியிருந்தார்.அவர் நேர்மையை பாராட்டி
அவருக்கு பரிசு. வாழ்த்துக்கள் காசி.

*

அன்புள்ள இட்லிவடை,

பிள்ளகளின் வயதுக்கு எனக்குத் தோன்றிய விடை:

72-ஐக் காரணிப்படுத்தினால் 1x2x2x2x3x3

இதிலிருந்து சாத்தியமான விடைகள் (அவற்றின் கூட்டுத்தொகை):
1,2,36 (39)
1,3,24 (28)
1,4,18 (23)
1,6,12 (19)
1,8,9 (18)
2,2,18 (22)
2,3,12 (17)
2,4,9 (15)
2,6,6 (14)
3,3,8 (14)
3,4,6 (13)

எதிர்க் கடை எண் 14ஐத் தவிர எதுவாக இருந்தாலும் இரண்டாவது க்ளூவிலேயே கணக்கு முடிந்துவிடும். எனவே அது போதவில்லை என்றால் 14 தான் அது.
இவற்றில் மூணாவது பையன் 'கடைக்குட்டி' என்றால் (3,3,8) அடிபட்டுப் போகும். ஏனென்றால் இது சரி என்றால் இருவர் கடைக்குட்டியாக இருக்க வேண்டும்.

ஆக விடை 2, 6, 6 என்பதுதான்.

அன்புடன்,
-காசி

பி.கு. முக்கால் வாசி சொந்தமாகக் கண்டுவிட்டென் ஆனாலும் உதைத்தது.
அப்புறம்தான் இந்த மாதிரிக் கணக்கு எங்கிருந்தாவது சுட்டதாகத்தான் இருக்கும் என்று கூகிளில் தேடினேன்.
கிடைத்தது. நான் செய்த தவறு 3,3,8 என்ற சாத்தியத்தை மறந்திருந்தேன். மேலும் 1,1,* என்று வேறு ஏகப்பட்ட சாத்தியங்களை அலசியிருந்தது. நான் அதைச் செய்யவில்லை. அதனால் குழப்பம் வரவில்லை, இருந்தாலும் தவறுதான். எனவே வேண்டுமானால் 5 மதிப்பெண் கொடுக்கலாம் எனக்கு, ஆறுதல் பரிசாக:(

Read More...

Sunday, May 09, 2004

ஓட்டு போடுங்கள் - சிந்தித்து ஓட்டுப் போடுங்கள் !


ஓட்டு போடுங்கள் - சிந்தித்து ஓட்டுப் போடுங்கள் !

* வரட்டு பிடிவாதம், தலைகனம் பிடித்தவருக்கா உங்கள் ஓட்டு ?

* தீவிரவாதத்தை ஆதரிப்பவருக்கா உங்கள் ஓட்டு ?

* வன்முறையை தூண்டுவதும், சினிமா படப்பெட்டியை திருடுபவர்க்கா உங்கள் ஓட்டு ?

* மதச் சார்பின்மை என்று சொல்லி இந்து மதத்தை திட்டுபவர்க்கா உங்கள் ஓட்டு ?

* ஓட்டுக்காக தன் கணவனையே மறந்தவருக்கா உங்கள் ஓட்டு ?

* காவிரியை வைத்து அரசியல் நடத்துபவருக்கா உங்கள் ஓட்டு ?

* கழிவறை இல்லாத மக்களுக்கு ராமர் கோயில் கட்டுவோம் என்று முழங்குபவர்க்கா உங்கள் ஓட்டு ?

உங்கள் ஊர், உங்கள் தெரு பிரச்சனையை யார் தீர்பார்கள் என்று பாருங்கள் அவர்களுக்கு போடுங்கள்
உங்கள் ஓட்டை. கொஞ்சம் சிந்தியுங்கள் பிறகு பட்டனை அழுத்துங்கள்.
வாழ்த்துக்கள்.

(பி.கு: இந்த பதிவு ஓட்டு போடுகிறவர்களுக்கு மட்டும் )

Read More...

Saturday, May 08, 2004

விளம்பரம், படம், மேட்டர் !

விளம்பரம், படம், மேட்டர்!- தமிழ் பத்திரிக்கை ஒரு சின்ன அலசல்
தமிழ் பத்திரிக்கை என்றவுடன் நம் நினைவில் வருவது ஆனந்த விகடன், குமுதம், கல்கி. அந்தக் காலத்தில்
இந்த பத்திரிக்கைகளை படிக்க வீட்டில் போட்டி இருக்கும் என்று என் பாட்டி சொல்லி கேட்டிருக்கேன்.
இப்போது இந்த பத்திரிக்கைகளில் என்ன வருகிறது என்று ஒரு சின்ன அலசல். இந்த பத்திரிக்கைகளில்
வருவதை மூன்று விதமாக பிரித்து உங்களுக்கு கொடுத்துள்ளேன்.

1. விளம்பரம்
2. படம் ( புகைப்படம் மற்றும் கதை/கவிதை/ஜோக்ஸ்/கதைகளுக்கான ஒவியங்கள் ).
3. மேட்டர் ( கதை, கவிதை, ஜோக்ஸ், எல்லாம் இதில் அடங்கும்).

நம்ம பத்திரிக்கைகளில் இதன் சதவிகிதம் எவ்வளவு இருக்கிறது என்பது இங்கே.


(ஆவி - 2/5/2004, குமுதம் - 3/5/2004, கல்கி - 25/4/2004, துக்ளக் - 28/4/2004 )

என் அட்வைஸ் இந்த பத்திரிக்கைகளுக்கு(ஆவி,குமுதம்). படங்களை குறைத்து கீழ்
கொடுக்கப் பட்ட பட்டியலிலிருந்து எதாவது ஐந்தை தேர்தலுக்கு பின் சேர்க்கலாம்.

1. முதலில் ஒரு பொருளடக்கம் பக்கம்.
2. ஒரு தரமான புத்தக விமர்சனம்( proof reading ரிப்போர்ட் அல்ல )
3. ஒரு நல்ல கவர் ஸ்டோரி.(இந்தியா டுடே போன்று அறுவையானது அல்ல )
4. அறிவியலுக்கு ஒரு பக்கம். (முன்பு தினமனியில் வந்தது போன்று)
5. ஒரு தரமான புதிர்/குறுக்கெழுத்து போன்று எதாவது. ( இது எந்த நடிகையின் நகம் போன்று கஷ்டமானதாக வேண்டாம்).
6. நல்ல அறிமுகத்துடன் ஒரு இளம் எழுத்தாளர் கதை/கவிதை.( ஒரு ஸ்டாம்ப் சைஸ் போட்டோவாவது
போடுங்கப்பா)
7. குழந்தைகளுக்கான ஒரு காமிக்ஸ் Strip (ஒரு பக்கம் தமிழில் tintin கூட குடுக்கலாம் ).
.
.
.
( வாசகர்களுக்கு இந்த இடம் தரப்பட்டுள்ளது ).

Read More...

வயசு என்ன ?

இன்று இரா. மகேசன் அவர்கள் எனக்கு ஒரு புதிர் அனுப்பியிருக்கிறார்.

வணக்கம் இட்லி,

இதோ உங்களுக்காக இன்னொரு புதிர். ஒரு தர்க்கப் பேராசிரியர் கடைக்குள் நுழைகிறார். கடைக்காரர் இடக்காக பேசுபவர்.பேராசிரியரை மடக்க எண்ணினார். ப்ரோபசர் கேட்டார். "அய்யா, உங்களுக்கு எத்தனை குழந்தைங்க?" "மூணுங்க" "வயசு என்ன?" கடைக்காரர், "மூணு பேர் வயசையும் பெருக்கினா 72 வருங்க." என்றார். ப்ரோபசர் யோசித்து, "தகவல் பத்தாதுங்களே?" என்றார். கடைக்காரர், "வெளியே போய் பாத்திங்கன்னா எதிர்க் கடை நம்பர் இருக்கு பாருங்க, அதான் என் பிள்ளைங்க வயசைக் கூட்டினா வற்ற தொகைங்க." ப்ரோபசர் வெளியே போய் பார்த்துவிட்டு "இப்ப கூட தகவல் பத்தாதுங்க" என்றார். கடைக்காரர் புன்னகைத்து, "என்ன ப்ரோபசர் நீங்க. மூனாவது தகவல் தர்றேன். என் பிள்ளைங்க மூணுபேத்தில சின்னவனுக்கு - கடைக்குட்டிக்கு - ஐஸ்க்ரீம்னா ரொம்ப பிரியம்." ப்ரோபசர், "அப்படியா? இப்ப தகவல் போதுங்க" என்று மூணு பேர் வயதையும் சரியாக சொல்லிவிட்டார்.என்ன வயசு? எப்படி சொன்னார்?
- நன்றி : 21ம் விளிம்பு - சுஜாதா பி.கு. எனக்கு விடை தெரியும்.

- மகேசன் இரா


தமிழர்களை கொஞ்சம் யோசிக்க செய்த இரா. மகேசனுக்கு என் ஸ்பெஷல் நன்றி.

Read More...

Thursday, May 06, 2004

Mr.பரட்டைத்தலை விடை!

Mr.பரட்டைத்தலை புதிருக்கு சரியான விடை குடுத்த இரா மகேசன் அவர்களுக்கு என் பாராட்டுக்கள். "ஊரில் இருப்பதோ இரண்டே சலூன்கள். அதனால் அந்த கதாநாயக சலூன்காரரே பரட்டை தலையரிடம்தான் முடி திருத்தி இருக்க வேண்டும். So Mr.பரட்டைத்தலை அரசமரத்தடிக்கே செல்கிறார்"
- மகேசன் இரா

பங்குகொண்ட பாலா, ஷிரேயா மற்றும் நக்கல் நாகராஜன் அவர்களுக்கு என் நன்றி.

பிகு: தள்ளி நின்று கைதட்டிய பிரபுவுக்கும் நன்றி!.


அன்புடன்
இட்லிவடை

Read More...

Tuesday, May 04, 2004

இவ்வளவு பணக்காரர்களுக்கு ஓய்வூதியம் தேவையா?

கூட்டணி வேட்பாளர்களில் 80 பேர்களின் குடும்ப சொத்து பட்டியலை, பத்திரிகையில் பார்த்தேன். அதன்படி தி.மு.க., அணியில் போட்டியிடும் வேட்பாளர்களின் குடும்ப சொத்து ரூ.122 கோடி, அ.தி.மு.க., அணியினரின் குடும்ப சொத்து ரூ.44 கோடி. ஆக மொத்தம் 80 பேர்களின் குடும்ப சொத்து மொத்தம் ரூ.166 கோடி. 80 பேர்களின் சொத்தே இவ்வளவு என்றால், மற்ற அரசியல்வாதிகள் சொத்து எவ்வளவு இருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன். இதில் ரூ.2 லட்சம் சொத்து உள்ளதாக கணக்குக் காட்டியது ஒரே ஒரு வேட்பாளர் தான்.

மேலும் ரூ.2 லட்சத்திற்கு மேல் ரூ.10 லட்சத்திற்குள் சொத்து உள்ளவர்கள் ஆறு பேர். மற்றபடி எல்லாருமே நல்ல வசதி படைத்தவர்கள் தான். இதெல்லாம் வாக்காளர் தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறார்? ஒன்றுமில்லை.

ஆனால், வருமான வரித் துறையினருக்கு இது அவசியம் தேவைப்படும். சென்ற ஆண்டு வருமான வரி

தாக்கல் செய்யும் போது சொத்து இவர்களுக்கு எவ்வளவு இருந்தது? இந்த சொத்துக்கு ஒழுங்காக வருமான வரி கட்டியிருக்கின்றனரா? அப்படி கட்டப்பட்ட வரி எவ்வளவு அல்லது குறைவாக கட்டியிருந்தால் இன்னும் எவ்வளவு கட்ட வேண்டும் என்பதை எல்லாம் பத்திரிகை வாயிலாக வெளியிட வேண்டும்.

அதேசமயம் 33 ஆண்டுகள் அரசு பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு 2005 முதல் ஓய்வு ஊதியம் இல்லை என சட்டம் கொண்டு வர எண்ணுகிற அரசியல்வாதிகள் மற்றொரு விஷயத்தை யோசிக்க வேண்டும்.

கோடீஸ்வரராகவும், லட்சாதிபதியாகவும் இருக்கிற நீங்கள் ஒரு ஐந்து ஆண்டுகள் எம்.பி., ஆக இருந்து விட்டால், ஓய்வூதியம் பெற தகுதி உடையவர் தானா என இவர்கள் சற்று யோசித்துப் பார்த்தால் நல்லது.

எனவே, அடுத்து வரும் புதிய மத்திய அரசு, வரும் பார்லிமென்ட் கூட்டத் தொடரில் எம்.பி.,க்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் பற்றி மறுபரிசீலனை செய்தால் கூட நல்லது.

ஆ.பட்டிலிங்கம், பேரூர்.
நன்றி தினமலர்
4/5/2004

Read More...

Mr.பரட்டைத்தலை புதிர்!

Mr.பரட்டைத்தலை ஒரு கிராமத்துக்கு போகிறார். அங்கு ஒரு டீக்கடையில் டீக்குடிக்கிறார். கடையில் உள்ள தினத்தந்தியில் ரஜினியின் புதுப்பட விளம்பரத்தை
பார்க்கிறார். தானும் அந்த படத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆசை அவருக்கு வருகிறது. கே.எஸ்.ரவிக்குமாரை பார்த்து சான்ஸ் கேட்பதற்கு முன்னால் தன் பரட்டைத்தலையை அழகாக திருத்திக்கொண்டு செல்லாம் என்று, அருகில் டீக்குடிப்பவரிடம்
"அந்த ஊரில் சலூன் இருக்கா ?" என்கிறார்
"இந்த ஊரில் மொத்தம் இரண்டு சலூன் இருக்குங்க, அரசமரத்தடியில் ஒண்ணு அப்புறம் வாய்க்கா ஓரத்தில் ஒண்ணு"

Mr.பரட்டைத்தலை முதலில் அரசமரத்தடியில் இருக்கும் சலூனுக்கு போகிறார். அங்கே, முடிதிருத்துபவர் இவரைக்காடிலும் பரட்டைத்தலை. மற்றும் சலூனில் ஒரே தலை முடி வெட்டிய குப்பை. இது நமக்கு ஒத்துவராது என்று எண்ணி, அடுத்ததாக வாய்க்கா ஓரத்தில் இருக்கும் சலூனுக்கு போகிறார், அங்கே அவர் பார்த்தது இதற்கு நேர் எதிர். முடிதிருத்துபவர் அழகாக முடிதிருத்தப்பட்டு, மீசை செதுக்கப்பட்டு புதுப்பட கதாநாயகன் போல் இருக்கிறார்.
சலூனும் சுத்தமாக இருக்கிறது.

ஆனால் நம்ம Mr.பரட்டைத்தலை மீண்டும் அரசமரத்தடியில் உள்ள சலூனுக்கு போகிறார். ஏன் ?
விடை நாளை

Read More...

Monday, May 03, 2004

அடுத்த தேர்தலுக்கான விண்ணபப் படிவத்தின் டாப் 10+3 கேள்விகள

தற்போது தமிழ்நாட்டில் தேர்தல் வேட்புமனு தாக்கல் வாரம்.
வேட்பு மனு தாக்கல் படிவத்தில் என்னென்ன கேள்விகள் இருக்கும் அதற்கு வேட்பாளர்கள் என்ன தகவல் கொடுக்கிறார்கள் என்று செய்திதாள்களில் படிப்பதே ஒரு சுவாரசியம். அவ்வளவு காமெடிங்க!. சமீபத்திய உதாரணம் நெல்லை வேட்பாளர் தனுஷ்கோடி ஆதித்தியன்.

வேட்புமனு படிவத்தில் வேட்பாளர்கள் உண்மையான தகவல்கள் தான் தருகிறார்களா ? அதை தேர்தல் கமிஷன் எப்படி சரிப்பார்கிறார்கள் ? என்பது கடவளுக்குத்தான் வெளிச்சம். சிலர் அவர்களுடைய வங்கியில் வெறும் 1000 ரூபாய்தான் வைத்துள்ளார்களாம்!. சிலர் வாடகைவீட்டில் தான் இருக்கிறார்களாம். இதற்கு காரணம் தேர்தல் கமிஷன்தான். அவர்கள் கேட்ட கேள்விகள் தப்பு. அதனால் திருத்தி அமைத்த விண்ணப்ப படிவம் இங்கே.

அடுத்த தேர்தலுக்கான விண்ணபப் படிவத்தின் டாப் 10+3 கேள்விகள் இதோ !

1. விண்ணப்பதாரர்(வேட்பாளர்) பெயர் :
[ __________________________ ] [ __________________________ ]
(பிகு: பினாமி பெயர், உங்கள் நிஜப்பெயர் பெயர் (அப்பா,அம்மா வைத்த பெயர்) இரண்டையும் தரவும்)

2. தற்போதைய முகவரி
அ) ஜெயில் பெயர் : ______________________
ஆ) செல் நம்பர் : _________________________
(பிகு: ஜெயில் செல் நம்பர், செல் போன் நம்பர் அல்ல ).

3. கட்சியின் பெயர் ( நீங்கள் கடைசியில் இருந்த 5 கட்சியின் பெயர்களை மட்டும் குடுக்கவும் )
.
.
.
.
.

4. நீங்கள் கடைசியாக இருந்த கட்சியிலிருந்து விலகியதற்கான காரணம் ?
அ) சீட் கிடைக்கவில்லை வெளியேறினேன்
ஆ) சீட் கேட்டேன் வெளியேற்றப்பட்டேன்
இ) உறுப்பினர் அட்டையை புதுப்பிக்கவில்லை.
ஈ) வெளிநாட்டவர்

5. நீங்கள் தேர்தலில் நிற்பதற்கான காரணம் ?
அ) பணம் பண்ணுவதற்கு.
ஆ) கோர்ட் கேஸிலிருந்து விடுபடுவதற்கு.
இ) அதிகார துஷ்பிரயோகம்.
ஈ) பொதுத்நல தொண்டு
உ) சும்மா எல்லா நாடுகளையும் சுற்றி பார்க்க ஆசை
(பி.கு: நீங்கள் 'ஈ'யை தேர்ந்தெடுத்திருந்தால் அரசு மனநோய் மருத்துவரின் சான்றிதழை இந்த விண்ணப்படிவத்துடன் இணைக்கவும் )

6. பொதுநலப் பணியில் எவ்வளவு காலம் ஈடுபட்டிருந்தீர்கள் ?
அ) 1-2 வருடங்கள்.
ஆ) 2-6 வருடங்கள்.
இ) 6-15 வருடங்கள்.
ஈ) 15 வருடங்களுக்கு மேல்.

7) உங்கள் மேல் இருக்கும் கிரிமினல் வழக்கு விபரங்களை தரவும் ( எவ்வளவு
கூடுதல் பக்கங்களை வேண்டுமானாலும் இணைக்களாம் )

.....

8) எவ்வளவு வருடம் நீங்கள் ஜெயிலில் இருந்திருக்கீர்கள் ?
( பி.கு: இந்த கேள்வியையும் 6ஆம் கேள்வியையும் குழப்பிக்க வேண்டாம் ).
அ) 1-2 வருடங்கள்.
ஆ) 2-6 வருடங்கள்.
இ) 6-15 வருடங்கள்.
ஈ) 15 வருடங்களுக்கு மேல்.

9) எதாவது நீதி மோசடியில் ஈடுப்பட்டீர்களா ?
அ) ஆம்
ஆ) நிச்சயமாக
இ) இல்லை
ஈ) இது வெளிநாட்டு சதி.

10) சமீபத்தில் நீங்கள் ஊழல் செய்தக் காட்சி எந்த மீடியாவில் வந்தது ?
அ) தொலைக்காட்சி
ஆ) VCD/டேப்
இ) DTS எஃபெக்டுடன் கூடிய DVDயில்
ஈ) பக்கத்தில் உள்ள தியேட்டரில்

11) உங்களின் சொத்து விவரம்
அ) 10 பழைய ஓட்டை காலணாக்கள்
ஆ) நேற்று தான் மஞ்சள் நோட்டீஸ் குடுத்தேன்.
இ) எவ்வளவு என்று தெரியவில்லை
ஈ) எதிர் கட்சி வேட்பாளரை விட கம்மி.

12) இந்தியாவை முன்னேற்ற நீங்கள் எதாவது செயல் திட்டம் வைத்திருக்கிற்களா ?
அ) இல்லை
ஆ) இல்லை
இ) இல்லை
ஈ) இல்லை

13) நீங்கள் சாதித்ததை கீழே குடுக்கப்படு இருக்கும் இடத்தில் எழுதவும்.
[ ______ ]

கை பெருவிரல் அடையாளம் இங்கே வைக்கவும்
( பிகு: விண்ணப்பதாரரின் கை பெருவிரல் அடையாளம், விண்ணப்பத்தை பூர்த்தி
செய்தவருடையது அல்ல )

Read More...

கிறுக்கெழுத்து - விடைகள் !

கிறுக்கெழுதுக்கு முயற்சி செய்த அனைவருக்கும் நன்றி.
விடைகள் கீழே:மேலிருந்து-கீழ்
1. யாராவது பார்க்க போகிறார்கள் என்று எச்சரிப்பது.(5)
2. சரியான காரியத்தைத் தப்பான மனிதர்களிடம் செய்வது.(7)
3. கோர்ட் ஆர்டரை சட்டப்படி மீறுவது.(4)
4. லீவு போடுவதற்கு சொல்லும் காரணம்.(3)
6. தொந்திரவு இல்லா தூக்கம், மெஜாரிட்டியுடன் இணைவது.(4)
9. வீட்டுக்கு வீடு இருப்பது (2)
11. நிஜமான விமர்சனம்.(4)
12. லேட்டாகப் போகும் போது சீக்கிரமும், சீக்கிரமாகப் போகும்போது லேட்டாகவும் வருபவர்.(7)
13. இரண்டு பக்கமும் வால் உள்ள ஒரு மிருகம்.(2)
14. போனாவால் எழுதும் இயந்திரம். (4)
15. குற்றவாளிகள் அறிந்து வைத்திருப்பது.(8)
18. பவர்கட், வெய்யில் காலம், மற்றும் இரவு நேரங்களில் உண்டாவது(4)
19. மலையாளப் பட போஸ்டர்களால் எற்படுவது.(4)
22. மலையாளப் பட டைட்டில்களில் அவசியம் வர வேண்டியது.(4)
23. சிறு நீர் கழிக்குமிடம்.(9)
26. பாக்கேட் கொலைகாரன்(4)
27. காதலித்த பெண்ணையே மணப்பவன், வேகமாக ஓடுபவர்.(2)
28. மனைவியை அடக்க முடியாது என்கிற கட்டத்தை அடைந்தவன்(2)
29. காக்கைகளின் டாய்லெட்(2)
30. கல் தடுக்கி கீழே விழக் காரணமாயிருப்பது.(5)
31. எல்லோரும் ஒரு 'பிடி பிடிக்க' காத்துக்கொண்டு இருக்கும் ஒரு டிபன் வகை.(5)


இடமிருந்து-வலம்
2. மனைவி இல்லாத நேரங்களில் கணவனிடம் தோன்றுவது.(5)
5. லட்சக்கணக்கான மக்கள் தனிமையில் வாழும் இடம்.(4)
6. ஆபாசமான குழந்தை.(4)
7. நடிகைகள் உடை விஷயத்தில் அவசியம் பின் பற்ற வேண்டியது.(5)
8. வயதான மனைவியை விரும்புபவர்.(13)
10. திருட்டு நடக்கும் போது மட்டும் தூங்குபவர்.(5)
16. மாட்டுத் தீவனம்.(4)
17. தமிழ் சினிமாவுக்குத் தேவையில்லாதது.(3)
19. தொழிலில் தோல்வி அடைந்தவர்.(6)
20. நம்பிக்கையில்லாத விஷயத்தில் நம்பிக்கை வைத்திருப்பவர்.(5)
21. தப்புக்களை மறைக்கும் புத்தகம்.(5)
23. நாகரிகமாகக் கொள்ளையடிக்கும் இடம்.(5)
24. 'பந்த்'தின் போது மக்கள் செய்வது.(6)
25. உங்களை பற்றி நன்றாக அறிந்திருந்தும் இன்னும் நண்பனாக இருப்பவர்.(7)
26. அழகான பெண்ணுக்குத் தேவையில்லாதது.(4)
27. ஹாலிவுட் நடிகர் நடிகைகளின் உதட்டில் இருப்பது.(3)

Read More...