பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, April 28, 2004

X-Word

குறுக்கெழுத்து.
இன்று பலபேர், காலை பேப்பர் வந்தவுடன் பல மணி நேரம் செலவழிப்பது, CrossWord எனப்படும்
குறுக்கெழுத்து பகுதியில் தான். சிலர் ஆபிஸில், சிலர் பஸ்ஸில் சிலர் ரயிலில், சிலர் ரெஸ்ட் ரூமில்.
Hindu முதல் தமிழ் வாரமலர் வரை இன்று குறுக்கெழுத்து பலரை வசிகரித்துள்ளது என்பது உண்மை.

Hinduவில் வரும் குறுக்கெழுத்து கொஞ்சம் கஷ்டம், விஷயம் தெரிந்து இருக்க வேண்டும்.
வாரமலரில் வருவதற்கு கொஞ்சம் பொது அறிவு இருக்க வேண்டும் - "கடைசியாக
அந்த இரண்டு எழுத்து நடிகை யாரை மணந்தார்" என்பதை போல்.

பொழுது போக்காகவும், ஒரு வித புதிர் (puzzle) போலவும் இருப்பதனால் இதற்கு கூடுதல் மவுசு.

மேலும் படிக்கும் முன் ஒரு சிறு கதை சுருக்கம்..

New York World பத்திரிக்கை ஆசிரியர் அதில் வரும் 8 பக்க (கிறுஸ்துமஸ் ஸ்பெஷல்) நகைச்சுவை
பகுதிக்கு Arthur Wynne என்னும் பத்திரிக்கையாளரை ஒரு புதுமையான வார்த்தை வளையாட்டை
வடிவமைக்க சொன்னார். அவருக்கு தான் குழந்தையில் விளையாடிய Magic Square விளையாட்டு
ஞாபகத்துக்கு வந்தது. (அத்தாங்க நம்ம
சிவாஜி
வாயிலே
ஜிலேபீ மாதிரி)

பெரிசா புதுமையா பண்ணா என்ன என்று தோன்றிற்று. டைமண்ட் வடிவத்தில் கொஞ்சம் பெரிசா
வடிவமைத்தார். ஒவ்வொறு வார்த்தைக்கும் ஒரு சுலபமான குறிப்பு(clue) தந்தார்.
அது டிசம்பர் 21, 1913ல் New York World ஞாயிற்றுக்கிழமை பதிப்பில் வெளிவந்தது.
இதுவே உலகின் முதல் குறுக்கெழுத்து !.
அதன் வடிவம் இங்கேFill in the small squares with words which agree with the following definitions.
2-3. What bargain hunters enjoy. | 6-22. What we all should be.
4-5. A written acknowledgment. | 4-26. A day dream.
6-7. Such and nothing more. | 2-11. A talon.
10-11. A bird. | 19-28 A pigeon.
14-15. Opposed to less. | F-7. Part of your head.
18-19. What this puzzle is. | 23.30. A river in Russia.
22-23. An  animal of prey. | 1-32. To govern.
26-27. The close of a day. | 33-34. An aromatic plant.
28-29. To elude. | N-8. A fist.
30-31. The plural of is. | 24-31. To agree with.
8-9. To cultivate. | 3-12. Part of a ship.
12-13. A bar of wood or iron. | 20-29. One.
16-17. What artists learn to do. | 5-27. Exchanging.
20-21. Fastened.
24-25. Found on the seashore.
10-18. The fibre of the gomuti palm.


விடை:
பல உள்ளங்களை வெற்றி கொண்ட அது, இன்றும் பல பத்திரிக்கைகளில் வந்து கொண்டு இருக்கிறது.
பின்னர் AW குறுக்கெழுத்தை பல வடிவங்களில் முயற்சி செய்தார்(வட்ட வடிவமும் அதில் அடங்கும்),
பின்னர் (rectangle)நீள் சதுர வடிவம் நிலைத்தது.

1920ல் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் குறுக்கெழுத்து பரவ தொடங்கியது. பிரபலமடைந்த
குறுக்கெழுத்தின் மேல் பாடல்கள் எழுதப்பட்டது, பாடப்பட்டது. இவ்வளவு பிரபலம் அடைந்த குறுக்கெழுத்தை
New York Times நாளிதழ் மட்டும் நிராகரித்தது. பதினெட்டு வருடம் கழித்து, 1950ஆம் ஆண்டு
செப்டெம்பர் மாதம் New York Times ஒரு குறுக்கெழுத்தை வெளியிட்டது.
அன்று முதல் New York Times குறுக்கெழுத்துக்கு ஒரு 'Standard of Excellence' ஆக அது

விளங்குகிறது. இன்று வரும் குறுக்கெழுத்து குறிப்பு (clues) , சிலெடை, slang, விடுகதை போன்று பல

வடிவங்களில் வருகிறது.

New York Times குறுக்கெழுத்தாசிரியர் Will Shortz, பல புதுமைகள் செய்தார்
* பில் கிளிண்டனை ஒரு முறை பேட்டி எடுக்க சென்ற போது ஒரு ஸ்பெஷல்
குறுக்கெழுத்தையும் வடிவமைத்து எடுத்துச்சென்றார். கிளிண்டன் அதை 6 நிமிடம், 54 வினாடிகளில் முடித்தார்.

* அமெரிக்க தேர்தல் நேரத்தில், குறுக்கெழுத்து நடுவில் ஒரு வார்த்தைக்கு நாளைய தலைப்பு செய்தி
என்று Clue குடுத்தார்.அதில் அப்போது போட்டியிட்ட Clinton, Bob Dole இரண்டு பேர் பெயரும் அதில்
பெருந்தும் படி செய்தார்.

* 1995 பாட்மேன் ஃபார்எவர்(Batman forever) திரைபடத்திற்கு Riddler புதிர் எழுதினார்.

* உலகில் Enigmatologyயில் டிகிரி வாங்கியிருக்கும் ஒரே நபர் இவர்தான்.
( Enigmatology - noun. The study of puzzles—including word puzzles, math puzzles, and logic puzzles—and puzzle construction)

குறுக்கெழுத்து முதலில் Magic Squareலில் இருந்து வந்தது, ரோம்மில் தங்களின் பாத்திரங்கள், கதவு முதலிய
இடங்களில்
SATOR
AREPO
TENET
OPERA
ROTAS
இதை பொறித்து வைத்துள்ளார்கள். அதன் அர்த்தம் -"The Creator (or Savior) holds the working
of the spheres in his hands". இதனால் நன்மை பயக்கும் என்று அவர்களுக்கு ஒரு
நம்பிக்கை (நம்ம திருஷ்டி வினாயகர், குமுதம் பக்தியில் குடுக்கும் ஸ்டார் பொறிக்கப்பட்ட
தகடு போன்றவை!).

உலகின் பெரிய குறுக்கெழுத்து 1982 ஆம் ஆண்டு Robert என்பவரால் கனடா நாட்டில் வெளிவந்தது.
இடம்-வலம் 12,489 குறுப்புக்களும், மேலிருந்து கீழ் 13,125 குறிப்புக்களும் கொண்டது. இன்னுமும்
குறுக்கெழுத்து ரசிகர்கள் அதில் இருக்கும் 82,951 Squaresக்கு விடை கண்டுபிடித்துக் கொண்டு
இருக்கிறார்கள்!.
References :
1. The New Webster's Crossword Puzzle Dictionary
2. http://thinks.com/crosswords/first1.htm
3. http://www.fun-with-words.com/first_crossword.html
and other internet references.

போன வாரம் என் நண்பர் தமிழில் ஒரு குறுக்கெழுத்தை பூர்த்தி செய்து கொண்டிருந்தார், எவ்வளவு கேட்டும் தர
மறுத்துவிட்டார். அவருக்கு தெரியாமல் அதை எடுத்து வந்துவிட்டேன். அது இங்கே...

இரண்டு நாள் கழித்து என் நண்பர் வீட்டுக்கு செல்லும் போது விடைகளை எடுத்து வந்து தருகிறேன்.
அது வரையில் நீங்களே முயற்சி செய்யலாம். கல்யாணம் ஆகியிருந்தால் சுலபம்.
இதன் பெயர் - குறுக்கெழுத்து இல்லை கிறுக்கெழுத்து.மேலிருந்து-கீழ்
1. யாராவது பார்க்க போகிறார்கள் என்று எச்சரிப்பது.(5)
2. சரியான காரியத்தைத் தப்பான மனிதர்களிடம் செய்வது.(7)
3. கோர்ட் ஆர்டரை சட்டப்படி மீறுவது.(4)
4. லீவு போடுவதற்கு சொல்லும் காரணம்.(3)
6. தொந்திரவு இல்லா தூக்கம், மெஜாரிட்டியுடன் இணைவது.(4)
9. வீட்டுக்கு வீடு இருப்பது (2)
11. நிஜமான விமர்சனம்.(4)
12. லேட்டாகப் போகும் போது சீக்கிரமும், சீக்கிரமாகப் போகும்போது லேட்டாகவும் வருபவர்.(7)
13. இரண்டு பக்கமும் வால் உள்ள ஒரு மிருகம்.(2)
14. போனாவால் எழுதும் இயந்திரம். (4)
15. குற்றவாளிகள் அறிந்து வைத்திருப்பது.(8)
18. பவர்கட், வெய்யில் காலம், மற்றும் இரவு நேரங்களில் உண்டாவது(4)
19. மலையாளப் பட போஸ்டர்களால் எற்படுவது.(4)
22. மலையாளப் பட டைட்டில்களில் அவசியம் வர வேண்டியது.(4)
23. சிறு நீர் கழிக்குமிடம்.(9)
26. பாக்கேட் கொலைகாரன்(4)
27. காதலித்த பெண்ணையே மணப்பவன், வேகமாக ஓடுபவர்.(2)
28. மனைவியை அடக்க முடியாது என்கிற கட்டத்தை அடைந்தவன்(2)
29. காக்கைகளின் டாய்லெட்(2)
30. கல் தடுக்கி கீழே விழக் காரணமாயிருப்பது.(5)
31. எல்லோரும் ஒரு 'பிடி பிடிக்க' காத்துக்கொண்டு இருக்கும் ஒரு டிபன் வகை.(5)


இடமிருந்து-வலம்
2. மனைவி இல்லாத நேரங்களில் கணவனிடம் தோன்றுவது.(5)
5. லட்சக்கணக்கான மக்கள் தனிமையில் வாழும் இடம்.(4)
6. ஆபாசமான குழந்தை.(4)
7. நடிகைகள் உடை விஷயத்தில் அவசியம் பின் பற்ற வேண்டியது.(5)
8. வயதான மனைவியை விரும்புபவர்.(13)
10. திருட்டு நடக்கும் போது மட்டும் தூங்குபவர்.(5)
16. மாட்டுத் தீவனம்.(4)
17. தமிழ் சினிமாவுக்குத் தேவையில்லாதது.(3)
19. தொழிலில் தோல்வி அடைந்தவர்.(6)
20. நம்பிக்கையில்லாத விஷயத்தில் நம்பிக்கை வைத்திருப்பவர்.(5)
21. தப்புக்களை மறைக்கும் புத்தகம்.(5)
23. நாகரிகமாகக் கொள்ளையடிக்கும் இடம்.(5)
24. 'பந்த்'தின் போது மக்கள் செய்வது.(6)
25. உங்களை பற்றி நன்றாக அறிந்திருந்தும் இன்னும் நண்பனாக இருப்பவர்.(7)
26. அழகான பெண்ணுக்குத் தேவையில்லாதது.(4)
27. ஹாலிவுட் நடிகர் நடிகைகளின் உதட்டில் இருப்பது.(3)

1 Comment:

Anonymous said...

eWlkwAlgoWneh [url=http://bit.ly/oldnavycouponsbox]old navy coupons[/url] reoExetMNKeypeL