பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, April 26, 2004

இரண்டு டஜன் தனி நபர் விமர்சனம்.

தனி நபர் விமர்சனத்தின் தாளாளர் கருணாநிதி!

டாக்டர் சி.ஆர்.அசோகன், ஆவடி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: "சோனியா காந்தியை வெளிநாட்டவர் என்று பா.ஜ.,வினர் தனிநபர் விமர்சனம் பண்ணுவது வேதனையளிக்கிறது' என்று கருணாநிதி கண்ணீர் வடிக்கிறார். "தமிழக அரசியலில் தனி நபர் விமர்சனத்தை ஆரம்பித்து வைத்தவரே கருணாநிதி தான். இந்திராகாந்தியை, "கிராப் வெட்டிய காஷ்மீர் பாப்பாத்தி' என்றும், பெருந்தலைவர் காமராஜரை, "கோமாளி ராஜா' என்றும் கூறியவர் தான் கருணாநிதி' என்று சரிக்குச் சரியாக அன்று வாழப்பாடியார் சாட்டையடி கொடுத்தது போல், இன்று சுடச் சுட கருணாநிதிக்கு பதில் கூறுவதில், பா.ஜ., பொதுச் செயலாளர் எச்.ராஜா நூற்றுக்கு நூறு விளங்குகிறார்.

தமிழக அரசியலில் அநாகரிகத்தை அரங்கேற்றியவரே கருணாநிதி தான். "தனி நபர் விமர்சனம்' தழைத்தோங்க, பிள்ளையார் சுழி போட்டவரும் சாட்சாத் கருணாநிதி தான். தனி நபர் விமர்சனம் என்றால் கிஸ்மிஸ் பழம் உண்ட உவகை கொள்வார் கருணாநிதி.

தனி நபர் விமர்சனத்தின் தாளாளர் தான் கருணாநிதி. அப்படி கருணாநிதியால் "தனி நபர் விமர்சனம்' பெற்றவர்களை ரத்தினச் சுருக்கமாக பார்ப்போம். எத்தனையோ பேர் உண்டு. இடப் பற்றாக்குறையால் இரண்டே இரண்டு டஜன் மட்டும் இதோ:

மூதறிஞர் ராஜாஜியை "குல்லுகபட்டர்' (சதிகாரர்) என்றார்; கர்மவீரர் காமராஜரை "அண்டங் காக்கா' என்று அர்ச்சித்தார்; கக்கன்ஜியை "கக்கன் என்ன கொக்கா' என்று நஞ்சைக் கக்கினார்... ஜாம்பவான் பக்தவச்சலனாரை குரங்கு போல் கார்ட்டூன் போட்டார்; வாழப்பாடியாரை "வழிப்போக்கன்' என்றார்; மூப்பனாரை "காவேரி, தென்பெண்ணைப் பாலாறு... மூப்பனார் மூளையில் கோளாறு' என்றார்; எம்.ஜி.ஆரை "மலையாளி, கூத்தாடி, கோமாளி' என்றார்; நாவலரை "நெடுமரம்' என்றார்; நாஞ்சிலாரை "மந்திரக் கோல் மைனர்' என்றார்; ஆர்.வி.,யை "கைபர் கணவாய் வழி வந்தவரே' என்றார்; ஹிந்து பத்திரிகையை "மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு' என்றார்...

துக்ளக் சோவை "சொட்டைத் தலையர், பபூன்' என்றார்; குமுதம் எஸ்.ஏ.பி.,யை "குள்ள நரி' என்றார்; ப.சிதம்பரத்தை "செட்டி நாட்டு சின்னப் பையன், சீமான் வீட்டு கன்றுக் குட்டி' மற்றும் சமீபத்தில் "ஈ, எறும்பு, கொசு' என்றார்; பேராசிரியரை "வெறும் உதவி விரிவுரையாளர் தான்' என்றார்; அரசியல் சட்ட அறிஞர் இரா.செழியனை "ஈனப்பிறவி' என்றார்; வைகோவை "கள்ளத் தோணி, கலிங்கப்பட்டி களிமண்' என்றார்; பா.ஜ.,வை "தீண்டத்தகாத கட்சி' என்றார்...

வாஜ்பாய், அத்வானியை "விஷ ஜந்துக்கள்' என்றார்; பா.ஜ., தலைவர்களை "பண்டாரம், பரதேசி, காவி உடை, கமண்டலம், ஆக்டோபஸ்' என்றார்; பா.ஜ., பொதுச் செயலாளர் எச்.ராஜாவை "கூஜா' என்றார்; முதல்வர் ஜெ.,யை "பாப்பாத்தி, பத்ரகாளி, காந்தாரி' என்றார்; ஒட்டு மொத்த இந்துக்களை "திருடன்' என்று திட்டினார்; இரண்டு கோடி தமிழக வாக்காளர்களை "பருத்தி விதை, தவிடு, புண்ணாக்கு தின்னும் மாக்கள், வாழை மட்டைகள், மடச் சாம்பிராணிகள், புத்திகெட்ட ஜென்மங்கள், சோற்றால் அடித்த பிண்டங்கள்' என்றார்.

இப்படி நா கூசாமல் குழாயடிச் சண்டையைப் போல் தனி நபர் அர்ச்சனை செய்து, தமிழக அரசியலை தரங்கெட்டுப் போக வழி அமைத்த கருணாநிதி இன்று புத்தர் போல் "தனி நபர் விமர்சனம் கூடாது' என்று போதிப்பது வேடிக்கையாக உள்ளது.

இன்று ரஜினி பா.ஜ., அ.தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு அளித்து "வாய்ஸ்' கொடுத்துள்ளதால், "மராட்டியரே, கர்நாடக வழி வந்தவரே, கண்டக்டரே, பரட்டையரே, கோமாளியே, கூத்தாடியே...' என்று ரஜினியை தேர்தலுக்குள் கருணாநிதி புகழ்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இது எல்லாமே இரண்டு கோடி தமிழக வாக்காளர்களுக்கு மிக மிக நன்றாகத் தெரியும் என்பது தான் உண்மையிலும் உண்மை.

நன்றி தினமலர் 16-04-2004.

1 Comment:

hosuronline.com said...

எல்லாம் சரிதான், ஆனால் ஜெயலலிதா, கருனானிதியை சாகப்போகும் கிழம் என்றும், நாட்களை என்னுபவர் என்றும் சொல்வது, ஜெ, மு.க-விற்கு ஒரு படி மேலே போய்விட்டாறோ?