பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, April 23, 2004

அபிமானமும் அன்னவஸ்திரமும்

30 நயாபைசா நூல்கள் என்று சில புத்தகங்கள் சமிபத்தில் கிடைத்தது
( அமுத நிலையம் Pvt.Ltd, த.பெட்டி 1457, ph: 72574, தேனாம் பேட்டை,
சென்னை-18, இரண்டாம் பதிப்பு-1945, விலை 30 நயாபைசா).

1708 முதல் 1925 ஆண்டுகளில் நடந்த பல்வேறு சம்பவங்களின் திரட்டு. பெரும்பாலும்
கர்நாடக இசை சம்பந்தமாக பல தகவல்கள். அதில் இருந்து ஒன்று அட்சய திருதியை முன்னிட்டு.
என்ன புரியவில்லையா ? அதாங்க "Old is Gold" என்று சொல்வார்களே !.
*
சங்கீத சாகத்திய மேதைகள் ராமநாதபுரம் ஸ்ரீநிவாச ஐயங்கார் மைசூர் வாசுதேவாச்சார்
முதலியவர்களின் குருவான பட்டணம் சுப்பிரமணிய ஐயர் அவர்கள் ஓர் இடத்தில் கச்சேரி
செய்து கொண்டிருந்தார். தெய்வ அருள் பெற்ற வாக்கேயகாரராண அவர், தாம் இயற்றிய
கீர்த்தனைகளின் ஒன்றான பேகட ராகத்தில் அமைந்த 'அபிமான மென்னடு' என்ற கீர்த்தனையைக்
கச்சேரி நடுவே பாடினார்.

கீர்ததனம் முடிந்தது அந்த இடைவெளியில் அவையின் முன்னணியில் இருந்த ஒரு ரசிகர் ஒருவர்
சட்டென்று ஸ்வரம் பாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். வித்துவான் அவரை நோக்கி,
"ஸ்வரம் பாடவேண்டுமா ? அபிமானத்திற்குப் பாடவா, அன்னவஸ்திரத்திற்குப் பாடவா ?
என்று புன் முறுவலுடன் கேட்கவே அவையில் கொல் லென்று சிரிப்பு ஒலி எழுந்தது.
அந்த பாடலின் பல்லவி எடுப்பில் 'அபிமானம்' என்றும் சரணத்தில் அன்னவஸ்திரம் என்றும்
இருப்பதை வைத்து அவர் சிலேடையாக இப்படிக் கேட்டதை ரசித்து சிரித்தார்கள். அந்த
சிரிப்பொலி அடங்குவதற்குள் வித்துவான் ஸ்வரம் பாட ஆரம்பித்து விட்டார்.

0 Comments: