பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, April 22, 2004

'நான்' வெஜிடேரியன்!.

'நான்' வெஜிடேரியன்!.

என் நண்பர் ஒருவர் 'நான் ஒரு வெஜிடேரியன், ஆனால் பிரட் ஆம்லட் சாப்பிடுவேன்' என்பார்.
அது எப்படி ? என்றால் 'நீ மட்டும் என்ன ஒழுங்கு ஃபாரின் சாக்லேட், கேக் எல்லாம் சாப்பிடுகிறாய்'
என்று மடக்குவார்.

வெஜ் - நான்-வெஜ் சாப்பிட பல காரணங்கள் இருக்கிறது - மதம், குடும்ப வழக்கம், personal preference,
நாக்கு(சிக்கன் இல்லாமல் எனக்கு எதுவும் உள்ளே போகாது),
உடல் ஆரோக்கியம் ( டாக்டர் முட்டை சாப்பிட சொன்னார் ) போன்றவை.

எனக்கு தெரிந்து நிறைய வெஜிடேரியன் வகை இருக்கிறது.

- எல்லாம் சாப்பிடுவேன் என்று சொல்லி, ஒரு ஆனால் போடுவார்கள். என்ன என்று கேட்டால்
பன்னி, முயல் தவிர என்பார்கள்.

- சிலர் வெள்ளிக்கிழமை, அம்மாவாசைக்கு மட்டும் அவற்றுக்கு லீவ் விடுவார்கள்.

- கொல்கத்தாவில் இருப்பவர்கள் மீனை கடல் புஷ்பம் என்று சொல்லி தலையில் வைத்துக்
கொள்ளமாட்டார்கள், சாப்பிடுவார்கள்.

- எந்த வகை மாமிசத்தையும் சாப்பிடமாட்டார்கள் ஆனால் முட்டை மட்டும் ( யாருக்கும்
தெரியாமல் ) சாப்பிடும் அமெரிக்க பிராமணர்கள் (தமிழ் நாட்டிலும் உண்டு) மற்றொரு வகை.

- சிக்கன், முள்ளங்கி சாம்பார் என்றால், சிக்கனை ஒதுக்கி வைத்து முள்ளங்கி சாம்பார் மட்டும்
சாப்பிடுபவர் இன்னொரு வகை.

- பால், தயிர், நெய் என்று இதில் இருக்கும் cholesterolலே எனக்கு போதும்
மற்றது வேண்டாம் என்று பட்டையை கிளப்புகிறவர்கள் இன்னொரு வகை.

- பழத்தை மட்டுமே சாப்பிடுகிறவர்களும் இருக்கிறார்கள் ( சரியான 'பழம்' :-) )

அது சரி வெஜிடேரியன் என்று சொல்லி கொள்பவர்கள் ஷுஸ், செருப்பு பயன்படுத்துவது
இதெல்லாம் .. வெஜிடெரியன் ஷுஸ்
என்று எதாவது இருக்கா ? இருக்கு. விலைதான் கொஞ்சம் ஜாஸ்தி.

நான்-வெஜ் ஆக இருந்தால் என்ன தப்பு ?

- தப்பு செய்கிறவர்கள், குற்றவாளிகள் பெரும்பாலும் நான்-வெஜ் தாங்க! -
விடை திருக்குறளிள் இருக்கு
"தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்."

தன் உடலை வளர்ப்பதற்காக வேறொரு உயிரின் உடலை உணவாக்கிக் கொள்பவர் எப்படிக்
கருணையுள்ளம் கொண்டவராக இருக்க முடியும்.(கலைஞர் உரை)
(புலால் மறுத்தல்-1)

- மற்றொரு காரணம் கொழுப்பு - மாரடைப்பு, கேன்சர் - நான்-வெஜ் ஆசாமிகளுக்கு தான்
அதிகம் வருகிறது. ஒரு வெஜிடேரியன் (நான்-வெஜ்ஜை காட்டிலும்) ஆஸ்பதிரிக்கு 22%
குறைவாக போகிறான்.

- ஒரு சராசரி நான்-வெஜ் சாப்பிடுபவர் தன் வாழ்நாளில் 36 பன்றிகள்(பன்றி சாப்பிடாதவர்கள்
18.5 மாடு), 36 ஆடுகள், 751 கோழிகளுக்கு தங்கள் வயிற்றில் சாமாதி கட்டுகிறார்கள்.

வருடா வருடம் ஒரு பண்டிகைக்கு சென்னை ராயப்பேட்டையில் ஆடுகள் மெஜந்தா வர்ணம்
பூசி டிரஃபிக் ஜாம் ஏற்படுத்தும். அந்த ஆடுகளை உற்று நோக்கினால் அதனுள் ஒரு பயம் தெரியும்.
பண்டிகைக்கு அடுத்த நாள் எதுவுமே இருக்காது.

ஜப்பான், கொரியா, போன்ற நாடுகளில் பாம்பு, நத்தை ஏன் நாயைக் கூட சாப்பிடுகிறார்கள்.
ஐரோப்பாவில்(ஜெர்மனி ?)முதலையை சாப்பிடுகிறார்கள்.

போன மாசம் ஒரு பஃபே பார்டியில் ஒருவர் - 'நான் ஒரு வெஜிடேரியன்' என்றார். ஆனால்
சகட்டுமேனிக்கு எல்லாவற்றையும் ஒரு பிடிபிடித்தார் - கேட்டால் 90km வேகத்துக்கு குறைவாக
ஓடும் எல்லாமே எனக்கு வெஜிடேரியன் தான் என்றார். எடுத்தேன் ஒரு ஓட்டம்!.

References:
http://www.giveusahome.co.uk/articles/vegetarianism.htm
Source of Information: Food for Thought by Dr Vernon Coleman. It is available in libraries, or from bookshops, or post free from European Medical Journal, P O Box 30, Barnstable, Devon EX32 9YU

0 Comments: