பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, April 05, 2004

தமிழும் இணையமும்

கணினித்திரையில் "அ, ஆ, இ, ஈ" பார்த்து, பூரித்து இன்று சுமார் 12-13 வருடங்கள் இருக்கும்.
இன்று நாம் தமிழ் கணினியில் என்ன பெரிதாக சாதித்தோம் ?

தமிழ்.நெட் - அன்று Tamil.netல் இருந்த அதே கலைச் செல்லாக்கம் இன்றும் தொடர்கிறது, அன்று நடந்த
அதே குழாயடி சண்டை இன்று முத்திப்போய் உள்ளது.அன்று டிஸ்கி, டாப் என்று சண்டைப் போட்டோம்
இன்றும் அதையே வைத்துக்கொண்டு சண்டை போடுகிறேம்.

தமிழ் லினக்ஸ் - அதிலும் சண்டை.

கலக்குறே தமிழா ! புது குழுக்கள், புது சண்டை, பிரமாதம்

நல்ல வேளையாக யூனிகோட் வந்தது. இதில் சண்டை போடும் குழுக்களின் பங்கு அதிகம் இல்லாததால்
மரணப்படுக்கையில் இருந்த தமிழ், oxygen வைத்து தற்போது பிழைத்துள்ளது.

இன்று தமிழில் இணையத்தளம், வலைப்பதிவுகள், இணையக்குழுக்கள் என்று மிரட்டினாலும்.
அதில் எஞ்சி இருப்பது வெறும் குப்பையே.

தேடி சோறு நிதம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடி துன்பமிக உழன்று
பிறர் நோக கொடுஞ்செயல்கள் புரியும்
வெறும் வேடிக்கை மனிதரைப்போல

கல்வியில் மேன்மை பெற்று, பல சாதனைகள் புரிந்து , பல துறைகளில் ஞானம் பெற்றவர்களே நடந்து
கொள்ளவது தான் இணையக்குழுக்கள் இணையாமல் போனதற்கு காரணம்.

தமிழ் இணையம் வளராததர்க்கு மேலும் சில காரணங்கள் :
1. செயல்படுத்த ஒரு நல்ல Leader இல்லாதது.
2. தமிழ் இணையத்தளம் வைத்துள்ளவர்கள் சினிமாக்கு மட்டும்தான் என்று நினைப்பது.
3. செய்தித்தாள், பத்திரிக்கை வைத்துள்ளவர்கள் இணையத்திலும் ஒரு பதிப்பு போடுகிறார்களே தவிர,
இவர்கள் இன்னும் இணையத்தின் பயனை முழுமையாக உணரவில்லை.
4. Reinventing the wheel. என்ன இருக்கு என்பதை பார்க்காமல் எதையும் புதிதாக மீண்டும்
ஆரம்பிக்கும் பழக்கம். (இணையத்தில் முதலில் காலடி வைக்கும் இல்லேரும் திருக்குறளை
உள்ளிடுகிறார்கள். திருவள்ளுவர் இருந்திருந்தால் வருத்தப்பட்டிருப்பார்)
5. Search வசதி இல்லாதது.(தற்போது யூனிகோடில் உள்ளது ).
6. பல்கலைகழகங்களின் குறைவான பங்களிப்பு.
7. இணையம் வழி வணிகத்தில் கவனம் செலுத்தாமை

இவற்றிக்கெல்லாம் மேலாக ஒற்றுமை இன்மை, மற்றவர் செயல் பாடுகளில் குற்றம் காணும் போக்கு.
நினைக்கும் போதெல்லாம் அறிக்கைவிடுவது. மற்றவர் மனங்களை நோகடிப்பது .

இப்படி வேற்றுமை மனப்போக்கோடு செயல்பட்டுக்கொண்ப்பதால் நாம் இழந்தவை
1. தகவல் தொழில் நுட்பத்தின் பயன் முழுமையாக மக்களை சென்று சேராரது
2. இதனால் ஏற்படும் மன உலைச்சல்
3. மற்றவர்களூக்கு நாம் உருவாக்கித்தரும் சங்கடம்
4. நம் நேரம்
5. இணைய குழுக்கள் , மற்றும் தமிழ் இணையம் வெரும் காலத்தை விரையமாக்கும் கருவியே என்ற தவறான
கருத்தை பிறர் மனங்களில் பதிப்பித்தல் இவையே.


இன்று சொல்லிக்கொள்ளும்படியாக உள்ள ஒரே தளம், மதுரைத்திட்டம் மட்டும் தான்.
வேறு எதாவது நல்ல இணையத்தளம் இருந்தால் இங்கே தெரிவிக்கவும்.

இன்று ஆங்கிலத்தில் இருக்கும் வலைத்தளங்கள் போல் தமிழில் இருக்கா ? பதில் இல்லை.
ஒரு நல்ல மருத்துவத் தளம், தமிழில் எழுத்தாளருக்கு பஞ்சம் இல்லை அவர்களை பற்றி ஒரு தளம்,
தகவல் அறிவியல்/தொழில்நுட்பத்திருக்கு ஒரு தளம், இதெல்லாம் வேண்டாம் ஒரு சமையல்
குறிப்புக்குக் கூட இன்று ஒரு உருப்படியான தளம் இல்லை.
Sorting, Spell checking போன்ற basic மென்பொருள் இன்னும் முழுமையாக இல்லை.

மரத்தடி,ராகாகி குழுக்களிடையே நடைபெரும் மோதல்கள், இன்று வலைப்பதிவின் மறுமொழியிலும் மெகா
சீரியல் போல் தொடர்கிறது. இதைப் பார்த்தால் எனக்கு சிவசங்கர் பாபா, யாகவாமுனிவர் தான் ஞாபகம்
வருகிறது. (சிவசங்கர் பாபா, யாகவாமுனிவர் மன்னிப்பார்களாக).
இவ்விருக்குழுக்களில் இருக்கும் எல்லோரும் கீழ் வரும் ரோமாபுரிச் சக்கரவர்த்தி மார்க்க அரேலியருடைய ஆத்ம
சிந்தனை (தமிழில் ராஜாஜி) படித்துவிட்டு குழுக்களில் சேருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

"காலையில் எழுந்ததும் அடியிர் கண்டபடி உனக்குள் சிந்தித்துக்கொள்.
இன்று நான் கலகக்காரனைக் காண்பேன். குரூரமான இம்சையைப் பார்ப்பேன்,
நன்றி கெட்டவனைக் காண்பேன். மரியாதையற்றவன், மோசக்காரன், பொறாமைக்காரன் முதலிய
எல்லோரையும் சந்திப்பேன். அவர்கள் குற்றங்களுட்கெல்லாம் காரணம், நன்மை தீமை
அறியாத அவர்களுடைய அறியாமையேயாகும். ஆனால் நானோ நன்மை தீமைகளை நன்று
அறிவேன். நன்மையில் எனக்கு அழகு தோன்றுகிறது. தீமையில் அழகின்மையும் அவலக்ஷணமும்
காண்கிறேன். என்பால் ஒருவன் தீங்கு செய்தால், அவன் எனது உறவால் உடன்
பிறந்தானல்லானாயினும் ஆன்ம நேய ஒருமைப்பாட்டால் அவன் எனக்கு உடன் பிறந்தவனே.
பரம்பொருளில் ஒரு பாகம் நம்மிருவர் உள்ளத்திலும் இருக்கிறதல்லவா ? அவன் எனக்கு என்ன
தீங்கு செய்யமுடியும் ? என்னை தவிர, யாரும் என்னைக் கெடுக்க முடியாது தீங்கிழைப்பவன்
எனது தம்பியேயாதலுன் அவன்மீது நான் கோபமோ, வெறுப்போ கொள்ளலாகாது.
உலகத்திலுள்ள நாம் எல்லோரும் ஒன்றுபட்டு வாழப் பிறந்திருக்கிறோம். உடலிலுள்ள கைலளும்,
கால்களும், கண்ணிதழ்களும் மேல்வரிசை கீழ்வரிசைப் பற்களும்போல நாமும் ஒன்றுபட்டு
உழைக்கவேண்டும். இக்கடமையை மறந்து ஒருவருக்கொருவர் மாறாக வேலை செய்வது
இயற்கை அமைப்புக்கு முரணாகும். வெளியே காட்டாமல் ஒருவன்மீது உள்ளத்தில் கோபமாவது
வெறுப்பாவது கொள்வதும் முரண்படுவதேயாகும்; இயற்கையமைப்பின் உடன்பாட்டுழைப்பு
ஆகாது."

இல்லையேல் இந்த இரண்டு திருக்குறளையும் குளித்துவிட்டு, 108 முறை சொல்லிப் பார்த்துக் கொள்ளுங்கள்.

தீயினால் சுட்டப்புண் உள்ளாரும் ஆறாதே
நாவிலால் சுட்ட வடு

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்ப காய்கவர்ந் தற்று

4 Comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

பொத்தாம் பொதுவாக இணையத் தமிழில் பலனுள்ளவையே இல்லை என்று நீங்கள் சொல்வது தவறு. கடந்த இரண்டு ஆண்டுகளில் நிறைய மாறத் தொடங்கி இருக்கிறது. தமிழ் விக்கிபீடியா, தமிழ் விக்சனரி ஆகிய தளங்களுக்கு வந்து அதில் என்ன குறை கண்டீர்கள் என்று சொல்லவும். அவற்றில் உள்ள உள்ளடக்கம் தற்போது குறைவாக இருந்தாலும், இத்தளங்களின் செயல்பாடும் போகும் திசையும் பெருமிதம் கொள்ளச் செய்வது. தமிழ் இணையு உலகில் காணப்படும் குழாய் அடிச்சண்டை இங்கு இல்லவே இல்லை. இது தவிர மென்பொருள் ஆக்கத்துக்கு தமிழா குழுவில் இருந்து தொடங்கி கட்டற்ற தமிழ் கணிமை குழு ஒன்றை முடுக்கி விட்டிருக்கிறோம். நல்ல விளைவுகள் விரைவிலேயே வரும். நம்பிக்கையுடன் இருப்போம்

IdlyVadai said...

ரவிசங்கர்,
பொத்தாம் பொதுவாக நான் சொல்லவில்லை. எனக்கு பத்து நல்ல தமிழ் வலைதளங்களை சொல்லுங்கள். இன்னும் விக்கி பக்கம் நம்ம ஆட்கள் போகவில்லை. எல்லை என்றால் அங்கும் பெரியார் பார்பான் என்று சண்டை போட ஆரம்பித்துவிடுவார்கள்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

இது வரை தமிழ் விக்கிபீடியா ஆக்கப்பூர்வமாகவே செயல்பட்டு வருகிறது. கண்ணியம் குறைவாக, விதண்டாவாதமாக செயல்படுபவர்களை தடுத்து வைக்கவும் அங்கு வழிமுறைகள் உண்டு. எனவே, வலைப்பதிவு உலகு அளவுக்கு அங்கு குழப்பம் வரும் என்று பயப்படத் தேவையில்லை. இன்னும் ஓரிரு ஆண்டுகள் கழித்து நிலைமை எப்படி இருக்கிறது என்று உங்களுக்குச் சொல்கிறேன். நல்ல தமிழ்த் தளங்களாக நான் கருதுவன பின்வருமாறு. இவை தர வரிசை அல்ல:

1. BBC tamil website.

2. Chinese tamil radio website.

3. Tamil wikipedia.

4. Tamil Wiktionary.

5. Tamil virtual university website.

6. Project madurai.

7. நூலகம் திட்டம்.

8. தமிழா website.

9. தமிழ்மணம்

10. சுரதா.

IdlyVadai said...

உங்கள் வருகைக்கும், கருத்துக்கு நன்றி. அடுத்த இரண்டு வருடங்களில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.