பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, April 19, 2004

நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் - 6

நகைச்சுவையில் அடுத்து நாம் 'Parody' என்னும் வகையை பார்க்கலாம். ஏற்கெனவே புகழ் பெற்ற
பிரபலமான பாணியை அல்லது நடையை நினைவு படுத்துகிற விதத்தில் - அதே ஸ்டைலில்
புதிய கருத்துகளைக் கூறுவது Parody ( A composition that imitates somebody's
style in a humorous way).

வீரபாண்டிய கட்டபொம்மன், மனோகரா, திருவிளையாடல் போன்ற படங்களின் வசனங்களின்
ஸ்டைலை பின்பற்றி அந்த வசனங்களைச் சற்று மாற்றி பொருத்தமான வேறு வசனங்களை போட்டு
நகைச்சுவையை உண்டாக்கலாம். மிமிக்ரி, ஆனந்த விகடனில் வரும் 'மிஸ்டர் ரீல்' இந்த வகை
நகைச்சுவைதான்.

அடுத்த வகை Burlesque. இது Parody போன்றது தான், ஆனால் கொஞ்சம் 'கீழிறக்கி'
அல்லது பரிகாசம் செய்யும் விதம்.
இதற்கு சில உதாரணங்கள் பார்க்கும் முன், 'கேரக்டரோ கேரக்டர்' (ஆசிரியர் கடுகு) என்ற
புத்தகத்தின் பின் அட்டையில் எழுதியது எனக்கு ரொம்ப பிடித்தது, அதிலிருந்து ஒன்றை இங்கு
தந்துள்ளேன்.
இப்புத்தகத்தை படிக்காதவர்கள் பாராட்டுகிறார்கள்!
இப்புத்தகம் அபாரம் போங்க!
"எப்பவும் 200 மில்லி போட்ட மாதிரி ஆடிக்கொண்டே இருந்த என் வீட்டு மேஜையின் காலின்
கீழ் புத்தகத்தை வைத்தேன் சொன்னால் நம்பமாட்டீர்கள் மேஜை ஆடுவது நின்று விட்டது முப்பது
வருடமாக ஆ(ட்)டிக் கொண்டிருந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டது. இன்னும் இது மாதிரி பல
உபயோகமான புத்தகங்களை எழுதுங்கள்"
-- ராமன், தெனாலி


இது போன்று யாரையும் புண்படுத்தாமல் நகைச்சுவை எழுதுவது தான் என்னை பொருத்தவரையில்
மிகவும் கடினமானது.
(1) (2) (3) (4) (5)

0 Comments: