பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, April 02, 2004

நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் - 4

ரங்கா அவர்கள் - "கல்கி, தேவன் அவர்களின் உதாரணங்கள் எவ்வளவோ இருக்க வேறு ஏதும் கிடைக்கவில்லையா நோக்கு ? என்று எழுதியிருந்தார்.
தனக்கு பிடித்த உதாரணங்களை எனக்கு ஈ-மெயிலில் அனுப்பியிருந்தார்.
அதை இங்கு அப்படியே குடுத்துள்ளேன்.

என் கவனத்தைப் பெரிதும் கவர்ந்த ஒரு விஷயம் என்னவென்றால், ஒரு கடை விட்டு ஒரு
கடை hair cutting saloon ஆக இருந்ததுதான். நான் போன சமயம் இந்தக் கடைகளில் வேலை
சுறுசுறுப்பாக நடக்க வில்லை. 'இது ஏன் இப்படி?' என்று பக்கத்தில் வந்த சினேகிதரைக் கேட்டேன்.
'இப்போது மைசூரில் ரேஸ் நடக்கிறதல்லவா? அதனால்தான்' என்றார்.
'குதிரைப்பந்தயத்திற்கும் சவரக்கடை காலியாயிருப்பதற்கும் என்ன சம்பந்தம்?' என்று கேட்டேன்.

'ஏன் சம்பந்தமில்லை? இப்பொழுதுதான் ரேஸ்கோர்ஸிலேயே ஜனங்களை மழுங்க மொட்டை
அடித்துவிடுகிறார்களே? ஸலூன்களில் எப்படி வேலை இருக்கும்?'

- சௌந்தர்ய உலகம் ஆனந்த விகடன் 1936.

முதல் நண்பர் 'டாஸோவுக்குக் கவிதா சக்தி அதிகம்' என்றார். இரண்டாம் நண்பர் 'அரிஸ்டோ வின்
வசன நடையில் தேனொழுகுகிறது' என்றார். 'ஹாஸ்ய ரசத்தில் டாஸோவுக்கு மிஞித்தான்' என்றார்
ஒருவர். 'மொத்தத்தில் அரிஸ்டோ வுக்கு ஈடானவர் எவருமில்லை' என்றார் மற்றவர்.
இவர்களுக்குள் விவாதம் முற்றி வார்த்தை தடித்து கடைசியில் பெருஞ் சண்டையாகி விட்டது.
இருவரும் கத்தியெடுத்து ஒருவரோடொருவர் பலமாக சண்டை போட்டார்கள். இருவரும் பலத்த
காயமடைந்து கீழே விழுந்தார்கள். அப்போது முதல் நண்பன் சொன்னான் - 'ஐயோ! டாஸோவுக்காக
நான் உயிர் விடுகிறேன். ஆனால் அவன் புஸ்தகத்தில் ஒரு வரி கூடப் படித்ததில்லை.!' என்றான்.
இரண்டாவது நண்பன் சொன்னான் -'அட கர்மமே! நானும் அரிஸ்டோ வின் நூலில் ஒன்று கூட
படித்தது கிடையாது! இதற்காகவா நாம் சண்டை போட்டோ ம்?' என்றான். இப்படித்தான் சாதாரண
ஜனங்களாகிய நாம் சண்டை போட்டுக்கொண்டு சாகிறோம்.
-- ஏட்டிக்குப் போட்டி

தேவன் எழுத்துக்கள்....
..... இந்தக்காலத்தில் குழந்தைகள் எல்லாம் வேறு மாதிரி இருக்கின்றன. எல்லாக் குழந்தைகளும் இப்போது
'கௌன்' போட்டுக்கொள்கின்றன. தலைமயிர், பேச்சு, உடை ஒன்றாவது அவை ஆணா பெண்ணா
வென்று ஊர்ஜிதம் செய்ய இடம் கொடுக்க மாட்டேனென்கிறது. நாமாக ஊகிக்கும் ஒவ்வொரு
சமயமும் தெய்வ சங்கல்பத்தால் நாம் தவறுதலாகத்தான் ஊகிக்கிறோம். ஆண் குழந்தையை 'அவள்'
என்று அழைக்கும் அனியாயத்தையும் பெண் குழந்தையை 'அவன்' என்றழைக்கும் அக்கிரமத்தையும்,
சம்பந்தப்பட்ட குழந்தையின் பெற்றோர்களும் உற்றார்களும் கேட்டு, நம்மை ஒரு மடையனுடன்
போக்கிரியும் கூட என்றே மதிப்பார்கள். இதற்குச் சரியான உபாயம் என்னவென்றால் 'கண்ணு' என்று
அழைப்பதுதான். கண்ணு என்கிற பதம் குழந்தை ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் வெகு
அழகாய்ப் பொருந்துகிறது. மேலும் தாயாருக்குத் திருப்தியை அளிக்கும். எக்காரணத்தை முன்னிட்டும்
'குழந்தைக்கு அப்பா மூஞ்சியை உரித்து வைத்திருக்கு' என்று சொல்லத் தவறக் கூடாது. இந்த
வார்த்தையைப் போட்டு விட்டீர்களோ பெற்றோர் உம்மை சரணாகதி அடைந்து விடுவார்கள். இது
விஷயமாக தைரியமாக சத்தியம் கூட செய்யலாம். ஏனெனில் குழந்தையின் முகம் அதன் தகப்பனார்
சாயலாக, ஏன் , உலகத்தில் எந்தப் பொருளின் சாயலாகவுமா இருக்கிறது? அது வெறும் 'கொள கொளா'
தானே இப்போது?
---- குழந்தைகள்

0 Comments: