பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, April 09, 2004

கூட்டு வலைப்பதிவு - டாப் 10+5 கேள்வி பதில்கள்.

இது என்ன புதுசா புளிப்பு கூட்டு மாதிரி என்று படித்தால் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்தது.
(கொஞ்சம் பயமாகவும் இருந்தது :-). இதோ எனது டாப் 10+5 கேள்வி பதில்கள்.

1. கூட்டு வலைப்பதிவு என்றால் என்ன ?
இது ஒரு விதமான "Content Management System", தமிழில் "தகவல் களஞ்சியம்".
ஒருவர் எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். History, Geography, Science,
Social Studies போன்ற ஸ்கூல் பாடம், லினக்ஸ், மைக்ரோ சாப்ட் எது வேண்டுமானாலும்.
( இலக்கியம், சினிமா, கதை, கவிதை - 2031 டிசம்பர் 31ஆம் தேதி வரைக்கும் தள்ளிப்போடவும்).
நீங்கள் எழுதியதை பலர் திருத்தி அமைக்கலாம், சண்டைப்போடாமல்.

2. கூட்டு வலைப்பதிவு எவ்வளவு பேர் கொண்டு ஆரம்பிக்கலாம் ?
ஆரம்பிப்பதற்கு இரண்டு பேர் போதும். நிறைய பேர் இருந்தால் கலீல் கிப்ரான் கவிதைதான்
நினைவுக்கு வருகிறது.(தமிழில் மீனாக்ஸ்).

3. இதை எப்படி அமைக்கலாம் ?
ஒரு எட்டு விக்கிபீடியா , போஸ்ட்நியூக் சென்று பார்க்கவும். பிடித்திருந்தால் உடனே ஆரம்பித்துவிடலாம்.

4. இதில் எது சிறந்தது ?
A.R.ரஹ்மான் கீபோர்டை எடுத்து நீங்கள் வாசித்தால் A.R.ரஹ்மான் ஆகிவிட முடியுமா ?
அதே போல்தான் இதுவும். நம்ம கிட்ட சரக்கு இருந்தால் முன்னேறலாம். வல்லவனுக்கு புல்லும்
ஆயுதம்.

5. அப்படி என்றால் வலைப்பதிவை உபயோகப் படுத்தலாமா ?
படுத்தலாம். அதை விட்டுவிடுங்கள், அது ஹைக்கூக்கு எழுத இருக்கட்டும்.

6. முதலில் எதைப்பற்றி எழுதலாம் ? ஒரு நாளைக்கு எவ்வளவு எழுதலாம் ?
எதைப்பற்றி வேண்டுமானாலும். கூட்டு வலைப்பதிவு பற்றி கூட
ஆரம்பிக்கலாம். HowStuffworks.com ஒருதரம் போய் பாருங்க.
ஒரு நாளைக்கு எவ்வளவு வேண்டுமானலும் எழுதலாம். கணக்கு கிடையாது.
உங்கள் துறை சார்ந்ததாக இருந்தால் நல்லது. மடியாக ஒரு பாரா எழுதிப் பாருங்களேன்.

7. எல்லாவற்றையும் தமிழ் படுத்தலாமா ?
முதலில் ஆரம்பிங்க சார். நல்ல தரமான கட்டுரைகள் குடுங்க, பிறகு அதுவே வளரும்.

8. இது யாருக்கு உபயோகப்படும் ?
உங்களுக்கு, பக்கத்து வீட்டு குழந்தைக்கு, மீண்டும் பிறக்கப்போகும் உங்கள் கொள்ளு தாத்தாவுக்கு.

9. இதிலும் Moderator, Owner உண்டா ?
நீங்கள் எழுதும் கட்டுரைக்கு நீங்கள் தான் owner. கவலைப்படாதீங்க.

10. சுரதா, பத்ரி, வெங்கட், காசி ..... போன்ற பெரியவங்க இருக்கும் இடத்தில்
என்னை போல் சின்ன பசங்க போகலாமா ?

பயப்படாதீங்க சார், அவர்கள் நல்லவர்கள்.

11. இதைப்பற்றி ஒரு Press Release குடுக்கலாமா ?
இதுதானே வேணாங்கர்து, எதையாவது சாதித்தால் அவர்களே நம்மை தேடி வருவார்கள்.

12. நான் அறிவியல், தொழில்நுட்பம் பற்றி எழுதலாம் என்று இருக்கேன் எந்த
கலைச் சொல்லாக்கத்தை உபயோகப்படுத்தலாம் ?

தயவு செய்து இதில் இருந்து சண்டையை ஆரம்பிக்காதீர்கள். எதாவது ஒரு தக்க
வார்த்தையை உபயோயுங்கள் நாளடைவில் நல்ல வார்த்தை உயிரோடு இருக்கும்.
உதாரணம்: வலைப்பூக்கள், வலைக்குறிப்பு, வலைப்பதிவு; தற்போது வலைப்பதிவு
உயிருடன் இருக்கிறது.

13. இன்னும் எனக்கு முழுமையாக விளங்கவில்லை
எனக்கும் தான். ஏதாவது ஒரு குழுவில் சேருங்கள். உங்களுக்கு உதவ நிறைய பேர்
காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

14. இது தமிழர்களுக்கு ஒத்துவருமா ?
எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு, மரத்தடியில் காப்பி குடித்தவர்கள் டாக்டரிடம்
பரிசோதனை செய்து கொண்டு வருவது உத்தமம்.

15. கூட்டு வலைப்பதிவுக்கு ஒரு Yahoo Group ஆரம்பிக்கலாமா ?
நான் கிளம்பறேன், அப்பறம் பார்க்கலாம்.

0 Comments: