முந்தாநாள் இட்லிவடையில் வந்த (என் நண்பனின்) கிறுக்கெழுத்துக்கு இன்று வரை யாரும் சரியான விடை அனுப்பவில்லை.
அதனால் கிறுக்கெழுத்து போட்டி(?) இந்த வாரம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
(அப்பாடா இன்று ஒரு போஸ்ட் செய்தாச்சு :-)
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
Friday, April 30, 2004
கிறுக்கெழுத்து
Posted by IdlyVadai at 4/30/2004 12:21:00 PM 0 comments
Wednesday, April 28, 2004
X-Word
குறுக்கெழுத்து.
இன்று பலபேர், காலை பேப்பர் வந்தவுடன் பல மணி நேரம் செலவழிப்பது, CrossWord எனப்படும்
குறுக்கெழுத்து பகுதியில் தான். சிலர் ஆபிஸில், சிலர் பஸ்ஸில் சிலர் ரயிலில், சிலர் ரெஸ்ட் ரூமில்.
Hindu முதல் தமிழ் வாரமலர் வரை இன்று குறுக்கெழுத்து பலரை வசிகரித்துள்ளது என்பது உண்மை.
Hinduவில் வரும் குறுக்கெழுத்து கொஞ்சம் கஷ்டம், விஷயம் தெரிந்து இருக்க வேண்டும்.
வாரமலரில் வருவதற்கு கொஞ்சம் பொது அறிவு இருக்க வேண்டும் - "கடைசியாக
அந்த இரண்டு எழுத்து நடிகை யாரை மணந்தார்" என்பதை போல்.
பொழுது போக்காகவும், ஒரு வித புதிர் (puzzle) போலவும் இருப்பதனால் இதற்கு கூடுதல் மவுசு.
மேலும் படிக்கும் முன் ஒரு சிறு கதை சுருக்கம்..
New York World பத்திரிக்கை ஆசிரியர் அதில் வரும் 8 பக்க (கிறுஸ்துமஸ் ஸ்பெஷல்) நகைச்சுவை
பகுதிக்கு Arthur Wynne என்னும் பத்திரிக்கையாளரை ஒரு புதுமையான வார்த்தை வளையாட்டை
வடிவமைக்க சொன்னார். அவருக்கு தான் குழந்தையில் விளையாடிய Magic Square விளையாட்டு
ஞாபகத்துக்கு வந்தது. (அத்தாங்க நம்ம
சிவாஜி
வாயிலே
ஜிலேபீ மாதிரி)
பெரிசா புதுமையா பண்ணா என்ன என்று தோன்றிற்று. டைமண்ட் வடிவத்தில் கொஞ்சம் பெரிசா
வடிவமைத்தார். ஒவ்வொறு வார்த்தைக்கும் ஒரு சுலபமான குறிப்பு(clue) தந்தார்.
அது டிசம்பர் 21, 1913ல் New York World ஞாயிற்றுக்கிழமை பதிப்பில் வெளிவந்தது.
இதுவே உலகின் முதல் குறுக்கெழுத்து !.
அதன் வடிவம் இங்கே
Fill in the small squares with words which agree with the following definitions.
2-3. What bargain hunters enjoy. | 6-22. What we all should be.
4-5. A written acknowledgment. | 4-26. A day dream.
6-7. Such and nothing more. | 2-11. A talon.
10-11. A bird. | 19-28 A pigeon.
14-15. Opposed to less. | F-7. Part of your head.
18-19. What this puzzle is. | 23.30. A river in Russia.
22-23. An animal of prey. | 1-32. To govern.
26-27. The close of a day. | 33-34. An aromatic plant.
28-29. To elude. | N-8. A fist.
30-31. The plural of is. | 24-31. To agree with.
8-9. To cultivate. | 3-12. Part of a ship.
12-13. A bar of wood or iron. | 20-29. One.
16-17. What artists learn to do. | 5-27. Exchanging.
20-21. Fastened.
24-25. Found on the seashore.
10-18. The fibre of the gomuti palm.
விடை:
பல உள்ளங்களை வெற்றி கொண்ட அது, இன்றும் பல பத்திரிக்கைகளில் வந்து கொண்டு இருக்கிறது.
பின்னர் AW குறுக்கெழுத்தை பல வடிவங்களில் முயற்சி செய்தார்(வட்ட வடிவமும் அதில் அடங்கும்),
பின்னர் (rectangle)நீள் சதுர வடிவம் நிலைத்தது.
1920ல் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் குறுக்கெழுத்து பரவ தொடங்கியது. பிரபலமடைந்த
குறுக்கெழுத்தின் மேல் பாடல்கள் எழுதப்பட்டது, பாடப்பட்டது. இவ்வளவு பிரபலம் அடைந்த குறுக்கெழுத்தை
New York Times நாளிதழ் மட்டும் நிராகரித்தது. பதினெட்டு வருடம் கழித்து, 1950ஆம் ஆண்டு
செப்டெம்பர் மாதம் New York Times ஒரு குறுக்கெழுத்தை வெளியிட்டது.
அன்று முதல் New York Times குறுக்கெழுத்துக்கு ஒரு 'Standard of Excellence' ஆக அது
விளங்குகிறது. இன்று வரும் குறுக்கெழுத்து குறிப்பு (clues) , சிலெடை, slang, விடுகதை போன்று பல
வடிவங்களில் வருகிறது.
New York Times குறுக்கெழுத்தாசிரியர் Will Shortz, பல புதுமைகள் செய்தார்
* பில் கிளிண்டனை ஒரு முறை பேட்டி எடுக்க சென்ற போது ஒரு ஸ்பெஷல்
குறுக்கெழுத்தையும் வடிவமைத்து எடுத்துச்சென்றார். கிளிண்டன் அதை 6 நிமிடம், 54 வினாடிகளில் முடித்தார்.
* அமெரிக்க தேர்தல் நேரத்தில், குறுக்கெழுத்து நடுவில் ஒரு வார்த்தைக்கு நாளைய தலைப்பு செய்தி
என்று Clue குடுத்தார்.அதில் அப்போது போட்டியிட்ட Clinton, Bob Dole இரண்டு பேர் பெயரும் அதில்
பெருந்தும் படி செய்தார்.
* 1995 பாட்மேன் ஃபார்எவர்(Batman forever) திரைபடத்திற்கு Riddler புதிர் எழுதினார்.
* உலகில் Enigmatologyயில் டிகிரி வாங்கியிருக்கும் ஒரே நபர் இவர்தான்.
( Enigmatology - noun. The study of puzzles—including word puzzles, math puzzles, and logic puzzles—and puzzle construction)
குறுக்கெழுத்து முதலில் Magic Squareலில் இருந்து வந்தது, ரோம்மில் தங்களின் பாத்திரங்கள், கதவு முதலிய
இடங்களில்
SATOR
AREPO
TENET
OPERA
ROTAS
இதை பொறித்து வைத்துள்ளார்கள். அதன் அர்த்தம் -"The Creator (or Savior) holds the working
of the spheres in his hands". இதனால் நன்மை பயக்கும் என்று அவர்களுக்கு ஒரு
நம்பிக்கை (நம்ம திருஷ்டி வினாயகர், குமுதம் பக்தியில் குடுக்கும் ஸ்டார் பொறிக்கப்பட்ட
தகடு போன்றவை!).
உலகின் பெரிய குறுக்கெழுத்து 1982 ஆம் ஆண்டு Robert என்பவரால் கனடா நாட்டில் வெளிவந்தது.
இடம்-வலம் 12,489 குறுப்புக்களும், மேலிருந்து கீழ் 13,125 குறிப்புக்களும் கொண்டது. இன்னுமும்
குறுக்கெழுத்து ரசிகர்கள் அதில் இருக்கும் 82,951 Squaresக்கு விடை கண்டுபிடித்துக் கொண்டு
இருக்கிறார்கள்!.
References :
1. The New Webster's Crossword Puzzle Dictionary
2. http://thinks.com/crosswords/first1.htm
3. http://www.fun-with-words.com/first_crossword.html
and other internet references.
போன வாரம் என் நண்பர் தமிழில் ஒரு குறுக்கெழுத்தை பூர்த்தி செய்து கொண்டிருந்தார், எவ்வளவு கேட்டும் தர
மறுத்துவிட்டார். அவருக்கு தெரியாமல் அதை எடுத்து வந்துவிட்டேன். அது இங்கே...
இரண்டு நாள் கழித்து என் நண்பர் வீட்டுக்கு செல்லும் போது விடைகளை எடுத்து வந்து தருகிறேன்.
அது வரையில் நீங்களே முயற்சி செய்யலாம். கல்யாணம் ஆகியிருந்தால் சுலபம்.
இதன் பெயர் - குறுக்கெழுத்து இல்லை கிறுக்கெழுத்து.
மேலிருந்து-கீழ்
1. யாராவது பார்க்க போகிறார்கள் என்று எச்சரிப்பது.(5)
2. சரியான காரியத்தைத் தப்பான மனிதர்களிடம் செய்வது.(7)
3. கோர்ட் ஆர்டரை சட்டப்படி மீறுவது.(4)
4. லீவு போடுவதற்கு சொல்லும் காரணம்.(3)
6. தொந்திரவு இல்லா தூக்கம், மெஜாரிட்டியுடன் இணைவது.(4)
9. வீட்டுக்கு வீடு இருப்பது (2)
11. நிஜமான விமர்சனம்.(4)
12. லேட்டாகப் போகும் போது சீக்கிரமும், சீக்கிரமாகப் போகும்போது லேட்டாகவும் வருபவர்.(7)
13. இரண்டு பக்கமும் வால் உள்ள ஒரு மிருகம்.(2)
14. போனாவால் எழுதும் இயந்திரம். (4)
15. குற்றவாளிகள் அறிந்து வைத்திருப்பது.(8)
18. பவர்கட், வெய்யில் காலம், மற்றும் இரவு நேரங்களில் உண்டாவது(4)
19. மலையாளப் பட போஸ்டர்களால் எற்படுவது.(4)
22. மலையாளப் பட டைட்டில்களில் அவசியம் வர வேண்டியது.(4)
23. சிறு நீர் கழிக்குமிடம்.(9)
26. பாக்கேட் கொலைகாரன்(4)
27. காதலித்த பெண்ணையே மணப்பவன், வேகமாக ஓடுபவர்.(2)
28. மனைவியை அடக்க முடியாது என்கிற கட்டத்தை அடைந்தவன்(2)
29. காக்கைகளின் டாய்லெட்(2)
30. கல் தடுக்கி கீழே விழக் காரணமாயிருப்பது.(5)
31. எல்லோரும் ஒரு 'பிடி பிடிக்க' காத்துக்கொண்டு இருக்கும் ஒரு டிபன் வகை.(5)
இடமிருந்து-வலம்
2. மனைவி இல்லாத நேரங்களில் கணவனிடம் தோன்றுவது.(5)
5. லட்சக்கணக்கான மக்கள் தனிமையில் வாழும் இடம்.(4)
6. ஆபாசமான குழந்தை.(4)
7. நடிகைகள் உடை விஷயத்தில் அவசியம் பின் பற்ற வேண்டியது.(5)
8. வயதான மனைவியை விரும்புபவர்.(13)
10. திருட்டு நடக்கும் போது மட்டும் தூங்குபவர்.(5)
16. மாட்டுத் தீவனம்.(4)
17. தமிழ் சினிமாவுக்குத் தேவையில்லாதது.(3)
19. தொழிலில் தோல்வி அடைந்தவர்.(6)
20. நம்பிக்கையில்லாத விஷயத்தில் நம்பிக்கை வைத்திருப்பவர்.(5)
21. தப்புக்களை மறைக்கும் புத்தகம்.(5)
23. நாகரிகமாகக் கொள்ளையடிக்கும் இடம்.(5)
24. 'பந்த்'தின் போது மக்கள் செய்வது.(6)
25. உங்களை பற்றி நன்றாக அறிந்திருந்தும் இன்னும் நண்பனாக இருப்பவர்.(7)
26. அழகான பெண்ணுக்குத் தேவையில்லாதது.(4)
27. ஹாலிவுட் நடிகர் நடிகைகளின் உதட்டில் இருப்பது.(3)
Posted by IdlyVadai at 4/28/2004 12:11:00 PM 1 comments
Monday, April 26, 2004
இரண்டு டஜன் தனி நபர் விமர்சனம்.
தனி நபர் விமர்சனத்தின் தாளாளர் கருணாநிதி!
டாக்டர் சி.ஆர்.அசோகன், ஆவடி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: "சோனியா காந்தியை வெளிநாட்டவர் என்று பா.ஜ.,வினர் தனிநபர் விமர்சனம் பண்ணுவது வேதனையளிக்கிறது' என்று கருணாநிதி கண்ணீர் வடிக்கிறார். "தமிழக அரசியலில் தனி நபர் விமர்சனத்தை ஆரம்பித்து வைத்தவரே கருணாநிதி தான். இந்திராகாந்தியை, "கிராப் வெட்டிய காஷ்மீர் பாப்பாத்தி' என்றும், பெருந்தலைவர் காமராஜரை, "கோமாளி ராஜா' என்றும் கூறியவர் தான் கருணாநிதி' என்று சரிக்குச் சரியாக அன்று வாழப்பாடியார் சாட்டையடி கொடுத்தது போல், இன்று சுடச் சுட கருணாநிதிக்கு பதில் கூறுவதில், பா.ஜ., பொதுச் செயலாளர் எச்.ராஜா நூற்றுக்கு நூறு விளங்குகிறார்.
தமிழக அரசியலில் அநாகரிகத்தை அரங்கேற்றியவரே கருணாநிதி தான். "தனி நபர் விமர்சனம்' தழைத்தோங்க, பிள்ளையார் சுழி போட்டவரும் சாட்சாத் கருணாநிதி தான். தனி நபர் விமர்சனம் என்றால் கிஸ்மிஸ் பழம் உண்ட உவகை கொள்வார் கருணாநிதி.
தனி நபர் விமர்சனத்தின் தாளாளர் தான் கருணாநிதி. அப்படி கருணாநிதியால் "தனி நபர் விமர்சனம்' பெற்றவர்களை ரத்தினச் சுருக்கமாக பார்ப்போம். எத்தனையோ பேர் உண்டு. இடப் பற்றாக்குறையால் இரண்டே இரண்டு டஜன் மட்டும் இதோ:
மூதறிஞர் ராஜாஜியை "குல்லுகபட்டர்' (சதிகாரர்) என்றார்; கர்மவீரர் காமராஜரை "அண்டங் காக்கா' என்று அர்ச்சித்தார்; கக்கன்ஜியை "கக்கன் என்ன கொக்கா' என்று நஞ்சைக் கக்கினார்... ஜாம்பவான் பக்தவச்சலனாரை குரங்கு போல் கார்ட்டூன் போட்டார்; வாழப்பாடியாரை "வழிப்போக்கன்' என்றார்; மூப்பனாரை "காவேரி, தென்பெண்ணைப் பாலாறு... மூப்பனார் மூளையில் கோளாறு' என்றார்; எம்.ஜி.ஆரை "மலையாளி, கூத்தாடி, கோமாளி' என்றார்; நாவலரை "நெடுமரம்' என்றார்; நாஞ்சிலாரை "மந்திரக் கோல் மைனர்' என்றார்; ஆர்.வி.,யை "கைபர் கணவாய் வழி வந்தவரே' என்றார்; ஹிந்து பத்திரிகையை "மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு' என்றார்...
துக்ளக் சோவை "சொட்டைத் தலையர், பபூன்' என்றார்; குமுதம் எஸ்.ஏ.பி.,யை "குள்ள நரி' என்றார்; ப.சிதம்பரத்தை "செட்டி நாட்டு சின்னப் பையன், சீமான் வீட்டு கன்றுக் குட்டி' மற்றும் சமீபத்தில் "ஈ, எறும்பு, கொசு' என்றார்; பேராசிரியரை "வெறும் உதவி விரிவுரையாளர் தான்' என்றார்; அரசியல் சட்ட அறிஞர் இரா.செழியனை "ஈனப்பிறவி' என்றார்; வைகோவை "கள்ளத் தோணி, கலிங்கப்பட்டி களிமண்' என்றார்; பா.ஜ.,வை "தீண்டத்தகாத கட்சி' என்றார்...
வாஜ்பாய், அத்வானியை "விஷ ஜந்துக்கள்' என்றார்; பா.ஜ., தலைவர்களை "பண்டாரம், பரதேசி, காவி உடை, கமண்டலம், ஆக்டோபஸ்' என்றார்; பா.ஜ., பொதுச் செயலாளர் எச்.ராஜாவை "கூஜா' என்றார்; முதல்வர் ஜெ.,யை "பாப்பாத்தி, பத்ரகாளி, காந்தாரி' என்றார்; ஒட்டு மொத்த இந்துக்களை "திருடன்' என்று திட்டினார்; இரண்டு கோடி தமிழக வாக்காளர்களை "பருத்தி விதை, தவிடு, புண்ணாக்கு தின்னும் மாக்கள், வாழை மட்டைகள், மடச் சாம்பிராணிகள், புத்திகெட்ட ஜென்மங்கள், சோற்றால் அடித்த பிண்டங்கள்' என்றார்.
இப்படி நா கூசாமல் குழாயடிச் சண்டையைப் போல் தனி நபர் அர்ச்சனை செய்து, தமிழக அரசியலை தரங்கெட்டுப் போக வழி அமைத்த கருணாநிதி இன்று புத்தர் போல் "தனி நபர் விமர்சனம் கூடாது' என்று போதிப்பது வேடிக்கையாக உள்ளது.
இன்று ரஜினி பா.ஜ., அ.தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு அளித்து "வாய்ஸ்' கொடுத்துள்ளதால், "மராட்டியரே, கர்நாடக வழி வந்தவரே, கண்டக்டரே, பரட்டையரே, கோமாளியே, கூத்தாடியே...' என்று ரஜினியை தேர்தலுக்குள் கருணாநிதி புகழ்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இது எல்லாமே இரண்டு கோடி தமிழக வாக்காளர்களுக்கு மிக மிக நன்றாகத் தெரியும் என்பது தான் உண்மையிலும் உண்மை.
நன்றி தினமலர் 16-04-2004.
Posted by IdlyVadai at 4/26/2004 02:49:00 PM 1 comments
Friday, April 23, 2004
அபிமானமும் அன்னவஸ்திரமும்
30 நயாபைசா நூல்கள் என்று சில புத்தகங்கள் சமிபத்தில் கிடைத்தது
( அமுத நிலையம் Pvt.Ltd, த.பெட்டி 1457, ph: 72574, தேனாம் பேட்டை,
சென்னை-18, இரண்டாம் பதிப்பு-1945, விலை 30 நயாபைசா).
1708 முதல் 1925 ஆண்டுகளில் நடந்த பல்வேறு சம்பவங்களின் திரட்டு. பெரும்பாலும்
கர்நாடக இசை சம்பந்தமாக பல தகவல்கள். அதில் இருந்து ஒன்று அட்சய திருதியை முன்னிட்டு.
என்ன புரியவில்லையா ? அதாங்க "Old is Gold" என்று சொல்வார்களே !.
*
சங்கீத சாகத்திய மேதைகள் ராமநாதபுரம் ஸ்ரீநிவாச ஐயங்கார் மைசூர் வாசுதேவாச்சார்
முதலியவர்களின் குருவான பட்டணம் சுப்பிரமணிய ஐயர் அவர்கள் ஓர் இடத்தில் கச்சேரி
செய்து கொண்டிருந்தார். தெய்வ அருள் பெற்ற வாக்கேயகாரராண அவர், தாம் இயற்றிய
கீர்த்தனைகளின் ஒன்றான பேகட ராகத்தில் அமைந்த 'அபிமான மென்னடு' என்ற கீர்த்தனையைக்
கச்சேரி நடுவே பாடினார்.
கீர்ததனம் முடிந்தது அந்த இடைவெளியில் அவையின் முன்னணியில் இருந்த ஒரு ரசிகர் ஒருவர்
சட்டென்று ஸ்வரம் பாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். வித்துவான் அவரை நோக்கி,
"ஸ்வரம் பாடவேண்டுமா ? அபிமானத்திற்குப் பாடவா, அன்னவஸ்திரத்திற்குப் பாடவா ?
என்று புன் முறுவலுடன் கேட்கவே அவையில் கொல் லென்று சிரிப்பு ஒலி எழுந்தது.
அந்த பாடலின் பல்லவி எடுப்பில் 'அபிமானம்' என்றும் சரணத்தில் அன்னவஸ்திரம் என்றும்
இருப்பதை வைத்து அவர் சிலேடையாக இப்படிக் கேட்டதை ரசித்து சிரித்தார்கள். அந்த
சிரிப்பொலி அடங்குவதற்குள் வித்துவான் ஸ்வரம் பாட ஆரம்பித்து விட்டார்.
Posted by IdlyVadai at 4/23/2004 02:58:00 PM 0 comments
Thursday, April 22, 2004
'நான்' வெஜிடேரியன்!.
'நான்' வெஜிடேரியன்!.
என் நண்பர் ஒருவர் 'நான் ஒரு வெஜிடேரியன், ஆனால் பிரட் ஆம்லட் சாப்பிடுவேன்' என்பார்.
அது எப்படி ? என்றால் 'நீ மட்டும் என்ன ஒழுங்கு ஃபாரின் சாக்லேட், கேக் எல்லாம் சாப்பிடுகிறாய்'
என்று மடக்குவார்.
வெஜ் - நான்-வெஜ் சாப்பிட பல காரணங்கள் இருக்கிறது - மதம், குடும்ப வழக்கம், personal preference,
நாக்கு(சிக்கன் இல்லாமல் எனக்கு எதுவும் உள்ளே போகாது),
உடல் ஆரோக்கியம் ( டாக்டர் முட்டை சாப்பிட சொன்னார் ) போன்றவை.
எனக்கு தெரிந்து நிறைய வெஜிடேரியன் வகை இருக்கிறது.
- எல்லாம் சாப்பிடுவேன் என்று சொல்லி, ஒரு ஆனால் போடுவார்கள். என்ன என்று கேட்டால்
பன்னி, முயல் தவிர என்பார்கள்.
- சிலர் வெள்ளிக்கிழமை, அம்மாவாசைக்கு மட்டும் அவற்றுக்கு லீவ் விடுவார்கள்.
- கொல்கத்தாவில் இருப்பவர்கள் மீனை கடல் புஷ்பம் என்று சொல்லி தலையில் வைத்துக்
கொள்ளமாட்டார்கள், சாப்பிடுவார்கள்.
- எந்த வகை மாமிசத்தையும் சாப்பிடமாட்டார்கள் ஆனால் முட்டை மட்டும் ( யாருக்கும்
தெரியாமல் ) சாப்பிடும் அமெரிக்க பிராமணர்கள் (தமிழ் நாட்டிலும் உண்டு) மற்றொரு வகை.
- சிக்கன், முள்ளங்கி சாம்பார் என்றால், சிக்கனை ஒதுக்கி வைத்து முள்ளங்கி சாம்பார் மட்டும்
சாப்பிடுபவர் இன்னொரு வகை.
- பால், தயிர், நெய் என்று இதில் இருக்கும் cholesterolலே எனக்கு போதும்
மற்றது வேண்டாம் என்று பட்டையை கிளப்புகிறவர்கள் இன்னொரு வகை.
- பழத்தை மட்டுமே சாப்பிடுகிறவர்களும் இருக்கிறார்கள் ( சரியான 'பழம்' :-) )
அது சரி வெஜிடேரியன் என்று சொல்லி கொள்பவர்கள் ஷுஸ், செருப்பு பயன்படுத்துவது
இதெல்லாம் .. வெஜிடெரியன் ஷுஸ்
என்று எதாவது இருக்கா ? இருக்கு. விலைதான் கொஞ்சம் ஜாஸ்தி.
நான்-வெஜ் ஆக இருந்தால் என்ன தப்பு ?
- தப்பு செய்கிறவர்கள், குற்றவாளிகள் பெரும்பாலும் நான்-வெஜ் தாங்க! -
விடை திருக்குறளிள் இருக்கு
"தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்."
தன் உடலை வளர்ப்பதற்காக வேறொரு உயிரின் உடலை உணவாக்கிக் கொள்பவர் எப்படிக்
கருணையுள்ளம் கொண்டவராக இருக்க முடியும்.(கலைஞர் உரை)
(புலால் மறுத்தல்-1)
- மற்றொரு காரணம் கொழுப்பு - மாரடைப்பு, கேன்சர் - நான்-வெஜ் ஆசாமிகளுக்கு தான்
அதிகம் வருகிறது. ஒரு வெஜிடேரியன் (நான்-வெஜ்ஜை காட்டிலும்) ஆஸ்பதிரிக்கு 22%
குறைவாக போகிறான்.
- ஒரு சராசரி நான்-வெஜ் சாப்பிடுபவர் தன் வாழ்நாளில் 36 பன்றிகள்(பன்றி சாப்பிடாதவர்கள்
18.5 மாடு), 36 ஆடுகள், 751 கோழிகளுக்கு தங்கள் வயிற்றில் சாமாதி கட்டுகிறார்கள்.
வருடா வருடம் ஒரு பண்டிகைக்கு சென்னை ராயப்பேட்டையில் ஆடுகள் மெஜந்தா வர்ணம்
பூசி டிரஃபிக் ஜாம் ஏற்படுத்தும். அந்த ஆடுகளை உற்று நோக்கினால் அதனுள் ஒரு பயம் தெரியும்.
பண்டிகைக்கு அடுத்த நாள் எதுவுமே இருக்காது.
ஜப்பான், கொரியா, போன்ற நாடுகளில் பாம்பு, நத்தை ஏன் நாயைக் கூட சாப்பிடுகிறார்கள்.
ஐரோப்பாவில்(ஜெர்மனி ?)முதலையை சாப்பிடுகிறார்கள்.
போன மாசம் ஒரு பஃபே பார்டியில் ஒருவர் - 'நான் ஒரு வெஜிடேரியன்' என்றார். ஆனால்
சகட்டுமேனிக்கு எல்லாவற்றையும் ஒரு பிடிபிடித்தார் - கேட்டால் 90km வேகத்துக்கு குறைவாக
ஓடும் எல்லாமே எனக்கு வெஜிடேரியன் தான் என்றார். எடுத்தேன் ஒரு ஓட்டம்!.
References:
http://www.giveusahome.co.uk/articles/vegetarianism.htm
Source of Information: Food for Thought by Dr Vernon Coleman. It is available in libraries, or from bookshops, or post free from European Medical Journal, P O Box 30, Barnstable, Devon EX32 9YU
Posted by IdlyVadai at 4/22/2004 11:08:00 AM 0 comments
Wednesday, April 21, 2004
பொடா பொடா புண்ணாக்கு, போடாதே தப்புக்கணக்கு
பிரபு ராஜதுரை எழுதிய பொடாவுக்கு தடா?
சில நாட்களுக்கு முன்னர் அருண் வைத்யநாதன் என்பவர் 'வைகோ வழக்கில்' மறு ஆய்வுக் குழுமத்தின் (Review Committee) தீர்ப்பினை பற்றி தனது வலைப்பதிவில் குறிப்பிடுகையில் 'பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் வைகோவே சட்டத்தை மீறலாமா?' என கேள்வி எழுப்பியிருந்தார். எதிர்பார்த்தது போலவே அவர்
எழுப்பிய கேள்விக்கு சாதகமாக எதிர்வினைகள் இல்லை. ஆனாலும் மனிதர் அவரை ஆதரிக்க கூடிய ஒருவர் கூட
இல்லையா என்று புலம்பியிருந்தார். அதன் பலனோ என்னவோ, 'இட்லி வடை' என்ற வலைப்பதிவாளர் பொடா
சட்டம் முதல் பத்திரிக்கைச் செய்திகள் வரை பலவற்றை ஆதாரக் குறிப்புகளாக காட்டி 'மனித உரிமைகளை
எல்லாம் தூர வைத்து விட்டு தீவிரவாதிகளை மூட்டைப் பூச்சி நசுக்குவது போல நசுக்க வேண்டும்' என்று பொரி
ந்து தள்ளியிருந்தார். இயல்பாக நகைச்சுவை ததும்பும் அவரது பதிவில் 'மறுஆய்வுக் குழுமத்தின் தீர்ப்பு
மட்டுமே பெரிய நகைச்சுவை' எனக்குறிப்பிட்டு பின்னர் சேரியமாகவே சொல்கிறேன் என்று தனது கருத்துகளை
எழுதியிருந்தார். வாசகர்களின் எதிர்வினைகளும் அவர் எழுதிய அதே வேகத்தோடு 'இட்லி சட்னியாயிரும்'
என்பது வரை இருக்க 'ஒரே திட்டு' என்று எதிர்வினைகளுக்கு தலைப்பே வைத்து விட்டார்.
இரு வலைப்பதிவுகளையும் படித்த பின்னர் எனக்கு நிலை கொள்ளவில்லை, உடனடியாக பொடா சட்டத்தை தெரி
ந்து கொள்ள வேண்டுமென்று. பொதுவாக, கிரிமினல்களை விட கிரிமினல் சட்டம் அருகே போக எனக்கு
தயக்கம் இருப்பினும், வலைப்பதிவாளர்கள் ஏற்படுத்திய ஆர்வம் 'பொடா சட்டத்தை' தேடிப் படிக்க வைத்தது.
வைக்கோ எவ்விதத்தில் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்தினை செய்தார் என்பதும், குழுமத்தின் தீர்ப்பு
என்னவென்பதும் நான் அறியேன் என்றாலும் அறிந்தமட்டிலும் சிலவற்றை பகிர்ந்து கொள்கிறேன்.
'அரசியல் தலைவராக இருக்கும் வைகோவே சட்டத்தை மீறலாமா?' என்ற அருணின் சந்தேகம் பலருக்கும்
எழுவது இயல்பு. ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். 'தான் சட்டத்தை மீறியதாக' வைகோ நிச்சயம் கூறியி
ருக்க முடியாது. இந்நிலையில் அவரது செயல் சட்டத்தை மீறியிருப்பதாக நீதிமன்றம்தான் தீர்க்க வேண்டும்.
மேலும், நீதிமன்றம் தீர்மானம் செய்யுமுன்னே நம்மால் தீர்ப்பு கூற முடியுமென்றால் நீதிமன்றங்களில் வழக்கு
எதற்கு? நேரிடையாக தண்டனை கொடுத்து விடலாமே. பொடா சிறப்பு நீதிபதி மாவட்ட நீதிபதி தகுதியி
ல் இருப்பவர். வைகோவின் செயல் சட்டத்தை மீறவில்லை என்று கூறியிருக்கும் குழுமத்தின் தலைவர் உச்ச நீதி
மன்ற நீதிபதியாக இருந்தவர். எனவே, வைகோ சட்டத்தை மீறியிருக்கிறார் என்ற குற்றச்சாட்டு தற்பொழுது
நியாயமில்லாதது. "பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பது குற்றமெனில், ஆதரிப்பதாக
கூறும் அவர் குற்றவாளியில்லையா?" என்ற பொதுவான கேள்வி பத்திரிக்கை செய்திகளை வைத்து எழுவது என்பது
என் அபிப்பிராயம்.
பொடா சட்டத்தினை படித்த நான் வைகோ, பொடா சட்டத்தின் பிரிவு 21(1)(அ) பிரிவின் மீது
குற்றம்சாட்டப்பட்டார் எனறே நினைத்தேன். 'இட்லி வடை' தனது ஆதராக் குறிப்பிலும் இந்தப் பிரிவினையே
குறிப்பிடுகிறார். சரி, இந்தப் பிரிவு கூறுவது என்ன?
"A person commits an offence if he invites support for a terrorist
organisation" என்பதுதான். கவனிக்கவும் இங்கு குற்றமாக கூறப்படுவது ஆதரவு தெரிவிப்பதை அல்ல.
ஆதரவு கோருவதை. பொடா சட்டம் முழுவதும் நான் படித்த வரையில் எங்குமே பயங்கரவாத இயக்கத்துக்கு
ஆதரவு தெரிப்பது குற்றம் என கூறப்படவேயில்லை. "உங்கள் வாக்குகளை பாஜாகாவுக்கு போடுங்கள்" என்று
கூறாமல் ரஜினி "என் ஓட்டு பாஜாகாவுக்கு" என்று கூறியதன் வித்தியாசம் புரிந்தால் நான் இங்கு கூற வி
ரும்பும் வித்தியாசமும் புரியும்.
சரி, அடுத்த பிரிவான 22ம் பிரிவு இந்த வித்தியாசத்தினை தெளிவாக்க உதவும். இந்தப் பிரிவு
பயங்கரவாத இயக்கங்களுக்கு பொருளுதவி செய்வதைப் பொறுத்தது. பிரிவு 22(1)(அ) கூறுவது என்ன? "A
person commits an offence if he invites another to provide money"
இதற்கு அர்த்தம் பணத்தினை கோருவது என்பதை நான் கூற வேண்டியதில்லை. அடுத்த உப பிரிவு 22(2)
(அ) "A person commits an offence if he receives money or other property"
இதற்கு அர்த்தம் பணம் பெறுவது குற்றம். அடுத்த உப பிரிவு 22(3)(அ) முக்கியமானது. "A person
commits an offenc if he provides money or other property" இது பணம் கொடுப்பது.
ஆக, 22ல் மிக தெளிவாக பணத்தினை கோருவது, பெறுவது, அளிப்பது என்று எவ்வித சந்தேகத்திற்கும் இடமி
ல்லாமல் பிரித்த சட்ட வரைவாளர்கள் 21ம் பிரிவில் கோட்டை விடுவார்களா?
எனது கருத்து மயிரினைப் பிளப்பது போன்ற மிக நுட்பமானது (hyper technical) என்று தள்ள முடியாது.
ஏனெனில், குற்றவியல் வழக்குகளைப் பொறுத்தவரை இதுதான் குற்றம் என தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும்.
எனவே 'இட்லி வடை' சுட்டிக்காட்டும் கண்ணப்பன் 25 முறை என்ன 25ஆயிரம் முறை கூட 'நான் இன்னாரை ஆதரி
க்கிறேன்' என்று கூறிவிட்டு நான் குற்றமே செய்யவில்லை என வாதிடலாம். எனது கருத்தினை வைத்து, 'நீ
இன்னருக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவிக்க முடியுமா?' என்று கேட்டுவிடாதீர்கள். எனது மருந்தினை என்னி
டமே சோதிக்க இயலாது. நான் கூற வருவது இவ்விதமெல்லாம் வாதிட வழி இருக்கிறது. எனவே 'இட்லி
வடை' கூறியதைப் போல வைகோ விடுவிக்கப்பட்டதில் நகைச்சுவையாக ஏதும் இருக்க வழியில்லை.
வேடிக்கை என்னவென்றால், இக்கட்டுரை எழுதுமுன்னர் செய்திகளை மேய்கையில்தான் வைகோ கைது செய்யப்பட்டது
பிரிவு 21(3)ன் படி என்ற விபரம் தெரியவந்தது. இந்தப் பிரிவு என்ன கூறுகிறது? "A person commits
and offence if he addresses a meeting for the purpose of encouraging
support for a terrorist organisation or to further its activities" மீண்டும்
ஒருமுறை படித்தால் இந்தப் பிரிவு எவ்வளவு குழப்பமாக (ambiguous) எழுதப்பட்டிருக்கிறது என்பது புரியும்.
இதில் கூறப்படுவது ஆதரவு திரட்டுவதற்காக கூட்டப்படும் கூட்டமா? இல்லை எந்த கூட்டத்திலும் ஆதரிக்கும்
நோக்கத்துடன் பேசப்படும் பேச்சா? addresses a meeting என்பதற்குப் பிறகு arranged என்ற
வார்த்தை இருந்திருந்தால் குழப்பமில்லாமல் இருந்திருக்கும். பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரது திரட்டும்
நோக்கத்துடன் ஒரு கூட்டம் கூட்டப்படுகிறது. அங்கு வைகோ மட்டுமல்லாது 'அண்ணன் வருகிறார். அமைதியாக
இருங்கள்' என்று கூட்டத்துக்கு அறிவிக்கும் எடுபிடி வரை அனைவரும் கைது செய்யப்பட வேண்டியவர்களே! சரி,
எந்த ஒரு கூட்டத்திலும் பயங்கரவாத இயக்கத்தினை ஆதரிக்க ஊக்குவிக்கும் நோக்கத்துடன் பேசுவது குற்றம்
என்று வைத்துக் கொண்டாலும், இந்தப் பிரிவின்படியும் ஆதரிப்பது குற்றமாகவில்லை என வாதிட வழி இருக்கி
றது' எனவே வெறுமே ஆதரித்தார் என்று வரும் பத்திரிக்கைச் செய்திகளை வைத்து வைகோ சட்டத்தை மீறி
னார் என்று கூற இயலாது.
இதற்கெல்லாம் முக்கிய காரணம் சமீப காலங்களில் எழுதப்படும் பல சட்டங்கள் போலவே, இந்த பொடா
சட்டமும் மோசமாக வரையப்பட்டிருப்பதுதான். இந்திய தண்டனைச் சட்டம் சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்னர்
எழுதப்பட்டது. மெக்காலே கல்வித்திட்டம் என்று நாம் அடிக்கடி விவாதிக்கும் அதே மெக்காலேவால்
எழுதப்பட்டது. அதன் ஒவ்வொரு பிரிவும் யாதொரு குழப்பமும் இன்றி, சில சமயம் ஒரு கவிதையைப் படிப்பது
போல சிலாகித்து படிக்கும் வண்ணம் இருக்கிறது. ஆனால், சமீப காலங்களில் எழுதப்படும் சட்டங்கள் ஏதோ
ஒருவர் எழுதும் கடிதம் போல எவ்வித கவனமும் இன்றி எழுதப்படுகின்றன. அதனாலேயே சட்டம் இயற்றப்பட்ட பி
ன்னர் எழும் வழக்குகளைப் பொறுத்து சட்டப்பிரிவுகளை அங்கே இங்கே தட்டி மாற்றுவது வழக்கமாகி விட்டது.
முதலில் இந்த "support" என்ற வார்த்தையே மிகவும் பாமரத்தன்மையாக இருக்கிறது. சப்போர்ட் என்றால்
என்ன? என்றும் கூறப்படவில்லை. எனவே இந்த பொதுப்படையான வார்த்தைக்குள் எந்த ஒரு செயலையும் அடக்கிவி
டலாம். இத்தகைய வார்த்தைகள் சட்டத்தினை துஷ்பிரயோகம் செய்ய துணையாக இருக்கும்.
சட்ட வரைவாளர்களின் ஆங்கில அறிவுக் குறைவு மற்றும் அவசர சட்டமாக பிறப்பிக்க வேண்டி வரைவாளர்கள்
மீது அரசு ஏற்படுத்தும் நிர்ப்பந்தமே மோசமான சட்டவரைவுகளுக்கு காரணம். இப்படி மோசமாக ஆங்கிலத்தி
ல் எழுதுவதை விட தாய் மொழியிலேயே சட்டத்தை இயற்றுவது நன்மை பயக்கும் என எண்ணுகிறேன்.
சரி, அதற்கு தனியே ஒரு கட்டுரை எழுதலாம்.
சட்டத்தை மீறுவதைப் பொறுத்து இவ்வளவு கண்டிப்பாக பேசுகிறோமே...முன்பு எம்ஜிர் முதல்வராக இருக்கையில்
மதுரையில் ஒரு மாநாடு நடைபெற்றது. கலைஞர் கருணாநிதி ஏற்படுத்திய தமிழீழ ஆதரவு இயக்கம் (TESO)
மாநாட்டினை ஏற்பாடு செய்த அமைப்பு. மாநாட்டின் பெயர் 'தமீழீழ ஆதரவு மாநாடு'. மாநாட்டில் பணம்
வசூலிக்கப்பட்டு தமிழீழ போராட்டக்குழுக்களுக்கு வழங்கப்பட்டது. அப்போது எம்ஜிருடன் நெருக்கமாக இருந்த வி
டுதலைப்புலிகள் அதை பெற்றுக் கொள்ளவில்லை. பின்னர் அந்தப்பங்கும், சீறீசபாவுக்கு வழங்கப்பட்டது என நி
னைக்கிறேன். மற்ற இரு பெரிய போராளிக்குழுக்களூம் பணம் பெற்றனர். பணம் பெற்ற அனைவருமே யுதப்
போரட்டத்திற்குதான் அதை பயன்படுத்த போகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. மாநாட்டின் சிறப்பு
பேச்சாளர்...நம்ம பிரதமர் வாஜ்பேயி! சரி, இத்ல் என்ன தவறு என்று கேட்கிறீர்களா?
'இந்திய நாட்டுடன் அமைதியான உறவினை கொண்டிருக்கும் எந்த ஒரு நாட்டின் மீது போர்
தொடுக்கும் அல்லது அழிம்பு செய்யும் செயலோ அல்லது அதற்கு உதவி புரிவதோ இந்திய தண்டனை சட்டம் பி
ரிவு 125, 126ன் படி ஏழு ண்டு தண்டனைக்குறிய குற்றம்'
ஏறக்குறைய தமிழ்நாட்டின் மொத்த ஜனத்தொகையையும், முன்னாள் பிரதமர், முதல்வர், ரா பிரிவு அதிகாரி
கள், ஏன் இன்னாள் பிரதமரையும் சேர்த்து உள்ளே போடலாம்.
ஏன் இவ்வாறு ஒரு நாட்டின் பிரதமரில் இருந்து கடைசிக் குடிமகன் வரை சட்டத்தை மீறும் நிலை ஏற்படுகிறது?
ஏன் ஒரு மத்திய அமைச்சரே 'நான் தடை செய்யப்பட்டுள்ள இயக்கத்தினை இருபத்தைந்து முறை ஆதரி
த்துள்ளேன்' என்று கூற தைரியம் கொள்கிறார்? பொருளாதாரத்தின் முக்கியமான கோட்பாடான 'Doctrine
of Diminshing Retrun' என்பது சட்டத்திற்கும் பொருந்துகிறது. சட்டமானது மக்களின் அடிப்படி சி
ந்தனைகளுக்கு (common sense) மாறாக அதிகதிகமாக திரும்புகையிலும் மற்றும் மக்களின் சுதந்திரமான
எண்ணங்களிலிருந்து அவர்களை விலக்கி வைக்க மேலும் மேலும் முயலுகையிலும் சட்டத்திற்கு கீழ்ப்படிதலி
ன் அளவும் குறைந்து கொண்டே போக வாய்ப்பு இருக்கிறது.
இந்திய தண்டனைச் சட்டத்தின் 125 மற்றும் 126ம் பிரிவினைப் பற்றி கூறினேன். அந்தப் பிரிவுகள்
இயற்றப்படுகையில் இலங்கை, பர்மா போன்றவை நம்முடன் அமைதியைப் பேணும் வேறு நாடுகள் ஆயி
னும் அனைத்து நாடுகளின் குடிகளும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் குடிகளாகளே. எனவே, வேறு நாட்டில் அழி
ம்பினை (Depredation) ஏற்படுத்தும் செயல்கள் இங்கும் குற்றமாக்கப்பட்டன. தற்பொழுது முழுவதும் சுதந்தி
ரமடைந்த நாடுகளாக இவை இயங்குகையில், இவ்விதமான பிரிவுகள் மக்களின் பொதுக்கருத்துக்கு இசைந்து
வருவதில்லை. கண்ணப்பனோ, வைகோவோ நான் 25 முறை கொலை செய்தேன் என்று கூற தைரியம் கொள்ள
முடியாது. ஆனால் பயங்கரவாத இயக்கமாக பொடா சட்டத்தின் பட்டியிலில் சேர்க்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகள்
இயக்கத்தினை ஆதரிப்பதாக பெருமை கொள்கின்றனர் என்றால், சட்டம் மக்களுடைய பொதுவான எண்ணத்தினை பி
ரதிபலிப்பதாக இல்லை என்றே கூற வேண்டும். பெரும்பான்மை எண்ணம் என்று கூட இல்லை, கணிசமான மக்கள்
கூட்டம் இவ்வகையான சட்டங்களால் தங்களது சுதந்திரம் மட்டுப்படுத்தப்படுவதாக எண்ணினாலே போதுமானது.
வைகோ தவறு செய்தாரா இல்லையா என்பதை விட இவ்விதமான சட்டங்கள் தாராள எண்ணங்களுக்கு
(libertarian) எதிரானவை என்று 'எண்ணங்கள்' பத்ரி சேஷாத்ரி கூறுவது மிகவும் கவனிக்கத் தக்கது.
ஏனெனில் ஒருவர் தனது மனதில் கொள்ளும் கருத்தினை வெளிப்படுத்துவதை தடுக்கும் சட்டங்கள் மிக மிக
மோசமான விளைவுகளை ஏற்படுத்த வல்லவை.
உதாரணமாக, பாலஸ்தீன ஹமாஸ் இயக்கம் பொடா சட்டத்தில் பட்டியலிடப்படுகிறது என்று வைத்துக்
கொள்வோம். ஹமாஸ் இயக்கம் பாலஸ்தீன விடுதலைக்கு மட்டுமல்லாது, சமுதாய பணியிலும் தன்னை அதிகமாக
ஈடுபடுத்துகிறது. உண்மையில் பாலஸ்தீன மக்களின் ஆதரவை ஹமாஸ் பெறுவதே அதன் சமூக பணிகளின்
காரணமாகத்தான். ஹமாஸை பற்றி நான் எனது எண்ணங்களை பகிர்ந்து கொள்கையில் அதன் சிறப்பான சமூக
பணிகளை நான் எடுத்துக் காட்டினாலே போதும் அதைக் கூட குற்றமென கூறலாம். தமிழீழத்தைப் பற்றி ஒரு
பத்திரிக்கையாளர் எழுதுகையில் 'விடுதலைப்புலிகள் அங்கு சிறப்பான சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தியிருக்கி
ன்றனர்' என்று எழுதினால் அதையும் 'சப்போர்ட்' என்ற ஆங்கில வார்த்தைக்குள் அடக்கிவிடலாம்தான். ஏனெனி
ல் பொடா சட்டத்தின்படி ஒரு இயக்கத்தின் பயங்கரவாத செயல்களை அல்ல, ஒரு இயக்கத்தை ஆதரித்தாலே அது
குற்றம் என அரசு நம்மை நம்ப வைக்கிறது.
அடுத்து, நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை கட்டுரையாளரான தாமஸ் ப்ரீட்மேன் இந்திய இஸ்லாமியர்களை மற்ற
நாட்டு முக்கியமாக சவூதி அரேபிய இஸ்லாமியர்களிடம் இருந்து வேறுபடுத்துகிறார். ஏன் இந்திய முஸ்லீம்கள்
பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் அல்கொய்தா போன்ற அமைப்புகளில் இல்லை என்பதற்கு அவர் கூறும்
காரணம் நம் நாட்டில் நிலவும் மக்களாட்சி மற்றும் சுதந்திரமான பத்திரிக்கை அமைப்புகள். குஜராத்தில்
இஸ்லாமியர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். ஆனாலும் இந்தியா முழுமைக்கும் இஸ்லாமியர்கள் மற்றும் நடுநிலமை
வகிக்கும் இந்துக்கள் ஆகியோர் தங்களது எதிர்ப்பினை பதிவு செய்ய முடிகிறது. சிறந்த நாடகாசிரியரான வி
ஜய் டெண்டூல்கர் உணர்ச்சி வெள்ளத்தில் ஒருகணம் தடுமாறி 'என்னிடம் ஒரு துப்பாக்கி இருந்தால் முதலில்
போய் நரேந்திர மோடியை போய் சுடுவேன்' என்று கூறுவது கூட முடிகிறது. இவ்விதமாக மனதின் எண்ணங்களை
சுதந்திரமான வகையில் வெளிப்படுத்த இயலுகையில் பயங்கரவாத எண்ணங்கள் உண்மையில் குறைந்துதான் போகும்
என நான் உறுதியாக நம்புகிறேன். ஏனெனில், டெண்டூல்கரே தனது வார்த்தைகளுக்கு பின்னர் வருந்தியி
ருப்பார். அவரது ஆதங்கத்தை கண்ணுற்ற பாதிக்கப்பட்டவர்களில் சிலர், 'இந்த வார்த்தையே போதும்' என்றும்
நினைக்கலாம்.
ஆனால் ஆட்சியாளர்கள், எதிலுமே உடனடி பலனை எதிர்பார்க்கும் காவல்துறையினரின் ஆலோசனையின் பெயரி
ல், தீவிரவாத எண்ணங்களை ஒரேடியாக மறுப்பதன் மூலம் இல்லாமல் போகச் செய்யலாம் என்று நம்புகி
றார்கள். கவலையை போதையில் மறைக்க முயற்சிப்பது போன்ற செயல்தான் இது. அல்-கொய்தாவையே
எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் பயங்கரவாதிகள், யாரையும் வெடி வைத்து பிளப்பார்கள் என்ற கருத்துதான் ஊ
டகங்கள் எங்கும் பரவிக் கிடக்கின்றன. அல்கொய்தா யார்? எதற்குத் தோன்றியது? அவர்களது இறுதியான
நோக்கம் என்ன? அதில் நியாயம் ஏதும் இருக்கிறதா? நடைமுறை சாத்தியமா? என்பதைப் பற்றிய எந்த ஒரு
செய்தியையும், விவாதத்தையும் நான் காணவில்லை. ஒருவரின் உடல் உபாதைகளை வைத்தே அவருக்கு இருப்பது
குணப்படுத்த முடியாத புற்றுநோய்தான் என்று ஒரு மருத்துவர் முடிவுக்கு வருவது எவ்வளவு தவறான
செயலோ அந்த அளவுக்கு தவறான ஒரு செயல் இது. ஒரு பக்கத்து உண்மைகள் முழுவதுமாக மக்களுக்கு
மறுக்கப்படுகையில், அந்த நியாயங்களைப் பொறுத்து ஒரு பொதுகருத்து ஏற்படப் போவதில்லை. அவ்விதமான
பொதுக்கருத்துகள் ஏற்படாத நிலையில், அந்த நியாயங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் எந்த அரசுக்கும்
வரப் போவதில்லை. பிரச்னைகளுக்கு தீர்வும் கிடைக்கப் போவதில்லை.
இறுதியாக, இவ்விதமான மாற்றுக் கருத்துகள், எண்ணங்கள் அனுமதிக்கப்படாமல் போகையில் நிலமை மேலும்
மோசமாக போவதற்கு நமது நாட்டில் நடந்த ஒரு உதாரணத்தையும் கூற முடியும். அவசர காலத்தின் பொழுது
ஊடகங்கள் அரசின் குரலை மட்டுமே பிரதிபலித்தன. ஒரு காலகட்டத்தில் மக்களுக்கு ஊடகங்களின் பெயரில்
நம்பிக்கையே இல்லாமல் வெறும் வதந்திகளையே உண்மையென நம்ப ஆரம்பித்தனர். அரசு அட்டூழியங்கள் புரி
ந்தாலும், அந்த அட்டூழியங்கள் ஒன்றுக்கு பத்தாக மக்கள் நம்பத் தொடங்கினர். இறுதியில் மக்களுக்கு அரசின்
மீது இருந்த ஒட்டு மொத்த நம்பிக்கையும் போய்...அரசினையே தூக்கி எறிந்தனர்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பதை சட்டம் போட்டு தடை செய்ய முயலும் அரசு ஒன்றினை மறந்து விட்டது.
ஏதோ இந்த சட்டம் போட்டதால் மக்கள் ஆதரவளிப்பதிலிருந்து விலகவில்லை. அதற்கு முன்னரே நடந்த ராஜீவ்
காந்தி கொலையே பெருமளவு காரணம். அந்த கொலையால் மக்களிடம் தோன்றிய பொதுக்கருத்தின் விளைவே
விடுதலைப்புலிகள் இயக்கம் இங்கு தடை செய்யப்பட்டது. அந்த மக்களுக்கு தங்களது சிந்தனையில் அதே நிலையி
ல் நீடிப்பதற்கும் காலப்போக்கில் மாற்றிக் கொள்வதற்கும் உரிமை இருக்கிறது. மக்கள் எவ்விதமான
எண்ணப்பாட்டை கொள்ள வேண்டும் என்று தீர்மானித்த கம்யூனிச நாடுகளின் நிலை நாம் அறிந்ததுதானே!
சட்டத்தினை பற்றி எழுந்துள்ள பயத்தினால், பட்டியலில் இடம் பெற்றுள்ள எந்த ஒரு இயக்கத்தையும் பற்றிய
நேர்மையான ஒரு விவாதம் நடத்தப்பட போவதில்லை. இந்தியாவில் மட்டுமல்ல. இணையப் பதிவுகளையே
பார்த்தால், ஈழப் பிரச்னையைப் பற்றிய எந்த ஒரு விவாதத்திலும் பங்கு கொள்பவர்கள் 'நான் விடுதலைப்
புலி ஆதரவாளன் இல்லை' என்ற ஒரு மறுப்பினை எழுத வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். யாருமே வி
டுதலைப் புலி ஆதரவாளர்கள் இல்லை என்றால் எப்படி அந்த இயக்கத்தால் தமிழீழப்பகுதியில் ஆட்சி செய்ய
முடிகிறது. பெரும்பான்மையான மக்களின் ஆதரவு இல்லாமல் அதனால் இன்று இருக்கும் நிலைக்கு உயர்ந்திருக்க
முடியாது. கணிசமான எண்ணிக்கையில் இருக்கும் ஒட்டு மொத்த மக்கள் கூட்டத்தை நாம் எப்படி அப்படியே
பெருக்கித் தள்ள முடியும்? இவ்வாறாக ஒரேடியாக மாற்றுக் கருத்தினை மறுக்க முயன்றால் படிப்படியாக
மக்களுக்கும் அரசு வலியுறுத்தும் கருத்தின் மீது உள்ள நம்பிக்கை எவ்வித விவாதத்திற்கும்
உட்படாமலேயே, அது நியாயமாக இருப்பினும் மறைந்து போகுமென்பதுதான் வரலாறு நமக்கு கற்பித்த
பாடம்.
ஒருவேளை இதை கருத்தில் கொண்டே பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவளிப்பதை குற்றமாக கருதாமல் பொடா
சட்டத்தினை எழுதியிருக்கலாம். ஆனால், அரசு எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் குடிமக்களுக்கு இதனை தெளிவுபடுத்தி
யதாக தெரியவில்லை. ஊடகங்களிலும் செய்தி இல்லை. எனவேதான் ஆதரிப்பதே குற்றம் என்று அரசு
கருதி அதனை செயல்படுத்த நினைக்கிறது என்றே எண்ணத் தோன்றுகிறது. என்னைப் பொறுத்தவரை
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு இது சரியான வழியல்ல...
மும்பை
21/04/04
பி.கு. காசி, சட்டம் சில சமயம் சட்ட மாறுதலை பரிந்துரைக்கும் சட்ட ஆணையத்தால் வரையப்படுவதுண்டு.
பெரும்பாலும், அரசின் சட்டத்துறை (Law Department) அலுவலர்களால் வரையப்படும். இவர்கள் சட்டம்
படித்தவர்கள்தான். ஆனால், நீதிமன்ற அனுபவம் இன்றி வெறும் சட்டக் கல்லூரி படிப்பினை மட்டும் நம்பி
இருப்பவர்கள். பல சமயம் சட்டம் பலரின் பார்வைக்கும் வைக்கப்பட்டு இறுதி வடிவம் பெறும் எனினும், இது
போன்ற அவசர சட்டங்கள் 'எடுத்தேன் கவிழ்த்தேன்' என்றே எழுதப்படுகின்றன. பொடா சட்டம் முழுவதும்
மோசமான மொழிப்பிரயோகம். ஓரிடத்தில் terrorist gang or terrorist organisation
என்று குறிப்பிடப்படுகிறது. ஆர்கனைசேஷன் என்றால் என்னவென்று அடுத்த பாராவில் விளக்கம் இருக்கிறது.
ஆனால் கேங்க் என்றால் என்னவென்று விளக்கம் இல்லை. இந்த கேங்க் என்பதும் மிக பாமரத்தன்மையான ஒரு
வார்த்தையாக தெரியவில்லை?
பொடா பொடா புண்ணாக்கு
Posted by IdlyVadai at 4/21/2004 10:55:00 AM 0 comments
Tuesday, April 20, 2004
Monday, April 19, 2004
நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் - 6
நகைச்சுவையில் அடுத்து நாம் 'Parody' என்னும் வகையை பார்க்கலாம். ஏற்கெனவே புகழ் பெற்ற
பிரபலமான பாணியை அல்லது நடையை நினைவு படுத்துகிற விதத்தில் - அதே ஸ்டைலில்
புதிய கருத்துகளைக் கூறுவது Parody ( A composition that imitates somebody's
style in a humorous way).
வீரபாண்டிய கட்டபொம்மன், மனோகரா, திருவிளையாடல் போன்ற படங்களின் வசனங்களின்
ஸ்டைலை பின்பற்றி அந்த வசனங்களைச் சற்று மாற்றி பொருத்தமான வேறு வசனங்களை போட்டு
நகைச்சுவையை உண்டாக்கலாம். மிமிக்ரி, ஆனந்த விகடனில் வரும் 'மிஸ்டர் ரீல்' இந்த வகை
நகைச்சுவைதான்.
அடுத்த வகை Burlesque. இது Parody போன்றது தான், ஆனால் கொஞ்சம் 'கீழிறக்கி'
அல்லது பரிகாசம் செய்யும் விதம்.
இதற்கு சில உதாரணங்கள் பார்க்கும் முன், 'கேரக்டரோ கேரக்டர்' (ஆசிரியர் கடுகு) என்ற
புத்தகத்தின் பின் அட்டையில் எழுதியது எனக்கு ரொம்ப பிடித்தது, அதிலிருந்து ஒன்றை இங்கு
தந்துள்ளேன்.
இப்புத்தகத்தை படிக்காதவர்கள் பாராட்டுகிறார்கள்!
இப்புத்தகம் அபாரம் போங்க!
"எப்பவும் 200 மில்லி போட்ட மாதிரி ஆடிக்கொண்டே இருந்த என் வீட்டு மேஜையின் காலின்
கீழ் புத்தகத்தை வைத்தேன் சொன்னால் நம்பமாட்டீர்கள் மேஜை ஆடுவது நின்று விட்டது முப்பது
வருடமாக ஆ(ட்)டிக் கொண்டிருந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டது. இன்னும் இது மாதிரி பல
உபயோகமான புத்தகங்களை எழுதுங்கள்"
-- ராமன், தெனாலி
இது போன்று யாரையும் புண்படுத்தாமல் நகைச்சுவை எழுதுவது தான் என்னை பொருத்தவரையில்
மிகவும் கடினமானது.
(1) (2) (3) (4) (5)
Posted by IdlyVadai at 4/19/2004 12:21:00 PM 0 comments
Friday, April 16, 2004
வியக்க வைக்கும் Google

நாம் எல்லோரும் Google ஒரு தேடு இயந்திரமாகத்தான் இதுவரை பயன் படுத்தியிருக்கிறோம். Google வேறு பல விஷயங்களையும் செய்கிறது. அது கணக்கு போடுகிறது. இது என்னப்பா பெரிய விஷயம் என்னிடம் கால்குலேட்டர் இருக்கிறது என்பவர்கள். "ஒரு நூற்றாண்டில் எவ்வளவு வினாடிகள்" என்று செல்லுங்கள் பார்க்கலாம். Google'லில் யோசிக்கும் நேரத்தில் விடை கிடைக்கிறது.
இதெல்லாம் சுஜாதா போன்ற ஆசாமிகளுக்கு சொல்லுப்பா. நான் உண்டு என் அடுப்படி உண்டு என்று இருக்கிறேன் எனக்கு போய் இதெல்லாம்.....அது சரி ஒரு அரை கப் சக்கரை எவ்வளவு டீஸ்பூன் சக்கரைக்கு சமம் என்று சொல்லுமா ? அதற்கும் விடை இருக்கிறது.
Half a cup in teaspoon என்று அடித்து பாருங்கள்.
சரி ஏதே கொஞ்சம் சுவரஸ்சியமாக இருக்கிறது மேலே செல்லுங்க என்பவர்கள் மேற்கொண்டு படிக்கலாம்.
ஒரு மைல் எவ்வளவு கிலோ மீட்டர், 1098 Roman நம்பராக மாற்று, 1010101 Hexல் என்ன ?
ஒளியின் வேகம், போன்றவை ரொம்ப சுலபமாக கிடைக்கிறது.
நான் சில வில்லங்கமான கேள்விகள் கேட்டேன்(நம்ம புத்தி அப்படி).
அவை கீழே
ஒளியின் வேகத்தை 2 டீஸ் ஸ்பூனால் வகுத்தால் என்னவாகும் ?
What is the answer to life, the universe and everything ?எனக்கு கிடைக்கும் விடை 42 !. ( ஏன் என்று தெரிந்து கொள்ள இங்கே பார்க்கவும் ).
square root of -1 ?
Twenty four minus sixteen என்ன ?
1 hour multiplied by 128 kbps in megabytes ?
5th root of 3404 ?
128! ( Factorial of 128)
1234 in words
5 feet + 2miles + 3 inches in centimeters ?
1 dozen plus 1 score
சரிப்பா வேற ஏதாவது இருக்கா கொஞ்சம் தலை சுத்துது. இருக்கு. அதன் பட்டியல் இதே ...
Spell checker - spelling தெரியவில்லை என்றால் Google உள்ளிடுங்கள்.
பிழையிருப்பின் உங்களுக்கு அதுவே சரியான spelling குடுக்கும்.
அமேரிக்காவில் இருப்பவர்கள் 165 University Ave Palo Alto CA என்று குடுத்தால் உங்கள்
கண்முன்னே Mapபை பார்க்கலாம்.
இது மட்டும் இல்லை FedEx, UPS மூலம் ஏதாவது குரியர் அனுப்பியிருந்தால் அதன் Tracking
நம்பரை உள்ளிட்டால் அது எங்கு இருக்கிறது என்ற விபரம் தெரியும்.
Infosys பங்குகள் என்ன விலை என்றைக்கு INFY என்று அடியுங்கள். இது மட்டும் இல்லை
define: WWW என்றால் கூட அதற்கும் விடை கிடைக்கிறது.
இவ்வளவு இருந்தும், Googleல் "எனக்கு எப்போ கல்யாணம்" என்பதற்கு மட்டும் விடை கிடைக்கவில்லை!.
Posted by IdlyVadai at 4/16/2004 11:54:00 AM 2 comments
Labels: கூகிள்
தமிழும் இணையமும் - Followup
அன்புள்ள நண்பருக்கு,
தமிழில் உள்ள வலைதளங்கள் பெரும்பாலும், சினிமாவைச் சுற்றியே உள்ளன் என்று வருத்தப்பட்டு இருந்த தங்களுக்கு எங்களின் இரு தளங்களை அறிமுகப்படுத்துகிறேன். பார்த்துவிட்டு பதிலளிக்கவும்
http://www.chennainetwork.com
http://www.salemtamil.com
இவ்விரு தளங்களும் யூனிகோடில் டைனமிக் வெப் பாண்ட் முறையில் உள்ளன. இவற்றில் தான் முதல் முதலாக நீங்கள் கம்ப ராமாயணத்தைக் கூட இலவசமாகப் பெறலாம்.
அன்புடன்.
கோ.சந்திரசேகரன்
தொலைபேசி: 044-26357564
செல்லிடம்பேசி: 94440-86888
மின்னஞ்சல் : chandran@salemtamil.com
அன்புள்ள சந்திரசேகரன்,
தங்கள் ஈ-மெயில்க்கு நன்றி.
இணய நண்பர்கள் கருத்துக்கு இதை விட்டுவிடுகிறேன்.
அன்புடன்
இட்லி
Posted by IdlyVadai at 4/16/2004 11:15:00 AM 0 comments
Thursday, April 15, 2004
பொடா பொடா புண்ணாக்கு
இப்போது எல்லோரும் காமெடி பண்ண ஆரம்பித்துவிட்டார்கள். கடந்த வாரம் ஏ.பி.சகாரியா தனது
தீர்ப்பில் வைகோவை 'பொடா' குற்றச்சாட்டில் இருந்து விடுவித்துள்ளார். இதுவும் ஒரு வித
நகைச்சுவை என்பதால் இங்கே பதிவு செய்கிறேன்.
தீவிரவாதக் குழுவை ஆதரிப்பது தவறு என்று சட்டம் இயற்றி விட்டு சுப்ரீம் கோர்ட்டில் தீவிரவாதக்
குழுவை ஆதரித்திப் பேசுவது தவறில்லை என்று அட்டர்னி ஜெனரல் வாதாடினார். இங்கிருந்து
ஆரம்பித்தது காமெடி.
திரு அருண் அவர்கள் இதைப்பற்றி தனது வலைப்பதிவில் எழுதி அட எனது கருத்துக்கு ஒருவர் கூட ஆதரவு தரவில்லையே என்று வருத்தப்பட்டுள்ளார்.
மேலும் படிக்கும் முன் சில வார்த்தைகள் - இலங்கையில் நடக்கும் பிரச்சனை பற்றி நான் விவாதிக்க
போவதில்லை. இது முழுக்க முழுக்க இந்தியாவில் உள்ள 'பொடா' சட்டம் பற்றியும், தீவிரவாதத்தை
பற்றியும் தான். உணர்ச்சி வசப்படாமல் இதைப் படிக்கவும். டிவியை ஆப் செய்துவிட்டு படிப்பது
நல்லது. நகைச்சுவை இத்துடன் முடிகிறது, இப்போ கொஞ்சம் சீரியஸ்....
1
2
3
ஆரம்பிக்கலாமா ?
வைகோ "நான் விடுதலைப் புலிகளை(விபு) நேற்றும் ஆதரித்தேன், இன்றும் ஆதரிக்கிறேன், நாளையும்
ஆதரிப்பேன்" என்கிறார். கண்ணப்பன் ஒரு படி மேலே போய், இதுவரை 25 முறைகள் புலிகளை
ஆதரித்து பேசியிருக்கேன் என்று கூறி தன்னுடைய "ஸ்கோர் 25 நாட் அவுட்" என்று பெருமைப்
பட்டுக் கொள்கிறார். இதில் வேடிக்கை என்ன வென்றால் வைகோ பாராளுமன்ற உறுப்பினர்,
கண்ணப்பன் மத்திய அமைச்சர். ஓர் உறுப்பினர்,அமைச்சர் இப்படி கூறினால் மக்களும்
அவ்வழிதே ஆதரிப்பார்கள், இது நாம் எல்லோரும் தற்கொலை பண்ணிக் கொள்வதற்கு சமம்.
தீவிரவாதத்திற்கு ஆதரவு என்பது பாம்புக்கு பால் வார்ப்பது போன்றது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலையுண்ட (துன்பியல்) சம்பவம் பழைய விஷயம் என்று
பிரபாகரன் ஒதுக்கலாம், நாம் ஒதுக்க முடியாது. வைகோ, ப.ம.க ராமதாஸ் 1999 ஆம் ஆண்டு
தமிழர்களான நளினி, முருகன், சாந்தன் போன்றவர்களுக்கு அவர்கள் செய்த தியாகத்திற்கு மரண
தண்டனையை குறைக்க சொல்லி வலியுறுத்தினார்கள்.
தமிழர்களுக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயம் என்பது சட்டத்திற்கு தெரியாது, தெரிய
கூடாது. "Auto" சங்கரும் ஒரு தமிழர் தான், ஏன் அவர்கள் அவனுக்கு விதித்த தூக்கு தண்டனையை
குறைக்க சொல்லவில்லை. கேட்டால் 'humanitarian ground' என்பார்கள். என்னை கேட்டால்
"It would have been more 'inhuman' if it was accepted"
விபு தீவிரவாத இயக்கம் இந்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள இயக்கம் என்று பிரகடனம்
செய்யப்பட்டுள்ளது. விபு இயக்கத்தை ஆதரித்தால் பரவாயில்லை என்றால் மற்ற தீவிரவாத
இயக்கங்களை ஆதரிக்கலாமா ? எல்லா தீவிரவாத இயக்கங்களுக்கும் ஒரு So Called நியாயமான
காரணம் இருக்கும். எல்லா குற்றங்களும் நியாயப்படுத்த முடியும். திருட்டுக்கு காரணம் - ஏழ்மை;
கொலைக்கு காரணம் - கோபம், ஏன் பிக்-பாக்கெட்டிற்கு கூட காரணம் கண்டுபிடிக்க முடியும்.
என்னை பொருத்தமட்டில் நாட்டிற்கும், மக்களுக்கும் எதிர்காலத்திற்கும் பெரும் தீங்கு
விளைவிக்கக் கூடியது - தீவிரவாதிகளின் நாசவேலைகளே இதற்கு போய் காரணம் தேடி
நியாயத்தை ஆராய்ந்து கொண்டு பொழுதை கழிப்பது வடிகட்டின முட்டாள்தனம். 'துக்ளக் சோ'
சொல்லதை போல் "நெருப்பு, விஷம், பாம்பு விரோதி இவற்றை ஒரேயடியாக நசுக்க வேண்டும்;
கொஞ்சம் இருக்கட்டும் என்றால் அது வளர்ந்துவிடும்". திவிரவாதிகளை ஒழிப்பதில் தயவு தாட்சண்யம்
பார்க்க கூடாது. மூட்டை பூச்சியை நசுக்குவதை போல் நசுக்கி விட வேண்டும். முடிந்தால் அதை
ஆதரிக்கும் கட்சிகளை ஒடுக்க வேண்டும். மனித உரிமை போன்றவை கெட்ட வார்த்தைகள்
கொண்டு தீவிரவாதத்தை வளரவிடக் கூடாது. "Zero tolerance" என்பது தான் அதன் தாரக
மந்திரமாக இருக்க வேண்டும். தீவிரவாதிகளை நசுக்கும் பொது சில அசம்பாவிதங்கள் நிகழ்லாம் அதை
நாம் சகித்து கொள்ள வேண்டும் தீவிரவாதத்தை சகித்து கொள்வதை விட இது எவ்வளவோ மேல்.
தீவிரவாதம் எவ்வளவு பெரிய ஆபத்தான விஷயம் என்று மத்திய அரசு துளிக்கூட எண்ணி
பார்க்காதது துரதஷ்டவசமே. பத்திரிக்கைகள் பெரும் பாலும் வைகோவை ஆதரிப்பதால் அவர் மேல்
'பொடா'வை பிரயோகித்தது தப்பு என்று சொல்ல முடியாது. சட்டத்தை மறுபரிசிலனை
செய்வதில் தவறில்லை, ஆனால் அது தீவிரவாதிகளுக்கு மறு வாழ்வு தந்துவிடுவதாக
இருந்துவிடக் கூடாது 'பொடா' மறுபரிசிலனைக் குழு என்பது என்னை பொருத்தமட்டில்
வைகோ விடுதலை செய்யும் குழு. பொடா சட்டம் திருத்துவதற்காகக் கொண்டு வரப்படுள்ள
அவசரச் சட்டம் - உண்மையிலேயே அவசர சட்டம்தான், அவசரத்தில் கொண்டு வரப்பட்ட சட்டம்.
எல்லோரும் சரியாக தீவிரவாதத்தை புரிந்துகொள்ளவில்லை (அல்லது புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்)
என்பதையே இது காட்டுகிறது.
ஆதரவு என்பதில் 'தார்மீக' ஆதரவு, பண ஆதரவு, மருத்துவ ஆதரவு என்று 'பொடா'வில்
பிரிக்கப்படவில்லை, பிரிக்கவும் கூடாது. ஆதரவு என்றால் ஆதரவு அவ்வளவுதான். எழுத்து
சுதந்திரம், பேச்சு சுதந்திரம் என்ற பஜனை வேண்டாம். இவர்கள் முன்பு என்ன செய்தார்கள்
என்பதை சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்
சட்டம் என்பது எல்லோருக்கும் பொது. ஒரு தீவிரவாத இயக்கத்துக்கு யார் ஆதரவு குடுத்தாலும் கைது
செய்ய முடியும், கைது செய்ய வேண்டும். விபுக்கு ஆதரவு பரவாயில்லை என்றால் இதை
முன் உதாரணமாக வைத்து நாளை லஷ்கர்-இ-தொய்பா, ஜெயசி-இ-முஹமது போன்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்கள், அஸ்ஸாம், திரிபுரா, மணிப்பூர், தீவிரவாத அமைப்புக்கள், ஆந்திர நக்ஸலைட்டுகள் ஆதரவு தெரிவிப்பார்கள். இதனால் பெரும் ஆபத்தான சூழ்நிலை உருவாகலாம்.
'பொடா'வை ஆதரித்தவரே உள்ளே போய் இருக்கிறார் என்ன ஒரு முரண்பாடு என்று
Hinduவில் ஆரம்பித்து 100 காபி சர்குலேஷன் பத்திரிக்கைகள் தலையங்கம் எழுதியாகிவிட்டது.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரிப்பதுதான் முரண்பாடு.
இதை யாரும் கண்டுக்கொள்ளவில்லை.
அரசின் மாட்சிமையும், மேலான்மையும் காப்பாற்ற வேண்டியது ஒரு அரசனின் கடமை. இவர்கள்
பண்ணும் அழிச்சாட்டியத்தை சகித்துக் கொண்டால் அது நாட்டுக்கு செய்யப்படும் பெரும் துரோகம்,
அதர்மம். ஜெயலலிதா ஆட்சி முறையில் எனக்கு அவ்வளவு உடன்பாடு இல்லாவிட்டாலும், தீவிரவாத
எதிர்ப்பில் அவர் ஓர் உறுது படைத்த நிர்வாகியாக திகழ்கிறார். தமிழ்நாடு இன்னொரு யாழ்ப்பாணமாக
எதிர்காலத்தில் மாறிவிடக் கூடாது என்றால், இந்த மாதிரி விஷயங்களை தயவு தாட்சண்யம்மில்லாமல்
நசுக்க வேண்டும். அதை செய்ய கூடியவர் ஜெயலலிதா ஒருவர்தான் என்பது என் கருத்து.
தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்கு செய்யும் மிகப் பெரிய சேவை இது. தமிழ்நாட்டு மக்கள் இந்த ஒரு
காரணத்திற்காகவே அவருக்கு நன்றிகடன் பட்டிருக்கிறார்கள்.
References:
1. POTA - (Sec 21 1(A))
http://www.satp.org/satporgtp/countries/india/document/actandordinances/POTA.htm
2. INTERIM REPORT OF THE JAIN COMMISSION OF INQUIRY - http://www.india-today.com/jain/
3. Terrorist Organizations : http://www.satp.org/satporgtp/countries/india/document/actandordinances/POTA.htm#3
4. Meeting Between M. Karunanidhi and LTTE Emissaries - http://www.india-today.com/jain/vol6/chap37.html
5. http://www.thehindu.com/2003/09/23/stories/2003092305600100.htm
6. http://www.hindu.com/2004/04/10/stories/2004041001761000.htm
7. LTTE - http://www.satp.org/satporgtp/countries/shrilanka/terroristoutfits/Ltte.htm
8. http://www.yarl.com/articles.php?articleId=40
9. http://www.flonnet.com/fl1703/17030390.htm
Posted by IdlyVadai at 4/15/2004 12:04:00 PM 0 comments
Tuesday, April 13, 2004
வந்துட்டேன்
நான் யார் என்று தெரிந்துக் கொள்ள கீழே உள்ள சிகப்பு வட்டத்தை சில வினாடிகள் பார்க்கவும்.
பிறகு Mouse கொண்டு "Right Click" செய்து, "Select All"லை தேர்வு செய்யவும்.
ஏப்ரல் 1-ஆம் தேதிதான் முட்டாள்கள் தினமா ?
இன்றும் தான் :-)
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
O
Posted by IdlyVadai at 4/13/2004 10:42:00 AM 2 comments
Monday, April 12, 2004
புத்தாண்டு ஸ்பெஷல்!
பலபேர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, நாளை(தமிழ் புத்தாண்டு அன்று) என் முகமூடியை கிழித்துக்கொண்டு வெளியே வருகிறேன் !
அன்புடன்
இட்லி
(தோற்றம் : அக்டோபர் 27, 2003, மறைவு ஏப்ரல் 13, 2004)
Posted by IdlyVadai at 4/12/2004 12:35:00 PM 0 comments
Friday, April 09, 2004
கூட்டு வலைப்பதிவு - டாப் 10+5 கேள்வி பதில்கள்.
இது என்ன புதுசா புளிப்பு கூட்டு மாதிரி என்று படித்தால் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்தது.
(கொஞ்சம் பயமாகவும் இருந்தது :-). இதோ எனது டாப் 10+5 கேள்வி பதில்கள்.
1. கூட்டு வலைப்பதிவு என்றால் என்ன ?
இது ஒரு விதமான "Content Management System", தமிழில் "தகவல் களஞ்சியம்".
ஒருவர் எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். History, Geography, Science,
Social Studies போன்ற ஸ்கூல் பாடம், லினக்ஸ், மைக்ரோ சாப்ட் எது வேண்டுமானாலும்.
( இலக்கியம், சினிமா, கதை, கவிதை - 2031 டிசம்பர் 31ஆம் தேதி வரைக்கும் தள்ளிப்போடவும்).
நீங்கள் எழுதியதை பலர் திருத்தி அமைக்கலாம், சண்டைப்போடாமல்.
2. கூட்டு வலைப்பதிவு எவ்வளவு பேர் கொண்டு ஆரம்பிக்கலாம் ?
ஆரம்பிப்பதற்கு இரண்டு பேர் போதும். நிறைய பேர் இருந்தால் கலீல் கிப்ரான் கவிதைதான்
நினைவுக்கு வருகிறது.(தமிழில் மீனாக்ஸ்).
3. இதை எப்படி அமைக்கலாம் ?
ஒரு எட்டு விக்கிபீடியா , போஸ்ட்நியூக் சென்று பார்க்கவும். பிடித்திருந்தால் உடனே ஆரம்பித்துவிடலாம்.
4. இதில் எது சிறந்தது ?
A.R.ரஹ்மான் கீபோர்டை எடுத்து நீங்கள் வாசித்தால் A.R.ரஹ்மான் ஆகிவிட முடியுமா ?
அதே போல்தான் இதுவும். நம்ம கிட்ட சரக்கு இருந்தால் முன்னேறலாம். வல்லவனுக்கு புல்லும்
ஆயுதம்.
5. அப்படி என்றால் வலைப்பதிவை உபயோகப் படுத்தலாமா ?
படுத்தலாம். அதை விட்டுவிடுங்கள், அது ஹைக்கூக்கு எழுத இருக்கட்டும்.
6. முதலில் எதைப்பற்றி எழுதலாம் ? ஒரு நாளைக்கு எவ்வளவு எழுதலாம் ?
எதைப்பற்றி வேண்டுமானாலும். கூட்டு வலைப்பதிவு பற்றி கூட
ஆரம்பிக்கலாம். HowStuffworks.com ஒருதரம் போய் பாருங்க.
ஒரு நாளைக்கு எவ்வளவு வேண்டுமானலும் எழுதலாம். கணக்கு கிடையாது.
உங்கள் துறை சார்ந்ததாக இருந்தால் நல்லது. மடியாக ஒரு பாரா எழுதிப் பாருங்களேன்.
7. எல்லாவற்றையும் தமிழ் படுத்தலாமா ?
முதலில் ஆரம்பிங்க சார். நல்ல தரமான கட்டுரைகள் குடுங்க, பிறகு அதுவே வளரும்.
8. இது யாருக்கு உபயோகப்படும் ?
உங்களுக்கு, பக்கத்து வீட்டு குழந்தைக்கு, மீண்டும் பிறக்கப்போகும் உங்கள் கொள்ளு தாத்தாவுக்கு.
9. இதிலும் Moderator, Owner உண்டா ?
நீங்கள் எழுதும் கட்டுரைக்கு நீங்கள் தான் owner. கவலைப்படாதீங்க.
10. சுரதா, பத்ரி, வெங்கட், காசி ..... போன்ற பெரியவங்க இருக்கும் இடத்தில்
என்னை போல் சின்ன பசங்க போகலாமா ?
பயப்படாதீங்க சார், அவர்கள் நல்லவர்கள்.
11. இதைப்பற்றி ஒரு Press Release குடுக்கலாமா ?
இதுதானே வேணாங்கர்து, எதையாவது சாதித்தால் அவர்களே நம்மை தேடி வருவார்கள்.
12. நான் அறிவியல், தொழில்நுட்பம் பற்றி எழுதலாம் என்று இருக்கேன் எந்த
கலைச் சொல்லாக்கத்தை உபயோகப்படுத்தலாம் ?
தயவு செய்து இதில் இருந்து சண்டையை ஆரம்பிக்காதீர்கள். எதாவது ஒரு தக்க
வார்த்தையை உபயோயுங்கள் நாளடைவில் நல்ல வார்த்தை உயிரோடு இருக்கும்.
உதாரணம்: வலைப்பூக்கள், வலைக்குறிப்பு, வலைப்பதிவு; தற்போது வலைப்பதிவு
உயிருடன் இருக்கிறது.
13. இன்னும் எனக்கு முழுமையாக விளங்கவில்லை
எனக்கும் தான். ஏதாவது ஒரு குழுவில் சேருங்கள். உங்களுக்கு உதவ நிறைய பேர்
காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
14. இது தமிழர்களுக்கு ஒத்துவருமா ?
எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு, மரத்தடியில் காப்பி குடித்தவர்கள் டாக்டரிடம்
பரிசோதனை செய்து கொண்டு வருவது உத்தமம்.
15. கூட்டு வலைப்பதிவுக்கு ஒரு Yahoo Group ஆரம்பிக்கலாமா ?
நான் கிளம்பறேன், அப்பறம் பார்க்கலாம்.
Posted by IdlyVadai at 4/09/2004 07:39:00 PM 0 comments
Thursday, April 08, 2004
விளம்பரம் Top 10+3
இன்றைய சரக்கு லாவண்யா எனக்கு ஈ-மெயிலில் அனுப்பியது.
Posted by IdlyVadai at 4/08/2004 12:08:00 PM 0 comments
Wednesday, April 07, 2004
மனம் திறக்கிறார் ரஜினி !
சென்னைக்கு வந்து ரஜினி மனம் திறப்பதற்கு பொருமை இல்லாமல், நேராக கர்நாடக மாநிலம்
சிருங்கேரிக்கு சென்று ரஜினியை சந்தித்து பேட்டி கண்டேன். பேட்டியின் விவரம் வருமாறு...
இட்லிவடை: தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டைவிட்டு ஏன் எங்காவது சென்றுவிடுகிறீர்கள் ?
ரஜினி: அதுக்கு இரண்டு காரணம்
1) first - அடுத்த படத்துலே என்ன punch line வைக்கலாம் என்று discuss செய்ய.
2) second - என்னை வாழவைத்த சென்னையில் இப்போ தண்ணி கஸ்டம்.
இட்லிவடை: மதுரையில் உங்கள் ரசிகர்கள் தாக்கப்பட்டதைப்பற்றி ?
ரஜினி: சத்தியநாராயணா மூலம் ஒரு அறிக்கை கொடுத்திருக்கேன். டிவில அத பார்த்திருப்பீங்க.
இது போல ராட்சச செயல்களை தமில்நாட்டு மக்கள் பார்த்துகிட்டே இருப்பாங்க.
அப்புறம் மறந்துவிடுவாங்க
இட்லிவடை: உங்களுடைய அடுத்த நடவடிக்கை என்ன ?
ரஜினி: அடுத்தது, இமையமலை போய் இன்னும் ஒரு பெரிய அறிக்கை குடுப்பேன்.
இட்லிவடை: மதுரையில் ஏன் உங்கள் ரசிகர்கள் கருப்பு கொடியை காண்பித்தார்கள்?
ரஜினி: கறுப்பு கொடி காட்டுறது ஜனநாயக உரிமை. actually, என் ரசிகர்கள் காமிச்சது
வெள்ள கொடியத்தான். ராத்திரியில் அது கருப்பா தெரிஞ்சிருக்கு.
இட்லிவடை: உங்கள் படத்தில் நீங்கள் கூட வில்லனிடம் சண்டைதானே போடுகிறீர்கள்,
கருப்பு கொடியையா காமிக்கிறிர்கள் ?
ரஜினி: சினிமா வேற, அரசியல் வேற
இட்லிவடை: உங்கள் பாட்சா படத்தில் வரும் வன்முறையை பார்த்துதான் ராமதாஸ் கட்சி
ஆட்கள் கற்றுக்கொண்டார்கள் என்று ஒரு பேச்சு அடிபடுகிறதே ?
ரஜினி: அதான் சொன்னேனே சினிமா வேற, அரசியல் வேற.
இட்லிவடை: சினிமா வேறு என்றால், நீங்கள் அடிக்கடி சினிமாவில்
"சொல்ரதைத்தான் செய்வேன், செய்வதைத் தான் சொல்வேன்" என்று கூறுவது பொய்யா?
ரஜினி: உஹா ஹா ஹா.. இது மாதிரி எதையாவது சொல்வேன்.
அது முட்டாள்களுக்கும், தமிழ் நாட்டு மக்களுக்கும் மட்டும் தான் புரியும்.
இட்லிவடை: உங்கள் ரசிகர்களின் அடுத்தக்கட்ட போராட்டம் என்ன ?
ரஜினி: அடுத்தது, சேலத்துல மாம்பழம் உண்ணாவிரத போராட்டம்.
ராமதாஸ் கட்சி சின்னமான மாம்பழத்த என் ரசிகர்கள் யாரும் சாப்ட மாட்டாங்க.
இட்லிவடை: ஆறு தொகுதியில் மட்டுமா, அல்லது 34 தொகுதியிலுமா ?
ரஜினி: அது அவுங்க இஸ்டம்.
இட்லிவடை: மாம்பழம் ok, mango frooti குடிக்கலாமா ?
ரஜினி: அத சென்னைக்கு வந்ததும் நிருபர் சந்திப்புல் சொல்றேன்.
இட்லிவடை: சென்னைக்கு வந்தவுடன் மனம் திறக்கப் போகிறேன் என்று கூறியிருக்கிறிர்கள்.
மனம் திறப்பதற்கும் வாய்த்திறப்பதற்கும் என்ன வித்தியாசம்.
ரஜினி: சும்மா ஒரு சஸ்பென்ஸ்க்கு அப்படி சொன்னேன். சீரியஸா எடுத்துக்காதீங்க.
இட்லிவடை: அரசியலில் நீங்கள் தெளிவாக இல்லாமல், எப்போதும் ஒரு குழப்பத்தில் இருக்கிறிர்களே ?
ரஜினி: எனக்கு எத, எப்போ, எப்டி செய்யணம்னு தெரியும்
இட்லிவடை: இப்படி நீங்கள் குழப்பத்தில் இருப்பதினால், நீங்கள் சினிமாவில் ஹிரே, அரசியலில்
காமெடியன் என்று ஒரு பேச்சு எழுகிறதே ?
ரஜினி: நான் என்னிக்கும்மே ஒரு மனினினிதன்.
இட்லிவடை: உங்கள் படத்தில் வரும் வசனங்கள் எல்லாம் பெண்களை இழிவு படுத்துவதாக
உள்ளதே ?
ரஜினி: நான் ஒரு 'ஆண்'மீக வாதி என்று எல்லோருக்கும் தெரியும்.
இட்லிவடை: ஜெ., ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று
சொன்ன நீங்கள், தற்போது அ.தி.மு.க., விற்கு ஆதரவு தருவது முரண்பாடாக இல்லையா?'
ரஜினி: ( பாபா முத்திரையை காமித்து). அவர்களும்(அ.திமுக) இரட்டை இலைக்கு ரெண்டு
விரல் காமிக்கிறாங்க. என் ரசிகர்களும் பாபா முத்திரைக்கு ரெண்டு விரல்கள காமிக்கிறாங்க.
இருவரும் ஒற்றுமையாக இருக்க குரு ராகவேந்திராவை பிராத்திக்கிறேன்
இட்லிவடை: தலைவா நீ நடிக்க வேண்டாம், நடந்தாலே போதும் என்று உங்கள் ரசிகர்கள்
சென்னார்கள், ஆனால் பாபா படம் சரியாக ஓடவில்லையே ?
ரஜினி: தமிழ் நாட்டு மக்கள் எல்லாருமே என் ரசிகர்கள் இல்லையே
இட்லிவடை: உங்கள் ரசிகர்கள், தங்கள் பெயர்களுக்கு முன் ரஜினி, பாட்சா, என்று ஏன் போட்டு
கொள்கிறார்கள் ?
ரஜினி: அவர்கள் உருபடியாக செய்வது அது ஒண்ணதான்
இட்லிவடை: சோ'விடம் நீங்கள் கலந்தாலோசித்திர்களா ?
ரஜினி: சோ என் நண்பர். அவர் நட்பினால்தான் நான் குழம்பிருக்கேன்
இட்லிவடை: உங்கள் அடுத்த படம் எப்போது வரும், நாங்கள் எப்போது அதை எதிர்பார்கலாம் ?
ரஜினி: 2010 தமிழ் புத்தாண்டுக்கு எதிர்பார்கலாம்
இட்லிவடை: ஏன் அவ்வளவு lateஆக ?
ரஜினி: நான் lateஆ வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்.ஜெய்ஹிந்த்.
Posted by IdlyVadai at 4/07/2004 11:37:00 AM 0 comments
Tuesday, April 06, 2004
நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் - 5
நகைச்சுவையின் அடுத்த வகை சிலேடை - ஆங்கிளத்தில் Pun. இரண்டு பொருளைத்
தரும் ஒரே சொல்லை வைத்து நகைச்சுவை செய்வது. காளமேகப் புலவர்,
ஒளவையார் சிலேடைப் பாடல்களை பாடுவதில் சிறந்து விளங்கியவர்கள்.
சில நகைச்சுவைத் துணுக்குகள் சிலேடையாகவோ சமயோசிதமாகவோ அமையாமல்
ஒருவகை சொல் விளையாட்டுக்களாக அமைவதும் உண்டு இவற்றை "அறுவை"
துணுக்குகள் என்று அழைக்கப்படுகிறது.
சில உதாரணங்கள் முதலில் சிலேடை -
அமைச்சர்: இதென்ன அரசே போரே நிகழாத போது தங்களுக்கு விழுப்புண்ணா ?
அரசர்: இல்லை அமைச்சரே! அரியாடனத்திலே தடுக்கிக் கீழே விழுந்ததால் ஏற்ப்பட்ட புண்...
அதனால் 'விழுப்புண்' என்றேன்.
(நன்றி ஆனந்த விகடன், 7-3-82).
ஒரு அறுவை -
"வானம் மூடியிருக்கே மழை மேகமா ?"
"மழை may come"
சிலச்சமயம் அச்சுப் பிழைகளை அடிப்படையாகக் கொண்டு அழகான நகைச்சுவை
வருவதுண்டு. அதுவும் punல் ஒரு வகை.
"ஏண்டா உன்னை எடிட்டர் வேலையிலிருந்து எடுத்து விட்டார்"
"மாவட்ட கலெக்டர் ஹோட்டலுக்கு வந்தார் என்று போடுவதற்கு பதிலா, மாவாட்ட
கலெக்டர் ஹோட்டலுக்கு வந்தார்ன்னு போட்டுடேன்"
Posted by IdlyVadai at 4/06/2004 10:00:00 AM 0 comments
Monday, April 05, 2004
தமிழும் இணையமும்
கணினித்திரையில் "அ, ஆ, இ, ஈ" பார்த்து, பூரித்து இன்று சுமார் 12-13 வருடங்கள் இருக்கும்.
இன்று நாம் தமிழ் கணினியில் என்ன பெரிதாக சாதித்தோம் ?
தமிழ்.நெட் - அன்று Tamil.netல் இருந்த அதே கலைச் செல்லாக்கம் இன்றும் தொடர்கிறது, அன்று நடந்த
அதே குழாயடி சண்டை இன்று முத்திப்போய் உள்ளது.அன்று டிஸ்கி, டாப் என்று சண்டைப் போட்டோம்
இன்றும் அதையே வைத்துக்கொண்டு சண்டை போடுகிறேம்.
தமிழ் லினக்ஸ் - அதிலும் சண்டை.
கலக்குறே தமிழா ! புது குழுக்கள், புது சண்டை, பிரமாதம்
நல்ல வேளையாக யூனிகோட் வந்தது. இதில் சண்டை போடும் குழுக்களின் பங்கு அதிகம் இல்லாததால்
மரணப்படுக்கையில் இருந்த தமிழ், oxygen வைத்து தற்போது பிழைத்துள்ளது.
இன்று தமிழில் இணையத்தளம், வலைப்பதிவுகள், இணையக்குழுக்கள் என்று மிரட்டினாலும்.
அதில் எஞ்சி இருப்பது வெறும் குப்பையே.
தேடி சோறு நிதம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடி துன்பமிக உழன்று
பிறர் நோக கொடுஞ்செயல்கள் புரியும்
வெறும் வேடிக்கை மனிதரைப்போல
கல்வியில் மேன்மை பெற்று, பல சாதனைகள் புரிந்து , பல துறைகளில் ஞானம் பெற்றவர்களே நடந்து
கொள்ளவது தான் இணையக்குழுக்கள் இணையாமல் போனதற்கு காரணம்.
தமிழ் இணையம் வளராததர்க்கு மேலும் சில காரணங்கள் :
1. செயல்படுத்த ஒரு நல்ல Leader இல்லாதது.
2. தமிழ் இணையத்தளம் வைத்துள்ளவர்கள் சினிமாக்கு மட்டும்தான் என்று நினைப்பது.
3. செய்தித்தாள், பத்திரிக்கை வைத்துள்ளவர்கள் இணையத்திலும் ஒரு பதிப்பு போடுகிறார்களே தவிர,
இவர்கள் இன்னும் இணையத்தின் பயனை முழுமையாக உணரவில்லை.
4. Reinventing the wheel. என்ன இருக்கு என்பதை பார்க்காமல் எதையும் புதிதாக மீண்டும்
ஆரம்பிக்கும் பழக்கம். (இணையத்தில் முதலில் காலடி வைக்கும் இல்லேரும் திருக்குறளை
உள்ளிடுகிறார்கள். திருவள்ளுவர் இருந்திருந்தால் வருத்தப்பட்டிருப்பார்)
5. Search வசதி இல்லாதது.(தற்போது யூனிகோடில் உள்ளது ).
6. பல்கலைகழகங்களின் குறைவான பங்களிப்பு.
7. இணையம் வழி வணிகத்தில் கவனம் செலுத்தாமை
இவற்றிக்கெல்லாம் மேலாக ஒற்றுமை இன்மை, மற்றவர் செயல் பாடுகளில் குற்றம் காணும் போக்கு.
நினைக்கும் போதெல்லாம் அறிக்கைவிடுவது. மற்றவர் மனங்களை நோகடிப்பது .
இப்படி வேற்றுமை மனப்போக்கோடு செயல்பட்டுக்கொண்ப்பதால் நாம் இழந்தவை
1. தகவல் தொழில் நுட்பத்தின் பயன் முழுமையாக மக்களை சென்று சேராரது
2. இதனால் ஏற்படும் மன உலைச்சல்
3. மற்றவர்களூக்கு நாம் உருவாக்கித்தரும் சங்கடம்
4. நம் நேரம்
5. இணைய குழுக்கள் , மற்றும் தமிழ் இணையம் வெரும் காலத்தை விரையமாக்கும் கருவியே என்ற தவறான
கருத்தை பிறர் மனங்களில் பதிப்பித்தல் இவையே.
இன்று சொல்லிக்கொள்ளும்படியாக உள்ள ஒரே தளம், மதுரைத்திட்டம் மட்டும் தான்.
வேறு எதாவது நல்ல இணையத்தளம் இருந்தால் இங்கே தெரிவிக்கவும்.
இன்று ஆங்கிலத்தில் இருக்கும் வலைத்தளங்கள் போல் தமிழில் இருக்கா ? பதில் இல்லை.
ஒரு நல்ல மருத்துவத் தளம், தமிழில் எழுத்தாளருக்கு பஞ்சம் இல்லை அவர்களை பற்றி ஒரு தளம்,
தகவல் அறிவியல்/தொழில்நுட்பத்திருக்கு ஒரு தளம், இதெல்லாம் வேண்டாம் ஒரு சமையல்
குறிப்புக்குக் கூட இன்று ஒரு உருப்படியான தளம் இல்லை.
Sorting, Spell checking போன்ற basic மென்பொருள் இன்னும் முழுமையாக இல்லை.
மரத்தடி,ராகாகி குழுக்களிடையே நடைபெரும் மோதல்கள், இன்று வலைப்பதிவின் மறுமொழியிலும் மெகா
சீரியல் போல் தொடர்கிறது. இதைப் பார்த்தால் எனக்கு சிவசங்கர் பாபா, யாகவாமுனிவர் தான் ஞாபகம்
வருகிறது. (சிவசங்கர் பாபா, யாகவாமுனிவர் மன்னிப்பார்களாக).
இவ்விருக்குழுக்களில் இருக்கும் எல்லோரும் கீழ் வரும் ரோமாபுரிச் சக்கரவர்த்தி மார்க்க அரேலியருடைய ஆத்ம
சிந்தனை (தமிழில் ராஜாஜி) படித்துவிட்டு குழுக்களில் சேருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
"காலையில் எழுந்ததும் அடியிர் கண்டபடி உனக்குள் சிந்தித்துக்கொள்.
இன்று நான் கலகக்காரனைக் காண்பேன். குரூரமான இம்சையைப் பார்ப்பேன்,
நன்றி கெட்டவனைக் காண்பேன். மரியாதையற்றவன், மோசக்காரன், பொறாமைக்காரன் முதலிய
எல்லோரையும் சந்திப்பேன். அவர்கள் குற்றங்களுட்கெல்லாம் காரணம், நன்மை தீமை
அறியாத அவர்களுடைய அறியாமையேயாகும். ஆனால் நானோ நன்மை தீமைகளை நன்று
அறிவேன். நன்மையில் எனக்கு அழகு தோன்றுகிறது. தீமையில் அழகின்மையும் அவலக்ஷணமும்
காண்கிறேன். என்பால் ஒருவன் தீங்கு செய்தால், அவன் எனது உறவால் உடன்
பிறந்தானல்லானாயினும் ஆன்ம நேய ஒருமைப்பாட்டால் அவன் எனக்கு உடன் பிறந்தவனே.
பரம்பொருளில் ஒரு பாகம் நம்மிருவர் உள்ளத்திலும் இருக்கிறதல்லவா ? அவன் எனக்கு என்ன
தீங்கு செய்யமுடியும் ? என்னை தவிர, யாரும் என்னைக் கெடுக்க முடியாது தீங்கிழைப்பவன்
எனது தம்பியேயாதலுன் அவன்மீது நான் கோபமோ, வெறுப்போ கொள்ளலாகாது.
உலகத்திலுள்ள நாம் எல்லோரும் ஒன்றுபட்டு வாழப் பிறந்திருக்கிறோம். உடலிலுள்ள கைலளும்,
கால்களும், கண்ணிதழ்களும் மேல்வரிசை கீழ்வரிசைப் பற்களும்போல நாமும் ஒன்றுபட்டு
உழைக்கவேண்டும். இக்கடமையை மறந்து ஒருவருக்கொருவர் மாறாக வேலை செய்வது
இயற்கை அமைப்புக்கு முரணாகும். வெளியே காட்டாமல் ஒருவன்மீது உள்ளத்தில் கோபமாவது
வெறுப்பாவது கொள்வதும் முரண்படுவதேயாகும்; இயற்கையமைப்பின் உடன்பாட்டுழைப்பு
ஆகாது."
இல்லையேல் இந்த இரண்டு திருக்குறளையும் குளித்துவிட்டு, 108 முறை சொல்லிப் பார்த்துக் கொள்ளுங்கள்.
தீயினால் சுட்டப்புண் உள்ளாரும் ஆறாதே
நாவிலால் சுட்ட வடு
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்ப காய்கவர்ந் தற்று
Posted by IdlyVadai at 4/05/2004 12:52:00 PM 4 comments
Friday, April 02, 2004
நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் - 4
ரங்கா அவர்கள் - "கல்கி, தேவன் அவர்களின் உதாரணங்கள் எவ்வளவோ இருக்க வேறு ஏதும் கிடைக்கவில்லையா நோக்கு ? என்று எழுதியிருந்தார்.
தனக்கு பிடித்த உதாரணங்களை எனக்கு ஈ-மெயிலில் அனுப்பியிருந்தார்.
அதை இங்கு அப்படியே குடுத்துள்ளேன்.
என் கவனத்தைப் பெரிதும் கவர்ந்த ஒரு விஷயம் என்னவென்றால், ஒரு கடை விட்டு ஒரு
கடை hair cutting saloon ஆக இருந்ததுதான். நான் போன சமயம் இந்தக் கடைகளில் வேலை
சுறுசுறுப்பாக நடக்க வில்லை. 'இது ஏன் இப்படி?' என்று பக்கத்தில் வந்த சினேகிதரைக் கேட்டேன்.
'இப்போது மைசூரில் ரேஸ் நடக்கிறதல்லவா? அதனால்தான்' என்றார்.
'குதிரைப்பந்தயத்திற்கும் சவரக்கடை காலியாயிருப்பதற்கும் என்ன சம்பந்தம்?' என்று கேட்டேன்.
'ஏன் சம்பந்தமில்லை? இப்பொழுதுதான் ரேஸ்கோர்ஸிலேயே ஜனங்களை மழுங்க மொட்டை
அடித்துவிடுகிறார்களே? ஸலூன்களில் எப்படி வேலை இருக்கும்?'
- சௌந்தர்ய உலகம் ஆனந்த விகடன் 1936.
முதல் நண்பர் 'டாஸோவுக்குக் கவிதா சக்தி அதிகம்' என்றார். இரண்டாம் நண்பர் 'அரிஸ்டோ வின்
வசன நடையில் தேனொழுகுகிறது' என்றார். 'ஹாஸ்ய ரசத்தில் டாஸோவுக்கு மிஞித்தான்' என்றார்
ஒருவர். 'மொத்தத்தில் அரிஸ்டோ வுக்கு ஈடானவர் எவருமில்லை' என்றார் மற்றவர்.
இவர்களுக்குள் விவாதம் முற்றி வார்த்தை தடித்து கடைசியில் பெருஞ் சண்டையாகி விட்டது.
இருவரும் கத்தியெடுத்து ஒருவரோடொருவர் பலமாக சண்டை போட்டார்கள். இருவரும் பலத்த
காயமடைந்து கீழே விழுந்தார்கள். அப்போது முதல் நண்பன் சொன்னான் - 'ஐயோ! டாஸோவுக்காக
நான் உயிர் விடுகிறேன். ஆனால் அவன் புஸ்தகத்தில் ஒரு வரி கூடப் படித்ததில்லை.!' என்றான்.
இரண்டாவது நண்பன் சொன்னான் -'அட கர்மமே! நானும் அரிஸ்டோ வின் நூலில் ஒன்று கூட
படித்தது கிடையாது! இதற்காகவா நாம் சண்டை போட்டோ ம்?' என்றான். இப்படித்தான் சாதாரண
ஜனங்களாகிய நாம் சண்டை போட்டுக்கொண்டு சாகிறோம்.
-- ஏட்டிக்குப் போட்டி
தேவன் எழுத்துக்கள்....
..... இந்தக்காலத்தில் குழந்தைகள் எல்லாம் வேறு மாதிரி இருக்கின்றன. எல்லாக் குழந்தைகளும் இப்போது
'கௌன்' போட்டுக்கொள்கின்றன. தலைமயிர், பேச்சு, உடை ஒன்றாவது அவை ஆணா பெண்ணா
வென்று ஊர்ஜிதம் செய்ய இடம் கொடுக்க மாட்டேனென்கிறது. நாமாக ஊகிக்கும் ஒவ்வொரு
சமயமும் தெய்வ சங்கல்பத்தால் நாம் தவறுதலாகத்தான் ஊகிக்கிறோம். ஆண் குழந்தையை 'அவள்'
என்று அழைக்கும் அனியாயத்தையும் பெண் குழந்தையை 'அவன்' என்றழைக்கும் அக்கிரமத்தையும்,
சம்பந்தப்பட்ட குழந்தையின் பெற்றோர்களும் உற்றார்களும் கேட்டு, நம்மை ஒரு மடையனுடன்
போக்கிரியும் கூட என்றே மதிப்பார்கள். இதற்குச் சரியான உபாயம் என்னவென்றால் 'கண்ணு' என்று
அழைப்பதுதான். கண்ணு என்கிற பதம் குழந்தை ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் வெகு
அழகாய்ப் பொருந்துகிறது. மேலும் தாயாருக்குத் திருப்தியை அளிக்கும். எக்காரணத்தை முன்னிட்டும்
'குழந்தைக்கு அப்பா மூஞ்சியை உரித்து வைத்திருக்கு' என்று சொல்லத் தவறக் கூடாது. இந்த
வார்த்தையைப் போட்டு விட்டீர்களோ பெற்றோர் உம்மை சரணாகதி அடைந்து விடுவார்கள். இது
விஷயமாக தைரியமாக சத்தியம் கூட செய்யலாம். ஏனெனில் குழந்தையின் முகம் அதன் தகப்பனார்
சாயலாக, ஏன் , உலகத்தில் எந்தப் பொருளின் சாயலாகவுமா இருக்கிறது? அது வெறும் 'கொள கொளா'
தானே இப்போது?
---- குழந்தைகள்
Posted by IdlyVadai at 4/02/2004 03:10:00 PM 0 comments