பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, November 10, 2003

இணைய(யாத?) குழுக்கள்

மரத்(அடி)தடி என்று முன்பு நான் எழுதிய ஒரு பகுதியை பார்த்து. "நீங்கள் ரொம்ப
மிகைப்படுத்தி (exaggerate) எழுதுகிறிர்கள் என்று சிலர் எனக்கு தனிமடல் அனுப்பினார்கள்.
தற்பொது அங்கு நடக்கும் விவாதங்களும், விமர்சனங்களும் பார்த்தால் நான் எழுதியது கொஞ்சம்
கம்மி என்று குழந்தைக்கு கூட புரியும்.
முதல் சில மடல்களில் எழுதும் போது அண்ணா, தம்பி, அக்கா, ஏன் மாமி என்று கூட
கூப்பிட்டு கொள்கிறார்கள். பிறகு எங்கடா உன் குடுமி என்று அடித்துக் கொள்கிறார்கள்.
தன் வீட்டுக்குள் அடித்துக் கொள்ள ஆள் இல்லாமல் பக்கத்து வீட்டில் உள்ளவர்களையும்
கூப்பிட்டு கொள்கிறார்கள்.
சிறு பிள்ளைதனமாக அடித்து கொண்டு இப்போது கோர்ட் படி ஏரவும் துணிந்துவிட்டார்கள்.
இவர்கள் எழுதிய மடல்களை அவர்களே ஒரு வருடம், ஏன் ஒரு மாசம் கழித்து படித்தால்
அவர்களுக்கே நிச்சியமாக சிரிப்பு வரும்.
இணைய குழுக்களில் கருத்து வேறுபாடு வருவதர்க்கு எனக்கு தெரிந்த காரணங்கள் இங்கு
குடுத்திருக்கிறேன். ( இது தமிழருக்கே உரித்த குணம் என்று ஜகா வாங்க வேண்டாம்).
1. சகிப்புத் தன்மை 0.01% இருப்பதனால்.
2. வார்த்தை பிரயேகம் கவிதைக்கு மட்டும் என்று என்னுவதால்.
3. நகைச்சுவை உணர்வு இல்லாதது.
4. "Waiting to settle scores" மனப்பான்மை.
5. வேறுபட்ட வயதினர், மாறுபட்ட கருத்துக்கள், எதையும் seriousஆக எடுத்துக்கொள்ளும்
மனப்பான்மை.

ரோட்டில் இருவர் அடித்துக் கொண்டால் கூட்டம் கூடும், அதே போல்தான் இந்த குழுக்களிலும்
கூட்டம் சேரும். வேடிக்கை பார்க்க, வெண்பா எழுத இல்லை.

கடைசியாக மூல காரணம், எல்லோருக்கும் இருக்கும் EGO

2 Comments:

மடல்காரன்_MadalKaran said...

சரியாதான் சொன்னீங்க.. 2004 பதிவுக்கு இப்போதான் பின்னூட்டம் போடறேன் நெனைக்காதீங்க இப்பதான் ஒங்களோட இட்லிவடை வாசம் எனக்கு அடிச்சது.. ஒன்னொன்னா படிச்சுகிட்டு இருக்கேன்..

Arun said...

IV, அன்னிக்கு நீங்க சொன்னது இன்னைக்கு Orkut குழுமங்களுக்கும் பொருந்த்தும். ஜாதி, மதம்னு மாறி மாறி அடிச்சிக்கிறானுங்க.. படிச்சு பாத்தா சிப்பு வருது சிப்பு..
இதுல கருத்து விவாதம் பண்ணு. வறட்டு விவாதம் பண்ணாதன்னு ஒரே காமெடி வேர... :-)