பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, March 29, 2004

நகைச்சுவை ஒர் எளிய அறிமுகம் - 2

கல்கி, தேவன் எழுத்திலிருந்து தலா ஒரு உதாரணம் பார்த்துவிட்டு அடுத்த
வகைக்குச் செல்லலாம்.
முதலில் தேவன்:
ஈசுவர சாட்சியாக நான் 1908 வருஷம் மே மாதம் பத்தாம் தேதி அவதாரம் செய்தேன்.
வழக்கம் போல் எனக்கு பெற்றோர் இருவர்தான்; தாயும் தகப்பனும்.
என் தகப்பனார் காடு மிசையுடன்கூடிய ஒரு போலிஸ் கான்ஸ்டபிள். நான் பிறக்கும் போதே
தம்முடைய தியாகத்தினால் ஹெட்கான்ஸ்டபிள் பதவியை அடைந்துவிட்டார். என் தகப்பனாரை
நான் மறக்கவே மாட்டேன். ஏனென்றால் அவர் பெரிய பெரிய சண்டைகளெல்லாம் போட்டிருக்கிறார்.
ஒரு சமயம் ஒரு கொள்ளைக் கூட்டத்தாரை ஒற்றைக் கையினால் - அவருடைய மற்றொரு கை சட்டைப்
பைக்குள் இருந்தது - அடித்துத்தூரத்தியிருக்கிறார்.
என் தாயாரும் நல்ல தைரியசாலி. அவளுக்குக் கலியாணமாவதற்கு முன் பல பெரிய மனிதர்கள்
வீட்டிலெல்லாம் வேலை செய்திருக்கிறாளாம். ஒரு இடத்திலாவது ஒரு வாரத்திற்குமேல் இருந்தது
கிடையாதாம். இதன் காரணமாக எங்கள் வீட்டில் இன்றைக்கும் பல பெயர்கள் போட்ட வெள்ளிப்
பாத்திரங்கள் இருக்கின்றன. அம்மாவையும் அப்பாவையும் பற்றி சொன்னது போது. இனிமேல்
என்னைப்பற்றித்தான்......
(அலமுவின் சுய சரிதை, தேவன், பெயர் போன புளுகுகள், அலையன்ஸ்)

அடுத்தது கல்கி:
ஒருநாள் பங்களூர் வீதியில் ஒரு மனிதர் ஓட அவருக்குப் பின்னால் "ஃபயர் எஞ்சின்" ஒன்று ஓடுவதை
பார்தேன். உடனே, "கண்டேன் ராமனை" என்று தீர்மானித்து அவரை தாவி பிடித்து இப்பால்
இழுத்து வந்தேன் கொஞ்சம் மூச்சு வாங்குவது நின்றதும் அவர் "யார் நீ? என்ன வேண்டும்?"
என்றார். ஒன்றுமில்லை ஐயா! ஏதோ நோபிள் பிரைசாமே! இதை எங்கேயோ சீமையிலிருந்து
வாங்கிக்கொண்டு வந்திருகிறீராமே! அதைக் கொஞ்சம் காட்டும் பார்க்கலாம்.....
நன்றாயிருந்தால் நான்கூட ஒன்று வாங்கலாமென்ற உத்தேசம்" என்றேன்.... பிறகு விசாரித்ததில்
உண்மை தெரிந்தது. அந்த பேர்வழி ஸி.வி.ராமன் அல்லவாம். அவரிடம் அசூயை கொண்டு
அவரை வேலையிலிருந்து நீக்கும்படி வில்லிங்டன் பிரபுவுக்கு ஓயாமல் விண்ணப்பம்
போட்டுக் கொண்டிருக்கும் பிரகிருதிகளில் ஒருவனாம்."ஐயோ! ஒரு தமிழன் இவ்வளவு மேல்
பதவியில் இருப்பதா! என் வயிற்றை எரிகிறதே! என்று அவன் அலறினானாம். அவனுடைய
வயிற்று நெருப்பை அணைப்பதற்குத்தான் அந்த "ஃபயர் எஞ்சின்" ஓடி வந்தாம்.
(கல்கி களஞ்சியம், கட்டுமுட்டை, வானதி பதிப்பகம்).

0 Comments: