பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, March 31, 2004

நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் - 3

பொதுவாகவே இப்போது நகைச்சுவை உணர்வு குறைந்து வருகிறது. டிவியில்
ஒளிபரப்பப்படும் நகைச்சுவை நாடங்களில் கூட, பின்னணியில் 'சிரிப்பு ஒலி'யை
சேர்த்து பதிவு செய்கிறார்கள். எந்த எடத்தில் சிரிக்க வேண்டும் என்பது நேயர்களுக்கு தெரியாது
என்பதால்தான் அவர்களுக்கு உதவும் வகையில் பின்னணியில் சிரித்துக்காட்டுகிறார்கள்.

கிரேசி மோகன் நாடகத்திலிருந்து Exaggerationக்கு ஒரு உதாரணம்.
மிகவும் பிடிப்பாக இருந்த 'பேண்ட்டைச் சற்று தளர்த்தச் சொல்லி தையல்காரரரிடம்
கொடுத்தால், அவர் மிகவும் 'லூஸ்' பண்ணிவிடுகிறார்... பாதிக்கப்பட்டவர் சொல்லுகிறார்
'ஓட்டலில் சாப்பிட்டு நான் எழுந்தாச்சு என் பேண்ட் எழுந்திருக்கவே இல்லை.

நாளை அடுத்த வகையைப் பார்க்கலாம்.

Read More...

Tuesday, March 30, 2004

டைப்ரைட்டூன் - 9

typetoondb

Read More...

Monday, March 29, 2004

நகைச்சுவை ஒர் எளிய அறிமுகம் - 2

கல்கி, தேவன் எழுத்திலிருந்து தலா ஒரு உதாரணம் பார்த்துவிட்டு அடுத்த
வகைக்குச் செல்லலாம்.
முதலில் தேவன்:
ஈசுவர சாட்சியாக நான் 1908 வருஷம் மே மாதம் பத்தாம் தேதி அவதாரம் செய்தேன்.
வழக்கம் போல் எனக்கு பெற்றோர் இருவர்தான்; தாயும் தகப்பனும்.
என் தகப்பனார் காடு மிசையுடன்கூடிய ஒரு போலிஸ் கான்ஸ்டபிள். நான் பிறக்கும் போதே
தம்முடைய தியாகத்தினால் ஹெட்கான்ஸ்டபிள் பதவியை அடைந்துவிட்டார். என் தகப்பனாரை
நான் மறக்கவே மாட்டேன். ஏனென்றால் அவர் பெரிய பெரிய சண்டைகளெல்லாம் போட்டிருக்கிறார்.
ஒரு சமயம் ஒரு கொள்ளைக் கூட்டத்தாரை ஒற்றைக் கையினால் - அவருடைய மற்றொரு கை சட்டைப்
பைக்குள் இருந்தது - அடித்துத்தூரத்தியிருக்கிறார்.
என் தாயாரும் நல்ல தைரியசாலி. அவளுக்குக் கலியாணமாவதற்கு முன் பல பெரிய மனிதர்கள்
வீட்டிலெல்லாம் வேலை செய்திருக்கிறாளாம். ஒரு இடத்திலாவது ஒரு வாரத்திற்குமேல் இருந்தது
கிடையாதாம். இதன் காரணமாக எங்கள் வீட்டில் இன்றைக்கும் பல பெயர்கள் போட்ட வெள்ளிப்
பாத்திரங்கள் இருக்கின்றன. அம்மாவையும் அப்பாவையும் பற்றி சொன்னது போது. இனிமேல்
என்னைப்பற்றித்தான்......
(அலமுவின் சுய சரிதை, தேவன், பெயர் போன புளுகுகள், அலையன்ஸ்)

அடுத்தது கல்கி:
ஒருநாள் பங்களூர் வீதியில் ஒரு மனிதர் ஓட அவருக்குப் பின்னால் "ஃபயர் எஞ்சின்" ஒன்று ஓடுவதை
பார்தேன். உடனே, "கண்டேன் ராமனை" என்று தீர்மானித்து அவரை தாவி பிடித்து இப்பால்
இழுத்து வந்தேன் கொஞ்சம் மூச்சு வாங்குவது நின்றதும் அவர் "யார் நீ? என்ன வேண்டும்?"
என்றார். ஒன்றுமில்லை ஐயா! ஏதோ நோபிள் பிரைசாமே! இதை எங்கேயோ சீமையிலிருந்து
வாங்கிக்கொண்டு வந்திருகிறீராமே! அதைக் கொஞ்சம் காட்டும் பார்க்கலாம்.....
நன்றாயிருந்தால் நான்கூட ஒன்று வாங்கலாமென்ற உத்தேசம்" என்றேன்.... பிறகு விசாரித்ததில்
உண்மை தெரிந்தது. அந்த பேர்வழி ஸி.வி.ராமன் அல்லவாம். அவரிடம் அசூயை கொண்டு
அவரை வேலையிலிருந்து நீக்கும்படி வில்லிங்டன் பிரபுவுக்கு ஓயாமல் விண்ணப்பம்
போட்டுக் கொண்டிருக்கும் பிரகிருதிகளில் ஒருவனாம்."ஐயோ! ஒரு தமிழன் இவ்வளவு மேல்
பதவியில் இருப்பதா! என் வயிற்றை எரிகிறதே! என்று அவன் அலறினானாம். அவனுடைய
வயிற்று நெருப்பை அணைப்பதற்குத்தான் அந்த "ஃபயர் எஞ்சின்" ஓடி வந்தாம்.
(கல்கி களஞ்சியம், கட்டுமுட்டை, வானதி பதிப்பகம்).

Read More...

Thursday, March 25, 2004

நகைச்சுவை ஒர் எளிய அறிமுகம் - 1

நகைச்சுவை ஒர் எளிய அறிமுகம்.

எழுதுவது கஷ்டம், நகைச்சுவையாக எழுதுவது அதைவிட கஷ்டம்;
சிரிப்பது சுலபம், சிரிக்க வைப்பது தான் கடினமான காரியம் போன்ற நகைச்சுவைக்
கட்டுரைக்கான சம்பிரதாய வரிகளை கொண்டு இக்கட்டுரை ஆரம்பமாகிறது.

நகைச்சுவையை define செய்வது கொஞ்சம் கஷ்டம். நான் அதை
செய்யப் போவதில்லை. ஆனால் நகைச்சுவையின் பல வகைகளை கொஞ்சம் அலசி
பார்க்க உத்தேசித்துள்ளேன்.
பெரிய முன்னுரை குடுக்க ஆசைதான், ஆனால் முன்னுரை என்பது புதிதாகக் கட்டிய
வீட்டை பார்க்க வருகிறவர்களின் தலையில் இடிக்கும் திருஷ்டிப் பூசணிக்காய் போல்
வழி மரிக்கக் கூடாது என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
(நம்ம கிட்ட சரக்கும் அவ்வளவுதான்:-)
மறப்பதற்கு முன், தேவன், கல்கி, பாக்கியம் ராமசாமி, முகுந்தன், சத்யா, ஜே.எஸ்.ராகவன்,
மகரம், மு.சாயபு மரைக்காயர் மற்றும் பலருக்கு என் நன்றிகள்.

நனைச்சுவையில் ஒரு வகை Exaggeration - மிகைப்படுத்துதல். பெரும்பாலானவர்கள்
பயன்படுத்தும் உத்தி. ஒரு சம்பவம் அல்லது ஒரு கருத்தை மிகைப்படுத்துவதன் மூலம் இதை
சுலபமாக உருவாக்கலாம்.
கிரேசி மோகன், S.V.சேகர் நாடகத்தில் இதைப் பெரும்பாலும் பார்க்கலாம். ஜெயலலிதாவை
நிரந்தரமுதல்வர், காவிரித்தாய்.. மற்றும் பல அரசியல் உதாரணங்களை இதற்கு சொல்லலாம்.

ஜே.எஸ்.ராகவனின் நகைச்சுவை கட்டுரையில்(திருமதி, திருப்பதி, க்ரோர்பதி, ஜெனரல் பப்ளிஷர்ஸ்)
வெளியிடு ). டெலிபோன் அதிகாரியின் மனைவி தன் கணவருக்கு - சே! இந்த மனுஷன்
தீபாவளி சமயம் பார்த்து ஊரில் இல்லாமல் எங்கேயோ போய் உட்கார்ந்து கொண்டு இருக்காரே..
என்று சலித்துக்கொண்டு, கணவனுக்கு எழுதப்பட்ட கடிதம். இதில் வரும் exaggerationனை
கவனியுங்கள்.


ஹலோ,
இன்னிக்கு படிக்கையை விட்டு எழுந்தவுடன் வலது கையை பார்த்திண்டபோது திக்கென்றது.
கையில் இரண்டு சுண்டு விரல்கள். அப்புறம் பார்த்தால், நேத்திராத்திரி உங்களை டெலிபொனில்
காண்டாக்ட் பண்ண டயல் செய்து என்னுடைய ஆள்காட்டி விரல், சுண்டு விரல் சைஸாக
தேய்ந்துவிட்டது புரிந்தது. நீங்களும் உங்க போனும். ஹூம். அங்கே எத்தனை நாள் டெண்ட்.
என்ன சார், எதாவது "டெம்பரரி கனெக்ஷ்னா ?"

நீங்கள் போட்டிருந்த லெட்டரை கோபு வீட்டு மாமி கொடுத்துவிட்டுப் போனாள்.
வீட்டு நம்பர் தப்பாக எழுதி இருந்தீர்கள். இதிலும் ராங் நம்பரா ? காப்பிக்கும், வம்புக்கும்
உட்காந்த அந்த மாமி, நாம போன மாசம் போட்டுண்ட சண்டையை பத்தி விசாரித்தாள்.
'கீராஸ்டாக்'காக வெளியே நின்னுண்டு கேட்டாளாம். கர்மம்!

நம்ம கடைக்குட்டி கிட்டுவுக்குப் பக்கத்துவிட்டுக்காரர்கள் 173 என்று பெயர் வெச்சிருக்கார்கள்.
விடிகார்த்தாலே 4 மணிக்கு அலறி எல்லேரையும் எழுப்பி விடறானாம். 173 நம்பர் மார்னிங்
அலாரம் சர்விஸ் நம்பர்தானே ? ரொம்ப கொழுப்புதான். போன லெட்டரில் நம்ப 'டயல்' எப்படி
இருக்கான்னு எழுதியிருந்தேளே. மண்டையை உடைச்சிண்டடேன் இப்பத்தான் புரியறது 'பயல்'
என்கிறதை அவ்வளவு அழாக எழுதியிருக்கேள் என்று.

அடுத்த வாரம் தீபாவளி. ஒரு மாசமா மதறாஸிலிருந்து அன்னவர்த்திராயன் பேட்டைக்கு டிரங்க்கால்
போட்டுப் பேசுபவரை போல காட்டுக் கத்தலாகக் கத்தியும் உங்கள் காதில் விழவில்லை. உங்கம்மா
நம்ம குடும்பத்தில் நான்தான் மெளத் பீஸ் நீங்கதான் 'ரிசீவர்' என்று கேலி செய்யறா.

உங்க பெண்ணுக்குத் தீபாவளிக்கு ரிங் வேணுமாம். அப்புறம் நம்ம வீட்டு டெலிபோன் நம்பரை
மாத்தணுமாம். 362436ங்கிறது உன்னுடைய உடம்பு அளவான்னு அவளேட ஆபீஸ் ஆம்பளைகள்
கேலி செய்யறா.

சீக்கிரம் அவளுக்கு கல்யாணத்தைப் பண்ணி வைக்கணும். இல்லாட்டி ஏதேனும் பையனை
அழைச்சிண்டு வந்து நாங்க 'எங்கேஜ்ட்'ன்னு சொல்லிடப் போறது. நீங்க பாட்டுக்கு டெலிபோன்
எக்சேஞ்சுக்கே போய்ட்டு வந்திண்டிருந்தா எப்படி ? கொஞ்சம் ஹாரஸ்கோப் எக்சேஞ்சுக்கும் போயிட்டு
வாஞ்கோ.

இப்படிக்கு
ஹலோசனா

Read More...

நச் பூமராங், நன்றி வீரப்பன், நன்றி அருண் :-)

திரு அருண் வைத்யநாதன் அவர்களின் நச் பூமராங்.

1. "வீரப்பன் தினமும் ரேடியோ கேட்கிறான்" - நக்கீரன் கோபால்
நியாயப்படி 'ரௌடி'யோ இல்ல கேட்கணும் ?!


2. "ராஜ்குமாரை கடத்திக்கொண்டு போய்விட்டான் வீரப்பன்" - செய்தி.
சந்தனம்,தந்தம்னு பூலோக மேட்டர்லாம் போரடிச்சு, நட்சத்திரங்களைக்
கடத்த ஆரம்பிச்சுட்டானா?!


3. காட்டில் வீரப்பன் கண்மூடி, கைகூப்பி சாமி கும்பிடுகிறான் - நக்கீரன் கோபால்
கண்மூடித்தனமான பக்தி என்பது இது தானோ?!

4. "ராஜ்குமாரை அடுத்தமாதம் வீரப்பன் விடுவிப்பான்" - செய்தி.
இந்த ரிலீசுக்கு L சர்ட்டிபிக்கெட்டாம்...Lucky people Only!

முந்தய வீரப்பன் நச் பூமராங்

Read More...

Wednesday, March 24, 2004

நச் பூமராங், நன்றி வீரப்பன்.

நச் பூமராங், பலருக்கு புரியவில்லை என்று தோன்றுகிறது.
என் version இங்கே:
1. "வீரப்பன் தினமும் ரேடியோ கேட்கிறான்" - நக்கீரன் கோபால்
" 'பண்பலை' வரிசையை எப்போது கேட்கப்போகிறான் ?"

2. "ராஜ்குமாரை கடத்திக்கொண்டு போய்விட்டான் வீரப்பன்" - செய்தி.
"கால்ஷிட்டு கேட்டிருந்தால் அவரே குடுத்திருப்பார்"

3. காட்டில் வீரப்பன் கண்மூடி, கைகூப்பி சாமி கும்பிடுகிறான் - நக்கீரன் கோபால்
" உச்சரிப்பது 'தேவாரமாக' இருக்குமோ ?"

4. "ராஜ்குமாரை அடுத்தமாதம் வீரப்பன் விடுவிப்பான்" - செய்தி.
"கடத்தப்பட்டவர் பிரபல நடிகராக இருப்பதால், தீபாவளி சமயத்தில் ரிலீஸ் செய்வதுதான்
பொருத்தம் என்று வீரப்பன் நினைத்திருப்பான்."

இதற்கு வேறு நல்ல நச் பூமரங் இருந்தால் எனக்கு அனுப்பவும்.

Read More...

Tuesday, March 23, 2004

நகை+சுவை+4+1 = நகைச்சுவை - 5

நெத்தியடி அடித்த மினாக்ஸூக்கு ஒரு ஸ்பெஷல் "ஓ".
மனைவி, கணவனிடம்: "சும்மா இருங்க.. டாக்டருக்குத் தெரியாதது உங்களுக்குத் தெரியுமா? பேசாம படுங்க..!!"

திரு அருண் அவர்கள் "நச் பூமராங்" என்று எழுதுவது பலருக்கு தெரிந்திருக்களாம்.
தெரியாதவர்கள் இங்கே பார்கவும்.
இன்று நச் பூமராங் டைப்பில் சில நகைச்சுவை. வீரப்பன்-ராஜ்குமார் விவகாரத்தை தழுவியது.

1. "வீரப்பன் தினமும் ரேடியோ கேட்கிறான்" - நக்கீரன் கோபால்

2. "ராஜ்குமாரை கடத்திக்கொண்டு போய்விட்டான் வீரப்பன்" - செய்தி.

3. காட்டில் வீரப்பன் கண்மூடி, கைகூப்பி சாமி கும்பிடுகிறான் - நக்கீரன் கோபால்

4. "ராஜ்குமாரை அடுத்தமாதம் வீரப்பன் விடுவிப்பான்" - செய்தி.

வழக்கம் போல் பூமரங் இருந்தால் எழுதி அனுப்புங்கள்.

Read More...

Monday, March 22, 2004

நகை+சுவை+3+1 = நகைச்சுவை - 4

4. நான் உயிருடன் இருக்கிறேன்
ஒருவன் மாடியிலிருந்து கீழே விழுந்து விட்டான். மயங்கிய நிலையில்
இருந்த அவனை வீட்டுக்குள் தூக்கி சென்றார்கள்.
சிறிது நேரத்தில் ஒரு டாக்டர் வந்தார். பரிசேதித்துப் பார்த்துவிட்டு
"இவர் இறந்துவிட்டார்" என்றார்.
அடிப்பட்டவனோ திடுக்கிட்டு விழித்து
"இல்லை டாக்டர்! நான் உயிருடன்தான் இருக்கிறேன்" என்றான்.
மனைவியின் பதில் - எழுதி அனுப்புங்கள்.

Read More...

Friday, March 19, 2004

டிவி டாப் 10+2

அப்பாடா, ஒருவழியாக வலைப்பதிவு எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்க கூடாது என்று
விவாதம் ஒய்ந்துவிட்டது. விவாதத்தில் நடந்த ஒரே நன்மை, பல வலைப்பதிவுகளை பற்றிய
அறிமுகம் கிடைத்ததுதான். பல வலைப்பதிவுகளை பார்த்த பொழுது, எனக்கு நம்ம டிவி நிகழ்ச்சிகள் தான்
ஞாபகம் வந்தது. அதன் விளைவு டிவி டாப் டென் + 2.

1. மலரும் மொட்டும் ( சன் டிவி ):
இந்த நிகழ்ச்சியில் மதி/காசி குழந்தைகளை "வாங்க வாங்க" என்று கூப்பிட்டு உங்களுக்கு
தெரிந்ததை எழுதுங்க என்கிற வலைப்பதிவு. குழந்தைகளும் திக்கித்திணரி தங்களுக்கு
தெரிந்தவற்றை செல்வார்கள், சாரி எழுதுவார்கள். இதில் வரும் குழந்தைகள் முதலில்
"ஐயோ எனக்கு பயமாக இருக்கு" என்று சொல்லிவிட்டு எழுத ஆரம்பிப்பார்கள்.
அது வலைப்பூவின் மரபு. இப்போழுது திரு செல்வராஜ் 25வது குழந்தையாக வந்துள்ளார்.
இவர் என்ன rhyme சொல்கிறார் என்று பார்க்கலாம்.
பி.கு : குழந்தையை - கிழந்தை என்று படிக்கவும்.

2. யாத்திரை (விஜய் டிவி):
பவித்ரா தான் சென்றுவந்த ஊர்களைப்பற்றி சில சரித்திரக்குறிப்புடன்
தருகிறார். எங்கே ரயில் ஏறினார்கள், எங்கே போட்டொ எடுத்தார்கள் போன்ற எதிர்கால சரித்திரமும்
உண்டு. எச்சரிக்கை: கல்கியின் பொன்னியின் செல்லவனால் அதிகம் பாதிக்கப்பட்டவர்.

3. UGC(Doordarshan):
Professor திரு வெங்கட் தனது வலைப்பதிவில் அறிவியல்,
தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துகிறார். இவரது வலைப்பதிவை பார்த்துதான்
ஒ, இதல்லாம் வந்திருக்கு என்று தெரிந்துக்கொள்ளாம். பல நல்ல மென்பொருட்களை
(microsoft தவிர) நமக்கு அறிமுகபடித்திகிறார்.

4. Hello தமிழா (விஜய் டிவி:)
தமிழில் வலைப்பதிவு ஆரம்பி தமிழா என்றார்.
இபோழுது Personal touch இல்லையே என்று வருத்தப்படுகிறார். இவருக்கு ஒரு வலைப்பதிவு உண்டு.
பி.கு: ஒவ்வொரு அம்மாவாசைக்கும் இவர் வலைப்பதிவு update ஆவது துரதிஷ்டவசமானது.

5. காவியாஞ்சலி (விஜய் டிவி) :
பலர் காவியம் படைக்கவேண்டும் என்று வலைப்பதிவு ஆரம்பித்தார்கள்.
ஓன்று,இரண்டு பதிவுகளுடன் அடக்கம் செய்துவிட்டு தற்போது அஞ்சலி செய்து கொண்டிருக்கிறார்கள்.

6. மங்கையர் சாய்ஸ் (சன் டிவி:) - 1, 2, 3
பெண்களுக்கு அவள் விகடன்/குமுதம் சினேகிதி டைப் வலைப்பதிவு.
புதுமைப்பெண், சம உரிமை பொன்ற usual முழக்கங்களும் உண்டு. நான் நடு ராத்திரி தூக்கம்
வரவில்லையென்றால் படிக்கும் வலைப்பதிவு.

7. சென்ற வார உலகம் ( சன் டிவி ):
மற்ற வலைப்பதிவில், வலைத்தளத்தில் இருப்பதை வெட்டி, தன் வலைப்பதிவில் சென்ற வார உலகம்
டைப்பில் குடுப்பவர். எனக்கு என்னமொ இந்த வலைப்பதிவை சலூன் என்ற பெயர் வைக்கலாம் என்று
தோன்றுகிறது (சகட்டு மேனிக்கு வெட்டுவதால்). இப்பொழுது Election Comission போல் வாக்குப்பதிவு
நடத்துகிறார்.

8. ஆடுகிறான் கண்ணன் (சன் டிவி) 1, 2 :
பல தமிழ் மொழிகளில் (டிஸ்கி, யூனிகேடு) வலைப்பதிவு
வைத்துள்ளவர். அடிக்கடி ஏ.கே.ராமனுஜத்துடன் walk செல்பவர். முன்பு ஜெர்மனியில், இப்பொழுது
கொரியாவில். பாசுர மடல், என் மடல் என்று மடமட வென்று எழுதித்தள்பவர்.

9. செய்திகள்(பல டிவி):
செய்திகளை படங்களுடன் சுடசுட தருபவார். நிஜமாகவே டிவியில் வந்தவர்.
கிரிக்கெட்டை தலைப்பு செய்தியாக தருபவர். தினமலர், ஹிண்டு பத்திரிக்கை படித்து மேற்கோள்
காட்டுபவர். முன்பு ஜெயலலிதா குட்டி கதைகளை தந்தார். திசைகளின் official ரிப்பொட்டர்.
செய்திகளின் நடுவே டைனோ பற்றி சிறப்பு பார்வை.
காலை காபியுடன் இவர் வலைப்பதிவை படிக்கலாம்.

10. அண்ணாமலை(சன் டிவி):
குஷ்புவிற்கு முன்பு தமிழன் கோவில் கட்டினான். இவர்கள் ரஜினிக்கு
வலைப்பதிவு ஆரம்பித்திருக்கிறார்கள். இவர்களை "அந்த ஆண்டவன் தான் காப்பாதணும்".

11. கவிச்சேலை(சன் டிவி):
கவிதையென்று தனக்கு தோன்றியவற்றை "பிட்சா கோக்" சாப்பிட்டுக்கொண்டு
எழுதுபவர்கள். ஒரே ஆறுதல் இந்த பதிவுகளில் சில நல்ல calendar படங்கள் இருப்பது.

12. Timeக்கு comedy(ஜெயா டிவி):
இட்லிவடை - எதையாவது எழுதி கமெடி என்று சொல்லிக்கொண்டு இருப்பவர்.
வெளியே வந்தால் இட்லி உப்புமாவாக்க பலர் காத்துகொண்டு இருக்கிறார்கள்



Read More...

கடைசி ஆசை - கணவனின் பதில்.

காசியின் பதிலை கொஞ்சம் மாற்றினால் கிடைக்கும் பதில் -
"அவனை பழிவாங்க வேறு வழி தெரியவில்லை"
திங்கள் அன்று நகைக்சுவை-4

Read More...

Thursday, March 18, 2004

நகை+சுவை+2+1 = நகைச்சுவை - 3

முன்சாமி பற்றி பத்திரிக்கை வெளியிட்ட செய்தி -
"முன்சாமி இன்னும் சாகவில்லை, வருந்துகிறோம்"

சரியாக பதில் சென்ன சிவா, மினாக்ஸ் & அருண் அவர்களுக்கு ஒரு "ஓ".
காசியின் மிஸ்டர் எக்ஸ் ஜோக் அருமை. இவர்களை தவிர இதற்கு சிரிக்காதவர்களுக்கு
"humor proof" என்ற பட்டத்தை அளிக்கிறேன்.

3. கடைசி ஆசை
மரண படுக்கையில் கணவன்..
"இன்னும் சில நாட்கள் தான் உயிரோடிருக்கப் போகிறார்" என்று டாக்டர் கூறிவிட்டார்.
மனைவியை பார்த்து கணவன்
"என் கடைசி ஆசையை சொல்கிறேன் மறுக்காமல் நிறைவேற்றி வைப்பாயா?"
"சொல்லுங்க! நிச்சயம் நிறைவேற்றுகிறேன்"
"நான் இறந்ததும் நீ ராஜாவை கல்யாணம் பண்ணிக்க வேண்டும்"
"ராஜாவையா அவர் உங்க பரம விரேதியாச்சே!"

கணவனின் பதில் என்ன.
நச் பதில்களை எனக்கு அனுப்பவும்.

Read More...

Wednesday, March 17, 2004

நகை+சுவை+1+1 = நகைச்சுவை - 2

நேற்றைய பகுதியில் கணவனின் பதில் :
"அந்த சட்டைக்குள் நான் இருந்தேன்!"
comments + emails க்கு நன்றி.

2. முன்சாமி
திரு முன்சாமி இறந்து விட்டதாக அன்றைய நாளிதழில் செய்தி வெளியாகியிருந்தது.
ஆனால் உண்மையில் முன்சாமி சாகவில்லை. அது தவறான செய்தி.
பத்திரிக்கை ஆபிஸ்சுக்கு போன் செய்தார் முன்சாமி
"என்னையா இது, என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க ? நான் செத்துட்டதா போட்டிருக்கீங்களே!"
என்று கோபத்துடன் கேட்டார்.
பத்திரிக்கை ஆசிரியர் முன்சாமியிடம், தெரியாமல் நடந்துவிட்ட தவறுக்காக மன்னிக்கும்படி
கேட்டுக்கொண்டார்.
ஆனால் முன்சாமி விட்டுவிடுவதாக இல்லை.
"அதல்லாம் எனக்கு தெரியாது! நாளைய பேப்பரில் திருத்தி செய்தி போட்டுவிடுங்கள்
இல்லாவிட்டால் நடக்கிறதே வேற" என்று அதட்டினார்.
மறுநாள் பத்திரிக்கையில் கீழ்க்கண்டவாறு செய்தி வெளியாகியிருந்தது.
என்ன செய்தி என்பது நாளை. நள்ள நகைச்சுவையான செய்தி இருந்தால் எனக்கு
ஈ-மெயில் செய்யவும்,அல்லது comments பகுதியில் உள்ளிடவும்.

Read More...

Tuesday, March 16, 2004

நகை+சுவை+1 = நகைச்சுவை - 1

நகைச்சுவை பற்றி ஒரு கட்டுரை எழுதிக்கொண்டு இருக்கிறேன். சில நாட்கள் கழித்து upload
செய்வதாக உத்தேசம். அதற்கு முன் வரும் நாட்களில் சில நகைச்சுவை
பகுதிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பிகிறேன்.

1. மாடியில் என்ன சத்தம்.
கணவன் மாடியில் இருதான்.
மனைவி சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தான்.
திடீரென்று மாடியில் "தொபீர்" என்ற சத்தம் கேட்டது.
"என்னங்க மாடியில் என்ன சத்தம்?" என்று கேட்டாள் மனைவி.
"ஒன்றுமில்லை என் சட்டை கீழே விழுந்து விட்டது" என்று கத்தினான் கணவன்.
"சட்டை விழுந்தால் இவ்வளவு பெரிய சத்தமா கேட்கும் ?" என்றால் மனைவி

கணவனின் பதில் நாளை.
நல்ல நகைச்சுவையான பதில் இருந்தால் எனக்கு ஈ-மெயில் செய்யவும்.
அல்லது comments பகுதியில் உள்ளிடவும்.

Read More...

டைப்ரைட்டூன் - 8

typetoonsi

Read More...

Friday, March 12, 2004

ஹாலிவுட் டாப் 10-1

1. Italian Job

இத்தாலிய பெண் அண்டோனியா மொய்னோ, இந்திய பெண் சோனியா காந்தியாக நடித்திருக்கும்
படம். இடைவேளை வரை உட்கட்சி பூசல்களை எப்படி சமாளிக்கிறார் என்பதிலேயே பேகின்றது.
அதனால் கதையில் ஒரு தொய்வு ஏற்படுகிறது. தன் கணவரை கொன்ற விடுதலை புலிகளிடம் நட்பு
பாராட்டும் ம.தி.மு.க, தி.மு.கவுடன் கூட்டணிவைத்து "இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்" என்று கூட்டணி தர்மத்திர்க்கு புதிய விளக்கம் தந்துள்ளார். தயங்கி தயங்கி
குடியுரிமை பெறுகிறார் அதைப் பார்த்து அவர் கட்சிக்காரர்கள் பூரித்து போகிறார்கள். படத்தில் பல
இடத்தில் வசனங்களை எழுதிவைத்துக்கொண்டு நிறுத்தி நிதானமாக பேசுகிறார் பத்திரிக்கைகள்
பாராட்டுகின்றன
. தன் கட்சியின் வசம் உள்ள பாண்டிச்சேரியை மீட்டாரா இல்லையா என்பதே
Italian Jobபின் கதை.

2. Airforce One

அமெரிக்க ஜனாதிபதியுடைய Airforce One என்ற அதிநவீன விமானம் போல், துனணப்பிரதமர் அத்வானி
அதிநவீன பஸ்ஸில் ரதயாத்திரை புறப்படுகிறார். பஸ்ஸில் sofa, DVD player, bathroom, TV எல்லாம்
உள்ளது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை செல்கிறார். மக்கள் கூட்டம் அலைமேதிகிறது.
அத்வானியை பார்க்கவா அல்லது பஸ்ஸை பார்க்கவா என்று தெரியவில்லை. அத்வானியின் நண்பர்
ஜூதேவ் ஊழல் செய்துவிட்டு ரஜினி ஸ்டைலில் மீசையை முறுக்குகிறார். நல்ல தமாசு.

3. Mummy returns.

ஜெயலலிதா இரண்டாவது முறையாக பிஜேபியுடன் கூட்டணி அமைத்திருக்கிறார்.
ஜெயலலிதா பிஜேபியுடன் கூட்டணி அமைத்தாறா அல்லது பிஜேபி அவருடன் கூட்டணி
அமைத்ததா என்று ரசிகர்களுக்கு புரியவில்லை. ஸ்டண்டு நடிகராக மணிசங்கர் ஐயர் மிகவும்
தையரியமாக நடித்துள்ளார். அம்மா என்றால் வீரம், அம்மா என்றால் தைரியம், தேர்தல் என்றால்
வாபஸ் என்பது கதையின் punch line.

4. MIB - II

Men in Black. தி.க கட்சியினர் கருப்பாக சட்டையணிவதால் இந்தபெயர். கொள்கை என்பதற்கு என்ன
விளக்கம் என்று தேடுவதே இப்படத்தின் கதை. முன்பு ஒரு காலத்தில் பிள்ளையார் சிலைகளை உடைத்து புகழடைந்தார்கள். வேட்டி கோமணம் ஆனது போல் இவர்களின் கட்சி ஆகிவிட்டது பரிதாபத்துக்குரியது.

5. Catch me if you can

திரு வைகோ அவர்கள் புலியை ஆதரித்து பேசி, என்னை பிடிக்க முடியுமா ? என்று சாவால்
விடுகிறார். பிடிப்பட்டு உள்ளே போகிறார். இந்த படத்தில் பல நல்ல காட்சிகள் உள்ளன - கள்ளத் தோணி
ஏறி இலங்கை செல்கிறார், மாறனின் மறைவால் உள்ளம் உருகி அழுகிறார், சிறைச்சாலையிலிருந்து
சூட்கேசுடன் வருகிறார், ஆவேசமாக பேசுகிறார். சன் டிவியில் "சகோதர பாசத்தினால்" இந்த காட்சிகள்
சென்சார் செய்யப்படுகிறது.

6. You have got a mail.

தினமும் தன்னுடைய உடன்பிறப்புக்களுக்கு முரசொலியில் ஒரு கடிதம் எழுதிகிறார் படத்தின்
ஹீரோ. அதைப்படித்துவிட்டு எல்லோரும் குழம்புகிறார்கள். கழகம் ஒரு குடும்பம் என்று அடிக்கடி
சொல்கிறார். அவருக்கு புரிகிறது, மக்களுக்கு புரியவில்லை. டாக்டர் prescription போல் தினமும் 2
அறிக்கை விடுகிறார் ( சன் நியூஸ் பார்க்கவும்). பாலசந்தர் படத்தில் வரும் மனசாட்சி கதாப்பாத்தை போல்
மாறன் சிறப்பாக செய்துள்ளார். ஹிந்தியை எதிர்க்கிறார், தயாநிதி அதை படிக்கிறார், டில்லிக்கு செல்கிறார்.
உடன்பிறபுக்கள் பிறப்பது திமுகவுக்காக.
பதவி துடிப்பது ஸ்டாலினுக்காக
கட்சி வளர்ப்பது குடும்பத்துக்காக
என்ற பாடல் அருமையாக வந்துள்ளது.
முதல் சீனில் வரும் பேராசிரியர் அன்பழகன் பிறகு காணவில்லை.

7. Sixth Sense

சந்தர்பவாதத்தை ஆறாவது அறிவாக கொண்ட பா.ம.க பற்றிய படம். படத்தின் ஹீரோ
ஒரு சைக்கோ தனக்கு கோபம் வந்தால் பச்சை மரங்களை வெட்டுகிறார்.
விளம்பரத்துக்கு ரஜினியை கிண்டல் பண்ணுகிறார். கூடுவிட்டு கூடு பாயும் பழைய விக்கிரமாதித்தியன்
கதையின் உள்டா. குடும்பத்துடன் பார்க்கவேண்டிய படம்.

8. True Lies

இதில் நடித்திருக்கும் அனைவருக்கும் ஒரு போட்டி வைக்கப்படுகிறது. யார் உண்மையான
பொய் சொல்கிறார்கள் என்று.
ஜெயலலிதா - வாஜ்பாய் தான் அடுத்த அனுபவமுள்ள பிரதமர்
அத்வானி - அண்ணாதுரை வழியில் தமிழகத்தை முதல்வர் ஜெயலலிதா வழிநடத்தி வருகிறார்.
கலைஞர் - 25 கோடி தேர்தல் நீதி டீ-காப்பி செலவிற்கு.
சோனியா - ஜெயின் கமிஷன் இடைக்கால அறிக்கை எனக்கு சரியாக புரியவில்லை.
வைகோ - கூட்டணி தர்மத்துக்காக பொடாவை ஆதரித்தேன்.
வாஜ்பாயி - இந்தியா ஒளிர்கிறது.
கடைசியில் போட்டி டிராவில் முடிகிறது.

9. Mission Impossible 2

அரசு ஊழியர்கள், டாக்டர்கள், பஸ் டிரைவர்கள் ஸ்டரைக் செய்கிறார்கள். பிறகு அம்மாவிடம் மன்றாடுகிறார்கள்.
இந்த மிஷனில் வெற்றி பெறுகிறார்களா இல்லையா என்பதே கதை.

Read More...

அவியல் விவாதம்

திரு மாலன் அவர்கள், வலைப்பூக்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதர்க்கு சில வரைமுறைகளை
தந்துள்ளார். மிகவும் ஆழமாக சிந்தித்து அழகாக தந்துள்ளார்.
கமெடிக்கு கிரேசி மோகன் எடுத்துக்காட்டு.
இதை பின்பற்றி என்னுடைய (அந்தரங்க touchசுடன்) குறிப்புக்கள் கீழே.
March 1: இன்று shave பண்ணிக் கொள்ளும் போது இடது கண்ண ஓரத்தில் சிரியதாக ஒரு
வெட்டு விழுந்தது. கொஞ்சம் ரத்தம், கொஞ்சம் வலி.
March 2: இன்று மதிய சாப்பாட்டு டப்பாவில் ஆச்சரியம் காத்திருந்தது - தயிர்சாதம். ஊறுகாய் missing.
பசி கண்ணை மறைத்ததால் அது தெரியவில்லை.
March 3: காலை எழுந்தவுடன் ராணிமுத்து Daily Calender கிழித்தேன்.
March 4: திசைகளில் "ஜெ.ஜெ சில குறிப்புக்கள்" படித்து அறிவை வளர்த்துக்கொண்டேன்.

Read More...

Friday, March 05, 2004

டைப்ரைட்டூன் - 7

typetoonpq
நேற்றைய கவிதையை எழுதியவர் பாரதிதாசன்.

Read More...

Wednesday, March 03, 2004

கட்டாயக் கல்வி

கீழே உள்ள கவிதையை எழுதியவர் யார் ? கண்டுபிடிப்பவர்க்கு பரிசு ரூ 100/=
(அனுப்ப வேண்டிய முகவரி : idlyvadai@rediffmail.com)
விடை நாளை.

கட்டாயக் கல்வி

பன்றி எதற்கு தெருவில் வந்தது ?
பாட்டையி லுள்ள கழிவை உண்ண
என்ன கழிவு தெருவில் இருக்கும் ?
இருக்கும் பிள்ளைகள் வெளிக் கிருந்தனர்.

என்ன காரணம் அப்படிச் செய்ய ?
இருக்கும் பெற்றோர் ஒழுக்க மற்றோர்.
சின்ன நடத்தை எப்படித் தொலையும்?
சிறந்த அறிவு பெருக வேண்டும்.

அறிவை எப்படி அடைய முடியும் ?
அனைவர் தாமும் படிக்க வேண்டும்.
நிறைய எவரும் படிப்ப தெப்படி ?
நீள முயன்றால் முடியும்.

குறைகள் தீர முயல்வ தெப்படி
கூட்டமக்கள் கிளர்ச்சி வேண்டும்
கறைகள் போகா திருப்ப் தென்ன ?
கட்டாயக் கல்வி கிட்டாமை தான்.

Read More...