பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, January 14, 2004

நானும் ஒரு சூப்பர்மேன் !

superman
நேற்று எனது பர்ஸ் பரிபோய்விட்டது ( T.Nagar, பொங்கல் கூட்டம் ).
யாரோ அழகாக பிக்பாக்கெட் அடித்து விட்டான் ( விட்டாள் ? சமஉரிமை !).
பிக்பாக்கெட்டிலிருந்து எப்படி தப்பிப்பது ? கீழே சில ஐடியா'ஸ்

1. பாக்கெட் இல்லாமல் பேண்ட் தைத்துக் கொள்ளவும்.
( பாக்கெட் இருந்தால்தானே பர்ஸ் வைப்பீர்கள் ).
2. பாக்கெட்டினுள் ஒரு தேளை வைக்கவும்.
( பிக்பாக்கெட் அடிப்பவரின் கையை பதம்பார்த்துவிடும் !,
மற்ற "sideeffects"க்கு நான் பொறுப்பல்ல !).
3. சூப்பர்மேன் ஆகிவிடுங்கள் - சூப்பர்மேன் போல் பேண்டுக்கு மேல் ஜட்டி
போட்டால் பர்ஸ்ஸை பாதுகாத்துக் கொள்வது ரொம்ப ஈஸி மச்சி.

Read More...

Wednesday, January 07, 2004

இன்னும் இருவர்

நான் எழுதிய சண்டை நமது குணம் கிறுக்கலை படித்துவிட்டு என்னை ஏன் சேர்க்கவில்லை
என்று இருவர் வருத்தப்பட்டார்கள். மன்னித்துவிடுங்கள் உங்களையும் சேர்த்துவிட்டேன்.

1. கவிஞர் மனுஷ்யபுத்திரன் - ஞானி.

2. தமிழ் லினக்ஸ் - தமிழ் PC குழுவினர்.

வாழ்த்துக்கள்.

Read More...