பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, December 31, 2004

2004 ஒரு பார்வை ..


நன்றி: Rediff.

Read More...

யார் மேல் குற்றம்? - கருணாநிதி கவிதை

சுனாமி அலை தாக்குதல் குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி எழுதியுள்ள கவிதை:

கடற்கரையோரம் நின்று
கவிதைப் பயிர் விளைக்க
கற்பனைக் கலப்பை பிடித்து
கடல் அலையில் கவின் நிலவொளியில்
ஏரோட்டிய பாராட்டுக்குரிய கவிஞர்களே!
சீராட்டும் தமிழில் என்னை
கொள்ளையழகு காட்டுகின்ற கோலப்பெண்ணால் என்றும்...
அலைச் சிரிப்புக்காரி ஆடவர் பெண்டிர் மழலையர்
அனைவரையும் நனைத்து மகிழும் நாட்டியக்காரி என்றும்
கிலுகிலுப்பை ஆட்டி ஒலி எழுப்பிக் குதிக்கும் குழந்தைகளின்
கலகலப்புச் சிரிப்புக்குப் போட்டியாக கிளிஞ்சல்களால் ஒலியெழுப்பும்
தரங்கம்பாடி யென்றும் தழுவிடுவீர் எனைத் தமிழ்க் கவியால்!
கொஞ்சு மொழி இப்படி அந்த நாள் பேசியதெல்லாம்
ஏடெடுத்துப் பாட்டெழுதி என் எழிலைப் புகழ்ந்ததெல்லாம்
திடீரென ஒரு நாள் தீப்பிடித்த கற்பூரம் போல்
தீய்ந்து போனதேனோ?
"சுனாமி" என எனக்கோர் புதுப்பெயர் வைத்தீர்!
"பினாமி" என்றீர்! பிணந்தின்னி என்றீர்!
சுனாமியும் சுந்தரி போல் சுகந்தி போல் சுகன்யா போல்
சுகந்தரு மெல்லிய பெண்ணின் பெயர் தான் என எண்ணாமல்
சுடுகாட்டுக் காட்டேரி என்றும் மூதேவியென்றும்
மூளி அலங்காரி என்றும் முணுமுணுத்து
மூன்று நாளாய் முன்னூறு நானூறு கவிதை எழுதி விட்டீர்
கோலத் தமிழ் விடுத்து கோபத் தமிழால் எனைச் சுடுகின்றீர்;
குற்றம் நான் என்னதான் செய்துவிட்டேன்
கொற்றவன் பாண்டியன் முன் நீதி கேட்ட கண்ணகி போல்
குலவிளக்கு நான்;கவிஞர் காள்! உம்மிடம் கேட்கின்றேன்.
உயிர்கள் லட்சத்தை நான் உண்டு மகிழ்ந்தேன் என்கின்றீர்-
உண்மையா? உண்மையா? அது உண்மையா? உரைத்திடுக!
ஊமையாய் வீழ்ந்து உயிர் துறந்த பாண்டிய மன்னன் ஆகாதீர்!
கடற்கோள் என்று பெயர் இட்டதாலே;அது
கடலாம் என் குற்றம் ஆகி விடுமா?
நீவிர் அறிந்திடுக; "கடற்கோள்" அல்ல இது;
"நிலக்கோள்!"
நில மடந்தையின் சீற்றத்தால்தான்
"சுனாமி"யெனும் கொந்தளிப்பு சுமத்ராவில் தோன்றியது.
ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு
ஆவேசங் கொண்டு பூமி தேவி ஏன் வெடித்தாள்?
அந்த வெடிப்புக்குள்ளே வீழ்ந்த நானும்
தலையில், தோளில், கையில் தாங்கியிருந்த சுமையை
நிலை கொள்ளாமல் கீழே போட நேர்ந்தது-
அலைகடல் நான்;பொறுமைக்கு எல்லையுண்டே
பூமிதேவி செயல் தவிர்க்கத் தற்காப்புப் போர்க் கவசம்
பூண்டு நான் கிளம்பியது "காரணக்கோள்;"-
"கடற்கோள்" அல்ல!
கவிஞர்காள்! கவனமாகக் கேளுங்கள்-
காதலியை அணைத்துக் கொண்டு நீவீர்
கடற்கரை மதிற்சுவரில் அமர்ந்திருக்கும் போது
மதிற்சுவர் இடிந்து காதலி, உமது கை விட்டுக்
கடலில் வீழ்ந்திறந்தால்-அது
மதிலின் குற்றமா? இந்தக் கடலாள் குற்றமா?
மதிற்சுவர் வெடித்தது போல் மண் மாதா
ஆயிரம் கிலோ தொலைவு அழிவு வேலை செய்திட
அந்தோ நான் பழிகாரி ஆகி விட்டேன்
சதிகாரி எனும் சாபத்திற் காளாகி விட்டேன்-
கோபத்திற்காளான குவலயத்தார் என் மீது
கொட்டுகின்ற பழிச் சொற்கள் உம்மால் பரிமாறப்படுவதை
பார்க்கச் சகிக்கவில்லை;கேட்கப் பொறுமையில்லை-
பழைய நாள் ஞாபகம் மறவாதீர்-கவிஞர்காள்!
நானும் உமது கவிதைக்குக் கருப்பொருளாய் உதவியதை
கணத்தில் மறந்து விட்டு சுடுகணை தொடுக்காதீர்!
அடுக்காது இயற்கையின் தாண்டவம் எனினும்;
பூமி தான் இதற்குப் பொறுப்பாளி; மறவாதீர்!

நன்றி: தினத்தந்தி

Read More...

Thursday, December 30, 2004

மிண்டும் வியக்க வைக்கும் கூகிள் !

வியக்க வைக்கும் கூகிள் என்று முன்பு நான் எழுதியது நியாபகம் இருக்கலாம். தற்போது "சுனாமி பேரழிவு உதவும் வழிகள்" என்று கூகிள் ஒரு linkகை தன் முதல் பக்கத்தில் தந்துள்ளது.


அதில் Tsunami help blog என்ற ஒரு வலைப்பதிவும் இருக்கிறது.

அதே போல் காசி அவர்கள் ஒரு அறிவிப்பு செய்துள்ளார்.

காசி (சுனாமி பேரழிவு சேதம் - உதவி வேண்டுகோள்களின் தொகுப்பு) என்ற பதிவு ஆரம்பித்தவுடன் அதை கூகிளில் உள்ள "Ways to help with tsunami relief" பக்கத்தில் ஒரு link கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கூகிள் தொடர்ந்து என்னை வியக்க வைக்கிறது.

Read More...

Wednesday, December 29, 2004

உண்மையை உணர்த்தும் 'பொய்' கடிகாரங்கள்

வைரமுத்து கவிதையை பார்த்த பலர் "நல்லா வருது" வாயிலே என்று திட்டியிருக்கிறார்கள்.
பலர் BP எகிற நான் காரணமாக இருந்துவிட்டேன் என்று வருத்தப்படுகிறேன்.
கோபத்தை தணிக்க ஒரு ஜோக்.

ராப்ரி தேவி சொர்கத்திற்கு போகிறாள்.எமனை பார்க்கிறாள். எமனுக்கு பின்னாடி பல கடிகாரங்கள் மாட்டப்பட்டு இருக்கிறது.

"எம தர்மாஜி! எதற்கு இவ்வளவு கடிகாரங்கள் ?"
"இது உண்மையை உணர்த்தும் 'பொய்' கடிகாரங்கள்!"
"புரியவில்லையே!"
"உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் இங்கு ஒரு கெடிகாரம் உள்ளது. ஒவ்வொருமுறை பொய் சொல்லும் போது அதில் உள்ள முள் நகரும்."
"அப்படியா?, அங்கே இடது பக்கத்தில் இருக்கும் கடிகாரம் யாருடையது?"
"அது புத்தருடையது, அவர் பொய்யே சொல்லாததால் முள் நகரவே இல்லை"
"அதற்கு கீழே உள்ளது?"
"அது காந்தியுடையது, சின்ன வயசில் இரண்டு பொய் சொன்னதால் முள் இரண்டில் இருக்கிறது!"
"அப்படியா ? என் கணவர் லாலுஜியுடைய கடிகாரம் எங்குள்ளது ?
"அது என் ஆபிஸில் இருக்கிறது, அதை நான் சீலிங் ஃபேன்னாக உபயோகிக்கிறேன்!"

Read More...

சுனாமி -கவிஞர் வைரமுத்து




ஏ கடலே!
உன் கரையில் இதுவரையில்
கிளிஞ்சல்கள்தானே சேகரித்தோம்
முதன்முதலாய்ப் பிணங்கள் பொறுக்குகிறோம்

ஏ கடலே!
நீ முத்துக்களின் பள்ளத்தாக்கா!
முதுமக்கள் தாழியா?

நீ கலங்களின் மைதானமா?
பிணங்களின் மயானமா?

துக்கத்தை எங்களுக்குத் தந்துவிட்டு
நீ ஏன் கறுப்பை அணிந்திருக்கிறாய்?

உன் அலை
எத்தனை விதவைகளின் வெள்ளைச்சேலை?

நீ தேவதை இல்லையா
பழிவாங்கும் பிசாசா?

உன் மீன்களை நாங்கள்
கூறுகட்டியதற்கா
எங்கள் பிணங்களை நீ
கூறுகட்டுகிறாய்?

நீ அனுப்பியது
சுனாமி அல்ல
பிரளயத்தின் பினாமி

பேய்ப்பசி உன்பசி
பெரும்பசி

குமரிக்கண்டம் கொண்டாய்
கபாடபுரம் தின்றாய்
பூம்புகார் உண்டாய்

போதாதென்று
உன் டினோசர் அலைகளை அனுப்பி
எங்கள்
பிஞ்சுக்குழந்தைகளின்
பிள்ளைக்கறி கேட்கிறாய்

அடக்கம் செய்ய ஆளிராதென்றா
புதை மணலுக்குள்
புதைத்துவிட்டே போய்விட்டாய்?

என்னபிழை செய்தோம்?
ஏன் எம்மைப் பலிகொண்டாய்?

சுமத்ராவை வென்றான்
சோழமன்னன் ராஜராஜன்

அந்தப் பழிதீர்க்கவா
சுமத்ராவிலிருந்து சுனாமி அனுப்பிச்
சோழநாடு கொண்டாய்?

காணும் கரைதோறும்
கட்டுமரங்கள் காணோம்
குழவிகளும் காணோம்
கிழவிகளும் காணோம்
தேசப்படத்தில் சில கிராமங்கள் காணோம்

பிணங்களை அடையாளம்காட்டப்
பெற்றவளைத் தேடினோம்
அவள்
பிணத்தையே காணோம்

மரணத்தின் மீதே
மரியாதை போய்விட்டது
பறவைகள்
மொத்தமாய் வந்தால் அழகு
மரணம்
தனியே வந்தால் அழகு
மொத்தமாய்வரும் மரணத்தின் மீது
சுத்தமாய் மரியாதையில்லை

அழுதது போதும்
எழுவோம்
அந்த
மொத்தப் பிணக்குழியில்
நம் கண்ணீரையும் புதைத்துவிடுவோம்

இயற்கையின் சவாலில்
அழிவுண்டால் விலங்கு

இயற்கையின் சவாலை
எதிர்கொண்டால் மனிதன்

நாம் மனிதர்கள்
எதிர்கொள்வோம்

மீண்டும் கடலே
மீன்பிடிக்க வருவோம்

ஆனால்
உனக்குள் அஸ்திகரைக்க
ஒருபோதும் வரமாட்டோம்


நன்றி:தினத்தந்தி

Read More...

Thursday, December 23, 2004

Recession'ல் என்ன ஆகும்

Read More...

Thursday, December 09, 2004

கொஞ்சம் கசப்பு

கடந்த இரண்டு வாரமாக வலைப்பதிவிலும், இணைய குழுமத்திலும் ஜெயேந்திரர் பற்றி ஒரே விதமான கருத்துக்கள் பல விதங்களில் விவாதிக்கப்பட்டன. சிலர் ஜெயேந்திரருக்கு ஆதரவாக பத்து பக்கம் எழுதிவிட்டு "நான் ஜெயந்திரர் ஆதரவாளர் இல்லை" என்று கடைசியில் ஒரு Disclamier கொடுத்து தான் ஒரு நடு நிலைமையாளர் என்று கூறிக்கொண்டார்கள்.

சிலர் என்னதான் இருந்தாலும் பரமாச்சாரியார் போல் வராது "அவர் வழி தனி வழி, என்ன ஒரு தேஜஸ் அவருக்கு" என்று தங்களுக்கே அறுதல் கூறிக் கொண்டார்கள்.

மத குரு என்பவருக்கு மனிதநேயம் என்பது அடிப்படை என்பதை இவர்கள் யாரும் புரிந்துக்கொள்ளவில்லை. Ritualsலில் அதிகமாக ஈடுபடுபவர்கள் கடவுளை நெருங்கி விட்டதாக தப்பு கணக்கு போடுகிறார்கள்.சந்தியாவந்தனம், பூஜை இதெல்லாம் ஒரு வித காலை/மாலை exercise அவ்வளவே. இதனால் நாம் கடவுளை நெருங்கிவிட்டோம் என்று நினைத்தால் அது முட்டாள் தனம்.

அன்னை தெரசாவை எடுத்துக்கொள்ளுங்கள், அவர் எழை மக்களிடம் ஜாதி வித்தியாசம் பார்க்காமல் அன்பு செலுத்தினார். குஷ்ட நோயாளிகளை தன் கையால் அனைத்துக் கொண்டார். ராமானுஜர் என்பவர் குளிக்க சொல்லும் போது தன் இனத்தவர் தோள் மேல் கையை போட்டுக்கொண்டு போவார், குளித்துவிட்டு வரும் போது ஒரு தாழ்த்தப்பட்டவர் தோள் மேல் கையை போட்டுக்கொண்டு வருவார் என்று படித்ததாக நியாபகம். இதுதான் "Role Model" என்பது. இதை எந்த வைணவ மடாதிபதியாவது கடைப்பிடிக்கிறார்களா ? மடாதிபதி/பீடாதிவதியாக இருப்பவர்கள் பிரசாதத்தை கூட நம் மேல் படாமல் தூக்கித்தான் போடுகிறார்கள் நாமும் அதை catch பிடித்துக் ஆனந்த படுகிறோம்.

துக்ளக், அ.வி போன்ற பத்திரிக்கைகள், பரமாச்சாரியார் சொன்ன "தெய்வத்தின் குரல்"லிருந்து (எந்த தெய்வம் ?) சில வரிகளை போட்டு விட்டு தப்பித்து கொண்டன.

கடைசியாக எங்கோ படித்த ஒரு கவிதை
நான் வாயிலிருந்து
லிங்கம் வரவழைத்தேன்
கையிலிருந்து
வீபூதி வரவழைத்தேன்
ஆனால் என்னை யாரும்
ஜாமினில் வரவழைக்க முடியவில்லை

Read More...

Wednesday, December 01, 2004

உலக எயிட்ஸ் தினம்



[ தமிழ் மக்களுக்காக கொஞ்சம் Censor செய்யப்பட்டுள்ளது]

Read More...

Monday, November 22, 2004

தலைக்கு மேல் கத்தி

Read More...

Friday, November 19, 2004

டாக்டர் மாத்ருபூதம்

டாக்டர் மாத்ருபூதம் அவர்கள் மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர். அவருடைய "புதிரா புனிதமா" என்ற நிகழ்ச்சியை பல முறை பார்த்து ரசித்திருக்கிறேன்.

கடந்த சில ஆண்டாக உடல் நலம் குன்றியிருந்த டாக்டர் மாத்ருபூதம், தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். கும்பகோணத்தில் நடந்த பள்ளிக் கூரை தீ விபத்தில் காயம் அடைந்த குழந்தைகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு டாக்டர் மாத்ருபூதம் நேரில் சென்று மன நல மருத்துவ சிகிச்சை முகாமை நடத்தி வந்தார். இதன் அடுத்தக் கட்டமாக உடல் நோய்களை பொருட்படுத்தாமல் மீண்டும் கும்பகோணம் சென்று இலவச மருத்துவ சிகிச்சை முகாமை நடத்தினார். அப்போது அவருக்கு உடல்நிலை மோசமானது. எனினும் முகாமை நடத்தி முடித்து விட்டு, சென்னை திரும்பினார். இந்நிலையில், நேற்று காலை 5.15 மணிக்கு அவர் வீட்டிலேயே காலமானார்


அவர் வாழ்வில் ஏற்பட்ட பல நகைச்சுவையான சம்பவங்கள் சில இந்த பதிவில் இடம் பெற்றிருக்கிறது

* - *
நான் செக்ஸ் எஜுகேஸனைப் பற்றி தொடந்து 6 ஆண்டுகள் ஒரு தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்தினேன் என்பது தமிழறிந்த எல்லோருக்கும் தெரியும். அப்போது சில விவகாரமான கேள்விகள் நேயர்கள் கேட்பார்கள்.

ஒருவர் எழுதியுருந்தார், "உங்களுக்கு கிட்டத்தட்ட அறுபது வயதாகிறது. உங்களை நேர்காணல் செய்யும் லேடி டாக்டர் அழகான இளம் வயது பெண்மணி அவரை வைத்து கொண்டு நீங்கள் செக்ஸ் பற்றிப் பேசுவது உங்களுக்கு நியாமாக இருக்கிறதா? எனக் கேட்டார். நான் உடனே சொன்னேன். "இந்த வயதில் பேசத்தான் முடியும்" வேறு என்ன செய்ய சொல்கிறீர்கள் ? என்றேன். அந்தப் பதில் எல்லோருக்கும் பிடித்திருந்தது என்பது தான் இதில் உள்ள விஷயம்.

* - *
ஒருமுறை நான் ரயிலில் பயணம் செய்தபொழுது, ஒருவர் ஏழெட்டுக் குழந்தைகளுடன் வந்திருந்தார். அவருக்கு வயது 45-க்குள்தான் இருக்கும். நான் அவரிடம் "இரண்டு குழந்தையோடு நிறுத்திக் கொள்ளுங்கள் என்று அரசாங்கம் எவ்வளவோ செலவழித்து விளம்பரம்மெல்லாம் கொடுக்கிறதே அதை நீங்கள் பார்த்ததில்லையா" என்றேன்.

"அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க, இந்தக் குழந்தைகளெல்லாம் கடவுள் கொடுத்த சொத்து" என்றார்.

"அது எப்படியப்பா கடவுள் கொடுக்கிறதா இருந்தாக்கூட நீ கர்பத்தடை முறைகளை கடைபிடித்தால் இரண்டோடு நிறுத்திக் கொண்டிருக்கலாமே. அதற்கு கடவுள் என்ன அப்ஜெக்ட்டா செய்யப் போகிறார்" என்றேன்.

அவர் கேட்பதாக இல்லை."உங்களுக்கு இதெல்லாம் புரியாது சார், இது கடவுள் கொடுத்த வரம் எத்தனையோ பேர் குழந்தை இல்லாமெ இருக்காங்களே அவர்களிடம் போய் பேசுங்கள்" என்று சொல்லிவிட்டார்.

பிறகு வண்டி கிளம்பியது, எல்லோரும் தூங்க ஆரம்பித்தோம். ஜிலு ஜிலுவென்று காற்று அடித்ததால், பாத்ரூம் செல்ல வேண்டுமென்று கீழே இறங்கினேன். அப்போது அவருடைய வேட்டி கலைந்திருந்தது. அவரை எழுப்பினேன். "வேட்டியை ஒழுங்காக கட்டிக் கொளுங்கள், கடவுள் தெரிகிறார்" என்றேன்.

அதாவது எதனால் குழந்தை பிறக்கிறது ? அதற்கு நாம் தான் காரணம் என்பது கூட தெரியாமல் இருக்கிறார்கள்.

* - *
சில இடங்களில் துக்கமாக இருக்கும் போது கூட சிரிப்புக்கான சந்தர்ப்பம் எற்படும்படி சில விஷயங்கள் நடப்பதுண்டு, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை எனக்கு சிறுநீரகங்கள் பாதிக்கபட்டிருக்கிறது. "Acuterenal Failure". அதற்கு அவர்கள் சொன்ன காரணம் என்னவென்றால், நான் என்னுடைய மூட்டுவலிக்காக, பல வருடங்களாக அவ்வப்போது வலி நிவாரண மாத்திரைகள், "NSAID (Non Steroid Anty Inflammatory drug) என்று சொல்வோம்.

அதை சாப்பிட்டு வந்ததால் சிறுநீரகம் பாதிக்கப் பட்டிருக்கலாம் அதோடு பல வருடங்கள், சக்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் இருப்பதாலும் எற்பட்டிருக்கலாம் என பல காரணங்களைச் சொன்னார்கள். எனவே என்னை எமர்ஜென்சியாக அருகில் இருக்கும் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். கீழே Emergency Room இருந்தது, என்னை பரிசோதித்த இளம் டாக்டர்கள்,

"டாக்டர் மாத்ருபூதம் எவ்வளவு பெரிய மனநல மருத்துவர், எவ்வளவு சேவை செய்கிறார், Sex Education-க்கொல்லாம் எவ்வளவு பாடுபட்டு நிகழ்ச்சிகளையெல்லாம் நடத்தியிருக்கிறார் அவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்றனர். உடனே நான் அக்ஸிஜன் மாஸ்க்கை எடுத்துவிட்டு, "எப்படியாவது காப்பாற்றுகிறேன் என்று சொல்கிறீர்கள். விதியென்று ஒன்று உள்ளது. அதற்குமேல் இழுத்துப் பறித்துக் கொண்டு நான் இருக்க விரும்பவில்லை" என்றேன் அதற்கு,

"உங்களது தைரியம் எல்லோருக்கும் வராது, Any how உங்களைக் காப்பாற்றியே ஆகவேண்டும் என்று சொல்லி பக்கத்தில் இருக்கும் நர்ஸிடம், Send him up அதாவது மேல்மாடியில் இருக்கும் Critical care யூனிட்டிற்கு அனுப்பு என்று சொல்லியிருக்க வேண்டும். எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. மறுபடியும் மாஸ்க்கை எடுத்துவிட்டு நான் சொன்னேன். நான் சைக்யாரிஸ்ட் எனக்கு புரிகிறது. நிங்கள் எல்லோரும் வந்திருக்கும்போது Send him up என்று சொல்லாதீர்கள்.கொஞ்சம் நாள் கழித்து போகும் உயிர் இன்றே போய்விடும்" என்றேன்.

அவரும், சாரி சார் என்றார். சாரி சொல்லாதீர்கள் இதையே நகைச்சுவையாக பார்க்கும் பக்குவத்தை கடவுள் எனக்கு கொடுத்திருக்கிறார் என்று நான் சொன்னேன்.

மேலும் அவர் சொன்னார் உங்களுக்கு மூச்சு இழுக்கிறேதே அஸ்துமா இருக்கிறதா ? எனக் கேட்டார். நான் மறுபடியும் ஆக்ஸிஜன் மாஸ்க்கை எடுத்துவிட்டு, "அது ஒன்றுதான் எனக்கு இல்லை" என்றேன்.

"டாக்டர் உங்களுக்கு சாவே வராது" என்று சொன்னார் அவர். "பரவாயில்லை நீங்கள் சிறுவயதாக இருந்தால்கூட உங்கள் வாழ்த்தை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று சொல்லிக் கொண்டே போனேன்.

மேலேபோய் இரத்த பரிசோதனையெல்லாம் பண்ணினால், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், யூரியா எல்லாமே தாறுமாறாக இருந்தது. அதை பார்த்துவிட்டு அந்த டாக்டர், மிகவும் நல்லவர், மிகவும் வல்லவராகிய அவர் உங்கள் பையன்களுக்கு சொல்லியனுப்பிவிடுங்கள் என்றார். ( ஒருவர் லண்டனிலும், ஒருவர் அமெரிக்காவிலும் உள்ளார்). நான் சொன்னேன் "நான் இறந்தால் எப்படியும் வந்து விடுவார்கள், நான் ஒரு வேளை பிழைத்துக் கொண்டால் அவர்கள் வந்துபோவதே அவர்களுக்கு வேஸ்ட், அனாவசிய செலவு அதனால் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அவர் என் மனைவியிடம் கூப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்.

மேலும் நான் இறந்தால்கூட நீங்கள் அழக்கூடாது அழுகை என்றால் எனக்கு பிடிக்காது. பிறகு எனக்குச் சந்தேகம் வந்துவிட்டது. அப்படி சொன்னேனே தவிர அதற்காக நீங்கள் நரகாசுரன் செத்துவிடான் என்று பட்டாசெல்லாம் வெடிக்கக் கூடாது என்றேன். அப்போது என்னுடைய மனைவி உண்மையிலேயே அழ ஆரம்பித்துவிட்டாள். "உங்களுக்கு ஒன்றும் ஆகாது" என்றாள். "எனக்கு என்றும் ஆகக் கூடாதுன்னு எல்லோருக்கும் இருக்கும் ஆசை எனக்கு இருக்கு ஆனாலும் பரவாயில்லை என்ற நேக்கத்தில்தான் நான் இருக்கிறேன்" என்றேன்.

இதை எதற்காக சொல்கிறேன் என்றால், "One can be affraid of Morbility, but not moratality" மார்பிடிட்டி என்றால் ஒருவர் படுத்த படுக்கையாக இருக்க கூடாது. அதை கண்டு பயப்படுவேன் என்று சொன்னால், அவர்கள் தினம் தினம் செத்து கொண்டிருப்பார்கள். அது தான் உண்மை.

பகவான் கிருஷ்ணர் பயம் என்பது ஒரு பாவம் என்கிறார். ஏசுநாதர் அது ஒரு நோய் என்றார். ஆதிசங்கரர் புனரபிஜனனம், புனரபிமரணம். அதாவது "மீண்டும் பிறப்பு மீண்டும் இறப்பு" என்கிறார். அப்படி இருக்கும்போது நமக்கு மரண பயம் ஏன்?

நீங்கள் உடல்நலத்தில் நன்றாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நன்றாக இருப்பதாக நினைப்பது நம் கையில்தான் இருக்கிறது. அப்போழுது நோய்கூட குணமாகும். "The conerrs die everyday, the Brane die only once" என்று சொல்வது எக்காலத்துக்கும் பொருத்தமக ஒரு விஷயம்.

(புன்னகை பூக்கள், கற்பகம் புத்தகாலயம், தி.நகர், சென்னை-17)
(படம்: தினமலர் )

Read More...

Thursday, November 18, 2004

லாடு லபக்குதாஸ் காலமானார்


மனநல மருத்துவரான மாத்ருபூதம் சென்னையில் இன்று காலமானார். டிவியில் பாலியல் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்த இவர், நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர். வீவேக்குடன் லாடு லபக்குதாஸ் காமெடியில் மேலும் பிரபலம் அடைந்தார். அவருடைய குடும்பதினருக்கு இட்லிவடையின் ஆழ்ந்த அனுதாபங்கள்.

திரு.மாத்ருபூதத்தின் நகைச்சுவை பகுதிகள் நாளை இங்கு இடம் பெரும்.

Read More...

டாப் 10 - ஜெ ஜெ சில குறிப்புக்கள்

1. ஜெயேந்திரரை கைது செய்தது வரலாற்று சிறப்பு மிக்க ஒரு நிகழ்வாகும். எந்த பகுத்தறிவு முதல் அமைச்சரும் இதை செய்திருக்க முடியுமா? என்று விவாதிக்க தமிழ் குழுக்களுக்கு செல்லவும். இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரு நல்ல முன்னுதாரணம் கிடைத்திருக்கிறது.

2. தீபாவளி அன்று காலை டிவியில் அருள் ஆசி, வீட்டு புஜை அறைகளில் கடவுள் பக்கத்தில் சிரித்துக் கொண்டு போட்டோ, தீபாவளி மலர்களில் ஆர்ட் பேப்பரில் வண்ணப்படம், ஆபீஸ் மேசை கண்ணாடி அடியில்.... என்று இடத்தை பிடித்த ஒருவர் கொலை குற்றம் சாட்டப்பட்டு கைதாகிறார். இது ஒரு மெகா நம்பிக்கை துரோகம். இரவில் கைது செய்தது ஏன்? என்று நடுநிலையாளர்கள், அறிவு ஜிவிகள், என கூறிக் கொள்பவர்கள், எதிர்ப்பது காமெடியாக உள்ளது.

3. ஆஸ்பத்திரி, பள்ளி என்று சமுக சேவை செய்பவர்கள் எல்லோரும் நல்லவர்கள் என்று மக்கள் ஏமார கூடாது. சாய் பாபா, சந்திர சுவாமி போன்றவர்கள் இதில் அடங்கும். சாய் பாபா ஆசிரமத்தில் நான்கு பேர் கொலை செய்ததற்கு என்னும் விடை தெரியவில்லை. கல்கி பகவான் விளம்பரம் "குங்குமம்" பத்திரிக்கையில் வருவது - பெஸ்ட் கண்ணா பெஸ்ட். எங்கே பணம் இருக்கிறதோ கூடவே கிரைம் இருக்கும் என்பது எழுதப்படாத விதி.

4. RSS, VPH போன்றவர்கள் திமிழ் நாட்டை தவிர்த்து மற்ற மாநிலங்களில் உண்ணா விரதம், போராட்டம் என்று கலக்கிக்கொண்டு இருக்கிறார்கள். தமிழ் நாட்டு மக்கள் அமைதியை விரும்புபவர்கள் என்பது புலனாகும்.

5. விகடன், கல்கி ஆகிய பத்திரிக்கைகள் என்ன மாதிரி தலையங்கம் எழுதுகிறார்கள் என்று பார்க்க வேண்டும். எல்லோரும் கொஞ்சம் "play safe" mode'ல் இருக்கிறார்கள். கலைஞர் ஒரு படி மேலே சென்று சங்கர மடம் அழியக்கூடாது, அதை அரசே எடுத்து நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார். ஆடு நனைகிறதே.." என்ற பழமொழிதான் நினைவிற்கு வருகிறது.

6. பலரும் இது ஜெயின் அரசியல் உத்தி, ஜெக்கும்-ஜெக்கும் ஏதோ அடிப்படை பிரச்சினை என்று காரணம் சொல்லுகிறார்கள். எல்லோருக்கும் இது ஒரு அதிர்ச்சியே என்பது தான் உண்மை. கைதுக்கு சில நாட்கள் முன்பே கலைஞர் அவர்கள் "பல போலி சாமியார்கள்.." என்று அறிக்கை விட்டது அவருக்கு போலிஸில் சில நண்பர்கள் இருப்பதையே காட்டுகிறது. இதனால் ஜெ அவரை அவசரப்பட்டு கைது செய்தார் என்பது நம்பும் படியாக இல்லை.

7. காவியுடை அணிந்த ஒருவர் "..ஆண்டவனிடம் அவருக்கு தண்டனை அளிக்கும்படி முறையிட்டுக் கொண்டேன். அதன்படி அவரும் படுத்துவிட்டார்!" என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். காவியுடை அணிந்த ஒருவர் இப்படி நினைப்பது மகா கேவலம். இப்படி நினைக்கும் ஒருவர் கொலையும் செய்ய மாட்டார் என்பது என்ன நிச்சயம். கடவுளிடம் இப்படி வழிப்பட்டு அவர் வணங்கும் கடவுளையும் கேவல படுத்திவிட்டார். இதுதான் "அன்பே சிவமா?"

8. நாட்டில் உயர் பதவியில் இருப்பவர்கள், நீதிபதிகள், குடியரசு தலைவர்கள், பிரதமர்கள், முதல்வர்கள் போன்றவர்கள் இனி மடம், நோன்பு கஞ்சி என்று போகாமல் மக்கள் நலனை கவனிப்பது நல்லது.

9. ஜெயேந்திர் கைதுக்க்கு அடுத்த நாள், ஏ.வி.எம் சரவணன், டாக்டர் பத்ரி நாத், மற்றும் சிலர் ஆளுநரை சந்திக்கிறார்கள். இவர்களுக்கு போலிஸ் மேல் நம்பிக்கை இல்லையா ? இவர்களுக்கும் மடத்திற்கும் என்ன சம்பந்தம் ? ஏன் இவர்கள் ஜெயேந்திரருக்கு வக்காலத்து வாங்குகிறார்கள் ?

10. ஜெயிலில் ஜெயந்திரருக்கு என்ன கொடுக்கிறார்கள் என்று எனக்கு தெரியாது ஆனால் கடைசிகாலத்தில் ஆதிசங்கரர் அருளிய "பஜகோவிந்தம்", புத்தகம் கொடுக்க சிபாரிசு செய்வது நல்லது. இவர் இன்னும் நிறைய basics கற்றுக்கொள்ள வேண்டும்.

கடைசியாக ஆன்மீகம், ஒழுக்கம், கடவுள் நம்பிக்கை, தேஜஸ், மதம் இவற்றை சரியாக புரிந்துக்கொள்ளுங்கள். சாமியார்களுடன் குழப்பிக்கொள்ளாதீர்கள். மீறி குழப்பம் அடைந்தவர்களுக்கு இருக்கவே இருக்கு கீழ்பாக்கம்.


Read More...

Wednesday, November 17, 2004

பெஸ்ட் கண்ணா பெஸ்ட்


நன்றி துக்ளக்

Read More...

Friday, November 12, 2004

காஞ்சி ஜெயேந்திரர் சுவாமிகள் திடீர் கைது

சென்னை : காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முக்கிய குற்றவாளியாகக் கைது செய்யயப்பட்டுள்ளார். முன்னதாக ஐதராபாத்தில் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்ட ஜெயேந்திரரை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர். சென்னையிலிருந்து இவர் காஞ்சிபுரம் அழைத்துச் செல்படுகிறார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த காஞ்சிபுரம் முன்னாள் எஸ்.பி., பிரேம்குமார், இது குறித்து கூறுகையில் கடந்த 03.09.2004 நடந்த கொலை சம்பவம் தொடர்பாக 14 பேரைக் கைது செய்துள்ளோம், இதில் கடந்த 9ம் தேதி 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சொன்ன தகவலின் பேரில் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெயேந்திரர் இந்த கொலைச் சம்பவத்திற்கு திட்டம் தீட்டியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கொலை செய்யப்பட்ட சங்கரராமனுக்கும், ஜெயேந்திரருக்கும் கடந்த 4 ஆண்டுகளாக பிரச்னை இருந்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதற்கான போதிய ஆதாரங்கள் போலீசார் வசம் இருக்கிறது. எனவே இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சேர்க்கப்பட்டுள்ளார். இவ்வாறாக பிர÷ம்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து இன்று காலையில் ஜெயேந்திரர் காஞ்சிபுரம் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் வேலூர் சிரையில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்

PS: தீபாவளி மலர்களில் முதல் பத்து பக்கங்களில் இவர் படத்தை பார்க்கலாம்

Read More...

Wednesday, November 10, 2004

தீபாவளி ஸ்பெஷல் - 2

ஸ்பெஷல் திரைப்படம்:



எல்லோருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

- இட்லி

Read More...

Tuesday, November 09, 2004

தீபாவளி ஸ்பெஷல் - 1

ஸ்பெஷல் வெடி: தீபாவளி ஸ்பெஷல் (ஜெய)லெக்ஷ்மி வெடி. எப்போ எப்படி வெடிக்கும் என்பது தெரியாது.


ஸ்பெஷல் விடுகதை:
கொஞ்ச நேரம் பாத்தா ஜாலியா இருக்கும். ரொம்ப நேரம் பார்த்தா போர் அடிக்கும். அது தான் பேசும், நாம பேசவே மாட்டோம். தீடீர்னு அழுவும், தீடீர்னு சிரிக்கும். அது என்ன ? விடை நாளை

Read More...

Monday, November 08, 2004

9/11 விசாரணைக் குழு முடிவுகள்

தாக்குதலில் இரட்டைக் கோபுரம் செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அமெரிக்காவில் நடத்தப்பட்ட விசாரணைக் குழுவின் பரிந்துரைகள் பற்றி பலர் அலசுகிறார்கள்.

இட்லி வடைக்கு கிடைத்த தகவலின் படி ஒசாமா பின் லாடன் கீழ் காணும் தபால் தலை தான் தனக்கு 'அந்த' ஐடியாவை கொடுத்தது என்கிறார்.

Read More...

Thursday, November 04, 2004

Hard Talk - முதல்வர் ஜெ அளித்த பேட்டி

Tamil Nadu CM Jayalalitha போன மாதம் பி.பி.சிக்கு முதல்வர் ஜெ அளித்த பேட்டி குறித்து எல்லோரும் தங்களது வலைப்பதிவில் கருத்து தெரிவித்தனர். இந்த விஷயத்தில் நான் கொஞ்சம் லேட்.

அந்த பேட்டியில் 'நான் ஒரு மரபு மீறிய அரசியல்வாதி' என்றார்.
எப்படி என்பதை பார்போம்...

முதலில் ஜெ இந்த பேட்டியை மிகவும் சுலபமாக கையாண்டிருக்க வேண்டும். அந்த பேட்டியை காரசாரமாக ஆக்கியது ஜெ என்பது என்னுடைய கருத்து. சில கேள்விகளுக்கு மிகுந்த நகைச்சுவையாக பதில் சொல்லியிருக்கலாம். இதே கேள்விகளை சட்டசபையில் கேட்டிருந்தால் என்ன பதில் சொல்லியிருப்பார் ?

NDTV யில் வரும் Big Fight மற்றும் சில பேட்டிகளில் சில கேள்விகளை பச்சையாக கேக்கிறார்கள்.
உதாரணத்துக்கு : உமா பாரதியிடம் "பொய் சொல்லாதிர்கள், முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததில் உங்களுக்கு வருத்தம் தானே ?"

சில சமயம் போட்டி காண்பவர் தர்மசங்கடமான கேள்விகளை கேட்பது நல்லதல்ல. இதை தமிழ்நாட்டு பத்திரிக்கையாளர்களிடம் அவர்கள் கற்று கொள்ள வேண்டும். பேட்டி காண்பவர் ஒருவருடைய தனிப்பட்ட நம்பிக்கைகளை பற்றியெல்லாம் கேள்விகள் கேட்பது நாகரிகம் ஆகாது. இருந்தாலும் மதம், நியூமராலஜி, ஜோதிடம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டவர் அவற்றை ஒப்புக் கொள்ள ஏன் வெட்கப்பட வேண்டும் ? "ஆமாம் அதுக்கு என்ன ? அது என்னுடைய தனிப்பட்ட நம்பிக்கை" என்று பதில் கூறியிருந்தால் வித்தியாசமாக இருந்திருக்கும். ஏன் கரண் தாப்பருக்கே கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்திருக்கும்.
அதே போல் "நிங்கள் ஒரு பொறுப்பற்ற முதல்வாரா?" என்ற கேள்வியும் அனாவசிய கேள்வியாக எனக்குப்பட்டது.

துக்ளக் சத்யா 'கரண் தாப்பர் கருணாநிதியை பேட்டி கண்டால்.." என்ற தலைப்பில் சில கேள்விகளும் பதில்களும் தந்துள்ளார்...

கேள்வி: நீங்கள் ஏன் சட்டசபைக்குப் போவதில்லை ?
கருணாநிதி: எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் கூட சட்டசபைக்கு போகாமல் இருந்திருக்கிறார்கள். அவர்களிடம் இந்த கேள்விகளை கேட்டீர்களா ?
கேள்வி: அப்படி என்றால் நீங்கள் பெரியார் அண்ணா வழியில் நடப்பதில்லை; எம்.ஜி.ஆர் ஜெயலலிதா வழியைத் தான் பின்பற்றுகிறீர்களா ?
...
...

சரி வாசகர்களுக்கு ஒரு மினி போட்டி..
நீங்கள் கரண் தாப்பராக இருந்தால் கலைஞரிடம் என்ன கேள்விகள் கேட்பீர்கள் ?

பி.கு: ஜெ பேட்டியின் Transcript கீழே.
http://www.bbc.co.uk/tamil/highlights/story/2004/09/040930_jayainterview.shtml
பி.பி.சி வலைத்தலத்தில் Jayalalitha வில் ஒரு 'a' வை விட்டுவிட்டார்கள். கரண் தாப்பர்க்கு கோபம் என்று நினைக்கிறேன்.

Read More...

Tuesday, November 02, 2004

நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் - 11

தேவன் - (8-9-1913 - 5-5-1957)

தேவன் என்ற புனைபெயரில் நகைச்சுவையை கதை, கட்டுரை நாவல் என்று அள்ளி வீசியவர் ஆர்.மகாதேவன். திருவிடைமருதூரில் பிறந்தவர். சிறிது காலம் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய பின், 'ஆனந்த விகட'னில் உதவியாசிரியராக இருந்தார். பிறகு 1942 ஆம் ஆண்டு முதல் 1957 ஆம் ஆண்டு வரை நிர்வாக ஆசிரியராக இருந்தார். 23 ஆண்டு காலம் அப்பத்திரிகையில் பல்வேறு சுவையான கதைகள், கட்டுரைகள் எழுதி சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக விளங்கினார். பத்திரிக்கை எழுத்துத் துறையில் அவர் கையாளாத உத்திகளே இல்லை என்று சொல்லும் முறையில் எழுதிவந்தார்.

வித்தியாசம் என்றாலே அது தேவனின் கலை என்று சொல்லிவிடலாம்.
தேவன் என்று சொன்னவுடன் நினைவுக்கு வருவது துப்பறியும் சாம்புதான். காக்கை உட்கார்ந்தது; பனம்பழம் விழுந்தது! என்று ஒருமுறை சொன்னால் நம்பலாம். ஆனால் அதையே நூறு தடவை சொல்லி வாசகர்களை நம்பவைத்தவர் தேவன் மட்டுமே!. 'துப்பறியும் சாம்பு'வைப் படிக்க வாராவாரம் 'ஆனந்தவிகடனு'க்காகக் காத்திருந்த வாசகர்கள் ஏராளம்.

அவருடைய தொடர் நாவல்களில் வித்தியாசமானவை 'கோமதியின் காதலன்' வீட்டைவிட்டு ஓடிப்போய் வாழ்கையில் விளையாட்டாகவே சோதனைகளைச் சந்திக்கும் வாலிபனின் கதை. 'மிஸ்டர் வேதாந்தம்' கிராமிய மணம் கமழும் காதல் கதை. 'ஜஸ்டிஸ் - ஜகந்நாதன்' நீதிமன்றங்களில் நடக்கும் வாதப் பிரதிவாதங்களைக் கொண்டே புனையப்பட்ட வித்தியாசமான நாவல்.

சிறுகதைகளில் தேவனின் பாத்ததிரங்களைத் தவிர அவருக்கே கதை சொல்லும் முக்கிய பாத்திரமாக ஒருவர் வருவார். அவர் தான் 'மல்லாரிராவ்'. உள்ளங்கையிலிருக்கும் புகையிலைத்தாளைக் குவித்துக்கொண்டே பேசுவார். ஆள்காட்டி விரலிலும், கட்டை விரலிலும் பொடியை இடுக்கிக் கொண்டு மூக்கில் வைத்து உறிஞ்சிவிட்டு கையைச் சொடுக்குவார். அங்கே 'உண்மைக் கதை' பிறக்கும். ஆனால் அத்தனையும் நிஜம் போல் நம்பவைக்கும் கற்பனைக் கதைகள்.

தேவனின் நகைச்சுவைக் கட்டுரைகளை படிக்கையில் நெருங்கிய நண்பர் ஒருவருடன் ஜாலியாக அரட்டையடிப்பது போல் ஒரு அனுபவம் ஏற்படும்.

புத்தகம் எழுதி வெளியிடுவதைப் பற்றி அவருடைய கட்டுரையில் இப்படி எழுதுகிறார்:
நிலத்தில் உழுவது, பயிரிடுவது, வண்டி ஓட்டுவது, கொத்து, தச்சுவேலைகள் சொய்வது இப்படிப் பல தொழில்களைச் செய்து உயிரை வளர்க்கலாம் என்று ஒப்புக் கொண்டவர்கள் ஏனோ புத்தகம் எழுதிப் பிழைப்பதைப் பற்றி அவ்வளவு நம்பிக்கை கொள்ளவில்லை.
இருந்தும் புத்தகம் எழுத வேண்டும் என்ற ஆசை மட்டும் என்னை விடவேல்லை. அதற்க்காக நான் தபஸ் செய்யவும் தயாராக இருக்கிறேன். தபஸின் இறுதியில் பகவான் பிரத்தியட்சமாகி என்னைப் பார்த்து, "பக்த்தா! உனக்கு என்ன வேண்டும்" என்று கேட்பார் அல்லவா? அப்போது என்ன பதில் சொல்வதென்று தெரியாததால் தான் தபஸையே ஆரம்பிக்காமல் இருக்கிறேன். அதில் என்ன சிரமம் என்று கேட்கிறீர்களா ?

'நீ என்ன மாதிரி புத்தகம் எழுத வேண்டும் என்று விரும்புகிறாய்? உன் ஆயுள் காலத்திலேயே யாரும் சீண்டாமல் சொற்ப ஜனங்களிடம் மட்டும் பாராட்டு தலைப் பெற்றுவிட்டு, நீ காலமானவுடன் 'குபீர்' என்று பிரக்யாதி அடையும் புத்தகங்கள் எழுத விரும்புகிறாயா? உன் ஆயுள் காலத்திலேயே அமோகமாக விற்பனையாகி, உனக்கு தனத்தை அள்ளிகொடுத்து எங்கே திரும்பினாலும், கண்ணில் பட்டு, நீ மறையும்போது உன்னோடு மறைந்துவிடும் புத்தகம் எழுத விரும்புகிறாயா? என்று பகவான் கோட்டுவிட்டால் என்ன பதில் சொல்வது ?
"ஸாக்கிலே கொஞ்சம் 'பேக்'கிலே கொஞ்சம் கேட்கிறவனாயிற்றே நான் ? அந்த உத்திரவாதம் கிடைகாததால் தபஸ் பண்ணவே ஆரம்பிக்கவில்லை!"

நிஜவாழ்கையிலும் அவருடைய உண்மையான தாபமும் தாகமும் அதுதான், சுமார் கால் நூற்றாண்டுக் காலம் கதைகளையும், நாவல்களையும் அவர் எழுதிக் குவித்தார். அவற்றை ஓரளவாவது புத்தக வடிவில் பார்க்கவும் ஆசைப்பட்டார். ஆனால் அந்த ஆசை ஏனோ அவர் உயிரோடு இருந்த வரையில் நிறைவேறவே இல்லை.


தேவனின் படைப்புக்களை வாசிக்க ...
1. மரத்தடி ( தேவன்- என் பார்வை - ஹரன் பிரசன்னா)
2. தேசிகன் பக்கம் ( தேவன் சில கட்டுரைகள்/கதைகள்)
3. அப்புசாமி ( தேவன் சில கட்டுரைகள்/கதைகள்)

Read More...

Wednesday, October 27, 2004

This Day, That Age , 27th Oct ...

இட்லி வடையில் October 27, 2003 இவ்வாறு எழுதப்பட்டது -

(இனிமேல்) அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
இந்த Blogகுக்கு ஏன் இட்லி வடை என்று பெயர் வைத்தேன் ?
தமிழர்கள் சாப்பாட்டு பிரியர்கள் - இட்லி வடை என்று பெயர் வைத்தால் கட்டாயம் இங்கு வருவார்கள்!

நான் யார் ?
இட்லி வடைக்குள் ஒளிந்து கொள்ள நான் சாம்பார் அல்ல - உங்களில் ஒருவன், உங்கள் நண்பன்,
உங்கள் பக்கத்து வீட்டுக்காரன் சில சமயம் உங்கள் மனசாட்சி.
(நான் யார் என்று சொன்னால், சட்னி ஆகிவிடுவது நிச்சயம்! அதனால் ...)


இட்லி வடை ஆரம்பித்து இன்றோடு ஒரு வருடம் ஆகிறது. சும்மா ஹிண்டு நாளிதழ் போல் "This Day, That Age ". அவ்வளவு தான்!

அன்புடன்,
இட்லி

Read More...

Tuesday, October 19, 2004

வீரப்பன் - இனி...

40 ஆண்டுகாலமாக சிம்ம சொப்பனமாக இருந்துவந்த சந்தனக் கடத்தல் வீரப்பன் (59) திங்கள்கிழமை இரவு 10.50 மணிக்கு தருமபுரி அருகே தமிழக அதிரடிப் படைப் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டான். இந்த செய்தி எல்லா பத்திரிக்கைகளிலும் வந்த ஓய்ந்த பிறகு இனி வரும் சில நாட்களில்....

- எல்லா பத்திரிக்கைகளும் ( வலைப்பதிவுகளும் ?) வீரப்பன் ஏன் உருவானான் என்ற கருத்தை தெரிவிப்பார்கள். தலையங்கம், கவர் ஸ்டோரி எழுதுவார்கள்.

- நக்கீரன் கோபால் வீரப்பனை பற்றி ஒரு புத்தகம் எழுதுவார். தனது பத்திரிக்கையை 'நக்கீரன்' என்பதை 'வீரப்பன்' என்று மாற்றினாலும் மாற்றுவார்.

- தமிழ்ப்பற்று உள்ள தலைவர்கள் வீரப்பரின் குடும்பத்திற்கு உதவுவார்கள். அவர் மனைவியை அடுத்த தேர்தலில் நிக்கவைப்பார்கள். அவர் குழந்தையை பேட்டி எடுத்து அனுதாபத்தை வர
வைப்பார்கள்.
- சிலர் அவன் ஒரு தமிழ் தியாகி, அவன் என்ன செய்தான் பாவம் என்று வக்காலத்து வாங்குவார்கள்.

- பலர் அவனை எப்பொழுதோ பிடித்திருக்க வேண்டும், இது ரொம்ப லேட் என்பார்கள்.

- அவனை உயிருடன் பிடித்திருக்க வேண்டும் அப்போது தான் பல உண்மைகள் தெரிந்திருக்கும் என்பார்கள்.

- ராஜ்குமார் அவன் கெட்டவன் ஆனால் அவன் என் நண்பன் என்றும். நாகப்பாவின் குடும்பத்தினர் எங்களுக்கு மகிழ்ச்சி என்றும் கூறுவர்.

- அவன் கொல்லப்பட்டதில் பல மர்மங்கள் இருக்கிறது. இதை CBI விசாரிக்கவேண்டும் என்று கூறுவார்கள்.

- அவன் ஒரு வீரன், அவனை எளிதில் பிடிக்க முடியாது அவனே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று அவன் வீரத்தை பாராட்டுவார்கள்.

- தமிழ் நாட்டு எதிர்கட்சிகள், இதில் கர்நாடக பங்கை மறக்க கூடாது என்பார்கள்.


என் கருத்து:

1. தமிழக முதல்வர் ஜெ காட்டிய விடா முயற்சியும், அதிரடிப் படைக்கு அவர் அளித்துவந்த எல்லையற்ற ஆதரவு சரிதான் என்பதை வீரப்பன் கொல்லப்பட்ட சம்பவம் நிரூபித்துள்ளது.

2. கலைஞர் ஆட்சியில் இது நிகழ்ந்திருக்குமா என்பது ஒரு பெரிய கேள்விக்குறியே.

கடைசியாக இந்த வாரம் விகடனில் மதனின் கார்ட்டூன் என்ன பொருத்தம் பாருங்கள்!

(நன்றி ஆனந்த விகடன்)












Read More...

Friday, October 15, 2004

நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் - 10

சில நாட்களாக தொடர்ந்து எழுத முடியவில்லை. ஒன்றும் எழுதவில்லை என்றாலும் என் வலைப்பதிவுக்கு வந்த அனைவருக்கும் என் நன்றிகள்.

வரும் சில பதிவுகளில் நகைச்சுவை எழுத்தாளர்களை பற்றி கொஞ்சம் எழுதலாம் என்ற எண்ணம்.

முதலில்

எஸ்.வி.வி (25-8-1880 - 31-5-1950 )

எஸ்.வி.விஜயராகவாச்சாரி என்ற இந்த எழுதாளரைத் தெரியாத தமிழ் வாசகர் இருக்க முடியாது.
1934ஆம் ஆண்டுக்கு முன்பு திருவண்ணாமலையில் வக்கீல் தொழில் செய்துக் கொண்டே பல நகைச்சுவை, கட்டுரைகள், நாவல்கள் என்று பல எழுதியுள்ளார். 'இந்து' நாளிதழில் நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்த இவரை, எளிமையான பழகு தமிழில் நகைச்சுவையுடன் எழுத வைத்த பெருமை 'ஆனந்த விகடனை'யே சாரும். இவருடைய எழுத்தை படித்தால் ஒரு நகைச்சுவை உணர்வுள்ள ஒரு பெரியவரிடம் பேசிக்கொண்டிருப்பது போல் இருக்கும்.

இன்று விகடனில் வரும் "அனு-அக்கா-ஆன்டிக்கு" அறுபது ஆண்டுகளுக்கு முன்பே முன்னோடியாக இருந்து தொடங்கி வைத்தவர் எஸ்.வி.வி.

அந்த காலக் குடும்பங்களை எண்ணிப் பாருங்கள். கிராமங்களாக இருந்தால் வீட்டில் ஒரு முற்றம்; வாசலில் அகலமான திண்ணை இருக்கும். நகரங்களில் உள்ள குடும்பத்தாரின் வீடுகளில் மேலே திறந்த மாடி இருக்கும் கட்டிடம் ஏதும் இல்லாததால் அத்ற்கு மொட்டை மாடி என்று பெயர் வேறே.
அங்கே கணவனும் மனைவியும் குழந்தகளுமாக உட்கார்ந்து அரட்டை அடிப்பார்கள். இந்த அரட்டை கச்சேரிக்கு உல்லாச வேளை என்று தலைப்பும் கொடுத்து அறிமுகம் செய்தார் எஸ்.வி.வி.

வாழ்க்கையை ஒட்டி அமைந்த நகைச்சுவை கட்டுகளை நிறைய எழுதியிருக்கிறார் எஸ்.வி.வி. அவற்றைப் படிக்கும்போது நம்முடைய வீட்டில் நடப்பதையே மீண்டும் கவனிப்பதைப் போல் இருக்கும்.

பல்வலியால் அவதிப்படும் மனைவி கணவனைத் திண்டாட வைத்துப் பந்தாடுவாள் கணவன் மீது சந்தேகப்படும் மனைவி விதம் விதமாக கற்பனை செய்து கடைசியில் தானே அவனுடைய ராஜாத்தி என்பதை புரிந்துகொள்வாள். "பிறர் குழந்தைகள்" என்ற கட்டுரையில் ஒரு பகுதியைப் பார்ப்போம்.
சில வீடுகளுக்குப் போனால் குழந்தையின் தகப்பானார் பெருமை அடித்துக்கொள்ளும் கொடுமையைக் கேட்டு நமக்கு அலுத்துவிடும். எப்பொழுது எழுந்து போகலாம் என்று தோன்றும்.

"குழந்தை யார் பேரனா?" என்று கோட்கிறேம். அவருடைய வயதைப் பார்த்தால் பேரனாகத்தான் இருக்க வேண்டும் என்று நமக்கு படுகிறது.
"பேரன் இல்லை பிள்ளைதான் இவன்தான் கடைசி!"
"ஏன் இதற்குள் கடைசி என்று சொல்லி விடுகிறீர்கள்" என்று சிரிக்கிறோம்.
"பொல்லாத பயல் ஸார்! ஏண்டா சோனி? நீ பொல்லாத பயல்தானேடா ?"
"நான் பொல்லாத பயல் அல்ல. அப்பாதான் பொல்லாத அப்பா"
இந்த சமர்த்து வார்த்தையைக் கோட்டு அப்பாவிற்குப் பெருமை பொங்குகிறது....

அவருடைய கதைகளிலும் கட்டுரைகளிலும் மட்டும் அல்ல; நாவல்களிலும் குடும்ப சித்தரம் அழகாக மலரும். இவை எல்லாவற்றிலுமே பாத்திரங்களைக் கவனித்தால் நம்மையே நாம் கூர்ந்து பார்ப்பது போல் இருக்கும். சில நிகழ்ச்சிகளை படிக்கும் போது "நம் வீட்டுல்கூட இப்படி நடக்கிறதே?" என்று எண்ணத் தோன்றும்.

நகைச்சுவையைத் தனது கலையாக ஏற்றுக் கடைசி வரை அதிலேயே திளைத்தவர் எஸ்.வி.வி. 'ஆனந்த விகடனில்' எழுதத் தொடங்கியவர், கடைசிவரையில் அதில் மட்டுமே எழுதினார். கடைசி நாட்களில் தனக்கு வந்த நோயைக்கூட நகைச்சுவையுடன் வருணித்து குறிப்பிட்டவர் அவர்.

நம்முடனேயே இருந்து நம்மை நமக்கு எடுத்துக் காட்டிச் சிரிக்க வைத்தவர் எஸ்.வி.வி.

Read More...

Monday, September 20, 2004

நாகரிகம், அநாகரிகம் தெரியும்... அதென்ன ஆநாகரிகம்?

சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் (26/09/2004, ஆனந்த விகடன்) பகுதியிலிருந்து ...

"நம் திரைப் படங்களிலும் தொலைக்காட்சியிலும், நகைச்சுவை என்ற பெயரில் பின்பக்கத்தில் உதைப்பது, கஷ்கத்தைச் சொறிவது, ஒருவர்மேல் ஒருவர் துப்பிக் கொள்வது போன்ற அநாகரிகமான காட்சிகள் இப்போது மலிந்து வருகின்றன. எமிலிபோஸ்ட் மாதிரி பொதுவாழ்வில் நாகரிக நடைமுறைக்கு வழிகாட்டிகள் தேவைப்படுகின்றனÕÕ என்ற முன்னுரையுடன் எனது நண்பர் சாரதி இ|மெயில் அனுப்பி, Ôஇது உங்கள் பகுதிக்கு உதவுமா, பாருங்கள். இல்லையென்றால் டெலீட்டுங்கள்Õ என்று எழுதியிருந்தார்.

பொது வாழ்வில் நடத்தையை நாகரிகம், அநாகரிகம், ஆநாகரிகம் என மூன்று வகையாகப் பிரித்துக் குறிப்பிட்டிருக்கிறார் (எனக்கென்னவோ mad லிருந்து தட்டியிருக்கிறாரோ என்று சந்தேகம்!). இம்மாதிரி சாரதி இருபது அயிட்டம் கொடுத்திருந்தார். அவற்றில், நம் சூழ்நிலையில் பிரசுரத்துக்குத் தகுந்த பத்து மட்டும் தருகிறேன்.


உதாரணம்: 1.பொது இடத்தில் மூக்கை, காதை, பல்லை நோண்டாமல் இருப்பது நாகரிகம். நோண்டுவது அநாகரிகம். நோண்டுவது மட்டுமின்றி, விளைவை உருட்டி ஆராய்வது ஆநாகரிகம்!

2.புருவம், காது, மூக்கு உரோமங்களைச் சீராக வெட்டி வைத்திருப்பது நாகரிகம். வெட்டாமல், காடாக வளர்ப்பது அநாகரிகம். அவற்றை நீளமாக வளர்த்து, சீப்புப் போட்டு வாரிப் பின்னுவது ஆநாகரிகம்.

3.என்னதான் ஜலதோஷமாக இருந்தா லும், பொது இடங்களில் தும்மாமல், சிந்தாமல் கைக்குட்டையில் Ôஸ்க்Õகுவது நாகரிகம். மூக்கில் புல்லாக்கு போல் தொங்கவிடுவது அநாகரிகம். ‘ஹளார்Õ என்று 120 டெஸிபலில் தும்மி, ஜெட் வேகத்தில் பக்கத்தில் இருப்பவர் சட்டையில் பாய, ÔஸாரிÕ சொல்லாமல் துடைத்து விடுவது ஆநாகரிகம்.

4.ஹெர்னியா போன்ற ஆபரேஷன் பற்றிப் பேசாமல் இருப்பது நாகரிகம். ஆபரேஷன் தழும்பைக் காட்டுவது அநாகரிகம். ஆபரேஷனில் நீக்கிய பாகத்தை ஜாடியில் வைத்திருந்து காட்டுவது ஆநாகரிகம்.

5.சுத்தமான சட்டை அணிவது நாகரிகம். கைக்குக் கீழ் வியர்வைக் கறை தெரிய, சட்டை அணிவது அநாகரிகம். அந்த வியர்வையை மற்றவர் எதிரில் பிழிவது ஆநாகரிகம்.

6.ஆபீஸில்... தூங்காமல் இருப்பது நாகரிகம். குறட்டைவிட்டுத் தூங்குவது அநாகரிகம். குறட்டையுடன் ஜொள்ளு விடுவது ஆநாகரிகம்.

7.அடக்கி வைத் திருந்து, வீட்டுக்குப் போய் சிறுநீர் கழிப்பது நாகரிகம். தெருவில் சுவர்மேல் சிறுநீர் கழிப்பது அநாகரிகம். அதில் டிசைன் போடுவது ஆநாகரிகம்.


8.விருந்தில், சாப்பாட்டில் தலைமுடி இருந்தால், பார்க்காமல் நீக்குவது நாகரிகம். எல்லோரும் பார்க்க, அதை எடுத்துப் போடுவது அநாகரிகம். அந்த ரோமம் யாருடையது என்று பெண்களிடம் விசாரிப்பது ஆநாகரிகம்.

9.அடிபட்ட புண் தெரியாமல் உடை அணிவது நாகரிகம். அடிபட்ட புண்ணைக் காட்டுவது அநாகரிகம். அதை வரக் வரக்கென்று சொரிவது ஆநாகரிகம்.

10.சாப்பிடும்போது பேசாமல் இருப்பது நாகரிகம். வாய் நிறைய போண்டா சாப்பிட்டுக்கொண்டே பேசுவது அநாகரிகம். பாதி சாப்பிட்ட போண்டாவை எடுத்து, சற்று நேரம் கையில் வைத்துக்கொண்டு பேசுவது ஆநாகரிகம்.

இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருப்பது நாகரிகம். சுட்டிக்காட்டுவது அநாகரிகம். படம் போட்டுக் காட்டுவது ஆநாகரிகம்!

நன்றி ஆனந்த விகடன்

Read More...

Thursday, September 09, 2004

கார்ட்டூன்


நன்றி ஆனந்த விகடன்.

Read More...

Friday, September 03, 2004

புது முயற்சிகள் - 2

1. காசியின் தமிழ்மணம் - அற்புதமான முயற்சிக்கு எடுத்துக்காட்டு. இதை அவரே தனித்து செய்து காண்பித்திருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு. அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். கூட்டாக செய்திருந்தால் முடிந்திருக்குமா ?

2. இட்லிவடையில் வரும் புதிர்களை பார்த்திருப்பீர்கள். இட்லிவடை வலைப்பதிவை வைத்து VIP புதிர் ஒன்றை குசும்பன் வெளியிட்டுள்ளார். இன்னுமும் நன்றாக எழுதியிருக்கலாம் என்பது என் எண்ணம். அவருடைய இந்த புதிய (தைரியமான?) முயற்சிக்கு பாராட்டுக்கள்.

Read More...

Wednesday, August 25, 2004

கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு ! - விடை

ரங்கா,

வாழ்த்துக்கள். சரியான விடை - கருப்பு எழுத்துக்களை(முகம் பார்க்கும்)கண்ணாடியில் காண்பித்தால் அப்படியே இருக்கும், திரும்பாது!

அன்புடன்
இட்லி

Read More...

Tuesday, August 24, 2004

பத்ரிக்கு Temporary ரஜினி ரசிகனின் கடிதம்

......
அருண் வைத்யநாதன் வேண்டுகோளை ஏற்று பதிவு நீக்கப்பட்டுள்ளது.
யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்,
இட்லி
(Temporary ரஜினி ரசிகன்)

Inspiration:
1. பத்ரி
2. வந்தியத்தேவன்
3. அருண் வைத்யநாதன்
4. ராஜ்குமார்

Read More...

Monday, August 23, 2004

கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு !

இந்த வாரம் ஒரு புதிர்!
எனக்கு கருப்பு கலர்ல இருக்கும் எழுத்துதான் பிடிக்கும் ஏன் ?

CHOICEPURPLEBOOKWATER
WARDIEDTIGERECHO
ICEBOXSQUAREBOOHOOTABLE
TURTLEHIDELARGEDECIDED
OBOEROSECHOCKEDPIG


clue1: ஆங்கில புதிர். தமிழ்ல யேசிக்காதீங்க! (23-Aug-04)
clue2: தெரியலைனா கண்ணாடி போடுங்க ! ( 24-Aug-04)


Read More...

Tuesday, August 17, 2004

சென்ற வார உலகம் - 17/8/04

அரசியல் - ஒரு மந்திரி, ஒரு வழக்கு, ஒரு வாபஸ்
நான் சென்ற வார உலகம் எழுத ஆரம்பித்ததிலிருந்து யாராவது ஒரு மத்திய அமைச்சர் மாட்டிக்கொள்கிறார்.இந்த வாரம் ராஷ்ட்ரீய ஜனதா கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் தஸ்லிமுதீன் தலைமறைவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னாள் மத்திய அமைச்சர் சிபு சோரனுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது போலவே இவருக்கு எதிராகவும் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீண்டும் பாராளுமன்றத்தில் பாஜகவினர் புயலைக்கிளப்புவார்கள், வழக்கம் போல் சபாநாயகர் சட்டர்ஜி ஸ்வீட்,காரம், காப்பி கொடுத்து
சமாதானப்படுத்துவார்.சற்றுமுன் கிடைத்த செய்தி: மத்திய அமைச்சர் முகமது தஸ்லிமுதீன் மீதான கொலை முயற்சி, வெடிபொருட்கள், பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்ததாக பதிவான வழக்கை பீகார் மாநில அரசு வாபஸ் பெற்றது.

அரசியல் - பேட்டி - போட்டி
கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழக அரசுக்கு 11,625 கோடி ரூபாய் இழப்பு என்பது பல பத்திரிகைகளில் தலைப்பு செய்தியாக வந்தது. திரு.தீத்தன்(மாநில அக்கெளண்டெண்ட் ஜெனரல்) இந்த தகவல்களை தெரிவித்து, தவிர்க்க வேண்டிய செலவுகள், குறைபாடுகளால் இந்த இழப்பு எற்பட்டிருக்கிறது என்று பேட்டி கொடுத்து பத்திரிக்கைகளுக்கு தீனி போட்டார். தீத்தன் இந்த ஆண்டில் 4,713.88 கோடி ரூபாய் இழப்பு என்று கூறியதாக தினகரன், முரசொலி, ஹிந்துவில்
செய்தி வெளியாகியது. ஆனால் இது நான் பத்திரிகைகளுக்கு அளிக்கவில்லை என்று தீத்தன் கூறியுள்ளார். ஹிந்து மட்டும் ஒரு திருத்தத்தை அளித்துள்ளது. அது சரியாகயில்லை. அதிகாரி கூறியதாக ஒரு செய்தி அதற்கு ஒரு திருத்தம், திருத்தத்திருக்கு திருத்தம் என்று பல சந்தேகங்கள் எழுப்பிகிறது. தீத்தன் சுட்டிக்காட்டியுள்ள குறைகளுக்கு தமிழக முதல்வர் பதில் அளித்திருக்கிறார். முதல்வர் விளம்பரங்கள் மூலம் விளக்கம் அளித்தது எதுவும் தவறில்லை.

அரசியல் - ரகசிய சந்திப்பு
உடுமலையில் நடிகர் விஜயகாந்தை, பா.ஜ., மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன் சந்தித்தார். இ ருவரும் தனி அறையில் அரசியல் விஷயங்கள் தொடர்பாக ரகசிய ஆலோசனை நடத்தினர். இந்த ரகசிய சந்திப்பு போட்டோவுடன் இல்லா பத்திரிக்கைகளிலும் ரகசியமாக வந்தது.

அரசியல் - வாக்கிங்
வைகோவின் வாக்கிங் பற்றி சென்றவாரம் எழுதியிருந்தேன். வைகோ சென்ற இடமெல்லாம் மக்கள் வரவேற்கும் காட்சி, போட்டோக்கள் இன்று எங்கு செல்லயிருக்கார் போன்ற தகவல்களை ரன்னிங் கமண்டரி போல் பத்திரிக்கை/டிவி கொடுத்துக்கொண்டே இருக்கிறது. சன் டிவி ரன்னிங் கமண்டரி வேண்டாம் அட்லீஸ்ட் ஒரு வாக்கிங் கமண்டரி கூட கொடுக்கவில்லை.

அரசியல் - லாலுவின் அதிர்ச்சி வைதியம்
அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் அதிரடியால் தற்போது டில்லியில் ரயில்வே அமைச்சக ஊழியர்கள் அலுவலகம் துவங்கும் நேரத்திற்கு முன்னதாகவே ஆஜராகி விடுகின்றனர். அதிகாரிகள் பலர் ஒரு மணிநேரத்திற்கு முன்பே உள்ளே அமர்ந்திருக்கின்றனர். நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களிலும், ரயில்வே அலுவலகங்களிலும் இதே நிலைமை காணப்படுவதாக கூறப்படுகிறது.டில்லியில், பார்லிமென்ட் ஹவுசை ஒட்டியுள்ள ரயில்வே அமைச்சகத்திற்கு கடந்த செவ்வாய்கிழமை ரயில்வே அமைச்சர் லாலு அதிரடி விஜயம் செய்து, தாமதமாக வந்த அதிகாரிகள் உட்பட ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். தாமதமாக வந்த 500க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு "ஆப்சென்ட்' போட்டு, ஒரு நாள் சபளத்திலும் "கை' வைத்தார்.

இதனால், ஆடிப் போன ரயில்வே அமைச்சக அதிகாரிகள் தற்போது ஒரு மணி நேரத்திற்கு முன்பே அலுவலகத்திற்கு வந்து விடுகின்றனர். மற்ற ஊழியர்களும் அலுவலக நேரத்திற்கு சற்று முன்னதாகவே வந்து விடுகின்றனர்.

பீஹார் முதலமைச்சர் ராப்பிரி தேவி அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை மட்டும்தான் போகிறார். மற்ற நாட்களில் உருளைக்கிழங்கு உரித்துக்கொண்டே ஃபைல்களை பார்கிறார்.

அரசியல் - தன்மானம்
ஒரு தவறும் செய்யாத என்னை, இரண்டு வருடங்களாக நாடாளுமன்றத்தில் பேச எதிர்க்கட்சிகள்
அனுமதிக்கவில்லை. இதைவிட அமெரிக்காவில் நடந்த சம்பவம் ஒன்றும் பெரிதல்ல,'' என்று முன்னாள் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தெரிவித்தார். இது நம் இந்திய குணம். அவ்வளவுதான். இல்லாவிட்டல் இங்கிலாந்திலிருந்து வந்தவர்கள் ஒரு காசுக்கும் உதவாத 'ராவ்பகதூர்', 'திவான்பகதூர்' பட்டங்களை நமக்கு கொடுத்து நம் தலையில் மிளகாய் அரைத்திருக்க முடியுமா? வெள்ளைக்காரர்களை பார்த்தால் நாம் கொஞ்சம் தாழ்த்தப்பட்டவர்களாக உணர்கிறோம். இதுதான் உண்மை. நம் கண்களில் தூசு விழுந்துவிட்டால்
'foreign particle' என்று அப்படியே விட்டாலும் விடுவோம்.

அரசியல் - குண்டர்கள்
தினமலர் மற்றும் காலைக்கதிர்' பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய பா.ம.க அரசியலை வன்மையாக எந்த கட்சியும் கண்டிக்காதது வியப்பை அளிக்கிறது. நீ ஆயுதம் வைத்திருந்தால் தீவிரவாதி உன் தொண்டர்கள் வைத்திருந்தால் நீ தலைவன் என்று எங்கோ படித்ததுதான் ஞாபகத்திற்கு வருகிறது.

தொழிலாளர் சேமநல நிதி - 8.5
நீண்ட இழுபறிக்குப் பின், தொழிலாளர் சேமநல நிதிக்கு (இ.பி.எப்.,) இந்த நிதியாண்டில் 8.5 சதவீதம் வட்டி வழங்க முடிவு செய்யப்பட்டது.தொழிலாளர் சேமநல நிதித் திட்டத்தில் நாடு முழுவதும் மூன்று கோடி உறுப்பினர்கள் உள்ளனர். இத்திட்டத்தில் தொழிலாளர்கள் செலுத்தும் தொகைக்கு தற்போது 9.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இதை எட்டு சதவீதமாக குறைக்க மத்திய நிதியமைச்சகம் பரிந்துரை செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.வட்டி விகிதத்தை முடிவு செய்ய குழு அமைக்கப்பட்டது. பலமுறை இக்குழுவின் கூட்டம் நடந்த போதும், முடிவு ஏற்படாமல் இழுபறியாக இருந்தது. குழுவின் கூட்டம் டில்லியில் நடந்தது. இதில், இந்த
நிதியாண்டிற்கு மட்டும் 8.5 சதவீதம் வட்டி வழங்க முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிஸ்ராம் ஓலா, இதை அறிவித்தார். கூட்டத்தில் பங்கேற்ற கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்புடைய சி.ஐ.டி.யூ., மற்றும் ஏ.ஐ.டி.யூ.சி., தொழிற் சங்கங்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதை எதிர்த்து போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தன. பாரதிய மஸ்துõர் சங்கமும் 8.5 சதவீத வட்டியை ஏற்கவில்லை. இதை எதிர்த்து, அடுத்த மாதம் 20ம் தேதி டில்லி, கோல்கட்டாவில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப் போவதாக இச்சங்கம் அறிவித்தது. இதை ஏன் (புத்திசாலி)பட்ஜெட்டில் சொல்லாமல் இப்போழுது சொல்கிறார்கள்?

விளையாட்டு - நம்பிக்கை, எதிர்பார்ப்பு, எதார்த்தம்...
ஒலிம்பிக்... 4 ஆண்டு பயிற்சிக்கு பலனாக பதக்கங்களை அறுவடை செய்யும் விளையாட்டுத் திருவிழா.இதில் ஒரே வீராங்கனை பல தங்கங்களை அள்ளிச் செல்வதை நாம் ஏக்கத்துடன் பார்த்திருக்கிறோம். இத்தனை கோடி மக்கள் இருந்தும் நமக்கு வெண்கலம் மட்டுமே ஆறுதலாக கிடைக்கிறது என்று ஆதங்கப்பட்டுள்ளோம். கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவால் ஒரு தங்கப்பதக்கத்தை கூட பெற முடியாததது வேதனையான விஷயம்தான். இந்த வேதனைக்கு எல்லாம் ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் விடிவு காலம் பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணியாக
ஹாக்கி, தடகளத்தில் அஞ்சு ஜார்ஜ், துப்பாக்கி சுடுதலில் அஞ்சலி பகவத், பளு துõக்குதலில் மல்லீஸ்வரி, டென்னிசில் பயஸ், பூபதி என ஏகப்பட்ட பதக்க "நம்பிக்கைகள்' இம்முறை காணப்படுகின்றனர்.
எதார்த்தம்: நான் செல்ல வேண்டுமா என்ன ஒரு வெண்கலம் கிடத்தால் அதுவே ஒரு பெரிய சாதனைதான்.

இரண்டு தண்டனை
பள்ளி மாணவியை கற்பழித்துக் கொன்ற தனஞ்ஜய் சட்டர்ஜிக்கு 14ஆம் தேதி அதிகாலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. மேல்முறையீடுகள், ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பியது உள்ளிட்ட பல விஷயங்களால் அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவது தள்ளி போய்க் கொண்டே இருந்தது.தூக்கிலிட அவரை அழைத்துச் சென்ற போது அவர், "நான் நிரபராதி; என்னை கொல்கிறார்கள்' என்று திரும்பத் திரும்ப கூறிக் கொண்டே இருந்தார்.

இந்த தூக்கு தண்டனை வழக்கிற்கு ஒரு பெரிய hype மீடியாவினால் கிடைத்தது. தூக்கு தண்டனை வேண்டுமா ? வேண்டாமா ? என்பதை பற்றி தினமும் அலசினார்கள்.தனஞ்சய்க்கு கொடுக்கப்பட்டுள்ள தண்டனை சரிதான், ஆனால் 14 ஆண்டுகள் கழித்து நிறைவேற்றபட்டதுதான் தவறு என்பது என் எண்ணம். தனஞ்ஜய்க்கு இரண்டு தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது - ஒரு ஆயுள் தண்டனை + ஒரு தூக்கு தண்டனை.

14 வயது மாணவியை, 14 ஆண்டுகளுக்கு முன் கற்பழித்துக் கொன்ற தனஞ்ஜயின் பிறந்ததினம் 14 ஆம் தேதி. இறந்த தினமும் 14 ஆம் தேதி!.
நம் எல்லோருக்கும் கொஞ்சம் பாவமாகதான் இருந்தது. தூக்கு தண்டனையை நீக்கமுடியாது. தூக்குத் தண்டனைக்கு பதிலாக குற்றவாளிக்கு விஷஊசி போட்டு மரணத்தை தழுவச் செய்யலாம். என்னைப் பொறுத்தவரை மனிதாபிமானத்தோடு ஒரு குற்றவாளியை உயிர் இழக்கச் செய்வதற்கு இதுவே வழி.


கொண்டாட்டம் - சுதந்திர தினம்.
சுதந்திர தினம் என்றால் நாம் எல்லோரும் முதலில் பார்ப்பது அது எந்த கிழமையில் வருகிறது என்று தான். இந்த வருடம் அது ஞாயிற்றுக்கிழமையில் வந்தது எல்லோருக்கும் ஏமாற்றமே. சுதந்திர தினத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பே டிவி சானல்கள் அன்று என்னென்ன சினிமா என்று அலர ஆரம்பித்துவிட்டன. பழைய கருப்பு வெள்ளை படங்களிருந்து சில காட்சிகளை போட்டு தங்களின் தேச பக்தியை உணர்த்தினார்கள். கொடியை குத்திக் கொண்டு நடிகர், நடிகைகள் பேட்டி கொடுத்தார்கள். வழக்கம் போல் டிடியில் அணிவகுப்பை காண்பித்தார்கள். செய்திகளில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு என்று வாசித்தார்கள். விஜய் டிவியில் -
காமராஜர், ராஜ் - வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் காண்பித்தார்கள்.
நம் நாட்டில் இது ஒரு சடங்கு அவ்வளவுதான்.

கப்பல்
நாட்டின் பாதுகாப்பு கருதி தூத்துக்குடிக்கும் இலங்கைக்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தைத் துவக்க கூடாது என்று ஜெ கூறியிருக்கார். நல்ல கோரிக்கை என்பது என் எண்ணம். இந்த புதிய வசதியினால் பெட்ரோல், டீஸல் போன்ற பொருட்கள் கடத்தலுக்கு வழிவகுக்கும். ஏன் ஆயுத பரிமாற்றம் கூட நிகழலாம். என்னை கேட்டால் ஒரு பேப்பர் கப்பல் கூட விட அனுமதிக்க கூடாது.

குடிக்க கொஞ்சம் தண்ணி தாங்கப்பா
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கடும் மழை பெய்து வருகிறது. இதனால், ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக அங்கு செயற்கையான ஏரி உருவாகியுள்ளது. இதில் தேங்கியிருக்கும் வெள்ள நீரினால் இந்தியாவின் இமாச்சல பிரதேச மாநிலத்திற்கும் பெரும் அபாயம் ஏற்படக் கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இதை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதை சென்னை பக்கம் திருப்ப முடியுமா ?

கின்னஸ் சாதனை ?
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்ற பெண்ணுடன் தென் மாவட்டங்களைச் சேர்ந்த பல காவல்துறை அதிகாரிகள் முறைகேடான தொடர்பு வைத்துள்ளதாக பரபரப்பு செய்திகள் வெளியாகி காவல்துறைக்கு பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலட்சுமி இதுவரை 19 பேரை(இன்றைய கணக்குப்படி!) கல்யாணம் செய்துள்ளதாகவும், இதில் பலர் காவல்துறை அதிகாரிகள் எனவும், இவர்களைத் தவிர மேலும் பல போலீஸ் அதிகாரிகள் சிக்குவார்கள் என்று செய்திகள் வருகிறது. இந்த செய்தி விரைவில் அமுத்தப்படும் என்பது
என் எண்ணம்.


கடைசி செய்தி
ஈராக்கில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ள மூன்று இந்தியர்களை பற்றிய செய்தி அவ்வளவாக கடந்த வாரம் வரவில்லை. பேச்சு வார்த்தை முன்னேற்றம், பின்னடைவு என்று மாறி மாறி கூறிக்கொண்டே இருக்கிறார்கள். இந்தியர்களை விடுவிப்பது தொடர்பாக தீவிரவாதிகளின் பிரதிநிதியாக பேச்சுவார்த்தை நடத்தி வரும் அல் துலாய்மி, சுவாரசியமான பேட்டி ஒன்று அளித்தார். அதில், "பாலிவுட் நடிகர்கள் அமிதாப், தர்மேந்திரா ஆகியோர் "டிவி'யில் தோன்றி வேண்டுகோள் விடுத்தால், இந்தியர்களை தீவிரவாதிகள் உடனடியாக விடுதலை செய்து விடுவார்கள்' என்றார். இந்த செய்தியை வைத்து கொஞ்ச நாள் பத்திரிக்கையை ஓட்டினார்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மறக்க ஆரம்பித்திருக்கார்கள்.

ஜோக்ஸ்
"திமுக கூட்டணி வெற்றி பெற்றதற்கு முஸ்லிம்கள் காரணம்" - கருணாநிதி.
"சந்தன கடத்தல் வீரப்பனின் குணாதிசயங்களை அறிந்தவன் நான். பொதுகாரியங்களுக்கு விரப்பன் எவ்வித இடையூரும் செய்யமாட்டான்" - ஈ.விகே.எஸ். இளங்கோவன்.

Read More...

Monday, August 09, 2004

சென்ற வார உலகம் - 9/8/04

விளையாட்டு - Statutory warning - இந்திய அணி மேல் பெட் வைக்காதீர்கள்.

இலங்கையை நான்கு ரன் வித்தியாசத்தில் சூப்பர் லீகில் வீழ்த்திய பின் திடீர் என்று இந்திய அணி இனி சென்ற இடமெல்லாம் ஜெயித்துவிடும் என்று எல்லோரும் மீண்டும் நம்பினார்கள். இலங்கை 228 என்ற உடன் கோப்பை நமது என்று கனவு கண்டார்கள். அசிங்கமாக தோத்தார்கள். ஏனென்றால் அவர்கள் அன்று விளையாடியது கிரிக்கேட் இல்லை. அன்றைய மாட்சை நான்கு பகுதிகளாக பிரிக்கலாம்.

முதல் பகுதி - ஆஹா இந்திய அணி என்றால் சும்மாவா ? எப்படி விளையாடுகிறார்கள் பார்த்தீர்களா? பந்து வீச்சாளர்கள் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்.
இரண்டாவது பகுதி - 228 ஒரு சுலபமான இலக்கு என்ற நம்பிக்கையில் நண்பர்களுடன் பெட் வைத்தல்.
முன்றாம் பகுதி - கடவுளே என்ன ஆயிற்று இவர்களுக்கு ஏன் இவ்வளவு கேவலமாக விளையாடுகிறார்கள்.
நான்காம் பகுதி - அடச்சே சொதப்பிட்டாங்களே இவர்கள் விளம்பர படத்தில் நடிக்கத்தான் லாயக்கு.

நீதி: இந்திய அணியை நேசி, அவர்கள் ஜெயிக்க கடவுளை வழிபடு, ஆனால் அவர்கள் நம்பி பெட் வைக்காதே.

அரசியல் - புதிய சிக்கல்

சிபு சோரனை தொடர்ந்து இன்னொரு மத்திய அமைச்சரான டி.ஆர். சந்திரசேகர ராவுக்கு மோசடி வழக்கில் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் உத்தரவை கோர்ட் பிறப்பித்தது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவரான அவர், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பா.ஜ., வற்புறுத்தியது. இதனால், மத்திய அரசுக்கு புதிய சிக்கல் முளைத்துள்ளது. இது மாதிரி எவ்வளவு பேர் கிளம்பியிருக்கீங்க ?
முன்பு நான் எழுதிய அடுத்த தேர்தலுக்கான விண்ணபப் படிவத்தின் டாப் 10+3 கேள்விகள்


அரசியல் - நடைப்பயணம்
மதிமுக பொதுச்செயலர் வைகோ தனது மறுமலர்ச்சி நடைப்பயணத்தை திருநெல்வேலியில் வியாழக்கிழமை நண்பகல் தொடங்கினார்.

தாமிரபரணி ஆற்றில் நீராடி தனது பயணத்தைத் தொடங்கிய அவர், 42 நாட்களில் 1,025 கி.மீ. தூரம் நடந்து சென்று அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி சென்னையைச் சென்றடைகிறார்.

வைகோவின் 'வேண்டும்' லிஸ்ட்

மாநிலங்களிடையே ஓடும் நதிகளை இணைக்க வேண்டும்
காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் தமிழகத்தின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்திட வேண்டும்
பொதுவாழ்வில் ஊடுருவிவிட்ட சீர்கேடுகளை அகற்றும் உணர்வு பொதுமக்களிடையே ஏற்பட வேண்டும்;
சாதி, மத மோதல்களைத் தடுக்க வேண்டும்;
வன்முறை மனப்பாங்கை இளைஞர்கள் கைவிட வேண்டும்
என்பனவற்றை வலியுறுத்துவதோடு, தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியின் அராஜகத்தையும், ஊழல்களையும் எதிர்த்து மக்கள் சக்தியைத் திரட்டவும் இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுவதாக வைகோ அறிவித்துள்ளார்.

உங்களுக்கு டயாபடீஸ் என்றால் கலந்துகொள்ளலாம் வாக்கிங் டயாபடீஸூக்கு நல்லது.

அரசியல் - சம்பிரதாயம்
மூன்று மாதத்திற்கு ஒரு முறை எதிர்க்கட்சி தலைவர்கள் ஜனாதிபதி/கவர்னரிடம் மனு கொடுக்கும் நிகழ்ச்சி நடை பெறுகிறது. என்ன நடந்துவிட போகிறது ? ஒன்றும் நடக்காது. மிஞ்சி போனால் ஒரு நல்ல நாள் பார்த்து ஒரு அழகான ஃபைலில் போட்டு வைக்கலாம். பின் ஏன் இந்த கூத்து ? இப்படி பண்ணினால் தான் பத்திரிக்கை/டீவியில் உங்களை காண்பிப்பார்கள்.

கொரிக்க கொஞ்சம் பான் மசாலா

பான்மசாலா மற்றும் குட்கா விற்பனைக்குத் தடை விதித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. இதன் மூலம், தமிழகத்தில் பான்மசாலா மற்றும் குட்கா விற்பனைக்கு இருந்து வந்த தடை நீங்கியது. ஒரு பொருளை உற்பத்தி செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை.அதைத் தடை செய்ய வேண்டும் எனக் கருதியிருந்தால் நாடாளுமன்றமே அதற்குத் தடை விதித்திருக்கும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். சட்டப்படி நியாயமான தீர்ப்பு என்றாலும், நல்ல தீர்ப்பு இல்லை.


இது கொஞ்சம் ஓவர்

மதுரையை சுற்றியுள்ள மக்கள் வழக்கு சம்பந்தமாக சென்னைக்கு அலைவதை குறைக்க மதுரை கிளை துவங்க பட்டது. நல்லது நடந்தது ஆனால் வக்கீல்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கினார்கள்.மதுரை கிளைக்கு 25 ஆயிரம் வழக்குகள் மாற்றிக் கொடுத்தாலும், மீதம் சென்னையில் உள்ள வழக்குகளை விசாரித்து முடிக்கவே 20 வருட காலம் ஆகும்.

நீண்ட காலமாக மிக நல்ல வருமானத்தைப் பார்த்து விட்ட சென்னை வக்கீல்கள், பிற்காலத்தில் தன் மகன், பேரன், கொள்ளுப் பேரன்களை வக்கீலுக்கு படிக்க வைத்து வக்கீலாக பிராக்டீஸ் செய்யும்போது, மதுரை கிளை துவங்குவதால் 100 வருடங்களுக்குப் பிறகு தன் கொள்ளுப் பேரன் வக்கீலாகும்போது அவன் தொழில் பாதிக்குமே என இப்போதே வேதனையுடன் கொள்ளுப் பேரனை எண்ணி துடி துடிக்கின்றனர்.

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சுபாஷண் ரெட்டியை மாற்றியே தீர வேண்டுமென்று சென்னை ஐகோர்ட் மன்ற வக்கீல்கள் அனைவரும் அணி திரண்டு போராடினர்.இது கொஞ்சம் ஓவர்.

வருங்கால முதல்வர்களே..
இயக்குனர் பாரதிராஜா, ஒரு வார நாளிதழில், "நடிகர் விஜயகாந்த் எல்லாம் வருங்கால முதல்வர் என்று அடைமொழியிட்டுக் கொள்கிறார்' என்று மிகவும் வருத்தத்துடன் கடிந்து கொண்டுள்ளார். இந்தியர்களாக பிறந்த எல்லோரும் வருங்கால முதல்வர் என்று அழைத்துக் கொள்வதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.நான் ஸ்கூலில் படிக்ககும் போது, "If you become a PM/CM" என்று கட்டுரை எழுதச் சொல்லுவார்கள் பாரதிராஜா அதற்கும் எதிர்ப்பு தெரிவித்தாலும் தெரிவிப்பார்.

திருட்டுத்தானே ..

சென்னை போன்ற பெரு நகரங்களில் திருட்டு, கொள்ளை, வழிப்பறி குற்றங்கள் மிகவும் அதிகமாகி விட்டன.சில இடங்களில் கொள்ளையர்கள் கொலையும் செய்து விட்டுத் தப்பியோடி விடுகின்றனர். நம்முடைய தண்டனை சட்டத்தில் இதற்கு கடுமையான தண்டனை இல்லாததே இதற்கு காரணம்.

கொள்ளை, திருட்டு, வழிப்பறி மட்டும் செய்பவர்கள் குற்றம் நிரூபணமாகும்போது குறைந்தபட்சம் தண்டனையை கடுமையாக்க வேண்டும். திருட்டுத்தானே என்று விட்டுவிடுவதால் வந்த விளைவு.

ஓர் அறிவுரை

"இது பள்ளியா" என்று ஜெ கேட்டிருப்பது அவர் நாட்டு நடப்பு பற்றி அவருக்கு ஒன்றும் தெரியவில்லை என்பதையே காண்பிக்கிறது. முன்பு அரசர்கள் "மாதம் மும்மாரி பொழிகிறதா அமைச்சரே" என்று கேட்டார்கள்,

மாறுவேடம் அணிந்து நகர்வலம் வந்தார்கள். இவர் அது மாதிரியெல்லாம் செய்ய வேண்டாம், அட்லீஸ்ட் வாரம் ஒரு முறை அமைச்சர்கள், பத்திரிக்கை நிருபர்களை சந்தித்தாலே போதும் நாட்டு நடப்புகள் தெரிய வரும்.

ஓர் எச்சரிக்கை
நக்ஸலைட்டுகள் மீதான தடையை ஆந்திர அரசு விலக்கி கொண்ட இந்த அவகாசத்தை அவர்கள் பணம், ஆட்பலம் சேர்க்க பயன்படுத்தபடுவதாக செய்தி வருகிறது. உண்மை இருக்கும் என்று தான் தோன்றுகிறது. இதற்க்காக ஆந்திர அரசு வருத்தபடும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று எனக்கு தோன்றுகிறது. ஆயிதத்தை ஒப்படைக்கும் வரை பேச்சு வார்த்தை தொடங்கியிருக்க கூடாது என்பது என் எண்ணம்.


சரி - தப்பு
கும்பகோணம் தீ விபத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ஐந்து பேருக்கு கும்பகோணம் வக்கீல்கள் சங்கம், "கும்பகோணத்தில் இருந்து வழக்கறிஞர்கள் யாரும் மேற்படி குற்றவாளிகளுக்கு ஆஜராக மாட்டோம்' என்று முடிவெடுத்துள்ளது. நல்ல முடிவு தான், ஆனால் கொஞ்சம் யோசித்தால் இது ஒரு தப்பான முடிவு என்பது தெரியும்.

கடைசி செய்தி - மரணப்பிடியில்
இந்தியர்கள் மூன்று பேர் இராக்கில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு இரண்டு வாரம் ஆகிறது. அவர்கள் வைத்த கோரிக்கை என்ன, என்ன பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை. தீவிரவாதிகள் அவர்களை விட்டுவிட ஆண்டவனை பிராத்திப்பதை தவிர நாம் ஏதும் செய்ய இயலாது. மனிதாபிமானம் ஜெயிக்க வேண்டும்.


ஜோக்ஸ்
1. "தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு இயந்திரத்தில் தி.மு.க., தில்லு முல்லு செய்து விட்டது' - ஜெயலலிதா.

2. "கவிதை எழுதுகிறவன் ஆட்சி செய்வதற்கு மிக அருமையானவன். கவிதை எழுதுபவனிடம் நாட்டை ஒப்படைத்தால் அந்த நாடு நன்றாக இருக்கும். இது மூடர்களுக்குத் தெரியவில்லை" - கவிக்கோ அப்துல் ரகுமான்


Read More...

Wednesday, August 04, 2004

நியூ பட விமர்சனம்

நேற்று 'நியூ' படம் பார்த்தேன். சிம்ரனின் இடை, கிரனின் எடையை நம்பியே சூர்ரியா படத்தை எடுத்திருக்கிறார். என்னுடைய விமர்சனம்
நடிப்பு : 20%
மம்மி செண்டிமெண்ட் : 5%
பாடல் : 5 x 5 = 25%
இரட்டை அர்த்த நகைச்சுவை : 25 x 2 = 50%

படத்தில் இரட்டை அர்த்த ஜோக்ஸ் சகட்டு மேனிக்கு வருகிறது ( விசில் ஜோக், ஆணி அடிக்கும் ஜோக், உப்பு மூட்டை ஜோக் ...)இப்படி ஏராளமாக வருகிறது. வாயில் விரல் போடும் குழந்தைக்கு வேண்டுமானால் புரியாமல் இருக்கலாம், மற்ற எல்லோருக்கும் புரியும். நான் சிரிக்கவில்லை என்று பொய் சொல்ல விரும்பவில்லை. சிரித்தேன்.

எச்சரிக்கை: குடும்பத்துடன் பார்க்காதீர்கள். சில ஜோக்ஸுக்கு நீங்கள் வாய்விட்டு சிரித்துவிடுவீர்கள், பிறகு மாட்டிக்கொள்வீர்கள். Friends உடன் பார்க்கவும்.


Read More...

Monday, August 02, 2004

சென்ற வார உலகம்

சென்ற வாரம் என்னால் எதுவும் எழுத முடியவில்லை. வாழ்த்துச் செய்தி அனுப்பியவர்களுக்கு என் நன்றிகள். சென்ற வாரம் எழுத நினைத்ததை இந்த வாரம் தந்துள்ளேன்.

தலைப்பு செய்தி
'வசூல் ராஜா MBBS' என்ற படத்தின் தலைப்பிற்கு டாக்டர்கள் கோர்ட்டுக்கு சென்றிருக்கிறார்கள். போனவாரம் 'ரமணா' படத்திலிருந்து ஒரு காட்சியை KTVயில் காண்பித்தார்கள். ஒரு பிணத்திற்கு வைத்தியம் பார்த்து பணம் வசூலிப்பார்கள் டாக்டர்கள். நியாயமாக பார்த்தால் இந்த படத்திற்குதான் டாக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும். நல்ல கூத்து.

அரசியல் - தீ
கும்பகோணம் தீ விபத்தை யாரும் அரசியலாக்கக் கூடாது என்று சொல்லியே எல்லோரும் அரசியலாக்கினார்கள். கவிஞர்கள் கவிதை எழுதினார்கள். பத்திரிக்கைகள் ஒரு வாரம் நடிகைகளின் அட்டை படத்தை போடாமல் தீக்கிரையான குழந்தைகள் படத்தை போட்டு 'கவர் ஸ்டோரி' எழுதினார்கள். பிரபலங்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை பார்த்துவிட்டு வெளியே வந்து பேட்டி கொடுத்தார்கள். ராகுல் காந்தி If you are asking me if there was a good rescue operation, I would say no" என்று ஆரம்பித்துவைத்தார். சன் டிவி கரிக்கட்டையான உடல்களை மீண்டும் மீண்டும் காண்பித்து எல்லோருடைய வயிற்றெரிச்சலையும் கொட்டிக்கொண்டது. தமிழகத்தில் கூரை பிரிப்பதை ( அறிவாலையத்தை தவிர்த்து) படம் பிடித்து காண்பித்தார்கள்.
அரசியல்வாதிகளும், அதிகாரிகள் மட்டுமே இதற்கு காரணம் கிடையாது. நாம் எல்லோரும் லஞ்சம் கொடுக்கிறோம், நம் வீட்டுப்பக்கத்தில் நடக்கும் அந்நியாயத்தை நாம் தட்டிக்கேட்காமல் டிவி பார்த்துக்கொண்டிருக்கிறோம். பல வித குறுக்கு வழிகளை தேர்ந்தெடிக்கிறேம்.
தண்ணீர் குடித்துவிட்டு யோசித்துப் பாத்தால் இதற்கு நாம் எல்லோரும் ஒருவிதத்தில் காரணம் என்பது புரியும்.

அரசியல் - கூட்டணி
கொலை வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த கைது உத்திரவிலிருந்து தப்புவதற்காக தலைமறைவாகிவிட்ட மத்திய நிலக்கரி மந்திரி சிபு சோரன் இரண்டு நாட்களுக்கு முன் சரணடைந்துள்ளார். பிரதமர் ராஜினாமா கோருவதற்கு ஒருவாரம் எடுத்துக்கொண்டார். கூட்டணி
நிர்பந்தம் என்று பாங்காகில் பேட்டி கொடுக்கிறார். முன்பு இருந்த ஆட்சியிலும் இதே போல்தான் செய்தார்கள் என்று விளக்கம் கொடிக்கிறார் கொஞ்சம் போனால் நிலக்கரி இலாக்கா அதுதான் அவர் மீது கறை படிந்துவிட்டது என்று சொன்னாலும் சொல்வார் போலிருக்கிறது.

இன்று ஒரு தகவல்
இன்று ஒரு தகவல் டைப்பில் இரண்டு செய்தி தினமும் வருகிறது.
1. போலி முத்திரைத்தாள் மோசடியில் இன்று சிக்கியவர்களின் விபரம்..
2. பாராளுமன்றத்தை புறக்கணித்தல்.
முன்பு காங்கிரஸ் செய்து கொண்டிருந்தது. இன்று பா.ஜ.கா.பாராளுமன்ற புரக்கணிப்பை ஜனநாயக விரோதம் என்று கூறும் காங்கிரஸ், தமிழ் நாட்டில் சட்டமன்றத்தை புறக்கணிக்கிறார்கள். அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா

காணவில்லை
தமிழ் பத்திரிக்கைகள் மூலம் பிரபலமடைந்த குட்டிச்சாமியாரை கொஞ்ச நாளாக காணவில்லை. கடைசியாக மதுரை ஆதீனத்துடன் பார்த்ததாக ஞாபகம்.

விளையாட்டு
இந்திய இலங்கை 'ஒரு நாள் போட்டி' பார்பதற்கு நன்றாக இருந்தது. ஏதோ luck ஜெயித்துவிட்டேம். கடைசி பந்து வரை இந்தியா ஜெயிக்கும் என்று யாரும் நம்பவில்லை. அவ்வளவு நம்பிக்கை இந்திய அணி மேல்.

முக்கிய செய்திகள்
1. Hinduவில் ஜெயலலிதா மூகாம்பிகை கோயில் சென்றதை அரைப்பக்கம் படத்துடன் செய்தியாக வெளியிட்டது. எவ்வளவோ முக்கியமான செய்திகள் இருக்கும் போது இந்த செய்தி அவர்களுக்கு முக்கிய செய்தியாகிவிட்டது.

2. முஸ்லிம் பெண் 'இர்ஷாத் ஜஹான்' மோடி ஆதரவு போலிசாரால் கொலை செய்ததாக தலையங்கம் எழுதிய பத்திரிக்கைகள் அவர் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்துள்ள உண்மை வெளியே வந்தவுடன் அடங்கிவிட்டார்கள். பத்திரிக்கை தர்மம் ?

கவிதை
அவள் விகடனில் வந்த 'அன்புள்ள அக்காவுக்கு...' என்ற கவிதை என்னை மிகவும் பாதித்தது.


உனக்குப் பிடிச்ச
குட்டி கிளாஸையும்
முட்டை தட்டையும்
சாமி ரூமுக்கு
மாத்திட்டாங்க

நீ மறந்து விட்டுட்டுப் போன
வாட்டர் கேனைப் பார்த்து
அம்மா அழுதுக்கிட்டே கெடக்கு

என்கிட்ட நீ
அடம்பிடிச்சு வாங்கின
பொம்மை போட்ட கவுனை
அப்பா எனக்கே கொடுத்துட்டாரு

நீ ஓட்டின சைக்கிள
இனிமே யாரும்
தொடக்கூடாதுன்னு
உத்தரவு போட்டுட்டாங்க

நேர்ல பார்க்க
நீ ஆசைப்பட்ட
நடிகருங்க எல்லாம்
நம்ம வீடு தேடி வர்றாங்க

கண்ணாமூச்சி ஆட
இனி யாரைக் கூப்பிடறதுன்னு
கேக்கறா
உன் தோழி சரசு

நானாவது
உசுரோட வேணும்னு
படிப்புக்கு என்னைய
முழுக்குப் போடச் சொல்லிட்டாங்க

அதெல்லாம் கெடக்கட்டும்...
ஸ்கூல் விட்டு வந்து
நீ எடுத்து விடறேன்னு
சொன்ன முள்ளு மட்டும்
இன்னும் என் கால்ல
உறுத்திக்கிட்டேதான் இருக்கு.

- மு. மாறன்
( நன்றி அவள் விகடன் )

கடைசி செய்தி
தீவிரவாதிகள் வசம் இராக்கில் மூன்று இந்த்தியர்களுக்கு தினமும் ஒரு கெடு வைத்தும் நீடித்த வண்ணம் இருக்கிறார்கள். NDTVயை பார்த்தால் மணிக்கு ஒரு தடவை இன்னும் 5 மணி நேரம் தான் இருக்கு, 4 மணி நேரம் தான் இருக்கு என்று Count Down செய்து கொண்டிருக்கிறார்கள். தீவிரவாதிகளே மறந்தாலும் NDTV அவர்களுக்கு ஞாபகப் படுத்திவிடுவார்கள்.

ஜோக்ஸ்

"என்னிக்காவது பிரதமர் ஆவேன்" - லாலு
"அன்புமணிக்கு கிடைக்கும் எல்லா பதவிகளும் பொதுக் குழுவின் முடிவு" - டாக்டர் ராமதாஸ்



Read More...

Thursday, July 22, 2004

மரத்தடியில் செந்தில் கவுண்டமணி

டீவியில் செந்தில் கவுண்டமணி நகைச்சுவையை பலர் பார்த்திருப்பீர்கள், பார்க்காதவர்கள் ஒரு முறை மரத்தடிப் பக்கம் போய் வாருங்கள்.  ஏகப்பட்ட செந்தில் ஏகப்பட்ட கவுண்டமணி!

மரத்தடி ஆண்டு விழா போட்டியில் இதையும் சேர்த்துக் கொள்ளாம் என்பது என் எண்ணம்.

பிகு: செந்தில் கவுண்டமணி மன்னிக்கவும்

முன்பு நான் எழுதிய இணைய(யாத?) குழுக்கள்


Read More...

Monday, July 19, 2004

ரூமியின் "அல்லாஹ் பெரியவன்" - என் எண்ணம்

திரு நாகூர் ரூமி தனது வலைப்பதிவில் "அல்லாஹ் பெரியவன்" என்ற தலைப்பில் சமீபத்தில் ஈராக்கில் ஒரு அப்பாவி கொரிய இளஞனை நான்கு தீவிரவாதிகள் கழுத்தை அறுத்து கொலை செய்ததை பற்றி எழுதியுள்ளார். தீவிரவாதத்திற்கு மதம், மொழி கிடையாது. தீவிரவாதம் தீவிரவாதம்தான்.

ரூமியின் பதிவை படித்த போது எனக்கு தோன்றிய கருத்துக்கள் இவை:

1. "ஒரு ஜார்ஜ் புஷ், அல்லது ஒரு ரம்ஸ்·பெல்டு போன்றவர்களைப் பிடித்து அவர்கள் தலையைக் கொய்தால்கூட இதே பரிதாப உணர்ச்சிதான் ஏற்பட்டிருக்கும். என்றாலும், கொலை செய்பவர்கள் பக்கம் கொலைக்கு வரலாற்று ரீதியான ஒரு நியாயம் கிடைத்திருக்கலாம்" என்று ரூமி குறுப்பிடுகிறார். திரு ரூமி இது போல் எழுதியது எனக்கு வியப்பையும் ஆச்சிரியத்தையும் கொடுத்தது. ஆழ் மனதில் உள்ள வெறுப்பு சில சமயம் எழுத்தில் வந்துவிடுவது தடுக்கமுடியாது என்பதைத் தான் இது காட்டுகிறது.

2. "எவனொருவன் மற்றோர் ஆத்மாவை (அநியாயமாக) கொலை செய்கிறானோ, அவன், மனிதர்கள் யாவரையும் கொலை செய்தவன் போலாவான். அன்றி, எவனொருவன் ஒரு ஆத்மாவை வாழ வைக்கிறானோ, அவன், மனிதர்கள் யாவரையுமே வாழ வைத்தவன் போலாவான்"  என்று குர் ஆனில் இருக்கிறது என்று கூறுகிறார் ரூமி.

ஆத்மா என்பது ஒரு பொதுவான விஷயம். எல்லா ஆதாமக்களுக்கும் உயிர் இருக்கிறது, எல்லா ஆத்மாக்களுக்கும் "கழுத்தை அறுத்தால் நுரையீரலுக்குக் காற்று செல்லும் குழல்தான் முதலில் அறுபடும் என்றும், பின்பு பிடரி எலும்பு துண்டிக்கப்படும்". நபிகள் ஏன் ஆத்மா என்று குறுப்பிடுகிறார், அவர் மனித ஆத்மா என்றே குறுப்பிட்டுயிருக்கலாமே ? சில சமயம் நாம் தவறாக interpret செய்கிறோம்.  எவ்வளவோ ஆண்டுகளுக்கு முன்பு போதிக்கப்பட்ட கருத்தை(எல்லா மதங்களுக்கும் பொருந்தும்) கண்முடித்தனமாக எடுத்து கொள்ளாமல் நன்றாக சிந்தித்து எடுத்துக்கொள்ள வேண்டும். மனிதனுக்கு அறிவு, சிந்திக்கும் திறமை கடவுள் தந்த மிகப் பெரிய வரப்பிரசாதம். ஐந்தறிவு ஆத்மா, ஆறறிவு ஆத்மா என்று வேறு படுத்தி பார்க்கும் கடவுள் என்னை
பொருத்த மட்டில் கடவுள் கிடையாது அவரும் நம்மை போல் ஒரு சாதாரன மனிதரே. எனக்கு தெரிந்து, என்னுடைய கடவுள், அவ்வாறு வேறு படுத்த மாட்டார். கொஞ்சம் சிந்தியுங்கள்.

கணேசன் என்பவர் ஆத்மா மனித ஆத்மா மட்டும் தானா ? ஆடு, மாடும் என்ன பாவம் செய்தது என்று கேட்டதற்கு. ஆடு, மாடு போன்ற ஜீவன்களை கொலை செய்யாமல் விட்டால் அது நம்மை கொலை செய்துவிடும் என்று ரூமி பதில் தருகிறார். நியாமாக பார்த்தால் ஆடும் மாடும் தான் நம்மை பார்த்து இப்படி நினைக்க வேண்டும். (human science ?). மேலும், பர்ஸ், ஷூ போன்றதற்கு தோல் தேவை படுகிறதே என்று பதில் தருகிறார். நல்ல சிந்தனை, நல்ல ஜோக்.

( இந்த கோரக்காட்சியை CNN, BBC, NDTV எனக்கு தெரிந்து காமிக்கவில்லை, ஆனால் சன் டீவி அதை காமித்து சாதனை படைத்தது. இவர்களும் ஒரு வகை தீவிரவாதிகளே )




Read More...

Tuesday, July 13, 2004

கல்வி முறை மாற வேண்டும்!

கல்வி முறை மாற வேண்டும்! மாற வேண்டும்! என்று பலர் சொன்னாலும், எழுதினாலும் யாரும் கவனிப்பதாகத் தெரியவில்லை. எதற்கு மாற்றம் தேவையோ இல்லையோ, மேல்நிலைப் பள்ளிக்கல்விமுறைக்கு மாற்றம் தேவை. ஏனென்றால் மேல்நிலைக் கல்வி, தொழில் சார்ந்த கல்வியின் வாசல். 10ம் வகுப்பு வரை நன்றாகப் படிக்கும் மாணவர்கள் மேல்நிலை வகுப்பில் சரியாக படிப்பதில்லை. 10ம் வகுப்பில் கணக்கில் 100 வாங்கிய மாணவர்கள் பலர் 11ம் வகுப்பில் கணக்கில் பெயிலாவது உண்டு. இதற்கு என்ன காரணம்? அந்த மாணவர்கள் திறமையில்லாதவர்களா? இதற்கு காரணம் 10ம் வகுப்பு வரை உள்ள பாடங்கள் எளிதாக புரிந்து கொள்ளக் கூடியவை. சில எளிய உதாரணங்களைக் கொண்டு விளங்கக் கூடியவை. 11ல் இருந்து பாடங்கள் எளிய உதாரணங்களால் விளங்காது. கொஞ்சம் கற்பனா சக்தி இருந்தால்தான் புரிந்துகொள்ள முடியும். அதற்காக இந்த பாடங்களை விட்டு விட முடியுமா? அவற்றையும் எளிதாக்குவதற்கு பாடத்திட்டத்தில் பிராக்டிகள் வகுப்புகள் இருக்கிறது. இதுவும் சரியான வழி முறைதான். பின் எங்கே தவறு? பாடத்திட்டம் சரியானதுதான். ஆனால் அதை மாணவர்களிடம் கொண்டு செல்லும் முறை? முதலாவதாக அவற்றை கொண்டு சேர்க்கும் ஆசிரியர்களே(பெருவாரியான) , அந்த பாடங்களை சரியாக புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்கு புரிந்தால்தானே மாணவர்களுக்கு புரிய வைப்பதைப் பற்றி யோசிக்க முடியும். அவர்களைப் பொறுத்தவரை கல்வி முறை என்பது மாணவர்களை பாடத்தை மனப்பாடம் செய்ய வைத்து, தேர்வு எழுத வைப்பது. அடுத்ததாக கல்வி என்பது தேர்வுக்கான படிப்பு மட்டுமே என்று ஆகிவிட்டது. தேர்வில் கேட்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் கேள்விகளை மட்டும் படித்தால் போதுமானது என்ற எண்ணம் எல்லோர் மத்தியிலும் பரவி விட்டது. அது போன்ற கேள்விகளை இனங்கண்டு, மாணவர்களை படிக்க(?) செய்வதில் பல ஆசிரியர்கள் கில்லாடிகள். இதனால் படிப்பை மதிப்பிடத் தேர்வு என்ற நிலை மாறி தேர்வுக்காகப் படிப்பு என்று ஆகிவிட்டது. அடுத்தக் கூத்து தேர்வுத்தாள் திருத்துவது. வெகு சிலரே விடைகளைச் சரியாக மதிப்பிடுகின்றனர். பலர் விடைகளைச் சரியாக வாசிப்பது கிடையாது. 'ஒவ்வொன்றையும் வாசித்து திருத்தினால், ஒரு நாளைக்கு பத்து விடைத்தாள்கள் கூட திருத்த முடியாது', என்று காரணம் கூறுவார்கள். அது போக அவர்களின் வீட்டு, வெளிக் கோபங்களை வேறு விடைத்தாள்களில்தான் காட்டுவார்கள். இதையெல்லாம் மீறி ஒரு மாணவன் ஸ்டேட் ராங்க் வாங்குவது பெரிய அதிர்ஷ்டம்!?!?! இப்படி வழங்கப்பட்ட மதிப்பெண்களைக் கொண்டுதான் ஒரு மாணவனின் புத்திசாலித்தனத்தை சமூகம் மதிப்பிடுகிறது. இதனால் சமுதாயத்திற்குத்தான் நஷ்டம். பல புத்திசாலிகளை இழக்கிறது. இவையெல்லாம் ஒட்டு மொத்தமாக ஒரே நாளில் மாறி விடாது, மாற்றவும் முடியாது. ஆனால் அரசாங்கம் சரியானபடி திட்டமிட்டால், ஆசிரியர்களும் அவர்களின் சமூக பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால், நல்லது சீக்கிரம் நடக்கும். - மகேசன் இரா.

Read More...

Wednesday, July 07, 2004

நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் - 9

நகைச்சுவையில் ஒரு வகை விஷயத்துக்கு வராமல் இழுத்துக்கொண்டே போய், கடைசியில் ஒரு சாவதானமாக சமாசாரத்துக்கு வருகிற பாணியில் ஹாஸ்யம் கொண்டுவருவார்கள்.

ஓர் உதாரணம்:

"அண்ணா நகருக்கு எப்படி போகணுங்க ? "
"இப்படியே போங்க.. முதல் தெருவை விட்டுடுங்க. இரண்டாவது தெருவை விட்டுடுங்க...
மூன்றாவதைவிட்டுடுங்க. வலது பக்கம் திரும்புங்க..முதல் சந்தை விட்டுடுங்க..இரண்டாவதை விட்டுடுங்க.. மூன்றாவதையும் விட்டுடுங்க.. திரும்பினதும் ஒரு லைப்ரரி இருக்கிறது.. முதல் அறையை விட்டுடுங்க.. இரண்டாவது அறையை விட்டுடுங்க.. முன்றாவதையும் விட்டுடுங்க.. அப்புறம் ஒரு அலமாரி இருக்கும் முதல் ஷெல்பை விட்டுடுங்க.. இரண்டாவது விட்டுடுங்க.. மூன்றாவதை விட்டுடுங்க.. நாலாவதில் ஒரு பைபிள் புஸ்தகம் இருக்கும். அந்த பைபிள்மீது சத்தியமாகச் சொல்லுகிறேன் எனக்கு தெரியாது!"

எஸ்.வி.வி அவர்கள் இத்தகைய 'போர் அடிக்கிற, சலித்துப்போகவைக்கிற' உத்தியை நிறைய
கையாண்டிருக்கிறார். 'இப்படியும் ஒரு பிரகிருதி' ஒரு நல்ல உதாரணம். (முடிந்தால் இதை கொடுக்க முயற்சிக்கிறேன்) ( செல்லாத ரூபாய், எஸ்.வி.வி, அல்லயன்ஸ் ).

நிங்கள் இது போல் முயற்சி செய்து எனக்கு அனுப்புங்களேன் ?

Read More...

Celsius 9/11

Read More...

Tuesday, July 06, 2004

சினிமா விமர்சனம் மச்சி !

எல்லோரும் blogல் சினிமா விமர்சனம் எழுதுகிறார்களே, நாமும் ஒன்றை எழுதலாம் என்று ஆசைப்பட்டேன். சினிமா விமர்சனம் எழுத படத்தை அட்லீஸ்ட் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் அதனால் ஒரு படம் பார்க்க போனேன். இல்லோரும் ஆயுத எழுத்தை அலசி காயப்போட்டதனால். நான் 'மச்சி'யை தேர்ந்தெடுத்தேன். எவ்வளவு தப்பு என்பது படம் ஆரம்பித்து பத்து நிமிடத்தில் தெரிந்தது.

தமிழ் சினிமாவில் தற்போது சின்ன டைட்டில் சீசன்! சாமி, தூள், அருள், குத்து, கில்லி, ஜோர் இப்போது மச்சி. நாளை 'ஏய்', 'ஷாக்' ஆகி விடாதீர்கள். இவர்கள் 'கதை' என்ற சின்ன எழுத்துக்கு கொஞ்சம் அக்கறைக் காமித்தால் நல்லது.

மச்சியின் கதை இதுதான்: ஹீரோவை (துஷ்யந்த்) ஒரு விபத்திலிருந்து நான்கு பேர் காப்பாற்றுகிறார்கள். நன்பர்களாகிறார்கள். பிறகு அவர்கள் ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். வில்லன் அவர்களை துரத்துகிறான். ஹீரோ அவர்களை காப்பாற்றி, கடைசியில் ஜெயிலுக்கு போகிறார். ஆஹா! இதன் நடுவே காதல், செண்டிமெண்ட், சண்டை எல்லாம் வரும் ஜாக்கிரதை.

வில்லனாக 'பசுபதி' நடித்துள்ளார். விருமாண்டியில் கமலிடம் கஷ்டப்பட்டு சாகும் இவர். இதில் நேற்று முளைத்த மீசையுடன் வரும் ஹீரோவிடம் ஈஸியாக அடிப்பட்டு சாகிறார். ஹீரோ அவரை அடிக்கும் போதெல்லாம் 'நார்ராய்யண்ணன்.." என்று சத்தம் மட்டும் பெரிதாக போடுகிறார்.

படத்தில் காமெடி இல்லாத குறையை செண்டிமெண்ட் சீன்கள் போக்குகிறது.

ரைஹானா (ஏ.ஆர்.ரஹமான் சகோதரி ) இசை அமைக்க முயர்ச்சி செய்துள்ளார்.

விரைவில் "இந்திய தொலைக்காட்சியில்...."

படம் உதவி : galatta.com

Read More...

Thursday, July 01, 2004

யார் இவர் விடை !


யாரும் சரியான விடையை சொல்லவில்லை. விடை - கடந்த இரண்டு வாரமாக பத்திரிக்கை மற்றும் டீவியில் பிரபலமாக இருக்கும் நம்ம 'குட்டி + சாமி + யார்!' தான்( பரணிதர ஸ்ரீஹரி ராகவேந்திர சுவாமி )





Read More...

Friday, June 25, 2004

மீண்டும் யார் இவர் ?

அடுத்த வாரம் இவரை பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன்
Clue கீழே உள்ள படத்தில் !

Read More...

Thursday, June 24, 2004

இவர் யார் ?



யாரும் சொல்லவில்லை என்றால் விடை நாளை

Read More...

Tuesday, June 22, 2004

நா கூறும் நாக்கூறும் ! - எனக்கு பிடித்த டாப் 9

எனக்கு பிடித்த டாப் 9 என்று சொன்னவுடன் அது ஜோக் தான் என்று பலர் தப்பாக யூகித்துள்ளார்கள். இட்லிவடையில் இட்லி பற்றி ஒன்றும் சொல்லவில்லை என்றால் எனக்கு அடுத்த வேளை இட்லி, சாரி சாப்பாடு கிடைக்காது. அதனால் 99வது வதிவு இட்லி ஸ்பெஷல்.

1. ரத்தினா கபே சாம்பார் இட்லி
2. கீதா கபே மல்லிகைப்பூ இட்லி
3. பாலாஜி பவன் பட்டாணி இட்லி
4. சங்கீதா செட்டிநாடு இட்லி
5. சரவண பவன் 14 இட்லி
6. சக்கர பொங்கல் காஞ்சிபுரம் இட்லி
7. வசந்த பவன் ஃப்ரைட் இட்லி
8. MTR ரவா இட்லி
9. முருகன் இட்லி கடை

1. ரத்தினா கபே: ரொம்ப காலமாக இருக்கிற ஹோட்டல். என் தாத்தா இங்கு இட்லி சாப்பிட்டிருக்கிறார். திருவல்லிக்கேணியில் இருக்கிறது. சனி ஞாயிறு கொஞ்சம் கூட்டம் அதிகமாக இருக்கும். இங்கு ஸ்பெஷல் இட்லி சாம்பார். சாம்பாரை ஒரு Mugகில் கொண்டுவந்து ஊற்றுவார்கள். சாம்பார் தீரத்தீர ஒருவர் உங்கள் தட்டை ரொப்பிக் கொண்டே இருப்பார். ஒரு முறை இங்கு சென்று தோசை சாப்பிட்டேன். எல்லோரும் என்னை ஏதோ கொலை குற்றம் செய்தவரை போல் பார்த்தார்கள்.

2. கீதா கபே: சாயந்திரம் 4-6:30pm வரை மல்லிகைப்பூ இட்லி கிடைக்கும். கும் என்று ஸ்பாஞ் போல் இருக்கும். தி.நகர் பாண்டி பஜாரில் இருக்கிறது. 6:35 போனால் தீர்ந்து போயிருக்கும். கொஞ்சம் சீக்கிரமாக போய்விடுங்கள். இந்த இட்லிக்கு மற்றொரு பேர் குஷ்பு இட்லி. வாழ்க தமிழர்கள்.

3. பாலாஜி பவன்: கீதா கபேயில் மல்லிகைப்பூ இட்லி கிடைக்கவில்லை என்றால் பக்கத்தில் இருக்கும் பாலாஜி பவனுக்கு செல்லுங்கள். இங்கு பட்டாணி இட்லி ஸ்பேஷல். நன்றாக இருக்கும். ஒரு முறை போய் பாருங்களேன்.

4. சங்கீதா: ஒரு பிலேட்டில் மூன்று இட்லி இருந்தால் அது செட்டிநாடு இட்லி. Side Dish- வத்த குழம்பு, தக்காளி , புதினா சட்னி!. நுங்கம் பாக்கம், தி.நகர், அடையார், மைலாப்பூர் ஆகிய இடங்களில் கிளைகள் இருக்கின்றன.

5. சரவண பவன்: 14 இட்லி சாம்பார் ஸ்பெஷல். இந்தியாவிற்கு வரும் NRIக்கு என்றே ஏற்பட்ட உணவு என்று நினைக்கிறேன். நெய் ஊற்றி, 14 மினி இட்லியை மொதக்கவிட்டு .. போய் சாப்பிடுங்கள்.

6. சக்கரப் பொங்கல்: பல நல்ல rare உணவு வகைளை அறிமுகப்படுத்தியவர்கள். இங்கு காஞ்சீபுரம் இட்லி நன்றாக இருக்கும். இவர்களிடத்தில் சக்கர பொங்கல், மோர்களி,கேழ்வரகு கூழ், புளிஉப்புமா, மணிகொழக்கட்டை, பிடி கொழக்கட்டை போன்ற கொள்ளுப்பாட்டி உணவு வகைகள் கிடைத்துக்கொண்டிருந்தது. தற்போது இவர்களை காணவில்லை. தேடி கொடுப்பவர்களுக்கு சிறப்பு பரிசு.

7. வசந்த பவன்: உங்களுக்கு கொலஸ்டரால் பற்றி கவலையில்லை என்றால், நீங்கள் வசந்த பவன் சென்று ஃப்ரைட் இட்லி சாப்பிடலாம். எக்மோர், அடையாரில் கிளைகள் இருக்கிறது. எச்சரிக்கை:ஃப்ரைட் இட்லி சாப்பிட்டவுடன் உதடு லிப்ஸ்டிக் போட்டார் போல் சிகப்பாகிவிடும். வீட்டுக்கு துடைத்துக் கொண்டு போங்கள்.

8.நம்ம MTR: Residency ஹோட்டல் எதிரில். 'நம்ம MTR' என்று புதிதாக ஆரம்பித்திருக்கிறார்கள். கார் வைத்து கொண்டிருப்பவர்கள் அடிக்கடி வந்து போகிறார்கள். இங்கு ரவா இட்லி கிடைக்கிறது. Stuffed சட்னி வடை மற்றொரு ஸ்பெஷல். சுத்தமான ஃபில்டர் காப்பியுடன் ஆஹா!

9. முருகன் இட்லி கடை: இட்லிக்கு என்றே ஒரு கடை. மதுரை famous முருகன் இட்லி கடை இப்போது சென்னையில். இரண்டு இடத்தில் ஆரம்பித்திருக்கிறார்கள். இட்லிக்கு 5 விதமான சட்னி, இட்லி பொடி என்று அசத்துகிறார்கள். வருகிறவர்கள் எல்லோரும் இடம் கிடைக்காமல் வேளியே டீவி சீரியல் பார்க்காமல் இட்லிக்காக காத்துக்கொண்டிருக்கிறார்க்ள். அவர்களுடைய இன்னொரு ஸ்பெஷல் - சின்ன வெங்காய ஊத்தப்பம்!.

999ஆம் பதிவு வடையை பற்றியது இல்லை, பயப்படாதீர்கள்.

Read More...

Thursday, June 17, 2004

எனக்கு பிடித்த 9 (டேஷ்,டேஷ்,டேஷ்)

என்னுடைய அடுத்த பதிவு 99வது பதிவு. அதில் எனக்கு பிடித்த டாப் 9 (- - -)
கொடுக்கலாம் என்று இருக்கிறேன்!.

பி.கு 1: இதுக்கும் ஒன்பது கட்டளைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. (மச்சி அதெல்லாம் பெரியவங்க சாமாச்சாரம்)
பி.கு 2: ஜெ'யின் ராசி நம்பருக்கும் இதற்கும் சம்பந்தமும் இல்லை. (அப்படியா ? நல்லது!)
பி.கு 3: அரசியல் ? மூச்!
பி.கு 4: நகைச்சுவை ? சுவை இருக்கலாம்.( ம்ம்ம் )
பி.கு 5: அரைத்த மாவே அரைக்கப்படும்! ( போச்சுடா!)
பி.கு 6: சத்தியமாக நக்கலும், அசட்டுத்தனமும் இருக்காது. (அப்பாடா!)
பி.கு 7: கவிதை, ஹைக்கூ ? (நோ நோ !)
பி.கு 8: சினிமா ? (கிடையவே கிடையாது!)
பி.கு 9: எனக்கு பிடித்தது, உங்களுக்கு பிடித்தது. (ஓவர் பில்டப், அவ்வளவுதான்!)

( அப்பா! ஒரு வழியாக 9 பி.கு வந்து விட்டது! ).

என்ன என்று ஊகித்து விட்டீர்களா ? இல்லை ? அடுத்த வாரம் வரை காத்திருக்கவும் !

Read More...

Wednesday, June 16, 2004

எளிய தமிழில் இனிய மார்க்கெட்டிங் !

'எளிய தமிழில் இனிய மார்கெட்டிங்' என்று மீனாக்ஸ் எழுதுவது பலருக்கு தெரிந்திருக்கலாம். அதை ஆரம்பித்த நாள் முதல் படித்துக் கொண்டிருக்கிறேன். நல்ல சிரத்தை எடுத்து செய்கிறார், எளிய தமிழில் இவருடைய இந்த முயற்சி பாராட்டுக்குறியது.'மார்கெட்டிங்' என்பது ஒரு பெரிய கலை ( நான் மார்கெட்டிங்கில் இருப்பதால் இதை சொல்லவில்லை!).

ஓர் உதாரணம்: மார்கெட்டிங்கில் இருக்கும் ஒருவர் தனக்கு கொடுக்கப்பட்டுள்ள 'டார்கெட்'டால் டென்ஷனாகி தற்கொலை பண்ணிக்கொள்ள முடிவு செய்தார். அருகில் உள்ள குளத்துக்கு சென்றார். கடைசியாக காயத்திரி மந்திரம் சொல்லலாம் என்று கண்ணை முடிக் கொண்டார். மூடிக்கும் முன் போலிஸ் அங்கு வந்து அவரை கைது செய்தது. "தற்கொலைக்கு 5 வருடம் சிறை தண்டனை தெரியுமா ?" என்றார் இன்ஸ்பெக்டர். நம்ம மார்க்கெட்டிங் ஆசாமி, தன் மார்கெட்டிங் திறமையை உபயோகப்படுத்த ஆரம்பித்தார். இன்ஸ்பெக்டரிடம் தான் ஏன் தற்கொலைக்கு முனைந்தார் என்றும் தற்கொலையினால் என்னென்ன பயன் என்று விளக்கிக் கூறினார். சொல்லி முடிப்பதற்குள் இன்ஸ்பெக்டர் தண்ணியில் குதித்தார்!.

Read More...

Monday, June 14, 2004

தப்பித்தவறி வந்த நகைச்சுவை

சில சமயம் தப்பித்தவறி ஈ-மெயிலில் சில நல்ல நகைச்சுவை வரும். கீழே கொடுத்திருப்பது நேற்று எனக்கு வந்தது.

The manager of a large corporation got a heart attack, and the doctor told him to go
for several weeks to a farm to relax. The guy went to a farm, and after a couple of
days he was very bored, so he asked the farmer to give him some job to do.
The farmer told him to clean the shit of the cows. The farmer thought that to somebody
coming from the city working the whole life sitting in an office, it would take over a week to finish the job, but to his surprise the manager finished the job in less than one day.
The next day the farmer gave to the manager a more difficult job to cut the heads of 500 chickens. The farmer was sure that the manager will not be able to the job, but at the end of the day the job was done.
The next morning, as most of the jobs in the farm were done, the farmer asked the manager to divide a bag of potatoes in two boxes: one box with small potatoes and one box with big potatoes. At the end of the day the farmer saw that the manager was sitting in front of the potatoes bag, but the two boxes were empty. The farmer asked the manager: "How is that you did such difficult jobs during the first days, and now you cannot do this simple job?"
The manager answered: "Listen, all my life I am cutting heads and dealing with shit,
but now you ask me to make decisions!"

Read More...

Thursday, June 10, 2004

உதவாக்கரையின் விமர்சனங்கள்

கிருபாவின் ஃ எழுத்து விமர்சனத்தை இங்கு பார்க்கவும்.
சும்மா சொல்ல கூடாது நல்லாவே இருக்கு. கிருப்பவிற்கு இட்லிவடையின் ஆசீர்வாதங்கள்.

Read More...

Wednesday, June 09, 2004

நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் - 8

அடுத்ததாக Repartee - Adroitness and cleverness in reply. அத்தாங்க பளிச் பளிச்சென்று வேடிக்கையாக பதில் அளிப்பது. அரசு பதில்கள், துக்ளக் 'சோ' பதில்கள், மதனின் கேள்வி பதில்கள் இதற்கு உதாரணங்கள்.

கேள்வி: நிகழ்ச்சிகளுக்கு முன் இறைவணக்கப் பாடலும், முடிந்தபின் நாட்டு வணக்கப் பாடலும் பாடுகிறார்களே, ஏன்?"
சோவின் பதில்: நிகழ்ச்சி அமைதியாக நடக்க வேண்டுமே என்று நினைத்து இறைவனை வேண்டிக் கொண்டு ஆரம்பிக்கிறோம். முடிந்தபிறகு இந்த நாட்டில் கூட அமைதியாக ஒரு நிகழ்ச்சி நடந்ததே என்று நினைத்து நாட்டுக்கு வணக்கம் சொல்கிறோம்.


கேள்வி: ஓட்டுப் போடும்போது ஏன் மறைவாகப் போய் போடுகிறோம் ?
சோவின் பதில்: தவறுகளைப் பலர் முன்னிலையில் செய்ய இன்னும் துணிவு வரவில்லை!
(துக்ளக் கேள்வி பதில் ( அல்லயன்ஸ்) )

கேள்வி: அரசியல்வாதிகள் வெளிநாட்டுக்குச் சென்று அறுவைச் சிகிச்சை செய்து கொள்வது ஏன் ?
மதனின் பதில்: மெரிட் இல்லாமல் தன்னிடமே லஞ்சம் கொடுத்து ரெகமெண்டேஷனில் சீட் வாங்கிய டாக்டர் தனக்கே ஆபரேஷன் செய்துவிடுவாரோ என்ற பயமாக இருக்கலாம்.

கேள்வி: அதிகபட்சமாக மாமியார் வீட்டில் எவ்வளவு காலத்தை கழிக்கலாம் ?
மதனின் பதில்: அதெல்லாம் ஜட்ஜின் தீர்ப்பை பொறுத்தது!
( ஹாய் மதன், விகடன் பிரசுரம் )

கேள்வி: தொப்பை ஏன் விழுகிறது ?
அரசு பதில்: வயிற்றில் இடம் இல்லாததால்!

Repartee பெரும்பாலும் சிலேடையுடன் வரும். அதற்கு உதாரணமாக கவிஞர் வாலியின் அனுபவம்... ..... பொதுவாக அந்த நபருக்கு என்னை அவ்வளவாகப் பிடிக்காது. .........."இவனெல்லாம் ஒரு கவிஞனா?" என்று என்னைப் பற்றி ஒரு கணிப்பை விழிகளில் எப்போழுதும் ஒட்டி வைத்துக் கொண்டு உலா வருபவர்.

சண்முகம் அண்ணாச்சி என்னை அவரிடம் அறிமுகப் படுத்ததியவுடன், என்னை ஏதோ ஓர் இக்கட்டான கேள்வியைக் கேட்டு திக்குமுக்காட வைக்க வேண்டும் என்ற திட்டமிட்டாரோ என்னவோ ! அவர் என்னைப் பார்த்து ஒரு வினாவைத் தொடுத்தார்:
"நிங்க ஏன்சார், வாலின்னு பேர் வெச்சுக்கிடிருக்கீங்க?" அவரது உள்நோக்கம் ஓரளவு எனக்கு புரிந்திருக்கும் நான் பவ்வியமாகப் பதில் சொன்னேன், "சார்! நீங்க தமிழறிஞர்; ராமாயணம் படிச்சிருப்பீன்ங்க! எதிராளி ஒருவன் வாலிக்கு முன்வந்து நின்றால், அவனது பலத்தில் பாதி
வாலியை வந்தடையும் என்பது ராமாயண வழக்கு. அது மாதிரி, எந்த அறிவாளி என் முன் வந்து நின்றாலும், அவரது அறிவில் பாதி என்னை வந்து சேரவேண்டும் என்பதற்காகதான், நான் 'வாலி' என்ற பெயர் வைத்துக் கொண்டேன்; அப்படிப் பலரது அறிவு என்க்கு கிடைக்கும் என்ற ஆசைதான்!"

இந்த விளக்கத்தைக் கேட்டதும் அவர் ஏளனமாகச் சிரித்து விட்டுப் பேசினார்:
அப்படிப் பலரது அறிவில் பாதி உம்மைச் சேர்ந்திருந்தால் நீர் இவ்வளவு காலம் பெரிய அறிவாளியாக அல்லவா ஆகியிருக்க வேண்டும்..? உம்மைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே..!" நான் ஒரு வினாடி கூடத் தயங்காமல் அவருக்கு பதிலுரைத்தேன்:
"சாரி! நான் இன்னும் என் வாழ்கையில் ஒரு அறிவாளியைக் கூட சந்திக்கவில்லையே?!" ......

அந்த தமிழ் எழுத்தாளரின் முகம் தொங்கிப்போயிற்று உடனே என்மீது வெறொரு கணையைத் தொடுத்தார் "என்னதான் நீர் சினிமாவில் பாட்டு எழுதினாலும் கண்ணதாசன் மாதிரி ஒரு கவியரசாக ஆகமுடியாது..."

உடனே நான் சொன்னேன்: "சார்! எதற்கு நான் இனிமே கவியரசு என்று ஆகணும்? வாலின்னு சொன்னாலே, கவியாரசு என்றுதானே அர்த்தம்! இதுவும் ராமாயணம் படிச்ச உங்களுக்கு தெரிஞ்சிருக்கணும்...."

( நன்றி: நானும் இந்த நூற்றாண்டும், கவிஞர் வாலி, வானதி பதிப்பகம் )

Read More...

Thursday, June 03, 2004

Positive x Negative

'Negative' விஷயங்களை பார்க்கறது, பேசறதுலேதான் மனுஷனுக்கு ஆர்வம் அதிகம்.
"கல்யாணத்துக்கு போயிருந்தியே ....எப்படி இருந்தது"
"எப்படி இருந்தது... சாம்பாரிலே உப்பு கம்மி"
சாம்பாரிலே உப்பு கம்மி என்பது ஒரு குறைதான். ஆனா ரசத்திலே அது சரியா இருந்தது என்று
சொல்ல மனசு வருதா பாருங்க.

ஒரு பெரிய வெள்ளைப் பேப்பர் நடுவுலே ஒரு சின்ன கருப்பு புள்ளியை வச்சி அதை ஒத்தர்கிட்டே நீட்டி அது என்னனு கேட்டா .."கருப்பு புள்ளி"-ன்னு தான் சொல்லுவார். ஒரு சின்ன கருப்பு புள்ளியைத்தான் அவர் கவனிக்கிறார் புள்ளியை சுத்தி பேப்பர் பூராவும் வெள்ளைப் பகுதியா இருக்கு.. அதை கவனிக்கிறதில்லே..

நம்ம கண்ணாடி முன்னாலே போய் நிக்கிறோம் முகத்தை பார்கிறோம். ஒரு பரு அல்லது ஒரு கருப்பு புள்ளி இருந்தா அதைத்தான் முதலில் கவனிப்போம். அதை சுத்தியிருக்கிற அழகான (?) பகுதிகள்லாம் அதுக்கு அப்புறம்தான்.

காலையிலே ஒரு செய்தித்தாளை வாங்கி புரட்டறோம் முதலில் நாம் பார்ப்பது எதிர்மறையான சொய்திகளைத்தான். நல்ல சொய்திகள் அதற்கு பிறகுதான். 'Negative' விஷயங்கள்தான் பத்திரிக்கை விற்பனைக்கு முக்கியம்.

பேப்பர்லே எப்படி செய்தி வருது ?
ஒரு கும்பலில் கலவரம். கலவரத்தில் 10 பேர் உயிரிழந்தார்கள்-ன்னுதான் வரும். கலவரத்தில் 712 பேர் உயிரோடு திரும்பிப் போனார்கள் -ன்னு வராது. எத்தனை பேர் செத்தாங்க-ங்கறதுதான் பத்திரிக்கைக்கு முக்கியம். ஏன்னா நம் மனம் அதைத்தான் கவனிக்கிறது.
இன்று விமான விபத்தில் 110 பேர் உயிரிழந்தார்கள் என்பது 'Negative' விஷயம். இன்று விமானம் மூலம் 2 லட்சம் பேர் சொளக்கியமாக பயனம் செய்தார்கள் என்று வராது.

ஒரு நாள் பூரா நல்ல நடந்துக்கிட்டிருப்பீங்க ஏதோ ஒரு நேரத்திலே வாழைப்பழத் தோல் வழுக்கி விழுந்திருப்பீங்க. வழுக்கி விழுந்ததைத்தான் பெரிசு படுத்திக்கிட்டிருப்பீங்க. நாள் பூரா நல்லா நடந்தது பெரிசா தெரியாது.

புத்தக விமர்சனம், சினிமா விமர்சனம் எல்லாம் இந்த வகைதான்.

உலகத்து மகிழ்ச்சிகளையெல்லாம் - வாழ்வின் சந்தோஷங்களையெல்லாம் நாம் மறந்துடறோம். இந்த உலகத்திலே சந்தோஷப் படறதுக்கு நிறைய விஷயங்கள் இருக்கு, அதை கவனியுங்க முதல்ல

உங்களையே எடுத்துக்கோங்க எவ்வளவோ நல்ல வலைப்பதிவு இருக்கும் போது, நீங்க 'இட்லிவடை'க்கு எதுக்கு வரீங்க ?

Read More...

Tuesday, June 01, 2004

க்ரிப்ட்அரித்மெடிக் - Crypt Arithmetic - விடை

Dear Idly,

முதல் புதிர் : SEND = 9567; MORE = 1085 ; MONEY = 10652

இரண்டாவது புதிர் : CROSS = 96233 ; ROADS = 62513 ; DANGER = 158746


I want to clarify abt MKs answer. I think MK had misunderstand the question. He had
found the answer for s + e + n + d + m + o + r + e = m + o + n + e + y.
But our question is,

SEND
+ MORE
-------
MONEY
-------
Any way his programmatical logic is correct. We
can arrange ten digits in 10! ways. But there will be
only one reasonable answer for these puzzles. I'd also
written a program to solve these types of puzzles.
I've attached that program with this mail for ur
reference.
- Mahesan R

Note: Want the 'C' program ? Send me a separate mail.

நன்றி: மகேசன்

Read More...

Monday, May 31, 2004

World No-Tobacco Day - May 31st

Read More...

Friday, May 28, 2004

க்ரிப்ட்அரித்மெடிக் - Crypt Arithmetic

திரு இரா மகேசன் அனுப்பியுள்ள புதிர்:

க்ரிப்ட்அரித்மெடிக் - சொல்லும்போது முறுக்கு சாப்பிட்டாற்போல் உள்ளதா? இவை ஒரு வகை புதிர்கள். இதில் ஒரு சொற்றொடர் கணித வடிவில் (கூட்டலாகவோ, கழித்தலாகவோ , ..) இருக்கும். உதா: SEND + MORE = MONEY. இதில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு
எண்ணைக்(0-9) கொடுக்க வேண்டும். ஒரு எழுத்துக்கு கொடுத்த எண்ணை வேறு எழுத்துக்கு கொடுக்கக்கூடாது. ஒரு எழுத்துக்கு ஒரு எண்ணைக் கொடுத்தால், அந்த எழுத்துக்கு எல்லா இடங்களிலும் அதே எண்ணைத்தான் கொடுக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, மேலே உள்ள புதிரில் 'E'க்கு 8 என்ற எண்ணை 'SEND' இல் கொடுத்தால் 'MORE', 'MONEY' ஆகியவற்றிலும்
'E'க்கு 8ஐயே கொடுக்க வேண்டும். இப்படி கொடுக்கப்பட்ட எண்களால் உருவாகும்
எண்கள் (for example if S=8,E=9,N=0,D=6 then SEND=8906), கணக்கிலும் சரியாகப் பொருந்தவேண்டும், அதாவது SENDஐயும் MOREஐயும் கூட்டினால் MONEY வரவேண்டும்.
இது போன்ற புதிர்களுக்கு விடை காணுவது கடினமல்ல. கொஞ்சம் பொறுமை தேவை. இவற்றில் என்னைக் கவர்ந்த அம்சம், இவை வெறும் வார்த்தைகளாய் இல்லாமல், சரியான அர்த்தமும் தருவதுதான். SEND MORE MONEY என்பது வெளியூரில் தங்கி இருக்கும் பிள்ளைகள், வீட்டிலிருந்து பணம் அனுப்பச் சொல்லி அடிக்கும் தந்தி வாசகங்கள். இதே போன்று இன்னொரு புதிர் CROSS + ROADS = DANGER. இதிலும் அர்த்தம் சரியாக வருகிறது. இது போன்ற புதிர்களை யாராவது தமிழில் உருவாக்கினால் எனக்குத் தெரிவிக்கவும்.

- மகேசன் இரா.
விடை நாளை

Read More...

Tuesday, May 25, 2004

(நிரந்தர ?) முதல்வர் ஆக கலைஞருக்கு டாப் 10+3 அறிவுரைகள்

தமிழக முதல்வர் ஜெ'க்கு அறிவுரைகள் வழங்கியதை தொடர்ந்து, கலைஞருக்கும் வழங்குமாறு பலர் கேட்டுக் கொண்டதால் இந்த பதிவு. முதலில் கலைஞருக்கு எனது வாழ்த்துக்கள். நாற்பது இடங்களில் வேற்றி பெற்றதை தொடர்ந்து 'இனியவை நாற்பது'க்கு உறை எழுத ஆரம்பிக்கலாம். 2006 சட்டசபை தேர்தலை முன்னிட்டு சில அட்வைஸ்.

1. கடந்த தேர்தல்களில் திமுக 2 லட்சத்துக்கு மேல் ஓட்டு வித்தியாசம், ஆனால் இந்த தேர்தலில் ஒன்றே கால் முதல் ஒன்றறை லட்சம் ஓட்டுக்கள் தான் அதிகம் வாங்கியுள்ளது. கலைஞர் ஐயா இதை கொஞ்சம் கவனியுங்கள். மெகா கூட்டணி இல்லையென்றால் கொஞ்சம் ரிஸ்க்தான்

2. டாக்டர் ஐயாவையும், உங்கள் 'பிரசார பீரங்கியையும்' கவனித்துக் கொண்டே இருங்கள். சோனியா இவர்களிடமே கூட்டணி வைத்துள்ளார் என்றால், மீண்டும் ஜெ ஒரு டீ பார்ட்டி கொடுத்தால் அங்கே சேரமாட்டார் என்பது என்ன நிச்சயம். பெரியண்ணன் அழிக்க பார்த்தார்; அன்பு சகோதரி அரவணைத்துக் கொண்டார் என்று டாக்டர் ஐயாவும் பெல்டி அடிக்க கூடும். மீண்டும் பிரசார பீரங்கி, துரோகியாகவும், துருப்பிடித்த வாளாகவும் மாறலாம்.

3. மக்கள் உங்களை MLAவாக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். உங்களை மக்கள் தேர்ந்தெடுத்தது சட்டசபைக்கு செல்லத்தான், சும்மா Attendence கொடுப்பதற்கு அல்ல. சட்டசபைக்கு அடிக்கடி போய்வாருங்கள். அல்லது இதுவே ஒரு தப்பான முன்னுதாரணம் ஆகிவிடும்.

4. தேசிய செயல் திட்டத்தில் நான் கையெழுத்தே போடவில்லை; நிரூபிக்க முடியுமா ? என்று நல்லாத்தான் சாவால் வீட்டிங்க, ஆனா இல.கணேசன் கையும், களவுமாக உங்க கையெழுத்திட்ட லெட்டரை காண்பித்து உண்மையைப் போட்டு உடைத்தார். இனிமேல் இதுபோன்று எதிலும் கையெழுத்து போடாதீங்க. கையெழுத்து போட்டாலும் தமிழ்ல கையெழுத்து போடுங்க.

5. தயாநிதி மாறனுக்கு மந்திரி பதவி கேட்டார் கருணாநிதி என்று முதல்வர் ஜெ குற்றம் சாட்டினார். 'ஆமாம் கூறியது உண்மை என்று பா.ஜ.க தலைவர்கள் ஜால்ரா அடித்தார்கள். இன்று காங்கிரஸ் அரசில் தயாநிதி மாறனுக்கு கேபினட் மந்திரி பதவிகிடைத்துவிட்டது.(நீங்கள் பா.ஜ.க விடம் தயாநிதிக்கு மந்திரி பதவி கேட்டிருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்) இப்பவாது நீங்கள் போட்ட கேஸை வாப்பஸ் வாங்கிவிடுங்கள். அல்லது நீங்கள் ஆங்கிலத்தில் கையெழுத்திட்ட கடிதத்தை சமயம் பார்த்து பா.ஜ.க வெளியிட்டு உங்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும்.

6. எம்.ஜி.ஆர், ஜெ'வை நடிகர்கள் என்று கூறிகிறீர்கள். அரசியலில் எல்லேருமே நடிகர்கள்தான் என்பது நிதர்சனம். ராகுலின் கன்னிப் பேச்சை கேட்டவுடன் கண்ணீர் வந்துவிட்டது என்று கூறுவதும் நடிப்பே என்பது எங்களுக்கு தெரியும். கொஞ்சம் பாசாங்கில்லாமல் பேசினால் நாங்கள் சந்தோஷப்படுவோம்

7. உங்கள் தமிழ்ப் பற்றை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம். அதுவும் நீங்கள் அடிக்கடி "இருப்பது ஓர் உயிர்; அது போவது ஒருமுறை; நான் சாவுக்கு அஞ்ச மாட்டேன்" என்று வீர வசனத்தை கேட்டுக்கேட்டு எல்லோருக்கும் புல்லரிக்கும். ஆனால் அது 35 வருடங்களுக்கு முன்னால் ராஜ்பாட் நாடகத்துக்கு எழுதியது. வேறு எதாவது டிஜிட்டல் வசனத்துக்கு மாறுங்கள். தமிழ் என்று சொன்னவுடன் நினைவுக்கு வருகிறது தமிழை செம்மொழி ஆக்கவில்லை அதனால் தான் தே.ஜ கூட்டணியை விட்டு வெளியே வந்தோம் என்றீர்கள். தற்போது காங்கிரஸ் வடிவமைத்துள்ள "Common Minumum Program"ல் இந்த செம்மொழி நிபந்தனை இடம் பெற்று விட்டதா என்று பார்த்து விடுங்கள்.ஹிந்தியில் எழுதியிருந்தால் தயாநிதி மாறனை பார்க்க சொல்லுங்கள்.

8. அடிக்கடி யோசிக்காமல் பேசிவிடுகிறீர்கள். சமீபத்திய உதாரணங்கள்.
* இந்திய குடியுரிமை பெற்ற அன்னிய நாட்டவர் பிரதமர், முதல்வர் போன்ற பதவிகளுக்கு தடை செய்து அரசியல் சட்டத்தை திருத்தம் செய்ய வேண்டும் என்று தே.ஜ கூட்டணி திட்டத்தில் கையெழித்திட்டீர்கள்.சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் சோனியா 'இந்திய குடிமகள்' என்று கூறப்பட்டதை ஏற்றீர்கள். ஆனால் ஜெ மீதான ஊழல் தீர்ப்பு குறித்து கேட்ட போது 'நீதிபாதி'யாகி விட்டது என்று நீதிமன்றங்களை எள்ளி நகையாடினீர்கள்.

* 40 தொகுதிகளில் வெற்றி பெற்று தார்மிக பொறுப்பேற்று ஜெ ஆட்சியை விட்டு விலக வேண்டும் என்று கூட்டணி செயல் திட்டத்தில் தீர்மானம் போட்டீர்கள். கேரளாவில் காங்கிரஸுக்கும் அதே நிலமைதான். அதற்கு என்ன திர்மானம் ஏற்றப்பட்டது ? நீங்கள் என்றுமே நியாயத்துக்கு கட்டுப்பட்டவர் என்பது எங்களுக்கு தெரியும். இனிமேல் கொஞ்சம் யோசித்துவிட்டு பேசுங்கள். போதும்.

9. போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட வெங்கடேச பண்ணையாரின் மனைவிக்கு சீட் கொடுத்தீர்கள். பாராட்டுகிறேன். அதே போல் தா.கிருட்டிணன் படுகொலை செய்யப்பட்ட குடும்பத்தையும் கொஞ்சம் கண்டுக்கோங்க. அவர்களும் எமர்ஜன்சி சமயத்தில் நிறைய கஷ்டப்படவர்கள்தான்.

10. அப்பப்போ புள்ளிவிவரம் தரீங்க நல்லதுதான். கொஞ்சம் பார்த்து கொடுங்க. இந்தியாவின் வளர்ச்சி 8.4 சதவீதம் இல்லை 5.5 சதவீதம் தான் என்று பன்னாட்டு நிதி நிறுவனத்தின் புள்ளி விவரப் பட்டியலை குறிப்பிட்டும் நீங்கள் 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்பது போல் உள்ளது. ஐந்தாண்டு கால தே.ஜ ஆட்சியில் இந்தியாவில் வளர்ச்சி இல்லையென்றால் அதில் உங்கள் மனசாட்சிக்கும்(மாறனுக்கு) பங்கு உண்டு என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா? முன்பு உலக வர்த்தக மாநாட்டில் இந்தியாவின் மாண்பையும் பெருமையையும் தலைநிமிரச் செய்தவர் மாறன் என்று தம்பட்டம் அடித்தது சும்மாவா ?

11. இன்னும் கொஞ்சம் நாளைக்கு உங்கள் பகுத்தறிவு கொள்கைகளை விட்டுவிடுங்கள். அது உங்களுக்கு நல்லது. அல்லது உங்கள் பிரசாரத்தை உங்கள் குடும்பத்தினரிடமிருந்து ஆரம்பியுங்கள். முக அழகிரி தன் கையில் மந்திரித்த கறுப்புக் கயிறை பார்த்தீர்களா ? உங்கள் பையன் வீட்டில் கண் திருஷ்டி பொம்மை எதற்கு ? விடை தெரியவில்லை என்றால் உங்கள் கனவில் வரும் ஈ.வெ.ரா விடம் கேளுங்கள்.
குல்லா போட்டு கஞ்சி குடிக்கிறேங்க அதே போல் மாரியம்மன் கோயிலில் கூழ் ஊத்துவதையும் குடியுங்க. கூழுக்கும் கஞ்சிக்கும் ஏன் இந்த பாகுபாடு ? தேர்தல் சமயத்தில் ஓர் இடத்தில் சில அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதை அளித்ததை இரு கை கூப்பி மரியாதையுடன் ஏற்று கொண்டீர்கள். இது தேர்தல் பிற்பாடும் தொடர வேண்டும்.

12. அன்பழகன் என்பவர் உங்கள் காலை சுத்தி சுத்தி உங்களுக்கு விஸ்வாசமாக இருக்கிறார். அவரை கொஞ்சம் கண்டுக்கோங்க. பாவம்.

13. ரஜினி வாய்ஸ் வெறும் நாய்ஸ் என்று தேர்தலுக்கு பிறகு தெரிந்துவிட்டது. அவரைப்பற்றி கேள்விகளுக்கு இனிமேலாவது பயப்படாமல் ஏதாவது கூறுங்கள். "No Comments" என்று ஜகா வாங்காதீர்கள்.

இன்னும் 2 வருடம் இருக்கு தேர்தலுக்குள் இதெல்லாம் மக்கள் மறந்து போய்விடுவார்கள். இதில் முடிந்தவற்றை திருத்திக்கொள்ள முயற்சி செய்யுங்கள். வாழ்த்துக்கள்.

கார்ட்டூன் உதவி: Shekhar Gurera, நன்றி: http://www.shekhargurera.com/

Read More...

Monday, May 24, 2004

குரங்டூன்

Read More...

Thursday, May 20, 2004

நிரந்தர முதல்வர் ஆக ஜெ'க்கு டாப் 10+4 அறிவுரைகள்.

1. இந்தியாவை யார் ஆண்டால் உங்களுக்கு என்ன ?
'100 கோடி பேரில் ஒருவருக்கு கூட பிரதமர் பதவிக்கு தகுதி இல்லை' என்று தானே சோனியாவுக்கு வாக்களித்துள்ளனர். கூட்டணி தர்மத்தை நீங்கள் இன்னமும் நன்றாக கற்க வேண்டும்.

2. பத்திரிக்கை என்பது மிகப் பெரிய ஆயுதம். அவர்களை அவ்வப்போது கூப்பிட்டு பிஸ்கேட், காப்பி குடுங்கள், ஏதாவது பேசுங்கள். அவர்களும் வியாபாரம் தானே செய்கிறார்கள். அவர்களை ஏன் பகைத்துக்கொள்கிறிர்கள். எதையாவது எழுதிவிட்டு போகட்டுமே! வரம்பு மீறினால், "நான் அடித்தால் நீ தாங்க மாட்டே" என்று கூறுங்கள், சும்மா இருந்துவிடுவார்கள். அதை விட்டு விட்டு கோர்ட் கேஸ் என்று போகாதீர்கள்.

3. 'தீவிரவாத ஆதரவுப் பிரசாரம் தப்பில்லை' என்று பொடா மறு ஆய்வுக் குழு தெரிவித்திருக்கிறது. அதனால், தமிழ் நாட்டில் யார் வேண்டுமானாலும் விடுதலைப் புலி ஆதரவு பிரசாரம் செய்யட்டும். காங்கிரஸ் கட்சிக் காரர்களே சும்மா இருக்கும் போது உங்களுக்கு எதற்கு வீனா பொல்லாப்பு. பொடா கைது நடவடிக்கைகளை விட்டு விடுங்கள். பொடா கேஸை எல்லாம் வாப்பஸ் வாங்கி விடுங்கள்.

4. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வருடத்துக்கு ஒரு முறை வேலை நிறுத்தம் செய்வார்கள் அதை நீங்கள் தடுக்கலாமா ? அரசாங்க ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கவுன்சிலிங் மூலம் இடமாற்றம் என்ற செய்கையை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் லட்சக்கணக்கில் கையூட்டு கொடுத்து லஞ்சத்தை ஊக்குவித்து அவர்கள் விரும்பிய இடத்துக்கு மாற்றம் பெற தயாராக இருக்கும்போது, நீங்கள் இதைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும் ? அவர்கள் அடிக்கடி கேண்டீன் சென்று டீ,காபி குடித்தால்தான் சுறுசுறுப்பாக இருப்பார்கள். ஏதோ ஆபிசுக்கு வருகிறார்களே என்று சந்தோஷப்படிங்கள்.உங்களுக்கு ஏன் பொதுமக்கள் மீது அக்கறை ?

5. ரவுடிகள் விஷயத்தில் ஏன் நீங்கள் இவ்வளவு கடுமையைக் காட்டுகிறீர்கள். அவர்களும் தங்கள் தொழிலை செய்து விட்டுப் போகட்டுமே... எதிர்காலத்தில் நீங்கள் கூட இது மாதிரி வேட்பாளர்களை தேர்வு செய்யலாம். (வெங்கடேச பண்ணையாரின் மனைவி ராதிகா செல்வி வெற்றி பெற்றிருக்கிறார்)

6. மழை நீர் சேகரிப்புக்கு நீங்கள் இவ்வளவு முனைப்பு காட்டியிருக்க வேண்டியதில்லை. தண்ணீர் பிரச்னையை தயாநிதி மாறனிடமும், டி.ஆர்.பாலுவிடம் விட்டு விடுங்கள். அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். நீங்கள் தமிழை செம்மொழியாக்க வேண்டும் போன்ற மிகமுக்கிய பிரச்சனையை கையில் எடுங்கள்

7. இலவச மின்சாரத்தை ஏன் ரத்து செய்தீர்கள்? முடிந்த மட்டும் அவர்களுக்கு இலவசமாக மின்சாரத்தை விவசாயத்துக்கும், ஏன் வீட்டுக்கும் கூட கொடுங்கள். மேலும் அவர்களுக்கு தேவையான விதை, உரம், மோட்டார் பம்ப் மற்றும் கால்நடைகள், டிராக்டர் முதலியவைகளை இலவசமாக கொடுக்க வேண்டும்.

8. இந்துக்கள் அனைவரும் திருடர்கள் என்ற படத்தை கருணாநிதி கொடுக்க, இந்துக்களும் அதை சந்தோஷத்துடன் ஏற்றுக் கொண்டனர். கட்டாயமதமாற்றத் தடைச் சட்டம் பற்றி உங்களுக்கேன் வீண் கவலை.
அதை மக்கள் ஏற்கவில்லை, வாபஸ் பெற்றீர்கள். அதே போல் கோயில் பராமரிப்பு, அன்னதானம் முதலியவற்றையும் வாபஸ் பெற்று விடுங்கள்.

9. காவிரி நீர் சம்பந்தமான ஒப்பந்தம் புதுப்பிக்காமல், காங்கிரஸ் அரசுக்கு நன்மை செய்வதற்காக கர்நாடகம் எவ்வளவு அணைகளை வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளட்டும் என்று, பதிவு செய்யப்பட்ட வழக்கை வாபஸ் வாங்கி, தமிழ் நாட்டுக்கு கருணாநிதி நன்மை செய்யவில்லையா? அந்த ராஜதந்திரம் உங்களிடம் இல்லையே ஏன்? இனியாவது அவர்களிடம் கெஞ்சி தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் வாங்கிக் கொடுங்கள். தமிழனுக்கு தன்மான உணர்ச்சி எதற்கு?

10. லாட்டரி சீட்டு ஒழிப்பு மிகவும் மக்கள் விரோத செய்கை. லாட்டரி சீட்டால் எவ்வளவு பேர் கோடீஸ்வரர் ஆயினர் தெரியுமா? சாமானிய மக்கள் சம்பாதித்த பணத்தை அவர்களே இழக்க தயாராக இருக்கும்போது, அதை நீங்கள் ஏன் தடுத்தீர்கள். அதை மீண்டும் கொண்டு வாருங்கள். அடித்தட்டு மக்கள் நாசமாய் போனால் தங்களுக்கு என்ன?

11. "எச்' முத்திரையை ரத்து செய்தீர்கள். நல்லது. அரசு மானியத்தில் அனைவருக்கும் வீட்டுக்கு வேண்டிய மளிகை சாமான்கள் மற்றும் அனைத்து பொருட்களையும் கொடுங்கள். இடைத்தரகர்களும் மற்றவர்களும் பிழைப்பதை நீங்கள் ஏன் தடுக்க வேண்டும் அரசு ரெவின்யூ குறைந்தால் குறைந்துவிட்டுப் போகட்டுமே!

12. பச்சோந்திகள், மரம் வெட்டிகள் என்ற பெயர் எடுத்தாலும் அவர்களுக்கும் ஓட்டு வங்கி உண்டு. அதுபோல விடுதலைப் புலிகள் ஆதரவு ம.தி.மு.க., தனித்தனி வழியில் செல்லும் காங்கிரஸ், தொழிலாளர்களை குழப்பும் கம்யூனிஸ்ட்டுகள் ஆகியவர்களுக்கும் ஓட்டு வங்கி உண்டு. அவர்களையும் ஆதரிக்கும் மக்கள் உண்டு. எனவே, உங்களுக்கு கொள்கை தேவையில்லை. அடுத்த முறை இவர்களை சேர்த்தால் வெல்வது நீங்கள் தான். சிம்பிள் கூட்டணி அரித்மெடிக் தெரிந்துகொள்ளுங்கள்.

13. "டாஸ்மாக்' மூலம் மது விற்பனையை அரசு எடுத்தது மிகவும் தவறல்லவா! இதன் மூலம் கொள்ளையடித்த மதுக்கடை ஏலதாரர்களும், போலி மது விற்பனையாளர்களுக்கும் இடிப்பு ஏற்பட்டு விட்டதே. அதனால் தான் பொதுமக்கள் கவலைப்படுகின்றனர். இதுபோல தான் மணல் விற்பனையையும் கவலைப்படாமல் மீண்டும் தனியாருக்கு விட்டு விடுங்கள். சில கட்சி ஆட்கள் பிழைப்பு நடத்த வேண்டாமா ?

14. மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸுடன், இலவச சினிமா டிக்கேட்டும் குடுங்கள், உங்களுக்கு
கூடுதல் செல்வாக்கு கிடைக்கும்.

முடிந்த வரை சிலவற்றை செய்திருக்கிறீர்கள். ஏன் இதற்கு மேலும் ஒரு பெரிய 'U' Turn அடியுங்கள். நிச்சயம் நீங்கள் தான் தமிழகத்தின் நிரந்தர முதல்வர்.

கார்ட்டூன் உதவி: Shekhar Gurera, நன்றி: http://www.shekhargurera.com/

Read More...

Monday, May 17, 2004

நகைச்சுவை ஒர் எளிய அறிமுகம் - 7

அடுத்ததாக நாம் 'Human Metaphor' என்ற வகையை பார்க்கலாம். மிருகங்கள் மீது ஏதாவது ஒரு குணத்தை ஏற்றி அதன் மூலம் புன்னகை வரவழைப்பதில் 'டிஸ்னி' வல்லவர்.
மற்றொரு உதாரணம் 'Charles schulez' உடைய 'Snoopy' என்ற நாய்.



ஒரு ஜோக்: ஒருத்தன் குதிரை மீது ஏகத்துக்கு சுமைகளை சேர்த்துக் கொண்டு போகிறான்.
நடுவழியில் குதிரை பொத்தென்று உட்கார்ந்து விடுகிறது. பக்கத்தில் ஒரு நாயும் இதை பார்க்கிறது.
குதிரை: இனிமேல் நான் ஒரு அடி எடுத்து வைக்க முடியாது.
மனிதன்: அட! குதிரை பேசி நான் கேட்டதே இல்லை
நாய்: நானும் தான்.

மனிதனுக்குள் இருக்கும் குழந்தை உணர்வு கூட நகைச்சுவைக்கு ஒர் ஆதாரமாக அமையும். உதாரணம்
இதை பாருங்கள்.

"பாப்பா ! பாப்பா உம் பேரு என்னம்மா ? "
"மை நேம் இஸ் பி.ஆர்.லக்ஷ்மி"
"அச்சுமியா அங்க ஒக்காச்சிண்டு என்ன சாப்பிடறே?"
"லஞ்ச் சாப்பிடறேன், மாமா!"
"மம்மம் சாப்பிடறயா ! என்ன் மம்மம் ?"
"பருப்பு சாதம்"
"பப்பு மம்மா? அப்பறம் என்ன சாப்பிடுவே ?"
"ரசம் சாதம்"
"அசம் மம்மா அப்புறம்"
"தயிர் சாதம்"
"தச்சி மம்மா ?"
"எஸ் அங்கிள். டாடியை பார்க்க வந்திங்களா "
"கன்னுக்குட்டி! கரெக்டா சொல்லிட்டியே. அப்பா 'ஓ' போயிருக்காளா ?"
"எட்டு மணிக்கு போனா ரேஷன்லே சக்கரை வாங்க"
"அக்கை வாங்கவா அக்கை பிடிக்குமா நோக்கு"
"ஹுஹும், பிடிக்காது கிராக்ஜாக் பிஸ்கெட்தான் பிடிக்கும்."
"பிக்கெட் பிடிக்குமா ?வேறென்ன பிடிக்கும் ?"
"காபி"
"பாப்பியா அப்போ நீ கிண்டிலே இங்கா குச்ச மாட்டியா "
"கிண்டியிலும் குடிக்க மாட்டேன், சைதாப் பேட்டையிலும் குடிக்க மாட்டேன்"
"எவ்வளவு சமத்துடி என் பட்டுக்குட்டி! இதான் உன் மியாவ் பொம்மையா? "
"பூனை பொம்மை இது. அங்கிள் பாய் பினையாக்கும் மீசை இருக்கு பாருங்கோ"
"ஜுஜு பொம்மை உங்கிட்டே இருக்கா"
"நாய்க்குட்டியே இருக்கு. 'பாம்'னு பேரு. கூப்பிடட்டுமா ? பாம்..."
"வாணாம், வாணாம். மாமாவை கச்சுடும் ஆமாம் பாப்பாவோட அம்மா எங்கே? "
"மதுரை போயிருக்கா"
"எதிலே கூகூலேயா?"
"இல்லை அங்கிள், வைகை எக்ஸ்பிரசில்"
"எதுக்கு போயிருக்கா உமாச்சி பார்க்கவா ?"
"மதுரை தாத்தாவுக்கு அபரேஷன். ஏதே ஹெர்னியாவாம்"
"ஒம்பு சரியில்லையா இரண்யாவா? ஆமா, அம்மா இல்லையே, உனக்கு யார் 'ஈ' தேச்சி விடுவா?
யார் 'போப்' தேச்சிவிடுவா? யார் 'ஜோ' குப்பாட்டி விடுவா!"
"நானே செஞ்சிப்பேன். எனக்கு ஃபோர் இயர்ஸ் இப்போ!"
"நேஜமாவா ? ராத்திரி யார் பக்கத்திலே தாச்சிப்பே?"
"நான் என் பெட்டிலே தனியா தூங்குவேன்?"
"பயம்மா இருக்காது ? பூச்சாண்டி சத்தம் கேட்டா என்ன பண்ணுவே?"
எனக்கு என்ன பயம் ? நான் என்ன பேபியா? அதோ அப்பா வந்துட்டா. டாடி டாடி இந்த மாமா பாரேன்
பாப்பா மாதிரியே பேசறா!"
(திருமதி திருப்பதி க்ரோர்பதி - ஜே.எஸ்.ராகவன்)
(1) (2) (3) (4) (5) (6)

Read More...