பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, December 16, 2003

இது கதையல்ல நிஜம் !


இன்றைய ஒரு வரி செய்தி:
அடிலெய்டு கிரிக்கெட் டெஸ்ட் : 22 ஆண்டுகளுக்குப்பின் ஆஸ்திரேலியாவில் இந்தியா சாதனை:4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி - இது கதையல்ல நிஜம் !

Read More...

Monday, December 15, 2003

எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன் !



இன்றைய ஒரு வரி செய்தி:
சதாம் ஹுசேன் பிடிபட்டார் - எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன் !

Read More...

Friday, December 12, 2003

இரண்டு சமையல் குறிப்புகள் + ஒரு கொசுறு

திசைகள் டிசம்பர் 2003 இதழில், இட்லி வடை பற்றி எழுதியதறக்கு கைமாறாக இரண்டு சமையல் குறிப்புகள் + ஒரு கொசுறு

இட்லிமாவு அரைக்கும் பொழுது ஒரு டீஸ்பூன் வெந்தயத்தைப் போட்டால், இட்லி மிகவும் நன்றாக இருக்கும்.

உளுந்துவடை செய்யும் போது மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து கலந்து வடை செய்தால், வடை எண்ணெய் குடிக்காமல் மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.

கொசுறு:
இட்லி பொடி தயாரிக்கும் போது ஒரு ஸ்பூன் மல்லியை வறுத்து மற்ற சாமான்களுடன் பொடி செய்தால் இட்லி பொடி வாசனையாக இருக்கும்.

Read More...

Thursday, December 11, 2003

நிலா !

இன்று எங்கள் வீட்டு மொட்டை மாடியில் இந்த நிலா தெரிந்தது.
சங்க புலவர்கள் முதல் இன்றைய ஹைக்கூ கவிஞர்கள் வரை யாரும்
நிலாவை விட்டு வைத்ததாக எனக்கு தெரியவில்லை. நிலாவை எல்லாவற்றுக்கும்
உபயேகித்துவிட்டார்கள் :-

காதலர்கள் தூதுவிட்டார்கள்.
குளுமையாக்கி ஒப்பிட்டார்கள்.
அம்மாக்கள் குழந்தைகளுக்கு சாதம் ஊட்டினார்கள்.
புதிதாக கல்யாணம் ஆனவர்கள், தேனுடன் கலந்து தேனிலவு ஆக்கினார்கள்.
கிரகணத்தின் பொழுது குடுமி வைத்தவர்கள் தர்பணம் பண்ணார்கள்.
பெளர்ணமி அன்று சிலர் பாயை பிறாண்டினார்கள்.
நிலாவை காயவைத்து சினிமா நடிகைகளை ஆடவிட்டார்கள்.

எனக்கு பிடித்த பிரபல நிலா கவிதை கீழே.

நிலா நிலா ஓடி வா!
     நில்லாமல் ஓடி வா!
மலைமேல் ஏறிவா
     மல்லிகைப்பூ கொண்டுவா
வண்ணமுகில் பூவே
     பட்டம் போலே பறந்து வா
பம்பரம் போல் சுற்றி வா
               - ஸ்கூல் மிஸ்

நிலாவை பற்றி சில உருப்படியான தகவல் கீழே

Moon Statistics
Mass (kg) 7.349e+22
Mass (Earth = 1) 1.2298e-02
Equatorial radius (km) 1,737.4
Equatorial radius (Earth = 1) 2.7241e-01
Mean density (gm/cm^3) 3.34
Mean distance from Earth (km) 384,400
Rotational period (days) 27.32166
Orbital period (days) 27.32166
Average length of lunar day (days) 29.53059
Mean orbital velocity (km/sec) 1.03
Orbital eccentricity 0.0549
Tilt of axis (degrees) 1.5424
Orbital inclination (degrees) 5.1454
Equatorial surface gravity (m/sec^2) 1.62
Equatorial escape velocity (km/sec) 2.38
Visual geometric albedo 0.12
Magnitude (Vo) -12.74
Mean surface temperature (day) 107°C
Mean surface temperature (night) -153°C
Maximum surface temperature 123°C
Minimum surface temperature -233°C
நன்றி - http://www.solarviews.com/eng/moon.htm

Read More...

Wednesday, December 10, 2003

தமிழ் எழுதிப்பார்.

தமிழ் எழுதிப்பார்.
தேவையான பொருட்கள்:

1. முரசு அஞ்சல் (அ) எ-கலப்பை (அ) அழகி என்று ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளவும்.
2. கொஞ்சம் ஆங்கிலம் தெரிந்து இருக்க வேண்டும். (தமிழ் உள்ளீட்டு முறை, தமிழ் விசை பலகை எல்லாம் ஆங்கிலத்தில் இருப்பதால்.)
3. தேவையான அளவு தமிழ் fonts.
4. instant உதவிக்கு இணைய நண்பர்கள்.
5. கடைசியாக நிறைய பெறுமை
முதலில் குறிப்பிட்டது போல் (முரசு, எ-கலப்பை, அழகி) ஏதாவது ஒன்றை எடுத்துக்கொள்ளவும்.
தமிழ் எப்படி உள்ளிட வேண்டும். என்பதை பற்றி googleலில் தேடுங்கள். தேவையான தமிழ்
fontsசை தேர்ந்து எடுங்கள். இணைய நண்பர்கள் இருந்தால் அவர்களிடம் கேளுங்கள்.
நிறைய பொறுமையுடன் முயற்சியுங்கள். வாழ்த்துக்கள்.
இவை எல்லாவற்றிலும் சுலபம் - ஒரு பேப்பர் ஒரு பேனா..!

Read More...

Sudden Fiction

கடந்த சில வாரங்களாக குமுதம் இதழில் சுஜாதா (Sudden Fiction) என்ற தலைப்பில் எழுதுவது பலருக்கு தெரிந்து இருக்கலாம். இதனால் ஈர்க்கப்பட்டு நிறைய பேர் பேப்பரும் பேனாவுமாக அலைகிறார்கள். முன்பு ஹைக்கூ
இப்பொழுது Sudden Fiction. மெரினா கடலை வியாபாரிகளுக்கு கொண்டாட்டம் தான்!..

ஒரு வரி செய்தி என்ற ஒன்றை ஆரம்பித்தால் என்ன என்று தோன்றிற்று. கீழே சில சாம்பிள்.
ஐஐஎம் நுழைவுத் தேர்வு வினாத்தால் அவுட்டாகியுள்ளது - Cat out of the Bag
அரசர் சார்லஸ் மும்பை டப்பாவாலாக்களை சந்தித்தார்: - Fast Food
சென்னை திருவெற்றியூர் கோயிலில் முதல்வர் ஜெயலலிதா வழிபட்டார்: Amma's Day out.
ஜீதேவ் விவகாரம்: பிரதமர் வாஜபேயி மக்களவையில் இன்று அறிக்கை - Judeo video, Govt audio
அஜித் ஜோகி லஞ்சம் கொடுத்த விவகாரம்: eye for an eye; tape for a tape.

வேறு இருந்தால் idlyvadi@rediffmail.com என்னும் முகவரிக்கு அனுப்பவும். எனக்கு கிடைத்திருக்கும் ஆறுதல் பரிசை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

Read More...

Friday, November 14, 2003

தற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.

முதல்வர் ஜெயலலிதா அவர்கள் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளின் விளைவாக,
தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. விவசாயிகள் ஆனந்தக் கண்ணீர்
வடிப்பதால் ஏரிகளில் தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்து வருகிறது.
மளிகைக் கடைகளில் மளிகைப் பொருட்கள் கிடைக்கின்றன. ஜவுளிக்கடைகளில் துணிகள் கிடைக்கின்றன.
அவ்வளவு ஏன் ? நகைக் கடைகளில் கூட நகைகள் கிடைக்கின்றன. மக்களுக்குத்
தேவையான அனைத்து விதிப் பொருட்கள்ளும் அந்தந்த கடைகளிலேயே கிடைக்க, அரசு ஆவன
செய்துள்ளது பாராட்டுக்குரியது.சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ய
விருபினால், சபாநாயகர் உடனே அனுமதி வழங்குகிறார். அமைச்சர்களும் முதல்வர் பேச்சை ஆரம்பித்து
முடிக்கும் வரை ஓய்வு ஒழிச்சலின்றி நாள் முழுவதும் பொறுமையாக பெஞ்சைத் தட்டிக் கொண்டே
சட்டமன்றப் பணி ஆற்றுகின்றனர். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முகங்களைப் பார்க்க வேண்டியிருக்கிறதே -
என்ற கொதிப்புணர்வை கட்டுப்படுத்திக் கொண்டு அவர்கள் முன்னிலையில் முதல்வர் அமர்ந்துயிருப்பது
பாராட்டுக்குரியது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்தால்தான் உட்கார வைக்கப்படுகிறார்கள்.
அவர்கள் பேச ஆரம்பித்த உடனேயே, குறுக்கிட்டு பதில் சொல்லி, அவர்களது சட்டமன்ற பணிச் சுமையை
முதல்வர் வெகுவாக குறைத்திவிடுகிறார். நடந்து முடிந்த சட்டசபைக் கூட்டத் தொடரில் கூட கர்நாடக
முதல்வரைத் தவிர, வேறு எந்த மாநில முதல்வர் மீதும் ஜெயலலிதா கோபப்படவில்லை என்பது குறிப்பிடத்
தகுந்தது. முதல்வர் நினைத்திருந்தால் தமிழகத்தில் நடை பெறும் கொலை கொள்ளைகளிக்கு,
மத்திய அரசுதான் காரணம் என்று ஆணித்தரமாகக் கூறியிருக்க முடியும். ஆனால், எனோ அவர்
அப்படிக் கூறவில்லை. மெத்தத்தில் இப்படி ஒரு சட்டசபை இந்தியாவில் இருக்க முடியுமா என்ற ஆச்சரியமே
எற்படுகிறது.
நன்றி - துக்ளக்

Read More...

Monday, November 10, 2003

இணைய(யாத?) குழுக்கள்

மரத்(அடி)தடி என்று முன்பு நான் எழுதிய ஒரு பகுதியை பார்த்து. "நீங்கள் ரொம்ப
மிகைப்படுத்தி (exaggerate) எழுதுகிறிர்கள் என்று சிலர் எனக்கு தனிமடல் அனுப்பினார்கள்.
தற்பொது அங்கு நடக்கும் விவாதங்களும், விமர்சனங்களும் பார்த்தால் நான் எழுதியது கொஞ்சம்
கம்மி என்று குழந்தைக்கு கூட புரியும்.
முதல் சில மடல்களில் எழுதும் போது அண்ணா, தம்பி, அக்கா, ஏன் மாமி என்று கூட
கூப்பிட்டு கொள்கிறார்கள். பிறகு எங்கடா உன் குடுமி என்று அடித்துக் கொள்கிறார்கள்.
தன் வீட்டுக்குள் அடித்துக் கொள்ள ஆள் இல்லாமல் பக்கத்து வீட்டில் உள்ளவர்களையும்
கூப்பிட்டு கொள்கிறார்கள்.
சிறு பிள்ளைதனமாக அடித்து கொண்டு இப்போது கோர்ட் படி ஏரவும் துணிந்துவிட்டார்கள்.
இவர்கள் எழுதிய மடல்களை அவர்களே ஒரு வருடம், ஏன் ஒரு மாசம் கழித்து படித்தால்
அவர்களுக்கே நிச்சியமாக சிரிப்பு வரும்.
இணைய குழுக்களில் கருத்து வேறுபாடு வருவதர்க்கு எனக்கு தெரிந்த காரணங்கள் இங்கு
குடுத்திருக்கிறேன். ( இது தமிழருக்கே உரித்த குணம் என்று ஜகா வாங்க வேண்டாம்).
1. சகிப்புத் தன்மை 0.01% இருப்பதனால்.
2. வார்த்தை பிரயேகம் கவிதைக்கு மட்டும் என்று என்னுவதால்.
3. நகைச்சுவை உணர்வு இல்லாதது.
4. "Waiting to settle scores" மனப்பான்மை.
5. வேறுபட்ட வயதினர், மாறுபட்ட கருத்துக்கள், எதையும் seriousஆக எடுத்துக்கொள்ளும்
மனப்பான்மை.

ரோட்டில் இருவர் அடித்துக் கொண்டால் கூட்டம் கூடும், அதே போல்தான் இந்த குழுக்களிலும்
கூட்டம் சேரும். வேடிக்கை பார்க்க, வெண்பா எழுத இல்லை.

கடைசியாக மூல காரணம், எல்லோருக்கும் இருக்கும் EGO

Read More...

Friday, November 07, 2003

மாஜி சண்டியர்

எல்லோரும் டீவியில் மிட் நைட் மசாலா பார்க்கையில் எனக்கு Numerology, Gemology, Astrology,Vaasthu,Horoscope, Palmistry போன்ற காமெடி நிகழ்ச்சிகளை பார்ப்பதில் ஆர்வம்.
இதில் ஓயாது கஷ்டங்கள் - பரிகாரங்கள்.
எப்போழுதும் ஆங்கில பெயரில் இரண்டு "E" அல்லது இரண்டு "A" சேர்த்துக்கொள்ள சொல்வார்கள்.
சில சமயம் பெரிய பெயரை சுருக்கிவிடுவார்கள், சின்ன பெயரை பெரிதாக்கி விடுவார்கள்.
கட்டாயம் பவழ மோதிரம் ( அவர்கள் கடையில் ) போட்டுக்கொள்ள சொல்வார்கள்.
இவ்வாறு மாற்றிய பெயரை தினமும் காலை பல்தேச்சி, குளித்துவிட்டு 108 முறை எழுதினால், ஒன்று விட்ட சித்தப்பாவுக்கு சகல செளபாக்கியங்களும் கிட்டும்.
சிரிக்காதீர்கள் - இவ்வாறு பெயர் மாற்றியவர்களின் பட்டியல் இங்கே...

கமல் தன்னுடைய படத்துக்கு சண்டியர் என்று பெயர் வைத்ததால் கஷ்டபட்டது எல்லோருக்கும் தெரிந்ததே. என்னை கேட்டால் சண்டியர் (SonDear) என்ற பெயரை டியர்சண் (DearSon) என்று வைத்தால் பிரச்சனை தீர்ந்துவிடும்!.

Read More...

Monday, November 03, 2003

நான் யார் ?

நான் யார் என்பதை பற்றி நிறைய குழப்பங்கள் இருப்பதால் அது தொடரட்டும் என்று விட்டு விட்டேன்.
சிலர் என்னை நீதானே குப்புசாமி என்று கூறி நான் யார் என்பதை கண்டுபிடிக்க முயற்சித்தார்கள்.
பலர் என்னை "பாயிஸ்"(Boys) படத்தில் வரும் கெட்ட வார்த்தையை சொல்லி திட்டி உசிப்பேத்தினார்கள்,
சிலர் ஒரு clue தரவேண்டும் என்று கெஞ்சினார்கள்.
ஒருவர் இட்லியையும், எனது தமிழையும் இணைத்து நான் சுப்பிரமண்ணிய சாமி என்றார்.
தழிழர்களுக்கு கற்பனை வளம் அதிகம் என்பதை ஒத்துக்கொள்வதை தவிர வேறுவழி இல்லை.
ஈ-மெயில் அனுப்பிய அனைவருக்கும் உங்கள் விட்டில் உள்ள மழைநீர் சேமிப்பு தொட்டி ரொம்பி வழியுமாறு இறைவனை பிராத்திக்கிரேன்.

Read More...

Wednesday, October 29, 2003

Blog என்றால் என்ன ?

Blog என்றால் என்ன ? இணையத்தில் தேடுகையில்.
"Blog -- (weB LOG) - A blog is basically a journal that is available on the web.
The activity of updating a blog is "blogging" and someone who keeps a blog is a "blogger."
Blogs are typically updated daily using software that allows people with little or no technical background to
update and maintain the blog.
Postings on a blog are almost always arranged in cronological order with the most recent additions featured
most prominantly."

தமிழில் இதை எப்படி அழைக்கலாம் என்று யோசிப்பதற்குள் நிறைய வார்த்தைகள் வந்துவிட்டது
- வலைக்குறிப்புகள், வலைப்பூக்கள், வலைப்பதிவுகள்.
என்னை கேட்டால் வலைகிறுக்கல் என்பேன்; Blogging - கிறுக்கிங் ( கிங்-ராஜா என்று தவறாக நினைத்துக்
கொள்ள வேண்டாம் - Blogging - கிருக்ing என்பதைதான் அப்படி குறிப்பிட்டேன்!); Blogger - கிறுக்கன்.

Read More...

Tuesday, October 28, 2003

இன்று எதுவும் எழுதுவதாக இல்லை

இன்று எதுவும் எழுதுவதாக இல்லை
cartoon
நன்றி ஆனந்த விகடன்

Read More...

Monday, October 27, 2003

மரத்(அடி)தடி

மரத்தடி என்று சொன்னவுடன் என் நினைவுக்கு வருவது சினிமாவில் காட்டப்படும்
வெட்டி பஞ்சாயத்துதான்.
இணையத்திலும் ஒரு(சில) ( ஒருசில ?) மரத்(அடி)தடி உண்டு!. இங்கு பல முக்கியமான விவாதங்கள் நடைபெரும்.
இந்த மரத்தடியில் 150+ உருப்பினர்கள் உண்டு ஆனால் 10 பேர்தான் பேசிக்கொண்டு இருப்பார்கள்!.
ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்வார்கள், சிலர் பங்குகொள்வர்கள், பலர் வேடிக்கை பார்பார்கள்.
ஒரு சாம்பிள் - (முழுவதும் கற்பனை - நிஜமானால் நான் பொருப்பல்ல. )
நபர்1: கம்பராமாயணத்தை பற்றி discuss பண்ணலாமா ?
நபர்2: கம்பராமாயணம் பாடல்கள் சிலவற்றை தருவார்.
நபர்3: கம்பராமாயணமும் சிலப்பதிகாரமும் என்ற தலைப்பில் தகவல் தருவார்.
நபர்4: கம்பரும் இளங்கோவடிகளும் ஒருவர் தான் என்று கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்வார்.
நபர்1: கம்பர் வேறு இளங்கோ வேறு ( நான் நேற்றுதான் அவருடன் காப்பி சாப்பிட்டேன் என்பது போல் பேசுவார்)
நபர்2: கம்பராமாயணத்தில் "அது" என்று ஒரு இடத்திலும், சிலப்பதிகாரத்திலும் ஒரு
இடத்தில் "அது" வருவதால் இளங்கோவும் கம்பரும் ஒருவர்தான்.
நபர்4: நன்றி நபர்2.
நபர்5: நான் தமிழிலே weak, இருந்தாலும் எனக்கு எழுதவேண்டும் என்று தோன்றியது ( வீட்டில் வேறு வேலை கிடையாது) ...
நபர்1: நான் ராயர் காப்பி கிளப்பிர்க்கு ஒரு cc செய்கிறேன் ( அங்கு யாராவது வேலை இல்லாமல் இருக்கிரார்களா என்று பார்த்துவிடலாம்).
ராயர்நபர்1: வாத்தியார்(சுஜாதா) ஒருமுறை விகடனில் இதை பற்றி எழுதியதாக ஞாபகம்..
நபர்4: நபர்1 இப்பவது ஒத்துக்கொள்கிறாரா ?
நபர்1: Good Joke - இது போன்ற ஆசாமிகளை எங்கள் ஊரில் மக்கு என்று அழைப்பார்கள்.
நபர்4: போடா வெண்ண
நபர்6: Netiquette பற்றி விவரிப்பார். ( bore அடிக்குது இந்த topic, வேறபேசுங்கப்பா)
நபர்X: Boys திரைப்படம் நேற்று ரிலீஸ் - யாராவது பார்த்தீர்களா ? ( படம் "A" என்று கேள்வி )

Read More...

சண்டை நமது குணம்

"Vijay fan murdered in row over banners"
இந்த செய்தி நமக்கு புதிது அல்ல. சிவாஜி-எம்.ஜி.ர், கமல்-ரஜினி
இப்போ அஜித்-விஜய்.
நானா-நீயா என்பது தமிழர்களின் பிறவி குணம். ஜெயமொகன் - கலைஞர்.
மற்றும் பலர். இங்கு யாரெனும் விடுபட்டு இருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள்.
இவ்வளவு சண்டை இல்லாவிட்டால் நமக்கு - TSCII(1.6,1.7), TAM, TAB, Anjal, Mylai, Adhawin,
மற்றும் பல fonts கிடைத்திருக்குமா ?
எங்கே கிளம்பிட்டீங்க சண்டை போடவா ?

Read More...

(இனிமேல்) அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

இந்த Blogகுக்கு ஏன் இட்லி வடை என்று பெயர் வைத்தேன் ?
தமிழர்கள் சாப்பாட்டு பிரியர்கள் - இட்லி வடை என்று பெயர் வைத்தால் கட்டாயம் இங்கு வருவார்கள்!

நான் யார் ?
இட்லி வடைக்குள் ஒளிந்து கொள்ள நான் சாம்பார் அல்ல - உங்களில் ஒருவன், உங்கள் நண்பன்,
உங்கள் பக்கத்து வீட்டுக்காரன் சில சமயம் உங்கள் மனசாட்சி.
(நான் யார் என்று சொன்னால், சட்னி ஆகிவிடுவது நிச்சயம்! அதனால் ....)

Read More...