பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, March 26, 2014

ஞாநி பேட்டிRead More...

Thursday, February 13, 2014

எஸ்.வி.சேகர் பேட்டி - Exclusiveஎஸ்.வி.சேகர் பேட்டி என்று முடிவு செய்தவுடன், யார் அவரை பேட்டி எடுத்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்த போது, அவரே பத்ரி என்று சொல்லிவிட்டார். பத்ரியை தொடர்பு கொண்ட போது ’பார்க்கலாம்’ என்று ஜகா வாங்காமல், உடனே தேதி கொடுத்திவிட்டு, பதிவு செய்து youtubeலும் போட்டுவிட்டார். அவருக்கு எங்கள் ஸ்பெஷல் நன்றி.

நன்றி: எஸ்.வி.சேகர்,
ஸ்பெஷல் நன்றி: பத்ரி,
கொசுறு நன்றி: இந்த பேட்டிக்கு மறைமுகமாக உதவி செய்தவர்களுக்கும், கேமரா எடுத்த நபருக்கும்... :-)

அடுத்தது யாரை பேட்டி எடுக்கலாம் ?

Read More...

Wednesday, February 05, 2014

இட்லிவடைக்கு மீண்டும் எஸ்.வி.சேகர் பேட்டி

தேர்தல், கூட்டணி, ஆடியோ, வீடியோ டேப் என்று தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. இட்லிவடையில் திரும்ப அரசியல் பதிவுகளை ஆரம்பிக்கலாம் என்று யோசித்துக்கொண்டு இருந்த போது சில வருஷங்களுக்கு முன் எஸ்.வி.சேகர் பேட்டி ஞாபகத்துக்கு வந்தது. அப்போது அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தார் என்று நினைக்கிறேன். தற்போது அவர் மோடிக்காக இந்தியா முழுவதும் பிரச்சாரம் செய்ய போவதாக சொல்லியிருக்கிறார்.


பேட்டி இந்த வாரம் சனிக்கிழமை நடைபெறும். வாசகர்கள் கேள்விகளை பின்னூட்டத்தில் கேட்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் கேள்விகள் அவரிடம் கேட்கப்படும். 

அன்புடன்,
இட்லிவடை

Read More...

Monday, January 06, 2014

அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துகள்

"கலைஞரே கூப்பிட்டு ஸ்டாலின் தான் தலைவர் என்றாலும் நான் கண்டிப்பாக ஒப்புக் கொள்ள மாட்டேன்... " அழகிரி அதிரடிப் பேட்டியை பார்த்த ஸ்டாலின் ”.... தேவையற்ற கேள்விகளுக்கு தான் பதிலளிப்பதில்லை... தேவையற்ற பேச்சுக்களையும் செய்திகளையும் தான் கேட்பதும் இல்லை, படிப்பதும் இல்லை... ” என்று சொல்லியுள்ளார்.


பொங்கலோ பொங்கல்!

நன்றி: புதிய தலைமுறை

Read More...

Tuesday, October 22, 2013

சென்னை சத்தம் எனக்கு ரொம்ப பிடிக்கும் - பா.ரா


பதில் வருமா என்று தெரியாது ஆனால், வாசகர்கள் கேள்விகளை பின்னூட்டதில் கேட்கலாம்.

Read More...

Thursday, August 15, 2013

தலைவா பேட்டி


உண்மையான பிரச்சனை வேறு ஏதோ இருக்கிறது !

Read More...

Monday, July 15, 2013

உமாசங்கர் -

இவருடைய அடுத்த இலக்கு கவிதை எழுதுவது தான்....செய்துவிடுவார்

Read More...

Tuesday, April 30, 2013

ராமனின் பாதையில் - சோ - வேளுக்குடி பேட்டி


வாசகர் விருப்பம்

Read More...

Thursday, February 07, 2013

குஷ்பு ஜாக்பாட் பேட்டி

''தி.மு.க-வுக்கு ஸ்டாலின்தான் அடுத்த தலைவரா வரணும்னு கருணாநிதியே அறிவித்துவிட்டாரே?''

''நாமளே அப்படி ஒரு முடிவுக்கு வந்துடக் கூடாது. தலைவர் என்ன சொல்லியிருக்கார்னா, எனக்கு அப்புறம் சமூகப் பணிகளைத் தளபதி செயல்படுத்துவார்னுதான். தி.மு.க. தலைவரைத் தேர்ந்தெடுக்க தனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சா, தளபதிதான் அவரோட சாய்ஸ்னு சொல்லியிருக் கார். ஆனா, இறுதி முடிவைப் பொதுக்குழுதான் எடுக்கும். 'யார் கட்சித் தலைவர்’னு முடிவு பண்றப்போ, அதைப் பத்திப் பேசுவோம்.''

''ஆனா, அந்த அறிவிப்புக்கே அழகிரி பயங்கர எதிர்ப்புத் தெரிவிச்சாரே?''

'' 'நான் இதை ஏத்துக்க மாட்டேன்’னு அழகிரி அண்ணன் சொன்னாரா? தளபதியோ, அழகிரி அண்ணனோ, தலைவரோ... யாருமே அண்ணன், தம்பிக்குள் பிரச்னைனு சொல்லலையே. வெளியில சம்பந்தம் இல்லாதவங்க பேசிக்கிறதுக்குப் பதில் சொல்ல வேண்டியது இல்லை.''

''சரி... நீங்க உங்க கருத்தைச் சொல்லுங்க... ஸ்டாலின், அழகிரி, கனிமொழி... தி.மு.க. தலைவர் பதவிக்குப் பொருத்தமானவங்க யார்?''

''திரும்பவும் சொல்றேன்... அதை பொதுக் குழுதான் முடிவு பண்ணும். தலை வர், பேராசிரியர் எல்லாரும் இது சம்பந்தமா கலந்து பேசி முடிவு எடுப் பாங்க. தலைவர் மட்டுமே முடிவு எடுத்துட்டதால, அடுத்த தலைவர் தளபதியாதான் இருக்கணும்னு அவசியம் இல்லை. அது கட்சியில் யாராகவும் இருக்கலாம். உட்கட்சித் தேர்தல் நடக்கும். எல்லாரும் வாக்களிப்போம். எல்லாம் முறைப்படி நடக்கும். தி.மு.க - வில் சின்னச் சின்னப் பதவிகளுக்குக்கூட உட்கட்சித் தேர்தல் மூலம்தான் ஆட்களை நியமிப் பாங்க. ஆனா, என் வழி தலைவர் வழிதான்!''

''அதான் 'எனக்குப் பிறகு ஸ்டாலின்’தான்னு தி.மு.க. தலைவர் கருணாநிதியே சொல்லிட்டாரே?''

''எல்லார் விருப்பப்படிதான் தலைவர் தேர்ந்து எடுக்கப்படுவார்னு தலைவரே சொல்லியிருக்கார். கட்சியில அடிமட்டத் தொண்டனாஇருப்ப வங்களுக்குக்கூட தலைவரைத் தேர்ந்தெடுக்க உரிமை இருக்கு. தலைவர் முடிவு எடுத்துட்டா ரேனு யாரையும் தேர்ந்தெடுக்க முடியாது. கட்சியின் நலனுக்கு யார் பொருத்தமாஇருப்பாங் களோ, அவங்களை உட்கட்சித் தேர்தல் நடத் தித் தேர்ந்தெடுப்பாங்க.''

சில மணி நேரத்துக்கும் குஷ்பு வீட்டுக்கு எதிரில் 10 ஆண்களும், 10 பெண்களும் திரண்டார்கள். அவர்கள் குஷ்புவுக்கு எதிராக கோஷமிட்டனர். திடீரென்று வீட்டின் மீது சரமாரியாக கல் வீசி விட்டு ஓடி விட்டனர். குஷ்பு வீட்டுக்குள் நிறுத்தி வைத்திருந்த கார் கண்ணாடிகள் உடைந்தன. மதில் சுவரில் இருந்த விளக்குகளின் கண்ணாடிகளும் உடைந்தன. கல் வீசியவர்கள் யார் என்று தெரியவில்லை.

பேட்டி : நன்றி: விகடன்


தலைவரிடம் கூட்டணி பற்றி கேட்டுப்பாருங்கள் - கூட்டணி பற்றி கட்சி பொதுக் குழுவில்தான் முடிவு செய்வோம் என்று சொல்கிறார். அடுத்த தலைவரையும் அதுமாதிரிதானே நியமிக்க வேண்டும் இதில் குஸ்பூ கேட்டதில் என்ன தவறு? குஷ்பு வீடு மதுரையில் இருந்தால் இது நடந்திருக்குமா ? தெரியாது !

Read More...

Sunday, February 03, 2013

விஸ்வரூபம் பற்றி சோ - பேட்டி
நன்றி: DC

கடைசி கேள்விக்கு இன்னும் பதில் சொல்லவில்லை !

Read More...

Tuesday, December 04, 2012

கல கல பேட்டி எஸ்.வி.சேகர்


நன்றி: தினமலர்

Read More...

Tuesday, November 13, 2012

ஞாநி பதில்கள்


இட்லிவடை 10ஆம் ஆண்டு ஸ்பெஷலாக பத்திரிகையாளர் திரு ஞாநி அவர்களின் பேட்டியை போட வேண்டும் என்று ஆசைப்பட்டு அவரை அணுகிய போது அவர் உடனே ஒத்துக்கொண்டார். பல கேள்விகள் வந்தது அதிலிருந்து சுமார் 50 கேள்விகளை தேர்ந்தெடுத்து அவரை யார் தைரியமாக பேட்டி எடுப்பார்கள் என்று யோசிக்கும் போது நமது நினைவில் பத்ரி மட்டுமே வந்தார். பத்ரியை கேட்ட போது உடனே ஒத்துக்கொண்டார். இருவருக்கும் இட்லிவடை சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

சுமார் 2.5 மணிநேரத்துக்கு மேல் ஒரு விதமான உரையாடலாக இந்த பேட்டி அமைந்தது மகிழ்ச்சி.

பேட்டியில் உள்ள Keywords : இட ஒதுக்கீடு, ராகுல் காந்தி, மோடி, படித்த புத்தகம், கழிவறை புனிதமான இடம், கடவுள், மூடநம்பிக்கை, ஜெயமோகன், துக்ளக், பாரதி, பிள்ளையார் பூஜை, பார்ப்பனீயம், காந்தி, பெரியார், சோ, தலித், இலங்கை தமிழர், ராஜிவ் படுகொலை, கூடங்குளம், கலைஞர் செய்த நல்ல காரியங்கள்...

பேட்டியில் கேள்விகேட்டவர் பெயர்கள் சில இடங்களில் விடுபட்டு இருந்தால் அதற்கு எந்த உள்நோக்கமும் கிடையாது. கேள்விகளை தொகுக்கும் போது விடுபட்டிருக்கலாம்...

இரண்டு ஆடியோவையும் இங்கே போட்டுள்ளேன். கேட்டுவிட்டு உங்கள் கருத்தை சொல்லவும்.
கேள்விகள் - இட்லிவடை வாசகர்கள், பேட்டி & படம் : பத்ரி

பேட்டி ஒலி வடிவம் கீழே:


டவுன்லோட் வடிவம் இங்கே
http://archive.org/download/IdlyvadaiInterviewBadriSeshadriInterviewingJournalistGnani/Gnani_Idlyvadai_Interview_Part_01.mp3
http://archive.org/download/IdlyvadaiInterviewBadriSeshadriInterviewingJournalistGnani/Gnani_Idlyvadai_Interview_Part_02.mp3


Read More...

Thursday, October 11, 2012

இட்லிவடை வாசகர்களுக்கு ஞாநி பதில் அளிக்கிறார்!

ஞாநி அவர்களுக்கு அறிமுகம் தேவை இல்லை. இட்லிவடை 9 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு அவரை பேட்டி எடுக்கலாம் என்று முடிவு செய்து அவரிடம் கேட்ட போது, உடனே ஒத்துக்கொண்டார். அவருக்கு இட்லிவடை சார்பில் நன்றி.
வாசகர்கள் கேள்விகளை வழக்கம் போல பின்னூட்டத்திலோ அல்லது idlyvadai2007@gmail.com முகவரிக்கு அனுப்பலாம்.

கேள்விகள் வந்து சேர கடைசி தேதி இந்த மாதம் 21. 

நன்றி
இட்லிவடை


Read More...

Tuesday, September 11, 2012

சோ பேட்டி(கள்)

புதிய தலைமுறை, விகடனுக்கு சோ அளித்த பேட்டிகள்

புதிய தலைமுறை


soo02_chunk_1_(new) by w1tamilan

விகடன் பேட்டி


Read More...

Monday, August 20, 2012

சொல்வதற்கு அஞ்சேல் -(அருள்மிகு) சுப்பிரமணிய சுவாமிKeywords: பிராமின், விடுதலை புலி, கருணா+நிதி, தமிழ், சமஸ்கிருதம், ஹிந்து கலாச்சாரம்.... மேலும் பல

Read More...

Tuesday, August 14, 2012

@kalaignar89

இந்த வாரம் விகடனில் வந்த கனிமொழி பேட்டியில்

”ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் தி.மு.க-தான் அதிகமாகக் காயப்படுகிறது… கவனிக்கிறீர்களா?”

”கவனிக்கிறோம். ஆனா, நீங்களோ நானோ பட்டப்படிப்பை முடிச்சிருக் கோம்னா, அதுக்கான உழைப்பைக் கொட்டினது திராவிட இயக்கங்கள்தான். ஒரு கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்துக்கிட்டு உங்களோட எண்ணங்களை இறக்கிவைக்க முடியுதுன்னா… அதுக்கான வாய்ப்பை உருவாக்கிக்கொடுத்தது திராவிட இயக்கங்களின் வியர்வைதான். ஆரம்பத்தில் இணையத்தை நாங்க அசட்டையா அணு கியது உண்மைதான். ஆனா, இப்போ இயக்கத்துக்கு எதிரான விமர்சனங்களுக்குப் பதில் கொடுக்கிறோம். ஆக்கபூர்வமா விவாதிக்கிறோம். எதிர்காலத்துல சமூக வலைதளங்கள் தி.மு.க-வின் கொள்கைப் பரப்புத் தளங்களா இருக்கும்.”

@kalaignar89

Read More...

Wednesday, August 08, 2012

சூடா ஒரு டாக் - சாரு நிவேதிதா பேட்டி

Keywords: Jeyamohan, S.Ramakrishnan, Facebook, Rajini, Sex Scam, Nithi etc.,

Read More...

Thursday, August 02, 2012

"நான் யாருக்கும் தாழ்ந்தவன் இல்லை!" - அசோகமித்திரன் பேட்டி


சின்ன அறை. சுவரில் பெருமாள், சமயபுரம் மாரியம்மன், ராமர், சீதை என்று ஏகப்பட்ட கடவுளர் படங்கள். சின்ன கட்டில். அதையட்டி மேஜை. சுற்றிலும் புத்தகங்கள். தமிழின் மகத்தான படைப்பாளி அசோகமித்திரனின் உலகம் இப்போது இவ்வளவுதான். ''சமீபத்தில் ஓர் இலக்கிய விழாவுக்குச் சென்றிருந்தேன். பேசி முடிக்கும்போது, 'இத்துடன் விடைபெறுகிறேன்...’ என்று சொன்னேன். விழாவில் இருந்த ஒரு கவிஞர் உடனே பதறிப்போய், 'நீங்கள் நூறாண்டு வாழ வேண்டும்’ என்று சொன்னார். இப்போது எனக்கு 81 வயது ஆகிறது. நூறாண்டு வாழ்வதைவிடக் கொடுமையான தண்டனை இருக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை...'' - கண்களை இடுக்கிச் சிரிக்கிறார்.''இந்த வயதில் இருந்து பார்க்கும்போது, வாழ்க்கை எப்படி இருக்கிறது?''

''ரொம்பச் சோர்வாக இருக்கிறது. தள்ளாமையும் வியாதிகளும் வலியும் கொல்கின்றன. உலகம் விடை கொடுத்துவிடாதா என்று காத்திருக்கிறேன்.''

''வாழ்க்கை ஒரு சாமானியனுக்கும் படைப்பாளிக்கும் ஒரே மாதிரியானதாகத்தான் இருக்கிறதா?''

''ஷேக்ஸ்பியரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தால், கவித்துவமாக ஏதாவது சொல்லி இருப்பார். படைப்பாளி என்ன பெரிய படைப்பாளி? அவரவர் வாழ்க்கை அவரவருக்கு.''

''உங்கள் 60 ஆண்டு எழுத்து வாழ்க்கை திருப்தியைத் தருகிறதா?''

''இதுவரைக்கும் 9 நாவல்கள், முந்நூற்றிச் சொச்ச சிறுகதைகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கிறேன். என்னுடைய எழுத்து மேல் திருப்தி இருக்கிறது. வாழ்க்கை மேல் புகார்கள் கிடையாது. ஆனால், என் எழுத்தைப் படித்துவிட்டு எழுத்தாளனாகப்போகிறேன் என்று சொல்லிக்கொண்டு யாராவது என்னைப் பார்க்க வந்தால் மட்டும் எனக்குப் பொல்லாத கோபம் வரும். 'போடா மடையா... உருப்படியாக ஏதாவது வேலையைத் தேடிக்கொள்’ என்று கத்தத் தோன்றும். நான் எப்படியோ வாழ்ந்துவிட்டேன்... எதிர்பார்ப்புகள் இல்லாத வாழ்க்கை. மற்றவர்களுக்கு இந்தக் கஷ்டம் வேண்டாம்.''

''தமிழ், ஆங்கிலம்... இரண்டிலுமே சிறப்பாக எழுதக் கூடியவர் நீங்கள். ஆனால், தமிழைச் சுற்றியே உங்கள் படைப்பு உலகத்தை அமைத்துக்கொண்டீர்கள். ஏன்?''

''1952-ல் நான் எழுத வந்தேன். அப்போது, தமிழில்தான் செய்ய வேண்டியது நிறைய இருப்பதாகத் தோன்றியது. அதற்கு நிறையப் பேரின் தேவையும் இருந்தது. தமிழைத் தேர்ந்தெடுத்தேன்.''

''புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, கு.பா.ரா. எனப் பலர் அந்தக் காலகட்டத்திலேயே புதுப் புது முயற்சிகளில் ஈடுபட்டு இருந்தார்கள்... இல்லையா?''

''ஆமாம்; ஆனால் அது தொடக்கம்தான். செல்ல வேண்டிய தூரம் அதிகம் இருந்தது.''

''எழுத்தையே நம்பி வாழ்ந்தவர் நீங்கள்... பிரபல பத்திரிகைகளில் தொடர்கதைகள் எழுதுவது, சினிமாவுக்கு எழுதுவதுபோன்ற பிரயாசைகள் உங்களிடம் இல்லை. எப்படி வாழ்க்கையை நடத்தினீர்கள்?''

''சிரமம்தான். எஸ்.எஸ்.வாசனும் என்னுடைய தகப்பனாரும் நெருங்கிய சிநேகிதர்கள். அந்த நட்பில்தான் என்னை ஜெமினி ஸ்டுடியோவுக்கு வேலைக்கு வரச் சொன்னார் வாசன். ஒரு கட்டத்தில் அந்த வேலை எனக்குப் பிடிக்காமல் போனது. வெளியே வந்தால் வேறு வேலை கிடைக்கவில்லை. முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களை அப்போதெல்லாம் அரைக் கிழம் என்று சொல்லி வேலைக்கு எடுக்க மாட்டார்கள். பத்திரிகைகளில் கதை எழுதினேன். சன்மானம் குறைவு. கஷ்டப்பட்டேன். ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதுவதில் ஓரளவுக்கு வருமானம் வந்தது. ஆனால், என் மூன்று மகன்களைப் படிக்கவைப்பதில் பெரிய சிரமம் இருக்கவில்லை. அரசுப் பள்ளிக்கூடங்கள், இனாம் பள்ளிக்கூடங்களில்தான் மூவரும் படித்தார்கள். அதே சமயம், அன்றைக்கு அங்கு நல்ல கல்வி கிடைத்தது. இன்று அதை எல்லாம் கற்பனையே செய்ய முடியாது. என்னுடைய 'தண்ணீர்’ நாவலைப் படமாக்க வேண்டும் என்று இயக்குநர் வஸந்த் ரொம்பவும் ஆசைப்பட்டார். என் எழுத்து சினிமாவுக்குச் சரியாக வராது என்று சொல்லிவிட்டேன்.''

''ஆங்கிலத்தில் எழுதுவது ஒரு படைப்பாளிக்குப் பெரும் பிரபலத்தைத் தருவதாக நினைக்கிறீர்களா?''

''அமிதவ் கோஷ், கிரண் தேசாய் போன்றவர்கள் ஆங்கிலத்தில் எழுதி சர்வதேச அங்கீகாரம் பெற்று இருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், அவர்கள் இங்கிலாந்திலும் அமெரிக்கா விலும் படித்தவர்கள். அதுவும் அவர்களுடைய வெற்றிக்கு ஒரு காரணம்.''

''இதிகாசங்களும் புராணங்களும் நிறைந்த இந்தியாவில், தத்துவ விசாரணைகளைக் களமாகக்கொண்ட ராபர்டோ கலாஸோவின் 'க’ போன்றோ, ஒரு பெரிய பரப்பில் இயங்கும் மார்க்வெஸின் 'ஒன் ஹன்ட்ரட் இயர்ஸ் ஆஃப் சாலிட்யூட்’ போன்றபடைப்பு கள் குறிப்பிடத்தக்க அளவில் வரவில்லையே... ஏன்?''

''முதலில், அப்படிப்பட்ட முயற்சிகளில் இறங்க ஒரு படைப்பாளிக்குப் பெரிய துணிச்சல் வேண்டும். இரண்டாவது, சமூகத்தில் அதற்கான தேவை இருக்க வேண்டும். இதிகா சங்கள், புராணங்கள் எல்லாம் இருப்பது வாஸ்தவம்தான். மக்களின் அன்றாட வாழ்வில் அவற்றுக்கு என்ன மதிப்பு இருக்கிறது என்பதும் முக்கியம் இல்லையா? ஆனால், பெரிய தளத்தில் இயங்கும் படைப்புகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. மார்க்வெஸினுடைய 'ஒன் ஹண்ட்ரட் இயர்ஸ் ஆஃப் சாலிட் யூட்’டை விடவும் அவருடைய 'தி ஜெனரல் இன் ஹிஸ் லாபரின்த்’ அற்புதமான படைப்பு.''

''பொதுவாகவே, தமிழ்ப் படைப்பாளிகள் சமகால வரலாற்றைப் பற்றி அலட்டிக்கொள்வது இல்லை... நீங்கள் உட்பட. ஏன்?''

''சம கால வரலாற்றைப் புரிந்துகொள்ள முடியவில்லை. சம காலத்தின்மீது - இன்றைக்கு நடந்துகொண்டு இருக்கும் ஒரு விஷயம் சரியானதா, தவறானதா என்று முடிவெடுக்கக் குறைந்தது 20 வருஷங்கள் தேவைப்படுகின்றன. அதற்குள் அடுத்த சம காலம் வந்துவிடுகிறது. இன்றைய அரசியல் செயல்பாடுகளைப் பற்றி இன்றைக்கே ஒரு முடிவுக்கு வந்து எழுதிவிடுவது பெரும்பாலும் தவறாகவே முடிகிறது.''

''தமிழில், சிறுகதைக்குக் கிடைத்த வெற்றிகள் நாவலுக்கும் கவிதைக்கும் கிடைக்காமல் போனது ஏன்?''

''ஒரு மேற்கோள் உண்டு... 'ஒரு வாசகனும் இல்லாத கவிஞன், கவிஞனே இல்லை’ என்று. நாவல்கள், கவிதைகளைவிடவும் இங்கு சிறுகதைகளே அதிகமாக பத்திரிகைகளில் வெளியிடப்படுகின்றன; அதிகமான வாசகர் களைச் சிறுகதைகளே சென்று அடைகின்றன. எதை விரும்பிப் படிக்கிறார்களோ, அதை எழுதுகிறோம். உங்கள் கவனம் எங்கே இருக்கிறதோ, அங்கேதான் சாதிப்பீர்கள்.''

''இப்போதும் முன்புபோல வாசிக்கிறீர்களா?''

''எந்தச் சூழலிலும் வாசிப்பை விட முடியாது. ஒரு நாளைக்கு அரை மணி நேரம் எழுதுவேன். எப்படியும் வாரத்துக்கு இரண்டு புத்தகங்களாவது வாசித்துவிடுவேன்.''

''ஒரு வாசகராக உங்களை மிகவும் பாதித்த படைப்புகளைச் சொல்லுங்கள்?''

''உ.வே.சா-வின் 'என் சரித்திரம்’, நாமக்கல் கவிஞரின் 'என் கதை’, கல்கியின் 'தியாக பூமி’, புதுமைப்பித்தனின் 'சித்தி’, சரத்சந்தர் சாட்டர்ஜியின் 'சந்திரநாத்’, அலெக்சாண்டர் டூமாஸின் 'தி கவுன்ட் ஆஃப் மான்டிகிறிஸ்டோ’, சார்லஸ் டிக்கன்ஸின் 'எ டேல் ஆஃப் டு சிட்டிஸ்’.

''கடந்த ஒரு நூற்றாண்டில் இந்திய அளவில் மகத்தான இலக்கியச் சாதனையாக எதைச் சொல் வீர்கள்?''

''தாகூரின் 'கோரா’.''

''ஒரு விமர்சகராக நீங்கள் கறாராகச் செயல்பட்டது இல்லை என்ற குற்றச்சாட்டு உண்டு...''

''ஏன் கறாராகச் செயல்பட வேண்டும்? விமர்சகனாக அடையாளப்படுத்திக்கொள்ளக் கூட நான் பிரியப்பட்டது இல்லை.''

''உங்கள் அளவில் நல்ல இலக்கியத்துக்கான வரையறை என்ன?''

''மனிதன் மீது அக்கறை காட்டுகிற எல்லாமே இலக்கியம்தான். மனிதர்களைப் பிரிக்கிற எதுவுமே இலக்கியம் இல்லை.''

''தமிழில் இப்போது எழுதுபவர்களில் நம்பிக்கை அளிப்பவர்களாக யாரைக் கருதுகிறீர்கள்?''

''ஜெயமோகன். அவருக்கு இருக்கும் அனுபவங்களும் வாசிப்பும் இன்னும் அவரைப் பெரிய உயரங்களுக்குக்கொண்டு செல்லும் என்று நினைக்கிறேன். ஆனால், படைப்புகளைத் தாண்டி அவர் எழுது வதும் பேசுவதும்... ம்ஹூம்...''

''தமிழ் இலக்கியத்தில் இவ்வளவு சின்ன கூட்டத்தில் இவ்வளவு அரசியல் ஏன்?''


''எங்கே அரசியல் இல்லை? எழுத்துத் துறையில் மட்டும் கூடாதா என்ன? சந்தோஷப்படுங்கள். வேறு எங்கும்தான் சுதந்திரம் இல்லை... எழுத்துலகத்திலாவது இருக்கிறதே என்று!''

''உங்களை நீங்கள் சுயவிமர்சனம் செய்துகொள்வது உண்டா? உங்கள் படைப்புகளை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?''

''ஒவ்வொருவருக்கும் அது அவசியம் இல்லையா? எல்லாக் காலங்களிலுமே என்னை சுயவிமர்சனம் செய்துவந்திருக் கிறேன். உலகத் தரத்தில் என் எழுத்துகளை ஒப்பிடச் சொன்னால், நான் யாருக்கும் தாழ்ந்தவன் இல்லை என்றுசொல்வேன்.''

''எழுத்தையே வேலையாக்கிக்கொண்டது வரை பல விஷயங்களில் ஜெயகாந்தனுடன் ஒப்பிடத் தக்கவர் நீங்கள். ஆனால், அவருக்குக் கிடைத்த வசதியோ, அங்கீகாரங்களோ உங்களுக்குக் கிடைக்க வில்லை. இதை எப்படி உணர்கிறீர்கள்?''

''இங்கு உள்ள அரசியல் சூழ்நிலைகள் அப்படி. இங்கு எழுத்தாளன் மட்டும் பார்க்கப்படுவது இல்லையே? அவனுடைய அப்பா யார் என்பதில் தொடங்கி, அவனை அங்கீகரித்தால் நமக்கு என்ன கிடைக்கும் என்ற கணக்கு வரை எல்லாம் முக்கியம். சொல்லப்போனால், எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா என்று எல்லோரையுமே வசை மாறிப் பொழிந்தவர் ஜெயகாந்தன். ஆனால், அவருடைய வசை மழைகூட இவர்களுக்குப் பூ மழையானது!''

''நாட்டுநடப்புகள், அரசியல் போக்குகள்பற்றி நீங்கள் அதிகம் விமர்சித்தது இல்லை...''


''வாழ்க்கையோடு முட்டி மோதி நின்றவன் அல்ல நான். வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்தவன். அரசியலையும் அப்படித்தான் பார்த்தேன்.''

''இந்திய நடுத்தர வர்க்கத்தைப் பற்றி அதிகம் எழுதியவர் என்ற முறையில் சொல்லுங்கள்... நம்முடைய நடுத்தர வர்க்கம் கைவிட வேண்டிய விஷயங்கள் என்னென்ன?''

''இந்திய நடுத்தர வர்க்கத்தால் எதையும் கைவிட முடியாது. அவர்கள் இந்த நிலையிலேயே இருப்பதைத்தான் ஆளும் வர்க்கம் விரும்புகிறது. அதுதான் யார் யாரை எந்தெந்த நிலையில் வைக்கலாம் என்று தீர்மானிக்கவும் செய்கிறது.''

''சமூகத்தில் ஒருபுறம் அற உணர்வுகளுக்கு மதிப்பே இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது. மறுபுறம் கோயில்கள், திருவிழாக்களில் கூட்டம் குவிகிறது; சாமியார்கள் சாம்ராஜ்யங்களை உருவாக்குகிறார்கள். ஓர் இறைநம்பிக்கையாளராக இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''தமிழ்நாட்டில் எந்த ஆட்டோவிலாவது மீட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறதா? ஆனால், சபரிமலை சீஸனில் போய்ப் பாருங்கள். ஆட்டோக்காரர்களில் முக்கால்வாசிப் பேர் மாலை போட்டு இருப்பார்கள். திருப்பதியில் பெருமாள் உண்டியலில் லட்ச லட்சமாகப் போடும் முதலாளிகளில் பாதிப் பேர் தன்னுடைய தொழிலாளிகள் வயிற்றில் அடிப்பவர்கள். மக்கள் அற உணர்வையும் ஆன்மிகத்தையும் பிரித்துவிட்டார்கள்.''

''திடீரென ஒரு நாள் விஞ்ஞானிகள் கடவுள் இல்லை என்பதை அறிவியல்ரீதியாக நிரூபித்து அறிவித்தால், அதற்குப் பின் இந்த உலகம் எப்படி இருக்கும்?''

''நான் ஒரு நாள் கோமாவில் இருந்திருக்கிறேன். அந்த நாளை ஞாபகப்படுத்திப் பார்க்கும்போது, ஒன்றுமே இல்லாத சூழலில் இருந்த மாதிரிதான் உணர்கிறேன். கிட்டத்தட்ட சாவுக்குப் பிறகான நிலை அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

நாம் ஒன்றுமே இல்லை என்பதுதான் பெரிய உண்மை. என்னுடைய சாம்பலைக் கூடத் திரும்பிப் பார்க்காதீர்கள் என்றுதான் என் குடும்பத்தாருக்கே சொல்லி இருக் கிறேன். இந்த உலகத்தை ஏதோ ஒரு சக்தி, அவன் அல்லது அவள் அல்லது அது ஆள்கிறது என்று நம்புகிறோம். அதுவும் இல்லாமல் போனால்... எனக்குச் சொல்லத் தெரியவில்லை!''

பேட்டி: தமிழ்மகன், சமஸ்
படங்கள் : உசேன்
நன்றி: விகடன்
தமிழ் எழுத்தாளர்கள் படிக்க வேண்டிய பேட்டி...

Read More...

Tuesday, June 12, 2012

தலை சிறந்த இட்லிவடை பேட்டி !

த சன்டே இந்தியன் பத்திரிக்கையில் இட்லிவடை ( மற்றும் பேயோனின் ) பற்றி வந்த கட்டுரை.
கிளிக் செய்து பெரிதாக்கி படித்துக்கொள்ளுங்கள்.தேசத்தின் தலை சிறந்த செய்தி இதழில் இட்லிவடை குறித்து வந்தது மகிழ்ச்சியளிக்கிறது, தசஇ குழுவினருக்கு நன்றி. எங்களை யார் என்று காட்டிக்கொடுக்காத பா.ராகவன், பத்ரிக்கு ஸ்பெஷல் நன்றி :-)

Read More...

Monday, March 26, 2012

சோ பேட்டி - குமுதம் ரிப்போட்டர்

இந்த வார குமுதம் ரிப்போட்டரில் வந்த சோ பேட்டி - இலங்கை - சங்கரன் கோயில் - மின்சாரம் என்று எல்லாம் இருக்கிறது..நன்றி: குமுதம் ரிப்போட்டர்

Read More...