பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, February 15, 2016

முனி Returns !

அன்பு முனி,

வருஷக்கணக்காச்சு உன்னைப் பார்த்து/பேசி. நல்லா கூட்டாளிகளுடன் நலமா இருக்கிறாயா?

மக்கள் நலக் கூட்டணியை ஆதரிக்கிறேன் பத்ரி, ஞாநி என்று பலரும் கிளம்பியுள்ளார்கள். புதிய தலைமுறை டிவியில் பத்ரியை கொஞ்சம் நேரத்துக்கு முன் பார்த்தேன். சிரிப்பு தான் வந்தது, கூடவே லலிதா ஜுவல்லரி மொட்டை விளம்பரமும் ஞாபகத்துக்கு வந்தது.

விஜயகாந்த் மனைவி வீடியோ இங்கே


இந்த வீடியோ பற்றி பிரபல அரசியல் விமர்சகர் ஹரன் பிரசன்னா-ஜி என்ன சொல்லுகிறார் என்றால் ...

“ஐயா திமுக காரர்களே, ஏன் இந்த கள்ள மௌனம். ஒரு அம்மா பப்ளிக்கா உங்களையும் காங்கிரஸையும் ஊழல் கட்சிங்கன்னு சொன்ன பின்னாடியும் அவங்களை வாரி வாரி வழக்கம்போல கழுவி கழுவி ஊத்தாம கண்டுக்காம போற நியாயம்தான் என்ன? அந்தம்மா பேசி 24 மணி நேரம் ஆச்சே! இத்தனைக்கும் விஜய்காந்த்-தமிழ்லயோ கருணாநிதி-தமிழ்லயோ இல்லாம அந்தம்மா பொட்டுல அடிச்சாமாரி தெளிவாத்தானே பேசினாங்க? எதாவது சொல்லுங்க சாமிகளா. ரொம்ப போரடிக்கு.”

விஜய்காந்தை முதலமைச்சர் என்று போற்றி எந்த கட்சி வரும் ?
அன்புமணியை முன் நிறுத்தி எந்த கட்சி வரும் ?
பிஜேபி தனியாக நிற்குமா ?
காங்கிரஸ் + திமுக சேர்ந்து ஒரு கூட்டணி நிச்சயம்
அம்மாவுடன் யாரும் சேருவார்களா என்று தெரியாது.
மக்கள் நல கூட்டணியை எதிர்த்து ஒரு சுயேட்சை கூட அதிக வாக்கு வாங்கிவிடுவார்.

ஆக இப்போது நிலவரப்படி அம்மாவுக்கு தான் சாதமாக இருக்கிறது நிலவரம்!நேற்று காதலர் தினத்துக்கு கலைஞர் அறிக்கை பார்த்தீர்களா ?புதிய தலைமுறையில் தற்போது கருத்துக் கணிப்பு : ( 10 நிமிடம் முன் வந்தது ! )


எச்சரிக்கை: எழுத வருகிறதா என்று பார்க்கத்தான் இந்த "சும்மாப்" பதிவு. தேர்தல் நெருங்க நெருங்க இனி பதிவுகள் வரும். அல்லது ஜென் கதைகளாவது வரும்.

1 Comment:

kg gouthaman said...

இன்னும் மூணு மாசத்துக்காவது சுடச்சுடப் பதிவுகள் பரிமாறுங்கள். அம்மாவுடன் யாரும் கூட்டணி சேர்வார்களா என்று கேட்கக்கூடாது. அவங்க யாரையாவது சேர்த்துப்பாங்க்களா என்றுதான் கேட்கணும். போனதடவை தேர்தலில், தி மு க காங்கிரஸ் என்று கூட்டணி உருவாகும் என்ற நிலைவந்தவுடன், தே மு தி க வுக்கு நாற்பது (?) இடங்களை மனமுவந்து அளித்தார். இப்போ பி ஜே பி, த மா கா எல்லாம் அனாதைக் குழந்தைகளாய் நின்றுகொண்டு இருக்கிறார்கள். அம்மா இவர்களை எல்லாம் அழைத்து சோறு போடுவார்களா என்று தெரியவில்லை.