பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, December 27, 2015

இது தமிழ் சினிமாவின் மரபு – சந்திரன்


சென்னை வெள்ளம், கடலூர் வெள்ளம், தூத்துக்குடி வெள்ளம் எல்லாம் பின்னால் சென்று விட்டது. இப்போது இசையமைப்பாளர் அனிருத்தும், நடிகர் சிம்புவும் கூட்டாகச் சேர்ந்து இசையமைத்துப் பாடிய ‘பீப்சாங்’தான் விஸ்வரூபமெடுத்து நிற்கிறது. அனிருத் சிம்புவுக்கு எதிராகப் பெண்கள் அமைப்புகள் ஒன்று திரண்டு நிற்கின்றன. இருவருக்கும் சம்மன் கூடப் பிறப்பிக்கப் பட்டிருக்கிறது.

ஆபாசம், அதுவும் வக்ரமான ஆபாசம் என்பது சினிமாவுடன்பிறந்தது. குளிக்கிற காட்சியை யதார்த்தமாகக் காட்டுகிறேன் என்று, கதாநாயகி நடிகைகளைத் தண்ணீரில் குளிப்பாட்டுவது, கதாநாயகியின் தலைமுதல் கால்வரை வர்ணித்துப் பாடுவது என்பது சினிமாவில் இன்று நேற்று ஏற்பட்ட சமாச்சாரமல்ல. தியாகராஜ பாகவதர் காலம் தொட்டு பெண்களை மலினப் படுத்துவது என்பது சினிமாவில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சிம்புவும் அனிருத்தும் ஏதோ புதுசாகப் பெண்களை மலினப்படுத்தவில்லை. வக்கரித்துப்போன சினிமா கலாசாரத்தைத்தான் அவர்கள் தங்கள் பங்கிற்கு நிலை நாட்டியுள்ளார்கள்.

‘எடுத்துப் பார்த்த பழங்களிலே இம்மாம் சைசு பாத்தியா, கைக்கு அடக்கமா, கடிச்சுப் பார்க்க வாட்டமா’ என்று பணமா பாசமா படத்தில் கண்ணதாசன் இலந்தைப் பழத்தை வர்ணித்து எழுதினார். அவர் இலந்தைப் பழத்தைவர்ணித்தாரா, பெண்ணின் உடல் உறுப்பை வர்ணித்தாரா என்றுகண்ணதாசனுக்கும் தெரியும், தமிழ் சினிமா ரசிக மகாஜனங்களுக்கும்தெரியும்.



‘பிஃப்டி கேஜி தாஜ்மஹால் எனக்கே’ என்று கதாநாயகியின் உடல் எடையை வர்ணித்து வைரமுத்து எழுதினார். கவியரசு, கவிப்பேரரசு, எல்லா அரசுகளும் காதல், சிருங்கார ரசப் பாடல்களை எழுதுவதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்ல.

கட்டை வண்டிப் பாட்டில் ‘ஆடி ஆடி அலுத்த வண்டி’, ‘உக்கி போட்டு ஏறடி புள்ளே’ என்றெல்லாம் வாலி எழுதினார். இந்த மகா கவிஞர்கள், இசையமைப்பாளர்களின் வழியில் வந்த அனிருத்தும், சிம்புவும் பீப்சாங் எழுதாமல், மகாகவி பாரதி மாதிரி தாய்நாட்டை வாழ்த்தியா எழுதுவார்கள்?

அனிருத்தையும், சிம்புவையும் எதிர்க்கிற இதே பெண் அமைப்புகள், யுகயுகமாகத் தமிழ் சினிமாக்களில் கதாநாயகிகளை விரட்டி விரட்டிக் காதலிக்கிற காதல் காட்சிகளையும், நடனம் என்ற பேரில் பெண்களை அரைகுறை ஆடைகளில் ஆட விட்டு, நடன அசைவு என்ற பேரில் நடன நடிகைகள் ஆபாச சைகைகளைச் செய்வதையும் ரசித்துத்தானே வந்திருக்கிறார்கள்?


பெண்களை இழிவுபடுத்துவதற்கு எதிராகப் போராடுவது என்றால், வெள்ளிக்கிழமை தோறும் ரிலீஸாகிற ஒவ்வொரு தமிழ்ப் படத்தையும் எதிர்த்தல்லவா போராட்டம் நடத்த வேண்டிய திருக்கும். இத்தனை காலமாக இதையெல்லாம் இந்தப் பெண்கள் குடும்பத்தோடு தியேட்டர்களுக்குச் சென்று ரசிக்கவில்லையா? பெண்களை இழிவுபடுத்துவது என்பது தமிழ்ச் சினிமாவுலகின் வாடிக்கை. இந்த வழக்கத்தைத்தான் இந்த அனிருத்தும், சிம்புவும் தங்கள் பங்கிற்கு செய்திருக்கிறார்கள். பெண்கள் மலினப் படுத்தப்படுவதை பெண்களே ரசிக்கிற தமிழகத்தில் இந்தத் திடீர் வீறுகொள்ளல், வேடிக்கையாகவும், புரியாத புதிராகவுமிருக்கிறது.
பெண்களைப் பல கவிஞர்களே, அதுவும் பெண் கவிஞர்களே இழிவுபடுத்தி ஆபாசமாக எழுதி வருவதெல்லாம் இந்தப் பெண் எதிர்ப்பாளர்களுக்குத் தெரியுமா, இல்லை தெரிந்தும் பாராமுகமாக இருக்கிறார்களா? பல சிறுபத்திரிகைகளில் எழுதுகிற பெண் கவிஞர்கள், தங்கள் மறைவான பகுதிகளை எல்லாம் குறிப்பிட்டு சர்வ சாதாரணமாக எழுதுகிறார்கள். ‘இலக்கியம்’ என்ற போர்வையில் அவையெல்லாம் அங்கீகரிக்கப்பட்டும் வந்திருக்கின்றன. இதைப் பற்றியெல்லாம் எந்தப் பெண் அமைப்புகளும் அங்கலாய்த்துக் கொள்வதில்லை, எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை.

நான் அனிருத்தையும், சிம்புவையும் ஆதரிக்கவில்லை. ஆனால், ஆபாசம், பெண்களை அவமரியாதை செய்வது என்பது தமிழ் சினிமாவின், இந்திய சினிமாவின் மரபு. இந்த மரபை, இந்தப் பாரம்பரியத்தைத்தான் சிம்புவும், அனிருத்தும் பின்பற்றியிருக்கிறார்கள்.

நன்றி: துக்ளக்
இட்லிவடை மீண்டு வருகிறது :-)

8 Comments:

Anonymous said...

நான் ஏழு வயசுலே எளநி வித்தவ பாட்டை எப்படி துக்ளக் மிஸ் செய்தது

kothandapani said...

இது தமிழக அரசியலின் மரபு
ஊழல் அதுவும் இமாலய ஊழல் என்பது தமிழக அரசியலோடு பிறந்தது.
நான் ஜெயாவையும் ஊழலையும் ஆதரிக்கவில்லை. ஆனால், ஊழல் செய்வது என்பது தமிழ் அரசியலின் , இந்திய அரசியலின் மரபு. இந்த மரபை, இந்தப் பாரம்பரியத்தைத்தான் ஜெயாவும் அமைச்சர்களும் பின்பற்றியிருக்கிறார்கள்.
இப்படியும் எழுதும் துக்ளக் .....

Gopinathan Venkatachalapathy said...

See the link how bad the cinema industries has gone; https://www.youtube.com/watch?v=2H44_uMHJLs

Anonymous said...

See the link https://www.youtube.com/watch?v=2H44_uMHJLs

Anonymous said...

It is true that cinemas have degraded womanfolk. Whenever heroes like, they tease , bully and force heroine to love or accept them.
See "Amman Kovil Kizhakale". How Vijayakanth humilates Radha.
Its good that people have raised their voice against Simbu. We are happy about that.
Though Rapes were happening, mass protest erupted after Nirbhaya incident only.
Like wise Simbu's song had a big impact

Anonymous said...

In Youtube, there are many videos of the record dances that takes place in Tamil Nadu during festivals and temple functions. These dances happen in public in a stage and witnessed by the whole of the village. These dances are nothing less than a third grade adult movie. People have accepted this as a part of our culture, sadly.

Anonymous said...

This blog is not updated regularly ! Really bored to see the same old stuff for a long time . When so many things happen everyday, the Blogger is keeping quiet !! Idly-Vadai must be up to date to attract more viwers !!

மன்மத நாயுடு said...

ஏகப்பட்ட பாடல்கள் இருக்கு இது போல. புரட்சி தலைவர் படப் பாடல்கள் கூடத்தான்.
1. “கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமோ”
2. “ மலை வாழை தொடையிருக்க மச்சம் ஒன்று அதில் இருக்க”
பல பாடலாசிரியர்களுக்கு வாழையிலையை பார்த்தால் பெண்குறியையும், நாதஸ்வரம் ஆண் குறியையும் பார்த்தது போல:
”மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே
மன்னவனின் பசியாற மாலையிலே பறிமாற”
“ வாழை இலை நீர் தெளித்து போடடி என் கண்ணே “ என்று orgaச்m பற்றி நாயகன் பாட
“ நாதஸ்வரம் ஊதும் வரை நெஞ்சம் இன்னும் கொஞ்சம் பொறுமை அவசியம்” என்று நாயகியும் பாட
ஆல் இண்டியா ரேடியோவில் பெரும்பாலும் ஆபாச பாடல்களை ஒலிபரப்பாமல் இருந்தாலும் சில மங்கல இசையில் வடிக்கப்பட்ட ஆபாச பாடல்கள் எப்ப்படியாவது தப்பித்து ஒலிபரப்பாகிவிடும். அதுவும் ஒவ்வொரு நவராத்திரியின் போதும் எந்த முண்டமோ முதல் வரியை மட்டும் பார்த்து விட்டு இந்த பாடலை தவறாமல் ஒலி பரப்பிவிடும்.
”கலைமகள் அலைமகள் மலைமகள் மூவரும்
உலவிடும் ராத்திரி...நவராத்திரி....
எந்தன் தலைவனை அழகிய இளைஞனை முதல் முதல்
தரிசித்த ராத்திரி நவராத்திரி...ஷுபராத்திரி”

பாடலின் முதல் வரி சாமி பாட்டு போல இருந்தாலும் பாடல் முழுக்க ஆபாசம்தான். இது ஒலி பரப்பாகும் போதெல்லாம் என் அப்பா ஓடி வந்து ரேடியோவை அணைத்து விடுவார்.
நல்ல கர்னாடக ராகத்தில் அமைந்த பாடலில் ஆபாசத்தை புகுத்தினால் ஒருத்தரும் அறியமாட்டார்கள் என்பது சினிமாவின் முதல் விதி. கலைக்கோவில் படத்தில் நல்ல ராகத்தில் ஒரு ஆபாசப்பாடல் அமத்தி பாலமுரளி கிருஷ்ணா பாடியதால் அதில் இருந்த ஆபாசத்தை யாரும் அறியவில்லை.தங்க ரதம் வந்தது வீதியிலே பாடலின் சில ஆபாச வரிகள்.
பெண் : செவ்விள நீரின் கண் திறந்து , செம்மாதுளையின் மணி வாய் பிளந்து , முளை விடும் தென்னல் கோலமிட்டு , மூவர் உலா வந்த காலங்கள் போலே ( தங்க ரதம் ----)
(அட கண்றாவியே testicles ஐ கூட விட்டு வைக்கலியே)
ஆண் : தங்க ரதம் வந்தது வீதியிலே ---------

ஆண் : மாங்கனி கன்னத்தில் தேனூர , சிறு மை விழி கிண்ணத்தில் மீனாட , தேன் தரும் வாழைகள் போராட , தேவியின் பொன் மேனி தள்ளாட - ஆட (தொடை - வாழை)

இன்னும் சில
“ ஆண்:மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி கண்ணே
பெண்: மன்னவனின் பசியார, மாலையிலே பரிமாற”

”அக்னி நட்சத்திரம் “ படப்பாடல் - நம்ம வாலி மகான் பெண்குறியை ஆலிலையாக உருவகம் செய்து
“ஆலிலை சிவப்பாக அங்கமும் நெருப்பாக
நூலிடை கொதிப்பேறும் நிலை என்னவோ

ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்
காதலில் அரங்கேறும் கதை அல்லவோ

மாதுளம் கனியாட மலராட கொடியாட
மாதுடம் உறவாடும் கலை என்னவோ

வாலிபம் தடுமாற ஒருபோதை தலைக்கேற
வார்த்தையில் விளங்காத சுவையல்லவோ
மேலும் மேலும் மோகம் கூடும்
தேகம் யாவும் கீதம் பாடும்
ஆஆ...ஆஆ...ஆ..

இவர்கள் எல்லாம் மறைமுகமாக இலக்கிய உவமை போர்வையில் பாடல் புனைந்திருப்பதால் ப்ரச்சனை ஏற்படவில்லை. ஆனால் சிம்பு இந்த உவமையெல்ல்லம் இல்லாமல் “பெண்குறி” என்று பலமுறை பாடி இலைமறை காய்மறையாக பீப் செய்து அந்த வார்த்தையை தெள்ள தெளிவாக புரியும்படி exhibit செய்திருக்கிறார்கள். மீத பாடல் வரிகளில் ஒன்றும் இல்லை.

இ.வ அனுமதித்தால் இது போன்ற பாடல்களை தொகுத்து ஒரு மெகா தொடர் போடலாம் என்றிருக்கிறேன். netizen களும் என்ன கண்றாவிடா இது, மொதல்ல தடை பண்ணுய்யா என்று பின்னோட்டத்திலும், Twitter இலும் போட்டு என்னை சாத்திவிட்டு அடுத்த பதிப்பு எப்ப வரும் என்று வழி மேல் விழி sorry ஜொள் ஒழுக காத்திருக்கலாம்.

- மன்மத நாயுடு