பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, June 30, 2015

மெட்ரோ ரயில் - காரணம் யாரு?

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்குச் சொந்தம் கொண்டாடி வெளிப்படையாகவே முக்கிய கட்சியினர் போட்டிப் போட்டுக்கொண்டு அறிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் அவர்கள் மட்டும்தான் காரணமா என்று கோதாவில் சிலர் இறங்கியுள்ளனர். ஊடக வெளிச்சமின்றிச் சொந்தம் கொண்டாடிவரும் இவர்களைப் பற்றி நமது சிறப்பு லொல்லு படை சார்பாகச் சேகரித்த செய்திகள் இதோ:


மெட்ரோ ரயில் திட்டத்தைத் தாமதப்படுத்தினால் சிறைநிரப்பும் போராட்டம் நடக்கும் என்று எங்கள் கட்சி அறிக்கை எழுதும்போது காபி போட்டுக் கொடுத்ததால் ரயில் திட்டத்தில் தனக்கும் பங்கு இருப்பதாகப் பக்கத்து வீட்டாரிடம் கூறினார் மலர்விழி.


வருமானம் குறைவதால் இழப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி மெட்ரோ ரயில் மறியலில் ஈடுபடமுயன்றோம் ஆனால் தண்டவாளம் அந்தரத்தில் இருந்ததால் மறியலில் ஈடுபடாமல் டிக்கெட்டை வாங்கி மறுவிநியோகம் செய்து நாங்கள்தான் மெட்ரோ ரயில் இயக்க உதவியுள்ளோம் என்று பேருந்து டிக்கெட் வழங்குநர் திரு. மணி கூறினார்


மெட்ரோ ரயில் பணிகளில் ஈடுபட்ட வட இந்தியர்களைத் தமிழ் கற்றுத்தந்து டாஸ்மாக் கடைகளைக் கண்டுபிடிக்க உதவினேன் என்று குறிப்பிட்டதுடன் மெட்ரோ என்ற இந்திப் பெயரை நீக்கிவிட்டு தமிழில் "பெரிய ரயில்" என்று பெயர்வைக்க வேண்டும் என்று வோர்கிங் பீப்பில் பார்டி தலைவர் முருகதாஸ் கேட்டுள்ளார்.


ரயில் செல்வதற்கு வசதியாகப் பாதையில் இருந்த செம்மரங்களை எனது சொந்தச் செலவில் வெட்டி உதவியுள்ளேன் ஆனால் கடைசி நேரத்தில் சென்னைக்குள் மட்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு ஏமாற்றமடைந்தேன். இருப்பினும் மெட்ரோ ரயில் திட்டத்திற்குப் பெரியளவில் எனக்கே பங்குண்டு என்று டி.எஸ்.பி. முத்துவேலு கூறியுள்ளார்.


மெட்ரோ ரயில் பணிகளுக்கு உதவுமாறு ஜப்பான் பிரதமரைச் சந்திக்கும் போது நான்தான் கூறினேன். அதனால் மகிழ்ச்சியடைகிறேன் என்று வெளிநாட்டில் வாழும் லலித் ரூடி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சில கட்சியினர் இதுகுறித்து விளக்கம் அளிக்க ஜப்பான் பிரதமருக்கு தந்தி அனுப்பியுள்ளனர் என்பது வேறுகதை.


மெட்ரோ ரயில் தொடர்பாக 12முறை டெல்லி சென்று ஜனாதிபதியிடம் மனு கொடுத்து வந்ததாகக் கனவுகண்டுள்ளேன் எனவே நானும் இத்திட்டத்திற்குக் காரணமானவன் என்று முறுக்குக்கடை முருகன் பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்.


ரயில் நிலையங்களுக்கு வேண்டிய இடங்களை மக்களிடமிருந்து வாங்கித் தந்ததால் நான் தான் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு முக்கிய காரணமாவேன். ஆனால் நில விற்பனையில் கமிஷன் அடித்ததாக வதந்தியைக் கிளப்புவது அரசியல் காற்புணர்ச்சி என்று அமைச்சரின் தம்பி ஓ.மன்னன் கூறியுள்ளார்.


இத்திட்டத்திற்காக பிரிடிஷ் காலத்திலிருந்து குரல் கொடுத்துவரும் கட்சி நாங்கள்தான் என்றும் பலமுறை சட்டசபையில் கேள்வி கேட்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்துள்ளோம் மேலும் இத்திட்டத்தால் மெட்ரோ குடிநீர் அனைவருக்கும் கிடைக்க நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம் என்று தமிழ் மாநிலக் கட்சி ஒன்றின் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கூட்டாக அவசரத்தில் அறிக்கை ஒன்றை மாற்றி வாசித்தனர்.


மெட்ரோ ரயில் தண்டவாளத்தைச் சொந்தமாகப் படத்தில் நடித்து அதில் வரும் வருமானத்தில் நாங்களே கட்டித்தருகிறோம் என்றோம். ஆனால் மெட்ரோ அதிகாரிகள் பதிலளிக்கவில்லை அதனால் இத்திட்டத்தில் எங்களுக்கும் பங்குண்டு என்கிறார் நாடக நடிகர் ஷிவால்


இந்தத் திட்டத்திற்குக் காரணம் நீங்களா என்று தயது செய்து என்னை கேட்காதீர்கள். ருஷ்ய எழுத்தாளர் சோகிபுலாவ் சென்னது போல ஒரு எழுத்தாளனின் எழுத்தைத் தொடர்ந்து படித்து வந்தாலே இத்தகைய கேள்வி வராது. மெட்ரோ ரயில் பற்றி அறிந்து கொள்ள எனது புத்தகங்களை வாங்கிப் படியுங்கள் என்று பதிவு எழுதியுள்ளார் அரசியல் விமர்சகர் ஆறு


இது சம்மந்தமான வழக்கொன்றில் முறையான தீர்ப்பை வழங்கிய நீதிபதிக்கு டீ தண்ணீ கொண்டுவந்து கொடுத்தது நான் தான். அந்தத் தீர்ப்பு இல்லாமல் மெட்ரோ ரயில் இயங்கியிருக்காது எனவே நான்தான் காரணம் என்றார் டீ மாஸ்டர் சாமிகுமார்.


அனைவரிடமும் கருத்து கேட்டுவிட்டு வரும் போது ஒரு உண்மை தெரிந்தது, அங்கு வேலை செய்தவர்களில் அநேகமானோர் காலையில் இட்லி அல்லது வடையை உண்டுவிட்டுதான் வேலை செய்துள்ளனர் எனவே மெட்ரோ ரயில் திட்டத்தின் மூலகாரணம் இட்லிவடை என்று வாசகர்கள் சார்பாக இதன் மூலம் நாமும் ஒரு அறிக்கையைத் தட்டி விடுவோம்.

எழுதியவர்:நீச்சல்காரன்

4 Comments:

kg gouthaman said...

ஆலந்தூர் டு கோயம்பேடு நாற்பது ரூபாய் டிக்கெட்! அடேங்கப்பா!
மெட்ரோவுக்குப் பாடுபட்டதாக சொல்லிக் கொள்பவர்கள் இதைக் குறைக்கவேண்டும்
என்று போராடுங்கப்பா!

kothandapani said...

சூப்பர் கற்பனை
தற்போதைய trend கட்டண குறைப்பு போராட்டம்தான். வழக்கம்போல வேலையில்லா காமரேடுகள் தொடங்கி விட்டார்கள்.அடுத்து வைகோ சீமான் வேல்முருகன் திருமா ஐயா குஸ்பூ தளபதி என்று வரிசை கட்டி போராட்டம் தொடரும். ஈழதமிழரும் ஆந்திரா தமிழரும் கை கொடுக்கதபோடு இந்த மெட்ரோ ரைலவுது கொஞ்ச நாளுக்கு engage பண்ணுதான்னு பாப்போம்

Anonymous said...

Romba dated style joke.. :(
More in the lines of Satya of Thuglak.

Anonymous said...

Romba Kodumada saami. IV is bankrupt of ideas. What to do?