பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, April 24, 2015

வெறுப்புக் குற்றம்: பூணூல் அறுத்தலைத் தொடர்ந்து - பத்ரி


வெறுப்புக் குற்றம்: பூணூல் அறுத்தலைத் தொடர்ந்து

விக்கிபீடியா 'Hate Crime' என்பதை இவ்வாறு வரையறுக்கிறது:
In both crime and law, hate crime is a usually violent, prejudice motivated crime that occurs when a perpetrator targets a victim because of his or her perceived membership in a certain social group. Examples of such groups include but are not limited to: ethnicity, gender identity, language, nationality, physical appearance, religion, or sexual orientation.
எந்தவித நேரடி முன்விரோதமும் இல்லாத நிலையில், சம்பந்தமே இல்லாத ஒருவர்மீது இனம், மொழி, பால், தேசம், பாலுறவு விருப்பம், தோற்றம் ஆகியவை காரணமாக வெறுப்பினால் உந்தப்பட்டுத் தாக்குதல் நடத்துவதுதான் ‘வெறுப்புக் குற்றம்’ எனப்படுகிறது.

பொதுவாக இம்மாதிரியான குற்றங்கள் நடக்கும்போது அரசியல் கட்சிகளும் மனித உரிமை அமைப்புகளும் அறிவுஜீவிகளும் குறைந்தது வாய் வார்த்தையாலாவது கண்டிப்பார்கள். தமிழகத்தின் என்ன நடந்தது? பாரதிய ஜனதா கட்சி கடுமையாகக் கண்டித்ததுடன் நேராகச் சென்று தாக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளித்தார்கள். காங்கிரஸ் கட்சியின் ஒரு தலைவர் நேரில் சென்று பார்த்ததுடன் மாநிலத் தலைவரின் கண்டன அறிக்கையை வெளியிட்டார்.

தினம் ஒரு அறிக்கை விடும், ராமானுஜர் சீரியல் எழுதும் திமுக தலைவர் கருணாநிதியோ, அறிக்கைத் திலகம் பாமக ராமதாஸோ வாயைத் திறக்கவில்லை. இடதுசாரிக் கட்சிகள், ம்ஹூம், ஒரு வார்த்தை இல்லை. ஆளும் அஇஅதிமுகவிடமிருந்து ஒரு சத்தம் இல்லை. அதிகாரபூர்வ எதிர்க்கட்சி தேமுதிகவிடமிருந்து ஒரு முனகல் இல்லை. நடைப்பயண நாயகன் மதிமுக வைகோ, புதுப்புயல் தமாக வாசன், தலித்துகளின் ஒப்பற்ற தலைவர் திருமாவளவன் ஆகியோரிடமிருந்து ஒரு குரல் இல்லை. இந்தக் கட்சிகளின் இரண்டாம், மூன்றாம் கட்டத் தலைவர்கள்கூட வாய் திறக்கவில்லை.திராவிடர் கழகத்தின் வீரமணி, தங்கள் அமைப்புக்கும் இதற்கும் சம்பந்தமில்லை, தாங்கள் இதுபோன்ற தாக்குதல்களை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம் என்று சொல்லவில்லை.

பத்திரிகையாளர் ஞாநி சொல்கிறார்: “இதுபோன்ற செயல்களை பெரியாருடன் தொடர்புபடுத்தவே கூடாது. அவர் அமைப்புரீதியான மாற்றங்களை வன்முறையற்ற வழியில் செயல்படுத்தவே விரும்பினார். இந்த நபர்கள் தங்களைப் பெரியாரியர்கள் என்று சொல்லிக்கொள்ளவே கூடாது. உரிமைகளை மீறும் இந்தச் செயல்கள் பகுத்தறிவின் வரையறைக்குள் வரமாட்டா.”

இம்மாதிரி பெரியாரியர்கள் பொறுப்பைத் தட்டிக்கழிக்கவே முடியாது. இம்மாதிரியான தாக்குதல்களில் தங்கள் பங்கு என்ன என்பதை பெரியாரியர்கள் விளக்கியே ஆகவேண்டும். இத்தனை ஆண்டுகளாகத் தாங்கள் பரப்பி வந்திருக்கும் வெறுப்பு விதைதானே இன்று விருட்சமாக வளர்ந்திருக்கிறது? ஸ்வராஜ்யா இதழில் நான் எழுதியுள்ள கட்டுரையில் 2006-ல் நடந்த சில செயல்களையும் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

சரி, மனித உரிமை அமைப்புகள் என்று சில உள்ளனவே, அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தேடிப் பார்த்தேன். அப்படி ஒன்றும் கருத்து சொல்லக்கூடிய செயலாக இது அவர்களுக்குத் தெரியவில்லை போல.அ. மார்க்ஸ், கோ. சுகுமாரன் போன்றவர்கள் பொதுவான மனித உரிமைகளுக்காக மிகவும் போராடுபவர்கள். அவர்களுக்கு இதுகுறித்துச் சொல்ல ஏதுமில்லை.

தனிப்பட்ட முறையில் நீ கண்டித்தாயா, நீ கண்டித்தாயா என்று கேட்பது எனக்கு ஏற்புடையது அல்ல. ஆனால் இதற்காக என்று இருக்கும் அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும்கூட இதுகுறித்து ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லை என்பது தமிழ்ச் சமூகத்தில் பார்ப்பனர் நிலை என்ன, பார்ப்பன வெறுப்பு என்பது எப்படிப் புரையோடிப் போயிருக்கிறது என்பதை நன்கு விளக்கும். டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் நான் எழுதிய கட்டுரை ஒன்று மிகக் கடுமையான எதிர்வினைகளைப் பெற்றது. இல்லாத ஒன்றை ஊதிப் பெரிதாக்குகிறேன் என்றார்கள். இன்று என்ன நடந்துள்ளது என்று பாருங்கள்.

சமூக வலைத்தளங்களில் பல தனி நபர்கள் இந்தச் செயலைக் கண்டித்துள்ளனர். ஆனால் அவர்களில் பலர் unequivocal-ஆகக் கண்டிக்காமல், கூடவே சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பல விஷயங்களைப் பற்றிப் பேசியதையும் பார்க்கிறேன். தமிழ்ச் சமுதாயத்தின் உண்மையான அவலம் அவர்கள்கூட இல்லை. இந்த விஷயத்தை எள்ளி நகையாடிய சிலர்தான். அவற்றைப் பார்ப்போம்.

1. ஆந்திராவில் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டபோது கூப்பாடு போடாத சிலர் இப்போது இரண்டு பேருடைய நூல் அறுந்ததற்குக் கொதிப்பது ஏன்?

இவை இரண்டும் ஒப்பிடப்படக்கூடிய செயல்களே அல்ல. நூல் அறுந்தது சாதாரண விஷயம்தான். உயிர் போகவில்லைதான். ஆனால் என்னவிதமான ஒப்பீடு? இரண்டும் கடுமையாகக் கண்டிக்கத்தக்கதுதானே? இதைக் கண்டிப்பதற்கு அதைக் கண்டித்து வாங்கிவந்த சான்றிதழைக் காண்பிக்கவேண்டுமா? இருவரும் தமிழர்கள்தானே? ஒரு பக்கம் சுட்டது ஆந்திர போலீஸ். இன்னொரு பக்கம் தாக்கியது தமிழர்கள். தாக்கப்பட்டவர்கள் வெறும் பார்ப்பனர்கள். பிரச்னை அதுதானா?

2. நூலைதானே அறுத்தார்கள்? அதற்கு ஏன் இந்தப் பொங்கல்?

பிரமாதம். புடைவையைத்தானே பறித்தார்கள்? சட்டையைத்தானே கிழித்தார்கள்? லேசாக மேலேதானே கையை வைத்தார்கள்? கொஞ்சமாகக் கீழேதானே தள்ளினார்கள்? ஒரு தட்டுதானே தட்டினார்கள்? வெறும் இரண்டு பேரைத்தானே தாக்கினார்கள்? அடடா, அடடா!

3. அடக்குமுறையின் வெளிப்பாடுதான் பூணூல். அதனை அவர்களாகவே நீக்கியிருக்கவேண்டும். இல்லை என்பதால் இந்தச் செயலில் ஈடுபடவேண்டியிருந்தது.

இதனை இந்தப் பதிவில் எதிர்கொள்ளப்போவதில்லை. தனியாக எழுத உள்ளேன். எந்தச் சட்ட வரையறைக்குள்ளும் அடங்காத ஒரு எதிர்பார்ப்பு இது. பிறர் எம்மாதிரியான மதச் சடங்குகளைச் செய்யவேண்டும் என்று எவ்விதத்திலும் யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது. அவரவர் விரும்பிய வகையில் சட்டத்துக்கு உட்பட்டு மத வழிபாடு செய்வதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ளது என்பதை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

4. பொதுமக்கள் கூடும் இடங்களில் திறந்த மார்புடன் இருக்கும் இவர்களை சட்டை போடச் சொல்லவேண்டும்.

தமிழகத்தில் நான் பார்த்தவரை வயலில் விவசாயம் செய்வோர் முதல் வீடுகளில், தெருக்களில், பல பொது இடங்களில் வெறும் துண்டுடனோ, அதுகூட இல்லாமலோ திறந்த மார்புடன் கீழாடை மட்டும் அணிந்துகொண்டு அனைத்து சாதி ஆண்களும் செல்கிறார்கள். இதனை ஆபாசம் என்றும் பெண்களுக்கு எதிரானது என்றும் சொல்பவர்கள் சட்டம் கொண்டுவந்து மாற்ற முயலுங்கள். ஆனால் ஒட்டுமொத்தமாக, மாநிலத்தின் அனைத்து ஆண்களும் தெருவில் இறங்கும்போது இதனைச் செய்யவேண்டியிருக்கும்.

***

தமிழகத்தில் பொதுவெறுப்பின் அடிப்படையில் மிகப்பெரிய பாதிப்பைச் சந்திப்பது தலித்துகள்தான். சாதி மத பேதமின்றி அனைவரும் ஒன்றுசேர்ந்து மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் தலித்துகளைத் தாக்குகின்றனர். தலித் மாணவர்களைக் கொண்டு பள்ளிக்கூடக் கழிப்பறையைச் சுத்தம் செய்ய வைத்ததற்காக கீழப்பத்தை பண்டிதன்குறிச்சி கிராமத்தின் ஒரு பள்ளியில் “தாளாளர் சாலமன் ஜெபா, அவரது மனைவியும் தலைமையாசிரியருமான ஜெயக்குமாரி, ஆசிரியர்கள் ஹெலன் அருள் எமிமாள், மேரி சுஜித்ரா, ஏஞ்சலின் ஸ்டெபி, ஜேக்கப், ஆக்னஸ், சரோஜா” ஆகியோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ச்சியாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் தாழ்த்தப்பட்டவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகிவருகின்றனர். இவை அனைத்துமே ஹேட் கிரைம் என்பதன்கீழ் வரும். சென்னையில் இரு பார்ப்பனர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதலும் அதே வகையின்கீழ் வரும். இவற்றை அனைத்து மக்களும் கடுமையாக எதிர்க்கவேண்டும். நமக்கென்ன என்று எதிர்க்கத் தவறினால், நாம் சமதர்ம சமுதாயம் ஒன்றை உருவாக்கத் தவறிவிடுவோம்
இந்த பதிவு தான் ”நல்ல பதிவு. நன்றி பத்ரி”

நன்றி: பத்ரி வலைப்பதிவு.

8 Comments:

பாலாஜி said...

தாக்கப்பட்டது இரண்டு பேர் அல்ல நான்கு பேர்

sriram sundaresan said...

இது ஒரு பெரிய குற்ற செயல் - இதுக்கு சப்பைக்கட்டு கட்டும் செயல் அதை விட பெரும் குற்றம்.

ராமசாமி நாயக்கர் ஆதி காலத்தில் இருந்து உளறியதை இன்று வரை விடாமல் பிடித்து கொண்டு விட்டனர். தமிழகத்திற்கு ஏற்பட்ட மிக பெரிய கொடுரம் கொஞ்சம் கூட தனிமனித ஒழுகம்மற்ற இந்த திராவிட கட்சி குரங்குகள் தான். படிப்பு, வேலை வாய்ப்பு, இப்பொழுது பணி உயர்வு என்ற எந்த கொடுப்பினை இல்லாத ஒரே ஜாதி பிராமணர்கள் தான். கிராமபுர மாணவர்களுக்கு 15% இட ஒதுக்கீடு - ஆனால் அதுவும் அவர்களுக்கு கிடையாது. இன்று அரசு அலுவலகங்கள் இந்த அளவுக்கு கீழ் நிலைக்கு சென்றது, கல்வி நாசமாக போனது எல்லாவற்றிற்கும் காரணம் அந்த ஜாதியில் உள்ள ஆட்கள் இல்லாததே - இதை நான் சொல்லவில்லை க. அன்பழகன் தான்.

மார்ச் மாதத்தில் மட்டும் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் 100 பேர் ஜாதி கொலை செய்யப்பட்டுள்ளனர் - கொல்பவர்கள் அனைவரும் என்ன ஜாதி என்று சொல்லவே வேண்டாம். இது போல் எத்தனை "சின்ன" சம்பவங்கள் நடந்ததோ..

கீ வீரமணி பேசியதை தந்தி டிவியில் பார்த்தேன் - இனிமேல் கருப்பு சட்டை போடும் ஆட்கள் அந்த நிகழ்ச்சியை பார்த்து விட்டு போடட்டும்.

Sanjiv Kumar said...

Is ban on eating beef right?
Why nothing mentioned abt it.Can you justify this.

Idily vadai has becom Jaalra Vadai!!

saravanan vel said...

மயிலாப்பூரில் அர்ச்சகரின் பூணுல் அறுக்கப்பட்டதாக கூறப்படும் பின்னணியில் வெளிவராத உண்மைகள்:
சென்னை மயிலாப்பூரை சேர்ந்த அர்ச்சகர் விஸ்வநாதனை தாக்கிய கும்பல் ஒன்று அவரது பூணுலை அறுத்ததாக செய்தி வெளியானது. இந்த சம்பவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ஊடகங்களும், நாளேடுகளும் செய்தி வெளியிட்டன. இது தொடர்பாக திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படும் 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆனால் விஸ்வநாதன் தாக்கப்பட்டதன் பின்னணியில் பூணுல் அறுப்பு உள்ளிட்ட அரசியல் எதுவும் இல்லை என்பதே உண்மை. கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற அறுபத்து மூவர் திருவிழா அன்று மயிலாப்பூர் காரணீஸ்வரர் கோவில் எதிரில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் உள்ள விநாயகருக்கு பூஜை செய்வது தொடர்பாக ஒரு பக்தருக்கும், அர்ச்சகர் விஸ்வநாதனின் மகனும் காரணீஸ்வரர் கோவில் அர்ச்சகருமான சண்முகநாதனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. சாமிக்கு அலங்காரம் செய்வதில் திறமைசாலியான அந்த பக்தர் ஆட்டோ நிறுத்தத்தில் உள்ள விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்துள்ளார். இதற்கு ஒரு உபயதாரர் உதவியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அர்ச்சகர் சண்முகநாதன் சாமி சிலையை தொட்டு பூஜை செய்வதற்கு உங்களுக்கு உரிமையோ, அருகதையோ இல்லை, அதை வைதீக பிராமணர்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று கூறி அந்த பக்தரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பக்தர் மாலை போட்டிருந்ததால் பதில் கூறாமல் சென்றுள்ளார். இந்நிலையில் கோவிலுக்கு சென்று திரும்பிய அந்த பக்தர் நேற்று முன்தினம் மாலையை கழட்டியுள்ளார். அன்றைய தினமே சிலரை ஏற்பாடு செய்து சண்முகநாதன் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார். அப்போது காரணீஸ்வரர் கோவில் சாவியை வாங்க சண்முகநாதனின் வீட்டிற்கு சென்ற விஸ்வநாதனை தவறுதலாக அந்த கும்பல் தாக்கியுள்ளது. அப்போது அங்கிருந்த பெண்கள் கூச்சலிட்டதால் அந்த கும்பல் தப்பியோடியது. இந்த சம்பவத்தை விஸ்வநாதனின் இரண்டாவது மகனான அர்ச்சகர் மங்கலநாதன், திட்டமிட்டு பூணூலை அறுத்ததாக அரசியல் சாயம் பூசினார். இதற்கு வலுவூட்டும் வகையில் அசோக் நகரில் ஒரு முதியவரின் பூணூலை ஒரு கும்பல் அறுத்துவிட்டு ஓடிவிட்டதாக கதை புனையப்பட்டது. (இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது). இந்து மதத்தின் பிரதிநிதி தாங்கள் தான் என்று கூறும் பார்ப்பனர்களின் பிரதிநிதியான சண்முகநாதனின் அடாவடித் தனம் மயிலாப்பூருக்கே தெரிந்த விஷயம். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காரணீஸ்வரர் கோவில் நடை ஒரு நாள் கூட காலை 6 மணிக்கு முன்னதாக திறக்கப்பட்டதில்லை. இன்று கூட அந்த கோவில் 7 மணிக்கு தான் திறக்கப்பட்டது. இந்த கோவில் மாதவ பெருமாள் கோவில் நிர்வாக அலுவலரின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் அவர் காரணீஸ்வரர் கோவில் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திலும் தலையிடுவதில்லை. சாமி சிலைகளை தொட்டு பூஜை செய்ய பிராமணர்களுக்கு மட்டுமே உரிமை உள்ளதாக எந்த சட்டத்திலும் கூறப்படவில்லை. தெருவோர நடைபாதையில் உள்ள பிள்ளையாருக்கு பூஜை செய்த பக்தரிடம் சண்முகநாதன் மோதியது பிராமணீய ஆதிக்கத்தின் வெளிப்பாடே. சிலைகளை வைத்து பூஜை செய்வது இந்நாட்டின் பூர்வீக மக்களின் வழிபாட்டு முறையாகும். இது ஆரியர்களின் வருகைக்கு முன்பே இந்தியாவில் இருந்துள்ளது என்பதற்கு ஏராளமான வரலாற்று சான்றுகள் உள்ளன. இந்த உண்மை மிதவாதிகளாக இருக்கும் பெரும்பான்மை பக்தர்களுக்கு தெரிந்தால் பிராமணர்கள் கோவில்களில் இருந்து வெளியேறுவதை தவிர வேறுவழியில்லை.

Rajagopalan Subramanian said...

@saravanan vel

I do not believe your version as tre. They have created some false information to side trackthe main issue with falsehoods. had it been true,K Veeramani would have issued press statementscondemning bramin domination instantly.dont spread lies as truth.

Rajagopalan Subramanian said...

@saravanan vel

I do not believe your version as true. They have created some false information to side track the main issue with falsehoods. had it been true,K Veeramani would have issued press statements condemning brahmin domination instantly. Dont spread lies as truth.

Vishweshwaran R said...

There is no proof for Aryan invasion anywhere in the history. If you read Marx Muller, God save you.

There are lot of temples where Brahmins are not the priests.

So, there is no question of brahminical domination anywhere, in the 21st century's society.

Bala said...

பெரியாரின் வன்முறையான பேச்சுகளால் தூண்டப்பட்டு அவரது தொண்டர்கள் அப்படி செய்தனர் என்பது தான் உண்மை....ராஜாஜியைக் கூட ஒரு தி.க தொண்டன் கத்தியால் குத்த வந்து மாட்டிக் கொண்டான் என்று படித்த ஞாபகம்....இப்படி இருக்க பெரியாருக்கு வக்காலத்து வாங்குவது மோசடி....