பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, April 22, 2015

பூணூல் அறுப்பும் பெரியாரிஸ்ட்டுகளின் குதர்க்கமான சமூக நீதியும் - பத்ரி

எப்போதெல்லாம் பெரியாரின் பிம்பமும் கருத்தியலும் பாதிப்புக்குள்ளாகிறதோ, அப்போதெல்லாம் பெரியாரிஸ்ட்டுகள் பலவீனமானவர்கள் மீது, அதாவது பிராமணர்கள்மீது தங்கள் வெறுப்பைக் காண்பிக்கிறார்கள்.

2006ல் ஸ்ரீ ரங்கத்தில் பெரியார் ஈவெ ராமசாமி நாயக்கரின் சிலை அடையாளம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடெங்கும் உள்ள ஹிந்துக் கோவில்களின் மீது பெரியார் இயக்கத்தைச் சேர்ந்த குண்டர்கள் தாக்குதல் நடத்தினார்கள். குறிப்பாக பிராமணர்களைக் குறி வைத்துத் தாக்கினார்கள். குறைந்தது நான்கு பிராமணர்களின் பூணூல்கள் அறுக்கப்பட்டன. சென்னையில் பக்திப் பிரசங்கங்களைக் கேட்க பிராமணர்கள் கூடும் இடமான அயோத்யா மண்டபத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. தற்போது 2015ல், பிராமணர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. சென்னையில் இருவேறு இடங்களில், குடுமியுடன், பிராமணர்களுக்கே உரிய ஆடையும் அணிந்திருந்த இரு கோவில் பூசாரிகள் தாக்கப்பட்டுள்ளனர். திராவிட விடுதலை கழகத்தைச் சேர்ந்த ஆறு குண்டர்கள் அந்த பிராமணர்களின் பூணூலையும் அறுத்தெறிந்துள்ளனர்.திராவிடர் கழகத்தால் சமீபத்தில் தாலி நீக்கும் நிகழ்ச்சியும், மாட்டுக்கறி உண்ணும் நிகழ்ச்சியும் அறிவிக்கப்பட்டது. ஹிந்துக்கள் மத்தியில் பொதுவாக அதற்கு எதிர்ப்பு நிலவியது. அதைத் தொடர்ந்தே இந்த பூணூல் அறுப்பு நிகழ்ந்திருக்கவேண்டும்.

இந்தப் பிரச்சினை புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருந்த நிகழ்ச்சியில் தொடங்கியது. திருமணமான பெண்களுக்கு தாலி தேவையா இல்லையா என்ற ஒரு விவாதம் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது என்பதற்கான விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டன. ஹிந்துத்துவ இயக்கங்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அந்நிகழ்ச்சி ஒளிபரப்பப்படவில்லை. இந்த எதிர்ப்பின்போது புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் தாக்கப்பட்டார். தாக்கியவர்களை காவல்துறை கைது செய்தது.

இதைத் தொடர்ந்து பெரியாரின் திராவிடர் கழகத்தின் தலைவர் வீரமணி, தமிழ்ப் புத்தாண்டு அன்று பெரியார் திடலில், பெண்கள் தாங்களாகவே தாலியை நீக்கிக்கொள்ளும் போராட்டத்தை அறிவித்தார். கூடுதல் சுவாரஸ்யத்துக்காக மாட்டுக்கறி உண்ணும் போராட்டமும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் மகாராஷ்டிராவில் பிஜேபி அரசு மாட்டுக்கறியைத் தடை செய்ததை எதிர்க்கும் விதமாக இந்த அறிவிப்பும் சேர்த்துக்கொள்ளப்பட்டது.

ஹிந்து இயக்கங்கள் கடுமையாக இதை எதிர்த்தன. எப்போதும் திராவிடர் கழகத்துடன் இணைந்தே செயல்படும் திமுக, 2016ல் தேர்தல் வரவிருப்பதை மனத்தில்கொண்டு, இந்தப் போராட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. சென்னை காவல்துறை இந்தப் போராட்டத்துக்குத் தடை விதித்தது. திராவிடர் கழகம் சென்னை உயர்நீதிமன்றத்திலும் இந்தத் தடைக்கு தடை வாங்கியது. காவல்துறை உயர்நீதிமன்ற பெஞ்ச்சில் மேல்முறையீடு செய்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் அவசர அவசரமாக சில பெண்களை வைத்து தாலி நீக்கும் போராட்டத்தை திக நடத்திவிட்டது. அங்கிருந்தவர்கள் மாட்டுக்கறி விருந்தையும் உண்டு முடித்தார்கள். கருணாநிதி மிகக் கவனமாக, இந்த தாலி நீக்கும் நிகழ்வுகளை ஆதரிக்கவில்லை.

தமிழ்நாட்டின் பலவீனமான கட்சியான சிவசேனா திராவிடர் கழக அலுவலகம் முன்பு தனது எதிர்ப்பைக் காட்டியது. இதனால் இரு தரப்புக்கும் இடையே கைக்கலப்பு மூண்டது. காவல்துறை லத்தி சார்ஜ் செய்ய வேண்டி வந்தது.

பிராமண பூசாரிகளின் மீதான தாக்குதலுக்கான பின்னணி இதுதான்.

பெரியாரின் திக கழகம் வெளிப்படையாகவே ஒரு ஹிந்து எதிர்ப்பு இயக்கம். ஹிந்துக் கடவுள்கள், ஹிந்து புராணங்கள், ஹிந்து சடங்குகள், ஹிந்துப் பாரம்பரியம் என எல்லாவற்றுக்கும் எதிரானது இந்த அமைப்பு. எனவே இயல்பாகவே அர்ப்பணிப்பு ஹிந்துக்கள் இந்த அமைப்புக்கு எதிராகவே இருப்பார்கள். திகவுக்கு எதிராகவே ஹிந்து இயக்கங்களும் செயல்படமுடியும். திராவிடர் கழகமும் இதேபோல் ஹிந்து இயக்கங்களுக்கு எதிராகவே செயல்படமுடியும். ஆனால் திராவிட இயக்கம் மிகக் கடுமையான பிராமண எதிர்ப்பு கொண்டது. திராவிடர் கழகத்தின் இதழ்கள், பொதுவாக ஹிந்து மதத்தை இழிவுபடுத்துவதோடு, அபிராமண சாதிகளை விட்டுவிட்டு, பிராமணர்களைத் தனியாகக் குறிவைத்தே தாக்குகின்றன.

ஹிந்து மதத்தில் உள்ள தீமைகளுக்கு பிராமணர்களே காரணம் என்பது திக மற்றும் பெரியாரின் முடிவு. சூத்திரர்கள் என்றால் முறையற்ற உறவுவழியில் பிறந்தவர்கள் என்ற தவறான பொருளை பெரியார் மீண்டும் மீண்டும் சொன்னார். இன்றுவரை எந்த நிரூபணமும் இல்லாமல் பெரியாரிஸ்டுகள் இதைச் சொல்லி சொல்லி பிராமணர்கள்மீது வெறுப்பைத் தூண்டுகிறார்கள். அவர்களது குதர்க்கம் இப்படிச் செல்கிறது. தங்கள் குடுமியும் பூணூலும் மூலம், தமிழ்நாட்டின் அபிராமணர்கள் முறையற்ற வழியில் பிறந்தவர்கள் என்பதை அவர்களுக்கு பிராமணர்கள் நினைவூட்டிக்கொண்டே இருக்கின்றார்கள். இதனால் அபிராமணர்களின் பிறப்பு கேள்விக்குள்ளாகிறது. எனவே பிராமணர்களின் குடுமியும் பூணூலும் அபிராமணர்களை அவமானப்படுத்துகின்றன.

எனவே பிராமணர்களின் பூணூலை அறுக்கும் குண்டர்களின் செயல், அவர்கள் மீது பிராமணர்களால் சுமத்தப்பட்ட அவமானத்தைத் துடைக்கும் செயல்தானே அன்றி, குற்றமாகாது.

இன்னொரு விஷயத்தையும் நாம் பார்க்கவேண்டும். கடந்த சில வருடங்களாக தமிழ்நாட்டில் ஹிந்து ஒற்றுமை வளர்ந்துகொண்டு வருகிறது. பல்வேறு ஹிந்துத்துவ அமைப்புகளின்கீழ் பல்வேறு சாதியைச் சேர்ந்த ஹிந்துக்கள் ஒன்று திரண்டு வருகிறார்கள். பிஜேபிக்கான ஆதரவும் பெருகியுள்ளது.

தாலி நீக்கும் போராட்டம் மற்றும் மாட்டுக்கறி உண்ணும் போராட்டத்துக்கு எதிர்வினையாக, சமூக வலைத்தளங்களில், பெரியாரை சில பெண்கள் செருப்பால் அடிக்கும் புகைப்படங்களும், பெரியார் மீது சில ஆண்கள் மூத்திரம் ஒழிக்கும் புகைப்படங்களும் பரப்பப்பட்டன. இந்தப் புகைப்படங்களைப் பார்த்தாலே, இதைச் செய்பவர்கள் அபிராமணர்கள் என்பதை மிக எளிதாகவே கண்டுகொள்ளலாம். ஆனால் பிராமணர்களையே எளிதாக அடையாளம் காணமுடியும். அதிலும் கோவில் பூசாரிகளை அடையாளம் காண்பது இன்னும் எளிது. அதைவிட முக்கியம், இவர்களைத் தாக்குவது இன்னும் எளிதானது.

நவீன சமூகத்தில் வெறுப்புக் குற்றங்களுக்கு இடமில்லை. அபிராமணர்கள் இயக்கம், சுயமரியாதை இயக்கம், திராடர் கழகம் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் பெரியாரின் இயக்கம், தமிழ்நாட்டு அரசியல் மற்றும் நிர்வாகத்தில், பிராமணர்களல்லாத தலித்துகளல்லாத பிடிமானத்தை உருவாக்க நினைத்து, அதில் வெற்றியும் பெற்றுள்ளது என்று வேறோரு இடத்தில் நான் எழுதியிருந்தேன். ஆனால் திராவிடர் கழகத்தில் பல குறைகள் உள்ளன. அதனால் அதுவாகவே சிதையத் தொடங்கிவிட்டது. தீவிர பெரியாரிஸ்ட்டுகளால் இதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அவர்கள் மீண்டும் அபிராமண, தலித்தல்லாதவர்களின் பிடியைக் கொண்டுவர விரும்புகிறார்கள்.

பெரியாரின் புகைப்படத்தைத் தாக்கும் அபிராமண ஹிந்துக்களின் கோபத்தை இவர்களால் புரிந்துகொள்ளவே முடியாது. இந்த அறியாமையில் அவர்களுக்குச் செய்ய முடிந்ததெல்லாம், ஆன்மிக விஷயங்களில் பிராமண மேட்டிமைத்தனத்தை முன்வைப்பதாக அவர்கள் நினைக்கும் துரதிர்ஷ்டமான கோவில் பூசாரிகளைத் தாக்குவதைத்தான். ஆனால் உண்மை வேறுவிதமானது. தமிழ்நாட்டில் இருக்கும் பிராமண, அபிராமண பூசாரிகள்தான் இருப்பதிலேயே ஏழைப் பிரிவைச் சேர்ந்தவர்கள். தினசரி சடங்குகளில் பலமாகப் பிணைக்கப்பட்டிருக்கும் அவர்கள் மிகக் குறைவான வருமானத்தையே பெறுகிறார்கள். கோவில் நிர்வாக அதிகாரியின் ஒரு மாதச் சம்பளத்தோடு ஒப்பிட்டால், மிகக்குறைவான பகுதியையே இந்த பூசாரிகள் ஊதியமாகப் பெறுகிறார்கள். நிதி உதவியும், சமூக மேம்பாட்டுக்கான திட்டங்களும் இந்த பூசாரிகளுக்குத் தேவைப்படும் நிலையில்தான் இன்று அவர்கள் இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் தங்களுக்கே உரிய வகையில் சமூக நீதியை வகுத்துக்கொண்டிருக்கும் பெரியாரிஸ்ட்டுகள், சமூக நீதியைப் பற்றி குதர்க்கமான அறிவையே பெற்றிருக்கிறார்கள்.

Translated in Tamil from -
Source: http://swarajyamag.com/politics/hate-crime-cutting-the-sacred-thread-of-brahmin-priests/

மொழிபெயர்த்த நண்பருக்கு ஸ்பெஷல் நன்றி


கடவுளை கண்டுபிடித்தவன் முட்டாள்
கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன்
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி
யார் காட்டுமிராண்டிகள் ? நீங்களே முடிவு செய்யுங்கள்.

3 Comments:

snkm said...

புதிய தலைமுறை தொல்லைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் தாக்கப் படவில்லை. வேண்டுமென்றே ஹிந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்களை கைது செய்ய புதிய தலைமுறையின் நாடகம் அது.
வாழ்க ஹிந்துஸ்தானம்!

munnani said...

ஹிந்து விரோத தாலி விவாத நிகழ்ச்சியில் தாலி நாய்க்கான லைசென்ஸ் என நிகழ்ச்சி நடத்துவது தவறு என காவல் துறையில் தமிழ்நாடு முழுவதும் 100கும் அதிகமான இடங்களில் புகார் கொடுத்து புகார் ஏற்பு மனு பெறப்பட்டு உள்ளது ஆனால் இதுவரை புதிய தலைமுறை தொலைகாட்சி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.ஆனால் ஒளிபதிவாளர் தாக்கபட்டார் என பொய் புகாரின் அடிப்படையில் ஹிந்து முன்னணி பொறுப்பாளர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்பது தான் உண்மை.இது கட்டுரையாளருக்கும் தெரிய வேண்டும்.

geeyar said...

பெரும்பான்மை சமுகம் எந்த மதத்தில் இருந்தாலும் தானுன்டு தன் வேலையுண்டு என இருக்கின்றனர். எம்மதமெனினும் அதில் தீவிரமாக இருப்பவர்கள், அந்த தீவிரத்தை தன் மத வழிபாடுகளில் காட்டினால் தவறில்லை. பிற மததுவேசங்களில் ஈடுபடும் சிலரே, மற்ற மதத்தினர் ஒன்றுதிரள முக்கிய காரணமாகிவிடுகின்றனர்.
இந்த நாத்திகவாதிகளுக்கு சில கேள்வி கடவுள் வேண்டாம் என கூறும் நீங்கள் மத அடையாளங்களை உங்கள் ஜாதிமத சான்றிதழ்களில் இருந்தே நீக்க முயற்சி செய்யலாமே.. இந்து மத பெண்கள் தாலி அணிவது அடிமைத்தனம் என போராடும் நீங்கள் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவது ஆண் ஆதி்க்கம் அடிமைத்தனம் என ஏதும் போராட்டம் நடத்தும் எண்ணம் இருக்கா?