பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, February 10, 2015

பிஜேபிக்கு எதிர்கட்சி அந்தஸ்து !இன்று ஆம் ஆத்மி கட்சி தில்லியில் பெரும்பான்மை வெற்றி கிடைத்துள்ளது. மக்கள் மத்தியில் பிஜேபி வெறுப்புணர்வை பரப்புதல் போன்றவற்றுக்கு எதிரான தீர்ப்பு என்று இதை முழுமையாக எடுத்துக்கொள்ள முடியாவிட்டாலும், பிஜேபி கொஞ்சம் பேச்சை குறைத்துக்கொண்டு செயலில் காட்ட வேண்டும்.

சோ துக்ளக் ஆண்டுவிழாவில் சொன்ன ஒரு விஷயம் “வளர்ச்சி என்ற பாதையில் மோடி போய்க் கொண்டிருக்கிறார். அதைக் கெடுப்பது போல், ஆங்காங்கே அதற்கு இடையூறு செய்வது போல் என்னென்னவோ பேசுகிறார்கள். ஒரு வரைமுறையே இல்லை. ராமர் பற்றிய பேச்சு, கோட்ஸே பற்றிய பேச்சு – இப்போது கோட்ஸேவுக்கு கோயில் என்று ஆரம்பித்திருக்கிறார்கள். எனக்குச் சந்தேகமே வந்து விட்டது. அதாவது, மோடிக்கு வரும் நற்பெயரைக் கெடுப்பதற்கென்றே, இந்த அரசின் கவனத்தைத் திசை திருப்பும் நோக்கத்துடனேயே இந்த மாதிரி எல்லாம் செய்கிறார்களோ என்று. சிலர் அவரது வளர்ச்சியைப் பொறுக்க மாட்டாமல், அவர்களால் இந்த மாதிரி காரியங்கள் நடத்தப்படுகின்றனவோ என்று எனக்குச் சந்தேகமே வந்து விட்டது”


பிஜேபிக்கு 7க்கும் குறைவான இடங்களில் வெற்றி பெற்றால் கூட, அந்த கட்சிக்கு நாங்கள் எதிர்கட்சி அந்தஸ்த்து தர தயங்கமாட்டோம் - ஆம்.அத்மி கட்சி

7 Comments:

Anonymous said...

In state level LoP is a ornamental post.. with no poweres whatsover.. Bot so in parliament where LoP gets a say(as a member of 4-5 member consortium) in key appointments such as CVC CEC etc..
We know what powers TN LoP(suuposedly) Captain has till date!

kothandapani said...

கேஜ்ரிவால் வெற்றி தமிழக கட்சிகள் கருத்து

காங்கிரஸ் ... பிஜேபிக்கு மரண அடி மோடி அலை ஒரு மாயை என்று எழுச்சி சிங்கம் ராகுல் சொன்னது நிரூபணம் ஆகிவிட்டது . (தகுதியான முதல்வர் வேட்பாளர் அறிவிக்க வேண்டும் என்பது தெளிவாகின்றது ..கார்த்தி சிதம்பரம்)( இதற்க்கு கார்த்தி சிதம்பரம் விளக்கம் தந்தே ஆகவேண்டும் EVK இளங்கோ)

BJP மோடி அலையில் அடித்து செல்லப்பட்ட காங்கிரஸ் இன்னும் தலை தூக்க முடியாது என்பதே டெல்லி தேர்தல் தரும் படிப்பினை

DMK உடன்பிறப்பே .. 67 உனக்கு எதை எண்ணி பார்க்க வைக்கின்றது . பார்ப்பன ஆதிக்கத்தை உடைத்து திராவிட கண்மணிகளை ஆட்சி கட்டிலில் தமிழகம் ஏற்றிய ஆண்டு . அதன் நினாவாகத்தான் தில்லி மக்கள் ஆம் ஆத்மிக்கு அளித்துள்ள வெற்றிகனிகள் 67

PMK தமிழக AAP பாட்டாளி மக்கள் கட்சிதான் ... அடுத்த தமிழக முதல்வர் நமது தமிழக கேஜ்ரிவால்

அன்புமனிதான். தமிழக மக்களுக்கு வேற வாய்ப்பே இல்லை

ADMK லேடி வேண்டாம் என்று பேடி கிட்ட போனால் என்ன ஆகும் என்று இப்பாவது மோடிக்கு தெரிந்தெறிக்கும் .. தில்லிக்கு யார் வேண்டுமானாலும் முதல்வர் ஆகலாம் ஆனால் மக்களின் முதல்வர் அம்மாதான்

MDMK ஈழ தமிழர்களுக்கு துரோகம் நினைத்த மோடிக்கு தில்லி மக்கள் அளித்த தீர்ப்பே இது . தோழர் கேஜ்ரிவாலுக்கு ஈழதமிழர் பிரச்சினையை விளக்க விரைவில் ஒரு நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளேன் என்பதை தமிழக மக்களுக்கு தாழ்மையுடன் சொல்லிக்கொள்ள விழைகின்றேன்

DMDK அகர்வாலை பார்க்க கேப்டன் சிங்கப்பூர் சென்று இருப்பதால் கேஜ்ரிவாளை பற்றி கட்சி கருத்து சொல்ல முடியாது.

comunists ஒபாமாவிற்க்கு சிவப்பு கம்பளம் விரித்த அமெரிக்க அடிவருடி மோடிக்கு தில்லி காம்ரெடுக்கள் மரண அடி கொடுத்து உள்ளார்கள்

Anonymous said...

A VERY STRONG MESSAGE TO BJP.
CHANGE YOUR POLITICS. ORDINANCES
WILL NOT HELP TO GET VOTES
IN A DEMOCRACY. BE LABOUR FRIENDLY
AND KEEP THE CORPORATES AT A
RESPECTABLE DISTANCE. THIS
VERDICT BY THE DELHI PEOPLE
SHOULD BE AN EYE OPENER, CONSULT
SENIORS LIKE ADVANI.OTHERWISE
PEOPLE WILL REJECT YOU AS THEY
REJECTED CONGRESS

Anonymous said...

Super sombu

ரிஷபன்Meena said...

டெல்லியில் பி.ஜே.பிக்கு கிடைத்திருப்பது தோல்வி அல்ல....அதுக்கும் மேலே......


மோடி மற்றும் ஒரு சிலரைத் தவிர பி.ஜே.பியில் லட்சியத்துடன் செயல்படுபவர்கள் குறைவு.

வாய்ப்புகளைத் தவற விடுவது அதற்கு லட்டு சாப்பிடுவது மாதிரி. காங். ஊழலில் திளைத்தபோது பிரதான எதிர்கட்சியான அது தெய்வமே என்றிருந்தது. அதனால் அண்ணா மூவ்மெண்ட் வந்து மக்கள் கவணத்தை ஈர்த்தது.
அபோதெல்லாம் இந்த பி.ஜே.பி ஒழிந்து அண்ணா குரூப் வந்தால் கூட நல்லதோ என்று நினைத்ததுண்டு.

ஆனால் அரவிந்த் & கோ வின் யூ டெர்ன்களைப் பார்த்த பின்னும் டெல்லி வாக்களர்களைப் போல் அவரை ஒரு மீட்பராக பார்க்க முடியவில்லை. நேர்மை குறைவு அவரிடம் அபட்டமாக தெரிகிறது.

பேச்சை குறைத்து அதாவது கர்வாஸ்பி.. கோட்சே கோவில் என்று சலசலப்புக் காட்டுபவர்களை தயவு தாட்சன்யமில்லாது தூக்கி எறிய வேண்டும். அந்த மாதிரி ஆட்களால் ஓட்டு இழப்பே தவிர வேறு பலன் ஏதும் கிடைக்கப் போவதில்லை.

Swachh Bharath ஐ விட Swachh B.J.P ரொம்ப அவசியமும் அவசரமும் கூட. இல்லாவிட்டால் மோடி என்ன செய்தாலும் அது விழலுக்கு இறத்த நீர் தான்.

Sriram said...

Delhi people will regret their decision in making these bunch of jokers as their rulers. It will be comparable to 70s Janata debacle or even worse!

Jaisankar Jaganathan said...

Blogger kothandapani said...

அருமையான கற்பனை நண்பரே. சூப்பர்