பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, December 12, 2014

லிங்கா சமையல் குறிப்பு - FIRலிங்கா சமையல் குறிப்பு:
தேவையான பொருட்கள்:
1. உருத்திராட்ச கொட்டை - 1 ( அருணாசலத்தில் வருவது போல )
2. பாம்பு - 1 ( தம்பிக்கு எந்த ஊரு முதல் படையப்பா வரை )
3. கவுத்து வைத்த அண்டா - ( சிவ லிங்கத்திற்கு ) - ( அருணாசலத்தில் வருவது போல )
4. அசட்டு காமெடியன்கள் - 2 ( ரஜினி நடக்கும் போது வலது இடது பக்கம் நடக்க  பாட்சாவில் ஜனகராஜ் மாதிரி )
5. துண்டு - 1 ( ஏழையான பிறகு எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு பாட்டு பாட )
6. கண்ணாடி - அதிகமான அளவு ( விதவிதமாக ஸ்டைல் செய்ய)
7. ரஜினி - திகட்டும் அளவு
8. ஹீரோயுன் - தேவையான அளவு.
9. கே.எஸ்.ரவிகுமார் - கடைசியாக தாளித்துக்கொட்ட.

மேலே கூறிய பொருட்களில் முதலில் ரஜினியியை நண்றாக ஆட வைத்து கைத்தட்டல் சத்தம் எல்லாம் ஓய்ந்த பின் அசட்டுக் காமெடியன்களை கொண்டு காமெடி செய்ய வேண்டும். ஹீரோயின் வந்த பிறகு அவருடன் காமெடியை தொடர வேண்டும். அப்போது விதவிதமாக கலர் கலர் டிரஸ் போட்டுக்கொண்டு ஒரு பாட்டு பாட வைக்க வேண்டும்.  கதை ஜவ்வு போல நல்ல வெந்த பிறகு தனியாக ஒரு பாத்திரத்தில் ஆறவைக்கவும். வேறு ஒரு பாத்திரத்தில்( கொஞ்சம் ஓல்டு பாத்திரமாக இருந்தால் நல்லது) அதே ரஜினியை போட்டு வேறு ஒரு பாட்டு, வேற ஒரு ஹீரோயினை அதில் சேர்த்து, காமெடி செய்து அதையும் நன்றாக கிளர வேண்டும். பாத்திரம் அடி பிடிக்காமல் இருக்க கொஞ்சம் பாட்டை கலக்கவும். பதார்த்தம் ரிச்சாக காட்சி கொடுக்கும் போது மசாலாவை போட்டு அதை நிறம் மாற வைக்க வேண்டும். நல்ல நெடி வரும் போது கீழே இறக்கவும். இப்போது முன்பு செய்த ஆறவைத்த ஜவ்வு பதார்த்ததை இதனுடன் கலக்கவும். கடைசியாக கே.எஸ்.ரவிக்குமாரை கொண்டு தாளித்துக்கொட்டவும். சுவையான லிங்கா டிஷ் ரெடி!.

பிகு: சாப்பிட்ட பின் கொஞ்சம் அசதியாக இருக்கும். தூங்கினால் சரியாகிவிடும். 

பிடித்த சீன்: முதலில் பலுனில் ஆரம்பித்த லிங்கா கடைசியாக பைக்கில் அந்த ராட்ச பலூனை விரட்டி மலை மீதிருந்து குதித்து பலூனிற்குள் சண்டை போட்டு அதிலிரிந்து விழும் Bombயை ஒரு கையில் அனுஷ்காவை பிடித்துக்கொண்டே பல்டி அடித்து புட்பால் மாதிரி உதைத்து நம்மை பிரமிக்க வைக்கிறார் ரஜினி.  சபாஷ் ரஜினி !

இட்லிவடை மார்க்: 6/10

7 Comments:

Anonymous said...

உம்மை மாதிரி டுபாக்கூர்களே கதை வசனம் எழுதி இயக்கக்கூடிய படத்தில் நடித்து, பட்டையை

கிளப்பி கொண்டு உள்ளார் என்றால் அவர் நிஜமாவே சுப்பெர்ஸ்டார் தான்

Nanban said...

@Anonymous, டூபாகூர் IVa, இல்லை உம்மை மாதரி ரசிகரா?

இரா.ச. இமலாதித்தன் said...

சமையல் மந்திரம் சூப்பர்!

Anonymous said...

இந்த இந்த ஃபார்முலயாவில் தான் இருக்கும் என்று தெரிந்தும் காலை 4 மணிக்கே FIR (வேறு எந்த படத்திற்க்கவது FIR இவளவு சீக்கிரமா IV போட்டுள்ளதா ) போட்ட IV விட சிறந்த ரசிகர் வேறு யாரு இருக்க முடியும் ... எனவே IV ஒரு டுபாக்கூர்தானே நண்பா.

Anonymous said...

lingaa recipe is good. what one can
do when you lost crores in
kochadiyan.

Sumitra Ramjee said...

படம் எப்படி இருக்கோ தெரியாது. இன்னும் பார்க்கவில்லை. But Super Smart Review. Very enjoyable.

Jagannathan said...

Superb! Enjoyed the recipe! - R. J.