பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, December 23, 2014

கே.பாலசந்தர் - ஓர் அஞ்சலி




இயக்குனர் சிகரம் என திரையுலக மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட திரு.கே.பாலசந்தர் இன்று (23.12.2014) மாலை 7.05க்கு காலமானார். அவருக்கு வயது 84.

டெல்லி கணேஷ், நாகேஷ் போன்ற நடிகர்களின் திறமைகளைக் கண்டறிந்து அவர்களின் அதிகபட்ச திறமையை வெளிக்கொனர்ந்ததில் பாலச்சந்தருக்கு மிகப்பெரிய பங்குண்டு.

நாகேஷைப்பற்றி அவரால் பேசாமல் இருக்க முடியாது, பாலசந்தர் அவர்கள் நாகேஷைப்பற்றி பேசும்போதெல்லாம் எரிச்சலாய் இருக்கும். ஆனால், நாகேஷ் போல என் பெயரையும் அவர் சொல்லுமளவு நான் நடிக்க வேண்டும் என நினைத்ததாக கமலஹாசன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். திறமை எங்கிருந்தாலும் அதை பாராட்டும் குணத்துக்கு சொந்தக்காரர்.

படங்கள் இயக்காமல் இருந்த காலத்தில்கூட தமிழில் வந்த நல்ல படங்களுக்கு தனது வாழ்த்துகளையும், பாராட்டுகளியும் அனுப்பி உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தவர். கவிதாலயா லெட்டர் ஹெட்டில் பாலச்சந்தர் கையெழுத்துடன் வந்த பாராட்டுக்கடிதத்தை சினிமா போஸ்டர்களில் விளம்பரமாக பயன்படுத்திக்கொள்ளும் அளவு அவரது வார்த்தைகளுக்கு மதிப்பிருந்தது. இயக்குணர்களும் பாலச்சந்தரின் பாராட்டு கிடைப்பதை பெருமையாக கொண்டார்கள்.

சக இயக்குணர்கள் எடுத்த படங்களையும் நன்றாக இருந்தால் வாயார பாராட்ட தயங்கியதில்லை.

அகர முதல எழுத்தெல்லாம் என்ற குறளையும், திருவள்ளுவரையும் தனக்து கவிதாலயா என்ற தனது சொந்த படக்கம்பெனிக்கு லோகோவாக வைத்தவர்.

1965ல் நீர்க்குமிழி படத்தில் தொடங்கிய இவரது சினிமா பிரவேசத்தில் பல படங்களை இயக்கி கடைசியாக பொய் என்ற படத்துடன் நிறைவடைந்தது. தமிழ் மற்றும் ஹிந்தியில் படங்களை இயக்கியுள்ளார். ஹிந்தியில் இவர் இயக்கிய ஏக் துஜே கேலியே மிகப்பெரிய வெற்றியும், சாதனையும் படைத்தது.

பாலசந்தரின் மகனான காலம்சென்ற பால கைலாசம் அவர்களின் கம்பெனியான மின் பிம்பங்களின் தயாரிப்புகளாக வெளிவந்த கையளவு மனசு, ரயில் ஸ்நேகம் போன்ற சின்னத்திரை தொடர்கள் பெண்களை கிட்டத்தட்ட சீரியல் பைத்தியமாக்கின. அவ்வளவு தரமாக தொலைக்காட்சித்தொடரையும் இயக்கினார்.

அவர் இயக்கிய படங்களில் அதிகம் பேசப்பட்டவை கீழே....

எதிர் நீச்சல்

சிந்து பைரவி

அபூர்வ ராகங்கள்

வறுமையின் நிறம் சிவப்பு

தில்லு முல்லு

ஏக் துஜே கேலியே

உன்னால் முடியும் தம்பி

சர்வர் சுந்தரம் கதை மற்றும் வசனத்திற்காக.

இன்றைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையும், கமலஹாசனையும் அறிமுகம் செய்தவரும் இவரே. சரிதா போன்ற நல்ல நடிகைகளுக்கு தொடர்ந்து வாய்ப்புக்கொடுத்து அவர்களின் திறமையை முழுமையாக பயன்படுத்தியவர்.

ஜனரஞ்சக படங்கள் எடுத்தாலும் யாரும் பேசத்தயங்கும் சமூக சிக்கல்களையும், சமூக சீர்திருத்த கருத்துகளையும் தனது படங்களின் களன்களாக வைத்தவர்.

தமிழ் திரையுலக வரலாற்றில் இவரின் பங்கு அசாதாரனமானது. பல நல்ல இயக்குணர்கள் உருவாக காரனமாக அமைந்தவர். மக்களின் சினிமா ரசனையை மாற்றியமைத்தவர்களில் ஒருவர். எளிமையும், எளிதில் அனுக முடிந்தவராக இருந்ததும் சினிமா உலகில் எல்லோருக்கும் நல்லவனாக, பிரியமானவராக இருக்க முடிந்திருக்கிறது.

இன்றைய வளரும் சினிமாக்கலைஞர்களுக்கு உற்சாகப்படுத்தி, ஊக்குவித்த ஒருகை குறைந்திருக்கிறது. இவரது மறைவு சினிமா உலகிற்கு நிச்சயம் மிகப்பெரிய இழப்பு.

எதையும் வித்தியாசமான கோணத்தில் சிந்தித்து படமெடுத்த, சக சினிமா குடும்பத்தினரை தட்டிக்கொடுத்து ஊக்குவித்த, மாற்றுச்சிந்தனைகளுடன், சமூகப்பிரச்சினையை அலசும் திறனும் கொண்ட இவரை பின்பற்றி இன்னும் பலர் வருவதே இவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.

- இட்லிவடை குழு

6 Comments:

Umesh Srinivasan said...

நடிகர்களுக்காக சினிமா பார்த்த ரசிகர்களை இயக்குனர்களுக்காகச் சினிமா பார்க்க வைத்தவர். வித்தியாசமான கதைக்களங்களை மிகத்துணிச்சலுடன் கையாண்டவர். இவர் மறைவு திரைப்படத்துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.

D. Chandramouli said...

I happen to watch his serials like Kai Alavu Manusu only recently. In a marathon-like fashion, I finished watching many of his serials on youtube over a month. He dealt with family and social issues with a razor sharp intellect. His movies were of 'janaranjagam' type, at times touching our conscience. He had the all-knowing Ananthu by his side to translate his ideas. Very ordinary actors became extra-ordinary, thanks to KB's golden touch. Another giant of a man from the era of Sivaji Ganesan has gone to posterity. His creations will live for ever certainly. Heartfelt condolences to his family.

சிவா.. said...

கே.பி., யின் மூச்சு நின்றிருக்கலாம். ஆனால் அவரைப் பற்றிய பேச்சு நிற்கப்போவதில்லை. உன்னால் முடியும் தம்பியும், சிந்து பைரவியும் மறக்க முடியுமா ? இரயில் சிநேகம் - சந்தேகமேயில்லை.....அவர் பற்றிய பேச்சு நிற்கப் போவதில்லை....கடைசிவரை அதே உத்வேகத்துடன் உழைத்தவர்.....மறக்க முடியா இடத்தில் வாலியும் இவரும் இப்போது....கனத்த இதயத்துடன் கண்ணீர் அஞ்சலி !

surya said...

engal kb in athma shanthi adaya iraivani vendugiran.
his movies made peoples to elevate themselves in terms of improving ther kala rasanai and made people to critically analyze the movies and their ending if it can this way or that why he has chosen to this way etc Most of B/W movies had excellent camera work and made artist to work to their potential and he brought out the amx from every one.Every one his talking about his Neerkumizhi being first movie and later about Apoorva ragagangal,Sindu Bairavai etc. But every one ver looked his master piece Puunagai- which had message for one life and principle. I think he followed this in his life and in movies too.May I Pray to God pl give another KB to us so that our rasanai is maintained at a higher level. Let his fly get moral strength face the time with out him.
He has joined our MGR ( very closely 23/24th Dec) who got him to Tamil Cinema by offering to write stry and dialogue to his movie Deivathai

Hats of to KB we will miss but we will see in your old movies

Anonymous said...

He is ok director. May his soul rest on peace..!

Anonymous said...

THE BEST FILMS OF KB ARE AGNISATCHI,
SINDHU BHAIRAVI AND SOLLATHAN NINAIKIREN . THESE FILMS ARE HIS
PERSONAL LIKES ALSO