பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, December 22, 2014

நீயொரு பாப்பானா ? - 7 - சாரு

கேள்வி: 'The angst of the Tamil brahmin: Live and let live' என்று Times of India-வில் வெளியான பத்ரி சேஷாத்ரியின் கட்டுரையை எப்படிப் பார்க்கிறீர்கள். அதனுடன் ஒத்துப் போகிறீர்களா ?
கட்டுரையின்லிங்க் ;
http://timesofindia.indiatimes.com/…/Th…/articleshow/4540815
-உமா மகேஸ்வரன்

பதில்: ஏற்கனவே இது பற்றி பத்ரி சேஷாத்ரியை ஒத்தே எழுதியிருக்கிறேன். அவர் அந்தக் கட்டுரையில் சொல்லியிருப்பது அவ்வளவும் இன்றைய எதார்த்தம். என்னுடைய நண்பர் ஒருவர் பல ஆண்டுகளாக சினிமா துறையில் உதவி இயக்குனராக இருக்கிறார். சமீபத்தில் அவர் என்னிடம் கொஞ்சம் தயவான குரலில், “யாரிடமும் நான் ப்ராமின் என்று சொல்லி விடாதீர்கள்” என்றார். உண்மைதான். இன்று சினிமா துறையில் ஒருவர் பிராமணர் என்று சொல்லிக் கொண்டு இயங்க முடியாது. சினிமா துறை மட்டும் அல்ல; எந்தத் துறையிலும் தமிழ்நாட்டில் ஒரு பிராமணனுக்கு வேலை இல்லை. முப்பதுகளிலிருந்தே பிராமணர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறத் துவங்கி விட்டார்கள். சந்தேகமின்றி இது Exodus தான். முன்பு பம்பாய், தில்லி என்று போனார்கள். இன்று அமெரிக்கா.


தமிழ்ச் சமூகத்தில் அதிக அளவு வெறுக்கப்படும் சாதியினராக தலித்துகளும் பிராமணர்களும் இருக்கின்றனர். இன்றும் பல கிராமங்களில் இரட்டைக் குவளை முறை நடைமுறையில் உள்ளது. தலித்துகளை கோவிலுக்குள் அனுமதிக்காத பல கிராமங்கள் உள்ளன. சமூகத்தில் எவ்வளவு உயர்ந்த இடத்துக்கு வந்தாலும் சமூகம் தரும் அவமரியாதையைத் தாங்கிக் கொண்டே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் தலித்துகள். ஆனால் தலித்துகளுக்கு இருக்கும் சட்டப் பாதுகாப்பு கூட இல்லாதவர்களாக இருக்கிறார்கள் பிராமணர்கள். கடந்த நூறு ஆண்டுகளாக பிராமண சமூகத்தைப் போல் வெளிப்படையாகத் தூற்றப்பட்ட, துவேஷிக்கப்பட்ட, கேலி கிண்டலுக்கு ஆளாக்கப்பட்ட சமூகம் தமிழ்நாட்டில் வேறு எதுவும் இல்லை. தமிழ் சினிமாவில் பிராமணர்களைக் கிண்டல் செய்வதும் அவதூறு செய்வதும் மிகவும் சகஜமான, எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்ட விஷயமாக இருக்கிறது. வேறு எந்த சாதியைப் பற்றியும் இவர்கள் இப்படிப் பேச முடியாது. பேசினால் நாக்கு இருக்காது. அப்படிப் பேசக் கூடிய சாத்தியமே இங்கு இல்லை. சுஜாதா ஒரு தொடர்கதையில் ஒரு சாதிப் பெயரைக் குறிப்பிட்டு எழுதியவுடன் கிளம்பிய எதிர்ப்பில் அந்தத் தொடர்கதையே நிறுத்தப்பட்டது. ஆனால் விஸ்வரூபம் என்ற படத்தில் கமல்ஹாசன் ஒரு பெண்ணிடம், “பாப்பாத்தி சிக்கனை டேஸ்ட் பண்ணி சொல்லு” என்று படு சாதாரணமாகச் சொல்ல முடிகிறது. அதேபோல் அவருடைய பேட்டிகளிலும் பார்ப்பனர் என்றே குறிப்பிடுகிறார். தலித் பெண்ணையோ, வேறு எந்த சாதியையோ பற்றி இப்படி அவர் குறிப்பிட முடியுமா? தலித்துகளின் சாதியைக் குறிப்பிட்டுத் திட்டினால் சட்டப்படி குற்றம் என்கிற போது பிராமணர்களை மட்டும் திட்டலாமா? திட்டலாம். கேட்பதற்கு யாரும் இல்லை என்பதுதான் தமிழ்நாட்டின் நிலை. கமல் மட்டும் அல்லாமல் எல்லா முற்போக்கு பிராமணர்களுமே பார்ப்பனர் என்றே குறிப்பிடுகின்றனர். பிராமணர் என்று சொல்லி விட்டால் எங்கே தங்களுடைய முற்போக்கு அடையாளம் கலைந்து விடுமோ என்று அஞ்சுகிறார்கள்.

என் மனைவி ஒரு பிராமணப் பெண் என்பதால் முதல் சந்திப்பிலேயே என் தாயார் அவளை அவமதித்தார். ”ஒரு பாப்பாத்தியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்துட்டியே?” என்று அவள் முன்னாலேயே கேட்டார். தொடர்ந்து இப்படியே அவளை அவமானப்படுத்தி வந்ததால் என் பெற்றோரை ஏழு ஆண்டுகள் நான் சந்திக்காமலேயே இருந்தேன். நான் வேறு எந்த சாதிப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டிருந்தாலும் இந்த அவமரியாதை நடந்திருக்காது. தலித் பெண்ணைத் தவிர என்பதையும் இங்கே ஞாபகத்தில் கொள்ளவும். தலித்துகளையும் பிராமணர்களையும் இந்த சமூகம் எப்படி நடத்துகிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு உதாரணம். அதிலும் குறிப்பாக அந்த இரண்டு சாதிகளைச் சார்ந்த பெண்களின் ஒழுக்கம் பற்றி சமூகத்தில் நிலவும் நம்பிக்கைகள் மிக மோசமானவை. மெத்தப் படித்தவர்களே அப்படித்தான் கருதுகின்றனர். அம்மா வந்தாளில் தி. ஜானகிராமனே எழுதி விட்டார் என்று சொன்ன பலரை நான் பார்த்திருக்கிறேன். தஞ்சாவூரில் நான் கல்லூரியில் படித்த காலத்தில் பிராமணப் பெண்களைப் பற்றி நிலவிய கட்டுக் கதைகளுக்குப் பஞ்சமே இல்லை.

தங்களுக்கு எதிராக சமூகத்தில் நிலவும் துவேஷத்தை பிராமணர்கள் எதிர்கொண்டது எப்படியெனில் – அவர்கள் அதற்கு எதிராகப் போராடுவதைத் தவிர்த்து விட்டுத் தங்களின் வாழ்விடங்களை மாற்றிக் கொண்டனர்; தங்களை துவேஷித்த சமூகத்தையும் அந்தச் சமூகத்தின் மொழியையும் அந்தச் சமூகம் வாழ்கின்ற நிலவெளியையும் முற்றாகப் புறக்கணித்தனர். தமிழுக்குப் பதிலாக ஆங்கிலத்தையும், தமிழ்நாட்டுக்குப் பதிலாக அமெரிக்காவையும் சுவீகரித்துக் கொண்டனர்.

தமிழை வளர்த்ததாக திராவிட இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் சொல்லித் திரிந்தாலும் அவர்களுடைய ஆட்சியில் தான் தமிழ் அழிந்தது. கடந்த முப்பது ஆண்டுகளில் மெல்ல மெல்ல தமிழ் பேச்சு மொழி ஆனதற்கு திராவிடக் கட்சிகளே காரணம். மாறாக, பிராமணர்கள் இதுவரை தமிழை வளர்த்தே வந்திருக்கின்றனர். உ.வே.சாமிநாதைய்யர் இல்லாவிட்டால் இன்று சங்கத் தமிழ் இலக்கியமே கிடைத்திருக்காது. தமிழ் வேதம் என்று கருதப்படும் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் ஆழ்வார்கள் நமக்கு அளித்த சொத்து. அவர்களைப் போல் தமிழ் வளர்த்தவர்கள் யார்? இன்றளவும் பெருமாள் கோவில்களில் திவ்யப் பிரபந்தத்தைப் பாடிப் பாடித்தான் தமிழ் வளர்க்கிறார்கள் பிராமணர்கள். மேடைகளில் தமிழ் தமிழ் என்று வாய் கிழியக் கத்தும் திராவிடக் கட்சிகளின் அரசியல்வாதிகள் தமிழுக்கு எதுவுமே செய்யவில்லை என்பதோடு மட்டும் அல்லாமல் தமிழ் இன்று பேச்சு மொழியாகி விட்டதற்கும் அவர்களே காரணம்.

இன்று தமிழ்நாட்டில் சாதியைப் பேணுகின்றவர்கள் இடைநிலைச் சாதியினர்தாம். இடைநிலைச் சாதிகளால்தான் இன்று சமூகத்தில் சாதி உணர்வு மீண்டும் கடுமையான முறையில் தலை தூக்கியிருக்கிறது. இன்னொரு முக்கியமான விஷயம், தலித்துகள் மீதான வன்முறையைக் கட்டவிழ்த்து விடுபவர்களும் இந்த இடைநிலைச் சாதியினராகவே இருக்கின்றனர். சாதி வன்முறையில் பிராமணர்கள் ஈடுபடுவதே இல்லை. அவர்கள் சாதீய ஒடுக்குமுறையிலிருந்து வெளியே போய் விட்டனர்.

பிராமணர்கள் உடல் உழைப்பில் ஈடுபடுவதில்லை என்று ஒரு தவறான கருத்து வேறு சமூகத்தில் நிலவுகிறது. கோவில்களில் பணி புரியும் அர்ச்சகர்களின் நிலை வயலில் நின்று வேலை பார்க்கும் குடியானவர்களின் நிலையை விட மோசமானது. நாள் முழுவதும் அக்கினிக்கு (தீபாராதனை) அருகிலேயே நின்று அவர்கள் படும் கஷ்டம் சொல்லி மாளாது. ஏழு எட்டு மணி நேரம் அவர்கள் சிறுநீர் கழிக்கக் கூட வெளியே போக முடியாமல் அவஸ்தைப் படுகின்றனர். போனால் விக்ரகங்களின் மீது உள்ள விலை மதிக்க முடியாத ஆபரணங்கள் திருடு போய் விடும். இதேபோல் சவுண்டிப் பிராமணர்களின் நிலையும் மிகவும் துயரமானது.

கடைசியாக, ஒவ்வொரு சாதிக்கும் அவர்களுக்கான குல வழக்கம், வழிபாடு, சடங்குகள், பேச்சு மொழி என்று பலவிதமான கலாச்சார அடையாளங்கள் இருக்கின்றன. அதேபோல் தான் பிராமணர்களுக்கான பேச்சு மொழியும், வழிபாடும், சடங்குகளும், குல வழக்கங்களும். ஆனால் தமிழ்நாட்டில் நிலவும் பிராமணத் துவேஷத்தினால் அவர்களின் கலாச்சார அடையாளங்கள் இன்று காணாமலே போய் விட்டன. அது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

இன்னொரு முக்கிய விஷயம். தலித்துகள், பிராமணர்களைப் போல் இஸ்லாமியர்களும் வெறுத்து ஒதுக்கப்படுகிறார்கள். அந்த வெறுப்பு சமயங்களில் வெளிப்படையாகவும் பல சமயங்களில் மறைமுகமாகவும் அவர்கள் மீது பிரயோகிக்கப்படுகிறது.

- See more at: http://andhimazhai.com/news/view/charu18.html…


இது முழுக்க சாரு நிவேதிதாவின் கருத்தாம். அரண்டுபோய் அந்திமழை டிஸ்க்ளெய்மர்! எப்ப்போதுமே சாருவின் கருத்து முழுக்க சாருவின் கருத்துதானே? இல்ல, அப்ப அப்ப உள்ள எதையாச்சும் சேப்பாங்களா அந்திமழை? ஒரு எழுத்தாளர் கருத்தை போடக்கூட பயம், எங்க பாப்பானீஈயம் ஒட்டிக்குமோன்னு. :))) டுடே ஸ்டார்ட்ஸ் இன் அ காமெடி மூட்.

Charu rocks!

அடுத்த அப்டேட் :

அந்திமழையில் நான் எழுதியிருந்தது பற்றி மனுஷ்ய புத்திரன் எழுப்பியுள்ள கேள்விகள் மிகவும் முக்கியமானவை. இப்போது அவர் எழுதிய அந்நிய நிலத்தின் பெண்ணைப் படித்துக் கொண்டிருப்பதால் பதில் எழுத நேரம் இல்லை. முடித்ததும் எழுதுவேன்.

Manush:

பிராமணர்கள் உடல் உழைப்பில் ஈடுபடுவதில்லை என்று ஒரு தவறான கருத்து வேறு சமூகத்தில் நிலவுகிறது. கோவில்களில் பணி புரியும் அர்ச்சகர்களின் நிலை வயலில் நின்று வேலை பார்க்கும் குடியானவர்களின் நிலையை விட மோசமானது. நாள் முழுவதும் அக்கினிக்கு (தீபாராதனை) அருகிலேயே நின்று அவர்கள் படும் கஷ்டம் சொல்லி மாளாது. ஏழு எட்டு மணி நேரம் அவர்கள் சிறுநீர் கழிக்கக் கூட வெளியே போக முடியாமல் அவஸ்தைப் படுகின்றனர். போனால் விக்ரகங்களின் மீது உள்ள விலை மதிக்க முடியாத ஆபரணங்கள் திருடு போய் விடும். இதேபோல் சவுண்டிப் பிராமணர்களின் நிலையும் மிகவும் துயரமானது- சாரு நிவேதிதா

அதைவிட கொடுமை இரண்டு இலட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டு ஐ,டி நிறுவங்களில் எனது சில பிராமண நண்பர்கள் படும் பாடு. அது மலம் அள்ளும் தலித்துகளின் வேலையை விட கடினமானது. இதையெல்லாம் தட்டிக் கேட்க சாருவைவிடடால் வேறு யார் இருக்கிறார்கள்? பாவ்ம் பத்ரி. தனது எதிரிகளைவிட நண்பர்களைக் கண்டு இப்போது பயப்பட ஆரம்பித்திருப்பார்.
தமிழை வளர்த்ததாக திராவிட இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் சொல்லித் திரிந்தாலும் அவர்களுடைய ஆட்சியில் தான் தமிழ் அழிந்தது. கடந்த முப்பது ஆண்டுகளில் மெல்ல மெல்ல தமிழ் பேச்சு மொழி ஆனதற்கு திராவிடக் கட்சிகளே காரணம். மாறாக, பிராமணர்கள் இதுவரை தமிழை வளர்த்தே வந்திருக்கின்றனர். உ.வே.சாமிநாதைய்யர் இல்லாவிட்டால் இன்று சங்கத் தமிழ் இலக்கியமே கிடைத்திருக்காது. தமிழ் வேதம் என்று கருதப்படும் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் ஆழ்வார்கள் நமக்கு அளித்த சொத்து. அவர்களைப் போல் தமிழ் வளர்த்தவர்கள் யார்? இன்றளவும் பெருமாள் கோவில்களில் திவ்யப் பிரபந்தத்தைப் பாடிப் பாடித்தான் தமிழ் வளர்க்கிறார்கள் பிராமணர்கள். மேடைகளில் தமிழ் தமிழ் என்று வாய் கிழியக் கத்தும் திராவிடக் கட்சிகளின் அரசியல்வாதிகள் தமிழுக்கு எதுவுமே செய்யவில்லை என்பதோடு மட்டும் அல்லாமல் தமிழ் இன்று பேச்சு மொழியாகி விட்டதற்கும் அவர்களே காரணம். – சாரு நிவேதிதா.

சமஸ்கிருத கலப்பால் அழிந்த தமிழை மீட்டதில் திராவிட இயக்கதின் பங்கை சாரு மறுப்பது அவர் தன்னைத்தானே மறுப்பதற்க்கு சமம். தமிழ் அடைந்த நவீனத்துவத்த்தில் திராவிட இயக்க அரசியலுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. திராவிட இயக்கம் இங்கு எழுச்சி பெறுவதற்கு முன்பு எழுதபட்ட மணிப்பிரவாள நடை என்பது தமிழைக் கொலைச் செய்த ஒரு காலத்தின் விளைவு. அதில் பிராமணர்களுக்கு எந்தப் பங்கும் இல்லையா? ஒரு சமூகத்தில் ஒரு மொழி எப்படிஅழிகிறது, எப்படி வளர்ச்சி பெறுகிறது என்பது மிகப்பெரிய அறிவியல். பிராமணர்கள்தான் தமிழைக் காத்தார்கள் என்று குன்ஸாக அடித்துவிட்டால் எப்படி? பிராமணர்களுக்கு மட்டுமல்ல, தமிழை வளர்த்தத்தில் சாரு போன்ற நாய்க்கர்களுக்கும் முக்கிய பங்குண்டு. என்னைப் போன்ற மிலேச்சர்களுக்கும் ஒரு சிறிய பாத்திரமுண்டு.

Charu rocks!

8 Comments:

Anonymous said...

மனுஷ்ய புத்திரன் comments are ONE SIDED AND DELIBERATELY ANTI BRAHMIN AND PRO DRAVIDIAN PARTIES
HE HIMSELF HAS ACKNOWLEDGED BUT FOR 'SUJATHA'
HE WILL NOT BE WHAT HE IS TODAY.
DUE TO HIS GRATITUDE HE HAS INSTITUTED EVEN AN AWARD ON HIS BEHALF.
SUJATHA'S CONTRBUTION TO TAMIL CANNOT BE CHALLENGED BY ANYONE.
HE WAS A PROUD BRAHMIN.
CHARU JUST COMPARES THE PHYSICAL HARDSHIP
OF TEMPLE PRIESTS TO FARM LABOUR.
மனுஷ்ய புத்திரன் DRAGGING IN IT EMPLOYEES TO MALAM ALLUM DALITS IS MISLEADING ANDD IRRELAVANT.
AREPILLAIS,GONDERS NADAR IT PEOPLE UNDERGO AS MUCH STRAI AS MALAM ALLUM DALITS.
THE THINNIAM EPISODE. WHERE DALITS WERE FORCED TO EAT MALAM WAS BY KALLARS.
மனுஷ்ய புத்திரன் CAN WRITE AN ARTICLE ABOUT IT.
MANIPRAVALANADAI WAS PRACTISED MORE BY RELIGIOUS MATHS THAT TOO DRAVIDAN MATHS
THE VERY FIRST MAN TO BRING IN THANI(PURE) TAMIL MOVEMENT IN 1900 IT SELF MUCH MUCH BEBORE THE BIRTH OF DRAVIDIAN PARTIES.WAS ONE SURYANARAYANA SASTRY WHO CHANGED HIS NAME TO PARITHI MAL KALAIGNER IN PURE TAMIL.
HE IS A BRAHMIN.
IT WAS FOLLOWED BY MANY LATER INCLUDING KI.VA.JA. AND THE COMMUNISTS WHICH WAS FULL OF BRAHMINS THOSE DAYS. PURE/THANI TAMIL BECAME THE ORDER OF THE DAY IN 1930/1940 ITSELF BEFORE THE BIRTH OF DRAVIDIAN MOVEMENT.
IT WAS PARIHI MAL KALAIGNER WHO MADE FIRST APPEAL THAT TAMIL MUST BE MADE A CLASSICAL LANGUAGE.(SEMMOZHI)
A SIMPLE READING OF TAMIL HISTORY WILL PROVE THIS.
IN FACT PERIYAR CALLED TAMIL A "KATTU MIRANDI BASHAI" AND RIDICULED MANY TAMIL LITERARY CHARACTERS INCLUDING KANNAGI.
PERIYARS ANTI DALIT/ANTI MUSLIM /PRO BRITISH WRITINGS ARE CAREFULLY HIDDEN.
IF BRAHMINS ARE TO PAY FOR THEIR PAST MIS DEEDS THE SAME LOGIC APPLIES TO MUSLIM INVADERS/RULERS WHO ILL TREATED AND ROBBED OUR TREASURES..
BY THIS YARDSTICK/LOGIC AYODHYA CLAIM BECOMES CORRECT SINCE A HINDU TEMPLE EXISTING AT THAT SITE IS A DEFINITE POSSIBLITY SINCE ISLAM ITSELF WAS BORN ON 6TH CENTURY AND CAME TO THIS COUNTRY ONLY IN 10 TH CENTURY,
BY THIS LOGIC ALL MUSLIMS ARE ONCE HINDUS PRACTISING THE CASTE SYSTEM AND ANSWER FOR THEIR PAST MISTAKES. PLEASE DONT THINK FOR A MOMENT I AM JUSTIFYING THE DEMOLITION OF BABRI MASJID. IT WAS A TOTTALLY WRONG ACT.
LET US TALK OF PRESENT AND NOR QUOIE THE PAST. SUCH LOGIC WILL LEAD TO CONCLSIONS LIKE THIS.
ALL MOST ALL DMK/ADMK/PMK/MDMK POLITICIAN CHILDREN STUDY ONLY IN CONVENTS WHERE THER IS NO TAMIL
STUDYING OPTION.
IF ANYONE INCLUDING MANUSHYAPUTRAN WANTS IWILL FURNISH NAMES PRIVATELY IN THEIR MAILS SINCE IT IS NEITHER PROPER NOR ETIHICAL TO DISCLOSE NAMES WHO ARE NOT A PARTY TO THIS.
THE DRAVIDIAN PARTIES WILL PUT DALITS ONLY IN RESERVED CONSTITUNCIES.
ALL DMK MINISTERS/CANDIDATES ARE ONLY CASTE BASED,
MAXIMUM SEPARATE TUMBLERS ARE ONLY IN ERODE DISTRICT THE PLACE OF PRIYAR..
DRAVIDIAN LEADERS PERSONAL LAWYERS/DOCTORS/AUDITORS ARE ONLY BRAHMINS AND NOT DALITS.
MAXIMUM BRAHMIN EMPLOYEES ARE THERE IN MANIYAMMAL COLLEGE/KALAIGNER T.V.
MANY NON BRAHMINS CANT PRONONCE 'ZHA'.
மனுஷ்ய புத்திரன் CAN SUPPORT DRAVIDIAN MOMENT. THAT IS HIS CHOICE.
IT CANNOT BE AT THE COST OF TRUTH.

Anonymous said...

http://www.luckylookonline.com/2014/12/blog-post_15.html
லக்கிலுக் பதிவுக்கான பதில் :

என்ன லக்கி, வீட்ல தெலுகு தானே ?

முதலில் ஜெயமோகனின் குடும்பத்தை வைத்து காமெடி செய்வதை விடுங்கள் (அவர் அவர் மகனை பற்றி பேசுவதற்கும் நீங்கள் பேசுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது)

தமிழ் மக்கள் ஜெயமோகனை நிறைய தமிழ் புத்தகங்கள் எழுதுவதாலும் / படங்களுக்கு வசனம் எழுதுவதாலும் மளையாளி என்று முடிவு செய்து விட்டார்கள் அதனால் தான் நீங்கள் அவரை ஆசான் என்று அழைகிறீர்கள், ஆனால் தமிழ் மக்கள் நாயக்கர் மஹாலை சுற்றிப்பார்பதால், அவர்கள் நாயக்கர்களை தமிழர்களாக ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்று கண்டுபிடித்துவிடீர்கள் அடடே என்ன உங்கள் அறிவு

உங்களின் கட்டுரையில் தான் எத்தனை ஆச்சர்யங்கள், அடேயப்பா இப்படியொல்லாம்யோசித்தால் உங்களுக்குத்தான் வருடா வருடம் சுஜாதா அவார்ட்

உங்கள் கருந்து : "நிதி அதிகாரத்துக்காக, சி.ஏ படிக்கிறர்கள், அடுத்தவரியே - இடஒதுக்கீட்டால் முன்னெப்போதும் பார்ப்பனர்கள் சந்தித்திராத சவாலான சூழலை கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தளங்களில் இப்போது சந்திக்கிறார்கள். "

இது என்ன புருடா ? சி.ஏ விற்கு எப்பொதுமே இடஒதுகீடு கிடையாது, இன்றைய தேதியில் தமிழ்நாட்டில் இஞ்னியரிங் கல்லுரிகளில் 30% இடம் காலியாக இருக்கிர்ன்றன,மறுபடியும் வெளிநாட்டு உயர்படிப்புக்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது. வேலை வாய்ப்பைஎடுத்துகொண்டொமென்றால், இப்பொழுது எங்கும் தனியார்மயம் தான், அங்கும் இடஒதுக்கீடு கிடையாது (சன் டீவியில் இடஒதுக்கீடு இருக்கிறதா என்ன?)

கேள்வி ரொம்பவும் சாதாரணமானது, பத்ரியோ, ஜெயமோகனோ பிராமனர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுகிறதா என்று கேட்கவில்லை, கேள்வியும் பிராமணனின் வாய்ப்பு பற்றியதல்ல.. பொதுவெளியில் ,பிராமணனை வசைபாடுவது ஏன்? உண்மையில் இன்னமும் பிராமண அடக்குமுறை இருக்கிறதா? திட்டமிட்டு பிராமணனை முன்னிருத்தி பின்னால் ஒழிந்து கொள்வர்கள் யார்?
அவரிகளின் வரலாறு என்ன? அதனால் இவர்களுக்கு என்ன லாபம்?
Krish Texas

Anonymous said...

இன்றிய தேதியில் தமிழ்நாட்டில் பணம் இருந்தால் யாரும் படிக்கலாம், முயற்சி செய்த்தால் யாரும் வேலைக்கு போகலாம், அது தான் உண்மை, பணம் தான் தீர்மானிக்கும் சக்தி, ஜாதியல்ல, நீங்கள் கல்லுடைக்கும் வன்னியனை தான் ஒப்பிடுவீர்கள் என்றால் நீங்கள் அவர்களை ஒப்பிடவேண்டியது கோவிலில் வேலைக்கு போகும் அல்லது இறந்தவர்களுக்கு காரியம் செய்யும் பிராமணர்களுடன் தான் அவர்கள்தான் இன்று பிராமணர்களில் பரிதாபத்துகுரிய ஜீவன்கள் . அவர்கள் தமிழ்நாட்டின் ஒரு நட்சத்திர ஹோட்டல் பாருக்குள் நுழைவதை நினைக்கமுடியுமா ? நிலைமை என்னவென்றால் இரண்டாம்தர நடிகைகள் அங்கே நின்று ஆள் பிடிக்கலாம், ஆனால் பணம் இல்லாத எந்த ஜாதிக்காரனும் அங்கே நுழைந்துவிட முடியாது. அந்த ஹோட்டலின் நதிமூலத்தை விசாரித்தோமென்றால் அது எதாவது திராவிடகுஞ்சினுடையதாக இருக்கலாம்,

பிராமணர்கள் கேள்வி கேட்டால் உங்களுக்குகெல்லாம்த்தான் எத்தனை பதட்டம், இது நீங்கள் அல்லது மனுஷ்யபுத்திரன் சொல்வது போல், புரியாத மர்மமான உளவியல் எல்லம் ஒன்றுமில்ல இல்லையென்றால் BJP அல்லது ஜெயலலிதா கைதும் காரணமல்ல? இதுபோன்ற் கேள்விகள் அவ்வப்போது எழுந்து கொண்டுதான் இருக்கின்றன, ஆனால் சமீபத்திய தமிழகத்தின் புத்தக மறுமலர்ச்சியால்,தமிழ் இணைய செயல்பாட்டால், ஜெயமோகன்,சாரு ராமகிருஷ்ணன் மற்றும் இன்னும் பலநூறு இணைய எழுத்தாளர்களால், தமிழ் புத்தகம் வாசிக்கும் பழக்கம் கொஞ்சமாக அதிகரித்திருக்கிறது.. பிடித்த புத்தகங்கள், 100 புத்தகப் பட்டியல் போன்றவையும் இதற்க்கு காரணங்கள்..

திரவிட இயக்க வரலாறு, உடையும் இந்தியா போன்ற புத்தகங்களை படிக்கும் போது எல்லாருக்கும் எழும் இயல்பான கேள்விகள்தான் இவையெல்லாம்,

ஏன் திராவிடகட்சியின் தாய் கட்சியான நீதிக்கட்சியில் இத்தனை தெலுங்கர்கள், திவான் பகதூர்கள் மற்றும் பிற ஆதிக்க சாதியினர்?
நீதிக்கட்சியின் பிட்டி தியாகராஜர் ஏன், தாழ்த்தப்பட்டவர்கள் சென்னைக்குள் வரக்கூடாதென்கிறார்? பின்பு யாருடையா நீதிக்காக இவர்களது கட்சி?
நேற்று வந்த கிருத்துவன், முந்தாநேற்று வந்த மொகலாயர்கள், அதற்கும் முன்னால் வந்த வடுகர்கள் வந்தேரிகள் கிடையாது ஆனால் எப்போதோ வந்த பிராமணன் வந்தேரியான சுழ்ச்சி என்ன ?

இன்றுவரை திராவிட கட்சியின் தலைவர்களாக ஏன் வீட்டில் தெலுங்கு / கன்னடம் பேசுவர்கள் இருக்ககிறார்கள்?

உங்கள் கட்டுரையிலிருந்து : "தமிழர் வடுகர் என்று நாம் பாட்டுக்கு மடை மாற்றிவிட்டு போனோமானால்,
மடை மாற்றமெல்லாம் கிடையது, சங்கபாடல்களிலேயே, தமிழ்ரின் வடுக எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது..

புறநானூறு 378 தென் பரதவர் மிடல் சாய வட வடுகர் வாள் ஓட்டிய
அகநானூறு 107 கல்லா நீள் மொழிக் கதநாய் வடுகர்
அகநானூறு 375 வம்ப வடுகர் பைந்தலை சவட்டிக் கொன்ற யானைக் கோட்டின் தோன்றும்
அகநானூறு 213, வால் நிணப் புகவின் வடுகர்

இன்னும் வரும் வருடங்களில் இன்னும் அதிகமான புத்த்கங்கள் எழுதப்படும், தரவுகள் வலையேற்றப்படும்..
மொத்த ஆங்கிலேயர்களின் நாட்குறிப்புகளும், விடுதலை போன்ற பத்ரிகைகளும் இணையத்தில் கிடைக்கும் நாள் வரும்
இன்னமும் அதிகமான கேள்விகள் வரும் தயாராக இருங்கள்...


"தமிழக அரசியல் மைய நீரோட்டத்தில் விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் என்று அரசியல் கட்சிகளின் வாயிலாக இணைந்திருக்கும் தலித்கள் இதைப் பற்றியெல்லாம் என்ன நினைக்கிறார்கள் என்பது நமக்கு தெரிந்து என்ன ஆகப்போகிறது? அவர்களெல்லாம் காலச்சுவடிலா கட்டுரை எழுதப்போகிறார்கள் அல்லது ஃபேஸ்புக்கில் எதிர்வினை ஆற்றப் போகிறார்களா. இல்லையேல் ஆசானே என்று விளித்து ஆசானுக்கு மெயில்தான் அனுப்பப் போகிறார்களா? "
இதோ சொல்லி இருக்கிறார்களே :)

https://www.youtube.com/watch?v=FHpkbDgsMyg

https://www.youtube.com/watch?v=M9KAEag4Pqg


இது முடியப்போகும் சண்டையல்ல ஒன்று நீங்களும் பிராமணர்களை போல அமைதியா கேட்டுக்கொண்டு இருங்கள் அல்லது பொருமையாக பதில் தேடி வையுங்கள் அடுத்த சண்டையில் பயன்படலாம்
Krish
Texas

surya said...

dear Anonymous
pl mail me the details sons/daughters of DMK/ADMK/PMK/MDMK POLITICIAN CHILDREN STUDY ONLY IN CONVENTS WHERE THER IS NO TAMIL
to my mail cvch@outlook.com
thanks

Anonymous said...

THE TIME HAS COME FOR ALL TO KNOW THE TRUTH.
BADRI AND OTHERS MUST BE THANKED FOR THIS.
THE DOUBLE STANDARDS OF CASTE HINDUS OF TAMIL NADU/DRAVIDIAN PARTIES AND THEIR VOTE BANK POLITICS TAKING FOR A RIDE DALITS/MUSLIMS OF TAMIL NADU STANDS EXPOSED.
THE PRESENT DAY TAMIL NADU CONSIST OF THREE GROUPS.
DALITS, CASTE HINDUS,AND BRAHMINS. ALL ATROCITIES AGAINST DALITS RAPE,KILLING,UNTOUCHABLITY ETC ARE COMMITTED ONLY BY CASTE HINDUS.
POLICE RECORDS TO THE EXTENT THEY
EXIST WILL REVEAL THIS.
BUT CASTE HINDUS, BLOG WRITERS WILL BLAME BRAHMINS QUOTING "MANU SMRUTHY" AND CENTURY OLD PRACTICES.
THEY WILL CLEVERLY HIDE THEIR TO DAYS CRIMES.
DHARMAPURY/MARAKKANAM ARE BY VANNIYARS ONLY.
THE THINNIYAM INCIDENT WHERE TWO DALITS WERE FORCED TO EAT HUMAN WASTE (MALAM) WAS BY KALLARS.
DMK AND OTHER DRAVIDIAN PARTIES ARE KEEN TO HAVE PMK,AN ANTI DALIT PARTY,
IN THEIR ALLIANCE.
SO DMK WILL DITCH DALITS TO GET BACK TO POWER.
IN CHENNAI AMBEDKAR LAW COLLEGE DALIT STDENTS WERE BEATEN BLACK AND BLUE BY " THEVAR PERAVAI" STUDENTS TO THE POINT OF DEATH.
THE INCIDENT WAS COVERED BY ALL NEWS CHANNELS WHERE THE POLICE WERE SIMPLY WATCHING A DALIT STUDENT BEING BEATEN.

ONE OF THE DEMANDS OF ""THEVAR PERAVAI" STUDENTS IS THE COOLEGE NAME MUST BE CHANGED FROM AMBEDKAR LAW COLLEGE.
THEVARS DEMAND THE NAME OF 'AMBEDKAR' 'MUST BE DROPPED. PARAMAKUDI INCIDENT WHERE ALOT OF DALITS WERE KILLED HAPPENED ON THE DAY OF THEVAR JAYANTHY.
EVERY YEAR SUCH INCIDENTS HAPPEN.
BUT ALL POLITICAL PARTIES INCLUDING DMK ,THE PARTY WHICH WAS HATED BY THEVAR WHO WAS A NATIONALIST AND GOD BELIEVER ATTEND THEVAR JAYANTHI TO
PLEASE THEVARS AND GET THEIR VOTES.
LIKE THIS MANY INCIDENTS BY CASTE HINDUS AGAINST DALLITS CAN BE QUOTED. II HAVE LIMITED MYSELF TO ONLY CASES IN PUBLIC MEMORY.
NO SUCH CASE IS PENDING AGAINST BRAHMINS IN ANY OF THE DISTRCTS OF TAMIL NADU.
DALITS AND CASTE HINDUS KNOW THIS.
BUT STILL THEY WILL TALK OF SUPPRESSION OF DALITS BY BRAHMINS YEARS/CENTURIES BACK.
ALLPREIYARISTS/AMBEDKARISTS WILL JOIN THIS BRAHMIN BAITING TO COVER THEIR FAULTS.
TODAY,IT IS ONLY CASTE HINDUS WHO PRATICE 'UNTOUCHABLITY'.
A DALIT CANNOT ENTER A GOUNDER/THEVAR/NADAR HOUSE. THE FIRST QUESTION ASKED BY CASTE HINDU STUDENTS ARE THEIR CASTE.
IF THE BOY IS AN SC/ST THEY CHANGE THE ROOM.
CASTE HINDUS NEVER TAKE THEIR DALIT FRIENDS(IF ANY) HOME.
THE FOOD SERVED IN DALIT HOSTELS ARE SO BAD MANY DONT TAKE IT.
DALIT HOSTELS IN DISTRICT HEAD QUARTERS ARE OCCUPIED BY CASTE HINDUS AND NO ONE BOTHERS ABOUT IT. CASTE HINDUS TODAY USE HISTORICAL/IMAGINARY BRAHMIN ATROCITIES TO COVER/SHIELD THEIR ATROCITIES AGAINST DALITS.
DALITS ALSO KNOW THIS. THEY ARE WAITING FOR THE RIGHT TIME TO JOIN BRAHMINS.
IF DRAVIDIAN PARTIES WANT MANY ENGG COLLEGES ARE OWNED BY THEM.
WHY NOT GIVE FREE EDUCATION EVERY YEAR AT LEAST TO ONE DALIT STUDENT.
LET CASTE HINDUS CELEBRATE THE SUCCESS OF DALIT STUDENTS OF THEIR AREA. THEY WILL NOT.
LET A DALII GET A HOUSE ON RENT FROM A CASTE HINDU IN SALEM/KOVAI/TIRUNELVELLY DISTRICTS. THEY CANT.
IT IS THE PMK WHICH WANTS THE REPEAL OF Civil Rights Act, PROTECTING DALITS AND ALL CASTE HINDUS ARE WELCOMING IT.
DRAVIDIAN WANT AN ALLIANCE WITH PMK.
SO ,WHERE IS THE DALIT ?
EVEN IF A DALIT GETS A SEAT IN A PROFESSIONAL COLLEGE BY MERIT CASTE HINDUS WILL SAY IT IS DUE TO "QUOTA".
EVEN HIGHLY PLACED/HIGHLY EDUCATED CASTE HINDUS HATE DALITS.
SO THE REMOVAL OF "UNTOUCHABLITY" IN TAMIL NADU RESTS WITH CASTE HINDUS ONLY.
INCIDENTALLY ONE IRRELAVENT QUESTION.
WHY NO MUSLIM ORGANISATION WORTH ITS NAME HAS COMPLIMENTED MALALA.
ONLY A BRAHMIN MAGAZINE HAS CARRIED HER PHOTO IN THE COVERS.
WHERE ARE OUR FRIENDS OF ISLAM.

Anonymous said...

These Dravida Khagham daughter in laws and son in laws are brahmins.

Mr. Veermani son in law is a Brahman

Mr. Stalin daughter in law is a brahmin

Mr. Maran brother's wife are brahmin.

Oh God...Boooooooh.... save these Tamil Brahmins from extinction. Al-lae -lueh....

Murali

(* People are murmuring price of the liquor and nonveg increased because of brahmins)

Cinema Virumbi said...

அன்புள்ள இ.வ.,

"நீ ஒரு பார்ப்பானா?" என்று பக்கத்தில் போடப் பட்டுள்ள படத்தில் நிற்கும் பிராமணரின் பூணூல் இடது தோளுக்குப் பதிலாக வலது தோளில் தொங்குகிறதே?! யாருக்காவது திவசம் கொடுக்கிறாரா?! (கழட்டி ஆணியில் மாட்டினாலும் தொங்கும், அது வேறு விஷயம்!)

நன்றி!

சினிமா விரும்பி
http://cinemavirumbi.blogspot.in

Anonymous said...

http://contrarianworld.blogspot.in/2014/12/badri-seshadris-brahminical-angst-meets.html - One more Paarps article :)