பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, November 14, 2014

உங்க கருத்து என்ன சார் ? - கமல் கேள்வி பதில் !


''ஆனா, இப்போ எந்தப் படம் வந்தாலும் காப்பி, இன்ஸ்பிரேஷன்னு ஒரே சர்ச்சையா இருக்கே! இன்ஸ்பிரேஷன் எப்போ காப்பி ஆகுது? அதைத் தவிர்க்க முடியாதா?''

''சினிமா பண்றவன் பண்ணிட்டே இருக்கான். அவன் எங்கே இருந்து என்ன காப்பி அடிக்கிறான்னு சிலர் தேடிட்டே இருக்காங்க. அதை நானும் பண்ணியிருக்கேன். அதெல்லாம் ஒரு பிராயத்தில் வரும். ஜெயகாந்தன் கதையைப் படிச்சுட்டு, 'இந்த மாதிரி படம் எடுக்கணும்’னு ஆரம்பிப்பேன். இது சினிமாவில் மட்டும் அல்ல... 'டைம்’ பத்திரிகையும் 'நியூஸ் வீக்’ பத்திரிகையும் கிட்டத்தட்ட ஒரே தலைப்போடு வரும். அது ஒருவகையான உத்வேகம். ஒருவருக்கொருவர் ஏற்படுத்திக்கொள்ளும் போட்டி.

ஒரு விஷயம்... நான் இதுவரை வெளியே சொன்னது இல்லை. இப்போ சொல்லலாம். சுஜாதா இப்போ இருந்தாலும் கோவிச்சுக்க மாட்டார். 'தினமணி கதிர்’ல 'சொர்க்கத் தீவு’னு ஒரு கதை எழுதிட்டு இருந்தார் சுஜாதா. அந்தக் கதை பாதியில் நிறுத்தப்பட்டதற்குக் காரணமான நாலைஞ்சு பேரில் நானும் ஒருவன். இரா லெவின்னு ஓர் அமெரிக்க எழுத்தாளர் எழுதின 'திஸ் பெர்ஃபெக்ட் டே’ங்கிற நாவலுக்கும் 'சொர்க்கத் தீவு’க்கும் நிறைய ஒற்றுமைகள் இருந்தன. இதை நான் சொன்னதும் அவரும் கதையை நிறுத்திட்டார். ஆனா, அப்புறம் ரொம்ப ஃபீல் பண்ணேன். 'நீங்க கதையை நிறுத்தாம எழுதியிருக்கலாம் சார்’னு நான் சொல்லவும், 'நீயே நிறுத்திட்டு, இப்போ எழுதியிருக்கலாம்னு சொன்னா என்ன அர்த்தம்?’னு கடுப்பாகிட்டார். படைப்புத் தொழிலில் இதுபோல சில சங்கடங்களைத் தவிர்க்க முடியாது.

காப்பி, இன்ஸ்பிரேஷன் இவற்றுக்கு எல்லாம் எப்படி அணை போடுவீங்க? 'ஐ ரோபோ’ படம்தானே 'எந்திரன்’. ஆனா, 'ஐ ரோபோ’ படம் வெளிவர்றதுக்கு முன்னாடியே நானும் ஷங்கரும் அந்தக் கதை பத்தி பேசியிருக்கோம். 'ஐ ரோபோ’, அசிமோவோட நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம். நம்ம கம்பனைப் பத்தி என்ன சொல்றது? 'எழுதின ராமாயணத்தைத் தானே நீ திரும்ப எழுதியிருக்கே...’னு சொல்லி அவரைச் சிறுமைப்படுத்த முடியுமா? ரவீந்திரநாத் தாகூரின் எந்த வேலையும் ஒரிஜினல் இல்லைதான். அதுக்காக அவரை மதிக்காம இருக்க முடியுமா? ஜெயகாந்தனுக்கும் இப்படி எங்கேயோ ஓர் உந்துதல் இருக்கும் இல்லையா? சிலர் எந்தச் சாயலும் இல்லாம தன்னிச்சையா எழுதுவாங்க. சிலர் எங்கே இருந்து எடுத்தாங்கனு தெரியுற சாயலோடு எழுதுவாங்க. அது இல்லாம கலை நடக்காதுனு தோணுது. இன்ஸ்பிரேஷன் இல்லாம இருக்க முடியாது. ஆனா அப்படியே அப்பட்டமா காப்பி அடிக்கிறது, ஓரளவு கலை கைவர்ற வரைக்கும் பண்ணுவாங்க. ஒண்ணுமே தெரியாம இருக்கும்போதுதான் பார்த்துப் பார்த்து டிரேஸ் எடுப்பான். வளர்ந்த பின்னாடி அதைச் செய்ய மாட்டான் கலைஞன். ஏன்னா, கலை கை வந்த பிறகு அவனுக்கு திமிர் வந்திரும்.

இன்னொரு விஷயம்... யார் யாரெல்லாம் காப்பி அடிக்கிறான்னு தேடிட்டு இருக்குற ரசிகன், அடுத்த கட்டத்துக்கு வளரலைனு அர்த்தம். முழு ரசிகனா வளர்ந்துட்டா, அதை பெரிய விஷயமா யோசிக்க மாட்டாங்க. 'காப்பியடிச்சுட்டான் ஓ.கே அதை நல்லா பண்ணியிருக்கானா?’னு பார்க்க ஆரம்பிச்சிருவான். நான் எப்படித் தட்டுத்தடுமாறி கலைஞனா வளர்ந்தேனோ, அது மாதிரி ரசிகனா, அவனும் தன் விலாசத்தை தேடிட்டு இருக்கான். சீக்கிரமா கண்டுபிடிச்சிருவான்!''
( கேள்வி, பதில் நன்றி விகடன் )  


கமல் கேள்வி பதிலை பற்றி இவர்கள் என்ன கருத்து சொல்லுகிறார்கள் என்று கேட்க ஆவல்

ஞாநி
ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்
ஹரன் பிரசன்னா
பத்ரி
சுரேஷ் கண்ணன் 

ராம்கி

Creativity is knowing how to hide your sources - Albert Einstein - சும்மா தகவலுக்கு :-)

14 Comments:

ஜெயக்குமார் said...

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு கமலைப் பத்தியெல்லாம் தெரிஞ்சிருக்கே.. அடடே.. ஐன்ஸ்டீன் அறிவியலாளர் என்பதுடன் தீர்க்க தரிசி என்பதையும் நான் கருத்தில் கொள்ள வேண்டும்.

காப்பியடிக்கிற படத்துல இருந்து சீன் சீனா உருவிட்டு ரசிகர்கள் வளரனுமாம்... உலக்க நாயகனுக்கு இம்புட்டு மப்பு கூடாது.. :)

Anonymous said...

ஒரு பொன்மொழி:
ORIGINALITY CONSISTS IN CONCEALING THE ORIGINAL
-கநா

Anonymous said...


யோவ் இவ, பொன் மொழியை போடுறதுக்கு முன்னாடி நல்ல செக் பண்ணிட்டு போடுய்யா. இந்த கேவலமான பொன்மொழிய ஐன்ஸ்டீன் சொன்னதே கிடையாது. லோகநாயகன் மாதிரி காப்பி அடிக்கற திருட்டுப்பய ஒருத்தன் ஜன்ஸ்டைன இதுல கோத்து விட்டுபுட்டான்.

http://quoteinvestigator.com/2014/06/01/creative/

Jennal said...

He points out kamban , but kamban never claimed that Ramayana is his creation. There is proper reference and credit to the original thinker.

So the point is - there is no problem in getting inspired. BUT give appropriate credits and pointers rather than saying

Story
Screenplay
Direction
Music
by
(me)

Anonymous said...

கமல் கேள்வி பதிலை பற்றி இவர்கள் என்ன கருத்து சொல்லுகிறார்கள் என்று கேட்க ஆவல் -- இவங்க எல்லாரும் orginal கந்தசாமிகலா பாஸ்?

ராமதுரை said...

காப்பி அடி வேண்டாமுன்னு சொல்லலே.ஆனா பச்சையா காப்பி அடிக்கறது தான் கேவலம்

R.Gopi said...

//கமல் கேள்வி பதிலை பற்றி இவர்கள் என்ன கருத்து சொல்லுகிறார்கள் என்று கேட்க ஆவல்

ஞாநி
ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்
ஹரன் பிரசன்னா
பத்ரி
சுரேஷ் கண்ணன்
ராம்கி //

Please add Karundhel Rajesh to this list....

Singara Velan said...

உலகில் உள்ள யாரும் 60 வருட சினிமா வாழ்க்கையில் 60க்கும் மேற்பட்ட படங்களுக்கு copy or inspire ஆனதில்லை.
(EX. தேவர் மகனில் சிவாஜி இறந்து போகும் காட்சி அப்படியே காட்‌ஃபாதரில் marlon Brando இறந்து போகும் காட்சியில் இருந்து உருவியது.)

ரஜினிக்கு ஆடுத்தபடியாக சம்பளம் வாங்கும் நடிகர், உலகம் முழுக்க ரசிகர்கள், உலக சினிமா அறிவு, உலக இலக்கிய அறிவு, அழகு, இளமை, personality, etc, etc, etc. ஒரு நல்ல படத்தை எடுப்பதற்கு இவை அனைத்தையும் தாண்டி வேறு என்னதான் வேண்டும் உங்களுக்கு?

kothandapani said...

காப்பி அடிப்பது வேறு இன்ஸ்பிரேஷன் ஆவது வேறு இன்ஸ்பிரேஷன் ஆகாம காப்பி அடிக்கமுடியாது

காப்பி அடிக்காம இன்ஸ்பிரேஷன் ஆக முடியாது கொஞ்ச நாள் காப்பி அடித்து இன்ஸ்பிரேஷன் ஆகலாம் எப்பவுமே காப்பி அடித்து இன்ஸ்பிரேஷன் ஆக கூடாது அது கலைஞ்சனுக்கு அழகு இல்லை .... இப்படி காபிக்கும் இன்ஸ்பிரேஷனுக்கும் உள்ள நூலிழை வேறுபாட்டை வழக்கம் போல தெள்ள தெளிவாக விளக்கிய கமல்ப்பா.......... உங்களுக்கு கோடானு கோடி நன்றி .............

Vishweshwaran R said...

There is no society that has given so much of limelight to a copy cat err. inspirational rat like Kamalhassan.

Once upon a time I was a big fan of him. After knowing his double face (community affinity yet calling himself a rationalist) and the piling evidences of 'inspiration' in the Internet, he lost respect.

He is yet another intelligent film maker - intelligent enough to cover his tracks, for few weeks...

Anonymous said...

kanavan yaar yendru patthinithaan solla mudiyum.

Anonymous said...

the copycats, expect intellectual copy right, what do for this

Anonymous said...

He points out kamban , but kamban never claimed that Ramayana is his creation. There is proper reference and credit to the original thinker.
HUNDRED PERCENT AGREED.
EVEN BHARATHIYAR AGREES HIS 'PANCHALI SABATHAM'
IS A CONCEPT FULLY PICKED UP FROM 'MAHABARATHAM'
WHAT WE EXPECT IS INTELLUCTUAL HONESTY BY QUOTING/CREDITING THE SOURCE.
IF THEY DO THAT THEY WILL HAVE TO PAY.
YOU CANT EXPECT SUCH HIGH MORAL VALUES FROM KAMAL OUT TO CHEAT ALL HIS FANS AND MEDIA.
WHAT ABOUT HIS DOUBLLE STANDARDS ON FAITH/GOD.

balagopal venkatraman said...

Originality has been described as the art of concealing origins: for Mr. Duxbury it “consists of judicious selection