பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, November 11, 2014

வெண்முரசு விழா அனுபவங்கள்


ஐநூறு பார்வையாளர் இருக்கைகளும், சிறப்புப் பார்வையாளர் இருக்கைகளும், படிக்கட்டுகளும் சேர்த்து எண்ணூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வந்திருப்பார்கள். வழக்கமான மேடைகள் போல் இல்லாமல் நவீனமாகவே மேடை அலங்கரிக்கப்பட்டிருந்தது, "காக்கைச் சிறகினிலே" என்ற வாழ்த்துப் பாடலுடன் தொடங்கியது விழா.

நாங்கள் சரியாக விழா ஆரம்பிப்பதற்கு முன் பத்து நிமிடத்தில் அரங்கத்தின் உள்ளே நுழைந்தேன். எளிமையாக வாசலில் நின்று கொண்டிருந்த ஜெயமோகன் அவர்களைப் பார்த்து விட்டு அறிமுகமில்லாததால் எதுவும் பேசாமல் உள்ளே நிழைந்தேன். அரங்கம் நிரம்பி வழிந்து உள்ளே நுழைந்தவர்கள் இருக்கை இன்றி பாதையில் நின்று கொண்டிருந்தனர். தூரத்தில் இரண்டு கடைசி வரிசை கதவோரத்தில் காலியாக இருந்தன. கூட்டத்திலிருந்து நழுவி அந்த இடம் நோக்கி அமர்ந்தவுடன் தான் தெரிந்தது, அவ்விருக்கையில் அரங்கம் தெரியாது என்று. இருந்தும் பேசும்போது பார்க்கமுடிந்த அளவில் ஒலிவாங்கி தளம் இருந்ததால் சமாதானப் படுத்திக் கொண்டு அமர்ந்தேன். விஷ்ணுபுரம் வாசகர் வட்ட நண்பர்கள் சுழன்று சுழன்று ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தனர். உடையார் பாலகுமாரன், உயர்மை மனுஷ்யபுத்திரன், இயக்குநர் ராம், தயாரிப்பாளர் தனஜெயன், பதிப்பாளர் பத்ரி, எழுத்தாளர் ஷைலஜா, ஜடாயு, நடிகர் இளவரசு, எஸ்.கே.பி.கருணா போன்றோர் பார்வையாளர் வரிசையில் இருந்த பெயர் தெரிந்த பிரபலங்களில் சிலர். கமலைப் பார்ப்பதற்கு என்றே ஒரு சிறுவனை அழைத்து வந்த ஒரு தந்தை எங்கள் மின்னிருக்கையில் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தார். இளையராஜாவைப் பார்ப்பதற்கென்று வந்த ஒருவரும் முதல் சில மணிகள் அருகே அமர்ந்திருந்தார், இசைஞானி வந்தபிறகு முண்டியடித்து முன்வரிசை படிக்கட்டிற்கு ஈர்க்கப்பட்டார்.



பி.ஏ.கிருஷ்ணன் அவர்கள் பேசுகையில் வியாசர் என்ற கழுகு பறந்த வானத்தில் மற்றொரு கழுகா ஜெமோ பறப்பார் என்று வாழ்த்தினார். அருண்மொழி, ஓவியர் சண்முகவேலுக்கு அடுத்தபடியாக வெண்முரசை வாசிக்கும் வாசகன் தான் என நாஞ்சில் நாடன் பேசுகையில் கூறினார். அசோகமித்திரன் அவர்கள், இந்த மேடை புதிதில்லை என்று தொடங்கி சுவைபட பேசினார். பிரபஞ்சன் நீலம் பகுதியைப் பற்றிப் பேசினார்.

யார் பேசினார்கள் என்பதை விட செய்திகள் அதிகம் கவர்ந்த இடங்கள். ஒவ்வொரு பகுதிகளிலும் பாரதக் கதை உள்வாங்கப்பட்டு வெவ்வேறாகப் புனைவாக்கம் செய்யப்பட்டுள்ளன, திரௌபதி துகில் உரியும் படலம் வட இந்தியக் கதைகளில் இல்லையாம். அஸ்வத்தாமன் இறந்ததாக துரோணரிடம் பொய் கூறக் கையாளப்பட தந்திரங்கள் கவர்ந்தன. நாளொன்றுக்கு எத்தனையோ பணிகளுக்கு நடுவே இணையத்தில் சண்டைகளும் செய்துகொண்டு இத்தனைப் பக்கம் எழுத ஜெமோவால் மட்டுமே முடியும் என்றார் ஒருவர், அரங்கம் ஆராவாரம் செய்தது. 30000 பக்கங்களை ஒருவரே எழுதியிருக்க முடியாது என்றும் ஜெமோ என்பவர் ஒரு நூறு பேர்கொண்ட குழு என்று எதிர்காலத்தில் சிலர் வாதம் செய்யலாம் என்றும் குறும்பு செய்யப்பட்டது. வெண்முரசின் சொல் நயத்தை மெச்சும் வகையில் அதன் சொற்களை எல்லாம் தொகுத்து ஒரு அகராதி வெளியிட வேண்டும் என்றும் கேட்கப்பட்டது.

பாரதப் பிரசங்கிகள் ஐவர் விழாமேடையில் கௌரவிக்கப்பட்டனர். அவர்கள் வடமாவட்டக் கலைஞர்கள் அதில் இருவர் கூத்துக் கலைஞர்களாவர். அதில் ஒருவரது கலைவாரிசாக அவரது மகளும் இக்கலையில் இருக்கிறார் என்று கூறும் போது, இக்கலையின் எதிர்கால நிலை சரியில்லை என்ற பொருள் கொஞ்சம் மனத்தைக் கனக்கவைத்தது. கூத்து பார்க்கவோ, பிரசங்கம் கேட்கவோ நேரம் இல்லாத இக்காலத்தில் இணையத்தில் உருவாக்கும் பெரிய திட்டம் கணினியுகத்தில் ஒரு கலாச்சார இழப்பை ஈடுசெய்கிறது.

ஓவியர் சண்முகவேல் அவர்களையும், இணையத்தில் பாரத மொழிபெயர்ப்பைச் செய்துவரும் அருட்செல்வப்பேரரசன் அவர்களையும், ஜெமோ அவர்களின் துணைவியார் அருண்மொழி அவர்களையும் மேடையில் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.



இசையுடனே ஆரம்பித்து பேசத் தொடங்கிய ராஜா மக்களுக்கு புத்தெழுச்சி கொடுக்காத எந்தக் கலையும் நாட்டில் இருப்பது வீண் என்றார். கறுப்புச் சட்டை யில் வந்த நடிகர் கமல். இசை உலகில் இளைய ராஜாவும், கலையுலகில் கமலும் செய்யாததை அவர்துறையில் ஜெமோ செய்துள்ளார் எனப் பாராட்டினார். "நீங்கள் விஷ்ணுபுரம், இவர்(இளையராஜா) சிவபுரம், நான் வேறுபுறம்" என்று அவருக்கே உரிய வார்த்தை விளையாட்டுடன் பேசினார். 'நான் அசோகமித்திரனின் கைத்தடியாகக் கொஞ்ச நேரம் இருக்க விரும்பினேன்' என்னும் அந்தப் பணிவு மனத்தைக் கவர்ந்தது. கலைப் பாரம்பரியத்தில் வந்தவர்கள் நாம், மதம் முக்கியம் என்பதை விட கதைகள் முக்கியம் என்று விளக்கி இறுதியில் காந்தி கதையுடன் முடித்தார் கமல்.

ஏற்புரை நிகழ்த்திய ஜெமோ, ஒவ்வொருவராக குறிப்பிட்டு நன்றி தெரிவித்ததோடு, அனுபவங்களைப் பகிர்ந்தார். இறுதியில் அவரும் காந்தியைக் குறிப்பிட்டு உரையை முடித்தார். கமல் பேசிமுடித்தவுடன் கூட்டத்தில் சிலராவது நகரத்தொடங்குவார்கள் என்று பார்த்தால், அப்படியல்லாமல் ஜெமோ பேச்சையும் ரசிக்கத் தொடங்கியவிதம் யாருக்கு வந்த கூட்டம் என்பதைச் சொல்லாமல் சொல்லியது. ஜடாயு மற்றும் சில டிவிட்டர் நண்பர்களை முதன்முதலாகச் சந்திக்க முடிந்தது. தனது துணைவியாருடன் வந்த பாலகுமாரன் முதுமையின் காரணமாக படிக்கட்டுகளைத் தவிர்க்க கதவருகேயே அமர்ந்து கொண்டார். அவருக்கு இருக்கையைக் கொடுத்து உதவிய மகிழ்ச்சியும், மனுஷ்யபுத்திரன் அவர்களைச் சக்கரயிருக்கைக்கு அமர்த்த உதவிய மகிழச்சியும், சந்திக்கக் கிடைத்த வாய்ப்பாக எண்ணி மற்ற பெரிய தலைகளைத் தூரத்திலிருந்து பார்த்துவிட்டு தென்சென்னைக்குப் போகும் வண்டியை விரட்டிக் கொண்டு ஓடினேன்.

அன்புடன்,
நீச்சல்காரன்

ஜெயஸ்ரீ மேடம் இந்த பதிவையும் ஃபேஸ்புக், டிவிட்டரில் ஷேர் செய்ய வேண்டுகிறேன் :-)

9 Comments:

gnani said...

மியூசியம் அரங்கில் எங்கள் பரீக்‌ஷா குழு பல வருடங்கள் தொடர்ந்து நாடகங்கள் நடத்தி வந்திருக்கிறது. அங்குள்ள மொத்த இருக்கைகளின் எண்ணிக்கை 576. எல்லாம் தரையோடு பொருத்தப்பட்டவை. அதற்கு மேல் ஒரு இருக்கையும் அரங்கில் போட இடைவெளியோ இடமோ கிடையாது. எனவே நிகழ்ச்சிக்கு 576 பேர் வந்து அமர்ந்து பார்க்க வாய்ப்புண்டு. அது தவிர அதிகபட்சம் எல்லா வழிகளிலுமாக இன்னொரு 50 முதல் 100 பேர் நெருக்கி இடித்து நிற்கலாம். அதிலும் ஒளிப்பதிவு கேமராக்கள் இருந்தால் இந்த எண்ணிக்கை கூட நிற்க முடியாது. இதற்கு மேல் அந்த அரங்கில் நெரிசல் ஏற்படுத்த வழியே இல்லை.

Anonymous said...

article says 800 counts and gnani says 676. what big differences he has find in that????????????

Anonymous said...

WHAT GNANI WANTS TO SAY?
JAYAMOHAN CANNOT ATRRACT CROWD?
JAYAMOHAN IS DOING A SERVICE TO SOCIETY. IT IS NOT A PROBLEM IF GNANI IS NOT HAVING A MIND TO APPRECIATE JAYAMOHAN. BUT HE IS TELLING ABOUT THE NO OF PEOPLE COULD BE ACCOMADATED.WE COME TO KNOW THE MIINDSET OF MOST INTELLECTUAL PERSON OF THE WORLD.

சிவ.சரவணக்குமார் said...

திருச்சியில் மோடி அவர்களுக்கு கூட்டம் கூடிய போதும் ஞாநி இதுபோல்தான் இருக்கை கணக்கு போட்டுக்கொண்டிருந்தார்.... யாருக்காவது கூட்டம் கூடினால் இவருக்கு ஏன் எரிகிறது?

Anonymous said...

பரீக்‌ஷா குழு பல வருடங்கள் தொடர்ந்து நாடகங்கள் நடத்தி வந்திருக்கிறது -- அப்போ நாடகத்துல எல்லாருக்கும் ஸீட் என்றதுதான் வேலையா? ??

Anonymous said...

if somebody puts cashew nuts in coffee, no problem. we can eat it.
But if some always serves shit, what we can do with that person?

ஞாநிகளுக்கெல்லாம் ஞாநி said...

ஞாநி என தன்னைத்தானே கருதிக்கொள்வோர்கள் எல்லோருமே அஞ்ஞாநிகளாய் இருப்பது ஒரு நகைமுரன்.

சிறப்பாக நடந்த ஒரு நிகழ்வை, தமிழில் எழுத்துலகில் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு சாதனையை பாராட்ட வார்த்தைகள் கிடைக்கவில்லை இந்த வெண்ணெய்வெட்டி ஞாநிக்கு. சீட் கணக்கு போட்டுக்கொண்டிருக்கிறார்.

பத்தி எழுத்தாளர்கள் எல்லோருமே ஏன் இப்படி பிறரது வெற்றியில், சாதனையைக் கண்டு எரிகிரார்களோ?

ஜெயமோகனுக்கு விஷ்ணுபுரம் முதலாக வெண்முரசு வரை காலம் கடந்தும் நிற்கும் எழுத்துகள் ஏராளம். ஆனால் ஞாநியின் காலத்திற்குப்பின் அவர் எதற்காக ஞாபகம் வைத்துக்கொள்ளப்படுவார்?

பிறரது சாதனையைக் கண்டு வயிரிறெந்த ஒருவராகவா?

எழுத்துப்போலியாக திரிந்ததற்காகவா?

வேறு எதற்காக?

நீச்சல் காரன் said...

அன்புள்ள ஞானி,
தற்போதுதான் உங்கள் கருத்தைக் கண்டேன். அதனால் தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன். அது தோராயமான பார்வைக் கணக்கு. வரிசைக்கு 20 இருக்கை என ஆறு வரிசைகள் என நான்கு தொகுதி இருக்கை மேலேயும், கீழே சிறப்புப் பார்வையாளர் இருக்கை 150~180ம், ஐந்து வாசலில் அனைத்துப் படிக்கட்டிலும் இருவர்விதம் 8 படிக்கட்டிக்குமேல் நின்றும் அமர்ந்தும், சிலர் வளாகத்திற்கு வெளியிலும் இருந்தனர். எனவே எனது கணிப்பின் எண்ணைக் கொடுத்துள்ளேன். இருக்கைகள் எண்ணிக்கை துல்லியமாகத் தெரியாவிட்டாலும் இருக்கையின்றி நிறைந்திருந்தவர்கள் எண்ணிக்கை நூற்றுக்குக் குறையாது என நின்றுகொண்டிருந்தவன் என்ற அடிப்படையில் சொல்வேன்.

dhayananth vijaya ragunath said...

people like gnani are good to drink at some body else's cost.. these bullshits are identified as 'writers'.. and to be kept in the place along with Asokamithran and nanjil nadan... just ignore them... they fade out in due course...