பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, October 22, 2014

கத்தி - FIR

Lyca தயாரித்த கத்தி படம் தமிழர்களின் ரத்தத்தில் உருவான படம் என்பதால் அதை புறக்கணிக்க வேண்டும் என்ற பிரச்சாரம் ஃபேஸ்புக்கில் நடக்கிறது. நேற்று சில தமிழ் அமைப்பு பெட்ரோல் குண்டை போட்டு சத்தியம் உட்லாண்ட்ஸ் தியேட்டரை தாக்கி தங்கள் தீவிரவாதிதனத்தை காண்பித்துள்ளார்கள்.

இதற்காகவே இன்று கத்தியை பாக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.
முதல் பாதி வழக்கமான சினிமா பார்முலா - ஹீரோயின் அறிமுகம், விஜய் அடிக்கும் ஜோக், என்று என்ன படம் இது மொக்கையா இருக்கே என்று நினைக்கும் போது

ஒரு முக்கியமான பிரச்சனையை முருகதாஸ் நம் முன்னே வைக்கிறார்.

அடுத்த பாதி நகரத்து மக்களையும், மீடியாவையும் தன் வசனத்தால் துவைத்து எடுக்கிறார்.

இது எல்லாம் சாத்தியமா என்று லாஜிக் பார்க்காமல் படத்தை பார்க்க வைக்கிறார். குறிப்பாக மீடியாவிடம் பேசும் விஜயின் வசனங்கள் படத்தின் ஹைலைட். 2ஜி முதல் ஸ்டாபெரி காண்டம் வரை நச்.

படத்தின் முக்கியான ஹைலைட் அதில் நடிக்கும் கிழவர்கள். வழக்காக வரும் சினிமா தாத்தாக்கள் இல்லாமல், புதுசாக இருக்கிறார்கள். நிஜமாக அவர்கள் பாதிக்கபட்டவர்களோ என்று நினைக்க தோன்றுகிறது.

சமந்தா சமத்தாக வந்துவிட்டு போகிறார். அஞ்சான் மாதிரி ஒத்த பட்டனுடன் வராமல் எல்லா பட்டனுடன் வருகிறார்.

படத்தின் வில்லன் முதல் பாதியில் சில காட்சிகளை வெட்டாமல் விட்ட எடிட்டர் தான். படத்தில் வரும் அழகான வில்லன் வழக்கம் போல ஏதோ குத்தி இறந்து போகிறார்.

அப்பறம் விஜய் இதில் இரட்டை வேடம் வழக்கமாக நடித்திருக்கிறார். கடைசி காட்சியில் அட இவருக்கு கூட நடிக்க வருகிறது என்று நினைக்க தோன்றுகிறது.

இது விஜய் படம் என்பதை விட முருகதாஸ் படம் என்று சொல்லலாம். படத்தின் மெசேஜ் புதுசு இல்லை ஆனால் அழுத்தமாக சொல்லியதற்கு ஒரு சபாஷ்.

இசை, கேமரா எல்லாம் சராசரி.

தல ரசிகர்கள் கூட படம் நன்றாக இருக்கிறது என்பார்கள்.

இட்லிவடை மார்க் 7/10


படம் Lyca ? Dis-Lyca என்றால் டபிள் லைக்!

3 Comments:

ராகுல் said...

super

Anonymous said...

பழைய ஹிந்தி பாடகர் முகேஷின் பேரன் தான் வில்லன் நீல் நிதின் முகேஷ்

Anonymous said...

'அஞ்சான் மாதிரி ஒத்த பட்டனுடன் வராமல் எல்லா பட்டனுடன் வருகிறார்'. அப்பா இப்ப தான் என் doubtte
தீர்ந்தது . நானும் உங்களமாறியே படம் பூரா சமந்தாவின் பட்டனையே எண்ணிக்கொண்டு இருந்தேன்