பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, October 05, 2014

இது நிச்சயம் மகத்தான தீர்ப்பு!

நீதி நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது; நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமான சொத்துக்குவிப்பு வழக்கில், 'நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை, 100 கோடி ரூபாய் அபராதம், சொத்துக்கள் பறிமுதல்’ என்ற பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு, இந்திய அரசியல் வரலாற்றில் மிகமிக முக்கியமானது. நீதிமன்றத் தீர்ப்பால் பதவி பறிக்கப்பட்டுள்ள 'முதல் முதலமைச்சர்’ ஜெயலலிதாதான்!

ஆனால், இந்தத் தீர்ப்பு வருவதற்கு... 17 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. இடையில் ஒரு தலைமுறையே பிறந்து வளர்ந்துவிட்டது. '66 கோடி ரூபாய் எல்லாம் ஓர் ஊழலா?’ எனக் கேட்கும் அளவுக்கு, ஊழல்களின் பரிமாணம் அதிபயங்கரமாகக் கிளைத்திருக்கிறது. இருந்தாலும், நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு வந்திருக்கும் இந்தத் தீர்ப்பு, அரசியல்வாதிகளுக்குப் பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 'அநீதி இழைத்தால் எத்தகைய அதிகாரம் படைத்தவர்களும் தண்டிக்கப்படுவார்கள்’ என்ற நம்பிக்கையை மக்களுக்கும், 'முறைகேடான வழிகளில் சம்பாதித்தால், நிம்மதியற்ற வாழ்வும் அவமானமும் தலைகுனிவும்தான் இறுதியில் மிஞ்சும்’ என்ற நிதர்சனத்தை அரசியல்வாதிகளுக்கும் அழுத்தமாக உணர்த்தியுள்ளது.

'மாதம் ஒரு ரூபாய் வீதம் ஐந்து வருடங்களுக்கு 60 ரூபாய் சம்பளம் பெற்ற ஒருவர், 66 கோடி ரூபாய் எப்படிச் சம்பாதித்தார்?’ என்பதே ஜெயலலிதா மீதான இந்த வழக்கின் எளிய தர்க்கம். சாட்சிகள் மிகத் தெளிவாக உள்ள இதுபோன்ற வழக்கைக்கூட, ஒருவர் 17 ஆண்டுகளாக இழுத்தடிக்க முடியும் என்ற நிலை மிகவும் வருந்தத்தக்கது. விரைந்து நீதி வழங்குவதில் ஏற்படும் இடர்களைக் களைவதற்கான தருணமாக, நீதித் துறை இதைக் கருத்தில்கொள்ள வேண்டும். ஆனால், 'செயற்கை’யாக உண்டாக்கப்பட்ட இந்தக் கால தாமதம், 'வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்ற பழமொழிக்கு ஆகச் சிறந்த உதாரணம்!

கடந்த ஆண்டு வரை, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி குற்றவழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட‌ ஒரு மக்கள் பிரதிநிதி 90 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்தால், பதவியில் தொடர முடியும். ஆனால், கடந்த வருடம்தான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், தண்டனை அறிவிக்கப்பட்ட உடனேயே பதவி பறிக்கப்படும் விதமாக‌ச் சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது. அந்தத் திருத்தம்தான் இப்போது ஜெயலலிதாவின் பதவியை உடனடியாகப் பறித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கை இழுத்தடித்ததன் மூலம், ஜெயலலிதா தனக்கான அதிகபட்சத் தண்டனையை தானே வலியப் பெற்றிருக்கிறார்!

தீர்ப்பு வந்த நாளில், மாநிலம் முழுவதும் பெரும் பதற்றம் தொற்றியது; பேருந்துகள் தடுத்து நிறுத்தப்பட்டன; கடைகள் இழுத்து மூடப்பட்டன. ஒரு நெருக்கடி நிலைக்கான பதற்றத்துடன் இருந்தது மாநிலம். இத்தகைய நிலை ஏற்படும் என்பதைக் கணித்து, 'கட்சித் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும். இயல்பு வாழ்க்கைக்கு எந்த தொந்தரவும் அளிக்கக் கூடாது’ என்ற ஆற்றுப்படுத்தும் அறிக்கைகூட ஜெயலலிதா தரப்பில் இருந்து வெளிவரவில்லை. காவல் துறையினரோ, ஆளும் கட்சியினரின் வன்முறைகளை வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

மறுபுறம், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனை குறித்து நாடே பேசுகிறது. ஆனால், இந்தத் தேசத்தில் ஜெயலலிதா மட்டும்தான் ஊழல் அரசியல்வாதியா? நீதித் துறையின் சாட்டை சுழல வேண்டிய ஊழல்வாதிகள் கட்சி, ஆட்சி பேதமின்றி நாடெங்கும் நிறைந்துள்ளனர். 2ஜி அலைக்கற்றை ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், காமன்வெல்த் ஊழல், நிலக்கரி சுரங்க‌ ஊழல்... என நம் தேசத்தை இறுக்கிச் சுற்றி வளைத்திருக்கிறது ஊழல் எனும் கொள்ளைநோய். நீதிமன்றத்தை அலைக்கழித்து, மக்கள் மன்றத்தை அவமதித்து, 'மாண்புமிகு’ அந்தஸ்துடன் உலாவரும் அவர்கள் ஒவ்வொருவரும், கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்களே!

அதற்கு இந்தத் தீர்ப்பு ஒரு முன்னுதாரணமாக, முதல் படியாக அமையட்டும்!

நன்றி: விகடன்.

11 Comments:

kothandapani said...

'ஓடி ஓடி' சம்பாதித்தார்..... அதனால் உள்ளே போய்ட்டார் 'லேடீ' ரொம்ப haappy இப்போ நம்ப ' டேடீ'க்கு

ஆமா எப்போ உள்ளே போவார்கள் இந்த ' கேடி'க்கள் ஏதாவது செய்வாரா நம்ம 'மோடி'

அன்பு said...

//அதற்கு இந்தத் தீர்ப்பு ஒரு முன்னுதாரணமாக, முதல் படியாக அமையட்டும்!//
அப்புறம் எப்படி "பல தடைகளை கடந்து... திரும்ப வருவீர்கள்...?"

Anonymous said...

Very nice article in Vikatan

Anonymous said...

Superb article

Anonymous said...

சோ ராமசாமி இத்தனை நாள் கட்டிக்காத்த இல்லை இல்லை இத்தனை நாள் அனிந்திருந்த முகமூடியை குறைந்த இடைவெளியில் இரண்டாவது முறையாக போட்டு உடைத்திருக்கிறார்.

இவ்வளவு அல்பமாக தன் வாழ்நாளில் மாறுவார் என்று நான் எதிர்பார்த்ததே இல்லை.

தமிழகத்தில் இருக்கிற ஆப்ஷன்களில் ஜெ.கண்டிப்பாக் பெட்டர் தான். ஆனால் அதற்காக அவர் தப்பே செய்யாமல் தண்டனை பெற்று விட்டார் அப்பாவி என்றெல்லாம் சொல்லிப் புலம்புகிற அளவிற்கு செல்ல வேண்டுமா என்ன?

இந்த மகாத்மாவின் நேர்மையை சந்தேகிக்கலாகாது என்று என் நண்பர்களிடம் வாக்குவாதம் செய்ததை நினைக்கும் போது, எத்தனை அசடாக இருந்திருக்கிறோம் என்று இருக்கிறது.

சிவாஜி கனேசன் தன் கடின உழைப்பால் பெற்றிருந்த நட்பெயரை
தன் இறுதி நாட்களில் தானே நடித்த
(முதல் மரியாதை போன்ற சில படங்கள் தவிர்த்து) அழித்தது போல இவரே இவர் பெயரை அடித்து நொறுக்கி விட்டார்.

அரசியல்வாதிகளில் தீய சக்திகளுக்குள் வீரியம் குறைந்த அரசியல்வாதியை தேர்ந்தெடுக்கும் துர்பாக்கிய நிலையில் நாம் இருக்கிறோம். ஆனால் பத்திரிக்கைகளில் எல்லாமே ரொம்ப மோசம் என்றால் படிக்காமல் கையைக் கட்டிக் கொண்டிருக்கலாம். படித்தே ஆக வேண்டியதில்லை. நான் தமிழில் படித்த ஒரே பத்திரிகை துக்ளக். ( அய்யோ கடவுளே ஆன் லைன் சந்தா வேறு கேடு.) அடுத்த முறை துக்ளக் ஆண்டுவிழாவை இட்லி வடை கவர் செய்யுமானால் அதைப் படிப்பதையும் நிறுத்த வேண்டியது.

என்னுடைய இந்த ஏமாற்றத்தை மாற்றும் சக்தி வரவிருக்கும் “தொட்டால் தொடரும்” படத்துக்கு தான் உண்டு.


பங்காரு துரைசிங்கம்.
தலைவர்
தன்மானசிங்கம் ஜெ.ஜெகநாதன் ரசிகர் பேரியக்கம்.
அமைந்தகரை


Anonymous said...

"வழக்கை இழுத்தடித்ததன் மூலம், ஜெயலலிதா தனக்கான அதிகபட்சத் தண்டனையை தானே வலியப் பெற்றிருக்கிறார்!" என்பது மிக மிக நியாமான வார்த்தைகள்

Anonymous said...

இது மகத்தான தீர்ப்பு அல்ல, மட்டமான தீர்ப்பு.

Reproducing my comment from http://goarticles.com/article/Denial-of-Bail-to-J-Jayalalitha...-A-Act-of-Coup/9527128/

It is being made out that only the ADMK cadres are making a hue and cry about the conviction but the reality check shows that people from all across the society have been taken aback by the verdict. The simple reason is that Jayaalithaa is never seen as corrupt. Can anyone say that MGR took bribes or fleeced public money? No. It is because he was always seen to have given to people rather than having taken anything from people. Same with Jayalalithaa. She was never known to have taken anything from others or was at any time in need to take from others. Whatever money that was unaccounted in her case is a common with anyone who is in non-salaried class, meaning in business of sorts. Even MGR was known to have donated crores of rupees to certain people - it was but the unaccounted money in his possession - anyone from Ambani to Adani to Rajinikanth to a local trader can be expected to keep such money with themselves. The cash deposits by Jayalalithaa's servants are of that type and not looted from people's money. If Jayalalithaa is wrong for holding that unaccounted money, then almost 75% people in this country must be put to jail.

What I am coming to say is that no one in Tamilnadu believes that she made money by corrupt means or by cheating Government. Even the lack of receipts for gold ornaments is not an offense in people's mind because till today not many buy gold by paying through receipts and VAT. So whatever the court and Swamy highlighted as offenses are not offenses for the common man. That is why majority people in Tamilnadu think that there is no justice in the conviction of Jayalalithaa.

Thinking on another angle, a criminal will be judged by the motive or whether he is a habitual offender or not. A police man can easily make out whether the one who is caught is a regular or an accidental offender. That part is taken into consideration in deciding the punishment. In Jayalalithaa's case she has no motive and she is not a regular offender. Another point is to see how a criminal behaves after the supposed crime, whether he has reformed or not. That is also taken into account in deciding the punishment. Jayalalithaa never repeated the so-called offenses after that. In fact she stood strong against corruption and wrong doing after that - for 18 long years. Any system of justice will have to take this into account.

Even in our lives, our karma gets modified by the pious acts we do. There is no tit for tat like retribution for the lot of sins we do. "Koti janma krutham paapam smaraneya vinasyati" is the dictum. The smaran is repentance, prayer and a vow not to repeat the bad deeds. As a result we mostly don't get retribution is direct proportion to the bad deed done by us in the past. This is how Divine Justice works. It is a pity that Indian Justice system is not in tune with Divine Justice. That is because it is used as a pawn by the powers that be. The BJP has emerged as the culprit in the whole scenario as having resorted to crooked means to unseat Jayalalithaa. People of Tamilnadu suspect this and hence the outrage at Jayalalithaa's conviction.

Anonymous said...

I think what is said is true.

Anonymous said...

Prince of Arcot on Jayalalithaa's conviction: (http://news.webindia123.com/news/Articles/India/20141009/2473956.html)

" "The law will take its own course in the matter", he said, addding, he has absolute faith in the soundness of the judicial system of the country.

"But, we would like to see is a judicial mixture of justice and clemency, something all religions in the world stand for. Womanhood is something precious and sacred, and our nation has always shown itself unswerving in the task of protecting it," he added.

The Prince expressed hope that higher forums would view her case sympathetically and render justice to Ms Jayalalithaa so that she could pursue the case against her in the most effective manner.

Her delicate poor health condition and the supreme services she has rendered to the poorest in the state are factors that should weigh in the minds of the judiciary from now on, he added.

Stating that she has the mandate of people of Tamil Nadu, the Prince said her's was the only political party, which has consecutively won both State and Parliamentary elections on it own merits and this must be taken into consideration."

He is RIGHT.

Anonymous said...

Prince of Arcot in support of Jayalalithaa. He is RIGHT and echoes the mind of common man in Tamilnadu.

" "The law will take its own course in the matter", he said, addding, he has absolute faith in the soundness of the judicial system of the country.

"But, we would like to see is a judicial mixture of justice and clemency, something all religions in the world stand for. Womanhood is something precious and sacred, and our nation has always shown itself unswerving in the task of protecting it," he added.

The Prince expressed hope that higher forums would view her case sympathetically and render justice to Ms Jayalalithaa so that she could pursue the case against her in the most effective manner.

Her delicate poor health condition and the supreme services she has rendered to the poorest in the state are factors that should weigh in the minds of the judiciary from now on, he added.

Stating that she has the mandate of people of Tamil Nadu, the Prince said her's was the only political party, which has consecutively won both State and Parliamentary elections on it own merits and this must be taken into consideration."

http://news.webindia123.com/news/Articles/India/20141009/2473956.html

Anonymous said...

ஜெயலலிதாவின் தீர்ப்பும் திட்டமிட்ட பழிவாங்களும்

ஜெயலலிதாவை பழிதீர்ப்பதாககவே கர்நாடக நீதி துறை இதித்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது .

ஒவ்வரு காரணம் ஆக பார்ப்போம்.

1. ஒரு ரூபா சம்பளம் வாங்கியவர் சொத்து வாங்கிவிட்டார். ஒரு ரூபா சம்பளம் வாங்கியவர் அதுவும் மாத சம்பளம் ஒரு ரூபா சம்பளம் வாங்கியவர் , சாப்பிடவேமுயாது . ஆகவே அவர் மீது சாப்பாடு திருடிய கேஸ் கூட போடலாம். சாப்பாடு இல்லாமல் வாழமுடியாது.சாப்பாடு திருடிய கேஸ் போட்டால் மக்கள் சிரிப்பார்கள். ஆகவே 65 கோடி வருமானதிக்கு அதிக சொத்து என்று போட்டார்கள். ஒரு அரசாங்க ஊழியர் ஊழல என்றால் பணம் வாங்கிக்கொண்டு தவறான சட்டத்திக்கு புறம்பான வேலை செய்யவேண்டும். ஜெயலலிதா செய்த தவறு என்ன , பலன் அடைந்தவர் யார். கேள்வியும் இல்லை பதிலும் இல்லை. தீர்ப்பு ஒன்றுதான்.

2. பணம் என்னமோ வந்தது சொத்து வாங்கியது உண்மை. அதில் ஒன்றும் சட்டபடி தவறு ஒன்றும் இல்லை. ஜெயலலிதா ஒவ்வாரு சொத்தையும் பணம் கொடுத்து தன் பெயரில் வாங்கிஉள்ளார். அதுவும் வருமான வரி கட்டியபிறகு. இந்த பணம் எப்படி வந்தது அதில் தவறு இல்லையா.

இந்திய சட்டபடி, தேர்தல் ஆணையம் முடிவின்படி தவறு இல்லை.

ஜெயலலிதா நம்து எம் ஜீ ஆர் என்ற பேப்பர் சந்தா வாங்கினார். அந்த பேபரில் சசிகலா மற்றும் பார்ட்னேர்கள் உள்ளார்.

காசு கொடுத்து செய்தி போடுவது தவறு , காசு வாங்கி செய்தி போடுவது சட்டபடி தவறு இல்லை. மஹாராஷ்டிர முதல்வர் சவான் மீது பணம் கொடுத்து செய்தி போட்டது என்று தேர்தல் ஆணையம் குற்றம் சாட்டியது. எந்த பத்திரிகை மீடியா மீதும் வழக்கு இல்லை. மஹாராஷ்டிர முதல்வர் சவான் மீது மட்டும் வழக்கு உள்ளது .

ஆகவே இந்த வழக்கு முதலில் செல்லததாகாத வழக்கு. இந்த வழக்கில் ஜெயலலிதா ஒரு பத்திரிகை முதலாளி. சந்தா கட்டியவர்களுக்கு எதாவது சலுகை அதுவும் அரசாங்க பணத்தில் என்று உள்ளதா என்றல் அதுவும் இல்லை. கட்சிக்காரன் கட்சிக்கு கட்சி தலைவருக்கு பணம் கொடுத்தான் ஆகவே கட்சி தலைவரை சிறைக்கு அனுப்பு என்றால் இந்தியாவில் எந்த தலைவனும் வெளிய இருக்க முடியாது.

வழக்கை இழுக்க அடித்தார். ஜெயலலிதா இந்த வழக்கு ஒரு பொய் வழக்கு . 12 வழக்குகளில் வெற்றி கொண்ட ஜெயலலிதா இந்த வழக்கு ஒரு குப்பை என்று வந்தார். சிங்கம் எலி வலையில் ஒரு சுண்டஎலி என்பதை மறந்த ஜெயலலிதா திரும்பி போக முடியவில்லை எதிர் அணி தான் சரியான நீதிபதி கிடைக்கும்வரை நீதிபதிகலை மாற்றி மாற்றி வழக்கை இழுத்தது என்று சொல்ல வேண்டும். சரியான ஆள் கிடைத்தவுடன் பொய்யான தீர்ப்பு வழங்க பட்டது. தீர்ப்பு வழங்கிய நாள் பெயில் கிடைக்காத நாள் ஆக இருத்தது.


ஜெயலலிதாவும் ஹை கோர்ட்டும்.

சட்டம் எல்லோர்க்கும் சொல்வது சட்டம் தெரியாது என்று சொல்லாதே. தெரிந்து வைத்துக்கொள் .அது நீதிபதி களுக்கும் பொருந்தும் .


கிரிக்கெட் மேட்ச் பார்க்கும் போது யார் வெற்றி பெத்தார்கள் என்பது பார்க்கும் அனைவருக்கும் தெரியும். ஆம்பையையர் வேலை அதை சொல்வதுதான். தன்னுடைய சொந்த கருத்தை அல்ல.


பரிட்சை எழுத்தும் மாணவன் கேள்விக்கு பதில் எழுதுனால் சரி யாக இருந்தால் மதிப்பேன் கொடுக்கவேண்டும்.. ஆசிரிறக்கு எந்த உரிமையும் கிடையாது இந்த மாணவனை பாஸ் போட்டால் , படிக்க விட்டால் சமூக நலன் கேட்டு விடும் என்று சொல்லி பெயில் போடுவதக்கு

ஜெயலலிதா வழக்கில் பார்த்துக்கொண்டிருந்த அனைத்து மெடியாக்களும் பெயில் நீட்சியம் என்று சொல்லி செய்திகள் சொல்ல ஆரம்பித்த பிறகு நீதிபதி பெயில் இல்லை என்று ஆணை இடுகிறார்.

ஸுப்ரீம் கோர்ட் ஒன்றும் சட்டத்திக்கு மேல்ஆனது. இந்திய நாட்டில் சட்டத்தின் ஆட்சி தான் உள்ளது. ஸுப்ரீம் கோர்ட் சட்டத்திக்கு அடங்கியதுதான்.

ஸுப்ரீம் கோர்ட் இப்படி சொல்லியது என்றல்லாம் ஹை கோர்ட் நீதிபதி சொல்ல முடியாது. சட்டம் இவ்வாறு சொல்கிறது என்று தான் சொல்லவேண்டும்


இந்திய குற்றவியல் சட்டபடி குற்றம் சந்தேக அப்பால் நிரூபிக்க படவேண்டும்.

தலைவர் மீது கேஸ் போடுவதற்கா ஒருவனை அனுப்பீ அவனை தகராறு செய்ய வைத்து விட்டு, தகராறு செய்தவனை அரசாங்கேமே கொலை செய்துவிட்டு, சந்தர்ப்ப சாத்சியங்கள் படி என்று சொல்லுவது நாஜி நாடாக இந்தியாவை மாற்றி விடும்.

இப்பொழுது நடப்பத்திய பார்த்தால் இது தான் தோன்றுகிறது.