பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, September 04, 2014

நாட்டுடைமை - கேள்வியும் பதிலும்

''தந்தை பெரியாரின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்க நீங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது. பெரியாரின் படைப்புகள் இன்னும் அதிக மக்களைச் சென்று அடைய நாட்டுடைமையாக்கப்படுவதுதானே சரி... ஏன் எதிர்க்கிறீர்கள்?''

''தந்தை பெரியாரின் படைப்புகள் புரட்சிகரமானவை. அதே சமயம் அவற்றை நாட்டுடைமை ஆக்குவதில் உள்ள ஆபத்துகளில் முக்கியமானவை பட்டியலிடுகிறேன். புரிந்துகொள்ளுங்கள்...

1. பெரியார் கொள்கை பிடிக்காத அரசுகள் அந்த வன்மம்கொண்டு, உரிமைகொண்டு - பெரியார் படைப்புகளை அறவே முடக்கிவிடக்கூடிய ஆபத்து உண்டு.

2. தந்தை பெரியார் பயன்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் எழுத்தும் மாறாமல் - மாற்றப்படாமல் - அப்படியே அச்சாக வேண்டும். பார்ப்பான் என்ற சொல்லாக்கத்துக்குப் பதில் 'பிராமணர்’ என்று போட்டால் பொருளே மாறிவிடக்கூடும். 'பார்ப்பனரை 'பிராமணர்கள்’ என்று அழையாதீர் - உங்கள் சூத்திரப் பட்டம் ஒழிய’, என்பது பெரியார் வாசகம். இதை மாற்றினால் என்னவாகும்?

3. கடவுள் மறுப்புபோல புரட்சிகர வாசகங்கள் இடம்பெறாததோடு, திரித்தும் கூறி அச்சிட்டுப் பரப்பும் அபாயமும் உண்டு. எனவே, புத்தருக்கும் மற்ற புரட்சியாளருக்கும் ஏற்பட்ட ஜாதகக் கதை திரிபுகள்போல் பெரியாருக்கும் ஏற்படாது தடுப்பது எங்கள் கடமை.

4.காந்தியின் அறக்கட்டளை காந்தியாரின் நூல்களை தன் உடமையாக்கி உள்ளதே! அது தவறா? பாரதியாரின் பேத்தி, 'எங்கள் தாத்தாவின் பாடல்களில் பேதம் செய்யப்பட்டுள்ளன’ என்று கூறவில்லையா?

- இப்படி பலப்பல காரணங்கள் உள்ளன. நம் நாட்டில் ஊடுருவல்களுக்கும் திரிபுகளுக்கும் பஞ்சமா என்ன?

எங்களிடம் அனுமதிபெற்று எவர் வேண்டுமானாலும் அச்சிட்டுக்கொள்ள வேண்டும்; அதன் மூலம் திரிபுகள் தடுக்கப்பட வேண்டும் என்பதுதான் அதன் நோக்கமே தவிர, வேறு அல்ல. அதுவும்போக, பெரியார் நூல்களை நாங்கள் அச்சிட்டு, மலிவு விலையில் நாடு தழுவிய அளவில் பரப்பும் பணி தொடர் பணியாக உள்ளதே!''

நன்றி: விகடன்
வெங்காயம் விலை ஏறிவிட்டது - செய்தி

5 Comments:

Anonymous said...

குப்பை அது இருக்கவேண்டிய
இடத்தில் பாதுகாப்பாக இருக்கிறது...

Madhavan Srinivasagopalan said...

'பார்ப்பனர்' & 'பிராமணர்கள்’

இரண்டிற்கும் வித்தியாசம் என்ன.... யாரேனும் விளக்கம் தர முடியுமா ? நன்றி

Gopal said...

Good riddance. If they are nationalised ,then they assume some sort of importance. Thanks Veeramani

Anonymous said...

FIRST THEL WILL LOSE MONEY IF IT IS MADE A GOVT. PROPERTY.
LET VERAMANI PUBLISH WHAT ALL HAVE BEEN SAID BY PERIYAR ON:
KANNAGI
MUSLIMS
DALITS
TAMIL LANGUAGE(KATTU MIRANDI BASHAI)
INDIA'S FREEDOM ETC.
THEY WILL ONLY QUOTE WHAT SUITS THEM.
IN MANIAMMAL ENGG. COLLEGE LET VEERAMANI NOT ADMIT BRAHMIN STUDENTS.
THE TEACHING GROUP CCONSISTS OF MANY BRAHMINS.HE KNOWS WHEN IT COMES TO HIS COLLEGE WHERE TALENT LIES.
VEERAMANI CAN ALSO GIVE THE NO. OF DALIT STUDENTS THEY ARE EDUCATING FREE
LET HIM OPENLY CRITISISE DR. RAMDOSS FOR DHARMAPURI INCIDENTT NAMING HIS COMMUNITY. HE WILL NOT BECAUSE THE NEXT MINUTE HE WILL FACE THE CONSEQUENCES. HE CAN DO BUSINESS ONLY AGAINST BRAHMINS WHO WILL BE SILENT VICTIMS.
TIRUMAVALAVAN,SELF STYLED PROTECTOR OF DALITS WILL NOT ASK THESE THINGS.
AFTER ALL HE HAS ALSO TO SURVIVE.
HE CAN DO THAT ONLY BY KEEPING QUIET ON REAL ISSUES.

jaisankar jaganathan said...

மாதவன்

பார்ப்பனர் என்றால் சாதி

பிராம்ணர்கள் என்றால் பிரம்மதை அறிந்தவர்கள் என்று அர்த்தம்.

தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த நந்தனார், திருப்பாணாழ்வார் எல்லோரும் பிராம்ணர்கள். நீங்களூம் நானும் கூலிக்கு வேலை பார்ப்பவகள்