பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, September 04, 2014

எனக்கு பிடித்த பத்து

ஏதாவது சினிமா விழா,  அல்லது நடிகர் நடிகையின் பத்திரிக்கை பேட்டியில் ஒரு நடிகரிடம் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்றால் உடனே எம்.ஜி.ஆர், சிவாஜி என்பார்..
அதே நடிகையிடம் உங்களுக்கு பிடித்த நடிகை யார் என்றால் உடனே பானுமதி, சரோஜா தேவி என்பார்கள்.
சிலர் ஆர்னால்ட் ஸ்வார்செனகர், அல்லது அமிதாப் என்பார்கள். தற்கால நடிகர்கள், நடிகைகள் பெயரை யாரும் சொல்ல மாட்டார்கள்.


உங்களுக்கு பிடித்தப் பத்து புத்தகங்கள் பட்டியலில் திருக்குறள், புறநானூறு என்று பட்டியலை பார்த்தால் சமூகத்தின் இந்த பிரச்சினைக்கு ஏதோவொரு உளவியல் காரணம் கட்டாயம் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

2 Comments:

jaisankar jaganathan said...

1. பொன்னியின் செல்வன்
2. சிவகாமியின் சபதம்
3. கடல் புறா
4. மன்னன் மகள்
5. வந்தார்கள் வென்றார்கள்
6. c
7. c++
8. java
9. oracle
10. vc++

இவ்ளோ புக் படிச்சிருக்கேனாக்கும்

Ananda Kumari Chidambaram said...

பொன்னியின் செல்வன்
தோழர்
தாய்
சிவகாமியின் சபதம்
பார்த்திபன் கனவு
அதிகாலையின் அமைதியில்
மோக முள்
தலையணை பூக்கள்
தாயார் சந்நிதி
எட்டுத் திக்கும் மதயானை