பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, September 17, 2014

ஐ ! எது சார் உண்மை ?

தி.இந்து செய்தி
'ஐ' இசை வெளியீட்டு
விழாவை பொறுத்தவரை, ஒரு விழா எந்தவித முன்னேற்பாடும் இன்றி நடைபெற்றால் எப்படியிருக்கும் என்பதற்கு ஓர் உதாரணமாக இருந்தது. பிற்பகல் 3:30 மணியில் இருந்து 5:30 மணிக்குள் வந்துவிட வேண்டும் என்று டிக்கெட்களில் போடப்பட்டு இருந்தது. ஆனால், நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது மணி 7:30-யைத் தாண்டிவிட்டது.

இசை வெளியீட்டு விழா ஆரம்பிக்கும் முன்பு இசைக்கு ஏற்றவாறு ஒளி அமைப்பு மாறுவது காண்பிக்கப்பட்டது. ரஜினியை அழைத்து வந்து உட்கார வைத்துவிட்டுச் சென்று விட்டார்கள். சில நிமிடங்கள் தனியாக உட்கார்ந்து கொண்டு இருந்தார். பிறகு ஷங்கர், புனித் ராஜ்குமார் கடைசியாக அர்னால்டு அழைத்து வரப்பட்டார்.

நிகழ்ச்சியை உட்கார்ந்து பார்த்துக் கொண்டே இருந்த அர்னால்டு முன்பு பாடி பில்ட் ஷோ நடைபெற்றது. நிறைய பாடி பில்டர்கள் ஷங்கர் படங்களின் பாடல்களுக்கு ஏற்றவாறு பாடி பில்ட் நிகழ்ச்சியை அரங்கேற்றி, நேரடியாக அர்னால்டுக்கு மரியாதை செய்தார்கள். அப்போது, அவர்களோடு இணைந்து மேடையேறிய அர்னால்டு, தன்னுடைய பேச்சைத் தொடங்கினார்.

இதை கவனித்ததும், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய நடிகர் சிம்ஹா குறுக்கிட்டு, 'படத்தைப் பற்றிய பேச்சை அப்புறம் பேசலாம் சார்' என்று கூறவே, "நான் எப்போது என்ன பேச வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும்" என்று தொடங்கி தனது பேச்சைத் தொடங்கி முடித்து அரங்கினை விட்டு வெளியேறினார்.

இசையை வெளியிடுவதற்கு முன்பே அர்னால்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது, விழா ஏற்பாட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

'ஐ' படத்தின் இசை வெளியீடு விழா சிறப்பு விருந்தினர் இன்றி, ரஜினி இசையை வெளியிட புனித் ராஜ்குமார் பெற்றுக் கொண்டார். அந்த இசை வெளியீட்டின்போது கூட படத்தின் நாயகன் விக்ரமும், நாயகி ஏமி ஜாக்சனும் அங்கு இல்லை. 'ஐ' இசை வெளியீட்டு விழாவைக் காப்பாற்றியது என்னவோ ரஜினி மட்டுமே.

'தசாவதாரம்' இசை வெளியீட்டில் தூய்மையையும் எளிமையையும் கற்றுக் கொடுத்தார் ஜாக்கிசான், 'ஐ' இசை வெளியீட்டு விழாவில் 'காலம் தவறாமை'யை கற்றுக் கொடுத்திருக்கிறார் அர்னால்டு.

பிரம்மாண்டம் என்ற அடைமொழியுடன் அறங்கேற்றப்படும் தமிழ் சினிமாவின் இசை வெளியீட்டு விழாவில் எந்த ஒரு நிகழ்ச்சியும் சரியான நேரத்தில் ஆரம்பித்ததில்லை. இனியாவது விழித்துக்கொள்வார்களா?

தினமணி செய்தி

விழாவில் சிறப்பு விருந்தினராக ஹாலிவுட் நடிகர் அர்னால்டு கலந்து கொண்டார். ஆடியோவின் முதல் பிரதியை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் பெற்றுக்கொண்டார். விழாவில் ஒரு பகுதியாக "ஐ' படத்தில் நடித்துள்ள "பாடிபில்டர்'களின் அணிவகுப்பு நடைபெற்றது. இதைப் பார்த்து வியப்படைந்த

அர்னால்டு அவர்களை வாழ்த்திப் பேசியதாவது:

நான் இந்த விழாவில் இறுதியாகத்தான் பேச வேண்டியிருந்தது. ஆனால் இப்போதே பேசி விடுகிறேன். எப்போதும் என் விருப்பம் எதுவோ அதைத்தான் செய்வேன். ஷங்கர் ஓர் அற்புதமான இயக்குநர். அவரது படங்கள் அனைத்தும் உலகளவில் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்று வருகின்றன. "பாடிபில்டர்'களுக்கு இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். அதில் எனக்கு மகிழ்ச்சி. ஏனென்றால் நானும் ஒரு "பாடிபில்டர்'. விழாவில் நான் பார்த்த "பாடிபில்டர்'கள் அனைவரும் தங்களது உடலை நன்றாக வைத்துள்ளனர்.

ஒரு படத்தில் அர்னால்டு இல்லை, இரண்டு படங்களிலும் விக்ரம் இல்லை ஆனால் ரஜினி இருக்கிறார்.

6 Comments:

suppamani said...

To republish the articles already printed in :Tamil Hindhu" and "Ananda Vikaaan" why we have to come to I.D. Now a days when we open the FaceBook early morning we are reading these things? Why ID is also giving the same thing without anything of their ORIGINALITY

Anonymous said...


தூய்மை, எளிமை, காலம் தவறாமை போன்ற அடிப்படை தெரியாத கோடிகளில் புரளும் சினிமா உலகிற்கு தெரிந்தது என்னவோ... நடிகைகளின் தொடையும், மார்பும்தான் ....

SUBRAMANIAN VELAYUTHAM said...


சாதிக்க வருபவர்களை
சோதித்துப் பார்க்கும்
மசாலாக்களின் ஆதிக்கம் .
- தமிழ் சினிமா .


Anonymous said...

https://sg.news.yahoo.com/video/angry-mob-throw-ukrainian-mp-172544292.html

kg gouthaman said...

'ஐ!' எது சார் உண்'மை'? என்'னை'க் கேட்டால்? இ'சை' வெளியீடுதானே!
அவசரக் கோலத்'தை' அள்ளித் தெளித்துவிட்டார்களோ? படத்'தை' நன்றாக செய்வார்கள் என்று நி'னை'த்து, வா'யை'ப் பொத்திக்கொண்டிருப்போம்!

Anonymous said...

தூய்மை, எளிமை, காலம் தவறாமை போன்ற அடிப்படைகளை சினிமா மட்டுமில்லை சாதாரண இந்தியர்கள் யாருமே கடைபிடிப்பதில்லையே