பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, July 07, 2014

அதிமுக ஆட்சியில் ..... கலைஞர் வருத்தம்!

சென்னை, மவுலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து, 61 பேர் மாண்டு மடிந்த துயரம் நம் இதயங்களை விட்டு அகலாத நிலையிலேயே, செங்குன்றம் அருகே தனியார் குளிர்பான கம்பெனியின் சுவர் இடிந்து விழுந்து ஒரு குழந்தை உட்பட தொழிலாளர்கள் 11 பேர் பலியான செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன். என்ன காரணத்தாலோ, அ.தி.மு.க. ஆட்சி என்றாலே இவ்வாறு அகால மரணங்கள் அடிக்கடி நிகழ்வதும், அதில் பல பேர் மாண்டு மடிவதும் தொடர்ந்து வருகின்றது - கலைஞர்அதிமுக ஆட்சியில் தான் திமுக குடும்ப சண்டையும் அதிகம் வருகிறது என்பதை சொல்ல மறந்துவிட்டார்.

7 Comments:

kothandapani said...

அதிமுக ஆட்சியில் மக்களுக்காக கருணாநிதி வருத்தப்படுவதும். திமுக ஆட்சியில் ஜெயலலிதா மக்களுக்காக வருத்தப்படுவதும் .......... அட அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.....

பொன்.முத்துக்குமார் said...

இருக்கலாம். ஆனால் தி.மு.க குடும்ப சண்டை தனிப்பட்ட பிரச்சினை - ரோட்டுக்கு வராத வரை. ஆனால் கும்பகோண பள்ளி சம்பவத்தை நினைவுபடுத்தும் மவுலிவாக்கம் சம்பவம் அப்படியல்லவே !

Anonymous said...

பகுத்தறிவு பகலவன் இவர்...

jaisankar jaganathan said...

எல்லாமே துட்டு பிரச்சனை. மஞ்சள் கமெண்டுக்கும் சேத்து

Jeyakumar Srinivasan said...

கருணாநிதி ஆட்சிக்கு வந்தால்..

வாணம் வறண்டுவிடும்

ஊழல் பெருகிவிடும்

மக்காச்சோளம் கிடைக்கும்

கப்பக்கிழங்கு கிடைக்கும்

அரிசியை பொருட்காட்சிகளில் காணலாம்.

இவன்,
மாணவர் அமைப்பு
80களில் கண்ட சுவர் வாசகம்

Anonymous said...

Super comment by Jeyakumar Srinivasan .........

R.Gopi said...

ஏம்பா.... வயசான வாலிபரை இப்படி வருத்தப்பட வைக்கறீங்க.....

ஊதா கலரு ரிப்பன்...!!! பாடிட்டு ஜாலியா இருக்க விட மாட்டீங்களா!!??