பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, July 16, 2014

வே(வெ)ட்டி கேள்வி பதில்கள்.

வேட்டி தமிழரின் பாரம்பரிய உடையா ?

இதில் என்ன சந்தேகம் ? வேட்டி தமிழர்களின் பாரம்பரிய உடையாகும்; அதே போல் இட்லி பாரம்பரிய உணவாகும்.
பெரும்பாலும் வேட்டியை தினமும் யாரும் அணிவதில்லை. ஆனால் இட்லியை பெரும்பாலும் எல்லோரும் காலை சாப்பிடுகிறார்கள்.

வேட்டி கட்டிக்கொண்டு ஏன் ஆபீஸ் போக கூடாது ?

அலுவலகலத்தில் ஏதாவது ஃபேன்ஸி டிரஸ் போட்டி இருந்தால் தாரளமாக கட்டிக்கொண்டு போகலாம்.

வேட்டி ஏன் ஆண்கள் மட்டும் அணிகிறார்கள் ?

வேட்டி இடுப்பை சுற்றி அணிந்து கொள்ளப்படும் ஆடை, பெண்களுக்கு இடுப்பு இல்லாத காரணத்தால் பொதுவாக ஆண்கள் மட்டுமே அணிகிறார்கள் என்று நினைக்கிறேன்.

ஆங்கிலேயர்களை 67 ஆண்டு களுக்கு முன்பே விரட்டிவிட்டோம். அதில் தமிழகத்துக்கு முக்கியப் பங்கு உண்டு. சென்னையில் கிரிக்கெட் கிளப் மட்டுமல்லா மல், ஜிம்கானா, போட்கிளப், எம்சிசி போன்ற கிளப்களிலும் வேட்டி அணிந்து செல்பவர்களை அனுமதிப்பதில்லை என்று சட்டசபையில் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறாரே ?

முதலில் கிளப் என்ற வார்த்தையை தமிழ் படுத்த வேண்டும் பிறகு வேட்டி பற்றி யோசிக்கலாம். கூடவே ஒரு படம் இணைத்திருக்கிறேன். சும்மா பாருங்க.

தமிழுக்கும் வேட்டிக்கும் என்ன சம்பந்தம் ?

துணியை வெட்டி அணிவதால் அதற்கு பெயர் வேட்டி. மற்றபடி வெட்டி சண்டை போடுபவர்களுக்கும், சண்டையில் சுலபமாக இழுத்துவிட வேட்டி சிறந்த உடை அவ்வளவு தான்.

ஒரு டவுட் - கூடவே மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் என்ற பெயரை மாற்ற வேண்டுமா ?

மெட்ராஸ் மாகாணம்’ என்பதை ‘தமிழ்நாடு’ என மாற்றி இந்திய அரசு உத்தரவிட்டபோது‘ மெட்ராஸ் ஹை கோர்ட்’ பெயரை ‘தமிழ்நாடு ஹை கோர்ட்’ என மாற்றினால் வெளிநாடுகளில் குழப்பம் ஏற்படும் என்றார்கள்! இன்றும் இதே நீடிக்கிறது. மெட்ராசிற்கு மட்டுமா இது கோர்ட் ? தமிழ்நாட்டிற்கான ஹை கோர்ட் அல்லவா ? கேரளா ஹை கோர்ட் கர்னாடகா ஹை கோர்ட் என்பது போல தமிழ்நாடு ஹை கோர்ட்’ என்றறு முதலில் மாற்ற வேண்டும் பிறகு கிரிக்கெட் பக்கம் வரலாம்.


வேட்டி அணியும் பழக்கத்தை ஊக்குவிப் பதற்காக கோ-ஆப்டெக்ஸ் மூலம் வேட்டி தினம் கொண்டாடப்படுகிறது என்று ஸ்டாலின்
கூறியிருக்கிறாரே ?
வேட்டி தினமும் அணிந்தால் இந்த தினம் கொண்டாட தேவையில்லை !

தற்போது வேட்டி பிரச்சனை என்ன விளக்கவும் ?
கடந்த 11-ஆம் தேதி தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப்பில் முன்னாள் நீதிபதி அருணாசலம் எழுதிய நூல் ஒன்றின் வெளியீட்டு விழாவில் பங்கேற்கச் சென்ற உயர் நீதிமன்ற நீதிபதி அரி பரந்தாமனுக்கு அவர் வேட்டி அணிந்திருந்தார் என்பதற்காக அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர் விழாவில் கலந்துக்கொள்ளாமல் திரும்பினார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப் மற்றும் ஜிம்கானா கிளப், மெட்ராஸ் போட் கிளப் உள்ளிட்டவை மீது நடவடிக்கை எடுப்பதுடன், புதிதாக விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என வழக்கு போடப்பட்டுள்ளது.

நீதிபதி என்ன சொல்லியிருக்கிறார் ?

கிரிக்கெட் கிளப்பில் நடந்தது தனியார் பொது நிகழ்ச்சி. மாலை 5.30 மணிக்கு விழா நடைபெறுவதாக அழைப்பிதழில் அறிவிக்கப்பட்டு இருந்தது. நான் எனது அலுவலக காரில் மாலை 5.25 மணிக்கு சென்றேன். வேட்டி கட்டி இருந்ததால் அங்கிருந்த ஊழியர் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார். அதை கேட்டதும் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.
இந்த செயல் வியப்பாக உள்ளது. கிரிக்கெட் கிளப்பை உருவாக்கியபோது ஆங்கிலேயர்கள் அவர்களது ஆடை வரையறையை உருவாக்கி இருக்கிறார்கள். சுதந்திரத்துக்கு பிறகும் அதே ஆடை கட்டுப்பாட்டை தொடர்ந்து பின்பற்றுவதும், நமது பாரம்பரிய ஆடைகளுக்கு தடை விதிப்பதும் வியப்பாக உளளது என்றார்.

ஏன் ஆங்கிலேயர் வழக்கத்தை இன்னும் இந்த கிளப் விடவில்லை ? தப்புதானே ?

தப்பு தான். அதே போல ”மைலார்ட” என்று கோர்ட்டில் வாதாடுவதற்கு முன் சொல்லுவதும், கறுப்பு கோட் அணுவதும் ஆங்கிலேயர்கள் ஏற்படுத்திய பழக்கம்தான். இன்று கோர்ட்டுக்கு வக்கீல்களும், நீதிபதிகளும் வேட்டி அணிந்து கொண்டு செல்லலாமா ?

வேட்டி பற்றிய கோர்ட் கேஸ் என்னவாகும் ?

சட்டப்படி இது செல்லாது. தனியார் கிளப் களின் நிர்வாகத்தில் தலையீடுவது போல் ஆகும். அவர்களுடைய விதிகளுக்கு உட்பட விருப்பமில்லை என்றால் செல்ல வேண்டாம்.

வேட்டி கட்டிக்கொண்டு கிரிக்கெட் ?

வேஷ்டி அணிந்து கொண்டு தான் இனிமேல் சென்னையில் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றால் என்ன வெயிலுக்கு காத்து உள்ளே போகும் கூடவே பந்தும்.

கிளப் விளக்கம் என்ன ?

குடிபோதையில் வேட்டி கட்டியிருந்தால் கழன்று விழுந்து மானக்கேடாகி விடுமே என்பதற்காகத்தான் வேட்டி கட்டிக் கொண்டு வர தடை விதித்துள்ளோம். யார் வேண்டுமானாலும் எங்களது கிளப்புக்கு வரலாம். ஆனால் வேட்டி கட்டி வரக் கூடாது. வேட்டி கட்டினால் இங்கு வருவதைத் தவிர்த்து விடுங்கள்.


வேட்டி பிரச்சனை மாதிரி லுங்கி பிரச்சனை வருமா ?

ஏற்கனவே ஞாநி அதை செய்துவிட்டார். கமலா தியேட்டரில் அவர் மட்டும் லுங்கி கட்டிக்கொண்டு படம் பார்க்கலாம் என்ற சிறப்பு அனுமதி அவருக்கு உண்டு.

இது என்ன கலாட்டா ? எங்கிருந்து ஆரம்பித்தது ?

ஒரு கோவில் சுவரில் ‘இங்கே லுங்கி, நைட்டி அணிந்து வரக்கூடாது’ என்று போட்டிருந்ததை நான் ஃபேஸ்புக்கில் விமர்சித்தார். லுங்கி என்பது மதம் சார்ந்த உடை அல்ல. ஏழைகளின் உடை என்று போராடினார்.

ஞாநி போராட்டத்துக்கு வெற்றி கிடைத்ததா ?

தெரியாது ஆனால் அவருக்கு ஒரு லுங்கி இலவசமாக கிடைத்தது.

கோயில்களில் லுங்கி உங்க கருத்து ?

கோபால் சுப்பிரமணியம் பத்மநாபசுவாமி கோயில் சென்ற போது சட்டை இல்லாமல் வேட்டி அணிந்துக்கொண்டு தான் சென்றார். அப்போது எல்லாம் யாரும் பிரச்சனை செய்யவில்லையே ? பிடிக்கவில்லை என்றால் கோயிலுக்கு போகாதீர்கள்.

கட்சிக் கரை வேட்டிகள் பற்றி

அவை கறை வேட்டிகள். ’கறை நல்லது’ அதாவது மக்கள் நலனில் அக்’கறை’.

கடைசியாக உங்க கருத்து ?

சல்யூட் ராம்ராஜுக்கு சல்யூட்

11 Comments:

dr_senthil said...

வேட்டி கட்டுவதில் சிதம்பரம் முன்னோடி . ஒவ்வுருமுறை பட்ஜெட் தாக்கல் செய்யும் போது துண்டு விழுந்த துணியை வைத்தே புதிய வேட்டி தைத்து விடுவார்

Venky said...

என்ன வெட்டி பேச்சு?

பார்த்திபன் காமெடி on வேட்டி:"என்னுது அவுருதுன்னா, அவருது என்னுதா?"

R.Gopi said...

இந்த வேட்டி பிரச்சனைக்கு உள்ளார வரக்கூடாதுன்னு தான் தலீவர்ர்ர்ர்ர்ர் அரெஸ்ட் அப்போவே “லுங்கி” கட்டிட்டு இருந்தாரு....!!!!

Anonymous said...

ரொம்ப நாட்களுக்குப்பிறகு ரசிக்ககூடிய பதிவு.

Krishna Moorthy said...

ungaludaya comments thaan vettiyanathu...

சு.கி.ஞானம் said...

வேட்டி பற்றிய கோர்ட் கேஸ் என்னவாகும் ?

சட்டப்படி இது செல்லாது. தனியார் கிளப் களின் நிர்வாகத்தில் தலையீடுவது போல் ஆகும். அவர்களுடைய விதிகளுக்கு உட்பட விருப்பமில்லை என்றால் செல்ல வேண்டாம்.

////தமிழக அரசின் பதில்////
http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6216569.ece

இந்தப் பிரச்சனை குறித்து நான் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்தேன். தமிழ்நாடு கிரிக்கெட் சங்க மன்றம் என்பது தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு பதிவு செய்யப்படும் போது, அதற்கான துணை விதிகளை வகுத்து தமிழ்நாடு சங்கங்களின் பதிவாளருக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்க மன்றம் சமர்ப்பித்துள்ளது.
அந்தத் துணை விதியில், உடை அணியும் முறைகள் குறித்து கீழ்க்காணுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
"10. DRESS REGULATION: Persons will not be admitted into the Club premises if they are not decently dressed. Persons attired in coloured Bermudas, colour / multi colour lungies, cut banians / vests and / or wearing hawai chappals will not be permitted into THE TNCA CLUB"
அதாவது, கண்ணியமான ஆடையை அணியாதவர்கள் கிளப்பிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். வண்ண அரைக்கால் சட்டைகள், வண்ண மற்றும் பல வண்ண லுங்கிகள், கையில்லாத பனியன்கள், அரையங்கிகள் மற்றும் ஹவாய் காலணிகள் ஆகியவற்றை அணிந்து கொண்டு வருபவர்கள் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப்பிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அந்த துணை விதியில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதில் வேட்டியை பற்றி குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, வேட்டி அணிந்தவர்களை சங்க கட்டட வளாகத்திற்குள் அனுமதிக்காத தமிழ்நாடு கிரிக்கெட் சங்க மன்றத்தின் செயல்பாடு, தமிழர் நாகரிகத்தையும், தமிழர் பண் பாட்டினையும் இழிவுபடுத்துவதோடு மட்டுமல்லாமல் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க மன்ற விதிகளுக்கும் முரணானதாகும். இது ஒரு 'sartorial despotism', அதாவது உடை தொடர்பான எதேச்சதிகாரம் ஆகும்.

Anonymous said...

வேட்டி விஷயம் இப்பொ அமெரிக்காவில் நியூ யார்க் டைம்ஸில் வந்து விட்டது.
பார்க்க:

http://nyti.ms/1soo2V2

-மணா

gnani said...

கமலா தியேட்டரில் என் கோரிக்கையை ஏற்ற பின் நான் மட்டுமல்ல, யாரும் லுங்கி அணிந்து செல்லலாம். செல்கிறார்கள். கோவிலில் லுங்கியை அனுமதிக்கச் சொல்கிறாயே, நீ உன் புத்தகக் கடை இருக்கும் புத்தகத் திருவிழாவுக்கு லுங்கி அணிந்து செல்வாயா என்றுஆர்.எஸ்.எஸ். அன்பர்கள் சிலர் சவால் எழுப்பினார்கள். என்னிடம் இருக்கும் லுங்கிகள் பயன்படுத்திக் கிழிந்துவிட்டன. புது லுங்கி வாங்கிக் கொசுங்கள். அங்கே அணிந்து வருகிறேன் என்றேன். ஜக்ப்டுத்தார்கள். அணிந்து சென்றேன். எனக்குக் கிடத்த லுங்கிகளில் ஒன்றைத்தவிர மீதியை என் டிரைவர் உள்ளிட்ட நண்பர்களுக்குக் கொடுத்துவிட்டேன். சமயங்களில் டிவி நிகழ்வுகளுக்கும் லுங்கி அணிந்து செல்கிறேன்.

Anonymous said...

தியேடர் மட்டும் அல்லாமல் புத்தக கண்காட்சி , tv ஷோக்களுக்கும் லுங்கி அணிந்து சென்று ஒரு அமைதி புரட்சி பன்னியுள்ள ஞானிக்கு தலை வணங்கு கிண்றோம் . இவர் அருமை தெரியாமல் டெபாஸிட் இழக்க வைத்த ஆலந்தூர் வாசிகளுக்கு என் அனுதாபங்கள் .

Anonymous said...

Gnani avargal appadiye pira samaya deiva- idangalukkum(masjid,church, Bhoudha viharai,gurudwara etc)
idhey pol maatri maatri anindhu sendru avargalai gowravithu oru Mulu Puratchi seiyaa vaaalthukkal.

In shah AJR(Alla/Jesus/Ram)

kmv said...

1.Dress is for convenience & safety only but people have emotions on traditional dress as they are not using regularly.

2. Padmanabaswamy temple.: It should allow men to wear shirt. It will unbearable to any woman seeing half nude men.