பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, July 10, 2014

தொட்டால் தொடரும் - கேபிள் சங்கர்


வாழ்த்துகள் நண்பரே !

3 Comments:

படுக்காளி said...

கேபிள்... 7-8 வருடங்களாக நட்பு.. வலையில் பூத்த நட்பு.. பூ..... வலை மனை... வலைத்தளம் என நறுமணம் வீசிற்று இந்த பூ... நட்பு...
ஒரு கட்டத்தில்... நம்ம செல்வா பிரியாணி என குறும்படம் எடுத்த போது... அவரை மீண்டும் சந்தித்தேன்... அது கேபிளின் கதை... உருவாக்க கலந்துரையாடலில் சும்மா உக்கார்ந்திருந்தேன்... ஹலோ... நான் என்ன பிரியாணியா கேட்டேன்.. கிவ் மீ டென் ரூப்பிஸ்... என ஸ்டைலாய் அவர் வசனம் சொன்ன விதம் பார்த்து வியந்தேன்.. மகிழ்ந்தேன்... ரசித்தேன்...
அவரது சென்ஸ் ஆப் ஹூமர்... தித்திக்கும் தேன்... அவர் மிகச் சிறந்த கலைஞர் (கிரியேட்டர்) ... ரவுண்டு கட்டி... வேலை செய்றதுல வல்லவர்.. நல்லவரு... விமர்சனம் எனும் பெயரில்... பீராய்ஞ்சு... பின்னி பெடலெடுப்பது........ வலையில் வெகுவாய் விமர்சிக்கப் படுவதுண்டு...
அவரது விமர்சனம்... ஆக்கபூர்வமானது மட்டுமே... மனதில் பட்டதை சொல்லும்.. எண்ணம் மட்டுமே அன்றி... அடுத்தவரை காயப்படுத்த வேண்டும் என்பதோ.. அல்லது அதி மேதாவித்தனத்தை காட்ட்டுவதோ இல்லை.. அவரது கூரிய விமர்சனத்தின் கூற்று...
கேபிளை பற்றி... அவரது திரை ஆரம்பம் பற்றி...
ஒரு வெற்றி எப்படி சாத்தியமாகும் .... என புரிய நினைப்பவர்களுக்கு கேபிள் ஒரு மிகச் சிறந்த உதாரணம்...
இயக்குனராவது அவரது கனவு... லட்சியம்...
அதை இன்று சாதித்தும் காட்டியிருக்கிறார்... இந்த சாதனையின் சாறு எங்கிருக்கிறது என்றால்... ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லுவேன்...
கடந்த 7 - 8 ஆண்டுகளில் வெளி வந்த அனைத்து திரைப்படங்களையும் அவர் பார்த்திருப்பார்... அத்தனை படங்களையும் உடனே விமர்சித்து ஒரு பக்கம் எழுதி விடுவார்... அதில் அவர் தவறியதே இல்லை...
சூரியன் கூட சில நாட்களில்.. மழையை காரணம் காட்டி... மேகத்திற்குள் ஒளிந்து கொண்டு, தன் கடமையை செய்யாதிருந்திருக்கும்... ஆனால் கேபிள் சினிமா பார்ப்பதையோ விமர்சிப்பதையோ தவற விட்டதில்லை... அத்தனை சிரத்தை... அத்தனை ஈடுபாடு... அது தான் இன்றைய வெற்றியாக பரிமளித்திருக்கிறது..
தொட்டால் தொடரும்..........
அவர் தொட்டிருக்கிறார்... தொடரட்டும்.....
எனக்கென்னவோ.. அவருக்குள் ஒரு கனவு ஒளிந்து கொண்டிருக்கிறது...
அது அவர் அதிகம் விரும்பும்... கலைஞானி கமல்ஹாசனை வைத்து படம் பண்ணுவது.............. என............ நான் ஊகிக்கிறேன்....
அது நடக்கட்டும்................ என வாழ்த்துக்கிறேன்...
கோ அகெட் நண்பா..... வெற்றி உனக்கே...

‘தளிர்’ சுரேஷ் said...

கலக்கல் ட்ரெய்லர்! வாழ்த்துக்கள்!

R.Gopi said...

படுக்காளி அண்ணே.....

போதும்ணே..... விட்டுடுங்க....

//மனதில் பட்டதை சொல்லும்.. எண்ணம் மட்டுமே அன்றி... அடுத்தவரை காயப்படுத்த வேண்டும் என்பதோ.. அல்லது அதி மேதாவித்தனத்தை காட்ட்டுவதோ இல்லை..//

இதை எல்லாம் நீங்க சொல்லி நாங்க நம்பணுமாண்ணே!!!??