பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, July 04, 2014

வருத்தமும் மன்னிப்பும்

தேர்தல் சமயத்தில் இட்லிவடை தளத்தில் வலது பக்கத்தில் ‘ஆலந்தூர் இடைத்தேர்தல்லில் ஆம் ஆத்மி வேட்பாளராக ஞாநி’ என்ற செய்தியுடன், ஒரு சினிமா படத்தை போட்டிருந்தோம்.

மூத்த பத்திரிக்கையாளர் ஞாநி மீது இட்லிவடை மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறது. அவரை இழுவுப்படுத்தும் நோக்குடன் செய்தது அல்ல. ஆனால் பிறர் மனம் வருந்தும் படி செய்துவிட்ட அந்த அந்த படத்தை நீக்கிவிட்டு, அவரிடம் மன்னிப்பும், வருத்தமும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
இட்லிவடை

14 Comments:

kg gouthaman said...

அடேடே மிஸ் பண்ணிட்டேனே! அந்தப் படத்தை இந்தப் பதிவில் போட்டு, பிறகு வருத்தம் தெரிவித்திருந்தால், நாங்கள் தீர்ப்பு சொல்லியிருப்போம்.

kothandapani said...

சில பல லட்ச ஓட்டு வித்தியாசத்தில் வென்று இருக்க வேண்டிய ஞானியின் வெற்றியை பறித்து ,ஆபாச படத்தை போட்டு. அவரை டெபாஸிட் இழக்க வைத்த IV க்கு மன்னிப்பா......... கிடையவே கிடையது.

Anonymous said...

ஏதோ அந்த படத்தால் தான், இந்த அளவுக்காவது தலைவருக்கு ஓட்டு கிடைத்து உள்ளது.

Anonymous said...

பாவம் மனிதர் இப்போதான் கொஞ்சம் தேறி வந்து இருப்பார் . அதற்குள் இவியின் இந்த குசும்பு தேவையா

R.Subramanian@R.S.Mani said...

Why so soon; There is not much time for Tamilnadu Assembly Elections; You might have waited for some more time till then and regretted simultaniously for both after that election

R.Subramanian@R.S.Mani said...

Why so soon; There is not much time for Tamilnadu Assembly Elections; You might have waited for some more time till then and regretted simultaniously for both after that election

Anonymous said...

Good thing you apologized for it.

That pic was obscene and was even placed in the side bar. I couldn't open this blog in office because of that reason :(

Jeyakumar Srinivasan said...

நானும் கவனித்தேன். அந்த படம் நகைச்சுவைக்காக மட்டும்தான் என எடுத்துக்கொண்டேன். அந்த பக்குவம் எல்லாம் ஞாநியிடம் எதிர்பார்க்க முடியாது. கொஞ்சம்கூட நியாய, அநியாயம் தெரியாமல் பாஜக மற்றும் சங்க பரிவாரங்களை மட்டும் கேள்விகேட்கத்தெரிந்த ஒருவருக்கு இதெல்லாம் அவரது ஊதிப்பெரிதாகிய ஈகோவுக்கு எரிச்சலாய்தான் இருக்கும்.

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா...! இதுவல்லவோ வருத்தமும் மன்னிப்பும்...!

Anonymous said...

பொது வாழ்க்கைன்னு வந்திட்டா கருத்துப் படத்தை எல்லாம் பார்த்து வருத்த பட்டா வேலைக்காகுமா ?

அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா என்று இந்த பிராண்ட் ந்யூ (அதிலேயும் எக்ஸ்)அரசியல்வாதிக்கு சொல்லுங்கப்பூ!!

இனி அரசியல்லையும் இல்லை ... சரி கொஞ்சம் நாளைக்கு பொது ஒதுக்கீட்டில் ஏன் க்ரீமி லேயரை ஒதுக்கவில்லை எனும் புரட்சிக் கருத்தைப் பரப்ப வேண்டியது தான்....

சார் தலை கீழாப் புரண்டாலும் இண்டலெக்சுவல் பேபில் ஒங்களுக்கு கிடைக்காது சார்......

காளமேகம்

Anonymous said...

சரி. வாசகத்தை நீக்கிட்டு படத்த மட்டும் போட்டுருக்கலாம்ல....

Anonymous said...

அப்படியா? அப்போ மோடி மற்றும் பா.ஜா.க-வினரை கண்ட படி பேசும் இந்த (சுய)ஞானி மன்னிப்பு கோருவாரா

Jeyakumar Srinivasan said...

//அப்படியா? அப்போ மோடி மற்றும் பா.ஜா.க-வினரை கண்ட படி பேசும் இந்த (சுய)ஞானி மன்னிப்பு கோருவாரா
// அட அனானி, நீங்க யார்கிட்ட என்ன எதிர்பாக்குறீங்க? கயவாளித்தனம் செஞ்சாலும் கச்சிதமா செய்யும் ஆம் ஆத்மிக்கே வக்காலத்து வாங்கி அந்தக் கட்சி சார்பா எம் எல் ஏ போட்டிக்கு நின்னவர்ட்ட போயி இதையெல்லாம் எதிர்பாக்குறீங்களே? நீங்க ஞாநி சங்கரனைப் பற்றி நிறைய தெரிஞ்சிக்க வேண்டியிருக்கு.

அவர் சிறுபான்மையினரின் காவலர் (கழுத்தை அறுத்துக் கொல்லும் வீடியோவைக்கண்டாலும் அது சுதந்திரப்போராட்டம் என சர்டிஃபிகேட் வழங்குவார்)

ஹிந்துக்கள் குண்டுவெடித்துச் செத்தாலும் அது முட்டாள் ஹிந்துக்களின் குற்றம், ஏனெனில் சிறுபான்மையினருக்கு இதெல்லாம் தெரியாது என சர்டிஃபிகேட் வழங்குவார். இவர்தான் சிறுபான்மையினரின் பாதுகாவலர் என்பதாலும், தான் ஒரு அறிவுஜீவி என அவரே நம்புவதாலும் அவர்கள் தப்பெ செய்திருக்கமாட்டார்கள் என நிரூபிக்கும், பொய்சாட்சி சொல்லும் கடமை இருக்கிறது.

படிச்சவன் சூதும் வாதும் செஞ்சால் அய்யோனு போவான், அம்போனு போவான் என்ற தீர்க்கதரிசி பாரதியின் வார்த்தைகள் மெய்ப்படக் காத்திருக்கிறேன்.

amar said...

அவர்தான் காவி நீரோட்டத்தில் கலக்க இப்போ வந்துட்டாரே. விடுங்கப்பா