பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, July 09, 2014

12 Angry men - ஜெயகுமார்12 Angry men
1957ல் வெளிவந்த கருப்பு வெள்ளைப்படம்.
ஒரு சிறுவன் தனது தகப்பனை கத்தியால் குத்திக் கொன்றதை சாட்சியோடு நிரூபிக்கப்பட்ட ஒரு வழக்கு.
12 பேர் கொண்ட ஜூரிக்கள் குழு அவர்களது கருத்தை ஒருமித்து அவன் குற்றவாளிதான் அல்லது குற்றமற்றவன் எனச் சொல்ல வேண்டும். அவர்களுக்குள் ஏற்படும் விவாதமும் இறுதியில் என்ன ஆனது என்பதுதான் கதை.
முதலில் இந்தப்படத்தின் சிறப்பு என நான் நினைப்பது 1.5 மணி நேரம் ஓடும் இந்தப் படத்தை ஒரு அறைக்குள்ளேயே எடுக்க முடியும், அதையும் சுவாரசியமாய் எடுக்க முடியும் என நம்பியது, அதை எடுத்தது.
12 பேர்களும் ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாதவர்களாக இருக்க வேண்டும் என்பது விதிமுறைபோல. தொழில்துறை நடிகர்கள்போலல்லாமல் 12 பேர்களும் சாதாரன அமெரிக்கர்கள் வெவ்வேறு துறைகளில் இருப்போராகவும் ஒரு விவாதத்துக்கு கூடிப்பேசினால் எப்படி இருக்குமோ அப்படி அழகாக நடித்துள்ளனர்.
விவாதம் ஆரம்பித்ததுமே முதலில் ஒரு வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. யார் யாரெல்லாம் குற்றம்சாட்டப்பட்டவன் குற்றவாளி அல்லது இல்லை என நினைக்கிறார்கள் என்பதற்காக. 12பேரில் ஒருவர் தவிர எல்லோருமே அவரை குற்றவாளிகள் என வாக்களிக்கிறார்கள்.
அந்தக்கூட்டத்தில் ஒருவர் ஆ, எல்லாக்கூட்டத்திலும் இருக்கும் அந்த ஒருத்தன் என கிண்டல் செய்கிறார்.
குற்றமற்றவர் என வாக்களித்தவர் தனது தரப்பாக கொல்ல பயன்படுத்திய கத்தியைவைத்து தனது தரப்பை சொல்ல ஆரம்பிக்கிறார். ஜுரிக்கள் எல்லாம் ஒட்டு மொத்தமாக அந்தக் கத்தியே கொலைசெய்வதற்காகவே செய்யப்பட்டதுபோல இருப்பதாக கருத அவர் மட்டும் அந்தக் கத்தி கொலை நடந்த வீட்டின் இரு தெருக்கள் தள்ளி கிடைப்பத்தாகவும் தான் அதை வாங்கியதாகவும் அதன் விலை 6 டாலர் எனவும் சொல்லி டேபிளில் வைக்கிறார்.


அந்த விவாதத்திலேயே ஒருவர் மனது மாறுகிறார். இப்போது ”ஆம்” என்போர் 10பேர், இல்லை என்போர் 2 பேர்.
பின்னர் விவாதம் கொஞ்சம் கொஞ்சமாக அந்த வீட்டின் அமைப்பு, கொலை நடந்த இடத்திற்கும் குற்றவாளி ஓடி வந்ததாகவும் சொல்லப்படும் இடத்தின் தூரம்,
கொலை செய்தவன் ஏன் மறுபடியும் வீட்டிற்கு வந்தான் என்பதை வைத்தும்
கொலை செய்ததாக தன் கண்ணால் கண்டதாக சொன்ன சாட்சியின் கண்பார்வை குறித்த நியாயமான கேள்விகள்
சிறுவனான அவன் தன் அப்பாவைக் கொல்ல வேண்டுமெனில் சாத்தியக்கூறுகளில் உள்ள குறைபாடு,
இப்படி ஒவ்வொன்றாக சந்தேகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்ததாக குற்றம்சாட்டப்படவனுக்கு சந்தேகத்தின் பலனை அளிக்கின்றனர். இறுதியில் 11 பேர்கள் இல்லை எனவும் ஒரே ஒருவர் மட்டும் ஆம் என வாக்களிக்கிறார். இறுதியில் அவரை அவரது தரப்பை நிரூபிக்கும்படிச் சொல்ல அவரும் முயன்று முடியாமல் அவரும் ஒத்துக்கொள்வதுடன் படம் முடிகிறது.
படம் ஆரம்பத்திலிருந்து அந்த அறையின் சூழல், மழை வரும் முன்னர் இருக்கும்வெம்மை ஒவ்வொருவரையும் எரிச்சல்கொள்ளச் செய்கிறது. இதுல பேசுறதுக்கு என்னய்யா இருக்கு, ஆமா அவனுக்கு தண்டனையை உறுதி செய்துவிட்டுப் போறதுதான எனச் சொல்வதிலேயே பலர் இருக்கின்றனர்.
விவாதத்தின் நடுவே இடைவேளைகள் விடுகின்றனர். ஒவ்வொருவரும் அவர்களது தரப்பை மறுபரிசீலனை செய்கின்றனர்.
பயங்கர சூடாக நடக்கும் விவாதம் வெளியே மழை பெய்ததும் எரிச்சல் குறைந்து பேசும் விஷயத்தில் குவிகின்றனர்.
1957ல் நடக்கும் படத்தில் நான் கவனித்தது அப்போதே வாஷ்பேசின் இருந்திருக்கிறது. கைகழுவ திரவசோப் வைப்பதும் இருந்திருக்கிறது. கைதுடைக்க, முகம் துடைக்க துணி வைத்திருக்கின்றனர் (ரோலிங் ஸ்டைல்) விவாதம் நடக்கும் அறையில் தண்ணீர் பாட்டில் ( Water Dispenser with cups) வைத்திருக்கின்றனர்.

அப்போதைய அமெரிக்க பொதுப்புத்தியான, இன்றைக்கும் நம் நாட்டில் நிலவும் பொதுப்புத்தியான சேரிகளில் வாழ்வோர் குற்றம் சாட்டப்பட்டிருப்பின் அவர்கள் குற்றவாளிகளாக இருக்கவே வாய்ப்புண்டு. சேரிகள் குற்றங்கள் உருவாகும் இடம் என்பதை பேசுகின்றனர்.
நீதிமன்றத்தில் சாட்சிகளின் நம்பகத்தன்மை சோதிக்கப்படாமல் குற்றவாளிதான் என்ற அனுகுமுறையிலேயே வழக்கு நடந்திருக்கிறது.
படத்தில் நடித்த 12 பேரில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதம். ஒருவர் ஆரம்பத்திலிருந்தே மிகக்கோபமாகவே இருக்கிறார். இன்னொருவர் எப்போதும் தனது தரப்பை கோபாவேசமாகவே சொல்கிறார். சிலர் வாதம் நடப்பதைப் பொறுத்தும், சந்தேகத்தின் பலனை அளித்தும் தங்களது நிலையை மாற்றிக்கொள்வதும், விவாதத்தின் உச்சியில் ஒருவர் உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன் எனப்பாயும் அளவு நடக்கிறது.
ஒரே அறைக்குள் படம் நடந்தாலும் அலுக்காமல் பார்க்க வைப்பது திரைக்கதை. அதைவிட முக்கியம் விவாதங்களில் வெளிப்படும் நல்ல வசனங்கள் மற்றும் தீவிரத்தன்மையுடன் இருக்கும் விவாதம்.
க்ளோசப் காட்சிகளில் நடிகர்கள் காட்டும் முக பாவங்கள், வெறுப்பு, கோபம், கிண்டல், நக்கல், இப்படி ஒரு கோணம் இருக்கிறதோ எனத்தெரிந்ததும் காட்டும் முக பாவங்கள், அவர்களின் அசௌகரியாமான அங்க அசைவுகள், இவ்வளவுக்கு நடுவிலும் தீவிரமாக நடக்கும் விவாதம் எல்லாம்.

இசையைப்பற்றி குறிப்பிட்டுச் சொல்லத்தெரியவில்லை. இந்தப்படத்தில் இசையை இறுதிக்காட்சிகளில் மட்டுமே உணர்ந்தேன். மற்ற நேரங்களில் மிக அடங்கியே இருக்கிறது.

படம் முழுக்க வசனங்களிலேயே கட்டப்பட்டிருப்பதால் அமெரிக்க ஆங்கிலவசனங்களை புரிந்துகொள்ளும் அளவு தெரிந்திருந்தால் ரசிக்க நன்றாய் இருக்கும். இல்லையெனில் சப் டைட்டிலுடன் படம் பாருங்கள்.
எனது சேமிப்பில் இந்தப்படம் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக இருக்கிறது. அவ்வப்போது நல்ல படம் எனக் கேள்விப்படுவேன். ஆனால், ஒரே அறைக்குள் எடுக்கப்பட்ட கருப்பு வெள்ளைப்படத்தை எவன் பார்ப்பான் எனத்தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன். இன்றைக்கு திடீரென பார்க்கத்தோன்றியதால் பார்த்து பிரமித்தேன். இவ்வளவு நல்ல படத்தையா இத்தனைநாள் தவறவிட்டோம் என இருந்தது.
வாய்ப்புக் கிடைத்தால் அவசியம் பாருங்கள்.

ஜெயகுமார்


5 Comments:

Anonymous said...

For your information, based on this movie, Basu Chatterjee had made the movie by the name of "EK Ruka Hua Faisla" which has all the things mentioned in your review and is really gripping till the end. No songs/dances, but worth watching.

Regards

Venkat

Anonymous said...

மிகத்தரமான படம்..தமிழில் இது போன்று எப்பொழுது படம் வருமோ?

Raghavendran Madhavan said...

Hindi Version : http://en.wikipedia.org/wiki/Ek_Ruka_Hua_Faisla

Anonymous said...

இதில் ஏதோ உள்குத்து இருக்கும் என்று நினைத்தேன் வரும் பின்னூட்டங்களை பார்க்கும் போது எனக்கு ஒன்றும் புரியவில்லை

Rajaboy said...

Same here.... having this movie for the last 5 yrs. I will watch it this weekend. Thanks for the review.