பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, June 09, 2014

மஞ்சப்பை - விமர்சனம்

வெப்பம் அதிகமாக இருக்க பக்கத்தில் உள்ள ஏஸி தியேட்டருக்கு சென்ற போது ’மஞ்சப்பை’ ஓடிக்கொண்டு இருந்தது.

ஊமை விழிகளில் விஜயகாந்த் மாதிரி பெரிய கோட்டுடன் தொப்பி இருந்தால் அவர் ஒரு Detective. கன்னத்தில் ஒரு பெரிய மச்சம் இருந்தால் அவன் ஒரு திருடன். முழுக்கை சொக்கா(பெரும்பாலும் நீல நிறம்) போட்டுக்கொண்டு ஒரு லேப்டாப் பையுடன் இருந்தால் ஒரு சாப்ட்வேர் எஞ்சினியார். விமலும் இந்த படத்தில் அப்படியே.

அழுக்கு கதர் சட்டை, நாலும் முழம் வேட்டி கிராமத்துக்காரர் அடையாளத்துடன் வருகிறார் ராஜ்கிரண். இவர் தான் படத்தின் அடிநாதம். இவர் இல்லை என்றால் திருப்பதி பிரதர்ஸ் திருப்பதிக்கே சென்றிருப்பார்கள்.

பிரட் டோஸ்டர் என்று நினைத்து லாப்டாப்பை அடுப்பில் வைத்து பொசுக்கும் அப்பாவியாக ‘நடிக்கிறார்’ ராஜ்கிரண். விமல் தினமும் வீட்டில் லேப்டாப் உபயோகிக்கும் போது அவர் பார்த்ததே இல்லையா ? என்ன லாஜிக் ? இத்தனைக்கும் முதல் வேலையாக சாஃப்ட்வேர் மக்கள் செய்யும் காரியம் லேப்டாபில் ஃபேஸ் புக்கில் படம் காண்பிப்பது தான் !

அந்த காலத்து எம்.ஜி.ஆர் ரசிகரான ராஜ்கிரண் Fountainல் குளிக்கிறார், துணி துவைக்கிறார், டிஷ் ஆண்ட்டனாவில் வடாம் காய போடுகிறார். காமெடியாம் ! படத்தில் உச்சகட்ட காமெடி அமெரிக்க தூதரகத்தின் முன்பு நடக்கும் கூத்து தான். ”I Dont know" என்ற மரண மொக்கை முடியலடா சாமி.

விமல் பிராஜெக்ட் முடிக்க இரவு பகலாக, இரவு பகலாக, இரவு பகலாக, இரவு பகலாக , இரவு பகலாக, இரவு பகலாக , இரவு பகலாக, இரவு பகலாக , இரவு பகலாக, இரவு பகலாக , இரவு பகலாக, இரவு பகலாக அவ்வளவு பெரிய காட்சி தேவையா ? இது என்ன டிவி சீரியலா ? கடைசியில் தாத்தவை தேடும் காட்சியும் இதே ரகம். இன்னும் கொஞ்சம் இழுத்திருந்தால் நாம் தாத்தாவாகியிருப்போம்!

பழைய கல்யாண கேசட்டில் மங்கலாக தெரியும் உருவம் மாதிரி பல இடங்களில் ஒளிப்பதிவாளர் தன் கைவரிசையை காட்டியிருக்கிறார். சபாஷ்!.

மாமியார் என்றால் வில்லியாக சித்தரிப்பது, மாமனார் என்றால் அன்பு, தியாகம் என்று காட்டுவது(மலையாள படத்தை தவிர:-) என்று பலகாலமாக நாம் பார்த்தது தான்( அடுத்த படம் சைவம் - நாசர் ) இந்த ஃபார்முலாவை மாற்ற முடியாது.

இவ்வளாவு இருந்தும் இந்த படம் B, Cல் நன்றாக ஓடும் - காரணம் தாத்தா செண்டிமெண்ட்.


படம் பார்க்க செல்பவர்கள் படம் ஆரம்பித்து ஒரு முக்கால் மணி நேரம் கழித்து சென்றால் படம் ஒரு அளவு சுவாரஸியமாக இருக்கும்.

9 Comments:

Anonymous said...

//விமல் பிராஜெக்ட் முடிக்க இரவு பகலாக, இரவு பகலாக, இரவு பகலாக, இரவு பகலாக , இரவு பகலாக, இரவு பகலாக , இரவு பகலாக, இரவு பகலாக , இரவு பகலாக, இரவு பகலாக , இரவு பகலாக, இரவு பகலாக அவ்வளவு பெரிய காட்சி தேவையா?//

யாரடி நீ மோகினி-ல இருந்து தனுஷ் ப்ராஜெக்ட்ட ஒரு பிரதி எடுத்துக்க வேண்டியது தானா!

Anonymous said...

தாத்தா செண்டிமெண்ட்ன்னு கலைஞர இழுத்து விட்டு இருக்கியா இட்லி ?

ஜெ. said...

//பழைய கல்யாண கேசட்டில் மங்கலாக தெரியும் உருவம் மாதிரி பல இடங்களில் ஒளிப்பதிவாளர் தன் கைவரிசையை காட்டியிருக்கிறார். சபாஷ்!. // தியேட்டர் ப்ரச்சனையா, ஸ்ரீராம் ஒளிப்பதிவா? - ஜெ.

Anonymous said...

Modified remake of Hindi film Atithi Tum Kab Jaoge (2010)

Alex said...

உஷார்படுத்தியதற்கு நன்றி...

Cinema Virumbi said...


>>>>>படம் பார்க்க செல்பவர்கள் படம் ஆரம்பித்து ஒரு முக்கால் மணி நேரம் கழித்து சென்றால் படம் ஒரு அளவு சுவாரஸியமாக இருக்கும். <<<<<

அதுக்கு அந்தக் கண்றாவியப் போய்ப் பார்க்காமலே இருந்துடலாமே! முழுக்கவே சுவாரஸ்யமா இருக்கும்!

நன்றி!

சினிமா விரும்பி
http://cinemavirumbi.blogspot.in

Cinema Virumbi said...

>>>>>படம் பார்க்க செல்பவர்கள் படம் ஆரம்பித்து ஒரு முக்கால் மணி நேரம் கழித்து சென்றால் படம் ஒரு அளவு சுவாரஸியமாக இருக்கும். <<<<<

அதுக்கு அந்தக் கண்றாவியப் போய்ப் பார்க்காமலே இருந்துடலாமே! முழுக்கவே சுவாரஸ்யமா இருக்கும்!

நன்றி!

சினிமா விரும்பி
http://cinemavirumbi.blogspot.in

Anonymous said...

மரண மொக்கை.....

Anonymous said...

this film is very mediocre and
vimal does not know how to
act.Rajkiran is so so.and
lakshmi menon acting is very
artificial. Overall a very
disappointing film"
Mr lingusamy do not waste
money by producing these
ordinary mokkai films