பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, June 06, 2014

என்னமோ நடக்குது

ஜென்ம சனியின் கருணைப் பார்வை, அங்கிங்கெனாதபடி, முக குடும்பத்தின் அனைத்துக் கிளைகளிலும் ப்ரகாசமாய் பரவிக் கிடக்கிறது போலும். தேர்தலில் மரண அடி, அதைத் தொடர்ந்து கனிமொழி, தயாளு அம்மாள் போன்றவர்களுக்கு முறைகேடான பணப் பரிவர்த்தனை வழக்கில் கோர்ட் ஸம்மன், 2G வழக்கில் முதன் முறையாக ஸ்டாலின் பெயர் என்று தொடங்கியது, தற்போது தயாநிதி மாறனின், சன் டிவி அலுவலகத்திற்கு முறைகேடாக, அவரது வீட்டிலிருந்து 323 தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக வழங்கியது தொடர்பாக விசாரணை மீண்டும் கிளறப்படுவது என்று தொடர்ந்து போய்க் கொண்டிருக்கிறது. பகுத்தறிவில் இதற்கேதேனும் பரிகாரம் இருக்கிறதாவென்று வீரமணியிடம் தலைவர் யோசனை கேட்கலாம்.

இந்த முறைகேடான தொலைபேசி வழக்கு 2008 ஆம் ஆண்டே வெளிச்சத்திற்கு வந்தாலும், காங்கிரஸ் அரசின் தயவால் கிடப்பில் போடப்பட்டிருந்தது இவ்வளவு வருடங்களாக. இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை மற்றும் ஆடிட்டர் குருமூர்த்தி அவர்களின் முயற்சியால் இந்த வழக்கு தொடர்ந்தும் ஊத்தி மூடப்படாமல் உயிர்த்திருந்தது, தற்போது மீண்டும் கிளறப்படுகிறது.

இதனையடுத்து, தற்போது, இது தொடர்பாக சன் குழுமத்தின் முன்னாள் துணைத் தலைவர் ஹன்ஸ்ராஜ் சக்ஸேனாவை சிபிஐ தற்போது விசாரிக்கத் துவங்கியிருக்கிறது. இந்த முறைகேடான தொலைபேசி எக்ஸ்சேஞ்சின் மூலம், தயாநிதி மாறன், மத்திய அரசிற்கு சுமார் 440 கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்படுத்தியுள்ளார் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதன்பேரில், கடந்த ஆண்டின் இறுதியில் தயாநிதி மாறன் மற்றும் பி எஸ் என் எல் நிறுவனத்தின் அப்போதைய தலைமைப் பொது மேலாளர்களான ப்ரம்மதத்தன் மற்றும் எம்.பி.வேலுச்சாமி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தயாநிதி மாறனின் போட் க்ளப் வீட்டிற்கும், சன் டிவி குழும அலுவலகத்திற்கும் இடையே பதியப்பட்டுள்ள உயர்தர ஃபைபர் ஆப்டிக் கேபிள் தொடர்பில், சக்ஸேனாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. எனினும், கேபிள் பதியப்பட்டது தொழில்நுட்பப் பிரிவு ஊழியர்களால் என்பதால், அத்துறையுடன் அதிகம் தொடர்பில்லாத தமக்கு அதிகமாக ஏதும் தெரியாதென்று, சக்ஸேனா தெரிவித்ததாகத் தெரிகிறது.

ஆரம்பகட்ட விசாரணையில், தயாநிதி மாறனின் வீட்டில் அமைக்கப்பட்டுள்ள 323 தொலைபேசி இணைப்புகளும், அப்போதைய பி எஸ் என் எல் பொது மேலாளர் வேலுச்சாமியின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதும், மாறனின் வீட்டிலிருந்து, சன் குழும அலுவலகத்திற்கு ஃபைபர் ஆப்டிக் கேபிள் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது.

படத்தில் என்ன பேசிக்கொள்கிறார்கள் ?

5 Comments:

Chandramowleeswaran. V said...

நமக்கு எதிராக எதுவும் நடக்கப் போவதில்லை இந்த உண்மை தெரியாமல் இட்லி வடை அல்ப சந்தோஷப் பதிவு போட்டுக் கொண்டிருக்கிறது என்று பேசியிருக்கலாம்

Anonymous said...

i strongly believe as seen from the blogposts and subsequent comments that idlyvadai lost it's charm and readers base who used to give superb comments as well, long ago.................
no point in running the show

அலெக்ஸ் said...

//no point in running the show//
அதெப்படி ? கடைக்கு கூட்டம் இன்னைக்கு வராமல் போகலாம்...நாளைக்கு வரலாம்...அதோடு கூட, வர்றவங்க எல்லாம் நின்னு பேசிட்டுத்தான் போகணும்னு இல்லையே..

Anonymous said...

Jayalaitha's clear Bangaluru case and Chennai Income tax are going on for over 20 years.

Anonymous said...

Mantropadesam :)