பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, June 27, 2014

ஞாநியும் விலகினார்

தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,668-க்கும், சவரன் ரூ.21,344-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.28,540-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையிலும் மாற்றமில்லை. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.48.40-க்கும், பார்வெள்ளி மட்டும் கிலோவுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.45,265-க்கும் விற்பனையாகிறது.

அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் உயர்ந்திருந்த நிலையில், 10.30 மணியளவில் 4 காசுகள் சரிந்து ரூ.60.16-ஆக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 55.16 புள்ளிகள் சரிவடைந்து, 25,313.74 புள்ளிகளில் நிலைகொண்டது.

தமிழ்நாட்டில் வெப்பம் இந்த வார இறுதியில் அதிகரிக்கும் சூழ்நிலை இல்லை. இப்போது உள்ள வெப்பம்தான் தொடர்ந்து இருக்கும். ஒருவேளை குறையலாம். அதிகரிக்க வாய்ப்பில்லை.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று(வெள்ளிக்கிழமை) ஓரிரு இடங்களில் மழை பெய்யும். சென்னையில் வறண்ட வானிலைதான் நிலவுகிறது.

ஆம் அத்மி கட்சியிலிருந்து இன்று வெளியே சென்றவர் ஞாநி.


இப்போது தான் இவர் உண்மையான ஞாநி

8 Comments:

Anonymous said...

ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் ஆனா உடன் ஞானியின் சிறப்பு பேட்டி வெளியீட்டு ஜால்ரா தட்டியது நீர்தான், ஞானிக்கு டெபாஸிட் கூட கிடைக்காது என்ற பின்னூட்டத்தைக்கூட வெளியிடாத IV, ஞாநி இப்போதுதான் உண்மையான ஞானி என்று மஞ்சள் comment அடிப்பது வேடிக்கை. உண்மையில் IV தான் இப்போது உண்மையான ஞானி.

kothandapani said...

தினமும் மாறக்கூடிய நிகழ்வுகளோடு , ஞானியின் செயலையும் வெளியீட்டு இருப்பது IV யின் punchaa....

R. J. said...

குஷ்பு செய்தி போட்டதால் ஞாநி செய்தியும் போட்டு நடு நிலைமையை இ.வ. கண்பித்துக் கொண்டது! இந்திய கட்சி அரசியலில் ஆம் ஆத்மி போன்ற நேர்மையான கட்சிகள் எடுபடாது. அதுவும் தவிர ஒரு எமோஷனல் தலைவர் உடைய கட்சி ஜெயிப்பது கஷ்டம். - ஜெ.

Anonymous said...

ivarukku indha paadal varikalai DEDICATE panren:
film: Dharmadurai
song: Anna Enna Thambi Enna...
line:
Nambi nambi vembi vembi
ondrum illai yendra pinney
uravu kidakku podi
indha unmayai kandavan Gnani..

you tube link:https://www.youtube.com/watch?v=6fnB3MKz2bI

okayvaaaa?

Jeyakumar Srinivasan said...

ஞானி போன்றோர்கள் இதுவரை ஆம் ஆத்மிக்கு தட்டிய ஜால்ராவுக்கு மன்னிப்புக்கேட்பாரா? எவ்வளவு உதார்கள், எத்தனை பேச்சுகள், டெபாசிட்டே கிடைக்காத இடைத்தேர்தலுக்கு என்னா அளும்பு..

இப்பவாச்சும் அறிவு வந்ததே இந்த சுயம்பு ஞாநிக்கு..

Anonymous said...

// நேர்மையான கட்சிகள் எடுபடாது//

தம்பிக்கு நியூஸ் பேப்பர் படிக்கிற பழக்கமே இல்லை போலருக்கே!.

குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியுமே வாழ்க்கை இல்லைப்பா.....

காளமேகம்

Anonymous said...

// நேர்மையான கட்சிகள் எடுபடாது//

தம்பிக்கு நியூஸ் பேப்பர் படிக்கிற பழக்கமே இல்லை போலருக்கே!.

குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியுமே வாழ்க்கை இல்லைப்பா.....

காளமேகம்

kg gouthaman said...

கடவுள் காப்பாற்றினார். (நம்மை எல்லோரையும்) ஆ ஆ கட்சியில் அவர் தொடர்ந்திருந்தால் இன்னும் பல அபத்தங்களை நாம் கேட்கவேண்டி இருந்திருக்கும்.