பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, June 19, 2014

பாஜகவில் குஷ்பு சேர்ந்தால் தப்பில்லை

டி.ராஜேந்தர், பாக்கியராஜ், சரத்குமார் வரிசையில் குஷ்புவும் திமுகவிலிருந்து விலகியுள்ளார். திமுகவிற்கு இந்த தேர்தலில் பூஜ்யம் இல்லாமல் ’ஜாக்பாட்’ அடித்திருந்தால் குஷ்பு இந்த முடிவை எடுத்திருப்பாரா என்று தெரியாது. திமுகவில் கோடான கோடி அடிமட்ட தொண்டர்கள் ..அத்தாங்க FB, டிவிட்டரில் இருக்கும் போது இவரை திடீர் என்று உயரத்தில் ஏற்றிய திமுக இப்போது அவரை புறக்கணித்து வெளியே தள்ளியது பெரிய விஷயமாக...திமுக என்ற இயக்கத்திற்கு(?) பெரிய இழுக்கு போல பேசுவது நல்ல தமாஷ்.

குஷ்புவிற்கு தலைவர் கோச்சடையான் பாடல்வரிகளிலிருந்து சில வரிகளை ‘அட்வைஸாக’ இங்கே....

பகைவனின் பகையை விட
நண்பனின் பகையே ஆபத்தானது

நீ போகலாம் என்பவன் எஜமான்
வா போகலாம் என்பவன் தலைவன்
நீ எஜமானா, தலைவனா?

நீ ஓட்டம் பிடித்தால்
துன்பம் உன்னைத் துரத்தும்
எதிர்த்து நில்
துரத்திய துன்பம் ஓட்டம் பிடிக்கும்

சூரியனுக்கு முன் எழுந்து கொள்
சூரியனை ஜெயிப்பாய்

உன் மார்போடு காயங்கள் ஓராயிரம்
உன் வாழ்வோடு ஞானங்கள் நூறாயிரம்
தாய் மண்ணோடு உன்னாலே மாற்றம் வரும்
இனி உன்னோடு உன்னோடு தேசம் வரும்…!

மாறு - மாற்றம் ஒன்றுதான் மாறாதது
மாறுவதெல்லாம் உயிரோடு
மாறாததெல்லாம் மண்ணோடுஅதனால் நீங்கள் பிஜேபிக்கு மாறுவது ஒன்றும் தப்பில்லை !

6 Comments:

Anonymous said...

All 8 crore tamilans are behind isutalin. (Adhaanka stalin) so, if Kushboo, goes out no problem.

Anonymous said...

நண்பா.. எல்லாம் கொஞ்ச காலம்

jaisankar jaganathan said...

என்னா பிரச்சனைன்னே தெரியல. எஙக்ளூக்கு இருந்த ஒரே எண்டர்டெயின்மெண்டும் போயிடுச்சு

XtremeBytes said...

குஷ்பூ BJP இல் சேருவதற்க்கு அறத்துப்பால் பொருட்பால் இவற்றிலிருந்து அட்வைஸ் கொடுக்கல்லயா ...நல்லவேளை திருவள்ளுவர் தப்பிசார்........

Anonymous said...

already 2 ladies are waiting for seat there.. if she goes real fight you can see..

Umesh Srinivasan said...

மூன்று தலைமுறைக்கும் சேவை செய்ய முடியாம, முழி பிதுங்கி, வெளிய போய்ட்டாங்க. மீண்டும் இலைப்பக்கம் தாவினாலும் ஆச்சரியம் ஒண்ணும் இல்லை.