பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, June 03, 2014

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 3-6-2014

அன்புள்ள முனி,
தேர்தல் முடிந்து எனக்கு ஏதாவது மந்திரி பதவி கிடைக்குமா என்று டெல்லி சென்றிருந்தேன். ஒண்ணும் தேறல. நமக்குத் தேவலை... ஆனால் தர்மபுரியில் வெற்றிபெற்றதுமே அன்புமணி அமைச்சர் என்று பா.ம.க-வினர் கிளப்பிவிட, பி.ஜே.பி கண்டுக்கொள்ளவில்லை. மோடி, ராஜ்நாத் சிங் இருவரையும் சந்தித்தும் ஒன்றும் நடக்கவில்லை. முன்பு இவர் அமைச்சராக இருந்த போது இவர் மேல் குற்றச்சாட்டுக்கள் இருந்தது தான் காரணமாம். ஏது எப்படியோ இவருக்கு அமைச்சர் பதவி கிடைக்காதது பெரிய சந்தோஷம்.

ஒரு சந்தோஷமான செய்திக்கு பிறகு ஒரு வருத்தமான செய்தி. அம்பாசிடர் கார்களின் தயாரிப்பு நிறுத்தம் தான். உடனே பெரிசுகள் எல்லாம் ஃபேஸ்புக், டிவிட்டரில் அம்பாசிடர் கார் பற்றி எழுத ஆரம்பித்துவிட்டார்கள். அம்பாசிடர் கார் போனதை வருத்தமாக பேசியவர்கள், மன்மோகன் சிங் போனதை சந்தோஷமாக கொண்டாடினார்கள்!.

அடுத்த சந்தோஷமான செய்தி - இன்று கலைஞருக்கு 91வது பிறந்த நாள். இந்த நல்ல நாளில் அழகிரி, ஸ்டாலின் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பெரியாரை வேண்டுவோம். எஸ்.வி.சேகர் எப்போதுமே கொஞ்சம் அட்வான்ஸ். இன்றைய பிறந்த நாள் வாழ்த்தை நேற்றே அவருக்குச் செல்லிவிட்டார். மோதியின் பதவி ஏற்பு விழாவிற்கு இவர் சென்றாரா என்று தெரியவில்லை. யாராவது கேட்டு சொல்லுங்க. இல்லை இவரும் இலங்கை அதிபர் ராஜபக்ஷேக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு தமிழ்நாட்டிலேயே இருந்துவிட்டாரா? இன்னொரு டவுட் தமிழக தேர்தல் பிரச்சாரத்தில் இவரை யாரும் அவ்வளவாக ஏன் கண்டுக்கொள்ளவில்லை?

ஸ்மிருதி இரானியின் கல்வித் தகுதி குறித்து மாக்கான் தவிர வேறு யாரும் கண்டுகொள்ளவில்லை. அமைச்சராவதற்குக் கல்வித் தகுதி தேவையில்லை, ஆனால் உண்மை பேச வேண்டும்! உடனே பிஜேபி மக்கள் “'இரானியின் கல்வித் தகுதி குறித்த காங்கிரசாரின் விமர்சனங்களை சோனியா கட்டுப்படுத்த வேண்டும். அல்லது, சோனியா தனது கல்வித் தகுதிகளை வெளியிட வேண்டும்” என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

இவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று நினைத்த ஒருவருக்கு கிடைக்காமல் போனது - சுப்பிரமணியன் சுவாமி. எந்தத் தொகுதியிலும் போட்டியிடவில்லை என்றாலும் அவர் நிதி அமைச்சராக ஆகிறார், வர்த்தகத் துறை அமைச்சர் ஆகிறார் என்று கடந்த சில நாட்களாக அவரின் ட்விட்டரடிபொடிகளிடமிருந்து வந்தபடியிருந்தது. ஆனால் மோதி இந்தியாவின் நலனைக் கருத்தில் கொண்டு சுசாவை இன்று வரை எட்டவே வைத்துள்ளார்.

இந்தியாவின் நலனை கருத்தில் கொண்டு மோதி செய்த இன்னொரு நல்ல விஷயம் தன் பதவி ஏற்பு விழாவிற்கு அண்டை நாட்டு தலைவர்களை அழைத்தது. தமிழகத்தில் அடிச்ச அக்னிவெயில் மாதிரி மோதி பதவியேற்பு விழாவிற்கு ராஜபக்ஷே வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் நாட்டு தலைவர்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் செய்து சூடாக அவர்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள். வெயிலின் சூடினால் வற்றல் காயும், இவர்களின் சூடால் ஒன்றும் ஆக போவதில்லை, சும்மா நாங்களும் எதிர்த்தோம் பதிவு செய்தார்கள். அவ்வளவு தான்.

ஒரு முன்னாள் பிரதமர் மோதி ஜெயித்தால் நாட்டை விட்டு வெளியே செல்வேன் என்று சவால் விட்டார். ஆனால் மோதி பதவி ஏற்ப்பு விழாவில் முதல் வரிசையில் இருந்தார். இந்த மாதிரிக் கேவலமாகச் சவால்விடலாமா என்று கேட்கலாம். ஆனால் சோனியா பிரதமர் ஆனால் என் தலையை மொட்டை அடித்துக்கொள்வேன் என்று முன்னாள் எதிர்கட்சி தலைவர் விட்ட சவாலைக் காட்டிலும் இது தேவலாம்.

லட்சுமிராய் தனது பெயரை ராய் லட்சுமி என்று மாற்றியுள்ளார். இவருக்கு ஒரு திருப்பு முனை வரும் என்று நினைக்கிறேன். ராய் என்பதில் கூடுதலாக ஒரு ஆங்கில ‘ஏ' எழுத்தை சேர்த்து இருக்கிறேன் என்று சொல்லியுள்ளார் ‘ராய் லட்சுமி(ராய்). ஒரு வேளை அவருக்கு நல்ல மாறுதல்கள் வந்தால் இட்லிவடை என்ற பெயரை நான் கூட வடை இட்லி என்று மாற்றிக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.


ராசி கட்டம் எல்லாம் போலி என்று பேசுபவர்கள் இந்த வீடியோவைப் பார்க்கவும்!


எச்சரிக்கை: இட்லிவடை ஒரு பிரேக்கு பிறகு மீண்டும் வருகிறது..

5 Comments:

Sai said...

இட்லி வடை "பல" break-க்களுக்கு பிறகு வருகிறது. But என்னை போல் சில பேக்கு-கள் தினமும் வந்து பார்ப்பதை பழக்கமாக இருக்கிறோம்.

Anonymous said...

பிரேக்தானே, பிரேகப் என்று பயந்துவிட்டேன்

Loganathan Natarajan said...

Some changes in Returns??

R. J. said...

//ராய் என்பதில் கூடுதலாக ஒரு ஆங்கில ‘ஏ' எழுத்தை சேர்த்து இருக்கிறேன் என்று சொல்லியுள்ளார் ‘ராய் லட்சுமி(ராய்). ஒரு வேளை அவருக்கு நல்ல மாறுதல்கள் வந்தால் இட்லிவடை என்ற பெயரை நான் கூட வடை இட்லி என்று மாற்றிக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்// நீங்களும் ஒரு A சேர்த்துக் கொண்டால், "வாடை" இட்லி என்று வரும்! - ஜெ.

Anonymous said...

Rai added another "A". Photo confirmed this.