பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, May 15, 2014

மலைச்சாமி நீக்கம்

நேற்று மலைச்சாமி நேற்று பேட்டி அளித்த போது “நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நல்ல நண்பர்; இருவரும் அரசியலால் பிரிந்திருந்தாலும், நட்பு ரீதியாக நெருக்கமாகத்தான் உள்ளனர். மோடி பிரதமர் ஆனால், அவருடன் நல்ல நட்புறவை முதல்வர் வளர்த்துக் கொள்வார்” என்று தன் சொந்த கருத்தை கூறினார். அதிமுகவில் சொந்த கருத்து என்று ஒன்று எப்போது கிடையாது. அம்மாவின் பர்மிஷன் வாங்கிக்கொண்டு தான் பேச வேண்டும் என்பது இவருக்கு தெரியாமல் போனது வியப்பளிக்கிறது.

இத்தகைய கருத்து கட்சியின் கொள்கைக்கு முரணாக இருப்பதாகக் கூறி, மலைச்சாமி அதிமுகவில் இருந்து நீக்கியுள்ளார்.


இதனால் தான் அதிமுக என்ற கட்சி ஒழுங்காக இருக்கிறது. பிஜேபி இதை கற்றுக்கொள்ள வேண்டும்.

11 Comments:

Ratan said...

மன்னராட்சி காலத்தில் நடத்த வேண்டிய blog-ஐ எல்லாம் இட்லிவடை 100 வருடம் தாமதமாக நடத்துகிறது... நல்லா அடிக்கிறீங்க ஜால்ரா...

R.Subramanian@R.S.Mani said...

I FEEL ALMOST ALL THE IAS, IPS AND RETIRED ARE OF ECCENTERIC. WHY THESE PEOPLE ARE NOT SATISFIED WITH THE PENSION AND HAVING A COMFORTABE LIFE AND UNECCESSARILY JOINING WITH POLITICAL PARTIES - that too such parties like ADAMK amd spoiing their rputation, if any;

Anonymous said...

Hey....I am surprised how Malaicchamy did n't understand the character of Amma.when I listened to Malaichamy' on newsx ,sitting in kodaikanal, I knew he will be thrown out...public knows her....but poor Malaicchamy......

siva said...

சோ வின் சமாளிப்பைப் போலவே இருக்கிறது இவ ன் சப்பைக் கட்டு

siva said...

சோ வின் சமாளிப்பைப் போலவே இருக்கிறது இவ-ன் சப்பைக் கட்டு

Gopal said...

Maliasamy has only complimented his boss and this is not understood by her. I am only afraid that BJP should not be in a precarious position to seek alliance from this arrogant leader..

Anonymous said...

it will be fun when modi gets support of admk for forming government. everyday he has to visit kodanadu to get permission for even day to day operations. then lets see what 'development' he can do.

முரளி இராமச்சந்திரன் said...

இதுல சப்பை கட்டு, ஜால்றா எல்லாம் எங்க வருது. சப்பை கட்டு, 2G ல ஊழல் நடக்கலை, கனி, தயாளு, ராசா எல்லோரும் பாடு பட்டு, பச்சை தண்ணி வாயில படாம பாட்டாளி மக்களுக்கும் செல் ஃபோன் கிடைக்கனும்னு பாடு பட்டாங்கன்னு சொன்னா அது சப்பை கட்டு, முத்தமிழ் வித்தகர், அது இதுன்னு சொன்னா அது ஜால்றா. ஒரு கட்சியில யார் எதைச் சொல்லலாம், யார் எதைச் சொல்லக்கூடாதுன்னு ஒரு வரை முறையில்லைன்னா யார் வேணும்னாலும் எதை வேணும்னாலும் சொல்வாங்க செய்வாங்க. இதைத்தான் கம்பர் தன்னுடையை ராமாயண காவியத்துல "அலகிலா விளையாட்டுடையான், அவர் தலைவர்" ந்னு எழுதினார். இப்படி எடுத்தவன் எல்லாம் பேசினா அப்புறம் தலைமைக்கு என்ன அழகு.

இப்படி பேசக்கூடாதுன்னு மலைச்சாமி (இவர் ஒரு IAS Office-ந்னு நினைக்கிறேன்) க்கு தெரியாமல் போனது துரதிருஷ்டம்.
முரளி.

Anonymous said...

தப்பி தவறி அம்மா ஆதரவோடு தான் ஆட்சி அமைக்கவேண்டும் என்றால் BJP என்ன ஆகும் என்பதற்க்கு இது ஒரு trailor தான். ஆமா
பிஜேபி இதை கற்றுக்கொள்ள வேண்டும்.

ஒரு ஜனநாயக கட்சியில் தன் கருத்தை கூட சுதந்திரமாக சொல்ல முடியவில்லை என்பது வெட்ககேடு. இதை எதிர்ப்பதற்க்கு திராணி இல்லாமல், மற்ற கட்சிகளும் பின் பற்ற வேண்டும் என்று ப்ளோகிடுவதை என்ன என்று சொல்ல.

Anonymous said...

இவர் இப்படி என்றால் அவர் மற்றவர்களை விட்டு ஒரு கருத்து சொல்லவைத்து அது சரி வர வில்லையென்றால் தனது கருத்தாக இன்னொன்றை சொல்வதுதான் சரியான வழிமுறை என்று சொல்லக்கூடும்.

Anonymous said...

ஹைய்யோ ஹைய்யோ, இட்லி வடை , அதிமுக வை கேலி செய்யுதுங்க! அத புரிஞ்சுக்காம இவ்ளவு சீரிஸ்ஆன பின்னூட்டமா? :( :)))))))