பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, April 14, 2014

ரஜினி மோதி ஒரு சினிமா சந்திப்பு

ரஜினியை மோடி சந்தித்தார் என்பதற்கும் அழகிரி ரஜினியை சந்தித்தார் என்பதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. மோதி பிரதமர் வேட்பாளர், ரஜினி ஒரு நடிகர், முதல்வன் படத்தில் நடிக்கக் கூட பயந்தவர், துண்டைப் போடும் போது உஸ் உஸ் என்று சத்தம் வரும். ஆனால் அவர் வாயைத் திறந்து பேச மாட்டார். அவரை ஒரு பெரிய சக்தியாக மோதி எண்ணியது பெரிய ஜோக். என்னப் போல மோதி ஆதரவாளர்களுக்கு பெரிய ஏமாற்றம்.
ரஜினி உடனே பிஜேபிக்கு என் ஆதரவு என்று சொல்லுவார் என்று எதிர்பார்த்தால் அது முட்டாள்தனம். எதற்கு மோதி அவரைச் சந்தித்தார் என்பது புரியாத புதிர். இதனால் மோதியின் மேல் இருந்த மரியாதை கொஞ்சம் போய்விட்டது என்பது உண்மை. அவரும் அழகிரி போல ஒரு சாதாரண அரசியல்வாதியாகிவிட்டார். நாடு முழுவதும் மோடி அலை வீசி வரும் நிலையில், ரஜினி வீட்டுபக்கம் அந்த அலை பிசி பிசுத்தது.

இந்தச் சந்திப்பினால் என்ன பாதிப்பு என்றால் - முதலில் விஜயகாந்த தலைமையில் உள்ள பிஜேபி கூட்டணித் தலைவரை அவர் சந்திக்கவில்லை. கூட்டணி தர்மம் பற்றி நாளை சண்டை வரலாம். பிஜேபி பற்றிப் பேசாமல் சும்மா இருந்த அம்மா இப்போது காவிரி பிரச்சனையைக் கையில் எடுத்திருக்கிறார்.

இன்று மனைவியின் பெயரை மறைத்தார் என்று பேசும் கலைஞர் நாளை மோடி தனது மனைவியின் பெயரை மறைக்கவில்லை, தவிர்த்திருக்கிறார் என்று மாற்றிப் பேசுவார். அதனால் கலைஞர் பேசுவதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.

இதை எல்லாம் விட பெரிய காமெடி நாங்க அரசியல் பேசவில்லை என்ற அறிக்கை தான் ! ஆனால் வைகோ தனது பக்கத்தில் ரஜினியை சந்தித்து அரசியல் பேசியதை வெளியிட்டுள்ளார்.


வருங்காலத்தில் அவர் என்ன நினைக்கிறாரோ அதில் வெற்றி பெற வாழ்த்துக்கள் - ரஜினி. பிரதமர் பதவி என்று கூட பேசவில்லை. அவ்வளவு ஜாக்கிரதை !

7 Comments:

R.Subramanian@R.S.Mani said...

'ELLAM DONATION SEYYIUM VELAITHAAN'
EVERYBODY WANTSS TO USING THE OPPORTUNTY:

Sathish N said...

If Rajini is not powerful person then why everybody is seeking for his Voice in every election? Why all news papers and media are keep on following him?

Venky said...

Totally a different perspective, never thought in this way. Yes, even if it was a courtesy visit, Modi should have avoided this during elections.

@Idly Vadai: It seem Cho was Director of some liquor companies?? Why no article on that? Source: AAP and ஆலந்தூர் வேட்பாளர் ஞானி

Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/aap-exposing-illegal-political-business-nexus-tn-lse-198110.html#slide614634

Anonymous said...

Out of jealousy, people may underplay the role of Rajnikanth, but he is one of the most respected persons in Tamilnadu, and I do give regard to his views. I very strongly feel that Modi's popularity or his credibility has not dwindled a bit. Instead, respect for Modi in my mind, has increased a shade because he met his friend Rajni from a non-political perspective.

Anonymous said...

@Idly Vadai: It seem Cho was Director of some liquor companies?? Why no article on that? Source: AAP and ஆலந்தூர் வேட்பாளர் ஞானி

If media think they can edit anything, then they are fools of India..

No artical in any news media.. edited one :
http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/jayalalithaa-aide-v-k-sasikala-benefited-from-tasmac-liquor-contracts-aap/articleshow/33766554.cms

Anonymous said...

RAJINIKANTH IS A SHREWD BUSINESSMAN AND KNOWS OUR PEOPLE LIKE THE LINES IN HIS PALM.
WHENEVER HIS MOVIE OF DOUBTFUL SUCCESS AT THE BOX OFFICE IS TO BE RELEASED HE WILL PLAY THE POLITICAL ENTRY CARD.
OUR PEOPLE WILLALSO MERRILY SWALLOW IT AND MAKE HIS MOVIE A WINNER.
THIS DRAMA IS FOR "KOCHADAIYAN" TO BE RELEASED ON MAY 9 TH.
WHEN KARUNANIDHI WAS IN POWER HE ATTENDED ALL HIS FUNCTIONS AND PRAISED HIM.
DURING 2011 TN ELECTIONS HE VOTED FOR AMMA AND SHOWED IT TO PEOPLE AGAINST POLL ETHICS.
NOW HE FEELS THE WINNING HORSE WOULD BE MODI AND BACKING HIM FOR PERSONAL GAINS.
LET US NOT FORGET THAT THIS MAN CALLED BAL THACKERAY HIS GURU WHEN HE MET HIM.
HIS POLITICAL OPPORTUNISM CAN BE EQUALLED ONLY BY RAMDOSS OF PMK.

An Indian's Voice said...

"Anonymous" இன் comments ஐ வழிமொழிகிறேன்... ரஜினி ஒரு சந்தர்ப்பவாதி... ஒவ்வொரு படம் வரும்போது ஒரு பேட்டி கொடுப்பார்... இந்த முட்டாள் விசில் அடிச்சான் குஞ்சுகளும் அவர் படத்தை ஓட்ட வைத்துவிடுவர். 1996இல் அம்மா மறுபடியும் வந்தால் நாட்டை காப்பாற்ற முடியாது என்றார்..."முத்து" படம் வெளியாகி சக்கை போடு போட்டது.. "எந்திரன்" படம் வெளி வரும் வரை கலைஞருக்கு குல்லா போட்டார். 2011 தேர்தல் நேரத்தில் அமைதி காத்து அ.தி.மு.க.வுக்கு வாக்கு அளித்தார். அதை தேர்தல் விதி முறையையையும் மீறி மக்களுக்கு காண்பித்தார். இப்பொழுது "கோச்சுடையான்" வெளி வர இருக்கிறது...இப்பொழுது சரியாக மோடியை பயன்படுத்துகிறார்... இவரை அரசியல்வாதிகளும் சரியாக பயன்படுத்துகிறார்கள். நம் முட்டாள் விசில் அடிச்சான்குஞ்சுகள் இவர் கை காட்டும் கட்சிக்கு ஒட்டு போட்டுவர், இவர் படத்தை நூறு நாட்கள் ஓட வைப்பர். சமுதாயத்துக்கு இந்த சூப்பர் ஸ்டார் என்ன செய்தார் என்றால் ஒன்றும் கிடையாது. நடிகர் அஜித் அவர் வீட்டு வேலை ஆட்களுக்கு வீடு கட்டி கொடுத்துள்ளார்.. இசைஞானி இளையராஜா, அவரது பண்ணைபுறத்தில் ஏழை குழந்தைகளுக்கு பள்ளி கூடம் கட்டுகிறார். இவர் மனைவி நடத்தும் சென்னை "ஆஷ்ரம்" பள்ளியில் ஒரு பையனை சேர்க்க எவ்வளவு donation என்று இந்த முட்டாள் விசில் அடிச்சான்குஞ்சுகளுக்கு தெரியுமா? அல்லது அந்த பள்ளிகூடத்தில் தான் இந்த விசில் அடிச்சான் குஞ்சுகளின் பிள்ளைகளுக்கு சீட் கிடைக்குமா??