பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, March 09, 2014

சாராய-சக்கரைபொங்கல் கூட்டணி !

திமுக, காங்கிரஸ், தேமுதிக ஒரு அணியாக இருக்கும் என்று சில மாதம் முன் கழுகு-குருவி எல்லாம் ஜோசியம் சொன்னது. ஆனால் திமுக காங்கிரஸ் கூட்டணி அமையவில்லை. காங்கிரஸ் வட மாநிலங்களில் சந்தித்த தோல்வியைக் கண்டு திமுக சுதாரித்துக்கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டால் வரும் கொஞ்ச நஞ்ச ஓட்டுகள் கூட வராது என்று முடிவுக்கு வந்தது. தமிழ் உணர்வு போன்ற காரணங்கள் எல்லாம் சும்மா.

தேமுதிக பக்கம் சாயலாம் என்று ஸ்டாலின், கலைஞர் அழைப்பு விடுத்த போது அழகிரி விஜயகாந்த் பற்றி தன்னுடைய பேட்டியில் தாக்க அந்த கூட்டணிக்கு முற்று புள்ளி வைக்கப்பட்டது. திமுக கதவு மூடப்பட்டுவிட்டது என்று தினமும் அவர்கள் சொல்லுவதைப் பார்க்கும் போது பாவமாகவும் அதே நேரத்தில் காமெடியாகவும் இருக்கிறது. தற்போது கம்யூனிஸ்ட் கட்சிகள் வரும் என்று சொல்லவில்லை வந்தால் சேர்த்துக் கொள்வோம் என்று பெரியவர் சொல்கிறார். அழகிரி சொன்னதுபோல காயிதே மில்லத் போன்றவர்களுடன் கூட்டணி பேசிய திமுக இப்போ காய்ந்தவர்களுடன் கூட சேரப் ப்ரயத்தனப்படுகிறது. அது முடியாமல் கஷ்டப்படுகிறது.

அம்மா தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே வேட்பாளர் பட்டியலை அறிவித்து, சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இடது வலது என்று யார் வந்தாலும் வரட்டும் வராமல் போனால் போகட்டும் என்று போகும் இடம் எல்லாம் காங்கிரஸ் மற்றும் திமுகவை மட்டுமே குறிவைத்துத் தாக்குகிறார். பிஜேபியைப் பற்றி இதுவரை ஒன்றும் சொல்லவில்லை.  இனி விஜய்காந்த் அந்த பக்கம் சாந்த பின் அம்மாவின் தேர்தல் பிரச்சாரத்தில் மாற்றம் இருந்தாலும் இருக்கலாம்.

அப்படியே தாக்கினாலும், விஜயகாந்த் பற்றி சொல்லி அனாவஸ்யமாக அவரைத் தூக்கிவிட அம்மா தயாராக இருக்க மாட்டார். அவருடைய பர்மனென்ட் எதிரி கலைஞர் தான்!.

விஜயகாந்த் யாருடன் கூட்டணி என்று தினமும் அவர் பலரையும் யோஜிக்க வைக்கிறார். ஊழல் எதிர்ப்பு மாநாட்டுக்குப் காங்கிரஸ் கூட்டணிக்காக பிரதமரைச் சந்திக்கிறார். பிறகு பிஜேபி தலைவரைச் சந்திக்கிறார். அவர் சந்தித்துக்கொண்டு இருக்கும் போது அவர் கட்சி எம்.எல்.ஏக்கள் அவரை விட்டு பிரிந்து அதிமுக பக்கம் போகிறார்கள். அவருடைய படத்தில் கூட இந்த அளவு திரைக்கதை இருக்காது ஆனால் அவருடைய தேட்தல் கூட்டணி சினிமாவில் கேப்டனின் திரைக்கதை செம விறுவிறுப்பு.

தற்போது விஜயகாந்த் தலைமையில் பிஜேபி கூட்டணி என்ற காமெடி தாங்க முடியவில்லை. தமிழக பிஜேபின் நிலமையை நினைத்தால் பாவமாக இருக்கிறது. இன்று பொன் ராதாகிருஷ்ணன் எந்த கட்சிகளும் ஒத்த கொள்கைகளை கொண்டவை அல்ல. ஆனால், அந்த கட்சிகள் தேர்தல் நேரத்தில் கூட்டணி சேர்வது வழக்கமான ஒன்று. எனவே, எங்கள் கூட்டணியில் தே,மு,தி.க., பா.ம.,க., கட்சிகள் சேர்வதில் எந்த குழப்பமும், பிரச்னை இல்லை. தொடர்ந்து கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது” என்று சொல்லும் போது கொங்கு நாடு கட்சி பிஜேபி கூட்டணிலேந்து விலகல் என்ற நியூஸும் சேர்ந்து வருகிறது. கொங்கு நாடு என்ற கட்சிக்கு இவ்வளவு ரோஷம் இருந்தால், பாமகவிற்கு எவ்வளவு இருக்க வேண்டும்? தேமுதிக தலைமை என்றால் பிஜேபியே கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும்.

விஜயகாந்த் கட்சி இருக்கும் இடத்தில் பாமக ஓட்டுப் போடாது, அதே போல பாமக நிற்கும் இடங்களில் தேமுதிகவின் ஓட்டு விழாது. காங்கிரஸ் கட்சி, பிஜேபிக்கு என்று தனியாக பெரிய ஓட்டு வங்கி இல்லை. தற்போது இருக்கும் நிலைமையில் அதிமுகவிற்கு சான்ஸ் அதிகம் என்று தோணினாலும் கொள்கையில்லாக் கூட்டணிகள், கொசுறு கம்யூனிஸ்ட்கள் என்று பல வகையிலும் பிரியும் ஓட்டுகளும், ஏப்ரலில் சனி-குரு சஞ்சாரமும் அம்மாவின் ஆசைக்கு முடிவு சொல்லும்.


தமிழக தேர்தல் கூட்டணி சாராயமும் சக்கரைபொங்கலும் சேர்ந்த காக்டெய்ல் இனி இரண்டு மாதத்துக்கு நமக்கு கொண்டாட்டம் தான் !

10 Comments:

kg gouthaman said...

Popularity is one of the main factors for getting votes in elections.
This has been proved in the elections held after 1967, in Tamilnadu.
This alliance of BJP will help in gaining popularity for the party in the rural areas.

Anonymous said...

jayalalithavuku nalla jalra

ஜெ. said...

கட்டுரையாளர் இன்னும் குழம்பிப் போய் பாயைப் பிராண்ட ஆரம்பிக்கவில்லையா! பா. ஜ. க. சொமன்னாலும் சொல்லாவிட்டாலும் இங்கு கூட்டணி என்பது சந்தர்ப்ப வாதம் மட்டும் தான். காமன் மினிமம் ப்ரொக்ராம் எல்லாம் உல உலாக்கட்டி தான். இப்போது யாரும் அதைப் பேசுவதில்லை.
விஜயகாந்த் காங்கிரசுடன் பேசியது பா.ஜ.க. அதிகம் சீட் / பணம் கொடுக்க வேண்டும் என்றுதான். தி.மு.க. வேண்டாம் என்பதில் கடைசி வரை நிலைத்து நின்றுவிட்டார். பாராட்டுங்கள்! பா.ம.க. இல்லாவிட்டால் இன்னும் நல்லது.
இன்றே அம்மா கொதித்துக் கொண்டு இருப்பதாகப் பேச்சு! - ஜெ.

Anonymous said...

ஜெயலலிதா என்ன செய்வார் என்பதைவிட, என்ன செய்யவேண்டும் என்று தாங்கள் எதிர் பார்ப்பதின் வெளிப்பாடு நன்று தெரிகின்றது . ஆனால்இதெல்லாம் வேஸ்ட்டுதான் . ஜெயலலிதா நாளை என்ன செய்வார் என்பது ஜயலலிதாவுக்கே தெரியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

kothandapani said...

சாராய கூட்டணியும் இலை...... சர்க்கரைப்பொங்கல் கூட்டணியும் இல்லை ... கண்ணுக்கு எட்டியவரை வெறும் சாக்கடை கூட்டணிதான்.

Meena Narayanan said...

kadai mud^ee- IDALI VADAI; 'ELLAM^-_uasi^ poo^che- BOSS;

Meena Narayanan said...

IDALI;VADAI; 'ell^amm- _usiae-poo^chea^ 'kadai -'moo^dee-

Palanivel Raj said...

Vazhakkam pole Jayalalithavukku Idlyvadai thookum Sombu... Ivvalau naal kadai thirakkaathavar therthal vanthavudan kadaiya thiranthu vittar... Saathi paasam viduma???

Anonymous said...

indha kulapathukku(katturaikku) rajini yoda kadandha kaala therthal voices much much better

Anonymous said...

kongu nadu bjp kootaniyileye illai eswaranin kongu makkal desiya katchi thaan bjp udan irukirathu. oru seithi podum mun ellavatrayum visarithu eluthungal muttalthanamaga ularinal ipadi than asingapada vendi varum.kongu nadu best ramasamy katchi athanudan bjp pesave illai. sun news pathu pathi eluthinal ippadi than. intha internet thollai thanga mudiyavillai arai vekadukal ellam thangalai periya arivali pol ninaithu kondu kirukuthanamaga ethavathu eluthigirarkal. etharkellam epothu kathi motcham endru theriyavillai. kapil sibal sonnathu pol censor thaan vendum endru ninaikiren.