பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, March 18, 2014

உடனே ஓட்டு போடுங்க

12 தொகுதிகளில் போட்டியிடுவதாக பாமக தன்னிச்சையாகஅறிவித்ததை தொடர்ந்து பிஜேபி கூட்டணியில் இருந்து அக்கட்சி வெளியேறலாம் என்று அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாக பேசப்படுகிறது.

தருமபுரி, கள்ளக்குறிச்சி உள்பட 12 இடங்களில் போட்டியிடும் என்று பாமக அறிவித்தது. இதை தவிர தருமபுரியில் அன்புமணி போட்டியிடுவார் என்று டாக்டர் ராமதாஸ் அறிமுகம் செய்து வைத்தார். இது பிஜேபி அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிஜேபியின் தலைவர் ராஜ்நாத் சிங் தொகுதி பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் பாமகவின் அறிவிப்பு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாக பிஜேபி வட்டாரங்கள் கருதுகின்றன. முடிந்தவரை பாமகவுடன் பேசி சமரச முடிவை எட்ட முடியும் என்று பிஜேபி தலைவர்கள் எண்ணுகின்றனர். இல்லையென்றால் பாமகவை கூட்டணியிலிருந்து வெளியேற்றலாம் என்று கருதுவதாக தெரிகிறது.

உங்க ஓட்டை சைடுல குத்துங்க.. :-)

0 Comments: